- உலகில் இரண்டாவதாக கட்டப்பட்ட பள்ளிவாசல் மஸ்ஜிதுல் அக்சாவாகும்.
- புனித கஃபா கட்டப்பட்டு நாற்பது வருடங்களின் பின் மஸ்ஜிதுல் அக்சா கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது.
- பல மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த கருத்துப்படி மஸ்ஜிதுல் அக்சா நபி ஆதம் (அலை) அவர்களால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
- நபி இப்ராஹீம் (அலை) மற்றும் இஸ்மாயில் (அலை) அவர்களால் மஸ்ஜிதுல் அக்சா புனர்நிர்மாணம் செய்யப்பட்டது.
- நபி தாவூத் (அலை) அவர்களால் மீண்டும் மஸ்ஜிதுல் அக்சா புனர்நிர்மாணம் செய்யப்பட்டது.
- இறுதியாக நபி சுலைமான் (அலை) அவர்களால் மஸ்ஜிதுல் அக்சா கட்டி முடிக்கப்பட்டது.
- நபி சுலைமான் (அலை) அவர்களால் கட்டப்பட்ட மஸ்ஜிதுல் அக்சா கி.மு.587 இல் பாபிலோனிய மன்னன் நேபுச்சட்னேச்சர் ( Nebuchadnezzar ) ஆல் தரைமட்டமாக்கப்பட்டது.
- இந்த தரைமட்டமாக்கப்பட்ட மஸ்ஜிதுல் அக்சாவையே யூதர்கள் சுலைமான் நபி அவர்களுக்காக கட்டிய ஆலயம் என வாதாடுகின்றனர்.
- கி.மு.167 இல் யூதர்கள் இதனை மீண்டும் புனர்நிர்மாணம் செய்தனர் ஆனால் கி.பி.70 இல் யூதர்கள் ஜெருசல நகரத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
- கி.பி.637/8 இல் உமர் இப்னு கத்தாப் (ரலி) ஜெருசல நகரை கைப்பற்றும் வரை கிட்டத்தட்ட 600 ஆண்டுகள் மஸ்ஜிதுல் அக்சா வளாகம் குப்பை போடும் இடமாக இருந்துவந்தது.
- உமையாத் கலீபா அப்துல்லா மாலிக் இப்னு மர்வானால் கி.பி. 692 (ஹி.ஆ.72/73) இல் அல் சக்ராஹ் (Al-Sakhrah Mosque) கட்டப்பட்டது.
- 1967 இல் ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய படையால் புனித மஸ்ஜிதுல் அக்சா ஆக்கிரமிக்கப்பட்டது.
- யூத ஆக்கிரமிப்பாளர்கள் மஸ்ஜிதுல் அக்சாவை அழிக்க பல முயற்சிகள் செய்தனர்.இன்னும் செய்துகொண்டும் உள்ளனர்.
- 900 ஆண்டுகள் பழமையான, இஸ்லாத்தின் மிக உன்னதமான வீரர்களில் ஒருவரான சலாஹுத்தீன் ஐயூபி அவர்களால் கட்டப்பட்ட மிம்பர் 1967 இல் அழிக்கப்பட்டது.
- சியோனிச யூத சக்திகள் மஸ்ஜிதுல் அக்சாவை அழித்துவிட்டு அவ்விடத்தில் யூத ஆலயம் ஒன்றை நிறுவ முயற்சி செய்துவருகின்றனர்.
- எங்கள் ஒவ்வொரு தொழுகையிலும் மஸ்ஜிதுல் அக்சாவுக்கும் பலஸ்தீன மக்களுக்கும் துவா செய்வோம். ஆமீன்.
Thursday, May 19, 2011
மஸ்ஜிதுல் அக்ஸா - வரலாற்றுச் சுருக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment