Tuesday, May 10, 2011

துணிவுடன் கொள்கை முழக்கமிடல்

     குகைவாசிகளின் வரலாற்றை பதினெட்டாம் அத்தியாயம் சூரத்துல் கஹ்ப் விவரிக்கிறது.இவ்வத்தியாயத்தின் ஒன்பதாம் வசனம் முதல் இருபத்தாறாவது வசனம் வரை ஏகத்துவ முழக்கமிட்ட சில இளைஞர்களின் வரலாற்றை மிகவும் சுருக்கமாகவும் விறுவிறுப்பாகவும் கூறப்படுகிறது.அந்த இளைஞர்கள் குகையின்பால் ஒதுங்கியதால் இவ்வத்தியாயம் சூரத்துல் கஹ்ப் என்று பெயரிடப்பட்டுள்ளது.

       குறிப்பிட்ட சில இளைஞர்கள் தம் சமூகத்தில் காணப்பட்ட இறைநிராகரிப்பில் வெறுப்படைந்து,அத் தவறான கருத்துக்கு எதிராக போராட முனைந்து.தமது கொள்கையை உறுதியாக முழக்கமிடுகின்றனர்.தாம் கொண்ட ஏகத்துவ கொள்கையை எந்த நிலைமையிலும் மறைக்க கூடாது என்பதற்கு இவர்களின் வரலாற்றில் சிறந்த படிப்பினை உண்டு.

     ''(நபியே!) நாம் உமக்கு அவர்களுடைய வரலாற்றை உண்மையைக் கொண்டு அறிவிக்கிறோம்; நிச்சயமாக அவர்கள் இளைஞர்கள் - தங்கள் இறைவன் மீது ஈமான் கொண்டார்கள்; இன்னும் நாம் அவர்களை நேர் வழியில் அதிகப்படுத்தினோம்.''(18:13)

     ''அவர்கள் (கொடுமைக்கார அரசன் முன்னிலையில்) எழுந்து நின்று “வானங்களுக்கும், பூமிக்கும் இறைவனாகிய அவனே, எங்களுடைய இறைவன்; எக்காலத்தும் அவனையன்றி வேறு எவரையும் நாயனென்று அழைக்க மாட்டோம்; (அப்படிச் செய்தால் குஃப்ரில் கொண்டு சேர்க்கும்) - வரம்பு மீறியதைச் சொன்னவர்கள் ஆவோம்” என்று அவர்கள் உறுதியாகக் கூறிய நிலையில் அவர்கள் இதயங்களை நாம் வலுப்படுத்தினோம்''(18:14)

      கொள்கை முழக்கமிட்டபோது சவால்களை எதிர்நோக்க வேண்டிய நிலை வந்ததால் தம்மையும் தாம் ஏற்றுக்கொண்ட ஏகத்துவ கொள்கையையும் பாதுகாக்க குகையில் ஒதிங்கிக் கொள்கின்றனர்.அந்த இளைஞர்கள் எத்தனைப் பேர்,எவ்வளவு காலம் தங்கினார்கள் போன்ற தகவல்களை விரிவாக வழங்காமல் அவர்கள் எவ்வளவு துணிவுடன் தாம் கொண்ட ஏகத்துவ கொள்கைக்காக போராடினார்கள் என்பதை மட்டும் அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.
   
        அல்குரானின் வரலாற்று தத்துவங்களை நாங்கள் ஆழ்ந்து படிக்கும் பொது மனித இனத்தின் ஆத்மீக வரலாற்றிலே நபிமார்களுடைய ஏகத்துவ பிரச்சார வரலாற்றிலே அவர்கள் உருவாக்கிய எழுச்சி மிக்க உன்னத சமூகங்களின் வரலாற்றிலே இளைஞர்கள் எத்தகைய மகத்தான அந்தஸ்தைப் பெற்றுள்ளார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.

இஸ்லாத்தின் நிழலில் இளைஞர்கள் என்ற நூலிலிருந்து

No comments:

Post a Comment