Showing posts with label குர்ஆனில் முரண்பாடா ?. Show all posts
Showing posts with label குர்ஆனில் முரண்பாடா ?. Show all posts

Thursday, February 16, 2012

'டார்வின்' சொன்ன தத்துவம்.


அனைத்து வகை உயிரினங்களும் ஆரம்பத்தில் ஒரே வகையாக இருந்து,பின்னர்தான் பல வகை படைப்புகளாக பரிணமித்தன;பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னாள்,நீரில் ஒரே ஒரு செல் மட்டும் தோன்றியது என்பது டார்வின் தத்துவம்.கி.பி.1809 இல் பிறந்த  டார்வின் 1882 இல் மரணமடைந்தார்.இயற்பியல் அறிஞ்சர் என்று போற்றப்பட்ட இந்த ஆங்கிலேயர் முதன் முதலில் பரிணாமக் கொள்கையை வெளியிட்டார்.
 புவியின் வயது 5000 மில்லியன் ஆண்டுகள் என்று மன்னூல் ஆராய்ச்சியாளர்கள் கணிதிரிக்கிரார்கள்.சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்னர் தான்,மனிதன் வாழ்வதற்கு ஏற்ற இடமாக இப்பூமி மாறியதாம்.இதற்கேல்லாம் வலுவான எந்தவிதமான விஞ்ஞான ஆதாரங்கள் இல்லை.மரபியல் கூறுகளின் அறிகுறிகள் சிலவற்றை வைத்து இந்த தகவலை அவர்கள் தருகிறார்கள்.1882 இல் டார்வின் இறந்த பின்னரே " மரபியல் " கல்விக்கு அறிவியல் பூர்வமாக ஒரு அஸ்திவாரம் கண்டறியப்பட்டது என்பதி நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்.



நவீன மரபியல் என்ன சொல்கிறது என்பதை பார்ப்போம்:



அனைத்து உயிரினங்களுக்கும் 'செல்'கள் உள்ளன.மரபியல் கூறுகளை சுமந்து கொண்டிருக்கிற 'செல்'களின் உட்கருவில் (Nucleis) அமையப் பெற்ற வண்ண உயிரிகளே குரும்சோம்கள் எனப்படுகிறது.மனிதன்,மிருகம்,பறப்பன,ஊர்வன மற்றும் தாவரங்கள் ஆகிய படைப்புகளில் குரும்சோம்கள் உள்ளன.பரம்பரை குணாதிசயங்கள் பண்புகள் இயல்புகள் முதலான பண்புகள் இந்த மரபுக்கூறுகள் தான் தீர்மானிக்கிறது.வடிவத்தில் ஏற்படும் எந்த பரிணாமமும் இந்த மரபுக்கூறுகள் மூலமே உண்டாக முடியும்.ஆனால் எந்த ஒரு படைப்பும் வித்தியாசமான வேறுவகைப் படைப்பாக ஒருபோதும் மாறாது.இது இயற்கைக்கு ஒவ்வாத விடயம்.

உயிரினங்களின் உயிரணுக்களில் இந்த குரும்சோம்கள் இருப்பது 1903 இல் தான் கண்டுபிடிக்கப்பட்டது.குரும்சோம்கள் என்பது சில மீட்டர்கள் நீளமுள்ள 'நத்தை' வடிவிலான ஓர் உயிரி என்றும் கண்டறியப்பட்டது.ஒரு மில்லி மீட்டரில் 10 லட்சம் பாகங்களில் 2.3 பாகங்கள் அளவு நீளமுள்ள இடத்தில் அது அடைபட்டுக் கொண்டு இருப்பதுதான் ஆச்சரியம்.அப்படியிருந்தும் அதை நம் கண்களால் நாம் காணமுடியும் என்பது தான் அதனை விடவும் ஆச்சரியம்.ஆனால் இது எவ்வாறு தோன்றுகிறது என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது.'நத்தை' வடிவிலான இந்த குரும்சோம்கள் மிக நுணுக்கமான அணு அளவுள்ள மரபியல் கூறுகளை சுமக்கின்றனவாம்.!


குரும்சோம்கள் அல்லது நிறப்புரி

யூக்காரியோட்டிக் உயிரணுவின் பிரிகையின் பொழுது படியெடுக்கப்படும் நிறப்புரியின் படம். (1) நிறமியன்(Chromatid) – உயிரணுப் பிரிகையில் உருவேறும் நிலை எனப்படும் (S Phase) நிலைக்குப் பிறகு நிறப்புரியில் உள்ள ஒரேமாதிரியான இரண்டு படிகளில் (2) மையப்படி(Centromere) – இவ்விடத்தில் இரண்டு நிறமியன்களும் தொட்டுக்கொண்டு இருக்கும், இங்கே நுண்குழலிகள் (microtubules) ஒட்டிக்கொண்டு இணைப்பு கொள்ளுகின்றன. (3) குறுங்கை இழை. (4) நெடுங்கை இழை (wikipedia)


 இவ்விதம் உயிரணுக்களில் உள்ள குரும்சோம்கள் வகைக்கு வகை எண்ணிக்கையில் வித்தியாசப்படுகின்றன.உயிரினங்களின் வித்தியாசத்தைப் பகுத்துக் காட்டும் விதத்தில் இந்த வித்தியாசம் பெரிய அளவில் காணப்படுகின்றது.

குரங்கு வகைகளான கொரில்லா சிம்பன்சி முதலியவற்றில் 48 குரும்சோம்கள் உள்ளன என்று 1912 இல் அறிஞ்சர்கள் கண்டுபிடித்தனர்.இதே போல் மனிதனிலும் குரும்சோம்கள் 48 என்றே எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்தனர்.ஆனால் மனித செல்களில் உள்ள குரும்சோம்கள் எண்ணிக்கை 46 என 1956 கண்டுபிடிக்கப்பட்டது.இந்த அறிவியல்பூர்வமான கண்டுபிடிப்பு விவாதத்துக்கு இடமின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மனித குரும்சோம்கள்


வேறுபாடு 

இதிலிருந்து மனித செல்களில் உள்ள குரும்சோம்கள் எண்ணிக்கை குரங்கு வகைகளின் குரும்சோம்கள் எண்ணிக்கை வேறுபடுகிறது என்பது தெளிவாகிறது.குரங்கு குரங்காக தோன்றி நிலைத்துவிட்ட ஒரு உயிரினமாகும்.இதேபோலவே மனிதன் மனிதனாக தோன்றி நிலைத்துவிட்ட ஒரு உயிரினமாகும்.டார்வினின் தத்துவம் சுத்தப் பொய் என்பது இதிலிருந்து நிரூபணமாகிறது.

இதற்கிடையே 'ஒபாரின்' என்ற ரஷ்ய அறிவியலாளர் ஆதி மூலக் குழம்பிளிருந்துதான் முதன் முதலில் 'உயிரி மூலக்கூறுகள்' தோன்றின என்றார்.இவரது கருத்தும் மறுக்கப்பட்டு பல வருடங்கள் ஆகின்றன.உலகில் உயிரினத் தோற்றம்  'ஒபாரினின்' கருத்துப்படி கடலில் ஏற்படவில்லை  என்றும் அது களிமன்னில்தான் தோன்றியது என்றும் டாக்டர் கிரஹெம் கைரேன்ஸ் என்ற அறிவியலாளர் அண்மையில் அறிவித்தார்.இவர் கிளாஸ்கோ  பல்கலைக்கழகத்தின் மூத்த வேதியியல் நிபுணர் ஆவார்.


 'நாசா'வின் ஏமிஸ் ஆய்வு மையத்தில்ஆய்வு செய்துவந்த ஒரு குழுவின் ஆய்வு கைரேன்சின் ஆய்வுகளுக்கு மேலும் புதிய சாட்சியங்களை சேர்த்துக் கொடுத்தது.உயிர் தோன்றுவதற்கு இன்றியமையாத இரண்டு அடிப்படையான குணங்கள் சாதாரண களிமண்ணில் உள்ளன.அவையாவன.
  1. ஆற்றலை சேமித்து வைக்கும் திறமை.
  2. அதை ஒரு பொருளிலிருந்து இன்னொரு பொருளுக்கு மாற்றுகிற திறமை.

அருள்மறை


இனி முதல் மனிதர் எப்படி படைக்கப்பட்டார் குரான் என்ன சொல்கிறது என்று பார்ப்போம் :

நிச்சயமாக நாம் (ஆதி) மனிதரைக் களி மண்ணிலிருந்துள்ள சத்தினால் படைத்தோம்.
(23:12)

அவன்தான், உங்களைக் களிமண்ணிலிருந்து படைத்துப் பின்னர் (உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட) தவணையையும் ஏற்படுத்தியுள்ளான்; இன்னும், (உங்களைக் கேள்விகணக்கிற்கு எழுப்புவதற்காகக்) குறிக்கப்பட்ட தவணையும் அவனிடமே உள்ளது; அப்படியிருந்தும் நீங்கள் சந்தேகப்படுகிறீர்கள்.
(6:2)

அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே; அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப் பின் “குன்” (ஆகுக) எனக் கூறினான்; அவர் (மனிதர்) ஆகிவிட்டார்.
(3:59)




முதல் மனிதர் களிமண்ணால் படைக்கப்பட்டார்,அடுத்தடுத்து மனிதர்கள் விந்தினால் படைக்கப்பட்டனர் என்ற கருத்தை குரான் சுமார் 15 இடங்களில் வலியுறுத்திக் கூறுகிறது.இதேபோல் மனித இனம் ஆரம்பத்திலிருந்து ஒரே மூலத்திலிருந் படைக்கப்பட்டது தான் என்றும் ஒரே ஆன்மாவிலிருந்தே மனித இனம் பல்கிப் பெருகியது என்றும் 5 இடம்களில் குரான் கூறுகிறது.




