"இஸ்லாம் எனும வார்த்தை,"அமைதி" எனும் பொருள்படும் அரபிச் சொல்லிலிருந்து பிறந்தது ஆகும்.குரான் போரை இறைவனின் நாட்டத்திற்கு எதிரான நெறி பிறழ்ந்த ஒரு நடவடிக்கை என கண்டிக்கிறது.வலியச்சென்று மொத்தமாக தாக்கி அழிக்கும் போரை இஸ்லாம் ஒரு போதும் நியாயிக்கவில்லை.தவிர்க்க முடியாததும் சில சமயங்களில் கொடுமைகளையும் துன்பங்களையும் ஒழித்துக் கட்டுவதற்காக மேட்கொள்ளப்படும் ஆக்கபூர்வமான தற்காப்புப் போருக்கே இஸ்லாம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.மக்காவாசிகள் மட்டுமல்லாது வட்டாரத்தில் உள்ள யூதர்கள் சிரியாவில் உள்ள கிருஸ்துவர்களையும் எதிர்த்துப் போராட வேண்டிய நிலைமைக்கு முஹம்மது [ ஸல்] அவர்கள் தள்ளப்பட்டார்கள்.கிருஸ்துவர்களும் யூதர்களும் இணைந்து நபிகள் நாயகம் அவர்களை தாக்க திட்டமிட்டிருந்தனர்.ஆனால் இது முஹம்மத் நபியை வேதம் கொடுக்கப்பட்டிர்ந்த அவர்கள் மீது பழித்துரைக்க தூண்டவில்லை.மாறாக முஸ்லிம்கள் தங்களை தற்காத்துக் கொள்ளவேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளானார்களே தவிர வேதம் கொடுக்கப்பட்டிருந்த மீது வலிந்து சென்று புனிதப் போர் தொடுக்கவில்லை.இந்தப் போரின் போது நபிகள் நாயகம் [ஸல்] வர்கள் வழங்கிய அறிவுரைகள் இஸ்லாம் எவ்வளவு தூரம் மனிதநேயத்தை கடைபிடிக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது,
- மனித நேயத்துடன் போரிடுங்கள்
- மதகுருக்கள்,பெண் துறவிகள்,பலவீனமானவர்கள்,நலிவுற்றவர்களை அலைகளிக்கக் கூடாது
- போரில் ஈடுபடாத மக்களை கொள்ளாதீர்
- ஒரு மரத்தையேனும் வெட்டாதீர்
- கட்டிடங்களைத் தாக்கி நிர்மூலம் செய்யாதீர்."
No comments:
Post a Comment