Showing posts with label இஸ்லாமிய மனிதநேயம். Show all posts
Showing posts with label இஸ்லாமிய மனிதநேயம். Show all posts

Friday, September 21, 2012

சமூக அமைதிக்கு வித்திட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள்.




   இன்றைக்கு சமூக நல்லிணக்கம் என்பது என்றால் என்ன? என்று கேட்கும் அளவுக்கு சமூக மாச்சரியங்கள் மலிந்து காணப்படுகின்ற வேளையில், இஸ்லாம் சமூக அமைதிக்கு வழிகாட்டியிருக்கின்றது என்பது பற்றி அறிந்து கொள்ள இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாழ்வு நமக்கு பேருதவி புரிகின்றது.

இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மதினாவைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து கொண்டிருந்த நேரமது. இஸ்லாமிய தலைமைக் கேந்திரமான மதினாவிலும், அதனைச் சுற்றிலும் உள்ள பகுதிகளிலும் பல்வேறு மதத்தவர்கள் வாழ்ந்து வந்தார்கள். இவர்கள் அனைவரும் எந்தக் காலத்திலும் எந்தச் சட்டத்திற்கும் கட்டுப்பட்டு வாழ்ந்த வரலாறு என்பதே கிடையாது. இந்த நிலையில், பல்வேறு குழுக்களையும் ஒப்பந்தங்கள் மூலம் ஒருங்கிணைத்து, அதன் மூலம் மதீனாவின் சமூக வாழ்வை அமைதி தவழும் இடமாகவும், மக்கள் தங்களுக்குள் கொள்கைகளில் வேறுபட்டிருந்தாலும், சமூக அமைதி என்ற ஒரே குறிக்கோளை முன்வைத்து அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தலைமையில் ஒருங்கிணைந்து வாழ்ந்ததை நாம் காண முடிகின்றது.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் என்ற மதீனாவிற்கு நாடு துறந்து வந்த பொழுது, மதீனாவில் பல்வேறு கொள்கையைக் கொண்ட மக்கள் வாழ்ந்து வந்தார்கள். அவர்களில் மிகவும் வலுவான சமூக அடித்தளத்தைக் கொண்ட யூதர்களும், மற்றும் கிறிஸ்தவர்களும், தங்களது மூதாதையர்களின் பழக்க வழக்கங்களைப் பின்பற்றி வருபவர்களுமாக, மதீனா நகரம் ஒரு குழம்பிய குட்டையாகத் தான் இருந்தது.

பல்வேறு கொள்கையைக் கொண்டிருந்த இந்த மக்களை ஒருங்கிணைத்து அமைதியான சமூக வாழ்வை ஏற்படுத்த விரும்பிய இறைத்தூதர்(ஸல்) அவர்கள், அந்த பல்வேறு குலத்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, நேரடித் தொடர்புகள் அல்லது எழுத்துப்பூர்வமான ஒப்பந்தங்களைச் செய்து கொண்டார்கள். இந்த ஒப்பந்தங்களின் நோக்கம் எதுவாக இருந்ததெனில், மதீனா நகரில் பல்வேறு குலத்தவர்கள் வாழ்ந்து வந்தாலும், பல்வேறு கொள்கையைக் கொண்டவர்களாக அவர்கள் இருந்தாலும், சமூக வாழ்வில் அந்தத் தாக்கங்கள் தலைகாட்டாது, சமூகம் அமைதி தவழும் இடமாக இருந்து வர வேண்டும் என்பதாக இருந்தது.

இதனை மிகப் பிரபலமான மேற்கத்திய சிந்தனையாளரான டி.டபிள்யூ.அர்னால்டு என்பவர் இவ்வாறு கூறுகின்றார் :

ஹிஜாஸ் பிரதேசத்தில் வாழ்ந்த மக்களிடம் சமூக அமைதியை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள், இதற்கு முன் எந்த சட்டத்திற்கும் கட்டுப்படாத அந்த மக்களை முழுவதுமாக ஒப்பந்தங்களின் மூலம் கட்டுப்பட வைத்ததன் மூலம், சமூக அரசியல் தளத்தில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தினார்கள். இன்னும் அவர் கூறுகின்றார், சிறிய மற்றும் பெரிய குலத்தவர்களாக சிதறிக் கிடந்த அந்த மக்களை, தங்களுக்குள் எப்பொழுதும் பகைமை பாராட்டிக் கொண்டிருந்த அந்த மக்களை ஒருங்கிணைத்து, சமூக ஒற்றுமையை ஏற்படுத்தினார்கள்.

மக்காவின் வெற்றியைத் தொடர்ந்து, இதுவரை காலமும் முஸ்லிம்களை மரணப்படுக்கையில் தள்ளுவதற்குக் கூடத் தயங்காத இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத அந்த மக்களை மதச் சகிப்புத் தன்மையுடன் நடத்தியதோடு, அவர்களை இரக்கத்துடன் நடத்தினார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள். இத்தைகய சகிப்புத்தன்மையை இதுவரை காலமும் அரபுக்கள் தங்கள் வாழ்நாளிலே என்றுமே கண்டதுமில்லை, கேட்டதுமில்லை. இத்தைகய நற்பண்புகள் முஸ்லிம்களின் மீது மிகப் பெரும் நன்மதிப்பை அவர்கள் மத்தியில் ஏற்படுத்தியது.

இஸ்லாம் ஆட்சி செய்து கொண்டிருந்த அந்த பிரதேசத்தில், இஸ்லாமிய நீதியையும், நெறிமுறைகளையும் அமுல்படுத்திக் காட்டுவதில், மற்றவர்களைக் காட்டிலும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தான் ஒரு முன்மாதிரிமிக்கவராகத் திகழ்ந்து காட்டினார்கள். அவர்கள் அந்த மக்கள் மத்தியில் மத சகிப்புத் தன்மையையும், நீதியையும் குர்ஆன் வகுத்துக் காட்டியிருக்கின்ற வழிமுறைப்படி ஆட்சி செய்து காட்டினார்கள். இந்த ஒரு காரணத்திற்காக, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, பல்வேறு குலங்களையும், கோத்திரங்களையும் சேர்ந்த அந்த மக்கள், இஸ்லாத்தின் மதசகிப்புத் தன்மை, நீதி பரிபாலணம், அது வழங்கியிருக்கும் அமைதி தவழும் வாழ்க்கை நெறி ஆகியவற்றினால் கவரப்பட்டு, குறுகிய காலத்தில் தங்களை இஸ்லாத்தினுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டார்கள். இவ்வாறு பல குலங்களையும் ஒருங்கிணைத்த இஸ்லாம், அவர்கள் அனைவரையும் சகோதரத்துவம் என்ற ஒரே கொள்கையின் கீழ் இணைத்து, நீதிபரிபாலணம் என்பது முழு அளவில் செயல்பட்டுக் கொண்டிருந்தது. அதற்கு திருமறைக் குர்ஆன் இவ்வாறு பின்புலமாக இருந்தது.