இங்கு பலருக்கு ஒரு சந்தேகம்.இஸ்ரேவேலர்கள் இறைச்சட்டங்கள் மீறி பூமியில் அக்கிரமம் புரிந்தபோது அவர்களைக் குரங்குகளாக இறைவன் மாற்றியதாக திருக்குரான்  குறிப்பிடுகிறது.


உங்க(ள் முன்னோர்க)ளிலிருந்து சனிக் கிழமையன்று (மீன் பிடிக்கக் கூடாது என்ற) வரம்பை மீறியவர்களைப்பற்றி நீங்கள் உறுதியாக அறிவீர்கள். அதனால் அவர்களை நோக்கி “சிறுமையடைந்த குரங்குகளாகி விடுங்கள்” என்று கூறினோம்.
(2:65)

 முந்தைய சமூக மக்கள் இப்படி குரங்குகளாக மாற்றப்பட்டார்கள் என்று குரான் மூன்று இடங்களில் கூறுகிறது.ஒரு வேளை டார்வினின் தத்துவத்தை இவ்வசனங்கள் வலியுருத்துவனவாக எடுத்துக் கொள்ளக் கூடாதா ??? இதுவே அந்த சந்தேகம்.

முதலில் மனித இனமே குரங்கிலிருந்து உருவானது என்பதே டார்வினின் கொள்கை.இஸ்ரேவேலர்கள் இடையில் வந்தவர்கள்.இரண்டாவதாக மனிதர்கள் குரங்குகளாக உருமாற்றப்பட்டார்கள் என்றே குரான் கூறுகிறது மற்றபடி குரங்குகள் மனிதர்களாக உருமாற்றப்பட்டார்கள் என்றல்ல.மூன்றாவதாக குரங்குகளாக மாற்றப்பட்ட அந்த தீய மனிதர்கள் சில தினங்களிலேயே அளிக்கப்பட்டு விட்டார்கள்.மேலும் வாரிசுகளும் அற்றுப்போனார்கள் என்று ஹதீஸ் கூறுகிறது.(முஸ்லிம்)




(படங்கள் - விக்கிபீடியா)



இந்த அறிவியல் கட்டுரை 
அறிவியல் தமிழ் அறிஞ்சர் 
  மணவை முஸ்தபா  
அவர்களால் எழுதப்பட்டது.




Wednesday, December 28, 2011

இஸ்லாமும் அடிமைத்தனமும்.


மனிதர்கள் அனைவரும் ஒரே மூலத்திலிருந்து பிறந்தவர்கள். நீங்கள் ஒருவரிலிருந்து மற்றொருவராகத் தோன்றியவர்களே. என்று மனிதர்களின் பரிபூரண சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுப்பப்பட்ட இஸ்லாம் அடிமைத்தனத்தைத் தனது சமூக வாழ்க்கையின் ஒர் அம்சமாகக் கொள்ளுமா?

ஆதத்தின் மக்களை நாம் உண்மையிலேயே கண்ணியப்படுத்தியுள்ளோம் என்று கூறும் குர்ஆனே மனித சமுதாயத்தில் ஒரு கூட்டதார்களை வீட்டுத் தட்டு முட்டு சாதனங்களைப் போல் விற்கப்பட்டுக் கொண்டும், வாங்கப்பட்டுக் கொண்டும் இருக்கும்படியான ஏற்பாடுகளைச் செய்யுமா?

'எவர்; எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ.. அவர்.. அவர்களுடைய பழுவான சுமைகளையும் அவர்கள் மீதிருந்த விலங்குகளையும் (கடினமான கட்டளைகளையும் இறக்கிவிடுவார்' (7:157) என்றே குர்ஆன் கூறுகிறது.

எனில் அடிமைகளை வைத்துக் கொள்ளவும், நிர்வகிக்கவும் சில விதிமுறைகளை ஏற்படுத்தியது என்றால் அது காலச்சூழ்நிலையைக் கருத்தில் கொண்ட ஒரு தற்காலிக விதிமுறையாகும்.

முந்தைய கால கட்டங்களில் போருக்குப் பின் வெற்றி பெற்ற நாட தோல்வியடைந்த நாடுகளின் போர் வீரர்களையும், பெண்களையும், குழந்தைகளையும் அடிமைகளாக உபயோகப்படுத்துவதையும், விற்கப்படுவதையும் வழக்கமாக கொண்டிருந்தது. இந்நிலை திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்ட கால கட்டத்தில் இறக்கியருளிய நாட்டிலும், அதன் சுற்றுச்சூழலிலும் இருந்து வந்தது. மேல் நாடுகளில் 18-ம் நூற்றாண்டின் கடைசி வரை கூட இருந்து வந்தது. அதுவும் யுத்தக் களத்தில தோல்வியடைந்தவர்களையல்ல. யுத்தம் என்றால் என்னவென்றே தெரியாத நிரபராதிகளையாகும்.

அமெரிக்காவில் மேற்கிந்தியர் எனப்படும் கருப்பு இனமக்களை பிடித்து விற்பனை செய்யும் வழக்கம். இந்த 20-ம் நூற்றாண்டு வரை இருந்தது. மேனாட்டவர் ஆப்ரிக்காவின் மத்திய பகுதியில் வாழ்ந்த கருப்பு இனமக்களை மிருகத்தனமாக வேட்டையாடிப் பிடித்து அடிமைகளாக விற்பதற்காக கப்பலேற்ற உபயோகிக்கப்பட்ட கடற்கரைக்கு அடிமைக்கரை என்று பெயரே வைக்கப்பட்டது. இப்படி ஒரு நூற்றாண்டுக்குள் (1680-1786) பிரிட்டானிய குடியேற்ற நாடுகளுக்கு அடிமைகளாக அனுப்பப்பட்ட கருப்பர் தொகை இரண்டு கோடி என்று அவர்களின் அறிக்கையே கூறுகிறது.1790-ம் ஆண்டில் மட்டும் 75,000 அப்பாவி மக்கள் அடிமைகளாக்கப்பட்டு பிரிட்டானிய குடியேற்ற நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர். அமெரிக்காவில் ஆபிரஹாம் லிங்கன்; காலக்கட்டம் வரை கூட அடிமைத்தனம் இருந்து வந்தது என்று அலெக்ஸ்ஹெய்ல் தன்னுடைய வுhந சுழழவள என்றும் நூலில் கூறுகிறார்.

அடிமைகள் (சூத்திரர்) கடவுளின் பாதத்திலிருந்து பிறந்தவர்கள் அவர்கள் பிறப்பாலே இழிந்தவர்கள். பிராமணர், ஷத்திரியர், வைஷியர் இட்டப் பணியை ஏற்றுப் நடப்பதே அவர்கள் தலைவிதியாகையால் அதனை அவர்கள் எதிர்க்கவோ, மாற்றவோ முடியாது என்று சாதி இந்துக்கள் நம்பி நடத்தினர். அவர்களுக்கு கடவுள் இட்ட ஒரே வழி மரணத்திற்கு பின் தன் ஆன்மாக்கள் மறுபிறவியில் ஒரு தலைசிறந்த நிலையினை அடையலாம் என்ற நம்பிக்கையில் தன் இழிநிலையையும், தண்டனையையும் மிகப் பொறுமையுடன் சகித்து கொண்டு வாழ வேண்டாம் என்று போதிக்கப்பட்ட, அவர்களை அடக்கி ஆண்டவர்கள் மிக இழிந்த நிலைக்கு அவர்களை தாழ்தியதோடு நில்லாது, அடிமைகள் தம்மை இவ்இழிநிலைக்கும், துன்பத்திற்கும் ஆளாக்கிய அநீதியான சமூக அமைப்புக்கு எதிராக கிளர்ந்தெழும் எண்ணத்தைக் கூட அகற்றி வைத்தனர்.

ரோமிலும், கிரேக்கத்திலும், பரசீகத்திலும், பண்டைய இந்தியாவிலும் அடிமைகளை எவ்வாறு எவ்வளவு குரூரமாக நடத்தினார்கள் என்பதை இன்று நினைத்தாலும் வேதனை பொங்கும். நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை எடுத்து போதித்த அரபு நாட்டின் நிலையோ அடிமைத்தனம் பேணுவதில் எந்நாட்டவர்களுக்கும் சளைத்தவர்களாக இருந்ததில்லை. அச்சூழ்நிலையில் மனித குலத்தின் அருட்கொடையாக வந்த முஹம்மது (ஸல்) கொண்டு வந்த மார்க்கம் அடிமைத்தனத்தை நிறுத்த பல்வேறு வழிமுறைகளை கையாண்டது.

