Sunday, May 8, 2011

பாவமன்னிப்பு

''ஆகவே, நீர் பொறுமையுடன் இருப்பீராக. நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உறுதியுடையதாகும். உம் பாவத்திற்காக மன்னிப்புக் கோருவீராக; மாலையிலும் காலையிலும் உம் இறைவனைப் புகழ்ந்து, தஸ்பீஹு (துதி) செய்து கொண்டு இருப்பீராக!'' (40:55)


 மூசா நபியவர்களை பனு இஸ்ராயிலுக்கு நபியாக அல்லாஹ் அனுப்பினான்.தவ்ராத் வேதத்தையும் வழங்கினான்.ஆனால் அவர்களுக்கெதிராக மும்முனை தாக்குதல் நடத்தினர் பிரவ்ன்,ஹாமான்,காரூன் குழுவினர்.எனினும் அல்லாஹ் நபி மூஸா அவர்களுக்கே இறுதி வெற்றியை வழங்கினான்.இறுதி வெற்றி ஹிஸ்புல்லாஹ் - அல்லாஹ்வின் கூட்டத்தினருக்கே என்று உறுதி சொல்லி நபியவர்கள் இரவு,பகல் தொழுது பாவமன்னிப்பு தேடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.பாவமான்னிப்புத்தேடுமாறு சொன்னதில் நபிகள் நாயகம்(ஸல்) பாவம் செய்துவிட்டார்கள் என்று பொருளல்ல.மக்காவில் முஷ்ரிக்குகளும் மதீனாவில் யகூதிகளும் நபியவர்கள் ஏதாவது பாவம் செய்யமாட்டார்களா? அவற்றை மக்களிடத்தில் அம்பலப்படுத்தலாமே என்று துடித்துக்கொண்டிருன்தனர்.ஆனால் அவர்களுக்கோ ஏமாற்றமே மிஞ்சியது.நபியவர்களின் உயரிய வாழ்வு முறை சுற்றியுள்ள மக்களுக்கு தெரிந்துதான்இருந்தது.

           பாவமன்னிப்புத் தேடுமாறு அவர்கள் சொன்னது உயரிய கருத்தின் அடிப்படையிலாகும்.நாங்கள் பாவத்தின் நிழல் கூட எம்மீது விழாமல் பாதுகாப்பாக இருக்கவேண்டும்,அப்படி ஏதாவது பாவம் நம்மால் நடந்துவிட்டால் விரைந்து தவ்பா செய்யவேண்டும் என சுட்டிக்காட்டவே அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்.

No comments:

Post a Comment