Friday, September 21, 2012

சமூக அமைதிக்கு வித்திட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள்.




   இன்றைக்கு சமூக நல்லிணக்கம் என்பது என்றால் என்ன? என்று கேட்கும் அளவுக்கு சமூக மாச்சரியங்கள் மலிந்து காணப்படுகின்ற வேளையில், இஸ்லாம் சமூக அமைதிக்கு வழிகாட்டியிருக்கின்றது என்பது பற்றி அறிந்து கொள்ள இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாழ்வு நமக்கு பேருதவி புரிகின்றது.

இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மதினாவைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து கொண்டிருந்த நேரமது. இஸ்லாமிய தலைமைக் கேந்திரமான மதினாவிலும், அதனைச் சுற்றிலும் உள்ள பகுதிகளிலும் பல்வேறு மதத்தவர்கள் வாழ்ந்து வந்தார்கள். இவர்கள் அனைவரும் எந்தக் காலத்திலும் எந்தச் சட்டத்திற்கும் கட்டுப்பட்டு வாழ்ந்த வரலாறு என்பதே கிடையாது. இந்த நிலையில், பல்வேறு குழுக்களையும் ஒப்பந்தங்கள் மூலம் ஒருங்கிணைத்து, அதன் மூலம் மதீனாவின் சமூக வாழ்வை அமைதி தவழும் இடமாகவும், மக்கள் தங்களுக்குள் கொள்கைகளில் வேறுபட்டிருந்தாலும், சமூக அமைதி என்ற ஒரே குறிக்கோளை முன்வைத்து அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தலைமையில் ஒருங்கிணைந்து வாழ்ந்ததை நாம் காண முடிகின்றது.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் என்ற மதீனாவிற்கு நாடு துறந்து வந்த பொழுது, மதீனாவில் பல்வேறு கொள்கையைக் கொண்ட மக்கள் வாழ்ந்து வந்தார்கள். அவர்களில் மிகவும் வலுவான சமூக அடித்தளத்தைக் கொண்ட யூதர்களும், மற்றும் கிறிஸ்தவர்களும், தங்களது மூதாதையர்களின் பழக்க வழக்கங்களைப் பின்பற்றி வருபவர்களுமாக, மதீனா நகரம் ஒரு குழம்பிய குட்டையாகத் தான் இருந்தது.

பல்வேறு கொள்கையைக் கொண்டிருந்த இந்த மக்களை ஒருங்கிணைத்து அமைதியான சமூக வாழ்வை ஏற்படுத்த விரும்பிய இறைத்தூதர்(ஸல்) அவர்கள், அந்த பல்வேறு குலத்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, நேரடித் தொடர்புகள் அல்லது எழுத்துப்பூர்வமான ஒப்பந்தங்களைச் செய்து கொண்டார்கள். இந்த ஒப்பந்தங்களின் நோக்கம் எதுவாக இருந்ததெனில், மதீனா நகரில் பல்வேறு குலத்தவர்கள் வாழ்ந்து வந்தாலும், பல்வேறு கொள்கையைக் கொண்டவர்களாக அவர்கள் இருந்தாலும், சமூக வாழ்வில் அந்தத் தாக்கங்கள் தலைகாட்டாது, சமூகம் அமைதி தவழும் இடமாக இருந்து வர வேண்டும் என்பதாக இருந்தது.

இதனை மிகப் பிரபலமான மேற்கத்திய சிந்தனையாளரான டி.டபிள்யூ.அர்னால்டு என்பவர் இவ்வாறு கூறுகின்றார் :

ஹிஜாஸ் பிரதேசத்தில் வாழ்ந்த மக்களிடம் சமூக அமைதியை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள், இதற்கு முன் எந்த சட்டத்திற்கும் கட்டுப்படாத அந்த மக்களை முழுவதுமாக ஒப்பந்தங்களின் மூலம் கட்டுப்பட வைத்ததன் மூலம், சமூக அரசியல் தளத்தில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தினார்கள். இன்னும் அவர் கூறுகின்றார், சிறிய மற்றும் பெரிய குலத்தவர்களாக சிதறிக் கிடந்த அந்த மக்களை, தங்களுக்குள் எப்பொழுதும் பகைமை பாராட்டிக் கொண்டிருந்த அந்த மக்களை ஒருங்கிணைத்து, சமூக ஒற்றுமையை ஏற்படுத்தினார்கள்.