கணவன், மனைவி, குழந்தைகள் உட்பட ஒட்டு மொத்த குடும்பத்தையுமே அடிமைப்படுத்தி அவர்களைக் கொண்டு கடினமான வேலைகள் வாங்கியும், அவர்களுடைய சம்பாத்தியத்தை அனுபவிக்கவும் செய்திருந்த ஒரு சமூகமாயிருந்தது அரபு சமூகம். அத்தகைய சமூகத்தில் இஸ்லாம் அடிமைத்தனத்தை உடனே தடை செய்யாமல் படிப்படியாக குறைத்து முடிவு நிலைக்கு கொண்டு வந்தது. நேரடியாக தீடிரென்று அடிமைத்தனத்தை தடை செய்யுமாயின் அது சுய சமூகத்தில்; மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதோடு அல்லாமல், பிற சமூகத்தால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்பதாலே அடிமைத்தனத்தை திடிரென்ற தடை செய்யாமல் நிர்பந்தத்தின் அடிப்படையில் அடிமைகளை வைத்துக்கொள்ள அனுமதித்தது.


 அடிமைகளைப் பேணுதல்



நிர்பந்தத்தின் அடிப்படையில் அடிமைகளை வைத்துக்கொள்ள அனுமதித்த இஸ்லாம் அவர்களை எவ்வாறு பேண வேண்டும் என்று சில வரைமுறைகளை வகுத்துத் தந்தது.

'தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினகளக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும் (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும் உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள் நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக வீண் பெருமையுடையோர்களாக இருப்பவர்களை நேசிப்பதில்லை (4:36)

'உங்கள் அடிமைகள் உங்கள் சகோதரர்களே. எனவே யார் தனது ஆதிக்கத்தில் ஒரு சகோதரரைப் பெற்றிருக்கினறரோ அவர் தாம் உண்பது போலவும் உடுப்பது போலவும் தமது சகோதரருக்கும் உண்ணவும் உடுக்கவும் கொடுக்க வேண்டும். அவர்களின் சக்திக்கு அப்பாற்பட்ட எதையும் செய்யுமாறு அவர்களைக் கேட்க வேண்டாம். அப்படியான எதையும் செய்யம் படி கேட்டால் அதில் அவர்களுக்கு உதவிபுரியுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் உபதேசித்துள்ளார் (புகாரி)

உங்களில் எவரும்'இவன் எனது அடிமை', 'இவள் எனது அடிமைப்பெண்' என்று சொல்லக்கூடாது பதில் 'இவர் எனது ஆள்' என்றும் 'இவள் எனது பணிப்பெண்' என்றும் சொல்ல வேண்டும் என்றும் நபி (ஸல்) அவர்கள் போதித்துள்ளார்கள். இன்னும்

'யார் தனது அடிமையைக் கொல்கிறாரோ அவரை நாம் கொல்வோம். அவரது மூக்கை அங்கவீனப்படுத்துபவரின் மூக்கை நாம் அறுப்போம், அடிமைக்கு விதையடிப்பவரை அதற்குப்பதில் நாம் விதையடிக்கச் செய்வோம்' என்றும் எச்சரிக்கை செய்துள்ளார்கள். (புகாரி முஸ்லிம்)

அடிமைகளுக்கு விதையடித்து பாலியல் உணர்வுகளை நசித்து மிருகங்களைப் போல் நடத்திவந்த காலச் சூழ்நிலையில் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து விவாக பந்தம் ஏற்படுத்திக் கொடுக்கக் கூட இஸ்லாம் கட்டளையிட்டது.

உங்களில் வாழ்க்கைத் துணை இல்லா (ஆடவர், பெண்டி)ருக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையில்லா) ஸாலிஹான உங்கள் (ஆண் பெண்) அடிமைகளுக்கும் விவாகம் செய்து வையுங்கள் (24:32)

'தங்கள் கற்பைப் பேணிக் கொள்ள விரும்பும் உங்கள் அடிமைப் பெண்களை அற்பமான உலக வாழ்க்கை வசதிகளைத் தேடியவர்களாக விபச்சாரத்திற்கு (அவர்களை) நிர்பந்திக்காதீர்கள்' (24:33) என்றும் கட்டளையிட்டது.

இன்னும் அடிமைகள் தங்கள் உணர்வுகளை தவறான வழிகளில் தணித்துக் கொள்ளும் வகையில் சென்றடாதிருக்க அவர்களின் உணர்வுகளை மதித்து விவாகம் செய்து வையுங்கள். அல்லது நீங்களே திருமணம் செய்து கொள்ளுங்கள். (பார்க்க திருக்குர்ஆன் 4:25) என்றும் போதிக்கப்பட்டது.

இணைவைக்கும் ஒரு பெண் உங்களை கவரக்கூடியவர்களாக இருந்த போதிலும் அவளைவிட மூஃமினான ஓர் அடிமைப்பெண் நிச்சயமாக மேலானவன் ஆவாள் (2:221) என்று கூறி அடிமைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதோடு சம அந்தஸ்தையும் வழங்கியது.

அடிமைகளை கண்ணியத்தோடு பேணினாலும், அடிமைத்தனத்தை முற்றாக தடை செய்யாமல் போர்க்கைதிகளை மேலும் மேலும் அடிமைகளாக்கி வைத்துக் கொண்டது ஏனென்றால்: தூதரின் கால கட்டத்திலும் சரி பின் சில கால கட்டங்களிலும் சரி யுத்தக் கைதிகளை அடிமைகளாக்கி வைத்துக் கொண்டதென்றால் அது எதிரி நாட்டார்கள் நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு ஆகும். இரு நாடுகளுக்கு மத்தியில் போர் மூண்டால் பிடிபட்ட யுத்தக் கைதிகளை அடிமைகளாக்கி வைப்பதும், சித்திரவதை செய்து கொல்வதுமான பழக்கம் பழங்காலந்தொட்டு நிலவி வந்தது.

UNIVERSAL HISTORY OF THE WORLD  என்னும் வரலாற்று கலைக்களஞ்சியத்தில் (PAGE 2273) பின்வரும் நிகழ்ச்சி கூறப்பட்டுள்ளது. '599-ம் ஆண்டில் ரோம சக்ரவர்த்தி ஆண்டில் மாரியஸ் போர்களில் தன் படைகள் கைப்பற்றிய இலட்சக்கணக்கான கைதிகளில் ஒரு சிலரைக் கூட விடுதலை செய்ய மறுத்துவிட்டான். பதிலாக அவர்கள் அனைவரையும் வாளுக்கு இறையாக்கினான். இவ்வாறு செய்யக் காரணம் அவர்களை வாழ விடுவதை விடக் கொன்றுவிடுவதே சிக்கனமானது என்ற அவன் கருதியதாகும்'.

யுத்தக் கைதிகளை கூட்டதோடு கொன்று குவிக்கும் பழக்கம் பிற்காலத்திலும் தாராளமாக இருந்தே வந்தது. தேசத் துரோகிகள் என்றும் எதிரிநாட்டு உளவாளிகள் என்றும், எதிரி நாட்டு கைதிகள் என்றும் கூறி கொன்று குவித்த சம்பவங்கள் ஹிட்லரின் ஜெர்மனியிலும், முசோலினியின் இத்தாலியிலும் மட்டுமல்ல, கம்யூனிஸ்டுகளின் சொர்க்க பூமியாக இருந்த ரஷ்யாவிலும். அண்மையிலே கன்பூசியாவிலும் நடந்ததுண்டு. இத்தகைய கொடூரமான மிருகச் செயலை இஸ்லாம் ஒரு போதும் அங்கீகரிக்கவோ அனுமதிக்கவோ செய்ததில்லை.

(மூஃமீன்களே! வலிந்து உங்களுடன் போரிடவரும்) நிராகரிப்பவர்களை நீங்கள் (போரில்) சந்திப்பீர்களாயின், அவர்களுடைய கழுத்துக்களை வெட்டுங்கள். கடும் போர் செய்து (நீங்கள் அவர்களை வென்று) விட்டால் (அவர்களுடைய) கட்டுக்களை பலப்படுத்தி விடுங்கள். அதன் பிறகு யாதொரு ஈடுபெற்றோ அல்லது (ஈடுபெறாது) உபகாரமாகவோ அவர்களை விட்டு விடுங்கள். (47:4) என்று இறைவன் கூறுகிறான்.

இவ் இறைவசனத்தில் எதிரிகளை போர்க்களத்தில் வைத்து நேருக்கு நேர் போரிடும் போது மட்டும் வெட்டுங்கள் என்று கட்டளையிடுகிறது. போருக்குப்பின் போர்வீரர்களை கைதிகளாக பிடித்திருந்தால் அவர்களுக்கு பதிலாக ஈட்டுத் தொகை பெற்றுக் கொண்டோ அல்லது உபகாரமாகவோ விடுவித்து விடுங்கள் என்று கூறுகிறது.

