Tuesday, December 11, 2012

அமெரிக்க அடிமை ஆதிக்கத்தின் அழியாச் சின்னம்.


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பம் செய்கிறேன்
House Of Slaves - அடிமைகள் இல்லம் 



 ஆப்ரிக்க கண்டத்தில் உள்ள ஒரு நாடு தான்  செனகல்.இதன் துறைமுகபட்டினம் தான் டாகர்.இந்த டாகரிலிருந்து 10 நிமிட படகுப் பயணத்தில் அமைந்ததுதான் ' கோரி தீவு '.

அதுல் தியுள்கவோன்கர் (Atul Deulgaunkar) என்ற பத்திரிகையாளர் கோரீ தீவுக்கு நேரடியாகச் சென்று, பின்னர் எழுதிய Memories Of Dark Era என்ற கட்டுரை  FrontLine இதழில் 2005 ஆம் ஆண்டு வெளியானது.அந்தக் கட்டுரை கோரீ தீவில் பதிந்திருந்த ரத்தக்கரை படிந்த வரலாற்றை நமக்கு தெளிவாக பறைசாற்றுகிறது.

1444 ஆம் ஆண்டு இந்த அழகிய தீவுக்கு காலடி வைத்த போர்த்துக்கல் நாட்டவர்கள் இதற்கு " கோரீ தீவு " என அழைத்தனர்.இந்த தீவின் வழியாகத்தான் ஆபிரிக்கர்களை தமது கரும்புத் தோட்டங்களில் வேலை செய்ய கடத்திச் சென்றனர்.15 - 16 ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய காலணிகள் அமெரிக்காவில் விரிவடைவதற்கு இந்த அடிமைகளின் கடுமையான உழைப்பு பெரிதும் உதவியது.போர்த்துக்கல் நாட்டவர்களைப் பின்பற்றி டச்சுக்காரர்களும் ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக்காரர்களும் தங்களது சுரங்கங்களில் தோட்டங்களில் வேலை செய்ய ஆபிரிக்கர்களை கடத்திச் சென்றனர்.

900 மீட்டர்  நீளமும் 300 மீட்டர் அகலமும் கொண்ட இந்த குட்டித் தீவு இன்று ஒரு சுற்றுலாத்தலமாக மாறி இருக்கின்றது.இன்று அமெரிக்காவில் வாழும் கருப்பர்கள் தங்கள் முன்னோர்களின் தடங்களை கண்டறியும் முகமாக இங்கு வருகின்றனர்.இந்த தீவின் மண்ணை மரியாதையுடன் பார்க்கின்றனர்.

இந்த தீவில் ஒரு " அடிமைகள் இல்லம் " ஒன்று இருக்கின்றது.இது டச்சுக்காரர்களால் கட்டப்பட்டது.இது அவர்களின் மொழயில் " La Maison Des Esclaves " என்று அழைக்கப்பட்டது.அடிமைகள் இல்லத்தின் முன்பக்கம் ஒரு பெரிய மரக்கதவு.அதனை திறந்தவுடன் ஒரு சிறிய திறந்தவெளி.அதற்குப் பின் இரண்டு  மாடிக் கட்டடம்.கட்டடத்தின் கீழ்தளத்தில் "செல்"என்று அழைக்கப்படும் அறைகள் உள்ளன.

ஆப்ரிக்காவிலிருந்து கடத்தி வரப்படும் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் இந்த திறந்தவெளியில் நிறுத்தப்பட்டனர்.அடிமைகளை வாங்க வரும் வியாபாரிகள் மடியில் நின்று கொண்டு இவர்களைப் பார்ப்பார்கள்.நல்ல புச்டியான திடகாத்திரமான உறுதியான ஆண்களைத் தெரிவு செய்வார்கள்.60 கிலோ எடைக்கு மேலுள்ள ஆண்களுக்கு நல்ல கிராக்கி.

ஒரு ஆண் அடிமைக்கு பண்டமாற்றாக ஒரு துப்பாக்கியும்,பருத்த மார்புள்ள பெண்களுக்கு பண்டமாற்றாக மதுவும், குழந்தைகளுக்கு பண்டமாற்றாக கண்ணாடியும் விற்பவர்களுக்கு கொடுப்பார்கள்.கப்பல் முழுவதும் ஆள் சேரும் வரை அடிமைகள் ,செல்களில் அடைத்து வைக்கப்பட்டார்கள்.இந்த செல்கள் 2.6 மீட்டர அகலமும் 2.6 மீட்டர் நீளமும் கொண்டவை.

அடிமைகள் அடைத்து வைக்கப்படும் " செல்கள் "

கழுத்தை சுற்றி இரும்பு வளையங்களால் பூட்டி, அந்த இரும்பு வளையத்தையும், கை, கால்களையும் நீண்ட சங்கிலியால் அடிமைகளைப் பிணைத்து வைப்பர்.அந்த சங்கிலியின் நுனியில் இரும்புப் பந்துகள் இணைக்கப்பட்டிருக்கும்.இரும்புப் பந்துகளின் கனத்தால் கழுத்தை மேலே தூக்கவே முடியாது.மலஜலம் கழிப்பதற்கு அடிமைகள் ஒரு நாளைக்கு ஒரு தடவைதான் அனுமதிக்கப்பட்டனர்.60 கிலோவுக்கு கீழே உள்ள ஆண்களுக்கெல்லாம் பன்றிகளைப் போல் தீனி ஊட்டப்பட்டனர்.ஏனெனில் அவர்களின் எடை 60 கிலோவுக்கு அதிகமாக இருந்தால்தான் நல்ல விலைக்கு விற்க முடியும் என்பதால்.

கடத்தி வரப்படுபவர்கள் யாராவது கத்தி ஆர்ப்பாட்டம் செய்தால் அவர்களுக்கென்று பயங்கரமான ஒரு பிரத்தியோக அறை காணப்படுகிறது.அங்கே அவர்கள் அடைப்படுவார்கள்.அந்த அறையின் அமைப்பின் படி அங்கு அங்கு நிற்கவும் முடியாது உட்காரவும் முடியாது.தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா 1991 இல் இந்த அடிமை இல்லத்தை பார்வையிட வந்த போது அந்த அறையில் அரைமணி நேரம் செலவழித்தாராம்.

அந்த அறை இதுதான்.

கடத்தப்பட்ட இளம்பெண்கள் மேல்தளத்தில் அடிமை வியாபாரிகளால் இஷ்டத்துக்கு பாலியல் புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டனர்.அப்போது வலிதாங்காமல் அந்த  அபலைப் பெண்கள் கத்தும் சத்தம் வெளியே கேட்காமல் இருக்க பியானோ வாசிப்பார்களாம் இந்த கல்மனம் படைத்த கயவர்கள்.

இந்த இல்லத்தின் பின்புறம், ஓர் இருண்ட குறுகிய சந்து உள்ளது.அது நேரே அட்லாண்டிக் பெருங்கடலை முட்டும்.அந்த சந்தின் முடிவில் அமைந்திருக்கும் கதவை திறந்தால் கடலின் அலைகள் கரையை முத்தமிட்டுக் கொண்டிருக்கும்.

ஏறத்தாழ 2 கோடிக்கும் மேற்பட்ட ஆப்ரிக்கர்கள் இந்த குறுகிய பாதை வழியாகத்தான் அழைத்து வரப்பட்டு கப்பலில் ஏற்றப்பட்டனர்.இதன் வழியாக கப்பலில் ஏறியோர் இனி தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்பவே முடியாது.அதனால் இதன் கதவை " மீளமுடியாக் கதவு " " Door Of No Return " என்று அழைக்கின்றனர்.

" மீளமுடியாக் கதவு " " Door Of No Return "

கிட்டத்தட்ட 300 வருடங்களாக, அதாவது 1536 முதல் 1848 வரை 6 லட்சம் ஆப்ரிக்கர்கள் இந்த தீவில் இறந்துள்ளனர்.1793 இல் எலி விட்னி என்பவர் பருத்தியிலிருந்து கொட்டையை நீக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்தார்.இதனால் பருத்தியின் உற்பத்தி திடீரென பன்மடங்காக அதிகரித்தது.இதன் காரணமாக பருத்திப் பண்ணைகள் பெருமளவில் அதிகரித்தது.இங்கு கடத்தி வரும் ஆப்ரிக்க அடிமைகள் உழைக்க வைக்கப்பட்டனர்.தங்கள் ரத்தம் சிந்தி முழு நாள் முழுவதும் அவர்கள் உழைத்தனர்.
அவர்களால்தான் அமெரிக்க பொருளாதாரம் வளம் மிக்கதாக மாறியது.ஆப்ரிக்க கருப்பர்கள்தான் கால்வாய்கள் - இரும்புப்பாதைகள் - சாலைகள் அமைத்தனர்.விவசாயத்திலிருந்து தொழில் புரட்சிக்கு மாறியவுடன் அடிமைகளின் தேவை இன்னும் அதிகரித்தது.இதனால் கோரி தீவு வழியாக மேலும் மேலும் அவர்கள் கடத்தப்பட்டனர்.

ஆப்ரிக்க கறுப்பர்களின் கடும் உழைப்பு காரணமாகத்தான் இன்று மேலை நாடுகள் மேன்மைதங்கிய நாடுகளாக மாறின என்பதில் எந்தவிதமான மாற்றுக்க்கருத்தும் இல்லை.

அது ஒரு மிருகத்தனமான அநாகரீகமான மனிதாபிமானமற்ற காலம் !

அமெரிக்காவில் அடிமைகள் ஏலம்.1769

தண்டனை வழங்கப்படும் ஒரு அடிமை.

