Friday, May 6, 2011

மதச்சார்பின்மையும் இளைஞர்களும்

   இஸ்லாமிய இளைஞர்கள் எதிர்நோக்கும் கொள்கைப் பிரச்சினைகளுள் மதச்சார்பற்ற சிந்தனையும் ஒன்றாக இன்று தாக்கம் செலுத்துகின்றது.இஸ்லாமிய இளைஞர்களை கொள்கையிலிருந்து கடத்திச் சென்று,கொள்கையற்ற கோமாளிகளாக மாற்றுகின்ற சதினாஷ நடவடிக்கைகள் இன்று முஸ்லிம் கிராமங்களிலும் இடம்பெறும் இவ்வேளையில் - அது பற்றி நாம் கட்டாயம் அறிந்து கொள்ளவேண்டும்.
   அறிவியலும் தொழில்நுட்பமும் மாபெரும் வளர்ச்சியுற்று மனித வாழ்வில் மிகப் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன.அவை பகுத்தறிவுக்குக் சிந்தனைக்கும் ஆராய்ச்சிகளுக்கும் களம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளன.
     அதனால்,மத நம்பிக்கையின் செல்வாக்கு மறைந்து பகுத்தறிவினைநாடி எழுந்துள்ள அறிவியல்,விஞ்ஞான தொழில்நுட்ப யுகம் தோன்றி ஆதிக்கம் செலுத்தும் புத்துலகம் ஏற்பட்டு விட்டதாக மனித மனங்களில் ஒரு பிரமை தோற்றுவிக்கப்பட்டுலதை இன்று பரவலாக அவதானிக்க முடிகிறது.
     இதன் விளைவாக மதச்சார்பின்மை (SECULARISM)  என்ற சிந்தந்ததை ஆதிகளவில் பிரச்சாரப்படுத்தி,இளைஞர்களை அதிகளவில் கவர்வதொடு,இறை நம்பிக்கையின் அடித்தளத்தில் கட்டி எழுப்பப்பட்டுள்ள மதங்களை கொச்சைபடுத்துவதும் ஒழுக்கப் பெறுமானங்கள்,வணக்க வழிபாடுகள்,எள்ளி நகையாக்கப்பட்டு,உயர் ஒழுக்க விழிமியங்கள் மலினப்படுத்தப்படுகின்ர காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம்.
         ஆனால் அறிவுபூர்வமான கருத்துக்களை தன்னகத்தே கொண்டு,காலத்தை வென்று,வளர்ச்சி அடைந்து வரும் இஸ்லாத்தையும்,சிறுமைத்தனமான சித்தாந்தங்களில் சிறைப்பட்டுப் போன சிலர் பத்தோடு பதினொன்றாக விமர்சித்தும் கொச்சைப்படுத்தியும் வருகின்றனர்.நமது இளம் பிஞ்சுகளின் உள்ளங்களில்  நஞ்சை விதைக்கின்றனர்.எனவே நாம் இந்த சதிவலையிலிருந்து மீள இது பற்றி தெளிவு அவசியமாகின்றது.
         இன்றைய உலகப் பிரச்சினைகளுக்கு மதச்சார்பின்மை ஒரு தீர்வாக வைக்கப்படுகிறது.எனினும் பல வளர்ச்சி கண்டதாக இருமாந்திருக்கும் நாடுகளில் கூட இந்த சிந்தனை நடைமுறை பிரச்சினைகளுக்கான தீர்வாக அமையவில்லை என்பது நிரூபமான இந்தக்காலப்பிரிவில்அந்நாடுகளில் ஒரு கணிஷமனவர்களும் முஸ்லிம் சமூகத்தில் படித்த ஒரு பிரிவினரும் இளைஞர்கள் சிலரும் இச்சிந்தனைக்கு உட்பட்டு இதை பிரபலப்படுத்தியும் முக்கியம் கொடுத்துப் பேசியும் வருகின்றனர்.
            இன்று ஷிர்க்,பிதுஅத்,மூடநம்பிக்கை போன்றவைகளைவிட மதச்சார்பின்மைச் சிந்தனை முஸ்லிம் வீடுகளில் கிராமங்களில் பாடசாலைகளில் பல்கலைக்களகங்களில் ஆகிய அனைத்திலும் நுழைந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.எனவே மதச்சார்பின்மை கருத்தியலின் தோற்றம்,காரணம்,அதுபற்றி சமூக உளவியல் சார்ந்தோரின் கருத்து போன்றவை வரும் ஆக்கங்களில் தரப்படுகிறது. 

தொடரும்  ..................

  இஸ்லாமிய நிழலில்இளைஞர்கள் நூலிலிருந்து


No comments:

Post a Comment