Wednesday, May 4, 2011

தலைவரை பின்பற்றுங்கள் - ஒரு நவீன நீதிக்கதை

ஒரு வீதியில் அணிவகுப்பொன்று சென்று கொண்டிருந்தது.அதனைப் பார்த்துக் கொண்டிருந்த கூட்டத்திலிருந்து ஒரு குரல் அலறுவது கேட்டது,

            ""மடையர்களே கவனமாக இருங்கள் நீங்கள் பிழையான வழியில் செல்கிறீர்கள்.இந்தப் பாதையில் திடர்ந்து செல்ல முடியாது.இப்பாதையின் மறுமுனை உடைக்கப்பட்டுள்ளது.""

அணிவகுப்பில் சென்றவர்கள் தயங்கி நின்றனர்.கலவரம் அடைந்தனர்.ஆனால் அதெப்படி சாத்தியம் ஆகும் ???

அங்கே கம்பீரமாகவும் பெருமையாகவும் அவர்களின் அழகான தலைவர் சென்று கொண்டிருந்தார்.அவர் கட்டாயம் சரியான பாதையில் தான் போய்க் கொண்டிருக்கிறார்.ஆம் நிச்சயமாக சரியான பாதையில் அவர் செல்கிறார் என்று அவர்கள் சிந்தித்தனர்.

எனவே அவர்கள் தொடர்ந்து அணிவகுத்துச் சென்றனர்.

அழகான தலைவர் கொஞ்சம் தயங்கினார்.கலவரம் அடைந்தார்.ஆனால் அதெப்படி சாத்தியம் ஆகும்???என அவர் யோசித்தார்.யாரும் அறியாதவாறு பின்னோக்கிப் பார்த்தார்.

     ""நான் சரியான பாதையில் தான் செல்கிறேன் ஏனெனில்,என்னை எத்தனைப் பேர் பின்தொடர்கிறார்கள் பாருங்கள்.ஆம் நிச்சயமாக நான் சரியான பாதையில் தான் செல்கிறேன்""என அவர் நினைத்தார்.

         எனவே அவர் (அழிவை நோக்கி ) அணிவகுத்துச் சென்றார்.

இளைஞர்களே !!!  இதன் படிப்பினை என்ன ?  இந்த கதை இன்றைய காலத்தை பட்டவர்த்தமாக பிரதிபலிக்கிறது 

(Hisham Al Thalib - Training Guide For Islamic Workers)

No comments:

Post a Comment