மக்காவின் வெற்றியைத் தொடர்ந்து, இதுவரை காலமும் முஸ்லிம்களை மரணப்படுக்கையில் தள்ளுவதற்குக் கூடத் தயங்காத இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத அந்த மக்களை மதச் சகிப்புத் தன்மையுடன் நடத்தியதோடு, அவர்களை இரக்கத்துடன் நடத்தினார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள். இத்தைகய சகிப்புத்தன்மையை இதுவரை காலமும் அரபுக்கள் தங்கள் வாழ்நாளிலே என்றுமே கண்டதுமில்லை, கேட்டதுமில்லை. இத்தைகய நற்பண்புகள் முஸ்லிம்களின் மீது மிகப் பெரும் நன்மதிப்பை அவர்கள் மத்தியில் ஏற்படுத்தியது.

இஸ்லாம் ஆட்சி செய்து கொண்டிருந்த அந்த பிரதேசத்தில், இஸ்லாமிய நீதியையும், நெறிமுறைகளையும் அமுல்படுத்திக் காட்டுவதில், மற்றவர்களைக் காட்டிலும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தான் ஒரு முன்மாதிரிமிக்கவராகத் திகழ்ந்து காட்டினார்கள். அவர்கள் அந்த மக்கள் மத்தியில் மத சகிப்புத் தன்மையையும், நீதியையும் குர்ஆன் வகுத்துக் காட்டியிருக்கின்ற வழிமுறைப்படி ஆட்சி செய்து காட்டினார்கள். இந்த ஒரு காரணத்திற்காக, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, பல்வேறு குலங்களையும், கோத்திரங்களையும் சேர்ந்த அந்த மக்கள், இஸ்லாத்தின் மதசகிப்புத் தன்மை, நீதி பரிபாலணம், அது வழங்கியிருக்கும் அமைதி தவழும் வாழ்க்கை நெறி ஆகியவற்றினால் கவரப்பட்டு, குறுகிய காலத்தில் தங்களை இஸ்லாத்தினுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டார்கள். இவ்வாறு பல குலங்களையும் ஒருங்கிணைத்த இஸ்லாம், அவர்கள் அனைவரையும் சகோதரத்துவம் என்ற ஒரே கொள்கையின் கீழ் இணைத்து, நீதிபரிபாலணம் என்பது முழு அளவில் செயல்பட்டுக் கொண்டிருந்தது. அதற்கு திருமறைக் குர்ஆன் இவ்வாறு பின்புலமாக இருந்தது.


நாம் படைத்தவர்களில் ஒரு கூட்டத்தார் இருக்கின்றார்கள். அவர்கள் சத்திய வழியைக் காட்டுகிறார்கள்; அதைக் கொண்டு நீதியும் செலுத்துகிறார்கள். (7: 181)


இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மற்ற மக்களிடம் காட்டிய மதச் சகிப்புத் தன்மைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக, நஜ்ரான் பிரதேசத்துக் கிறிஸ்தவர்களிடம் அவர்கள் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் முஸ்லிம்களின் மத சகிப்புத் தன்மைக்கும், நீதி நெறிமுறைகளுக்கும் சிறந்த சான்றுகளாகத் திகழ்கின்றன. இதனை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அந்த சமூகத்தில் முழுவதுமாக நடைமுறைப்படுத்திக் காட்டினார்கள்.

அத்தகைய ஒப்பந்தங்களின் ஒருபகுதி இவ்வாறிருந்தது :

உயிர்களும், அவர்களது கொள்கைகளும், உடமைகளும், குடும்பங்களும், அவர்களது வழிபாட்டுத் தளங்களும், இன்னும் நஜ்ரானில் வாழ்கின்ற அனைத்து மக்களும், இன்னும் அவர்களுடன் வாழ்ந்து வருபவர்களும் அல்லாஹ்வினதும், அல்லாஹ்வினது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களினதும் பாதுகாப்பின் கீழ் இருக்கின்றார்கள்.

எனவே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இதுபோன்ற ஒப்பதங்கள் மூலமாக, இஸ்லாமிய ஒழுக்க மாண்புகளை எவ்வாறு சமூகத்தில் நடைமுறைப்படுத்திக் காட்டுவது என்பதற்கான நடைமுறையையும், இன்னும் முஸ்லிம்களுடன் முஸ்லிம் அல்லாத மக்களான வேதம் வழங்கப்பட்டவர்கள் எவ்வாறு இணக்கமான முறையில் வாழ முடியும் என்பதற்கான உதாரணத்தையும் காட்டி விட்டுச் சென்றுள்ளார்கள்.

முஸ்லிம்களின் நடைமுறைப்படுத்திக் காட்டும் ஒழுக்க மாண்புகள் நீதமானதும், நடுநிiயானதும், இன்னும் அமைதிப்பூர்வமானதும் கூட. இன்னும் அதிகமாக, இத்தகைய ஒப்பந்தங்கள் மூலமாக, அதற்குப் பிரதியீடான இஸ்லாமானது வாழ்நாள் முழுவதற்குமான அமைதியையும், மற்றும் தொல்லைகளற்ற வாழ்வுக்கும் உத்தரவாதம் தருகின்றது. இன்னும் இஸ்லாத்தின் ஒழுக்க மாண்புகளை அடிப்படையாகக் கொண்டதொரு முன்மாதிரி மிக்க சமூகத்தைப் பெற்று அதன் மூலம் கருணை, இணக்கம், சகிப்புத் தன்மை மற்றும் அமைதி மிக்க வாழ்க்கையை இந்தப் பூமிப் பந்தின் மீது நிறுவுதற்கு அனைவருக்கும் அழைப்பும் விடுக்கின்றது.

அனைத்து மக்களும், அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் சரியே, அமைதியான சமூக வாழ்விற்கு ஒத்துழைப்பது அனைவரின் மீதுள்ள மிகவும் பொறுப்பு வாய்ந்த கடமையாகும். முஸ்லிம்கள் என்ற நிலையில், மற்ற மதத்தவர்ளைப் பொறுத்தவரை, முஸ்லிம்களுக்கு அல்லாஹ் கட்டளையிடுவது என்னவென்றால், ''அல்லாஹ்வைத் தனித்துவமாக வணங்குவதற்கும் இன்னும் அவனுடன் எந்தவித இணையாளர்களையும் ஆக்காதிருப்பதற்காவும்'', மேற்கண்ட நோக்கத்தை அடைந்து கொள்வதற்காக அவர்களுடன் தோள் கொடுத்துச் செயலாற்றும்படிக் கூறுகின்றான் :


(நபியே! அவர்களிடம்) ''வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே (இசைவான) ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹவீர்ர்hர்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்'' எனக் கூறும்; (மு.மின்களே! இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால்; ''நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!'' என்று நீங்கள் கூறிவிடுங்கள். (3:64)


முஸ்லிம்களும், யூதர்களும் மற்றும் கிறிஸ்தவர்களும் ஒரு பொதுவான கருத்தின் அடிப்படையில் அதாவது பரஸ்ர நல்லுணர்வு, அன்பு, அமைதி மற்றம் சகிப்புத் தன்மை ஆகியவற்றை பொதுவான நோக்கமாகக் கொண்டதன் அடிப்படையில் இணைந்து விட்டார்களென்று சொன்னால், இந்த உலகம் ஒரு வித்தியாசமானதொரு இடமாக மாறி விடும். பிளவுகளும், பிரச்னைகளும், அச்சமும், மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளும் மறைந்து, அவை எல்லாம் வரலாற்றில் தேடிப்பிடிக்க வேண்டிய நிகழ்வுகளாக ஆகி விடும், அன்பு, மதிப்பு மற்றும் அச்சமற்ற தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட புதியதொரு நாகரீகம் மலர்ந்து விடும்.

அல்லாஹ் தன்னுடைய திருமறையிலே கூறுகின்றான் :


நிச்சயமாக யூதர்களையும், இணைவைப்பவர்களையும் முஃமின்களுக்குக் கடும் பகைவர்களாகவே (நபியே!) நீர் காண்பீர்; ''நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்களாக இருக்கின்றோம் என்று சொல்பவர்களை, முஃமின்களுக்கு நேசத்தால் மிகவும் நெருங்கியவர்களாக (நபியே!) நீர் காண்பீர்; ஏனென்றால் அவர்களில் கற்றறிந்த குருமார்களும், துறவிகளும் இருக்கின்றனர்; மேலும் அவர்கள் இறுமாப்புக் கொள்வதுமில்லை. (5:82)


சில இறுமாப்புக் கொண்டவர்கள் (சிலுவை யுத்தக் காரர்கள்) இந்த உண்மையை அறிந்து கொள்ள இயலாத காரணத்தால், இரு சமூகத்திற்கும் இடையே அவர்கள் மிகப் பெரும் யுத்தத்திற்கு வழி வகுத்து விட்டார்கள். உண்மையான கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் இத்தகைய யுத்தத்தின் மூலம் இரத்தம் சிந்தப்படுவதை விரும்பக் கூடாது, தங்களுக்குள் பரஸ்பரம் ஒத்துழைத்து, அதனை தடுக்கவும் முயற்சி செய்ய வேண்டும்.

