Sunday, May 1, 2011

இறைநம்பிக்கையாளர்களின் பொறுப்பு

 உலக நிகழ்வுகள், தங்களை நேரடியாக பாதித்தால் அன்றி அவற்றைப் பற்றி அக்கறை கொள்ளாதவர்கள் தன்னலமின்மை, சகோரத்துவம், நட்பு, நேர்மை ஆகிய நற்பண்புகளை இழந்தவர்களாவர்.மதம் மக்களுக்கு நல்கும் சேவைகளை உணரத் தவறிவிட்டனர்.அவர்கள் வாழ்நாள் முழுவதும்,மனித வர்க்கம் எதிர்நோக்கி இருக்கும் இடர்பாடுகளை அறவே உணராதவர்களாக தங்களின் சொத்தையும் செல்வத்தையும் பாதுகாத்து தன்னால வேட்கையை திருப்திப்படுத்தவே முயல்வார்கள்.குர்ஆனில் இறைவன் தங்களின் சுற்றுவட்டரத்திக்கு நன்மை விளைவிக்க உழைப்போரை புகழ்ந்துரைக்கிறான்.அவர்களை சுற்றி நடக்கும் நிகழ்வுகளில் அக்கறை கொள்வோரையும் மக்களை  நேர்வழியின்  பால் அழைப்பவர்களையும் புகழ்ந்துரைக்கிறான்.குரான் இவ்விரு சாராரையும் இவ்வாறு உவமையாக விவரித்துக் கூறுகிறான்.

 "மேலும், அல்லாஹ் இரு மனிதர்களைப் பற்றிய (மற்றும்) ஓர் உதாரணம் கூறுகிறான்: அவ்விருவரில் ஒருவன் ஊமை(யான அடிமை); எந்தப் பொருளின் மீது (உரிமையும்) சக்தியும் அற்றவன்; தன் எஜமானனுக்குப் பெரும் சுமையாகவும் அவன் இருக்கின்றான்; எங்கு அவனை அனுப்பினாலும் அவன் யாதொரு நன்மையும் கொண்டு வர மாட்டான்; மற்றவனோ, தானும் நேர் வழியிலிருந்து, (பிறரையும் நன்மை செய்யுமாறு) நீதியைக் கொண்டு ஏவுகிறான் - இவனுக்கு (முந்தியவன்) சமமாவானா?" (16:76.)

 
இந்த வசனம் குறிப்பிடுவது போல்,'நேர்வழியில்' நடப்பவர்கள் அவர்களுடைய மதத்தில் பட்ட்ருடையவர்களும் அல்லாஹ்வை அஞ்சி அவனுக்கு பணிபவர்களும்,ஆன்மீக பண்புகளுக்கு மதிப்பளித்து மக்களுக்கு சாவை செய்ய ஆர்வம்முடையவர்கல்தாம்.பொதுவாக இத்தகைய மனிதர்கள் மக்களுக்கு சேவை புரிந்து மனித வர்கத்துக்கு மிகப்பெரும் பலன் தருபவர்கள்.இத்தகைய உயர்ந்த ஒழுக்க நெறியைப் பின்பற்றி வாழ்பவர்களை அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்,


 "
அன்றியும், இவர்கள் (எத்தகையோரென்றால்) இவர்களுக்கு நாம் பூமியில் இடம்பாடாக்கிக் கொடுத்தால், இவர்கள் தொழுகையை முறையாகக் கடைப்பிடிப்பார்கள்; ஜகாத்தும் கொடுப்பார்கள்; நன்மையான காரியங்களைச் செய்யவும் ஏவுவார்கள்; தீமையை விட்டும் விலக்குவார்கள் - மேலும், சகல காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கிறது."( 22:41.) 

 
தன்னைச் சுற்றி நிகழ்பவற்றை ஒரு முஸ்லிம் அக்கறை கொள்ளாதவனாக இருக்க முடியாது.அதுபோல்,தன்னை பாதிக்காத எதையும் கண்டுகொள்ளாத மனப்பான்மையும் கொள்ளக் கூடாது.


No comments:

Post a Comment