வயல்களில் ஆண்கள் வேலை செய்த அதே நேரத்தில் பெண்களும் வேலைக்கு அமர்த்தப்பட்டனர்.கர்ப்பமான பெண்கள் பேறுகாலம் வரை வேலை செய்ய வேண்டும்.அடிமைகளின் இறப்பு விகிதம் அதிகமான போது, இந்த மனித இழப்பை ஈடுகட்ட பண்ணை முதலாளிகள் அதிகமான குழந்தைகளை பெற்றுக் கொள்ளும்படி அடிமைகளை ஊக்குவித்தனர்.15 குழந்தைகள் பெற்றால் உனக்கு சுதந்திரம் அளிப்பேன் என்று வாக்குறுதிகளும் கொடுத்தனர்.

ஐ.நா வின் கல்வி, அறிவியல், கலாச்சார அமைப்பு  (UNESCO) கோரீ தீவை 1978 இல் உலக பரம்பரை சொத்தாக அறிவித்ததுதட்போது அது செனகல் நாட்டு அரசால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

மேலை நாடுகளின் ஆதிக்க மனோபாவத்துக்கு மௌன சாட்சியாக இந்த அடிமை இல்லம் இன்று நின்றுகொண்டிருக்கிறது.


இன்று அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருக்கும் கறுப்பர்களின் முன்னோர்கள் அன்று ஆப்ரிக்காவிலிருந்து அடிமைகளாக கப்பலில் கடத்தப்பட்டவர்கள்.அப்படி கடத்தப்பட்டவர்கள் முஸ்லிம்களாக இருந்தார்கள் என்ற பேருண்மையை அலெக்ஸ் ஹேலி ( Alex Heli ) என்ற எழுத்தாளர் தனது ஆராய்ச்சியின் போது கண்டுபிடித்தார்.இவர் தனது பரம்பரையின் வேர்களை கண்டறிந்து அதனை " வேர்கள் - Roots " என்ற நாவலில் விவரிக்கிறார்.இவர் எழுதிய அடுத்த நூல் தான் மெல்கம் - x.


நன்றி.


  • வேர்கள் ( Roots ) - தமிழாக்கம் - M.S. அப்துல் ஹமீது.
  • Memories Of Dark Era - Atul Deaugaonkar - Frontline Magazine - 2005.link 
  • House Of Slaves - Wikipedia.com link 
  • Atlantic Slave Trade - Wikipedia.com link 


அலெக்ஸ் ஹெலியும் - மெல்கம் x உம்.




Wednesday, December 5, 2012

இஸ்ரேல் பற்றிய ஒரு சிறு உண்மை


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பம் செய்கிறேன்



இஸ்ரேல் என்ற சட்டவிரோத ஒரு நாடு உருவாக்கப்பட்டதின் பின் அந்நாடும் அதை நாலாபுறத்திலிருந்து பாதுகாத்துவரும் மேற்குலக மற்றும் சில மத்தியகிழக்கு நாடுகளும் ஒரு நிகழ்ச்சி நிரலின் படியே செயற்பட்டு வருகிறது.இந்த நிகழ்ச்சி நிரலின் சாராம்சம் என்னவெனில் " இஸ்ரேலை உலகின் Super Power ஆக மாற்றுவதே ".அது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம் எப்படி உலகின் ஒரு  சிறிய நாடு ஒன்று உலகின் வல்லரசாக மாற முடியும் என்று.இஸ்ரேல் காஸாவில் மேற்கு கரையில் தனது ரத்தவெறியை அரங்கேற்றினால் அந்நாடு விமர்சனத்துக்குல்லாகுமே தவிர அந்நாட்டுக்கு எதிராக உலகின் எந்தவிதமான நாடும் நடவடிக்கை எடுக்காது.எனவே இஸ்ரேல் தனக்கு விரும்பியதை செய்யும் அதை சியோனிச மேற்குலகம் அதை காக்கும்.சியோனிசம் என்பது வெறும் ஒரு இஸ்ரேலிய இயக்கம் மட்டுமல்ல அது உலகளாவிய இயக்கமாகும்.

அமெரிக்கா - ஐரோப்பா - அரபு நாடுகளில் பரந்து வாழும் சியோனிச யூதர்கள் , சட்டவிரோத யூத நாட்டை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் என்றும் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர்.இரண்டாவதாக இஸ்ரேல் நம்பமுடியாத ஒரு இராணுவ பலத்தை கொண்டுள்ளது.இஸ்ரேல் 300 க்கும் அதிகமான இராணுவ ஆயுதங்களை கொண்டுள்ளது.இஸ்ரேல் நினைத்தால் இவற்றைக் கொண்டு மத்திய கிழக்கை கண்சிமிட்டும் நேரத்தில் அதற்கு அழித்து விட முடியும்.அமெரிக்கவைப் ஒன்று இஸ்ரேலுக்கும் சிறந்த ஆயுத தொழில்நுட்பம் காணப்படுகிறது.ஒருவேளை அமெரிக்காவை விட சிறந்த தொழில்நுட்பம் காணப்படலாம்.அல்லாஹ் அறிவான்.யூதர்கள் நபி ஈஸா (அலை) (ஜீசஸ்) அவர்களை அல்லாஹ்வின் தூதராக ஏற்றுக்கொள்ளவில்லை.அவர்கள் இன்றும் அந்த தூரருக்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள்.நபி ஈஸா (அலை) அவர்களுக்குப் பின் நபி முஹம்மத் (ஸல்) அவர்களும் வந்து உலகுக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.இனி அல்லாஹ்வின் ஏற்பாட்டின்படி வர இருப்பவன் தஜ்ஜால் தான்.அல்லாஹ்வின் ஏற்பாட்டின்படி வர இருக்கும் தஜ்ஜால் உலகுக்கு பெரும் சோதனைக் களமாக இருக்குமென்பதில் மாற்றுகருத்துக்கு இடமில்லை.


பிராந்தியரீதியாக பாரிய போர்களைத் தொடுத்து தனது வல்லரசுக்குக் கனவை நனவாக்க முயற்சி செய்யும்.விவிலியத்தில் கூறப்பட்டுள்ளது போல் எகிப்தின் நைல் நதிக் கரையிலிருந்து ஈராக்கின் யூப்ரடீஸ் நதிக்கரை வரை அவர்களின் கனவு தேசம் விரிந்து காணப்படுகிறது.இஸ்ரேலிய கோடியில் காணப்படும் இரு நீல நிறக் கோடுகளும் இதையே குறிக்கிறது.


அகன்ற  இஸ்ரேல் - GREAT ISREAL 



சட்டவிரோத இஸ்ரேலிய நாட்டின் மிக முக்கியமான இலட்சியங்களில் ஒன்றுதான் மஸ்ஜிதுல் அக்சாவை முழுமையாக தரைமட்டமாக்கிவிட்டு வரலாற்றில் காணப்படாத Temple Of Solomon என்ற ஆலயத்தை அந்த இடத்தில் நிர்மாணிப்பது.


சொலமன் டெம்பல் - கற்பனை சித்திரம்.


இஸ்ரேலின் அடுத்த மிக முக்கியமான குறிக்கோள் உலக நிதித்துறையை கைப்பற்றுவது.அது இன்று  95 % வெற்றியடைந்துள்ளது என்றே சொல்லலாம்.

இந்த பதிவைப் பார்க்கவும் -
உலகின் மத்திய வங்கிகள் ஒரு யூத குடும்பம் வசம். CLICK HERE



சியோனிசத்தின் கதை - STORY OF ZIONISM 
நன்றி - கலையகம் வலைப்பூ 



இன்ஷா அல்லாஹ் - பலஸ்தீனம் வெல்லும்.









Tuesday, October 30, 2012

சினாவில் விதைத்த விதை - ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி)


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பம் செய்கிறேன்


படித்ததில் பிடித்த ஒன்று உங்களுக்காக  



பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உயிருக்கு உயிரான தோழர்கள் ஏராளமானோர் இருந்தாலும் ஒருசிலரின் தனித்துவமிக்க தியாகமும் அர்ப்பணிப்பும் துணிச்சலான செயலாக்கங்களும் வரலாற்று ஏடுகள் அவர்களின் பெயர்களை உயர்த்திப் பிடிக்கின்றன.

குறிப்பாக உலகம் முழுவதும் இஸ்லாமிய மார்க்கத்தை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற வேட்கையில் ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு சாதனை செய்துள்ளனர். நீண்ட நெடிய அந்தப் பட்டியலில் நாம் வாழும் இந்திய மண்ணிற்கும் கிழக்காசிய நாடுகளுக்கும் இஸ்லாம் வேரூன்ற காரணமாக இருந்த ஹஸ்ரத் ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) அவர்களின் சாதனைகளைக் காண்போம்.

பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கி.பி. 610இல் மக்காவில் வைத்து அல்லாஹ்வுடைய தீனுல் இஸ்லாத்தை மக்களிடையே  விதைத்திடும் அழைப்புப் பணியில் ஈடுபட்ட தொடக்க நிலையில், சத்தியத்தின் பால் ஈர்க்கப்பட்டு பெருமானாரிடம் ஒப்பந்தம் செய்த, துவக்க நிலை முஸ்லிம்களில் 17வது நபர்தான் ஹஸ்ரத் ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) அவர்கள் அப்போது அவர்களின் வயது 17.