நபித்தோழர்களில் பிரசித்திப்பெற்ற இப்னு உமர் (ரலி) குர்ஆன் வியாக்யானிகளான ஹஸன் பஸரி, ஹம்மாத் இப்னு அபீசுலைமான் போன்றோர்கள் இவ்வசனத்தின் அடிப்படையில் போர்க்கைதிகளை கொல்வது கூடாது என்று ஃபத்வா வழங்கியுள்ளார்கள். அப்படியாயின் போர்க்கைதிகளை என்ன செய்ய வேண்டும். ஆயுட்காலம் முழுவதுமோ அல்லது சொற்ப காலமோ சிறையிலடைத்து வைக்க வேண்டும் என்றால் அத்தகைய சிறைச்சாலை வசதி ஏற்பாடுகள் எதுவும் அக்காலக்கட்டத்தில் இருந்ததில்லை. எனவே போர்க்கைதிகளை போர் வீரர்களுக்கு பங்கிட்ட வழங்கிவரும் வழக்கத்தை கையாண்டது. அடிமைகளைப் பெற்றுக் கொண்டவர்கள் தங்கள் வேலைகளை வாங்கிக் கொண்டு அவர்களை பராமரித்து வந்தனர். இவர்களே அடிமைகளாக கருதப்பட்டு வந்தனர். இத்தகைய அடிமைத்தனத்தை நிர்பந்தத்தின் அடிப்படையில் சகித்துக் கொள்ள வேண்டியதாயிற்று.

முஸ்லிம்களுக்கும், எதிரிகளுக்குமிடையில் பலபோர்கள் நடைபெற்றன. இப்போர்களில் கைதிகளாக்கப்பட்ட பல முஸ்லிம்கள் எதிரிகளால் அடிமைகளாக்கப்பட்டனர். அவர்களின் சுதந்திரம் பாதிக்கப்பட்டது. அவர்கள் அடக்கி ஒடுக்கப்பட்டதோடு அக்காலத்தில் அடிமைகள் அனுபவித்த எல்லாவித இன்னல்களையும், அவர்களும் அனுபவிக்க நேர்ந்தது. பெண்மணிகளின் கண்ணியம் மிக மோசமாக பங்கப்படுத்தப்பட்டது. தந்தையும் மகனும், நண்பர்களுமாக பல ஆண்கள் ஒரே பெண்ணை பகிர்ந்து கொண்டனர். கைப்பற்றப் பட்ட குழந்தைகள் வெறுக்கத்தக்க இழிவான அடிமை நிலையில் வளர்க்கப்பட்டனர். இத்தகைய நிலைமைகள் அக்கால வாழ்க்கையில் நிலைத்துவிட்டதால் இஸ்லாத்தின் கைக்குள் வந்த எல்லா கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்வது சாத்தியமாகவில்லை. கைது செய்யப்பட்ட முஸ்லிம்களும் அவர்களின் உற்றார் உறவினர்களும், பகைவர்களால் அடிமைகளாக்கப்பட்டு மிகக் கொடிய சித்திரவதைக்குள்ளும் மானபங்கப்படுதத்பபட்டுமிருந்தனர். இந்நிலையில் முஸ்லிம்கள் கைது செய்தவர்களை விடுதலை செய்வது, அடிமைப்பட்ட முஸ்லிம்களுக்குச் செய்யப்படும் கொடுமைகளுக்கு உற்சாக மூட்டவதாகவும் அமைந்திருக்கும். எதிரி நாட்டு போர்க்கைதிகளை அடிமைப்படுத்தாமல் விட்டுவிட்டாலோ அவர்கள் திரும்பத் திரும்ப போருக்கு வர தயங்க மாட்டார்கள். நாம் வெற்றி பெற்றால் அவர்களை அடிமைப்படுத்தி அனுபவிக்கவும், கொடுமைப் படுத்தவும் செய்யலாம். நாம் தோற்றுவிட்டாலோ நம்மை முஸ்லிம்கள் கைது செய்யவம் மாட்டார்கள் அடிமைப்படுததவும் மாட்டார்கள் என்ற கருதி திரும்பத் திரும்ப போருக்கு வர தயங்க மாட்டார்கள். எனவே மேலும் மேலும் போரைத் தவிர்க்க இஸ்லாம் மேற்கொள்ளத்தக்கதாக இருந்த ஒரே சிறந்த வழி தனது கைதிகளையும் அடிமைகளாக நடத்துவதாகும்.

பகைவர்கள் தாம் யுத்தங்களிற் சிறைப்படுத்தியவர்களைத் தொடர்ந்து பிடிவாதமாக அடிமையாக்கி வர இஸ்லாம் மட்டும் தனது போர்க்கைதிகளை அடிமைகளாக்குவதைச் தன்னிச்சையாக ஒழித்துவிட இயலாது. எனவே இதற்கு மாற்றுவழி இல்லாதவரையும். உலகம் முழுவதும் உள்ள மக்கள் யுத்தக் கைதிகளை அடிமைகளாகவன்றி வேறு விதத்தில் நடத்துவதற்கான ஓர் அடிப்படைப் பற்றி இணக்கம் காணும் வரை இஸ்லாம் அடிமைத்தனத்தை சகித்துக. கொள்ள வேண்டியதாயிற்று.

அரசு நடத்தும் போர் அல்லாமல் எந்த ஒரு தனிமனிதனும் மற்றொரு தனிமனிதனை அடிமையாக்க முடியாது என்றும் விளங்கிக் கொள்ள வேண்டும்.


 அடிமை விடுதலை


இஸ்லாம் தன் வசமிருந்த எல்ல வழிவகைகளையும் பயன்படுத்தி அடிமைத்தனத்தை ஒழிக்க முயற்சி செய்ததேயன்றி கொள்கையளவில் கூட அதனை அங்கீகரிக்கவில்லை.

'பின்னர் ஓர் உதவியாக அவர்களை விடுதலை செய்து விடுங்கள் அல்லது யுத்தம் முடியும் வரை அவர்கள் பணங்கொடுத்து தம் விடுதலையைப் பெற்றுக் கொள்ள அனுமதியுங்கள் (47:4) என்று குர்ஆன் உபதேசிக்கிறது. இஸ்லாத்திற்காக நடந்த முதல் யுத்தமான பத்ர் யுத்தத்தில் கைது செய்யப்பட்ட சில கைதிகளை முஸ்லிம்களை மீட்பதற்குப் பதிலாக விடுதலை செய்தனர். அத்துடன் வேறு சிலரை கருணையின் நிமித்தம் விடுதலை செய்தனர்.

அடிமைகளைப் படிப்படியாக ஒழிக்க திட்டமிட்ட இஸ்லாம் முதலாவதாக எல்லோருமே அல்லாஹ்வின் அடிமைகள் என்ற உணர்வை மக்களிடையே பரப்பி, உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பேதம் இறைவனை வழிப்படுவதில் எள்ள ஏற்றத்தாழ்வின் மூலமமேயன்றி வேறு எதிலும் கணிக்க முடியாது. இஸ்லாமிய வாழ்க்கை முறையை நம்பி அதை ஏற்று வாழும் யாவரும் சகோதரர்கள் என்ற எண்ணத்தை வளர்த்தது. மக்கள் மனங்களில் அன்பு, ஆதரவு அரவணைப்பு, ஆறுதல் கூறல் போன்ற அருட்குணங்களை வளர்த்து அப்போதிருந்த அடிமைகளை நடுத்தெருவில் தவிக்க விட்டுவிடாமல் அவர்களை அன்போடும், பண்போடும் நடத்தச் செய்தது. அடிமைகளை விடுவித்தல் இதை அல்லாஹ்வுக்கு மிக்க விருப்பமான ஒரு செயலாக அறிமுகம் செய்து இறைநேசர் பலரும் தம்மிடமிருந்த அடிமைகளை விடுதலை செய்ய வைத்தது.

'(நன்மை தீமையாகிய) இருபாதைகளை நாம் அவனுக்குக் காண்பித்தோம். ஆயினும் அவன் கணவாயைக் கடக்கவில்லை.

(நபியே!) கணவாய் என்பது என்ன என்பதை உமக்கு எது அறிவிக்கும் (அது) ஒர் அடிமையை விடுவித்தல்...' என்று குர்ஆன் (90:10,14) போதித்தது.

ஒரு சமயம் நபித்தோழர் அபூதர் (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். 'அடிமைகளை விடுவித்தலில் மிகச் சிறப்பானது எது? என்ற அதற்கு நபி (ஸல்) அவர்கள், எஜமானனின் மிகவும் விலையுர்ந்த அடிமைகளை விடுவித்தலாகும்' என்றார்கள். (புகாரி, முஸ்லிம்)

பல்வேறு குற்றங்களுக்கும், பாவச் செயல்களுக்கும் தண்டனையாக அடிமைகளை விடுதலை செய்ய வேண்டும் என்னும் சட்டத்தையும் கூறி அடிமைகளை விடுவிக்க ஏற்பாடுகளை செய்தது. உதாரணமாக

1. ஒரு முஸ்லிம் தன் மனைவியுடன் பாலுறவு கொள்வதன் மூலம் தன் நோன்பை முறிப்பாராயின் இச்செயலுக்கு தண்டனையாக ஒரு அடிமையை விடுதலை செய்ய வேண்டும்.

2. அவ்வாறே ஹஜ் கடமையை நிறைவேற்றும் போது மனைவியுடன் பாலுறவு கொண்டாலும் தண்டனையாக ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்.

3. ஒரு முஸ்லிம் தன் மனைவித் தன் தாய் போன்றிருக்கிறாள் என்ற ஒப்பிட்டுக் கூறினால் இது ஒரு தீயப் பேச்சாகக் கருதப்படுகிறது. இக்குற்றத்திற்கு பரிகாரமாக ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும் என்றது.

