Sunday, April 27, 2014

எச்சரிக்கை - Smart TV உங்களை கண்காணிக்கிறது !!!



அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.



 மக்கள் லட்ச்சக்கணக்கில் பணம் செலுத்தி தங்கள் வீடுகளுக்கு கொண்டு செல்லும் நவீன் புதிய தலைமுறை HDTV மற்றும் கேபள் அலைவாங்கிகளில் காணப்படும் ஆனால் மக்களுக்கு அவ்வளவாக விளம்பரம் செய்யப்படாத சில அம்சங்கள் அல்லது சில வசதிகள் காணப்படுகின்றன.உதாரணமாக கேமராக்கள் - மைக்குகள் - சென்சார்கள் என்பன, இவை அனைத்தும் நம்மை அறியாமலே நமது லிவிங் ரூமில் நடப்பதை கண்காணிக்க பதிவு செய்ய உதவுகிறது.

அமெரிக்காவில் மிகவும் பிரசித்தி பெற்ற கேபள் நிறுவனமான VERIZON அண்மையில் ஒரு வினோதமான ஆனால் விவகாரமான ஒரு மென்பொருளுக்கு காப்புரிமையை தாக்கல் செய்தது.அந்த மென்பொருள் ஆடியோ மற்றும் விடியோ சென்சர்களையும் அதனுடன் சேர்த்து முக மற்றும் சுய விபரங்களை அறியும் ஆற்றல் கொண்டது. இந்த மென்பொருள் கொண்டு அந்த கேபள் நிறுவனம் குறிப்பிட்ட வீட்டில் எத்தனை பேர் வாழ்கின்றனர் அவர்களின் பாலினம் அவர்களின் இனம்  மதம் மொழி என்பவை மற்றும் அவர்கள் தொலைகாட்சியை பார்த்துக்கொண்டிருக்கும் போது என்ன செய்கிறார்கள் என்றும் கவனிக்க முடியும்.இந்த கம்பனியின் வாதத்தின் படி அவர்கள் இதை செய்வதன் நோக்கம் Targeted Advertising என்கிறார்கள், ஆனால் அவர்கள் எல்லாவிதமான எல்லைகளையும் தாண்டி சென்று மாக்களை வேவு பார்க்கின்றனர்.இதுதான் அப்பட்டமான உண்மை.



உதாரணத்துக்கு கற்பனை செய்து கொள்ளுங்கள் - நீங்களும் உங்கள் மனைவியும் டிவி பார்த்துக் கொண்டிருக்கும் போது ஏதாவது விடயத்துக்காக வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது நீங்கள் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபடும் விடயமாக உங்கள் தொலைகாட்சி விளம்பரம் செய்யும் அல்லது உங்களுக்கு திருமண வாழ்க்கை பற்றி ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளும் இடங்களை பற்றி விளம்பரம் செய்யும்.ஏனெனில் டிவி உங்களை கண்காணிக்கிறது.

கடந்த காலங்களில் நாம் ஒரு விடயம் சம்பந்தமாக பேசிக்கொண்டிருக்கும் போது அவ்விடயமாக தொலைக்காட்சியில் விளம்பரம் வரும் நிச்சயமாக அது ஒரு தற்செயலான விடயம்.ஆனால் எதிர்காலத்தில் வர இருக்கும் அதி நவீன தொலைகாட்சிகள் மற்றும் கேபள் அலைவாங்கிகள் அப்படி இல்லை.அது நமது பேச்சியும் செயல்களையும் சென்சார் செய்து அதற்க்கு ஏற்ற விதத்தில் விளம்பரம் செய்யும்.அந்த நுட்பத்துக்குப் பெயர் தான் VERIZON கம்பனியின் " Gesture Recognition Technology " அதாவது செய்கை அங்கீகார தொழில்நுட்பம்.


 இந்தக் கம்பனி கடந்த மாதம் தான் இந்த மென்பொருளுக்கு காப்புரிமையை தாக்கல் செய்தது.அவர்கள் இதன் மிக முக்கியமான ஒரே குறிக்கோள் விளம்பரமே என்கின்றனர்.நீங்கள் டிவி பார்த்துக் கொண்டிருக்கும் போது,ஆடியோ மற்றும் வீடியோ சென்சர்களைப் பயன்படுத்தி உங்க அறையில் என்ன நடக்கிறது என்று அவர்கள் தெரிந்து கொள்கின்றனர்.இந்த சென்சார்கள் மூலம் முக மற்றும் சுயவிபரத்தை பெற்றுக் கொண்டதன் பின்னர் அவற்றினைக் கொண்டு நமது உடலின் பண்புகளை கண்டறியும் மேலும் ஆடியோ சென்சர்கள் மூலம் நமது மொழி மற்றும் நாம் அந்த மொழியை உச்சரிக்கும் விதம் என்பனவற்றையும் அது கண்டுபிடிக்கும்.உதாரணத்துக்கு ஆங்கிலத்தில் பிரித்தானிய ஆங்கிலமா ? அல்லது அமெரிக்க ஆங்கிலமா ? இல்லை வேறு பிராந்தியமா ? என்றும் கண்டுபிடிக்கும்.



இவை நமது நாட்டில் தற்போது இல்லை என்றாலும் மேற்கத்தைய உலகை ஒவ்வொரு அசைவிலும் பின்பற்றி வரும் நமது நாடும் இவற்றை நிச்சயம் உள்வாங்கிக் கொள்ளும்.





Jazakallhu Hair 




No comments:

Post a Comment