நாம் படைத்தவர்களில் ஒரு கூட்டத்தார் இருக்கின்றார்கள். அவர்கள் சத்திய வழியைக் காட்டுகிறார்கள்; அதைக் கொண்டு நீதியும் செலுத்துகிறார்கள். (7: 181)


இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மற்ற மக்களிடம் காட்டிய மதச் சகிப்புத் தன்மைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக, நஜ்ரான் பிரதேசத்துக் கிறிஸ்தவர்களிடம் அவர்கள் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் முஸ்லிம்களின் மத சகிப்புத் தன்மைக்கும், நீதி நெறிமுறைகளுக்கும் சிறந்த சான்றுகளாகத் திகழ்கின்றன. இதனை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அந்த சமூகத்தில் முழுவதுமாக நடைமுறைப்படுத்திக் காட்டினார்கள்.

அத்தகைய ஒப்பந்தங்களின் ஒருபகுதி இவ்வாறிருந்தது :

உயிர்களும், அவர்களது கொள்கைகளும், உடமைகளும், குடும்பங்களும், அவர்களது வழிபாட்டுத் தளங்களும், இன்னும் நஜ்ரானில் வாழ்கின்ற அனைத்து மக்களும், இன்னும் அவர்களுடன் வாழ்ந்து வருபவர்களும் அல்லாஹ்வினதும், அல்லாஹ்வினது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களினதும் பாதுகாப்பின் கீழ் இருக்கின்றார்கள்.

எனவே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இதுபோன்ற ஒப்பதங்கள் மூலமாக, இஸ்லாமிய ஒழுக்க மாண்புகளை எவ்வாறு சமூகத்தில் நடைமுறைப்படுத்திக் காட்டுவது என்பதற்கான நடைமுறையையும், இன்னும் முஸ்லிம்களுடன் முஸ்லிம் அல்லாத மக்களான வேதம் வழங்கப்பட்டவர்கள் எவ்வாறு இணக்கமான முறையில் வாழ முடியும் என்பதற்கான உதாரணத்தையும் காட்டி விட்டுச் சென்றுள்ளார்கள்.

முஸ்லிம்களின் நடைமுறைப்படுத்திக் காட்டும் ஒழுக்க மாண்புகள் நீதமானதும், நடுநிiயானதும், இன்னும் அமைதிப்பூர்வமானதும் கூட. இன்னும் அதிகமாக, இத்தகைய ஒப்பந்தங்கள் மூலமாக, அதற்குப் பிரதியீடான இஸ்லாமானது வாழ்நாள் முழுவதற்குமான அமைதியையும், மற்றும் தொல்லைகளற்ற வாழ்வுக்கும் உத்தரவாதம் தருகின்றது. இன்னும் இஸ்லாத்தின் ஒழுக்க மாண்புகளை அடிப்படையாகக் கொண்டதொரு முன்மாதிரி மிக்க சமூகத்தைப் பெற்று அதன் மூலம் கருணை, இணக்கம், சகிப்புத் தன்மை மற்றும் அமைதி மிக்க வாழ்க்கையை இந்தப் பூமிப் பந்தின் மீது நிறுவுதற்கு அனைவருக்கும் அழைப்பும் விடுக்கின்றது.

அனைத்து மக்களும், அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் சரியே, அமைதியான சமூக வாழ்விற்கு ஒத்துழைப்பது அனைவரின் மீதுள்ள மிகவும் பொறுப்பு வாய்ந்த கடமையாகும். முஸ்லிம்கள் என்ற நிலையில், மற்ற மதத்தவர்ளைப் பொறுத்தவரை, முஸ்லிம்களுக்கு அல்லாஹ் கட்டளையிடுவது என்னவென்றால், ''அல்லாஹ்வைத் தனித்துவமாக வணங்குவதற்கும் இன்னும் அவனுடன் எந்தவித இணையாளர்களையும் ஆக்காதிருப்பதற்காவும்'', மேற்கண்ட நோக்கத்தை அடைந்து கொள்வதற்காக அவர்களுடன் தோள் கொடுத்துச் செயலாற்றும்படிக் கூறுகின்றான் :


(நபியே! அவர்களிடம்) ''வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே (இசைவான) ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹவீர்ர்hர்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்'' எனக் கூறும்; (மு.மின்களே! இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால்; ''நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!'' என்று நீங்கள் கூறிவிடுங்கள். (3:64)


முஸ்லிம்களும், யூதர்களும் மற்றும் கிறிஸ்தவர்களும் ஒரு பொதுவான கருத்தின் அடிப்படையில் அதாவது பரஸ்ர நல்லுணர்வு, அன்பு, அமைதி மற்றம் சகிப்புத் தன்மை ஆகியவற்றை பொதுவான நோக்கமாகக் கொண்டதன் அடிப்படையில் இணைந்து விட்டார்களென்று சொன்னால், இந்த உலகம் ஒரு வித்தியாசமானதொரு இடமாக மாறி விடும். பிளவுகளும், பிரச்னைகளும், அச்சமும், மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளும் மறைந்து, அவை எல்லாம் வரலாற்றில் தேடிப்பிடிக்க வேண்டிய நிகழ்வுகளாக ஆகி விடும், அன்பு, மதிப்பு மற்றும் அச்சமற்ற தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட புதியதொரு நாகரீகம் மலர்ந்து விடும்.

அல்லாஹ் தன்னுடைய திருமறையிலே கூறுகின்றான் :


நிச்சயமாக யூதர்களையும், இணைவைப்பவர்களையும் முஃமின்களுக்குக் கடும் பகைவர்களாகவே (நபியே!) நீர் காண்பீர்; ''நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்களாக இருக்கின்றோம் என்று சொல்பவர்களை, முஃமின்களுக்கு நேசத்தால் மிகவும் நெருங்கியவர்களாக (நபியே!) நீர் காண்பீர்; ஏனென்றால் அவர்களில் கற்றறிந்த குருமார்களும், துறவிகளும் இருக்கின்றனர்; மேலும் அவர்கள் இறுமாப்புக் கொள்வதுமில்லை. (5:82)


சில இறுமாப்புக் கொண்டவர்கள் (சிலுவை யுத்தக் காரர்கள்) இந்த உண்மையை அறிந்து கொள்ள இயலாத காரணத்தால், இரு சமூகத்திற்கும் இடையே அவர்கள் மிகப் பெரும் யுத்தத்திற்கு வழி வகுத்து விட்டார்கள். உண்மையான கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் இத்தகைய யுத்தத்தின் மூலம் இரத்தம் சிந்தப்படுவதை விரும்பக் கூடாது, தங்களுக்குள் பரஸ்பரம் ஒத்துழைத்து, அதனை தடுக்கவும் முயற்சி செய்ய வேண்டும்.

அமெரிக்காவில் நடந்து போன துரதிர்ஷ்டவசமான அந்த நிகழ்வுக்குப் பின், இத்தகைய ஒத்துழைப்புகளுக்கான விதைகள் தூவப்பட்டதற்கான அறிகுறிகள் தென்பட்டதை நாம் கண்டோம். வெறுக்கத்தக்க இந்த நாசகாரச் செயல்கள் நடந்து விட்ட பின், இரு சமூகத்திற்கும் இடையே மிகப் பெரும் இணைப்பை உருவாக்கி வைத்ததையும் நாம் பார்த்தோம். முன்னைக்காட்டிலும், இஸ்லாத்தின் பக்கம் மிக நெருக்கமாகச் சென்று அதனை ஆராய்ந்து அறிந்து கொள்ளும்படி பல கிறிஸ்தவர்கள் உற்காசமூட்டப்பட்டார்கள், அதனைப் போலவே முன்னைக் காட்டிலும் தங்களது மார்க்கத்தைப் பற்றி அதிகமான விளக்கத்தையும், குர்ஆன் கூறும் இஸ்லாமிய ஒழுக்க மாண்புகள் பற்றியும் அதிகமாக அளவில் விளக்கங்கள் கொடுக்க அதிக முயற்சியை முஸ்லிம்கள் எடுத்துக் கொண்டார்கள்.