“அஷ்ஷரத்துல் முபஷ்ஷிரா” சொர்க்கம் உறுதி என்று நன்மாராயம் வழங்கப்பட்ட 10 நபித்தோழர்களில் ஹஸரத் ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) அவர்களும் ஒருவர். இஸ்லாமிய மார்க்கத்தையும் பெருமானாரையும் கேலி செய்து பேசியதற்காக நிராகரிப்பாளன் ஒருவனின் மண்டையை உடைத்து தனது இளம் வயது வேகத்தை காட்டியவர் ஹஸ்ரத் ஸஅத் இப்னு அபீவக்காஸ். அதுதான் இஸ்லாத்திற்கு அழைப்பு விடுத்தபோது, சிந்தப்பட்ட முதல் இரத்தம்.

இஸ்லாத்தின் வீச்சும் வேகமும் அதிகரிக்கவே பெருமானாருக்கும் இஸ்லாத்தை தழுவிய முஸ்லிம்களுக்கும் நெருக்கடிகள் அதிகமாகி இனி மக்காவில் வாழ இயலாது என்ற நிலை உருவானது. எதிரிகள் பெருமானாரையும் முஸ்லிம்களையும் கொலை செய்திட முடிவு செய்தனர். அந்த நேரத்தில் இறைவனுடைய வழிகாட்டுதல் இறை வசனமாக பெருமானாருக்கு இறங்கியது.

“இம்மையில் நன்மை செய்தவர்களுக்காக (மறுமையில்) நன்மைதான் கிடைக்கும். அல்லாஹ்வுடைய பூமி மிக விசாலாமானது. நிச்சயமாக பொறாமையாளர்களுக்கு அவர்களுடைய கூலி கணக்கின்றியே (அதிகமாக) கொடுக்கப்படும்”. (அல்குர்ஆன்39:10)

பாதுகாப்புத் தேடி புலம் பெயர்வதை சுட்டிக் காட்டி இறக்கிய வசனத்தின் அடிப்படையில் பெருமானாரின் வழிகாட்டுதலின்படி முஸ்லிம்களில் 11 நபித்தோழர்களைக் கொண்ட ஒரு சிறிய குழு மக்காவிலிருந்து புறப்பட்டு செங்கடலைத் தாண்டி அபீஸீனியா (எத்தியோப்பியா) சென்று “நஜ்ஜாஷி” என்ற கிருத்துவ மன்னரிடம் அடைக்கலமானது.

இரண்டாவது குழு ஏறக்குறைய 100 முஸ்லிம்கள் மக்காவிலிருந்து அபீஸீனியாவிற்கு கி.பி. 615 தில் புறப்பட்டுச் சென்றனர். ஜாபிர் இப்னு அபிதாலிப் (ரலி) அவர்கள் தலைமையில் சென்ற இந்த குழுவில் ஹஸ்ரத் ஸஅத் இப்னு அபீவக்காஸ் அவர்களும் இடம் பெற்றிருந்தார்கள்.

அபிஸீனியா சென்ற 100 பேர்களைக் கொண்ட பெரும் எண்ணிக்கையிலான இந்தக் குழுவை பின்தொடர்ந்து வந்த குறைஷிகள் “நஜ்ஜாஷி” மன்னரிடம் முறையிட்டு வாதம் செய்ததையும் நஜ்ஜாஷி மன்னர் அவற்றை நிராகரித்து முஸ்லிம்களுக்கு பரிபூரண அடைக்கலம் கொடுத்ததையும் நாம் வரலாற்றில் பார்த்திருக்கிறோம் படித்திருக்கிறோம்.

அபீஸீனியாவில் முஸ்லிம்கள் மார்க்க கடமைகளை எவ்வித இடையூறும் இல்லாமல் நிறைவேற்றினர். அங்கே வாழ்ந்த மக்களை இஸ்லாத்தின் பால் அழைத்தனர்.

அதன் மூலம் அபீஸீனியாவில் அதாவது இன்றைய எத்தியோப்பியா, சோமாலியா, எரிடீரியா, சூடான் போன்ற பகுதிகளில் வாழ்ந்த  மக்கள் இஸ்லாமிய மார்க்கத்தை ஆசையாக அள்ளித் தழுவுவதற்கு  இந்த புலம் பெயர்வு சம்பவம் காரணமாக அமைந்தது.

இந்தச் சூழலில் ஹஸ்ரத் ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) அவர்கள் இளமை துடிப்பின் காரணமாகவும் பெருமானாரிடம் பெற்ற ஆன்மீகப் பயிற்சியின் காரணமாகவும் அபீஸீனியாவை விட்டு புறப்பட்டுச் சென்று இந்த உலகம் முழுவதும் அல்லாஹ்வுடைய தீனை நிலைநிறுத்த வேண்டும் என்று முடிவு செய்கிறார். மனம் இருப்புக் கொள்ளவில்லை.

எங்கே புறப்பட்டுச் செல்வது? எப்படிச் செல்வது? யாருடன் செல்வது என்று ஹஸ்ரத் ஸஅத் அவர்களது உள்ளம் கொந்தளித்தது. இறுதியாக தனது தந்தை செய்த வியாபாரம் நினைவிற்கு வருகிறது. ஹஸ்ரத் ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) அவர்களின் தந்தை அபீ வக்காஸ் அவர்கள் சீனா மற்றும் கிழக்காசிய நாடுகளுக்கு கடற்பயணம் மேற்கொண்டு வியாபாரம் செய்தது நினைவிற்கு வருகிறது. அல்லாஹ்வுடைய செய்திகளைக் கொண்டு சேர்ப்பதற்கு அவர்கள் தேர்வு செய்த பகுதி கிழக்காசியப்பகுதி. தன் பயண முடிவை உறுதியாக்கிக் கொண்டு அபீஸீனியாவை விட்டுப் புறப்பட தயாராகிறார்கள். பாய்மரப் படகு செங்கடலில் இருந்து புறப்பட்டு அரபிக் கடலில் புகுந்து இந்தியப் பெருங்கடலில் நுழைகிறது.

(இந்தியப் பெருங்கடலின் ஆழத்தையும் நீளத்தையும் அணு அணுவாக அறிந்து வைத்திருந்த இனம் உலகில் இரண்டே இனம் தான். ஒன்று அரபு இனம் மற்றொன்று தமிழினம்.)

ஹஸ்ரத் ஸஅத் அவர்களின் பாய்மரப் படகு தமிழக கடலோரப் பகுதிக்கு வருகிறது. இலங்கைக்கும் தமிழகத்திற்கும் இடைப்பட்ட பாக்நீரினை வழியாகச் சென்று வங்கக் கடலில் கலந்து இறுதியாக கல்கத்தா அருகில் உள்ள இன்றைய பங்களாதேஷின் சிட்டகாங் துறைமுகத்தை அடைந்தது.

அன்றைய சேர சோழ பாண்டிய நகரங்களாகவும் இன்றைய தமிழக – கேரள துறைமுக நகரங்களாகவும் விளங்கும் பூம்புகார், நாகப்பட்டிணம், கீழக்கரை, காயல்பட்டிணம், கள்ளிக்கோட்டை (கோழிக்கோடு) காசர்கோடு போல பங்களாதேஷின் சிட்டகாங் துறைமுகமும் உலகப் புகழ்பெற்ற துறைமுகம்தான். கடந்த 60 ஆண்டுகளாகத் தான் அது எல்லைக் கோடுகளாகப் பிரிக்கப்பட்டு பங்களாதேஷ் என்ற நாடாக ஆக்கப்பட்டுள்ளதே தவிர அதுவும் இந்திய முஸ்லிம்களின் ஆட்சிக்குட்பட்டிருந்த ஒரே நிலப்பரப்புதான்.

இயற்கையிலேயே துறைமுக வடிவமைப்பைக் கொண்டிருந்த சிட்டகாங் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சிய ஹஸ்ரத் ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) அவர்கள் சில நாட்கள் சிட்டகாங் அதைச் சுற்றியுள்ள பகுதியில் இஸ்லாமிய மார்க்கத்தையும் பெருமானாரின் வழிகாட்டுதலையும் மக்களிடையே எடுத்துக்கூறி அப்படியே தங்களுடைய வாழ்க்கையில் வாழ்ந்து காட்டுகிறார்கள்.

ஹஸ்ரத் ஸஅத் அவர்கள் மக்காவில் பெருமானாரை விட்டுப் பிரிந்து அபீஸீனியாவிற்கு ஹிஜ்ரத் செய்த ஆண்டு கி.பி. 615. அல்குர்ஆனின் வசனங்கள் இறங்கத் துவங்கி 5 ஆண்டுகள் கூட முழுமை பெற்றிராத காலம். இஸ்லாமிய மார்க்கத்தின் சட்டதிட்டங்கள், வழிபாட்டு முறைகள், முழுமையாக இறங்கப்பெறாத நிலையில் பெருமானாரை விட்டு பிரிந்த ஹஸரத் ஸஅத் அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படையான கோட்பாடுகளையும் உயரிய நாகரீகத்தின் ஒரு சில வடிவங்களை மட்டுமே சிட்டகாங் மக்களிடம் எடுத்துக் கூறி அழைப்பு விடுத்த போது அது மக்களை ஈர்த்தது. மக்கள் மனமுவந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர்.

சிட்டாகாங்கை விட்டு புறப்பட்டுச் சற்று மேலே அன்றைய மணிபல்லவம் என்று வழங்கப்பட்ட இன்றைய மணிப்பூர் மாநிலத்திற்கு சென்றார்கள். மணிப்பூர் மலைகளில் வாழ்ந்த பழங்குடியினரிடையே பெருமானாரின் கடவுள் கொள்கை குறித்தும் வாழ்வில் பெருமானாரைப் பின்பற்றி வாழ வேண்டிய அவசியம் குறித்தும் எடுத்துச் சொல்கிறார்கள்.

