Saturday, May 7, 2011

வந்தது வினை !!! ( மதச்சார்பின்மை பகுதி 2 )

 அன்று படாடோபத்தில் திளைத்திருந்த கிருஸ்தவ கும்பல் ''பூமி சுழல்கிறது'' என்பது பைபிளுக்கு விரோதமானது.பூமி தட்டைப்போல் விரிக்கப்பட்டிருப்பதாக பைபிள் கூறுகிறது.''ஏசு நாதர் பிறந்த பூமி சூரியனை சுற்றுவதா? இல்லவே இல்லை.அப்படி சொல்பவர்களின் நாக்கை வெட்டி விடுவோம்'' என விஞ்ஞானிகளை மிரட்டி,சிறையில் அடைத்து,எரித்து,தூக்கில் இட்டு அவர்களின் குரலை ஒடுக்கியது அக்கால திருச்சபை.

     இப்படியான காலப்பகுதியில் தான் தொலைநோக்கியின் முன்னோடியான கலிலியோ கலிலி (1564-1642) ''பூமி சூரியனை சுற்றுகிறது'' என்றார்.இது எங்கள் வேதத்துக்கு முரணானதென்று  69 வயது தளர்ந்த கலிலியோவை தூக்கிலிட்டுக் கொன்றனர் .இவ்வாறன கொடூர புத்தி கொண்ட கொடியவர்கள் இஸ்லாத்தை நாகூசாமல் விமர்சனம் செய்யவும் துணிந்துள்ளனர் என்பதே ஆச்சரியமிக்க விசயமாக உள்ளது. 

      15,16,17 ஆம்  நூற்றாண்டுளில் அறிவியலை அடக்கி தடை விதிக்கப்பட்டதால் ஐரோப்பா அறிவியல்,பண்பாடு,நாகரீகத் துறைகளில் பின்னடைந்து இருட்டில் மூழ்கியது.

       ஐரோப்பா இத்தகைய இருளில் மூழ்கியிருந்த வேலையில் தான் முஸ்லிம்கள் ஸ்பெயினிலும் உலகின் ஏனைய பகுதிகளிலும் ஏற்றி வைத்த அறிவுத்தீபம் பிரகாசித்துக்கொண்டிருந்தது.ஐரோப்பிய மன்னர்கள் கையெழுத்துப் பழகும் போது நம் முஸ்லிம் விஞ்ஞானிகள் குர்துபா (Cordoba) பல்கலைக்கழகத்தில் உலகத்தை உருண்டை வடிவில் வைத்து பாடம் நடத்திகொண்டிருண்டார்கள்.அன்று அவர்கள் ஐரோப்பியாவில் ஏற்றி வைத்த அறிவுத்தீபம் இன்றும் பிரகாசித்துக்கொண்டிருக்கிறது.

         ''கி.பி.எட்டாம் நூற்றாண்டிலிருந்து கி.பி.பதிமூன்றாம் வரை இடைப்பட்ட காலப்பகுதியில் முஸ்லிம்களே உலகில் கலாச்சாரத்திலும்,நாகரீகத்திலும் ஒளியை ஏற்றி நின்றனர்.''என பேராசிரியர் P.K.Hitti  குறிப்பிடுகிறார்.

        ''மேற்கத்தைய உலகம் ஆழமான அறிவை பெற்றுக்கொள்ள எண்ணியபோதும் புராதன சிந்தனையோடு தன் உறவை  புதுப்பித்துக்கொள்ள எண்ணிய போதும் அது முதலில் அரபு மூலாதாரங்களை நோக்கியே திரும்பியது.''பேராசிரியர் GOERGE SARTON - HISTORY OF SCIENCE.

            இதுபற்றி தெளிவட்ட்றோரும் ஆழமான அறிவற்றவர்களும் புனிதமான இஸ்லாத்தை விரும்பாதொரும் முஸ்லிம் உம்மத்துக்குள் இருந்து கொண்டே மதச்சார்பின்மையை முன்வைக்கின்றமை வேதனை மிகு விசயமாகும்

    காலனித்துவ காலத்தில் ஐரோப்பிய கலாச்சார்ப் பன்பாடுகள் முஸ்லிம் நாடுகளிலும் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளிலும் விதைக்கப்பட்டன.முஸ்லிம்களில் ஒரு சாரார் அபிவிருத்திக்கு ஒரே வலி மதத்தை விட்டு வெளியேறுவதுதான் என நினைக்கலாயினர்.ஆனால் இவர்கள் பின்பட்ட்ரும் வளர்ச்சியடைந்த நாடுகளில் கணிசமானோர் இப்போக்கை மறுக்கின்றனர்.அங்குள்ள பல உளவியலாளர்கள் ''மனித குலத்தின் மாண்புக்கு மதமே சிறந்த வழி'' என்று தற்போது இஸ்லாத்துக்குள் வந்த வண்ணம் உள்ளனர்.

     நாம் மேலே வரலாற்றின் நிகழ்வுகளிலிருந்து எடுத்துக் காட்டிய ஐரோப்பிய உலகினதும் இஸ்லாமிய உலகினதும் நிலை,மதச்சார்பின்மை தோன்றுவதற்கு காரணம் ஐரோப்பாவில் நடந்த சில துயரமான நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து எழுந்தது என்பதை தெளிவாக தெரிந்துகொண்டோம்.உலகின் மனித இன வரலாற்றின் ஓட்டத்தில் மதம் அறிவியலுக்கு தடையாக ஐரோப்பா தவிர வேறு எங்கும் இடம்பெறவில்லை.ஐரோப்பாவில் நிகழ்ந்த இந்த வரலாறு இன்று உலகின் பல பாகத்திற்கும் பரப்பப்பட்டு,எமது முஸ்லிம் சமூகத்திலும் பரவி நம் முஸ்லிம் புத்திஜீவிகளிடத்திலும் திணிக்கப்பட்டுள்ளது.

தொடரும்........

இஸ்லாமிய நிழலில் இளைஞர்கள் நூலிலிருந்து



 

No comments:

Post a Comment