இறைவன் நாடினால், இந்த பூமிப் பந்தில் அமைதியை முழுமையாக நிறுவுவதற்கு இஸ்லாமிய ஒழுக்க மாண்புகளே உகந்தது என்ற உண்மையை இந்த 21 ஆம் நூற்றாண்டானது விரைவில் கண்டு கொள்ளும்.

முன்னைக் காட்டிலும் இஸ்லாத்தைப் பற்றியும், அதன் ஒழுக்க மாண்புகள் பற்றியும் மக்கள் மத்தியில் இருந்த எதிர்மறையான கருத்துக்கள் மறைய ஆரம்பித்திருப்பதும், அத்தகைய தவறான எண்ணங்கள் களையப்பட்டு வருவதும், 21 ஆம் நூற்றாண்டை விரைவில் இஸ்லாமிய ஒழுக்க மாண்புகள் ஆட்சி செய்யும் என்ற நற்செய்திக்குக் கட்டியம் கூறுபவைகளாக உள்ளன.



ARTICLE BY - HARUN YAHYA 

JAZAKALLAHU HAIR TO - ONE REALISM






Wednesday, December 28, 2011

இஸ்லாமும் அடிமைத்தனமும்.


மனிதர்கள் அனைவரும் ஒரே மூலத்திலிருந்து பிறந்தவர்கள். நீங்கள் ஒருவரிலிருந்து மற்றொருவராகத் தோன்றியவர்களே. என்று மனிதர்களின் பரிபூரண சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுப்பப்பட்ட இஸ்லாம் அடிமைத்தனத்தைத் தனது சமூக வாழ்க்கையின் ஒர் அம்சமாகக் கொள்ளுமா?

ஆதத்தின் மக்களை நாம் உண்மையிலேயே கண்ணியப்படுத்தியுள்ளோம் என்று கூறும் குர்ஆனே மனித சமுதாயத்தில் ஒரு கூட்டதார்களை வீட்டுத் தட்டு முட்டு சாதனங்களைப் போல் விற்கப்பட்டுக் கொண்டும், வாங்கப்பட்டுக் கொண்டும் இருக்கும்படியான ஏற்பாடுகளைச் செய்யுமா?

'எவர்; எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ.. அவர்.. அவர்களுடைய பழுவான சுமைகளையும் அவர்கள் மீதிருந்த விலங்குகளையும் (கடினமான கட்டளைகளையும் இறக்கிவிடுவார்' (7:157) என்றே குர்ஆன் கூறுகிறது.

எனில் அடிமைகளை வைத்துக் கொள்ளவும், நிர்வகிக்கவும் சில விதிமுறைகளை ஏற்படுத்தியது என்றால் அது காலச்சூழ்நிலையைக் கருத்தில் கொண்ட ஒரு தற்காலிக விதிமுறையாகும்.

முந்தைய கால கட்டங்களில் போருக்குப் பின் வெற்றி பெற்ற நாட தோல்வியடைந்த நாடுகளின் போர் வீரர்களையும், பெண்களையும், குழந்தைகளையும் அடிமைகளாக உபயோகப்படுத்துவதையும், விற்கப்படுவதையும் வழக்கமாக கொண்டிருந்தது. இந்நிலை திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்ட கால கட்டத்தில் இறக்கியருளிய நாட்டிலும், அதன் சுற்றுச்சூழலிலும் இருந்து வந்தது. மேல் நாடுகளில் 18-ம் நூற்றாண்டின் கடைசி வரை கூட இருந்து வந்தது. அதுவும் யுத்தக் களத்தில தோல்வியடைந்தவர்களையல்ல. யுத்தம் என்றால் என்னவென்றே தெரியாத நிரபராதிகளையாகும்.

அமெரிக்காவில் மேற்கிந்தியர் எனப்படும் கருப்பு இனமக்களை பிடித்து விற்பனை செய்யும் வழக்கம். இந்த 20-ம் நூற்றாண்டு வரை இருந்தது. மேனாட்டவர் ஆப்ரிக்காவின் மத்திய பகுதியில் வாழ்ந்த கருப்பு இனமக்களை மிருகத்தனமாக வேட்டையாடிப் பிடித்து அடிமைகளாக விற்பதற்காக கப்பலேற்ற உபயோகிக்கப்பட்ட கடற்கரைக்கு அடிமைக்கரை என்று பெயரே வைக்கப்பட்டது. இப்படி ஒரு நூற்றாண்டுக்குள் (1680-1786) பிரிட்டானிய குடியேற்ற நாடுகளுக்கு அடிமைகளாக அனுப்பப்பட்ட கருப்பர் தொகை இரண்டு கோடி என்று அவர்களின் அறிக்கையே கூறுகிறது.1790-ம் ஆண்டில் மட்டும் 75,000 அப்பாவி மக்கள் அடிமைகளாக்கப்பட்டு பிரிட்டானிய குடியேற்ற நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர். அமெரிக்காவில் ஆபிரஹாம் லிங்கன்; காலக்கட்டம் வரை கூட அடிமைத்தனம் இருந்து வந்தது என்று அலெக்ஸ்ஹெய்ல் தன்னுடைய வுhந சுழழவள என்றும் நூலில் கூறுகிறார்.

அடிமைகள் (சூத்திரர்) கடவுளின் பாதத்திலிருந்து பிறந்தவர்கள் அவர்கள் பிறப்பாலே இழிந்தவர்கள். பிராமணர், ஷத்திரியர், வைஷியர் இட்டப் பணியை ஏற்றுப் நடப்பதே அவர்கள் தலைவிதியாகையால் அதனை அவர்கள் எதிர்க்கவோ, மாற்றவோ முடியாது என்று சாதி இந்துக்கள் நம்பி நடத்தினர். அவர்களுக்கு கடவுள் இட்ட ஒரே வழி மரணத்திற்கு பின் தன் ஆன்மாக்கள் மறுபிறவியில் ஒரு தலைசிறந்த நிலையினை அடையலாம் என்ற நம்பிக்கையில் தன் இழிநிலையையும், தண்டனையையும் மிகப் பொறுமையுடன் சகித்து கொண்டு வாழ வேண்டாம் என்று போதிக்கப்பட்ட, அவர்களை அடக்கி ஆண்டவர்கள் மிக இழிந்த நிலைக்கு அவர்களை தாழ்தியதோடு நில்லாது, அடிமைகள் தம்மை இவ்இழிநிலைக்கும், துன்பத்திற்கும் ஆளாக்கிய அநீதியான சமூக அமைப்புக்கு எதிராக கிளர்ந்தெழும் எண்ணத்தைக் கூட அகற்றி வைத்தனர்.

ரோமிலும், கிரேக்கத்திலும், பரசீகத்திலும், பண்டைய இந்தியாவிலும் அடிமைகளை எவ்வாறு எவ்வளவு குரூரமாக நடத்தினார்கள் என்பதை இன்று நினைத்தாலும் வேதனை பொங்கும். நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை எடுத்து போதித்த அரபு நாட்டின் நிலையோ அடிமைத்தனம் பேணுவதில் எந்நாட்டவர்களுக்கும் சளைத்தவர்களாக இருந்ததில்லை. அச்சூழ்நிலையில் மனித குலத்தின் அருட்கொடையாக வந்த முஹம்மது (ஸல்) கொண்டு வந்த மார்க்கம் அடிமைத்தனத்தை நிறுத்த பல்வேறு வழிமுறைகளை கையாண்டது.

கணவன், மனைவி, குழந்தைகள் உட்பட ஒட்டு மொத்த குடும்பத்தையுமே அடிமைப்படுத்தி அவர்களைக் கொண்டு கடினமான வேலைகள் வாங்கியும், அவர்களுடைய சம்பாத்தியத்தை அனுபவிக்கவும் செய்திருந்த ஒரு சமூகமாயிருந்தது அரபு சமூகம். அத்தகைய சமூகத்தில் இஸ்லாம் அடிமைத்தனத்தை உடனே தடை செய்யாமல் படிப்படியாக குறைத்து முடிவு நிலைக்கு கொண்டு வந்தது. நேரடியாக தீடிரென்று அடிமைத்தனத்தை தடை செய்யுமாயின் அது சுய சமூகத்தில்; மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதோடு அல்லாமல், பிற சமூகத்தால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்பதாலே அடிமைத்தனத்தை திடிரென்ற தடை செய்யாமல் நிர்பந்தத்தின் அடிப்படையில் அடிமைகளை வைத்துக்கொள்ள அனுமதித்தது.


 அடிமைகளைப் பேணுதல்



நிர்பந்தத்தின் அடிப்படையில் அடிமைகளை வைத்துக்கொள்ள அனுமதித்த இஸ்லாம் அவர்களை எவ்வாறு பேண வேண்டும் என்று சில வரைமுறைகளை வகுத்துத் தந்தது.

'தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினகளக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும் (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும் உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள் நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக வீண் பெருமையுடையோர்களாக இருப்பவர்களை நேசிப்பதில்லை (4:36)

'உங்கள் அடிமைகள் உங்கள் சகோதரர்களே. எனவே யார் தனது ஆதிக்கத்தில் ஒரு சகோதரரைப் பெற்றிருக்கினறரோ அவர் தாம் உண்பது போலவும் உடுப்பது போலவும் தமது சகோதரருக்கும் உண்ணவும் உடுக்கவும் கொடுக்க வேண்டும். அவர்களின் சக்திக்கு அப்பாற்பட்ட எதையும் செய்யுமாறு அவர்களைக் கேட்க வேண்டாம். அப்படியான எதையும் செய்யம் படி கேட்டால் அதில் அவர்களுக்கு உதவிபுரியுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் உபதேசித்துள்ளார் (புகாரி)

உங்களில் எவரும்'இவன் எனது அடிமை', 'இவள் எனது அடிமைப்பெண்' என்று சொல்லக்கூடாது பதில் 'இவர் எனது ஆள்' என்றும் 'இவள் எனது பணிப்பெண்' என்றும் சொல்ல வேண்டும் என்றும் நபி (ஸல்) அவர்கள் போதித்துள்ளார்கள். இன்னும்

'யார் தனது அடிமையைக் கொல்கிறாரோ அவரை நாம் கொல்வோம். அவரது மூக்கை அங்கவீனப்படுத்துபவரின் மூக்கை நாம் அறுப்போம், அடிமைக்கு விதையடிப்பவரை அதற்குப்பதில் நாம் விதையடிக்கச் செய்வோம்' என்றும் எச்சரிக்கை செய்துள்ளார்கள். (புகாரி முஸ்லிம்)

அடிமைகளுக்கு விதையடித்து பாலியல் உணர்வுகளை நசித்து மிருகங்களைப் போல் நடத்திவந்த காலச் சூழ்நிலையில் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து விவாக பந்தம் ஏற்படுத்திக் கொடுக்கக் கூட இஸ்லாம் கட்டளையிட்டது.

உங்களில் வாழ்க்கைத் துணை இல்லா (ஆடவர், பெண்டி)ருக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையில்லா) ஸாலிஹான உங்கள் (ஆண் பெண்) அடிமைகளுக்கும் விவாகம் செய்து வையுங்கள் (24:32)

'தங்கள் கற்பைப் பேணிக் கொள்ள விரும்பும் உங்கள் அடிமைப் பெண்களை அற்பமான உலக வாழ்க்கை வசதிகளைத் தேடியவர்களாக விபச்சாரத்திற்கு (அவர்களை) நிர்பந்திக்காதீர்கள்' (24:33) என்றும் கட்டளையிட்டது.

இன்னும் அடிமைகள் தங்கள் உணர்வுகளை தவறான வழிகளில் தணித்துக் கொள்ளும் வகையில் சென்றடாதிருக்க அவர்களின் உணர்வுகளை மதித்து விவாகம் செய்து வையுங்கள். அல்லது நீங்களே திருமணம் செய்து கொள்ளுங்கள். (பார்க்க திருக்குர்ஆன் 4:25) என்றும் போதிக்கப்பட்டது.

இணைவைக்கும் ஒரு பெண் உங்களை கவரக்கூடியவர்களாக இருந்த போதிலும் அவளைவிட மூஃமினான ஓர் அடிமைப்பெண் நிச்சயமாக மேலானவன் ஆவாள் (2:221) என்று கூறி அடிமைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதோடு சம அந்தஸ்தையும் வழங்கியது.

அடிமைகளை கண்ணியத்தோடு பேணினாலும், அடிமைத்தனத்தை முற்றாக தடை செய்யாமல் போர்க்கைதிகளை மேலும் மேலும் அடிமைகளாக்கி வைத்துக் கொண்டது ஏனென்றால்: தூதரின் கால கட்டத்திலும் சரி பின் சில கால கட்டங்களிலும் சரி யுத்தக் கைதிகளை அடிமைகளாக்கி வைத்துக் கொண்டதென்றால் அது எதிரி நாட்டார்கள் நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு ஆகும். இரு நாடுகளுக்கு மத்தியில் போர் மூண்டால் பிடிபட்ட யுத்தக் கைதிகளை அடிமைகளாக்கி வைப்பதும், சித்திரவதை செய்து கொல்வதுமான பழக்கம் பழங்காலந்தொட்டு நிலவி வந்தது.

UNIVERSAL HISTORY OF THE WORLD  என்னும் வரலாற்று கலைக்களஞ்சியத்தில் (PAGE 2273) பின்வரும் நிகழ்ச்சி கூறப்பட்டுள்ளது. '599-ம் ஆண்டில் ரோம சக்ரவர்த்தி ஆண்டில் மாரியஸ் போர்களில் தன் படைகள் கைப்பற்றிய இலட்சக்கணக்கான கைதிகளில் ஒரு சிலரைக் கூட விடுதலை செய்ய மறுத்துவிட்டான். பதிலாக அவர்கள் அனைவரையும் வாளுக்கு இறையாக்கினான். இவ்வாறு செய்யக் காரணம் அவர்களை வாழ விடுவதை விடக் கொன்றுவிடுவதே சிக்கனமானது என்ற அவன் கருதியதாகும்'.

