Tuesday, May 10, 2011

விடியலை நோக்கி (மதச்சார்பின்மை பகுதி - 4)

மனிதன் வெறும் சடப்பொருலன்று,அவனின் புரத்தேவைகள் பூர்த்தியாக்கப்பட்டிருப்பது போல் அவனது ஆத்மாவின் தேவைகளும் பூர்த்தியாக்கப்பட வேண்டும்.

இதனைப் புறக்கணித்துவிட்டு எழுந்த சிந்தனையால் இன்று  நிலைத்துநிற்க முடியாது போய்விட்டது.
 அடிப்படையில் மனிதுள்ளத்தில் இறைவன் பற்றிய எண்ணம் இருந்து கொண்டே இருக்கும்.இறைவனைப்பற்றிய ஏதாவதொரு அமைப்பில் காணப்படாத சமூகமொன்று வரலாற்றில் காணவே முடியாது.இதற்கு புறம்பான(மதச்சார்பின்மை) கொள்கையுடையவர்கள் தற்போது இதற்கே மீண்டுள்ளனர்.எங்கு  இந்த மதச்சார்பின்மை   துளிர்விட்டு வளர்சியுற்றதோ அங்கேயே அது சாத்தியப்படாது என்று புரிந்து கொண்டு இன,மத,கலாச்சார பாரம்பரியங்களுக்கு மெல்ல மெல்ல மனித இனம் நகர்கிறது.எனவே இந்த மதச்சார்பின்மை என்ற எண்ணக்கரு தோல்வி கண்டு வருவதை நாம் கண்கூடாக காண்கிறோம்.

  இக்கருத்தியல் உலகில் சமாதானம் சகவாழ்வு சமத்துவம் போன்றவற்றை ஏற்படுத்த தவறிவிட்டது.மேலை நாடுகளின் மேலாதிக்க உணர்வு,கருப்பு வெள்ளையன் என்ற நிறவெறி,பிறரை ஒழித்துக்கட்டும் வக்கிர புத்தி பலமற்றவனின் மீது அதிகார வெறியாட்டம் போன்றன மிகக்கொடுரமான நோய்களாகும்.

      உலகில் சமாதனம் சகவாழ்வு சமத்துவம் போன்றவற்றை ஏற்படுத்த ஒரு வெற்றிகரமான வழி உள்ளது அது தான் இஸ்லாம்.பதினான்கு நூற்றாண்டுகள் தாண்டியும் அது எதுவித மாற்றமும் இன்றி அப்படியே உயிரோட்டமாக வாழ்ந்துகொண்டிருக்கிறது.அந்த நெறியின் பால் முழு மனித சமூகமும் மீள வேண்டும்.அப்போதுதான் உண்மையான சமாதனம் சகவாழ்வு சமத்துவம் ஏற்படும்.

      இஸ்லாம் காட்டிய உண்மைப்பாதையில் மனித இனம் செழித்து வளர்ந்து கிழக்கேயும் மேற்கையும் ஓர் உயிர்துடிப்புமிக்க ஆன்மீகநெறி அறிவியக்கம் செயல்படதுவங்கியுள்ளது.தீய சக்திகாளாலும் வக்கிர உணர்வாலும் கட்டவிழ்த்துவிட்ட பொய்மைகலாலும்அதன் முன்னேற்றத்தை தடுத்துநிறுத்த முடியாது.இனியும் முடியாது.

    அதே வேளை,இஸ்லாமிய சிந்தனையில் கொள்கையில் வார்த்தேடுக்கப்பட்டவர்கள்,ஷிர்க்கில் மூழ்கி தர்காக்களில் தஞ்சமடைவதால்,இதுதான் இஸ்லாமிய பாரம்பரியம் என்று நினைகிறார்கள்.சில முஸ்லிம்களின் நடவடிக்கை இஸ்லாம் ஆகிவிடாது.இஸ்லாம் என்பது  குரானும் சுன்னாவுமாகும். இதுவரை அதில் எந்தவிதமான மாற்றமும் நிகழவில்லை அதற்கான அவசியமும் இல்லை.இஸ்லாமே ஈருலக  வெற்றிக்கும் விமொசனத்திகும் ஒரே வழி.வேறு எந்த நம்பிக்கைகளுக்கும் மனிதனை இருளிலிருந்து விடுவிக்க முடியாது.

''அன்றியும், எவர்கள் காஃபிராக இருக்கிறார்களோ, அவர்களுடைய செயல்கள் பாலைவனத்தில் (தோற்றமளிக்கும்) கானல் நீரைப் போலாகும்; தாகித்தவன் அதைத் தண்ணீரென்றே எண்ணுகிறான் - (எது வரையெனில்) அதற்கு (அருகில்) அவன் வரும் பொழுது ஒரு பொருளையும் (அங்கே) காணமாட்டானே (அது வரை); ஆனால், அங்கு அவன் அல்லாஹ் (அவனுக்கு விதித்திருக்கும் முடி)வை(யே) காண்கின்றான்; (அதன் படி அல்லாஹ்) அவன் கணக்கைத் தீர்க்கிறான்; மேலும், அல்லாஹ் கணக்குத் தீர்ப்பதில் துரிதமானவன்.'' 

''அல்லது (அவர்களின் நிலை) ஆழ்கடலில் (ஏற்படும்) பல இருள்களைப் போன்றதாகும்; அதனை ஓர் அலை மூடுகிறது. அதற்கு மேல் மற்றோர் அலை; அதற்கும் மேல் மேகம். (இப்படி) பல இருள்கள். சில சிலவற்றுக்கு மேல் இருக்கின்றன. (அப்பொழுது) அவன் தன் கையை வெளியே நீட்டினால் அவனால் அதைப் பார்க்க முடியாது; எவனுக்கு அல்லாஹ் ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியுமில்லை.''(24 : 39-40)

இஸ்லாத்தின் நிழலில் இளைஞர்கள் என்ற நூலிலிருந்து
       

No comments:

Post a Comment