அமெரிக்காவில் நடந்து போன துரதிர்ஷ்டவசமான அந்த நிகழ்வுக்குப் பின், இத்தகைய ஒத்துழைப்புகளுக்கான விதைகள் தூவப்பட்டதற்கான அறிகுறிகள் தென்பட்டதை நாம் கண்டோம். வெறுக்கத்தக்க இந்த நாசகாரச் செயல்கள் நடந்து விட்ட பின், இரு சமூகத்திற்கும் இடையே மிகப் பெரும் இணைப்பை உருவாக்கி வைத்ததையும் நாம் பார்த்தோம். முன்னைக்காட்டிலும், இஸ்லாத்தின் பக்கம் மிக நெருக்கமாகச் சென்று அதனை ஆராய்ந்து அறிந்து கொள்ளும்படி பல கிறிஸ்தவர்கள் உற்காசமூட்டப்பட்டார்கள், அதனைப் போலவே முன்னைக் காட்டிலும் தங்களது மார்க்கத்தைப் பற்றி அதிகமான விளக்கத்தையும், குர்ஆன் கூறும் இஸ்லாமிய ஒழுக்க மாண்புகள் பற்றியும் அதிகமாக அளவில் விளக்கங்கள் கொடுக்க அதிக முயற்சியை முஸ்லிம்கள் எடுத்துக் கொண்டார்கள்.


இறைவன் நாடினால், இந்த பூமிப் பந்தில் அமைதியை முழுமையாக நிறுவுவதற்கு இஸ்லாமிய ஒழுக்க மாண்புகளே உகந்தது என்ற உண்மையை இந்த 21 ஆம் நூற்றாண்டானது விரைவில் கண்டு கொள்ளும்.

முன்னைக் காட்டிலும் இஸ்லாத்தைப் பற்றியும், அதன் ஒழுக்க மாண்புகள் பற்றியும் மக்கள் மத்தியில் இருந்த எதிர்மறையான கருத்துக்கள் மறைய ஆரம்பித்திருப்பதும், அத்தகைய தவறான எண்ணங்கள் களையப்பட்டு வருவதும், 21 ஆம் நூற்றாண்டை விரைவில் இஸ்லாமிய ஒழுக்க மாண்புகள் ஆட்சி செய்யும் என்ற நற்செய்திக்குக் கட்டியம் கூறுபவைகளாக உள்ளன.



ARTICLE BY - HARUN YAHYA 

JAZAKALLAHU HAIR TO - ONE REALISM






Friday, September 14, 2012

2012 - ஒலிம்பிக் துவக்க விழாவின் மர்மங்கள்


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அருளால் ஆரம்பம் செய்கிறேன்.




    இந்த வருடம் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்த மிக முக்கியமான நிகழ்வுதான் 2102 ஒலிம்பிக், அதன் துவக்க விழா பிரித்தானியாவின் ஒலிம்பிக் கிராமத்தில் மிகப் பிரம்மாண்டமாக நிகழ்ந்தது.இந்த நிகழ்வை உலகின் நாளா பக்கங்களிலும் உள்ள பில்லியன் கணக்கான மக்கள் தொலைக்காட்சியில் நேரடியாக பார்த்து ரசித்தனர்.ஆனால் இந்த ஆண்டின் ஒலிம்பிக் நிகவின் துவக்க மற்றும் இறுதி நிகழ்வுகளின் மறைந்த மர்மமான தகவல்கள் என்ன ?


துவக்க விழா
 
  TRAINSPOTTING SLUMDOG MILLIONAIRE போன்ற வெற்றித் திரைப்படங்களை இயக்கிய பிரித்தானிய திரைப்பட இயக்குனர் Danny Boyle தான் இந்த நிகழ்வினதும் இயக்குனர்." Isle Of Wonder " இதுதான் இந்த நிகழ்வின் சாராம்சம் அல்லது தீம் என்றும் வைத்துக் கொள்ளலாம்.ஆரம்ப விழாவின் நிகழ்வுகள் பிரித்தானிய வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.ஆரம்ப கால புராணக்கதைகளில் துவங்கி தொழில் புரட்சி மற்றும் நவீன காலம் என செல்கிறது களியாட்டங்கள்.இந்த விடயங்களை அவர்கள் சொல்லப் பயன்படுத்திய சில மர்மமான குறியீடுகளே இங்கு மிகவும் முக்கியமானது.அது பற்றி இப்போது அலசுவோம்.