யுத்தக் கைதிகளை கூட்டதோடு கொன்று குவிக்கும் பழக்கம் பிற்காலத்திலும் தாராளமாக இருந்தே வந்தது. தேசத் துரோகிகள் என்றும் எதிரிநாட்டு உளவாளிகள் என்றும், எதிரி நாட்டு கைதிகள் என்றும் கூறி கொன்று குவித்த சம்பவங்கள் ஹிட்லரின் ஜெர்மனியிலும், முசோலினியின் இத்தாலியிலும் மட்டுமல்ல, கம்யூனிஸ்டுகளின் சொர்க்க பூமியாக இருந்த ரஷ்யாவிலும். அண்மையிலே கன்பூசியாவிலும் நடந்ததுண்டு. இத்தகைய கொடூரமான மிருகச் செயலை இஸ்லாம் ஒரு போதும் அங்கீகரிக்கவோ அனுமதிக்கவோ செய்ததில்லை.

(மூஃமீன்களே! வலிந்து உங்களுடன் போரிடவரும்) நிராகரிப்பவர்களை நீங்கள் (போரில்) சந்திப்பீர்களாயின், அவர்களுடைய கழுத்துக்களை வெட்டுங்கள். கடும் போர் செய்து (நீங்கள் அவர்களை வென்று) விட்டால் (அவர்களுடைய) கட்டுக்களை பலப்படுத்தி விடுங்கள். அதன் பிறகு யாதொரு ஈடுபெற்றோ அல்லது (ஈடுபெறாது) உபகாரமாகவோ அவர்களை விட்டு விடுங்கள். (47:4) என்று இறைவன் கூறுகிறான்.

இவ் இறைவசனத்தில் எதிரிகளை போர்க்களத்தில் வைத்து நேருக்கு நேர் போரிடும் போது மட்டும் வெட்டுங்கள் என்று கட்டளையிடுகிறது. போருக்குப்பின் போர்வீரர்களை கைதிகளாக பிடித்திருந்தால் அவர்களுக்கு பதிலாக ஈட்டுத் தொகை பெற்றுக் கொண்டோ அல்லது உபகாரமாகவோ விடுவித்து விடுங்கள் என்று கூறுகிறது.

நபித்தோழர்களில் பிரசித்திப்பெற்ற இப்னு உமர் (ரலி) குர்ஆன் வியாக்யானிகளான ஹஸன் பஸரி, ஹம்மாத் இப்னு அபீசுலைமான் போன்றோர்கள் இவ்வசனத்தின் அடிப்படையில் போர்க்கைதிகளை கொல்வது கூடாது என்று ஃபத்வா வழங்கியுள்ளார்கள். அப்படியாயின் போர்க்கைதிகளை என்ன செய்ய வேண்டும். ஆயுட்காலம் முழுவதுமோ அல்லது சொற்ப காலமோ சிறையிலடைத்து வைக்க வேண்டும் என்றால் அத்தகைய சிறைச்சாலை வசதி ஏற்பாடுகள் எதுவும் அக்காலக்கட்டத்தில் இருந்ததில்லை. எனவே போர்க்கைதிகளை போர் வீரர்களுக்கு பங்கிட்ட வழங்கிவரும் வழக்கத்தை கையாண்டது. அடிமைகளைப் பெற்றுக் கொண்டவர்கள் தங்கள் வேலைகளை வாங்கிக் கொண்டு அவர்களை பராமரித்து வந்தனர். இவர்களே அடிமைகளாக கருதப்பட்டு வந்தனர். இத்தகைய அடிமைத்தனத்தை நிர்பந்தத்தின் அடிப்படையில் சகித்துக் கொள்ள வேண்டியதாயிற்று.

முஸ்லிம்களுக்கும், எதிரிகளுக்குமிடையில் பலபோர்கள் நடைபெற்றன. இப்போர்களில் கைதிகளாக்கப்பட்ட பல முஸ்லிம்கள் எதிரிகளால் அடிமைகளாக்கப்பட்டனர். அவர்களின் சுதந்திரம் பாதிக்கப்பட்டது. அவர்கள் அடக்கி ஒடுக்கப்பட்டதோடு அக்காலத்தில் அடிமைகள் அனுபவித்த எல்லாவித இன்னல்களையும், அவர்களும் அனுபவிக்க நேர்ந்தது. பெண்மணிகளின் கண்ணியம் மிக மோசமாக பங்கப்படுத்தப்பட்டது. தந்தையும் மகனும், நண்பர்களுமாக பல ஆண்கள் ஒரே பெண்ணை பகிர்ந்து கொண்டனர். கைப்பற்றப் பட்ட குழந்தைகள் வெறுக்கத்தக்க இழிவான அடிமை நிலையில் வளர்க்கப்பட்டனர். இத்தகைய நிலைமைகள் அக்கால வாழ்க்கையில் நிலைத்துவிட்டதால் இஸ்லாத்தின் கைக்குள் வந்த எல்லா கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்வது சாத்தியமாகவில்லை. கைது செய்யப்பட்ட முஸ்லிம்களும் அவர்களின் உற்றார் உறவினர்களும், பகைவர்களால் அடிமைகளாக்கப்பட்டு மிகக் கொடிய சித்திரவதைக்குள்ளும் மானபங்கப்படுதத்பபட்டுமிருந்தனர். இந்நிலையில் முஸ்லிம்கள் கைது செய்தவர்களை விடுதலை செய்வது, அடிமைப்பட்ட முஸ்லிம்களுக்குச் செய்யப்படும் கொடுமைகளுக்கு உற்சாக மூட்டவதாகவும் அமைந்திருக்கும். எதிரி நாட்டு போர்க்கைதிகளை அடிமைப்படுத்தாமல் விட்டுவிட்டாலோ அவர்கள் திரும்பத் திரும்ப போருக்கு வர தயங்க மாட்டார்கள். நாம் வெற்றி பெற்றால் அவர்களை அடிமைப்படுத்தி அனுபவிக்கவும், கொடுமைப் படுத்தவும் செய்யலாம். நாம் தோற்றுவிட்டாலோ நம்மை முஸ்லிம்கள் கைது செய்யவம் மாட்டார்கள் அடிமைப்படுததவும் மாட்டார்கள் என்ற கருதி திரும்பத் திரும்ப போருக்கு வர தயங்க மாட்டார்கள். எனவே மேலும் மேலும் போரைத் தவிர்க்க இஸ்லாம் மேற்கொள்ளத்தக்கதாக இருந்த ஒரே சிறந்த வழி தனது கைதிகளையும் அடிமைகளாக நடத்துவதாகும்.

பகைவர்கள் தாம் யுத்தங்களிற் சிறைப்படுத்தியவர்களைத் தொடர்ந்து பிடிவாதமாக அடிமையாக்கி வர இஸ்லாம் மட்டும் தனது போர்க்கைதிகளை அடிமைகளாக்குவதைச் தன்னிச்சையாக ஒழித்துவிட இயலாது. எனவே இதற்கு மாற்றுவழி இல்லாதவரையும். உலகம் முழுவதும் உள்ள மக்கள் யுத்தக் கைதிகளை அடிமைகளாகவன்றி வேறு விதத்தில் நடத்துவதற்கான ஓர் அடிப்படைப் பற்றி இணக்கம் காணும் வரை இஸ்லாம் அடிமைத்தனத்தை சகித்துக. கொள்ள வேண்டியதாயிற்று.

