"(நபியே!) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா? "
"அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா?"
"மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான்."
"சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன."
."அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான்". (105:1-5)
காபதுல்லாவை அழிப்பதற்காக அபிசீனிய மன்னரின் பிரதிநிதியான ஆப்ரகா யானைப் படையுடன் வந்த படையெடுப்பு பிரசித்தம் வாய்ந்தது.இது எங்கள் கண்மணி நாயகம்[ஸல்] அவர்கள் பிறப்பதற்கு ஒரு ஆண்டுக்கு முன் நடந்த நிகழ்வாகும்.
ரோமானியப் பேரரசை கொசுக்கள் அழித்ததாக ஐரோப்பிய வரலாறு கூறுகிறது.மண்ணாசை பிடித்த ரோமர்கள் பக்கத்து நாடுகளின் மீது படையெடுத்து அவரைக் கைப்பற்றி அந்நாட்டின் செல்வங்களை எல்லாம் கொள்ளையிட்டு தன் நாட்டுக்கு கொண்டு வந்து ஆடம்பரத்தில் திளைத்தது.எல்லோரும் பல்லக்கில் ஏறினால் அதை தூக்குவது யார்? ஊரார் முழுவதும் செல்வர்கள் ஆகிவிட்டனர்.ஊரை துப்புரவு செய்ய ஆளில்லை.கழிவு நீர் தேங்கிற்று.கொசுக்கள் பெருகிற்று.அதன் விளைவாக பல நோய்கள் தோன்றின.பிணியால் நலிந்து போன மக்கள் பகைவர்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை.இவ்வாறு ஒரு பேரரசொன்று கொசுவால் அழிந்தது.
ஆனால் வழமை மிக்க யானைப் படை காபதுல்லவை அசைக்க முடியவில்லை.இது வரலாறு கற்றுத் தரும் ஒரு ஆத்மீகப் பாடம்.
No comments:
Post a Comment