போர் நடவடிக்கைகள் மேற்கொள்ள பயன்படுத்துவதட்கு ஏதுவாக உலகில் உள்ள வெவ்வேறு பகுதிகளையும் இராணுவ நடவடிக்கைகளுக்காக அல்லது எண்ணெய் வளச் சுரண்டலுக்காக அமெரிக்க ஆதிக்க வெறி மேற்கொள்ள திட்டமிட்டுள்ள இராணுவ கண்காணிப்புக்கு ஆதரவு தேடப் பிரயோகிக்கும் சாதுர்யமான தந்திர மொழிதான் "பயங்கரவாதத்துக்கு எதிரான போர்" ( WAR ON TERRORISM ) எனும் சொற்றொடர்.
ஈராக்கை விடுதலை செய்ய மேற்கொண்ட நடவடிக்கை பெரும் அழிவை ஏற்படுத்தும் ஆயுதங்கள் வைக்கப்பட்டிருப்பதாக கூறி முடிக்கி விடப்பட்டதாகும்.ஆனால் பெரும் தோல்வியை சந்தித்தது.ஏனெனில் அத்தகைய ஆயுதங்கள் அங்கு காணப்படவில்லை.U.N. பார்வையாளர்களின் பரிந்துரைகள் புறக்கணிக்கப்பட்டு போர் தொடுக்கப்பட்டது.ஈராக்கின் மக்களே அதனை கடுமையாக எதிர்த்தனர்.யதார்த்தத்தில் இது ஈராக் மக்கள் மீது தொடுக்கப்பட்ட போராகவே அமைந்தது.யதார்த்தத்தில்,அண்மைக் காலமாக மாபெரும் பயங்கரவாத அரசாக திகழ்வது அமெரிக்காதான்.தனது அரசியல் மற்றும் பொருளாதார ஆதாயங்களுக்காக,அப்பாவி மக்களை கொண்டு குவிப்பது அமெரிக்காதான்.அமெரிக்காவின் கொள்கைகளை ஏற்று செயல்படுகின்ற பன்னாட்டு கூட்டணி நாடுகள் எல்லாமே ஆதாயம் பெரும் நோக்கில் மேலை நாடுகள் அல்லாத ஏனைய நாடுகளில் வசிக்கும் மக்களின் உயிர்களைப் பற்றி கவலைப்படுவதே இல்லை.மேற்கு ஆசியாவில் அண்மைக்காலமாக நடைபெறும் நிகழ்வுகள் இதையே கூறுகிறது.
No comments:
Post a Comment