அரசு நடத்தும் போர் அல்லாமல் எந்த ஒரு தனிமனிதனும் மற்றொரு தனிமனிதனை அடிமையாக்க முடியாது என்றும் விளங்கிக் கொள்ள வேண்டும்.


 அடிமை விடுதலை


இஸ்லாம் தன் வசமிருந்த எல்ல வழிவகைகளையும் பயன்படுத்தி அடிமைத்தனத்தை ஒழிக்க முயற்சி செய்ததேயன்றி கொள்கையளவில் கூட அதனை அங்கீகரிக்கவில்லை.

'பின்னர் ஓர் உதவியாக அவர்களை விடுதலை செய்து விடுங்கள் அல்லது யுத்தம் முடியும் வரை அவர்கள் பணங்கொடுத்து தம் விடுதலையைப் பெற்றுக் கொள்ள அனுமதியுங்கள் (47:4) என்று குர்ஆன் உபதேசிக்கிறது. இஸ்லாத்திற்காக நடந்த முதல் யுத்தமான பத்ர் யுத்தத்தில் கைது செய்யப்பட்ட சில கைதிகளை முஸ்லிம்களை மீட்பதற்குப் பதிலாக விடுதலை செய்தனர். அத்துடன் வேறு சிலரை கருணையின் நிமித்தம் விடுதலை செய்தனர்.

அடிமைகளைப் படிப்படியாக ஒழிக்க திட்டமிட்ட இஸ்லாம் முதலாவதாக எல்லோருமே அல்லாஹ்வின் அடிமைகள் என்ற உணர்வை மக்களிடையே பரப்பி, உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பேதம் இறைவனை வழிப்படுவதில் எள்ள ஏற்றத்தாழ்வின் மூலமமேயன்றி வேறு எதிலும் கணிக்க முடியாது. இஸ்லாமிய வாழ்க்கை முறையை நம்பி அதை ஏற்று வாழும் யாவரும் சகோதரர்கள் என்ற எண்ணத்தை வளர்த்தது. மக்கள் மனங்களில் அன்பு, ஆதரவு அரவணைப்பு, ஆறுதல் கூறல் போன்ற அருட்குணங்களை வளர்த்து அப்போதிருந்த அடிமைகளை நடுத்தெருவில் தவிக்க விட்டுவிடாமல் அவர்களை அன்போடும், பண்போடும் நடத்தச் செய்தது. அடிமைகளை விடுவித்தல் இதை அல்லாஹ்வுக்கு மிக்க விருப்பமான ஒரு செயலாக அறிமுகம் செய்து இறைநேசர் பலரும் தம்மிடமிருந்த அடிமைகளை விடுதலை செய்ய வைத்தது.

'(நன்மை தீமையாகிய) இருபாதைகளை நாம் அவனுக்குக் காண்பித்தோம். ஆயினும் அவன் கணவாயைக் கடக்கவில்லை.

(நபியே!) கணவாய் என்பது என்ன என்பதை உமக்கு எது அறிவிக்கும் (அது) ஒர் அடிமையை விடுவித்தல்...' என்று குர்ஆன் (90:10,14) போதித்தது.

ஒரு சமயம் நபித்தோழர் அபூதர் (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். 'அடிமைகளை விடுவித்தலில் மிகச் சிறப்பானது எது? என்ற அதற்கு நபி (ஸல்) அவர்கள், எஜமானனின் மிகவும் விலையுர்ந்த அடிமைகளை விடுவித்தலாகும்' என்றார்கள். (புகாரி, முஸ்லிம்)

பல்வேறு குற்றங்களுக்கும், பாவச் செயல்களுக்கும் தண்டனையாக அடிமைகளை விடுதலை செய்ய வேண்டும் என்னும் சட்டத்தையும் கூறி அடிமைகளை விடுவிக்க ஏற்பாடுகளை செய்தது. உதாரணமாக

1. ஒரு முஸ்லிம் தன் மனைவியுடன் பாலுறவு கொள்வதன் மூலம் தன் நோன்பை முறிப்பாராயின் இச்செயலுக்கு தண்டனையாக ஒரு அடிமையை விடுதலை செய்ய வேண்டும்.

2. அவ்வாறே ஹஜ் கடமையை நிறைவேற்றும் போது மனைவியுடன் பாலுறவு கொண்டாலும் தண்டனையாக ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்.

3. ஒரு முஸ்லிம் தன் மனைவித் தன் தாய் போன்றிருக்கிறாள் என்ற ஒப்பிட்டுக் கூறினால் இது ஒரு தீயப் பேச்சாகக் கருதப்படுகிறது. இக்குற்றத்திற்கு பரிகாரமாக ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும் என்றது.

-இத்தகைய காரணங்கள் எதுவும் இல்லாத போதும் ஓர் அடிமையை உரிமை விடுவத அல்லாஹ்வின் அன்பைப் பெறுதலுக்குரிய மிகச் சிறந்ததோர் செயலாகும் என்றும். உரிமை விடப்படும் ஓர் அடிமையின் ஒவ்வொரு உறுப்பும் அவ்வடிமையை உரிமை விட்டவனை நரக நெருப்பிலிருந்து காப்பாற்ற உதவும் என்றும் இறைதூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்ட ஆரம்ப கால முஸ்லிம்கள், தங்களிடமிருந்த அடிமைகளை மட்டுமல்ல இயன்றளவு அடிமைகளை விலைகொடுத்து வாங்கியும் உரிமையிட்டடார்கள். இறைதூதர் (ஸல்) அவர்கள் 63 அடிமைகளை விடுதலை செய்துள்ளதாகவும், அவர்களின் அருமை மனைவி ஆயிஷா (ரலி) அவர்கள் 67 அடிமைகளை விடுதலை செய்ததாகவும் சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன.

அடிமைத்தளையிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ள பொருளோ, பணமோ தேவைப்படும் அடிமைகளுக்கு ஜகாத் நிதியிலிருந்து கொடுத்தும் அவர்களை விடுதலை செய்ய உதவ வேண்டும் என்றும் குர்ஆன் கூறுகிறது (பார்க்க குர்ஆன் 9:60)

இஸ்லாம் அடிமைத்தனத்தை ஆதரிக்கவில்லை. அடிமைத்தளையை அறுத்தெரியவும் மனிதனுடைய சமத்துவத்தைக் காக்கவும் அக்கரை எடுத்துள்ளது.



