قُرْآنًا عَرَبِيًّا غَيْرَ ذِي عِوَجٍ لَّعَلَّهُمْ يَتَّقُون
(அல்லாஹ்விடம்) அவர்கள் பயபக்தியுடன் இருப்பதற்காக, எத்தகைய (குறையும்) கோணலும் இல்லாத இந்த குர்ஆனை அரபி மொழியில் (இறக்கி வைத்தோம்). (39:28)
படைக்கப்பட்ட எல்லாவற்றிலும் ஏதாவது குறை இருக்கும். ஆனால் குர்ஆனில் எந்தக் குறையும் கோணலும் இல்லை ஏனினில் அது படைக்கப்பட்டதல்ல.அது அல்லாஹ்விடம் இருந்து வெளிப்படுத்தப்பட்டதாகும்.முஹ்தசிலாக்கள் என்ற போலிப் பகுத்தறிவாளர்கள்.''குரான் படைக்கப்பட்டதுதான்'' என்று ஹிஜ்ரி இரண்டாம் நூற்றாண்டில் பிரச்சாரம் செய்து,தன பொய்வாதத் திறமையால் அன்று அப்பாசிய கலீபாக்களையும் நம்பவைத்தனர்.அந்த கலீபாக்கள் குரான் படைக்கப்பட்டதுதான் என மக்கள் நம்ப வேண்டும் என்று பிரகடனம் செய்தார்கள்.
குரான் படைக்கப்பட்டதல்ல என்பதை உறுதிப்படுத்த நம் இமாம்களான இமாம் ஷாபிய்(ரஹ்),இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்) ஆகியோர் தம் வாழ்வையே பணயம் வைத்துக் இக்கலீபாக்களுடன் போராடினார்கள்.இருவரும் அவர்களால் விலங்கிடப்பட்டு கொடுமைபடுத்தப்பட்டனர்.இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்) அவர்களுக்கு ஆயிரம் கசையடிகள் கொடுக்குமாறு கலீபா முஹ்தசிம் பில்லாஹ் உத்தரவிட்டார்.இக்கசையடிகளின் விளைவாகவே இமாம் அவர்கள் பிற்காலத்தில் நோய்வாய்ப்பட்டு ஷஹீதானார்கள்.இவ்விரு தியாகிகளும் மறைந்து பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன.எனினும் அவர்கள் ஏற்றி வைத்த ஒளிச்சுடர் இன்றும் அல்லாவின் அருளைக் கொண்டு பிரகாசித்தவண்ணம் உள்ளது. மாஷா அல்லாஹ்.
No comments:
Post a Comment