மதச்சார்பற்ற நிலை என்பது இறைவன் இருக்கிறான் என்ற உண்மையைஇருட்டடிப்புச்செய்கிறது.
''உலகில் உள்ள அனைத்தும் பகுத்தறிவுக்குட்பட்டதே! இயற்கையின்யதார்த்தத்தில் மனித வாழ்வை விளக்கவும் முடியும் என்ற விசயத்தில்மனிதன் உறுதியாக நம்பிக்கை கொள்கிறான்.இதனடிப்படையில் மறுமைவாழ்வு என்று ஒன்று இல்லை என்பதோடு,மறு உலக வாழ்விலிருந்தோஅல்லது இறைவன் மீதான நம்பிக்கையிளிருந்தோ பெறப்பட்ட எல்லாகருத்தியலையும் தவிர்த்தல் என்ற வகையில் உலக வாழ்வின் மனிதஇனத்தின் சுயனலனைக்குறித்த வகையில் மட்டுமே ஒழுக்கம் அடிப்படையாகஅமையவேண்டும்''என்பதே மதச்சார்பற்ற சிந்தனையின் கருப்பொருளாகும்.
உண்மையில் மதச்சார்பின்மை என்பதன் பொருள் ஒரு மதத்தையோஇனத்தையோ பிரநிதிதுவப்படுத்துவதில்லை என்ற நிலை மட்டுமல்ல.நாம்முன்னர் குறிப்பிட்டது போல் ஆன்மா,கடவுள்,மறுமை வாழ்வு அனைத்தையும்மறுத்துரைக்கும் சடவாத சிந்தனைப் போக்கையே அது குறித்து நிற்கிறது இதுஉலக வாழ்வில் எல்லையட்ட்ற மோகத்தையும் ஆன்மீக வறுமையையும்தோற்றுவித்துள்ளது.இதனால் மேற்கத்தைய உலகம் மனஅமைதியின்மையால் வாடுகிறது.அங்கே பெரும் எண்ணிக்கையானோர்நரம்புத்தளர்ச்சிக்கும் மனநோய்க்கும் ஆளாகியுள்ளனர்.மதச்சார்பின்மை என்றமுட்டாள் கோட்பாடு இன்று மனித வாழ்வுக்கு பொருளையும் கருத்தையும்குறிக்கோளையும் இலட்ச்சியத்தையும் வழங்க முடியாமல்தோற்றுவிட்டது.எனவே வாழ்க்கைப் போராட்டத்தில் சிக்கித்தவிக்கும் மேதகுநாட்டவர்கள் ஆறுதலையும் நிம்மதியையும் தேடி இஸ்லாமிய மடியை நாடிஅடைக்கலம் புகும்போது நம்மவர்கள் அந்தக் குப்பையில் போய் விழுவதும்வீழ்ந்திருப்பதும் தான் ஆச்சரியமாக உள்ளது.
கிருஸ்தவ பாதிரிமார்களின் கடும் போக்கு நிலை காரணமாகவேமனிதன் மதத்தை வெறுத்தான்.இதனால் அவனின் இறை நம்பிக்கையும்விசுவாசமும் ஆட்டம் கண்டது.கிருஸ்தவ மதப்பிடியிளிருந்துவிடுப்படும்பொருட்டு மனிதன் அனைத்து மதகொள்கையையும் தூக்கிஎறிந்துவிட்டு தனிப்பாதையில்(மதச்சார்பின்மை) தனது பயணத்தைதொடர்ந்தான்.இந்தப்பாதையில் அவன் மகத்தான வெற்றி கண்டான்.எனினும்ஆத்மீக ஒளியற்ற இவ்வளர்ச்சியினால் அவன் அவனது வாழ்வை இருட்டிலேகழிக்கிறான்.அறிவு வளர்ச்சிக்கும் ஆராய்ச்சி முயற்ச்சிக்கும் எதிராககிருஸ்தவ திருச்சபையும் அதனை பிரதிநிதித்துவப்படுத்திய மதகுருமார்களும்நடந்துகொண்டதால் மதத்துக் எதிரான சிந்தனைப்போக்கு ஆரம்பமானது.
கிருஸ்தவ போதனை போன்று மனித வாழ்விற்குரிய தெளிவானவரையறுத்த பகுத்தறிவுபூர்வமான அறிவியலை புறக்கணிக்காத சட்டங்களும் கொள்கைகளும் பல மதங்களில் கனப்படாமையே மதச்சார்பின்மை வளர காரணமாக அமைந்தது.இச்சிந்தனையின் கருத்தாடலில் கவரப்பட்டவர்கள் இஸ்லாத்தையும் அதே மனப்பதிவோடு மேலோட்டமாக விமர்சிக்கின்றனர்.இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்களில் எந்த உடுருவலும் இடம்பெற முடியாது.அது தெய்வ வழிகாட்டல்.அதன் பாதுகாப்பு இறைவன் அவன் வசம் வைத்துள்ளான்.இங்கு மனித கையாடலோ நினைத்தவுடன் பெரும்பான்மை பலத்துடன் மாற்றுவதற்கோ இடமில்லை.எனினும் அது சில விசயங்களில் நெகிழ்ந்துகொடுக்கும் தன்மையுடன் பகுத்தரிவுபூர்வமாக காணப்படுகிறது.
2011 அல்ல இன்னும் 5000 ஆண்டுகள் தாண்டினாலும் இஸ்லாம் இந்த உலகுக்கு மிகவும் பொருத்தமாகவே இருக்கும் என்பது தெளிவாக நிருபிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாத்தின் நிழலில் இளைஞர்கள் என்ற நூலிலிருந்து
No comments:
Post a Comment