Saturday, May 14, 2011

பராக் ஒபாமா - புதைந்து கிடக்கும் மர்மங்கள்.(இரகசிய சமுதாயம் - தொடர்-2)


ராக் ஹூஸைன் ஒபாமா (Barack Hussein Obama, பிறப்பு: ஆகஸ்ட் 4, 1961) 2008 ம் ஆண்டு அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜனநாயகக் கட்சி வேட்பாளராவார்.
தற்போது இவர் மேலவையிலும் இலினொய் மாநிலத்தின் சார்பில் இளைய உறுப்பினராக உள்ளார்.
அமெரிக்க வரலாற்றில் ஆபிரிக்க அமெரிக்க இனத்தை சேர்ந்த முதலாவது குடியரசுத் தலைவர் என்ற பெருமையும், மற்றும் செனட் அவையின் ஐந்தாவது ஆப்பிரிக்க-அமெரிக்க இனத்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
 
Obama Praises Islam as 'Great Religion' : "The contribution of Muslims to the United States are too long to catalog because Muslims are so interwoven into the fabric of our communities and our country,"

ஒரு கட்டத்தில் இவர் இஸ்லாம் ஒரு மாபெரும் மார்க்கம். அமெரிக்காவின் வளர்ச்சியில் முஸ்லிம்களின் பங்கு மிகவும் அபரிமிதமானது. அமெரிக்க சமூகத்தில் முஸ்லிம்கள் பின்னிப் பிணைந்தவர்கள் என்று இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் புகழ்ந்து தள்ளினார்.

வந்ததே வினை! கென்யா சமூகத்தைச் சார்ந்த இவரது தந்தை இஸ்லாமிய வம்சாவழியைச் சார்ந்தவர் என்பதால் ஒபாமாவும் முஸ்லிம்தான், ஒரு முஸ்லிம் அமெரிக்காவை எவ்வாறு ஆளமுடியும்? ஓபாமாவின் பெயரிலேயே ஹூஸைன் என்ற முஸ்லிம் பெயர் இல்லையா என்றெல்லாம் பிரச்சாரம் செய்யப்பட்டது. உடனே யூதர்கள் பிடியிலுள்ள மீடியாக்கள் ஒபாமாவிற்கு எதிராக பிரச்சாரம் செய்ததோ என்று எண்ணி விடாதீர்கள். ஒபாமா ஆட்சி கட்டிலில் அமரும் முன்னர் அவரது பெயரை செய்தி ஊடகங்களில் முழுவீச்சில் பிரபலமடையச் செய்யும் ஒரு ஜியோனிஸத் தந்திரமே அது.

(நபியே!) இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் இவ்வாறே பல சூழ்ச்சிகளைச் செய்துகொண்டிருந்தனர்; எனினும் எல்லா சூழ்ச்சிகளின் முடிவுகளும் அல்லாஹ்விடமே இருக்கின்றன் ஒவ்வோர் ஆத்மா சம்பாதிப்பதையும் அவன் நன்கறிவான். மேலும், மறுமையில் எவர்களுக்கு நல்ல வீடு உரியது என்பதை காஃபிர்கள் சீக்கரத்தில் அறிந்து கொள்வார்கள். (13:42)

காரணம் கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமாவோ, மெக்கெய்னோ, யார் வெற்றிபெற்றாலும் அமெரிக்காவை ஆளவிருப்பது illuminati என்று அழைக்கபடுகிற லூசிஃபரை வணங்கும் ஷைத்தானிய கூட்டத்தைச் சார்தவர்தானே! என்ற நிலைதான் இருந்தது. மெக்கெய்னை பற்றி தெரியும், என்ன ஒபாமாவுமா அப்படி என்று அச்சரியப்படுகிறீர்களா? இன்னும் தெளிவாக சொல்வதென்றால் ஒபாமாவும் ஜார்ஜ் புஷ்ஸூம் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்களே!.  

ஆம் கொடுங்கோலன் ஜார்ஜ் புஷ்ஸூடைய குடியரசு கட்சியை எதிர்த்து அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக களமிறங்கி வெற்றிபெற்ற பராக் ஒபாமா, ஜார்ஜ் புஷ்ஸூக்கு எதிரான சிந்தனையும், கொள்கையும் உடையவர் என்ற மாயையை இல்லுமினாட்டிகள் ஏற்படுத்தினர். அதன் பின்னனியில் சில சூழ்ச்சிகள் இருந்தன.
 
  1) இஸ்லாமிய நாடுகள் மற்றும் முஸ்லிம்களின் மீது ஜார்ஜ் புஷ் அடுத்தடுத்து நடத்திய கொலை வெறித் தாக்குதல்களால் இஸ்லாமிய சமூகம் மற்றும் அரபுநாடுகள் உட்பட நடுநிலையான பெருங்கொண்ட கிருஸ்தவ மக்களும், பெரும்பாலான அமெரிக்கர்களும் ஜார்ஜ் புஷ்ஸின் மீது பெரும் அதிருப்தியில் இருந்தனர். அவர்களை சற்று அமைதி படுத்துவதற்கும், 


  2) ஈராக் மற்றும் ஆப்கானில் முஸ்லிம்கள் தங்கள் உயிரை காப்பாற்றுவதற்காக அமெரிக்க இராணுவத்தின் மீது நடத்திய சில தற்காப்பு நடவடிக்கையில் அமெரிக்கா பல திறமைமிக்க இராணுவ வீரர்களை இழந்தது. அவர்களின் குடும்பத்தினரோடு, அமெரிக்காவின் அமைதியை விரும்பும் பெரும்பாலான மக்கள் ஜார்ஜ் புஷ்ஸூக்கு எதிராக வீதியில் இறங்கினர். ஜார்ஜ் புஷ்ஸை விடுங்கள் இதோ ஒபாமா என்ற சமாதானப் புறா வந்துவிட்டார் என்று அறிவித்து அவர்களின் போராட்ட குணத்தை மழுங்கடிக்கச் செய்யவும், 