-இத்தகைய காரணங்கள் எதுவும் இல்லாத போதும் ஓர் அடிமையை உரிமை விடுவத அல்லாஹ்வின் அன்பைப் பெறுதலுக்குரிய மிகச் சிறந்ததோர் செயலாகும் என்றும். உரிமை விடப்படும் ஓர் அடிமையின் ஒவ்வொரு உறுப்பும் அவ்வடிமையை உரிமை விட்டவனை நரக நெருப்பிலிருந்து காப்பாற்ற உதவும் என்றும் இறைதூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்ட ஆரம்ப கால முஸ்லிம்கள், தங்களிடமிருந்த அடிமைகளை மட்டுமல்ல இயன்றளவு அடிமைகளை விலைகொடுத்து வாங்கியும் உரிமையிட்டடார்கள். இறைதூதர் (ஸல்) அவர்கள் 63 அடிமைகளை விடுதலை செய்துள்ளதாகவும், அவர்களின் அருமை மனைவி ஆயிஷா (ரலி) அவர்கள் 67 அடிமைகளை விடுதலை செய்ததாகவும் சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன.

அடிமைத்தளையிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ள பொருளோ, பணமோ தேவைப்படும் அடிமைகளுக்கு ஜகாத் நிதியிலிருந்து கொடுத்தும் அவர்களை விடுதலை செய்ய உதவ வேண்டும் என்றும் குர்ஆன் கூறுகிறது (பார்க்க குர்ஆன் 9:60)

இஸ்லாம் அடிமைத்தனத்தை ஆதரிக்கவில்லை. அடிமைத்தளையை அறுத்தெரியவும் மனிதனுடைய சமத்துவத்தைக் காக்கவும் அக்கரை எடுத்துள்ளது.



ஆக்கம் எழுதியவர் - அபூ ஆஸியா






Saturday, August 6, 2011

ஷைத்தான் ஒரு மலக்கா ? இல்லை ஜின்னா ?

நபி ஆதம் (அலை) அவர்களும் - இப்லீஸும் இருக்கின்ற வரலாற்று சம்பவங்கள் அருள்மறை குர்ஆனில் பல வசனங்களில் குறிப்பிடப் பட்டுள்ளது.
அருள்மறை குர்ஆனின் 2வது அத்தியாயம் ஸுரத்துல் பகராவின் 34வது வசனம் கீழ் கண்டவாறு குறிப்பிடுகிறது:

பின்னர் நாம் மலக்குகளை நோக்கி, 'ஆதமுக்கு பணி(ந்து ஸுஜுது செய்) யுங்கள்' என்று சொன்னபோது இப்லீஸைத் தவிர மற்ற அனைவரும் சிரம் பணிந்தனர். அவன் (இப்லீஸு) மறுத்தான்: ஆணவமும் கொண்டான்: இன்னும் அவன் காஃபிர்களைச் சார்ந்தவனாகி விட்டான்
.(அல் குர்ஆன் 2:34)

 
மேற்படி பொருள் தரக் கூடிய அருள்மறை குர்ஆனின் அத்தியாயங்களின் பெயர்களும் வசனங்களின் எண்களும் பின் வருமாறு:
அத்தியாயம் 15 ஸுரத்துல் ஹிஜ்ர் வசனம் 28 - 31
அத்தியாயம் 17 ஸுரத்துல் பனீ இஸ்ராயீல் வசனம் 61
அத்தியாயம் 20 ஸுரத்துல் தாஹா வசனம் 116
அத்தியாயம் 38 ஸுரத்துல் ஸாத் வசனம் 71 - 74.
ஆனால் அருள்மறை குர்ஆனின் அத்தியாயம் 18 ஸுரத்துல் கஃபுவின் 50வது வசனம் கீழ் கண்டவாறு குறிப்பிடுகிறது:

அன்றியும், 'ஆதமுக்கு ஸுஜுது செய்யுங்கள்' என்று நாம் மலக்குகளிடத்தில் கூறியதை (நபியே) நினைவு கூர்வீராக: அப்போது இப்லீஸைத்தவிர, அவர்கள் ஸுஜுது செய்தார்கள்;: அவன் (இப்லீஸ்) ஜின் இனத்தை சேர்ந்தவனாக இருந்தான்:... (அல் குர்ஆன் 18:50)

2. அரபிய முறையில் பின்பற்றுதல்:

 
பின்னர் நாம் மலக்குகளை நோக்கி, 'ஆதமுக்கு பணி(ந்து ஸுஜுது செய்) யுங்கள்' என்று சொன்னபோது இப்லீஸைத் தவிர மற்ற அனைவரும் சிரம் பணிந்தனர். அவன் (இப்லீஸு) மறுத்தான்: ஆணவமும் கொண்டான்: இன்னும் அவன் காஃபிர்களைச் சார்ந்தவனாகி விட்டான்.
(அல் குர்ஆன் 2:34)



மேற்படி அருள்மறை குர்ஆனின் மொழியாக்கத்தை நாம் மேலோட்டமாகப் படித்துப் பார்த்தால் - இப்லீஸும் மலக்கு இனத்தைச் சார்ந்தவன் தானோ என்று நம்மை எண்ணத் தூண்டும். அருள்மறை குர்ஆன் அரபி மொழியில் இறக்கியருளப்பட்டது என்பதை நாம் அறிவோம். அரபி இலக்கணத்தில் ஒரு கட்டளையை பின்பற்றுவதற்கென்று ஓர் முறை உள்ளது. அதற்கு 'தக்லீப்' என்று பெயர். மேற்படி முறைப்படி - பெரும்பாலானவர்களுக்கு விதிக்கப்படக்கூடிய கட்டளை -சிறுபான்மையாக உள்ளவர்களுக்கும் பொருந்தும். உதாரணத்திற்கு 100 மாணவர்கள் உள்ள ஒரு வகுப்பறையில் 99 பேர் ஆண்களும் மீதி ஒருவர் மாத்திரம் பெண்ணாகவும் இருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆண் மாணவர்கள் அனைவரும் எழுந்திருங்கள் என்று நான் அரபி மொழியில் சொன்னால், அது வகுப்பறையில் அமர்ந்திருக்கும் பெண் மாணவிக்கும் பொருந்தும். பெண் மாணவியும் எழுந்திருக்க வேண்டும் என்று நான் அரபியில் தனியாகச் சொல்ல வேண்டிய கட்டாயம் இல்லை.


அதுபோலத்தான் அருள்மறை குர்ஆனின் மேற்படி வசனத்திலும், அல்லாஹ் மலக்குகளுக்கு கட்டளையிடும்போது - இப்லீஸும் அங்கு இருந்ததால் - இப்லீஸுக்கு என்று தனியாக கட்டளையிட வேண்டிய அவசியம் இல்லை. அவ்வாறு இப்லீஸுக்கு என்று தனியாக கட்டளை இடாத காரணத்தால் - இப்லீஸும் - மலக்கு இனமோ என்று நம்மை எண்ணத் தூண்டுகிறது. ஆனால் இப்ல{ஸ் மலக்கு இனம் இல்லை. அவன் ஜின் இனத்தைச் சார்ந்தவன் என்பது அருள்மறை குர்ஆனின் 18வது அத்தியாயம் ஸுரத்துல் கஃபுவின் 50வது வசனத்திலிருந்து நாம் தெளிவாக அறியலாம். அருள்மறை குர்ஆனின் மற்ற எந்த வசனத்திலும் இப்ல{ஸ் மலக்கு இனம் என்று குறிப்பிடவில்லை என்பதாலும், அருள்மறை குர்ஆனின் 18வது அத்தியாயம் ஸுரத்துல் கஃபுவின் 50வது வசனம் இப்லீஸு ஜின் இனத்தைச் சார்ந்தவன் என்று தெளிவாக குறிப்பிடுவதாலும் - இப்லீஸு ஜின் இனத்தைச் சார்ந்தவன்தான் என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.


3. ஜின்களுக்கு அல்லாஹ்வின் கட்டளையை ஏற்கவோ அல்லது ஏற்காமல் இருக்கவோ உள்ள சுதந்திரம் உண்டு.
 
அடுத்து ஜின்கள் சுதந்திரமானவை. அவைகள் அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று நடக்கவோ அல்லது அல்லாஹ்வின் கட்டளையை நிராகரிக்கவோ உள்ள உரிமை உண்டு. ஆனால் மலக்குகளுக்கு அல்லாஹ் அற்த உரிமையை வழங்கவில்லை. மலக்குகள் அல்லாஹ்வின் கட்டளையை அப்படியே ஏற்று செயல்படக் கூடியவை. எனலே இப்லீஸ் மலக்கு இனமாக இருந்தால், அல்லாஹ்வின் கட்டளையை நிராகரிக்கும் செயலுக்கே இடமில்லை. இவ்வாறு அல்லாஹ்வின் கட்டளையை இப்லீஸ் ஏற்றுக் கொள்ளாமல் நிராகரித்ததிலிருந்தும் - இப்லீஸ் மலக்கு இனமல்ல, ஜின் இனம்தான் என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.



ARTICLE FROM OTRUMAI TEAM

Wednesday, July 6, 2011

ஹாரூனின் சகோதரியே! ... குர்ஆனில் முரண்பாடா ?

நம் அனைவர் மீதும் அல்லாஹ்வின் சாந்தி நிலவட்டுமாக!