ஹஸ்ரத் ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) அவர்களின் சொல்லும் செயலும் எவ்வித வேறுபாடும் இல்லாமல் வாக்கும் வாழ்வும் ஒன்றுபோல இருப்பதைக் கண்டு மக்கள் இஸ்லாத்தை ஆரத் தழுவிக் கொண்டார்கள். இன்றைய இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர், மேகாலயா, அஸாம், போன்ற பகுதிகளுக்குச் சென்று விட்டு இறுதியாக சீனா சென்றடைந்தார்கள்.
கி.பி. 616-618 ன் இடைப்பட்ட காலத்தில் சீனா சென்றடைந்த ஹஸ்ரத் ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) அவர்கள் சீன மக்களிடையே பெருகியிருந்த மூட நம்பிக்கைகளையும் தவறான உணவுப் பழக்கங்களையும் விளக்கிக் கூறி பெருமானாரைப் பின்பற்ற வேண்டிய அவசியத்தை மக்களிடையே விதைத்தார்கள்.

ஹஸ்ரத் ஸஅத் அவர்கள் சீனாவில் இருந்தபோது அவர்களுக்கு கி.பி. 623ல் அரபு வணிகர்கள் மூலம் பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்து மக்காவிலிருந்து மதீனாவிற்கு போய்விட்ட செய்தி வருகிறது. உடனடியாக சீனாவிலிருந்து மதீனா திரும்புகிறார்கள் ஹஸ்ரத் ஸஅத் அவர்கள் பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து ஏறக்குறைய 2 ஆண்டுகளில் ஹஸ்ரத் ஸஅத் அவர்கள் மதீனா வந்தடைந்தார்கள்.

ஹிஜ்ரி 2, ரமலான் மாதம் பிறை 17 அன்று அதாவது கி.பி. 624, மார்ச் மாதம் 3ஆம் தேதி சனிக்கிழமை அன்று இறை நிராகரிப்பாளர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பத்ரு போர் மூண்டது. முஸ்லிம்கள் மீது வலிந்து திணிக்கப்பட்ட இந்தப் போரில் ஹஸ்ரத் ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

அதன் பிறகு ஹிஜ்ரி 3 ஷவ்வால் மாதம் பிறை 3இல் அதாவது கி.பி. 625 மார்ச் மாதம் 23 அன்று நடைபெற்ற உகது போரிலும் கலந்து கொண்டு வீரப் போர் புரிந்தார்கள்.

பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலம் முழுவதும் அவர்களின் தோளோடு தோள் நின்று இஸ்லாமிய மார்க்கத்தின் தூணாக விளங்கினார்கள் ஹஸ்ரத் ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) அவர்கள்.
பெருமானாரின் மரணத்திற்குப் பிறகு ஹஸ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்கள் தலைமையிலும் ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்களின் தலைமையிலும் இஸ்லாமிய இராணுவத்திற்கு தலைமையேற்று பல்வேறு போர்களில் முன்னின்று ஹஸ்ரத் ஸஅத் அவர்கள் இஸ்லாமிய அரசின் பாதுகாப்பு கேடயமாக விளங்கினார்கள்.

கி.பி. 650ல் ஹஸ்ரத் உதுமான் (ரலி) அவர்கள் இஸ்லாமிய அரசின் கலீஃபாவாக பொறுப்பேற்ற உடன் உலகின் பல பாகங்களுக்கும் இஸ்லாமிய அரசின் தூதர்கள் அனுப்பப்பட்டனர். சீனாவில் அன்றைக்கு மிகப் பெரிய பேரரசாக விளங்கிய டாங் பேரரசிற்கு ஹஸ்ரத் ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) அவர்கள் மதினாவில் இருந்து இஸ்லாமிய அரசின் தூதராக அனுப்பப்பட்டார்கள்.

ஏற்கனவே சீனாவிற்கு வந்திருந்த அனுபவமும் சீனா மக்களின் பழக்க வழக்கத்தையும் நன்றாக அறிந்திருந்த ஹஸ்ரத் ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) அவர்கள் இப்போது இஸ்லாமிய அரசின் அதிகாரப்பூர்வ தூதராக கி.பி. 650இல் சீனா வந்தார்கள். அவர்கள் இந்த முறை வரும் போது ஏற்கனவே வந்த அதே பாதையான தமிழக கடற்கரை வழியாக வங்கக் கடலில் புகுந்து சிட்டாகாங் துறைமுகம் பிறகு மணிப்பூர் வழியாக சீனா வந்தடைந்தார்கள்.

ஹஸ்ரத் ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) அவர்கள் இரண்டாவது முறையாக இஸ்லாமிய அரசின் அதிகாரப்பூர்வ தூதராக சீனாவிற்கு வரும் போது அல்குர்ஆன் முழுமையாக்கப்பட்டு எழுத்து வடிவமாக தொகுக்கப்பட்ட பிரதி ஒன்றையும் கையோடு எடுத்து வந்தார்கள். வருகின்ற வழியில் சிட்டகாங் நகர மக்களும் மணிப்பூர் மக்களும் மிக ஆர்வமாக அதைப் பார்த்து வியந்தனர். அதையே தங்களின் வாழ்க்கைக்கான வழிகாட்டியாக ஏற்று மனமுவந்து சாட்சியம் கூறினர்.

மணிப்பூர் கடந்து சீனா சென்றடைந்த ஹஸ்ரத் ஸஅத் அவர்களை டாங் பேரரசின் மன்னர் ‘குவாஸாங்’ உயரிய கண்ணியத்தோடு வரவேற்றார். சீனா முழுவதும் சுற்றிப் பார்த்த ஹஸ்ரத் ஸஅத் அவர்களுக்கு மிகப் பெரிய ஆச்சரியம் காத்திருந்தது.

30 ஆண்டுகளுக்கு முன்பு வந்த போது ஹஸ்ரத் ஸஅத் அவர்களால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட இஸ்லாமிய மார்க்கம் அதன் பிறகு அரபு வணிகர்களின் அழைப்புப் பணி காரணமாக சீனாவின் பல பாகங்களிலும் ஆழமாக வேரூன்றி இருந்ததைக் கண்டார்கள்.

குறிப்பாக உலகப் பிரசித்தி பெற்ற (ஷிவீறீளீ க்ஷீஷீணீபீ ஜிக்ஷீணீபீமீ) பட்டுச்சாலை வர்த்தகத்தின் மூலம் நிலவழியாக வந்த அரபு வணிகர்கள் பாரசீகத்தில் இருந்து மத்திய ஆசியா வழியாக சீனாவின் ஜின்ஜியாங் மாகாணம் வரை வழிநெடுகிலும் வாழ்ந்த மக்களிடம் தீனுல் இஸ்லாத்தை விதைத்திருந்ததை ஹஸ்ரத் ஸஅத் அவர்கள் கண்டு ஆனந்தம் அடைந்தார்கள்.

சீனாவில் வாழ்ந்த முஸ்லிம்களை ஒருங்கிணைத்து இஸ்லாமிய சமூகக் கட்டமைப்பை உருவாக்கிடும் விதமாக டாங் பேரரசின் மன்னர் குவாஸாங்கிடம் ஒரு பள்ளிவாசல் கட்டுவதற்கான அனுமதி வழங்கவேண்டும் ஹஸ்ரத் ஸஅத் முறையிட்டார்கள்.

மனமுவந்து ஏற்றுக் கொண்ட மன்னர் உடனடியாக சீனாவின் கேன்டன் நகரில் பள்ளிவாசலுக்கான நிலத்தை ஒதுக்கித் தந்தார்கள். அன்றைக்கு கட்டப்பட்ட பள்ளிவாசல் இன்றைக்கும் கேன்டன் நகரில் ஹஸ்ரத் ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) மெமோரியல் மஸ்ஜித் என்று அழைக்கப்படுகிறது. சீனப் பாரம்பரிய கட்டிடக் கலையை பறைசாற்றும் விதமாக கொண்டுள்ள அந்த இறையில்லம் இறைவனுடைய தீனுல் இஸ்லாத்தின் இரும்புத் தூணாக இன்றும் காட்சி தருகிறது.

ஹஸ்ரத் ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கி.பி. 664ல் மரணமடைந்தார்கள். அவர்கள் அன்று விதைத்த இஸ்லாம் என்கிற வீரிய ரக விதை வேரூன்றி முளைத்து மரமாகி கிளை பரப்பி மிகப்பெரிய சமூகமாக பல்கிப் பெருகியுள்ளது. உயரிய நாகரீகத்தின் பண்புகளை தமது வாழ்வியல் மூலம் வெளிப்படுத்துகின்றனர் இன்றைய சீன முஸ்லிம்கள்.

ஹஸ்ரத் ஸஅத் அவர்களுக்குப் பிறகு ஏராளமான அரபு வணிகர்கள், மத்திய ஆசிய முஸ்லிம்கள் சீனாவிற்கு வந்து இஸ்லாமிய அழைப்புப் பணியில் ஈடுபட்டனர். சீனப் பெண்களை திருமணம் செய்து கொண்டனர். புதிய இனம் உருவானது. முஸ்லிம்கள் பல்கிப் பெருகினர். சீனப் பெண்களுக்கு அரபுப் பெயர்களை உச்சரிப்பதில் சற்று சிரமம் இருந்தது. ஆனாலும் ஆசை ஆசையாக தங்களுக்கு பிடித்தமான அரபுப் பெயர்களை சற்று சுருக்கி உச்சரித்தனர். ‘ஹஸன்’ என்ற பெயரை ‘ஹாய்’ என்றும் ‘ஹூசைன்’ என்கின்ற பெயரை ‘ஹூய்’ என்றும் அன்போடு அழைக்கின்றனர்.

