உமர் இப்னு கத்தாப் [ரலி],அபூபக்கர் [ரலி] அவர்களின் பின் இஸ்லாமிய இராஜ்ஜியத்தின் கலீபாவாக பதவி ஏற்றார்.இவர் கைப்பட்ட்ரப் பட்ட நாடுகளின் மக்களுடன் நீதியுடன் நடந்து அவர்களோடு ஒப்பந்தகள் செய்து கொண்டார்.இந்த ஒப்பந்தங்கள் ஒவ்வொன்றும் நீதிக்கும் பொறுமைக்கும் எடுத்துக்காட்டாக இருந்தது.உதாரணமாக ஜெருசலேத்திலும் லோத்திலும் பாதுகாப்பு அளித்து வெளியிட்ட அறிக்கையில் கிருஸ்துவ தேவாலயங்கள் அளிக்கப்பட மாட்டா என்றும் முஸ்லிம்கள் கூட்டுத் தொழுகைக்கு பயன்படுத்த மாட்டார்கள் என்றும் உமர் [ரலி] உறுதி வழங்கினார்கள்.இதே வாக்குறுதியை பெத்லஹெம் கிருஸ்துவ மக்களுக்கும் உமர் [ரலி] வழங்கினார்கள்.
மேதைன் நகரைக் கைப்பற்றியதும் தலைமை குருவான பேசுவாவிடம் கொடுக்கப்பட்ட பாதுகாப்பு அறிக்கையில் கிருஸ்துவ ஆலயங்கள் அழிக்கப்படமாட்டாது என்றும் அவை வீடாகவோ பள்ளிவாசல்கலாகவோ மாற்றப்படமாட்டாது என்று உமர் [ரலி] வாக்குறுதி வழங்கினார்கள்.இந்நகரை முஸ்லிம்கள் கைப்பற்றிய பின் இந்நகரின் தலைமை குரு பாரசீக பிஷப்புக்கு எழுதிய கடிதம் மிக முக்கியம் வாய்ந்தது.அந்தக் கடிதம் வருமாறு,
"இந்தக் காலத்தில் இவ்வுலகின் ஆட்சிப் பொறுப்பு இறைவனால் வழங்கப்பட்டிருக்கும் அராபியர்கள்,கிருஸ்துவ மதத்திக்கு தொல்லை கொடுப்பதில்லை.உண்மையில் அவர்கள் அதற்கு சலுகை அளிக்கிறார்கள்.நம்முடைய மத குருமார்களையும் கர்த்தாவின் திருதொண்டர்களையும் கண்ணியப்படுத்துகிரார்கள்.துறவி மடங்களுக்கு ஊதியம் வழங்குகின்றனர்."
உண்மையான இறை நம்பிக்கையாளர்கள் நீதியையும் பொறுமையையும் எவ்விதம் புரிந்து கொண்டுல்லார்களை தெளிவுபடுத்தும் எடுத்துக்காட்டுகள் இவையாவும்.ஓர் இறை வசனத்தின் மூலம் அல்லாஹ் இவ்வாறு ஏவுகிறான்,
"நம்பி உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்புவித்து விடவேண்டுமென்றும், மனிதர்களிடையே தீர்ப்பு கூறினால் நியாயமாகவே தீர்ப்புக் கூறுதல் வேண்டும் என்றும் உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் கட்டளையிடுகிறான்; நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு (இதில்) மிகவும் சிறந்த உபதேசம் செய்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான். "[ 4:58 ]
No comments:
Post a Comment