இந்த நூற்றாண்டில்தான் எப்போதுமில்லாத அளவிற்கு இஸ்லாத்திற்கு எதிராக சிந்தனைரீதியான தாக்குதல்கள் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருப்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். குறிப்பாக மேற்கத்திய கிருத்தவ திருச்சபைகளும் அதன் ஊடகங்களும் இஸ்லாத்திற்கு எதிராக செய்து கொண்டிருக்கும் விஷமப்பிரச்சாரம் எழுத்தில் அடங்காதவை. அவர்களின் தவறான பிரச்சாரத்திற்கு இஸ்லாமிய அறிஞர்களால் எவ்வளவுதான் பதில்களும் விளக்கங்களும் அளிக்கப்பட்ட போதிலும் அவர்கள் தங்களை திருத்திக்கொள்வதாகத் தெரியவில்லை. இன்னும் கெடுவோம் பிறரையும் கெடுப்போம் - என்ன பந்தயம்? என்ற அளவில்தான் அவர்களின் நடவடிக்கைகள் உள்ளன.


அசத்தியத்திலுள்ள கிருத்துவர்கள் தங்களின் போலியான மதக்கோட்பாட்டை மற்றவர்களுக்கு கொண்டுசேர்ப்பதில் அவர்களுக்குள்ள ஆர்வமும் வேகமும் சத்தியத்;திலுள்ள முஸ்லிம்களிடம் இறைவனின் உண்மை மார்க்கத்தை பிறருக்கு எடுத்துச் சொல்வதில் இல்லை என்பது வருந்தத்தக்க ஓர் உண்மையாகும். இஸ்லாமியப் பிரச்சாரங்களின் அளவும் மதிப்பீடும் கிருத்துவர்களை ஒப்பிடுகையில் கடலின் அளவில் ஒரு கைப்பிடிநீர் போல்தான் காட்சியளிக்கிறது. இருப்பினும் உலகில் வேகமாக வளர்ந்துவரும் மார்க்கம் இஸ்லாம் என்பதை அறியும்போது 'என்றும் சத்தியமே வெல்லும்' என்பதை உணரமுடிகிறது.


  அதுபோல மேலும் ஒரு முரண்பாடு திருமறையின் 19 வது அத்தியாயம் (ஸுரா மர்யம்) வசனம் 28 ல் உள்ளதாக விவாதிக்கப்படுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் முதலில் கிருத்துவ உலகால் எழுப்பப்பட்ட இக்கேள்விக்கு தகுந்த விடையளிக்கப்பட்டுவிட்ட போதிலும் அவர்களின் கேள்வியில் சில மாற்றங்களை செய்து 'குர்ஆனில் முரண்பாடுள்ளது கண்டுபிடித்துவிட்டேன் இதோ பார்' என்ற ரீதியில் சிலர்களால் இப்போது இன்டர்நெட்மூலம் பிரச்சாரம் செய்யப்படுகிறது. அந்தோ பரிதாபம்! அத்தகைய சிந்தனையில் உள்ளவர்களுக்கு நாம் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறோம். அது ''நீங்கள் குர்ஆனை விளங்கவேண்டும் என்ற அடிப்படையில் திறந்த மனதுடன்; திருக்குர்ஆனை அனுகாததுவரை உங்களால் குர்ஆனை புரிந்து கொள்ள இயலாது. எனவே எப்படியாவது குர்ஆனை பொய்ப்படுத்திட வேண்டும் என்ற எண்ணத்தை கைவிட்டுவிட்டு குர்ஆனை விளங்கவேண்டும் என்ற சிந்தளையில் அனுகுங்கள். இல்லையேல் உங்களின் இம்முயற்சிக்கு ஆழ்ந்த அனுதாபங்களும் இரங்களும்தான் மிஞ்சும்''.



மர்யமா? ஹாரூனின் சகோதரியா?




பின்னர் (மர்யம்) அக்குழந்தையைச் சுமந்து கொண்டு தம் சமூகத்தாரிடம் வந்தார்; அவர்கள் கூறினார்கள்; ''மர்யமே! நிச்சயமாக நீர் ஒரு விபரீதமான பொருளைக் கொண்டு வந்திருக்கிறீர்!''. ''ஹாரூனின் சகோதரியே! உம் தந்தை கெட்ட மனிதராக இருக்கவில்லை; உம் தாயாரும் நடத்தை பிசகியவராக இருக்கவில்லை'' (என்று பழித்துக் கூறினார்கள்). (திருக்குர்ஆன் 19:27,28) என்று குர்ஆன் கூறுகிறது.



இதில் இறைவன் மர்யம் (அலை) அவர்களை ஹாரூனின் சகோதரியே என ஏன் அழைக்க வேண்டும்? ஏன் மர்யம் என்றோ நபி ஈஸா (அலை) வின் தாயாரே என அழைத்திருக்கக் கூடாது? ஹாரூன் என்பது நபி மூஸா (அலை) அவர்களின் சகோதரர் அல்லவா? அவர் மர்யம் (அலை) அவர்களுக்கு எப்படி சகோதரர் ஆவார். குர்ஆனை எழுதிய முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு இதுகூடத் தெரியவில்லையா? ..... என்று இவர்களின் ஆராய்ச்சி தொடர்கிறது.

 

இதே தொனியில் நம்மாலும் பல கேள்விகள் கேட்க இயலும். இருப்பினும் முதலில் மர்யம் (அலை) மற்றும் ஈஸா (அலை) அவர்களைப் பற்றி திருமறை கூறுவதை காண்போம் பின்னர் 19:27,28 வசனங்களின் விளக்கத்தை பார்ப்போம்.



மர்யமுக்கு அல்லாஹ் அளிக்கும் நற்சான்றிதழ்.

 

இறைநம்பிக்கையாளர்களுக்கு முன்மாதிரியும் கண்ணியவான்களின் கண்ணியவாளருமான அன்னை மர்யம் (அலை) அவர்களைப்பற்றி அல்லாஹ் தன் திருமறையில் கீழ்கண்டவாறு விளக்குகிறான்.


(நபியே!) இவ்வேதத்தில் மர்யமைப் பற்றியும் நினைவு கூர்வீராக! அவர் தம் குடும்பத்தினரை விட்டும் நீங்கி, கிழக்குப் பக்கமுள்ள இடத்தில் இருக்கும்போது, அவர் தம்மை அவர்களிடமிருந்து மறைத்துக் கொள்வதற்காக ஒரு திரையை அமைத்துக் கொண்டர். அப்போது நாம் அவரிடத்தில் நம் ரூஹை (ஜிப்ரயீலை) அனுப்பி வைத்தோம்; அவர் மர்யமிடம் சரியான மனித உருவில் தோன்றினார்.

மர்யம் ஜிப்ரயீலைக் கண்டதும், ''நிச்சயமாக நாம் உம்மை விட்டும் ரஹ்மானிடம் காவல் தேடுகிறேன்; நீர் பயபக்தியுடையவராக இருந்தால் என்னை நெருங்காதீர்'' என்றார்.

''நிச்சயமாக நான் உம்முடைய இறைவனின் தூதன்; பரிசுத்தமான புதல்வரை உமக்கு அளிக்க வந்துள்ளேன்'' என்று ஜிப்ரயீல் கூறினார்.

அதற்கு மர்யம், ''எந்த ஆடவனும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை பிசகியவளாக இல்லாதிருக்கும் நிலையிலும் எனக்கு எவ்வாறு புதல்வன் உண்டாக முடியும்?'' என்று கூறினார்.

''அவ்வாறேயாகும்; 'இது எனக்கு (அல்லாஹ்விற்கு) மிகவும் சுலபமானதே மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும், நம்மிடமிருந்து ஒரு ரஹ்மத்தாகவும் நாம் அவரை ஆக்குவோம்; இது விதிக்கப்பட்ட விஷயமாகும்' என்று உம் இறைவன் கூறுகிறான்'' என ஜிப்ரயீல் கூறினார்.

மர்யம் ஈஸாவை கருக்கொண்டார்; பின்னர் கர்ப்பத்துடன் தொலைவிலுள்ள ஓரிடத்தை சென்றடைந்தார். பின்பு அவருக்கு ஏற்பட்ட பிரசவ வேதனை அவரை ஒரு பேரீத்த மரத்தின்பால் கொண்டு வந்தது. ''இதற்கு முன்பே நான் இறந்து, முற்றிலும் மறக்கப் பட்டவளாகி இருக்கக் கூடாதா'' என்று மர்யம் வருந்தி கூறினார்.

அப்போது ஜிப்ரயீல் ''(மர்யமே!) கவலைப்படாதீர்கள்! உம்முடைய இறைவன் நிச்சயமாக உமக்கு கீழாலேயே ஒரு சின்ன ஆற்றை உண்டாக்கியிருக்கின்றான்'' என்று அழைத்து கூறினார். இன்னும், இந்த பேரீச்ச மரத்தின் கிளையைப் பிடித்து உம் அருகில் இழுத்துக் குலுக்கும்; (கொய்வதற்குப்) பக்குவமான பழங்களை உம் மீது அது உதிர்க்கும். ஆகவே, அவற்றை உண்டு, ஆற்று நீரைப் பருகி கண் குளிர்ந்து இருப்பீராக! பின்னர் எந்த மனிதரையேனும் நீர் பார்க்க நேரிட்டால், 'மெய்யாகவே அர்ரஹ்மானுக்காக நான் நோன்பிருப்பதாக நேர்ந்திருக்கின்றேன்; ஆதலின் இன்றைய தினம் எந்த மனிதருடனும் பேச மாட்டேன்'' என்று கூறும்.

