Tuesday, May 17, 2011

உருமாறும் சிலுவை யுத்தம்

இஸ்லாத்திக்கும் சிலுவைக்கும் இடையிலான பகையுணர்வு இஸ்லாம் அறிமுகமான காலம் தொடக்கம் இருந்து வருகிறது.அதன் வளர்ச்சிக்கட்டமாக ஐரோப்பா இஸ்லாமிய கிழக்குலகுக்கு எதிராக இராணுவ படையெடுப்பை  மேற்கொண்டு இஸ்லாமிய உலகை ஆக்கிரமித்து அதன் சமய,அரசியல்,பொருளாதாரம் மற்றும் இராணுவத்தை கட்டுப்படுத்தி அப்பிரதேசங்களில் காணப்படும் செல்வங்களை சுரண்டியது.

        இதன் அடுத்த கட்டமாக சிலுவை வீரர்கள் புதிய உருவில் தோற்றம் பெற்றனர்.கீழைத்தேயவாதம்,கிருஸ்தவமயமாக்கள் என்ற போர்வைகளில் தமது நடவடிக்கைகளில் இறங்கினர்.முஸ்லிம் பிராந்தியத்துக்குள் ஊடுருவி இவர்கள் கால்நித்துவத்துக்குரிய வழிவகைகளை ஏற்படுத்தினர்.அதிகமான இஸ்லாமிய நாடுகளை ஆக்கிரமித்ததோடு பல வருடங்களாக அவற்ற்றை அடக்கியும் வைத்திருந்தனர்.முஸ்லிம்களின் கிலாபத்தை சிதைத்து ஒற்றுமையைக் குலைத்து முஸ்லிம்களிடையே பலபிரிவினைகளை ஏற்படுத்தினர்.இவர்கள் முச்ளிம்னாடுகளை விட்டு வெளியேறினாலும் இவர்கள் விட்டுச்சென்ற பிரிவினைகளும் குழப்பங்களும் இன்னுமே அந்நாடுகளில் அழியாமல் இருக்கின்றன.

          ஒரு சமூகத்தினரிடையே பிரிவினை காணப்படும்போது அங்கு அச்சமூகத்தின் பொது எதிரிக்கு அதிக வெற்றி காணப்படுவது தவிர்க்க இயலாதது.பிரித்தாளும் கொள்கையை இஸ்லாமிய உலகில் நடைமுறைபடுத்துவதன் அவசியம் பற்றி பின்வரும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

          ''இஸ்லாமிய அரபு ஐக்கியம் முஸ்லிம்களின் எதிர்பார்புகளை ஒன்று படுத்துவதோடு ஐரோப்பிய ஆக்கிரமிப்பிலிருந்து விடுதலை பெறுவதற்கும் உதவியது.எனவே இஸ்லாமிய நாடுகளில் நிலவும் அந்த நிலைமையை உடைத்தெறிய வேண்டும்.இஸ்லாமிய ஐக்கியத்தை விட்டு அவர்களின் கவனத்தை திருப்ப வேண்டும்.''

          லோரன்ஸ் பிரோவின் என்பவர் "அரேபிய சாம்ராஜ்ஜியத்தில் முஸ்லிம்கள் ஒன்றுபட்டால் அது உலகுக்கு ஆபத்தாகவும் சாபமாகவும் அமைந்துவிடும் அல்லது அது உலகுக்கு அருட்கொடையாகவும் மாறலாம்.என்றாலும் அவர்கள் பிரிந்து கானப்பட்டார்கலேயானால் எந்தவொரு பெறுமதியும் தாக்கமும் அற்றவர்காலாக இருப்பார்" என்றார்.
        கி.பி.1907 இல் ஐரோப்பாவில் ஒரு மாநாடொன்று இடம்பெற்றது.அதில் ஐரோப்பாவின் பழுத்த சிந்தனைவாதிகள் கலந்து கொண்டனர்.ஒரு மாதாகாலம் இடம்பெற்ற இம்மாநாட்டில் ஐரோப்பிய நாகரீக வீழ்ச்சி இஸ்லாமிய நாகரீகத்தின் செழுமை என்பன கலந்துரையாடப்பட்டன.இஸ்லாமி ஐரோப்பாவை தீர்த்துக்கட்டகூடிய சக்தியைக் கொண்டது என்று பல்வேறுபட்டவர்களால் எடுத்துக்காட்டப்பட்டது.இந்த மாநாட்டின் முடிவாக இஸ்லாம் ஐரோப்பாவை அச்சுறுத்தும் மாபெரும் சக்தி என்று தீர்மானம் மேட்கொள்ளப்பட்டது.எனவே முஸ்லிம் நாடுகளுக்குகிடையே ஒற்றுமை ஐரோப்பாவை பாதிக்கும் என்பதால் அவற்றை பிரிப்பதற்கு திட்டங்கள் தீட்டினர்.இறுதியாக தேசியவாதத்தை உருவாக்கி முஸ்லிம்களைப் பிரித்தனர்.இது அரபுக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரானது என்பதில் சந்தேகமே இல்லை.இதனால்தான் உலகளாவிய ரீதியில் சியோநிசத்தொடு நட்புக் கொண்டு பூரண ஒத்துழைப்பு வழங்கி ''சியோனிச அமைப்பு'' என்ற முஸ்லிம் எதிர்ப்பு இயக்கத்தை நடைமுறைப்படுத்தியது.

     அவர்கள் தமது திட்ட்டத்தை மேற்கொள்ள முதலாவதாக இஸ்லாமிய கிலாபத்தை நிர்மூலமாக்கினர்.மேலும் முஸ்லிம் விரோத இயக்கங்களுடன் இணைந்து முஸ்லிகளை இஸ்லாத்தை விட்டு தூரமாக்கி,அல்லாஹ் ரசூல் என்பவற்றிலிருந்து தொடர்பைதுண்டித்து,இஸ்லாமிய நடைமுறைகள் வணக்கவளிபாடுகளில் சலிப்பை உருவாக்கி அனைத்தும் ஹலால் என்ற சிந்தனையின் பக்கம் அழைத்துச்சென்றனர்.இவற்ற்றை அடைய பின்வரும் வழிமுறைகளை பின்பற்றினர்.அவை ,

  1. அல் குரானை எதிர்த்துப் போராடி,அதன் சட்டதிட்டங்களை பெருமதியற்றதாக்கள். 
  2. நபி(ஸல்) அவர்கள் மீது குற்றம்சாட்டி அவர்களது வரலாற்றை கலங்கப்படுத்தல்.
  3. இஸ்லாம் பற்றி மேற்கத்திய சமூகங்களிடையே தப்பான எண்ணங்களை உருவாக்கல்.
  4. மதச்சார்பின்மை சிந்தனையை முஸ்லிம்களிடையே பரப்பிவிடல்.
  5. இஸ்லாமிய நாடுகளுக்கெதிராக கலாச்சார,சிந்தனாரீதியான யுத்தம்.
  6. முஸ்லிம் பெண்களின் சிந்தனையில் குழப்பத்தை ஏற்படுத்தல்.
  7. கிருஸ்தவமயமாக்கள்.
         
    ARTCLE FROM - சிலுவை யுத்தங்கள் நூலிலிருந்து.

    No comments:

    Post a Comment