இன்றைய தேதியில் சீனாவின் மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 2.5% உள்ளனர் என்கிறது சீனத்தின் புள்ளிவிவரம் என்று ஹஸ்ரத் ஸஅத் இப்னு அபீவக்காஸ் அவர்கள் விதைத்த விதை.



கட்டுரையை எழுதியவர்
C M N சலீம்
(சமூகநீதி.காம்)
 



Wednesday, October 10, 2012

2012 ஒலிம்பிக் இறுதிநாள் நிகழ்வின் மர்மங்கள்.


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அருளால் ஆரம்பம் செய்கிறேன்.


வணங்கப்படும் பிரமிட் 


 இந்த தளத்தில் இதற்கு முன் பதிவிடப்பட்ட பதவில் 2012 ஒலிம்பிக் ஆரம்ப விழாவில் அரங்கேற்றப்பட்ட மர்மமான விடயங்கள் பற்றிப் பார்த்தோம்.TO READ CLICK HERE.பிரித்தானியாவின் இலக்கியம் வரலாறு போன்றவற்றைப் பயன்படுத்தி அவர்களது மர்மமான விடயங்களை அரங்கேற்றினார்கள்.இன்று இந்த பதிவில் இறுதி விழாவில் அரங்கேற்றப்பட்ட மர்மமான விடயங்கள் பற்றிப் பார்ப்போம்.


நிறைவு விழா


ஒலிம்பிக் ஆரம்ப நாள் நிகழ்வு பிரித்தானியாவின் கடந்த காலத்தை பிரதிபலிப்பதாக இருந்தது, ஆனால் இறுதிநாள் நிறைவு விழாவோ எதிர்காலத்தை பிரதிபலிப்பதாக உருவாக்கப்பட்டிருந்தது.


புகழப்படும் இலுமினாடிகள்.


 NWO அல்லது New World Order அதாவது புதிய உலகுக்கான பிரகடனம்.இந்த பிரகடனத்தை ஏற்று அதன்படி இந்த உலகை தமது ஆயுத பலத்தால் வழிநடத்திச் செல்லும் மேற்குலகின் உயரடுக்கு மக்களின் ஒரே குறிக்கோள் முழு உலகமும் ஒரே ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும்.ஒரே ஆட்சி முழு உலகையும் ஆள வேண்டும்.முழு உலகத்திலும் ஒரே நாணயம் பயன்படவேண்டும்.இந்த குறிகோளுடன் இருப்பவர்களுக்கு தமது செய்தியை சொல்ல மிக பொருத்தமான இடங்களில் மிக முக்கியமான இடம்தான் ஒலிம்பிக்.இதை இவர்கள் சொன்ன விதம் மிகவும் மர்மமானது.எல்லா நாட்டை சேர்ந்தவர்களும் ஒரு மேடையை சுற்றி ஒன்று சேர்ந்தனர்.அப்போது நடனமாடியவ்ர்கள் மெது மெதுவாய் ஒரு பிரமிட்டை கட்டம் கட்டமாக கட்டி எழுப்பினர்.பின்னர் அவர்கள் தரையில் விழுந்து அந்த பிரமிட்டை வணங்கினர்.கடைசியில் மேடையில் கட்டி எழுப்பப்பட்ட பிரமிட்டை சுற்றி எல்லா நாட்டு வீரர்களும் தமது நாட்டுக் கொடியுடன் திரண்டிருந்தனர்.

இதன் நோக்கம் தான் என்ன ? இன்னும் புரியவில்லையா ?
கட்டி எழுப்பப்படும் பிரமிட்டும் அதை சுற்றி காணப்படும் உலக நாட்டுக் கொடிகளும் 


கட்டி எழுப்பப்பட்ட பிரமிட்டும் அதை வணங்கும் நடனக்குளுவினரும்


Imagine - கற்பனை செய்துபார் 


இறுதி விழாவின் இசை நிகழ்ச்சிகள் குறிப்பிட்டுக் கூறத்தக்க வரிகளைக்கொண்ட John Lennon இனால் பாடப்பட்ட " Imagine " என்ற பாடலுடன் ஆரம்பமானது.இந்த பாடல் இப்படிப்பட்ட ஒரு உலக நிகழ்வொன்றின் போது பாவிக்கப்பட்டதின் உள்நோக்கம் என்ன ? அது அந்த பாடலின் வரிகளை கவனித்தாலே இலகுவாக புரிந்துவிடும்.

John Lennon


Imagine there’s no countries 
It isn’t hard to do

Nothing to kill or die for

And no religion too
                   
Imagine all the people living life in peace


You, you may say
I’m a dreamer, but I’m not the only one

I hope some day you’ll join us

And the world will be as one


Imagine no possessions             
I wonder if you can

No need for greed or hunger

A brotherhood of man

Imagine all the people sharing all the world


ஒலிம்பிக் போன்ற அகில உலக நிகழ்வொன்றின் போது இப்படிப்பட்ட பாடல் வரிகளைக் கொண்ட பாடல் ஒன்று ஒளிபரப்பப்பட்டதன் உள் நோக்கம் என்ன ?
அதுவும்  Imagine No Countries - Imagine No Religion - Imagine No Possession போன்ற வரிகள் சொல்லவரும் செய்திதான் என்ன ?

இந்த உலகை ஒரே குடையின் கீழ் ஆள நினைக்கும் மேட்டுக் குடியினரின் நோக்கங்கள் மேலே உள்ள வரிகள் மூலம் அவர்கள் சொல்லியிருப்பது தெளிவாக தெரிகிறது.இந்த பாடலைப் பாடியவர்களின் நோக்கம் வேற ஒன்றாக இருக்கலாம், ஆனால் இதை இந்த இடத்தில் பாவித்தவர்களின் நோக்கம் நிச்சயம் வேற ஒன்றே.



பீனிக்ஸ் வழிபாடு.

பலவிதமான கலை நிகழ்வுகளுக்குப் பிறகு எல்லோரினதும் கவனம் ஒலிம்பிக் தீப்பந்தத்தின் மீதே இருந்தது, அது அனைக்கப்படுவதட்கு முன் அதிலிருந்து கிளம்பி மேலே எழுந்து வந்தது ஒரு பீனிக்ஸ் பறவை.தனது சாம்பலிலிருந்து மீண்டும் மீண்டும் உயிர் பெற்று எழுந்துவருவதாக கூறப்படும் இந்த கற்பனைப் பறவை இரகசிய சமுதாயங்களின் மிக முக்கியமான  புதிர் நிறைந்த ஒரு சின்னமாகும்.



பண்டைய இரகசிய சமுதாயங்கள் மூலம் உச்ச அளவில் கொண்டாடப்பட்ட ஒரு பறவையே இந்த பீனிக்ஸ் எனப்படும் கற்பனைப் பறவை,இது அவர்களின் ஒரு ரகசிய குறியீடாக பயன்பட்டது.

பீனிக்ஸ் பற்றி Manly P Hall எழுதிய Secret Teaching Of All Ages இப்படி கூறப்பட்டுள்ளது.

“The phoenix is the most celebrated of all the symbolic creatures fabricated by the ancient Mysteries for the purpose of concealing the great truths of esoteric philosophy. (…) Medieval Hermetists regarded the phoenix as a symbol of the accomplishment of alchemical transmutation, a process equivalent to human regeneration. The name phoenix was also given to one of the secret alchemical formula. (…) In the Mysteries it was customary to refer to initiates as phoenixes or men who had been born again, for just as physical birth gives man consciousness in the physical world, so the neophyte, after nine degrees in the womb of the Mysteries, was born into a consciousness of the Spiritual world. This is the mystery of initiation to which Christ referred when he said, “Except a man be born again, he cannot see the kingdom of God” (John iii. 3). The phoenix is a fitting symbol of this spiritual truth.”


பீனிக்ஸ் இன் வருகைக்குப் பிறகு அரங்கத்தில் ஒலித்த பாடல் இன்னும் ஆச்சரியத்துக்குரிய வரிகளையுடையது.

" Rule The World "

" RULE THE WORLD பாடும் காட்சி.


இந்த பதிவு மூலம் நான் தந்தது ஒரு அறிமுகம் மட்டுமே ஆனால் இந்த இறுதி நாள் நிகழ்வில் இடம்பெற்ற இன்னும் பல மர்ம விடயங்கள் இருக்கின்றன..அது பற்றி மிகத் தெளிவாக விளக்கும் ஒரு காணொளி ஒன்று YOUTUBE இல் கிடைத்தது.அதை கட்டாயம் பார்க்கவும்.

இதோ அந்த காணொளி 


பாருங்கள் தெளிவு பெறுங்கள் 




ஒற்றைக் கண் MASCOTS
சியோனிச LOGO


SOMETHING OUT THERE ???


ஜசாகல்லாஹு ஹைர்
உங்கள் நண்பன் 
முஹம்மத் ஹிமாஸ் நிலார் 










Friday, September 21, 2012

சமூக அமைதிக்கு வித்திட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள்.




   இன்றைக்கு சமூக நல்லிணக்கம் என்பது என்றால் என்ன? என்று கேட்கும் அளவுக்கு சமூக மாச்சரியங்கள் மலிந்து காணப்படுகின்ற வேளையில், இஸ்லாம் சமூக அமைதிக்கு வழிகாட்டியிருக்கின்றது என்பது பற்றி அறிந்து கொள்ள இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாழ்வு நமக்கு பேருதவி புரிகின்றது.

இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மதினாவைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து கொண்டிருந்த நேரமது. இஸ்லாமிய தலைமைக் கேந்திரமான மதினாவிலும், அதனைச் சுற்றிலும் உள்ள பகுதிகளிலும் பல்வேறு மதத்தவர்கள் வாழ்ந்து வந்தார்கள். இவர்கள் அனைவரும் எந்தக் காலத்திலும் எந்தச் சட்டத்திற்கும் கட்டுப்பட்டு வாழ்ந்த வரலாறு என்பதே கிடையாது. இந்த நிலையில், பல்வேறு குழுக்களையும் ஒப்பந்தங்கள் மூலம் ஒருங்கிணைத்து, அதன் மூலம் மதீனாவின் சமூக வாழ்வை அமைதி தவழும் இடமாகவும், மக்கள் தங்களுக்குள் கொள்கைகளில் வேறுபட்டிருந்தாலும், சமூக அமைதி என்ற ஒரே குறிக்கோளை முன்வைத்து அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தலைமையில் ஒருங்கிணைந்து வாழ்ந்ததை நாம் காண முடிகின்றது.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் என்ற மதீனாவிற்கு நாடு துறந்து வந்த பொழுது, மதீனாவில் பல்வேறு கொள்கையைக் கொண்ட மக்கள் வாழ்ந்து வந்தார்கள். அவர்களில் மிகவும் வலுவான சமூக அடித்தளத்தைக் கொண்ட யூதர்களும், மற்றும் கிறிஸ்தவர்களும், தங்களது மூதாதையர்களின் பழக்க வழக்கங்களைப் பின்பற்றி வருபவர்களுமாக, மதீனா நகரம் ஒரு குழம்பிய குட்டையாகத் தான் இருந்தது.

பல்வேறு கொள்கையைக் கொண்டிருந்த இந்த மக்களை ஒருங்கிணைத்து அமைதியான சமூக வாழ்வை ஏற்படுத்த விரும்பிய இறைத்தூதர்(ஸல்) அவர்கள், அந்த பல்வேறு குலத்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, நேரடித் தொடர்புகள் அல்லது எழுத்துப்பூர்வமான ஒப்பந்தங்களைச் செய்து கொண்டார்கள். இந்த ஒப்பந்தங்களின் நோக்கம் எதுவாக இருந்ததெனில், மதீனா நகரில் பல்வேறு குலத்தவர்கள் வாழ்ந்து வந்தாலும், பல்வேறு கொள்கையைக் கொண்டவர்களாக அவர்கள் இருந்தாலும், சமூக வாழ்வில் அந்தத் தாக்கங்கள் தலைகாட்டாது, சமூகம் அமைதி தவழும் இடமாக இருந்து வர வேண்டும் என்பதாக இருந்தது.

இதனை மிகப் பிரபலமான மேற்கத்திய சிந்தனையாளரான டி.டபிள்யூ.அர்னால்டு என்பவர் இவ்வாறு கூறுகின்றார் :

ஹிஜாஸ் பிரதேசத்தில் வாழ்ந்த மக்களிடம் சமூக அமைதியை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள், இதற்கு முன் எந்த சட்டத்திற்கும் கட்டுப்படாத அந்த மக்களை முழுவதுமாக ஒப்பந்தங்களின் மூலம் கட்டுப்பட வைத்ததன் மூலம், சமூக அரசியல் தளத்தில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தினார்கள். இன்னும் அவர் கூறுகின்றார், சிறிய மற்றும் பெரிய குலத்தவர்களாக சிதறிக் கிடந்த அந்த மக்களை, தங்களுக்குள் எப்பொழுதும் பகைமை பாராட்டிக் கொண்டிருந்த அந்த மக்களை ஒருங்கிணைத்து, சமூக ஒற்றுமையை ஏற்படுத்தினார்கள்.

மக்காவின் வெற்றியைத் தொடர்ந்து, இதுவரை காலமும் முஸ்லிம்களை மரணப்படுக்கையில் தள்ளுவதற்குக் கூடத் தயங்காத இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத அந்த மக்களை மதச் சகிப்புத் தன்மையுடன் நடத்தியதோடு, அவர்களை இரக்கத்துடன் நடத்தினார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள். இத்தைகய சகிப்புத்தன்மையை இதுவரை காலமும் அரபுக்கள் தங்கள் வாழ்நாளிலே என்றுமே கண்டதுமில்லை, கேட்டதுமில்லை. இத்தைகய நற்பண்புகள் முஸ்லிம்களின் மீது மிகப் பெரும் நன்மதிப்பை அவர்கள் மத்தியில் ஏற்படுத்தியது.

இஸ்லாம் ஆட்சி செய்து கொண்டிருந்த அந்த பிரதேசத்தில், இஸ்லாமிய நீதியையும், நெறிமுறைகளையும் அமுல்படுத்திக் காட்டுவதில், மற்றவர்களைக் காட்டிலும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தான் ஒரு முன்மாதிரிமிக்கவராகத் திகழ்ந்து காட்டினார்கள். அவர்கள் அந்த மக்கள் மத்தியில் மத சகிப்புத் தன்மையையும், நீதியையும் குர்ஆன் வகுத்துக் காட்டியிருக்கின்ற வழிமுறைப்படி ஆட்சி செய்து காட்டினார்கள். இந்த ஒரு காரணத்திற்காக, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, பல்வேறு குலங்களையும், கோத்திரங்களையும் சேர்ந்த அந்த மக்கள், இஸ்லாத்தின் மதசகிப்புத் தன்மை, நீதி பரிபாலணம், அது வழங்கியிருக்கும் அமைதி தவழும் வாழ்க்கை நெறி ஆகியவற்றினால் கவரப்பட்டு, குறுகிய காலத்தில் தங்களை இஸ்லாத்தினுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டார்கள். இவ்வாறு பல குலங்களையும் ஒருங்கிணைத்த இஸ்லாம், அவர்கள் அனைவரையும் சகோதரத்துவம் என்ற ஒரே கொள்கையின் கீழ் இணைத்து, நீதிபரிபாலணம் என்பது முழு அளவில் செயல்பட்டுக் கொண்டிருந்தது. அதற்கு திருமறைக் குர்ஆன் இவ்வாறு பின்புலமாக இருந்தது.


நாம் படைத்தவர்களில் ஒரு கூட்டத்தார் இருக்கின்றார்கள். அவர்கள் சத்திய வழியைக் காட்டுகிறார்கள்; அதைக் கொண்டு நீதியும் செலுத்துகிறார்கள். (7: 181)


இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மற்ற மக்களிடம் காட்டிய மதச் சகிப்புத் தன்மைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக, நஜ்ரான் பிரதேசத்துக் கிறிஸ்தவர்களிடம் அவர்கள் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் முஸ்லிம்களின் மத சகிப்புத் தன்மைக்கும், நீதி நெறிமுறைகளுக்கும் சிறந்த சான்றுகளாகத் திகழ்கின்றன. இதனை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அந்த சமூகத்தில் முழுவதுமாக நடைமுறைப்படுத்திக் காட்டினார்கள்.

அத்தகைய ஒப்பந்தங்களின் ஒருபகுதி இவ்வாறிருந்தது :

உயிர்களும், அவர்களது கொள்கைகளும், உடமைகளும், குடும்பங்களும், அவர்களது வழிபாட்டுத் தளங்களும், இன்னும் நஜ்ரானில் வாழ்கின்ற அனைத்து மக்களும், இன்னும் அவர்களுடன் வாழ்ந்து வருபவர்களும் அல்லாஹ்வினதும், அல்லாஹ்வினது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களினதும் பாதுகாப்பின் கீழ் இருக்கின்றார்கள்.

எனவே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இதுபோன்ற ஒப்பதங்கள் மூலமாக, இஸ்லாமிய ஒழுக்க மாண்புகளை எவ்வாறு சமூகத்தில் நடைமுறைப்படுத்திக் காட்டுவது என்பதற்கான நடைமுறையையும், இன்னும் முஸ்லிம்களுடன் முஸ்லிம் அல்லாத மக்களான வேதம் வழங்கப்பட்டவர்கள் எவ்வாறு இணக்கமான முறையில் வாழ முடியும் என்பதற்கான உதாரணத்தையும் காட்டி விட்டுச் சென்றுள்ளார்கள்.

முஸ்லிம்களின் நடைமுறைப்படுத்திக் காட்டும் ஒழுக்க மாண்புகள் நீதமானதும், நடுநிiயானதும், இன்னும் அமைதிப்பூர்வமானதும் கூட. இன்னும் அதிகமாக, இத்தகைய ஒப்பந்தங்கள் மூலமாக, அதற்குப் பிரதியீடான இஸ்லாமானது வாழ்நாள் முழுவதற்குமான அமைதியையும், மற்றும் தொல்லைகளற்ற வாழ்வுக்கும் உத்தரவாதம் தருகின்றது. இன்னும் இஸ்லாத்தின் ஒழுக்க மாண்புகளை அடிப்படையாகக் கொண்டதொரு முன்மாதிரி மிக்க சமூகத்தைப் பெற்று அதன் மூலம் கருணை, இணக்கம், சகிப்புத் தன்மை மற்றும் அமைதி மிக்க வாழ்க்கையை இந்தப் பூமிப் பந்தின் மீது நிறுவுதற்கு அனைவருக்கும் அழைப்பும் விடுக்கின்றது.