ஆக்கம் எழுதியவர் - அபூ ஆஸியா






Tuesday, May 3, 2011

இஸ்லாமிய வரலாற்றில் இரக்கவுணர்வு மற்றும் மனிதநேயம் - 5

Georgetown பல்கலைகழகத்தின் மதம் மற்றும் அகில உலகத் தொடர்புத்துறை பேராசிரியர்  ஜான் ல் எஸ்போசிடோ என்பவர் முஸ்லிம் நாடுகளில் ஆட்சியின் கீழ் வாழ்ந்த யூதர்களும் கிருஸ்தவர்களும் எத்துனை சிறந்த முறையில் நடத்தப்பட்டனர் என்பதை விவரிக்கிறார்:


        ''முஸ்லிம் இராணுவத்தினர் வல்லமை மிக்க வீரர்களாகவும் ஆற்றல் வாய்ந்த ஆட்சியாளர்களாகவும் நிர்மாணிப்பவர்கலாகவும் அல்லாமல் அழிப்பவர்களாக விளங்கவில்லை .உள்நாட்டு ஆட்சியாளர்களையும் இராணுவத்தினரையும் நீக்கி விட்டு வெற்றி கொண்ட நாடுகளில் தாங்களே அப்பொறுப்புக்களை வகித்த முஸ்லிம்கள் முந்தையவர்களின் ஆட்சிமுறை,அதிகாரம் மற்றும் கலாச்சாரங்களை பெரும்பாலும் தக்கவைத்துக் கொண்டனர்.கைப்பட்ட்ரப்பட்ட பகுதிகளில் வாழ்ந்த ஏராளமானோரை பொறுத்தவரையில் ஆட்சியாளர்கள் தாம் மாறிவிட்டனர்.மற்றபடி புதிய ஆட்சியாளர்கள் நன்மை பல விளைவித்தவர்கலாகவே விளங்கினர்.நீண்ட காலம் இடம்பெற்ற பைசாந்திய ,பாரசீக போர்களினால் விளைந்த விபத்துக்கள் கடும் வரிச்சுமைகள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிம்மதியை அளித்தவர்கலாவர்.உள்நாட்டினர் ,முஸ்லிம்களின் ஆட்சியை பாரசீக பைசாந்திய ஆட்சியை விட நெகிழ்வுள்ளதாக சகிப்புத்தன்மையுடையதாக கருதினர்.ஒவ்வொரு மதத்தினரும் தன மத அடிப்படையில் திருமணம் மணவிலக்கு வாரிசுரிமை போன்றவட்ட்ரை பின்பற்ற பூரண சுதந்திரம் வழங்கப்பட்டனர்.இதற்கு அவர்கள் ஜிஸ்யா வரியைக் கட்டவேண்டும்.வெளிநாட்டு ஆக்கிரமிப்புகளிலிருந்து அவர்கள் பாதுகாக்கப்பட்டனர்.மேலும் இராணுவப் பிரிவில் விதிவிலக்கு அளிக்கப்பட்டனர்.இதனால் அவர்கள்-திம்மி- பாதுகாப்புஅளிக்கப்பட்டவர்கள்   என அழைக்கப்பட்டனர்.''

இந்த வெற்றிகள் எல்லாம் பல வழிகளில் போர்கள் மீதிருந்த பகுதிகளுக்கு இஸ்லாமிய அமைதி நிலவ வழி வகுத்துக் கொடுத்தன.

இஸ்லாமிய வரலாற்றில் இரக்கவுணர்வு மற்றும் மனிதநேயம் - 4

கைப்பற்றப்பட்ட நாடுகளில் மக்கள் நிர்பந்தப்படுத்தி இஸ்லாத்திற்கு மதம் மாறச் செய்தனர் எனும் குற்றச்சாட்டை மேலைநாட்டு வரலாற்று ஆய்வாளர்களே அது உண்மையல்ல என்று மறுக்கின்றனர்.முஸ்லிம்கள் நீதியும் பொறுமையும் மிக்க மனப்பான்மையுடையவர்கள் என்று உறுதிப்படுத்தியுள்ளனர்.

L.BRAWNY எனும் மேலைநாட்டு ஆய்வாளர் தனது THE PROSPECT OF ISLAM எனும் நூலில் இவ்வாறு கூறுகிறார்,

       ''முஸ்லிம்கள் சென்ற இடமெல்லாம் வாள்முனையில் இஸ்லாத்தை பரப்பினார்கள் என்று கிருஸ்துவர்கள் கூறும் குற்றச்சாட்டை எதேய்சையாக உறுதி செய்யப்பட உண்மைகள் தகத்தெரிகிறன.முஸ்லிம்களுடைய வெற்றிகளின் பின்னால் உள்ள உண்மையான நோக்கம் இஸ்லாமிய சகோதரத்துவம் தான் என்று குறிப்பிட்டுள்ளார்.வரலாறு முழுவதும் முஸ்லிம் நாடுகளில் ஆட்சி செய்து வந்த முஸ்லிம் நிர்வாகிகளில் பெரும்பாலானோர் மற்ற மதத்தினரை மிகுந்த சகிப்புத்தன்மையுடனும் மதிப்பளித்தும் வந்தனர் என்றும் முஸ்லிம் நாடுகளின் எல்லைக்குள் வாழ்ந்த யூதர்களும் கிருஸ்தவர்களும் பாதுகாப்புடனும் வாழ்ந்து வந்தனர் என்றும் ஆதாரங்களுடன் கூறுகிறார்.''

Monday, May 2, 2011

இஸ்லாமிய வரலாற்றில் இரக்கவுணர்வு மற்றும் மனிதநேயம் - 3

உமர் இப்னு கத்தாப் [ரலி],அபூபக்கர் [ரலி] அவர்களின் பின் இஸ்லாமிய இராஜ்ஜியத்தின் கலீபாவாக பதவி ஏற்றார்.இவர் கைப்பட்ட்ரப் பட்ட நாடுகளின் மக்களுடன் நீதியுடன் நடந்து அவர்களோடு ஒப்பந்தகள் செய்து கொண்டார்.இந்த ஒப்பந்தங்கள் ஒவ்வொன்றும் நீதிக்கும் பொறுமைக்கும் எடுத்துக்காட்டாக இருந்தது.உதாரணமாக ஜெருசலேத்திலும் லோத்திலும் பாதுகாப்பு அளித்து வெளியிட்ட அறிக்கையில் கிருஸ்துவ தேவாலயங்கள் அளிக்கப்பட மாட்டா என்றும் முஸ்லிம்கள் கூட்டுத் தொழுகைக்கு பயன்படுத்த மாட்டார்கள் என்றும் உமர் [ரலி] உறுதி வழங்கினார்கள்.இதே வாக்குறுதியை பெத்லஹெம் கிருஸ்துவ மக்களுக்கும் உமர் [ரலி] வழங்கினார்கள்.
        மேதைன் நகரைக் கைப்பற்றியதும் தலைமை குருவான பேசுவாவிடம் கொடுக்கப்பட்ட பாதுகாப்பு அறிக்கையில் கிருஸ்துவ ஆலயங்கள் அழிக்கப்படமாட்டாது என்றும் அவை வீடாகவோ பள்ளிவாசல்கலாகவோ மாற்றப்படமாட்டாது என்று உமர் [ரலி] வாக்குறுதி வழங்கினார்கள்.இந்நகரை முஸ்லிம்கள் கைப்பற்றிய பின் இந்நகரின் தலைமை குரு பாரசீக பிஷப்புக்கு எழுதிய கடிதம் மிக முக்கியம் வாய்ந்தது.அந்தக் கடிதம் வருமாறு,

         "இந்தக் காலத்தில் இவ்வுலகின் ஆட்சிப் பொறுப்பு இறைவனால் வழங்கப்பட்டிருக்கும் அராபியர்கள்,கிருஸ்துவ மதத்திக்கு தொல்லை கொடுப்பதில்லை.உண்மையில் அவர்கள் அதற்கு சலுகை அளிக்கிறார்கள்.நம்முடைய மத குருமார்களையும் கர்த்தாவின் திருதொண்டர்களையும் கண்ணியப்படுத்துகிரார்கள்.துறவி மடங்களுக்கு ஊதியம் வழங்குகின்றனர்."