  3) ஜார்ஜ் புஷ்ஸின் தவரான பொருளாதாரக் கொள்கையினால் அதளபாதாளத்திற்கு சென்ற அமெரிக்க பொருளாதார வீழ்ச்சியை பற்றிய உண்மை நிலையை உலகம் அறிவதைவிட்டும் திசைதிருப்பவும் ஒரு பிரச்சாரம் தேவைப்பட்டது. அதை கனகச்சிதமாக செய்து முடித்தனர் மிரோவிஞ்சியன் இலுமினாட்டிகள். 


நிச்சயமாக, இவர்களுக்கு முன்னர் இருந்தார்களே அவர்களும் இவ்வாறே சூழ்ச்சிகள் செய்தார்கள் அதனால், அல்லாஹ் அவர்களுடைய கட்டிடத்தை அடிப்படையோடு பெயர்த்து விட்டான் ஆகவே அவர்களுக்கு மேலே இருந்து முகடு அவர்கள் மீது விழுந்தது. அவர்கள் அறிந்து கொள்ள முடியாத புறத்திலிருந்து அவர்களுக்கு வேதனையும் வந்தது. (16:26)

இதில் வேடிக்கை என்ன வென்றால் ஜார்ஜ் புஷ்ஸூக்கு எதிரான கருத்துள்ளவர் ஒபாமா என்ற பிரச்சாரத்தால் ஒரளவு ஒபாமாவின் புகழ் உயரத்துவங்கினாலும், இவர் ஒரு முஸ்லிமோ என்ற சந்தேகம் அமெரிக்கர்களில் பலபேருக்கும் இருந்தது. அதன் உச்ச கட்டமாக செப்டம்பர் 11 தாக்குதல்களில் ஒபாமாவுக்கும் தொடர்பு உண்டு என்றும், ஒபாமாதான் அந்தி கிருஸ்து என்றும் பிரச்சாரம் செய்தனர்.

இந்த பிரச்சாரங்களை ஒபாமா எப்படி முறியடித்தார் தெரியுமா? தனது தேர்தல் பிரச்சார கூட்டங்களில் கையில் பைபிளை தூக்கிபிடித்துக் கொண்டு தான் ஒரு கிருஸ்தவன்தான் என்றும் இதை தனது வேதாமான பைபிளின் மீதும், அமரிக்காவின் கொடியின் மீதும் சத்தியம் செய்து கூறிகிறேன் என்று கதறினார். 
 
"Let's make clear what the facts are: I am a Christian. I have been sworn in with a Bible. I pledge allegiance [to the American flag] and lead the pledge of allegiance sometimes in the United States Senate when I'm presiding." : Barak Obama.

அதிபரான கையுடன் மறக்காமல் ஆப்கான் முஸ்லிம்களை கொல்வதற்காக 30,000 இராணுவ வீரர்களை கூடுதலாக அனுப்பி வைத்தார்.  இதன் மூலம் (சமாதானப் புறாவாது மண்ணாங்கட்டியாவது) முஸ்லிம்களைக் கொல்வதில் புஷ்ஸூக்கு நிகராக தான் சளைத்தவனல்ல என்று நிரூபித்தார். ஜார்ஜ் புஷ் இஸ்லாம் ஒரு அமைதியான மார்க்கம் என்று சொல்லிவிட்டுதான் ஈராக் மற்றும் ஆப்கான் முஸ்லிம்கள் மீது திரள்குண்டுகளை கொத்துகொத்தாக கொட்டினார் என்பதை கவனத்தில் கொள்க.
கடந்த அக்டோபர் 2009 ல் ஒபாமாவின் சர்வதேச இராஜிய உறவுகளுக்காவும், மக்களிடையே அவர் ஏற்படுத்திய பரஸ்பர உறவுகளைப் பாராட்டியும் (?) அவருக்கு நோபல் பரிசும் வழங்கப்பட்டது.



மக்களே! அமெரிக்காவை யார் ஆண்டால் என்ன? ஜார்ஜ் புஷ், கிளிண்டன், ஒபாமா,  ஜோ பைடன், மென்கெய்ன் அனைவரும் ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள்தான், அனைவரும் லூசிஃபரை வணங்கும் ஷைத்தானியக் கூட்டம்தான் என்பது உண்மையிலும் உண்மை.
ஓபாமா எப்படிபட்டவர்? இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக இனி என்னவெல்லாம் அவர் செய்ய இருக்கிறார் என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும், பொறுத்திருந்து பார்ப்போம்.

உங்களுக்கு முன் பல வழி முறைகள் சென்றுவிட்டன. ஆகவே, நீங்கள் பூமியில் சுற்றி வந்து இறை வசனங்களைப் பொய்யாக்கியோரின் முடிவு என்ன ஆயிற்று என்பதைப் பாருங்கள். (3:137)

''பூமியில் நீங்கள் சுற்றி வந்து, அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்பித்தவர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை நீங்கள் கவனித்துப் பாருங்கள்'' என்று (நபியே!) நீர் கூறுவீராக. (6:11)


JAZAKALLAHU HAIR FOR OTTRUMAI.COM 
தொடரும்............

No comments:

Post a Comment