பின்னர் (மர்யம்) அக்குழந்தையைச் சுமந்து கொண்டு தம் சமூகத்தாரிடம் வந்தார்; அவர்கள் கூறினார்கள்; ''மர்யமே! நிச்சயமாக நீர் ஒரு விபரீதமான பொருளைக் கொண்டு வந்திருக்கிறீர்! ஹாரூனின் சகோதரியே! உம் தந்தை கெட்ட மனிதராக இருக்கவில்லை உம் தாயாரும் நடத்தை பிசகியவராக இருக்கவில்லை'' என்று பழித்துக் கூறினார்கள்.

ஆனால் மர்யம் இதுபற்றி தம் குழந்தையிடமே கேட்கும் படி அதன்பால் சுட்டிக் காட்டினார். ''நாங்கள் தொட்டிலில் இருக்கும் குழந்தையுடன் எப்படிப் பேசுவோம்?'' என்று மக்கள் கூறினார்கள்.

''நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கின்றேன்; அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றான்; இன்னும், என்னை நபியாக ஆக்கியிருக்கின்றான். இன்னும், நான் எங்கிருந்தாலும், அவன் என்னை நற்பாக்கியமுடையவனாக ஆக்கியிருக்கின்றான். மேலும், நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும், ஜகாத்தையும் நிறைவேற்ற எனக்கு வஸீயத் செய்து (கட்டளையிட்டு) இருக்கின்றான். என் தாயாருக்கு நன்றி செய்பவனாக என்னை ஏவியிருக்கின்றான்;. நற்பேறுகெட்ட பெருமைக்காரனாக என்னை அவன் ஆக்கவில்லை. இன்னும், நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிர் பெற்று எழும் நாளிலும் என் மீது சாந்தி நிலைத்திருக்கும்'' என்று அக்குழந்தை கூறியது.

இத்தகையவர்தாம் மர்யமுடைய புதல்வர் ஈஸா ஆவார்;. எதைக் குறித்து அவர்கள் சந்தேகம் கொண்டிருக்கிறார்களோ அதுபற்றிய உண்மையான சொல் இதுவே ஆகும். அல்லாஹ்வுக்கு எந்த ஒரு புதல்வனையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை அவன் தூயவன்; அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், ''அகுக!'' என்று தான் கூறுவான்; உடனே அது ஆகிவிடுகிறது. நிச்சயமாக அல்லாஹ்வே (படைத்துப் பரிபக்குவப்படுத்தும்) என்னுடைய இறைவனாகவும், உங்களுடைய இறைவனாகவும் இருக்கின்றான்; ஆகையால், அவனையே நீங்கள் வணங்குங்கள்; இதுவே நேரான வழியாகும்'' என்று நபியே! நீர் கூறும். (திருக்குர்ஆன் 19 : 16-36).

'ஹாரூனின் சகோதரியே!' என்பதின் விளக்கம் என்ன?


அக்காலத்தில் சிறந்த குடும்பத்தில் பிறந்த மர்யம் (அலை) அவர்கள் இறைவனின் கட்டளைபடி அதிசயமான முறையில் எந்த ஆணின் துணையின்றி நபி ஈஸா (அலை) அவர்களைப் பெற்றெடுக்கிறார்கள். மர்யம் (அலை) அவர்கள் பெற்ற குழந்தையோடு அந்த சமூகத்தில் வந்தபோது மர்யம் (அலை) அவர்கள் மீது சந்தேகம்கொண்ட அம்மக்கள், மர்யமே! நிச்சயமாக நீர் ஒரு விபரீதமான பொருளைக் கொண்டு வந்திருக்கிறீர்!. ஹாரூனின் சகோதரியே! உம் தந்தை கெட்ட மனிதராக இருக்கவில்லை உம் தாயாரும் நடத்தை பிசகியவராக இருக்கவில்லை என்று பழித்துக் கூறினார்கள்.

இங்கு சகோதரி என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள அரபி மூலச்சொல் 'உஹ்த ஹாரூன்' என்பதாகும். அரபி மொழியில் சகோதரன் என்ற சொல் தன்னுடன் பிறந்தவரை மட்டும்தான் குறிக்கும் என்றில்லை. ஒரு குலத்தைச் சார்ந்தவரை அக்குலத்தின் சகோதரர் என்று சொல்வது அரபி மொழி வழக்கமாகும். ஹாரூனின் சகோதரியே! என்று ஊர் மக்கள் அழைத்ததாக குர்ஆன் கூறுவதின் கருத்து ''நம்மில் மதப்பற்றுள்ள ஓர் உயர் குலத்தில் பிறந்த பெண்ணாகிய நீ என்ன காரியம் செய்துவிட்டாய் ?'' என்பதாகும்.

நபி (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு 600 வருடங்களுக்கும் முன்பாக வாழ்ந்தவர்களின் சரிதையாகும் இது. அல்லாஹ் தன் வேதங்களை நபிமார்களுக்கு அருளும்போது அந்தந்த நபிமார்களோடு அப்போது வாழும் மக்கள் எந்த மொழியைப் புரிந்து கொள்வார்களோ அந்த மொழியில்தான் அருளியுள்ளான். நபி ஈஸா (அலை) அவர்களுக்கு இன்ஜில் வேதம் சுர்யானி (அராமிக்) என்று அழைக்கப்பட்ட அம்மக்களின் தாய்மொழியில் அல்லாஹ் அருளினான். நபி ஈஸா (அலை) அவர்களுக்கு இன்ஜில் வேதம் அரபி மொழியில் இறக்கப்படவில்லை என்பதை வைத்து, மர்யம் (அலை) அவர்களை ஹாரூனின் சகோதரியே! என்று அழைத்த அம்மக்களின் மொழியும், தன் தொட்டில் பருவத்தில் அம்மக்களிடம் பேசிய நபி ஈஸா (அலை) அவர்களின் மொழியும் அரபி இல்லை என்பதை விளங்க முடிகிறது.

மேலும் ஹாரூனின் சகோதரியே! என்று அல்லாஹ் அழைக்கவில்லை மாறாக அம்மக்கள்தான் அன்று அவ்வாறு அழைத்ததாக அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான் என்பதையும் கவனிக்கவேண்டும். மர்யம் (அலை) அவர்களை ''மதப்பற்றுள்ள ஹாரூனின் உயர் குலத்தில் பிறந்தவளே'' என்ற பொருளில் அம்மக்கள் அன்று அவர்கள் மொழியில் அழைத்ததை அரபிமொழியில் இறங்கிய குர்ஆனில் நபி (ஸல்) அவர்களோடு வாழ்ந்த அரபியர்கள் தங்கள் தாய்மொழியில் ''பரம்பரை'' என்ற சொல்லை எவ்வாறு புரிந்துகொள்வார்களோ அப்படித்தான் கூறவேண்டும். எனவேதான் ஹாரூனின் குலத்தைச் சார்ந்தவர் என்ற பொருள்படும் அரபி மூலச்சொல்லான 'உஹ்த ஹாரூன்' என்ற பதத்தை அல்லாஹ் பயன்படுத்தியுள்ளான்.

இதில் ஹாரூன் என்பவர் நபி மூஸா (அலை) அவர்களின் உடன்பிறந்த சகோதரரா? என்ற சந்தேகம் வரலாம். ஆனால் ஹாரூன் என்பவர் அக்காலத்தில் வாழ்ந்த மதப்பற்றுள்ள, உயர் குலத்தில் பிறந்த, செல்வாக்குமிக்க நல்ல மனிதர் என்றும் இறை நம்பிக்கை விஷயத்தில், ஓரிறைக்கொள்கையில் மர்யம் (அலை) அவர்களைப் போன்று தெளிவும் பிடிப்பும் கொண்டவராக வாழ்ந்தவர் என்றும் குர்ஆன் விரிவுரையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஒரு வாதத்திற்காக ஹாரூனின் சகோதரியே! என்பதில் ஹாரூன் என்பவர் நபி மூஸா (அலை) அவர்களின் உடன்பிறந்த சகோதரர் என்று வாதிட்டாலும் அதிலும் குர்ஆன் முரண்படுவதாகக் கூற இயலாது. ஏனெனில் அல்லாஹ் மற்றொரு வசனத்தில் கூறுகிறான்..

 



ஆதமையும், நூஹையும், இப்றாஹீமின் சந்ததியரையும், இம்ரானின் சந்ததியரையும் நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தாரை விட மேலாக தேர்ந்தெடுத்தான்.(அவர்களில்) ஒருவர் மற்றவரின் சந்ததியாவார் - மேலும், அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.(திருக்குர்ஆன் 3:33,34)

ஆதம், நூஹ், இப்றாஹீம் மற்றும் இம்ரானின் (அவர்கள் அனைவர்மீதும் அல்லாஹ்வின் சாந்தி நிலவட்டுமாக) சந்ததியினரிடையே பரம்பரை ரீதியான குடும்பத் தொடர்பு உள்ளதை அல்லாஹ் இங்கு சுட்டிக்காட்டுகின்றான். நபி மூஸா (அலை) அவர்களும், நபி ஈஸா (அலை) அவர்களும் நபி இப்ராஹிம் (அலை) அவர்களுடைய வழித்தோன்றல்களாக நபி இஸ்ஹாக் (அலை) அவர்களின் பரம்பரையில் பிறந்தவர்கள்.