பச்சைப் பசேலான சந்தோசமான நிலம்.


   ஆரம்ப நிகழ்வின் தொடக்கம் பண்டைய நாட்டுபுற இங்கிலாத்தைக் குறிக்கும் விதமாக விவசாயிகளையும் கிரிக்கெட் வீரர்களையும் கொண்டு ஆரம்பிக்கிறது.மேலும் அதன்போது பல மாயமான விசித்திரமான குறியீடுகளும் காட்டப்படுகின்றன.அப்படி காட்டப்பட்ட விசித்திரமான குறியீடுகளின் மிக முக்கியமானதும் ஆரம்ப நிகழ்வின் மையைப் புள்ளியுமானதுமான ஒரு குறியீடே அந்த மலை உச்சி. " Glastonbury Tor " என்று அழைக்கப்படும் இந்த மலை உச்சிக்கு மந்திர சக்திகள் உள்ளதாக இன்றும் அப்பகுதிகளில் நம்பப்படுகிறது.

சுருள் வடிவில் அமைந்த அந்த Glastonbury Tor மலையுச்சி நாட்டுப்புற விவசாயிகளையும் கிரிக்கெட் வீரரகளையும் மேலிருந்து நோக்கும்விதமாக அந்த காட்சி அமைக்கப்பட்டிருந்தது.மேலும் அம் மலையுச்சியில் ஒரு ஓக் மரம் (கருவாலி) நடப்பட்டிருந்தது.ஓக் மரம் ஆங்கிலேயர்களின் மூதாதையர்களான " செல்டிக் " இனத்தவர்களின் மிகப் புனிதமான மரமாகும், இம்மரம் செல்டிக் இனத்தவர்களின் பாதிரிமார்களின் மிகப்புனிதமான மரமாகும்.மேலும் அவர்களின் கருத்துப்படி அது தெய்வத்தன்மையின் உச்ச நிலைப் பிரதிநிதியாகும்.


   Glastonbury Tor இங்கிலாந்தின் பழைமையான புனிதத் தளங்களில் ஒன்று.பல விசித்திரமான கற்பனைக் கதைகளுடன் மற்றும் வரலாறுகளுடன் தொடர்புபட்டுள்ளது  இந்த இடம்.உதாரணத்துக்கு இந்த புராணக்கதையைக் கூறலாம், வராலற்று ஆதாரங்கள் கொண்டு நிரூபிக்கப்படாத ஆனால் வரலாற்றில் இருந்ததாக விவாதிக்கப்படும் பிரித்தானிய அரசரே கிங் ஆர்தர் ஆவார்.இவரின் இருப்பு பற்றி வரலாற்றுரீதியாக எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை, ஆனால் இவரைப் பற்றி அப்பகுதிகளில் பரவியிருக்கும் கிராமக்கதைகள் மற்றும் இலக்கிய தொகுப்புகள் மூலமே இவரைப் பற்றி அறியக் கிடைக்கிறது.ஆனால் ஒருசாரார் இவர் வரலாற்றில் வாழ்ந்த ஒருவர் என்று விவாதிக்கின்றனர்.இவரைப் பற்றிய வரலாற்றை எழுதியவர் " Geoffrey Of Monmouth " ஆவார். இவர் எழுதிய வரலாற்றுப் புத்தகத்தின் பெயர் " Historia Regum Britania " என்ற லத்தீன் மொழியில் எழுதப்பட்ட புத்தகத்தில் குறிப்பிடப்படும் " Avalon " என்ற இடமே இந்த Glastonbury Tor ஆகும். கிங் ஆதரின் வரலாற்றில், கிங் ஆதருடன் 12 போர் வீரர்கள் பற்றியும் கூறப்படுகிறது.

  இன்னொரு புராணக்கதையின் அடிப்படையில், Glastonbury பிரதேசத்தில் காணப்படும் இன்னொரு விசித்திரமான இடம் தான் " Chalice well ".கிறிஸ்தவர்களின் நற்செய்திகளின் அடிப்படையில் ( Gospels ) இயேசு கிறிஸ்துவுக்கு தனது கல்லறையை வழங்கிய Joseph Of Arimathea என்பவர் பிற்காலத்தில் இந்த இடத்துக்கு வந்து இயேசு கிருஸ்துவை சிலுவையில் அறைந்த போது சிந்திய ரத்தம் அடங்கிய மதுக்கோப்பையை அங்கு இருந்த கிணற்றில் விசியதாக கூறப்படுகிறது.அந்த கிணறே இன்று  அங்கு காணப்படும் Chalice Well என ஒரு புராணக்கதையும் உண்டு.அகல்வாராய்ச்சியாலர்களின் கருத்துக்கு அமைய இங்கு காணப்படும் GLASTONBURY ABBEY என்ற ஆலயம் எகிப்தின் பிரமிட்களை கட்டப் பயன்பட்ட கேத்திர கணித முறையே இங்கும் பயன்பட்டுள்ளது என்று கண்டுபிடித்துள்ளனர். 