அனைத்து மக்களும், அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் சரியே, அமைதியான சமூக வாழ்விற்கு ஒத்துழைப்பது அனைவரின் மீதுள்ள மிகவும் பொறுப்பு வாய்ந்த கடமையாகும். முஸ்லிம்கள் என்ற நிலையில், மற்ற மதத்தவர்ளைப் பொறுத்தவரை, முஸ்லிம்களுக்கு அல்லாஹ் கட்டளையிடுவது என்னவென்றால், ''அல்லாஹ்வைத் தனித்துவமாக வணங்குவதற்கும் இன்னும் அவனுடன் எந்தவித இணையாளர்களையும் ஆக்காதிருப்பதற்காவும்'', மேற்கண்ட நோக்கத்தை அடைந்து கொள்வதற்காக அவர்களுடன் தோள் கொடுத்துச் செயலாற்றும்படிக் கூறுகின்றான் :


(நபியே! அவர்களிடம்) ''வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே (இசைவான) ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹவீர்ர்hர்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்'' எனக் கூறும்; (மு.மின்களே! இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால்; ''நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!'' என்று நீங்கள் கூறிவிடுங்கள். (3:64)


முஸ்லிம்களும், யூதர்களும் மற்றும் கிறிஸ்தவர்களும் ஒரு பொதுவான கருத்தின் அடிப்படையில் அதாவது பரஸ்ர நல்லுணர்வு, அன்பு, அமைதி மற்றம் சகிப்புத் தன்மை ஆகியவற்றை பொதுவான நோக்கமாகக் கொண்டதன் அடிப்படையில் இணைந்து விட்டார்களென்று சொன்னால், இந்த உலகம் ஒரு வித்தியாசமானதொரு இடமாக மாறி விடும். பிளவுகளும், பிரச்னைகளும், அச்சமும், மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளும் மறைந்து, அவை எல்லாம் வரலாற்றில் தேடிப்பிடிக்க வேண்டிய நிகழ்வுகளாக ஆகி விடும், அன்பு, மதிப்பு மற்றும் அச்சமற்ற தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட புதியதொரு நாகரீகம் மலர்ந்து விடும்.

அல்லாஹ் தன்னுடைய திருமறையிலே கூறுகின்றான் :


நிச்சயமாக யூதர்களையும், இணைவைப்பவர்களையும் முஃமின்களுக்குக் கடும் பகைவர்களாகவே (நபியே!) நீர் காண்பீர்; ''நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்களாக இருக்கின்றோம் என்று சொல்பவர்களை, முஃமின்களுக்கு நேசத்தால் மிகவும் நெருங்கியவர்களாக (நபியே!) நீர் காண்பீர்; ஏனென்றால் அவர்களில் கற்றறிந்த குருமார்களும், துறவிகளும் இருக்கின்றனர்; மேலும் அவர்கள் இறுமாப்புக் கொள்வதுமில்லை. (5:82)


சில இறுமாப்புக் கொண்டவர்கள் (சிலுவை யுத்தக் காரர்கள்) இந்த உண்மையை அறிந்து கொள்ள இயலாத காரணத்தால், இரு சமூகத்திற்கும் இடையே அவர்கள் மிகப் பெரும் யுத்தத்திற்கு வழி வகுத்து விட்டார்கள். உண்மையான கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் இத்தகைய யுத்தத்தின் மூலம் இரத்தம் சிந்தப்படுவதை விரும்பக் கூடாது, தங்களுக்குள் பரஸ்பரம் ஒத்துழைத்து, அதனை தடுக்கவும் முயற்சி செய்ய வேண்டும்.

அமெரிக்காவில் நடந்து போன துரதிர்ஷ்டவசமான அந்த நிகழ்வுக்குப் பின், இத்தகைய ஒத்துழைப்புகளுக்கான விதைகள் தூவப்பட்டதற்கான அறிகுறிகள் தென்பட்டதை நாம் கண்டோம். வெறுக்கத்தக்க இந்த நாசகாரச் செயல்கள் நடந்து விட்ட பின், இரு சமூகத்திற்கும் இடையே மிகப் பெரும் இணைப்பை உருவாக்கி வைத்ததையும் நாம் பார்த்தோம். முன்னைக்காட்டிலும், இஸ்லாத்தின் பக்கம் மிக நெருக்கமாகச் சென்று அதனை ஆராய்ந்து அறிந்து கொள்ளும்படி பல கிறிஸ்தவர்கள் உற்காசமூட்டப்பட்டார்கள், அதனைப் போலவே முன்னைக் காட்டிலும் தங்களது மார்க்கத்தைப் பற்றி அதிகமான விளக்கத்தையும், குர்ஆன் கூறும் இஸ்லாமிய ஒழுக்க மாண்புகள் பற்றியும் அதிகமாக அளவில் விளக்கங்கள் கொடுக்க அதிக முயற்சியை முஸ்லிம்கள் எடுத்துக் கொண்டார்கள்.


இறைவன் நாடினால், இந்த பூமிப் பந்தில் அமைதியை முழுமையாக நிறுவுவதற்கு இஸ்லாமிய ஒழுக்க மாண்புகளே உகந்தது என்ற உண்மையை இந்த 21 ஆம் நூற்றாண்டானது விரைவில் கண்டு கொள்ளும்.

முன்னைக் காட்டிலும் இஸ்லாத்தைப் பற்றியும், அதன் ஒழுக்க மாண்புகள் பற்றியும் மக்கள் மத்தியில் இருந்த எதிர்மறையான கருத்துக்கள் மறைய ஆரம்பித்திருப்பதும், அத்தகைய தவறான எண்ணங்கள் களையப்பட்டு வருவதும், 21 ஆம் நூற்றாண்டை விரைவில் இஸ்லாமிய ஒழுக்க மாண்புகள் ஆட்சி செய்யும் என்ற நற்செய்திக்குக் கட்டியம் கூறுபவைகளாக உள்ளன.



ARTICLE BY - HARUN YAHYA 

JAZAKALLAHU HAIR TO - ONE REALISM






Friday, September 14, 2012

2012 - ஒலிம்பிக் துவக்க விழாவின் மர்மங்கள்


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அருளால் ஆரம்பம் செய்கிறேன்.




    இந்த வருடம் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்த மிக முக்கியமான நிகழ்வுதான் 2102 ஒலிம்பிக், அதன் துவக்க விழா பிரித்தானியாவின் ஒலிம்பிக் கிராமத்தில் மிகப் பிரம்மாண்டமாக நிகழ்ந்தது.இந்த நிகழ்வை உலகின் நாளா பக்கங்களிலும் உள்ள பில்லியன் கணக்கான மக்கள் தொலைக்காட்சியில் நேரடியாக பார்த்து ரசித்தனர்.ஆனால் இந்த ஆண்டின் ஒலிம்பிக் நிகவின் துவக்க மற்றும் இறுதி நிகழ்வுகளின் மறைந்த மர்மமான தகவல்கள் என்ன ?


துவக்க விழா
 
  TRAINSPOTTING SLUMDOG MILLIONAIRE போன்ற வெற்றித் திரைப்படங்களை இயக்கிய பிரித்தானிய திரைப்பட இயக்குனர் Danny Boyle தான் இந்த நிகழ்வினதும் இயக்குனர்." Isle Of Wonder " இதுதான் இந்த நிகழ்வின் சாராம்சம் அல்லது தீம் என்றும் வைத்துக் கொள்ளலாம்.ஆரம்ப விழாவின் நிகழ்வுகள் பிரித்தானிய வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.ஆரம்ப கால புராணக்கதைகளில் துவங்கி தொழில் புரட்சி மற்றும் நவீன காலம் என செல்கிறது களியாட்டங்கள்.இந்த விடயங்களை அவர்கள் சொல்லப் பயன்படுத்திய சில மர்மமான குறியீடுகளே இங்கு மிகவும் முக்கியமானது.அது பற்றி இப்போது அலசுவோம்.


பச்சைப் பசேலான சந்தோசமான நிலம்.


   ஆரம்ப நிகழ்வின் தொடக்கம் பண்டைய நாட்டுபுற இங்கிலாத்தைக் குறிக்கும் விதமாக விவசாயிகளையும் கிரிக்கெட் வீரர்களையும் கொண்டு ஆரம்பிக்கிறது.மேலும் அதன்போது பல மாயமான விசித்திரமான குறியீடுகளும் காட்டப்படுகின்றன.அப்படி காட்டப்பட்ட விசித்திரமான குறியீடுகளின் மிக முக்கியமானதும் ஆரம்ப நிகழ்வின் மையைப் புள்ளியுமானதுமான ஒரு குறியீடே அந்த மலை உச்சி. " Glastonbury Tor " என்று அழைக்கப்படும் இந்த மலை உச்சிக்கு மந்திர சக்திகள் உள்ளதாக இன்றும் அப்பகுதிகளில் நம்பப்படுகிறது.

சுருள் வடிவில் அமைந்த அந்த Glastonbury Tor மலையுச்சி நாட்டுப்புற விவசாயிகளையும் கிரிக்கெட் வீரரகளையும் மேலிருந்து நோக்கும்விதமாக அந்த காட்சி அமைக்கப்பட்டிருந்தது.மேலும் அம் மலையுச்சியில் ஒரு ஓக் மரம் (கருவாலி) நடப்பட்டிருந்தது.ஓக் மரம் ஆங்கிலேயர்களின் மூதாதையர்களான " செல்டிக் " இனத்தவர்களின் மிகப் புனிதமான மரமாகும், இம்மரம் செல்டிக் இனத்தவர்களின் பாதிரிமார்களின் மிகப்புனிதமான மரமாகும்.மேலும் அவர்களின் கருத்துப்படி அது தெய்வத்தன்மையின் உச்ச நிலைப் பிரதிநிதியாகும்.