எனவே நபி மூஸா (அலை) அவர்களின் சகோதரரான ஹாரூன் (அலை) அவர்களும் நபி ஈஸா (அலை) அவர்களுடைய தாயார் மர்யம் (அலை) அவர்களும் பரம்பரையின் மூலம் சகோதர சகோதரிகளாவர். எனவே ஹாரூன் என்பவர் நபி மூஸா (அலை) அவர்களின் உடன்பிறந்த சகோதரர் என்று வாதிட்டாலும் அதிலும் குர்ஆன் முரண்படவில்லை என்பதை விளங்களாம்.

எழுத படிக்கத்தெரியாத நபி (ஸல்) அவர்கள் குர்ஆனை தானாக கற்பனையில் எழுதினார் என்பது உண்மையானால் தன்னை விட பல ஆயிரம் வருடங்கள் முன் வாழ்ந்தவர்களின் பரம்பரைகள் பற்றிய உண்மைகள் முதல் இன்று நிகழ்ந்து கொண்டிருக்கின்ற நவீன விஞ்ஞான மாற்றங்கள், கண்டுபிடிப்புகள் வரை மிகத் துள்ளியமாக விளக்கிட முடியாது. எனவே குர்ஆனை எழுதியது முஹம்மது நபி (ஸல்) அவர்களல்ல மாறாக அல்-குர்ஆனில் ஆசிரியர் அனைத்துலகையும் படைத்த அல்லாஹ்தான் என்பதை இதிலிருந்து விளங்கிட முடிகிறது.


'ஹாரூனின் சகோதரியே!' என்ற சொல் அறிவுப்பூர்வமானதா?



மகனே' 'மக்களே' 'சகோதரியே!' என்பனபோன்ற சொல்வழக்கு தமிழ்மொழியிலும் ஆங்கிலத்திலும் கூட, நம்மால் பெறப்படாத நம்முடன் பிறக்காத பிறருக்கும் அழைப்பு வாக்கியத்தில் பொருந்தும். உதாரணமாக ஒரு மேடைப் பேச்சாளன் தன் பெற்றோர் மற்றும் மனைவி மக்கள் இருக்கும் அவையில் தன் உரையை 'சகோதர சகோதரிகளே' என்று துவங்குகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது அங்குள்ள அவர் தந்தையையும் மகனையும் அவன் உடன் பிறந்த சகோதரர் என்றா நாம் பொருள் கொள்வோம்? அல்லது சகோதரிகளே என்று அவர் அழைத்ததால் அவரது மனைவியும் தாயும் அவருக்கு சகோதரிகளாகி விடுவார்களா?. இல்லை 'சகோதர சகோதரிகளே' என்று அவர் அழைத்தது மரியாதைக்குரிய அழைப்பாகத்தான் நாம் புரிந்து கொள்வோம்.

''ஹாரூனின் சகோதரியே! உம் தந்தை கெட்ட மனிதராக இருக்கவில்லை உம் தாயாரும் நடத்தை பிசகியவராக இருக்கவில்லை'' என்று அம்மக்கள் கூறியதிலிருந்து ஹாரூன் மற்றும் மர்யம் (அலை) அவர்களின் பெற்றோர் மிக்க கண்ணியத்துடன் அக்காலத்தில் வாழ்ந்ததை அறியமுடிகிறது. மர்யம் (அலை) அவர்களை நடத்தை கெட்டவராக நினைத்த அம்மக்கள் ஹாரூனின் சகோதரியே! உம் தந்தை கெட்ட மனிதராக இருக்கவில்லை உம் தாயாரும் நடத்தை பிசகியவராக இருக்கவில்லை என்று கூறியது மனிதஅறிவில் வெளிப்படும் யதார்த்த வார்த்தைகள்தாம்.

உதாரணமாக ஹிட்டருடைய பேரன் ஒருவரை கொலை செய்துவிட்டான் என்று வைத்துக்கொள்ளுங்கள் அவரை நீ ஹிட்லருடைய பேரனாயிற்றே நீ கொலை செய்யலாமா? என்று வருந்தமாட்டோம். மாறாக பாட்டனுக்கு மகன் தப்பாமல் பிறந்திருக்கிறான் என்றுதான் கூறுவோம். ஏனெனில் ஹிட்லர் ஆயிரக்கணக்கான யூதர்களைக் கொலை செய்தவர். அதே நேரத்தில் காந்தியுடைய பேரன் ஒரு கொலையை செய்துவிட்டால் நாம் அவ்வாறு வருத்தப்படுவதில் அர்த்தம் இருக்கும். ஏனெனில் காந்தியடிகள் அகிம்சை வழியை தன்கொள்கையாகக் கொண்டவர்.

எனவே மர்யம் (அலை) அவர்கள் மீதும் அவர்கள் குழந்தைமீதும் சந்தேகம்கொண்ட அம்மக்கள், மர்யமே! அல்லது ஈஸாவின் தாயாரே என்று அழைப்பதைவிட ஹாரூன் மற்றும் மர்யம் (அலை) அவர்களின் பெற்றோர்களை தொடர்புபடுத்தி அழைப்பதுதான் அறிவுப்பூவமானது. ஏன் மர்யம் என்றோ நபி ஈஸா (அலை)ன் தாயாரே என்றோ அழைத்திருக்கக் கூடாது? என்று வினவுவதுதான் மடமையேதவிர ஹாரூனின் சகோதரியே என்ற அம்மக்களின் அழைப்பை குர்ஆன் தெரிவிப்பது 100மூ அறிவுப்பூர்வமானதுதான்.

அதுபோல Sun என்ற ஆங்கில வார்த்தை வழித்தோன்றல், பரம்பரை (descendant) என்ற பொருளிலும் கையாளப்படும். உதாரணமாக பைபிளில் நபி ஈஸா (அலை) அவர்களை தாவுத் (அலை) அவர்களின் மகனாகவும், நபி யூசுப்(அலை) அவர்களின் மகனாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.

"Jesus Christ, the son of David,....". [Mathew 1:1]

"And Jesus himself began to be about thirty years of age, being (as was supposed) the son of Joseph, ....." [Luke 3:23]


மேற்காணும் Sun என்ற ஆங்கில வார்த்தையை வழித்தோன்றல் அல்லது பரம்பரை என்ற பொருளில் 'ஏசு தாவிதின் வழித்தோன்றல்' என்றுதான் புரிந்துகொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாமல் 'மகன்' என்ற நேரிடையான பொருள்கொள்ள முடியாது. அவ்வாறு பொருள் கொண்டால் நபி ஈஸா (அலை) அவர்களை கண்ணியப்படுத்துவதாக அமையுமா? அல்லது அவர்களை கேவலப்படுத்துவதாக அமையுமா? ஒருவருக்கு இரண்டு தகப்பன் என்பதின் பொருள் என்ன? 'ஹாரூனின் சகோதரியே! ' என்ற திருக்குர்ஆன் வசனத்தை முரண்பாடு என்று கருதுபவர்களும், கிருத்துவ திருச்சபைகளும் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளார்கள்.

''இந்தக் குர்ஆனையும், இதற்கு முன்னுள்ளதையும் நிச்சயமாக நாங்கள் நம்பமாட்டோம்'' என்று கூறும் இறைமறுப்பாளர்கள் தங்கள் இறைவனிடம் நிறுத்தப்படும் போது நீர் பார்ப்பீரானால் அவர்களில் சிலர் சிலர் மீது குற்றம் சுமத்திக் கொண்டிருப்பார்கள். உலகில் பலஹீனர்களாகக் கருதப்பட்டவர்கள் பெருமையைத் தேடிக் கொண்டிருந்தோரை நோக்கி, ''நீங்கள் இல்லாதிருப்பின், நிச்சயமாக நாங்கள் முஃமின்களாகியிருப்போம்'' என்று கூறுவார்கள்.

பெருமை தேடிக் கொண்டிருந்தவர்கள், பலஹீனர்களாகக் கருதப்பட்டவர்களிடம், ''உங்களிடம் நேர்வழி வந்தபின், அதை விட்டும் உங்களை நாங்களோ தடுத்தோம்? அல்ல! நீங்கள் தாம் நேர்வழியை ஏற்காத குற்றாவளிகளாக இருந்தீர்கள்'' என்று கூறுவார்கள்.

அதற்கு பலஹீனர்களாகக் கருதப்பட்டவர்கள் பெருமை தேடிக் கொண்டவர்களிடம், ''அப்படியல்ல! நீங்கள் தாம் இரவும் பகலும் சூழ்ச்சி செய்து, நாங்கள் அல்லாஹ்வை நிராகரித்து விட்டு, அவனுக்கு இணைவைக்குமாறு ஏவினீர்கள்'' என்று கூறுவார்கள்...
(திருக்குர்ஆன் 35:31-33)


 

அல்லாஹ் மிக்க விளங்கியவன்.
ARTICLE BY IBNU KURAISH
OTRUMAI TEAM