 உண்மையான இறை நம்பிக்கையாளர்கள் நீதியையும் பொறுமையையும் எவ்விதம் புரிந்து கொண்டுல்லார்களை தெளிவுபடுத்தும் எடுத்துக்காட்டுகள் இவையாவும்.ஓர் இறை வசனத்தின் மூலம் அல்லாஹ் இவ்வாறு ஏவுகிறான்,

"நம்பி உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்புவித்து விடவேண்டுமென்றும், மனிதர்களிடையே தீர்ப்பு கூறினால் நியாயமாகவே தீர்ப்புக் கூறுதல் வேண்டும் என்றும் உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் கட்டளையிடுகிறான்; நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு (இதில்) மிகவும் சிறந்த உபதேசம் செய்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான். "[ 4:58 ]

இஸ்லாமிய வரலாற்றில் இரக்கவுணர்வு மற்றும் மனிதநேயம் - 2

நபிகள் நாயகம் [ ஸல் ] அவர்களின் பின் வந்த கலீபாக்களும் நீதி வழங்குவதில் மிகக் கவனமாக இருந்தார்கள்.கைப்பற்றப்பட்ட நாடுகளில் அனைத்து விதமான மக்களுக்கும் சரி சமமாக நீதி செலுத்தினார்கள்.முதல் கலீபா அபூபக்கர் [ ரலி ] அவர்கள் தம் மக்களை நீதியுடனும் பொறுமை நிறைந்த மனப்பான்மையுடனும் நடந்து கொள்ளுமாறு ஏவினார்கள்.சிரியா நாட்டிற்கு சென்ற முதல் பயணத்தில் தம் இரானுவத்திணரப் பார்த்து அபூபக்கர் [ரலி] கீழ் வருமாறு பணித்தார்கள்

      "நில்லுங்கள் மக்களே! நீங்கள் மனதில் இருத்தும் பொருட்டு நான் பத்து விதிகளை இங்கே வெளியிடுகிறேன்,
  1. நயவஞ்சகம் செய்யாதீர்
  2. நேர்வழியிலிருந்து பிரழ்ந்துவிடாதீர்
  3. குழந்தைகள்,வயோதிபர்கள்,பெண்கள் போன்றோரை கொல்லவோ முடமாகவோ ஆக்காதீர்
  4. பேரீத்தம் பழ மரத்தை வெட்டாதீர்,
  5. பேரீத்தம் பழ மரங்களுக்கு நெருப்பு வைக்காதீர்
  6. பழம் ஈயும் மரங்களை வெட்டாதீர்
  7. உங்களின் உணவுத் தேவைக்காக இன்றி ஆடு,மாடு.ஒட்டகை எதனையும் கொல்லாதீர்
  8. துறவி மடங்களுக்காக தங்களை அர்பணித்துக் கொண்டோரை அவர்கள் வாழ்வில் அவர்கள் தேர்தெடுத்துக் கொண்ட விடயத்தை செய்ய எதுவாக விட்டு விடுங்கள்.
  9. உங்களுக்கு மக்கள் உணவு தர முன்வருவார்கள்,அவற்றை நீங்கள் உண்ணலாம்.
  10. ஆனால் அல்லாவின் பெயரைச் சொல்ல மறந்து விடாதீர்கள்.
இவை யாவும் திருக்குரான் வலியுறுத்திய நபிகள் நாயகம் [ஸல்] வாழ்ந்துகாட்டிய பண்புகளும் மனப்பான்மையும் தான்.
                                                                                                   
                                                                                                     "இஸ்லாம் பயங்கரவாதத்தை கண்டிக்கிறது" எனும் நூலிலிருந்து.

இஸ்லாமிய வரலாற்றில் இரக்கவுணர்வு மற்றும் மனிதநேயம் - 1

இஸ்லாமிய அரசியல் கொள்கை மிகவும் மிதமானதும் அமைதியை விரும்புவதும் ஆகும்.ஏராளமான முஸ்லிம் அல்லாத வரலாற்றாசிரியர்கள் இறையியல் வல்லுனர்கள் இதை ஏற்றுக்கொண்டுள்ளனர்.முன்னாள் கிருஸ்துவ பெண் துறவியும் மத்திய கிழக்கு வரலாற்று வல்லுனரும் பிரிட்டிஷ் வரலாட்ட்ராசியருமான காரன் ஆம்ஸ்ட்ராங் [ karan Armstrong ] தனது நூலான ''புனித போர் ''ரில் இவ்வாறு எழுதுகிறார் :
          
                   "இஸ்லாம் எனும வார்த்தை,"அமைதி" எனும் பொருள்படும் அரபிச் சொல்லிலிருந்து பிறந்தது ஆகும்.குரான் போரை இறைவனின் நாட்டத்திற்கு எதிரான நெறி பிறழ்ந்த ஒரு நடவடிக்கை என கண்டிக்கிறது.வலியச்சென்று மொத்தமாக தாக்கி அழிக்கும் போரை இஸ்லாம் ஒரு போதும் நியாயிக்கவில்லை.தவிர்க்க முடியாததும் சில சமயங்களில் கொடுமைகளையும் துன்பங்களையும் ஒழித்துக் கட்டுவதற்காக மேட்கொள்ளப்படும் ஆக்கபூர்வமான தற்காப்புப் போருக்கே இஸ்லாம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.மக்காவாசிகள் மட்டுமல்லாது வட்டாரத்தில் உள்ள யூதர்கள் சிரியாவில் உள்ள கிருஸ்துவர்களையும் எதிர்த்துப் போராட வேண்டிய நிலைமைக்கு முஹம்மது [ ஸல்] அவர்கள் தள்ளப்பட்டார்கள்.கிருஸ்துவர்களும் யூதர்களும் இணைந்து நபிகள் நாயகம் அவர்களை தாக்க திட்டமிட்டிருந்தனர்.ஆனால் இது முஹம்மத் நபியை வேதம் கொடுக்கப்பட்டிர்ந்த அவர்கள் மீது பழித்துரைக்க தூண்டவில்லை.மாறாக முஸ்லிம்கள் தங்களை தற்காத்துக் கொள்ளவேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளானார்களே தவிர வேதம் கொடுக்கப்பட்டிருந்த மீது வலிந்து சென்று புனிதப் போர் தொடுக்கவில்லை.இந்தப் போரின் போது நபிகள் நாயகம் [ஸல்] வர்கள் வழங்கிய அறிவுரைகள் இஸ்லாம் எவ்வளவு தூரம் மனிதநேயத்தை கடைபிடிக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது,

  1. மனித நேயத்துடன் போரிடுங்கள்
  2. மதகுருக்கள்,பெண் துறவிகள்,பலவீனமானவர்கள்,நலிவுற்றவர்களை அலைகளிக்கக் கூடாது
  3. போரில் ஈடுபடாத மக்களை கொள்ளாதீர்
  4. ஒரு மரத்தையேனும் வெட்டாதீர்
  5. கட்டிடங்களைத் தாக்கி நிர்மூலம் செய்யாதீர்."