இந்தப் போரை மனித வரலாற்றில் மிகவும் அநீதியான போராக இந்த ஆணையம் வர்ணித்தது.புஷ் மற்றும் பிலேயருடைய அரசுகள் இந்தப் போருக்கு லட்சோப லட்ச மக்கள் எழுப்பிய கண்டனக் குரல்கள் எல்லாவற்றையும் புறக்கணித்து விட்டன.வரலாற்றில் அநீதியான,ஒழுக்கம்கெட்ட,கோழைத்தனமான ஒரு போய் இவர்கள் தொடுத்தனர்.ஆங்கிலேய-அமெரிக்க படைகள் ஈராக்கை ஆக்கிரமித்ததன் காரணமாக ஈராக் நாடும் அந்நாட்டு மக்களும் பெரும் அழிவிக்கும் சூறையாடலுக்கும் உள்ளாகியுள்ளன.சட்டம் ஒழுங்கு முற்றாக குலைந்து போயின.மனிதப் பாதுகாப்பே அற்ற நிலை அங்கே பரவியுள்ளது.கட்டடங்கள் எல்லாம் தக்ர்த்தப்பட்டு நாடே அலங்கோலப்படுத்தப்பட்டு சிதைந்து காணப்படுகிறது.சுற்றுப் புற சூழல் மற்றும் தாவரங்கள் எல்லாம் சீரழிந்து காணப்படுகின்றன.ஈராக் மக்களின் கலாச்சார மற்றும் தொல்பொருள் பாரம்பரியம் சீரழிக்கப்பட்டு விட்டது.
- ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் மற்றும் நுரம்பர்க் கோட்பாடுகளுக்கு எதிராக வலுக்கட்டாயமாக திட்டமிட்டு தயார்படுத்தி தொடுத்தது பெரும் பாதகச் செயல்.
- ஈராக்கின் குடிமக்களையும் கட்டிடங்களையும் குறி வைத்துத் தாக்கியது.
- அளவுக்கு மீறி பெரும் படையை பயன்படுத்தியது.கண்மூடித்தனமாக தாக்குதல் மேற்கொண்டது.
- இராணுவ நடவடிக்கையின் போது சாதாரண பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்க தவறியது.போருக்குப் பின் நாட்டை ஆக்கிரமித்திருந்த போதும் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்காதது.
- அமைதியாக போரை எதிர்த்தவர்கள் மீது கொடூரமாக ஆயுதங்கள் பிரயோகித்தது.
- குற்றம் சாட்டாமல் அல்லது விசாரணையின்றி தண்டனை வழங்கியது.
- ஈராக் பெண்களுக்கு பெரும் இழிவை ஏற்படுத்தும் வகையில் சூழ்நிலையை திட்டமிட்டு உருவாக்கியது.
(தமிழ் மொழியில் சுருக்கமாக ராம் புனியானியின் பயங்கரவாதம் நூலிலிருந்து)
No comments:
Post a Comment