   Glastonbury Tor இங்கிலாந்தின் பழைமையான புனிதத் தளங்களில் ஒன்று.பல விசித்திரமான கற்பனைக் கதைகளுடன் மற்றும் வரலாறுகளுடன் தொடர்புபட்டுள்ளது  இந்த இடம்.உதாரணத்துக்கு இந்த புராணக்கதையைக் கூறலாம், வராலற்று ஆதாரங்கள் கொண்டு நிரூபிக்கப்படாத ஆனால் வரலாற்றில் இருந்ததாக விவாதிக்கப்படும் பிரித்தானிய அரசரே கிங் ஆர்தர் ஆவார்.இவரின் இருப்பு பற்றி வரலாற்றுரீதியாக எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை, ஆனால் இவரைப் பற்றி அப்பகுதிகளில் பரவியிருக்கும் கிராமக்கதைகள் மற்றும் இலக்கிய தொகுப்புகள் மூலமே இவரைப் பற்றி அறியக் கிடைக்கிறது.ஆனால் ஒருசாரார் இவர் வரலாற்றில் வாழ்ந்த ஒருவர் என்று விவாதிக்கின்றனர்.இவரைப் பற்றிய வரலாற்றை எழுதியவர் " Geoffrey Of Monmouth " ஆவார். இவர் எழுதிய வரலாற்றுப் புத்தகத்தின் பெயர் " Historia Regum Britania " என்ற லத்தீன் மொழியில் எழுதப்பட்ட புத்தகத்தில் குறிப்பிடப்படும் " Avalon " என்ற இடமே இந்த Glastonbury Tor ஆகும். கிங் ஆதரின் வரலாற்றில், கிங் ஆதருடன் 12 போர் வீரர்கள் பற்றியும் கூறப்படுகிறது.

  இன்னொரு புராணக்கதையின் அடிப்படையில், Glastonbury பிரதேசத்தில் காணப்படும் இன்னொரு விசித்திரமான இடம் தான் " Chalice well ".கிறிஸ்தவர்களின் நற்செய்திகளின் அடிப்படையில் ( Gospels ) இயேசு கிறிஸ்துவுக்கு தனது கல்லறையை வழங்கிய Joseph Of Arimathea என்பவர் பிற்காலத்தில் இந்த இடத்துக்கு வந்து இயேசு கிருஸ்துவை சிலுவையில் அறைந்த போது சிந்திய ரத்தம் அடங்கிய மதுக்கோப்பையை அங்கு இருந்த கிணற்றில் விசியதாக கூறப்படுகிறது.அந்த கிணறே இன்று  அங்கு காணப்படும் Chalice Well என ஒரு புராணக்கதையும் உண்டு.அகல்வாராய்ச்சியாலர்களின் கருத்துக்கு அமைய இங்கு காணப்படும் GLASTONBURY ABBEY என்ற ஆலயம் எகிப்தின் பிரமிட்களை கட்டப் பயன்பட்ட கேத்திர கணித முறையே இங்கும் பயன்பட்டுள்ளது என்று கண்டுபிடித்துள்ளனர். 

அசல் GLASTONBURY.



GLASTONBURY ABBEY.
  


இன்று இந்த இடம் கிறிஸ்தவர்களின் புனிதப் பிரதேசமாக இருந்தாலும் இன்றும் இங்கு கிறிஸ்தவத்துக்கு முன் பின்பற்றப்பட்டு வந்த எல்லா விதமான மாய மந்திர சடங்குகள் வருடாவருடம் நடைபெற்றே வருகிறது.
Glastonbury Festival இல் பிரமிட்டின் ஆதிக்கம்.

 ஒலிம்பிக் ஸ்டேடியத்துக்கு முன்னாள் Glastonbury Tor வைக்கப்பட்டதில் நமக்குப் புரியாத விசித்திரமான விஷயங்கள் அடங்கியுள்ளது என்பது உறுதி,ஏனெனில் அந்த இடம் அன்று முதல் இன்று வரை மாய மந்திர சடங்குகளுக்கு பிரசித்திபெற்ற இடம் என்பதால்.


கிராமத்து மக்கள் வேலை செய்துகொண்டு மேபோலை (Maypole) சுற்றி ஓடிக் கொண்டிருக்கும் போது, கூட்டத்தில் இருந்து எழும்பும் ஒரு சிறுவன் ஆங்கிலக் கவிஞ்சன் வில்லியம் ப்ளேக் அவர்களின் கவிதை ஒன்றை படித்தபடி எழுந்து வருகிறான்.இந்த கவிதை அவரின் Jerusalem - The Emanation of the Giant Albion என்ற நூலில் இடம்பெற்ற ஒன்றாகும்.

ஞானமார்க்கம் (Gnosticism), Druid (செல்டிக் மத போதகர்கள் ) மற்றும் பிரீமேசனரி போன்ற விசித்திரக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட கவிஞ்சர் வில்லியம் ப்ளேக் பிரித்தானிய இலக்கிய உலகில் எப்பவும் ஒரு தூரநோக்குள்ள கலைஞ்சராக பார்க்கப்படுகிறார்.அவரது சில படைப்புக்கள் கிறிஸ்தவத்துடன் சம்பந்தப்பட்டிருந்தாலும் பல படைப்புக்கள் புரியாத விசித்திரமான கொள்கைகளை அடிப்படையாக கொண்டிருந்தன.   இவரின்    "ஜெருசலம் " என்ற படைப்பு ஜீசஸ் அவரது மாமாவான ஜோசப்புடன் Glastonbury வந்ததாக கூறப்படும் உறுதிப்படுத்தப்படாத புராணக்கதையை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டுள்ளது.

அந்த கவிதை வரிகள் ஜீசஸ் அவர்கள் தனது மாமாவுடன் இங்கு வந்து ஜெருசலத்தை இந்த சாத்தானிய இருண்ட ஆலைகளுக்கு மத்தியில் நிறுவியிருந்தால் என கேட்கிறது.இப்படி அந்த கவி வரிகள் ஒலித்துக்கொண்டிருக்கும் போது காட்சிகள் மாறுகின்றன.பசுமை நிறைந்த இங்கிலாந்தின் நிலங்களில் அந்த கவி வரிகள் குறிப்பிடும் சாத்தானிய இருண்ட ஆலைகள் தோன்றுகின்றன.அத்துடன் துவங்குகிறது தொழில்புரட்சி தொடர்பான காட்சிகள்.


  தொழில் புரட்சி


அந்த கவிவரிகள் வசிக்கப்பட்டதன் பின், இங்கிலாந்தின் பசுமையான பச்சைப்பசெலான நிலங்களில் காலடி வைக்கின்றனர் நீண்ட தொப்பிகளை அணிந்த ஒரு குழுவினர்.அக்குழுவினர் அந்த நிலங்களில் மிக முக்கியமான ஒரு மாற்றத்தை துவங்குகின்றனர்.

ஒருவருக்கொருவர் கைகளைக் குலுக்கிக் கொள்ளும் அந்த குழுவினர் தொழில் புரட்சியை ஒருங்கிணைக்கின்றனர்.அந்த நீண்ட தொப்பிகளை அணிந்த குழுவினரை Isambard Kingdom Brunel என்றழைக்கப்படும் சிவில் இஞ்சினியர் வழிநடத்துகிறார்.


Isambard Kingdom Brunel போன்று சித்தரிக்கப்பட்ட ஒருவர் Glastanbury Tor அருகிலிருந்து கொண்டு ஷேக்ஸ்பியரின் The Tempest பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு ஓக் மரம் நிலத்திலிருந்து வெளியாகி வருகிறது அதனுடன் சேர்த்து நூற்றுக்கணக்கான தொழிலாளிகள் Glastanbury Tor இன் அடியிலிருந்து வெளியாகின்றனர்.

இந்த காட்சியில் குறிப்பிட்டுக் கூறக்கூடிய மிக முக்கியமான மூன்று அம்சங்கள் இருக்கின்றன.
  • கிங் ஆர்தர் புராணக்கதையில் Annwn என்றழைக்கப்படும் பாதாள உலகுக்கு நுழைவு Glastonbury Tor இன் மேலால் என்பது,
  • தொழில் புரட்சி பற்றிய இந்த நிகழ்வுக்கு விழ ஏற்பாட்டுக் குழுவினர் வைத்த அதிகார்வபூர்வமான பெயர் " Pandemonium " ஆகும்.ஆங்கில எழுத்தாளர் John Milton எழுதிய " Paradise Lost " என்ற காவியத்தில் வரும் நரகத்தின் தலைநகரமே இந்த " Pandemonium " ஆகும்.இதன் மூலம் அவர்கள் கூறவரும் தகவல் ஆங்கில கவி வில்லியம் ப்ளேக் குருப்பிட்டது போல் இங்கிலாந்து ஒரு புதிய ஜெருசலம் ஆக மாற்றமடையாது மாறாக அது இந்த பூமியின் நரகமாகவே மாறும் என்றா ?
  • உலகில் காணப்பட்ட முடியாட்சிகளை கவிழ்த்துவிட்டு அந்த நாடுகளை தொழில் புரட்சியின் பக்கம் கொண்டு சென்றவர்கள் யாரெனில் உலகின் மிக பலம்வாய்ந்த இரகசிய சமூகங்களான Orient Freemasons மற்றும் Bavarian Illuminati போன்றவையாகும்.18 ஆம் நூற்றாண்டின் தொழில் புரட்சிக்குப் பிற்பாடு உலக அரங்கில் பல சமூக கலாச்சார மற்றும் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.




  • இன்னும் சில மர்மங்கள்....

மேலிருந்து பார்க்கும் போது தெரியும் பாரிய ஒற்றைக் கண்.


 
 
YouTube இல் கிடைத்த இந்த காணொளி இன்னும் பல விடயங்களை கூறுகிறது.

JUST CHECK IT





ஒலிம்பிக் இறுதி நாள் விழாவின் மர்மமான விடயங்கள் பற்றி அடுத்த பதிவில் 
இன்ஷா அல்லாஹ்
 பார்ப்போம்.