அசல் GLASTONBURY.



GLASTONBURY ABBEY.
  


இன்று இந்த இடம் கிறிஸ்தவர்களின் புனிதப் பிரதேசமாக இருந்தாலும் இன்றும் இங்கு கிறிஸ்தவத்துக்கு முன் பின்பற்றப்பட்டு வந்த எல்லா விதமான மாய மந்திர சடங்குகள் வருடாவருடம் நடைபெற்றே வருகிறது.
Glastonbury Festival இல் பிரமிட்டின் ஆதிக்கம்.

 ஒலிம்பிக் ஸ்டேடியத்துக்கு முன்னாள் Glastonbury Tor வைக்கப்பட்டதில் நமக்குப் புரியாத விசித்திரமான விஷயங்கள் அடங்கியுள்ளது என்பது உறுதி,ஏனெனில் அந்த இடம் அன்று முதல் இன்று வரை மாய மந்திர சடங்குகளுக்கு பிரசித்திபெற்ற இடம் என்பதால்.


கிராமத்து மக்கள் வேலை செய்துகொண்டு மேபோலை (Maypole) சுற்றி ஓடிக் கொண்டிருக்கும் போது, கூட்டத்தில் இருந்து எழும்பும் ஒரு சிறுவன் ஆங்கிலக் கவிஞ்சன் வில்லியம் ப்ளேக் அவர்களின் கவிதை ஒன்றை படித்தபடி எழுந்து வருகிறான்.இந்த கவிதை அவரின் Jerusalem - The Emanation of the Giant Albion என்ற நூலில் இடம்பெற்ற ஒன்றாகும்.

ஞானமார்க்கம் (Gnosticism), Druid (செல்டிக் மத போதகர்கள் ) மற்றும் பிரீமேசனரி போன்ற விசித்திரக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட கவிஞ்சர் வில்லியம் ப்ளேக் பிரித்தானிய இலக்கிய உலகில் எப்பவும் ஒரு தூரநோக்குள்ள கலைஞ்சராக பார்க்கப்படுகிறார்.அவரது சில படைப்புக்கள் கிறிஸ்தவத்துடன் சம்பந்தப்பட்டிருந்தாலும் பல படைப்புக்கள் புரியாத விசித்திரமான கொள்கைகளை அடிப்படையாக கொண்டிருந்தன.   இவரின்    "ஜெருசலம் " என்ற படைப்பு ஜீசஸ் அவரது மாமாவான ஜோசப்புடன் Glastonbury வந்ததாக கூறப்படும் உறுதிப்படுத்தப்படாத புராணக்கதையை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டுள்ளது.

அந்த கவிதை வரிகள் ஜீசஸ் அவர்கள் தனது மாமாவுடன் இங்கு வந்து ஜெருசலத்தை இந்த சாத்தானிய இருண்ட ஆலைகளுக்கு மத்தியில் நிறுவியிருந்தால் என கேட்கிறது.இப்படி அந்த கவி வரிகள் ஒலித்துக்கொண்டிருக்கும் போது காட்சிகள் மாறுகின்றன.பசுமை நிறைந்த இங்கிலாந்தின் நிலங்களில் அந்த கவி வரிகள் குறிப்பிடும் சாத்தானிய இருண்ட ஆலைகள் தோன்றுகின்றன.அத்துடன் துவங்குகிறது தொழில்புரட்சி தொடர்பான காட்சிகள்.


  தொழில் புரட்சி


அந்த கவிவரிகள் வசிக்கப்பட்டதன் பின், இங்கிலாந்தின் பசுமையான பச்சைப்பசெலான நிலங்களில் காலடி வைக்கின்றனர் நீண்ட தொப்பிகளை அணிந்த ஒரு குழுவினர்.அக்குழுவினர் அந்த நிலங்களில் மிக முக்கியமான ஒரு மாற்றத்தை துவங்குகின்றனர்.

ஒருவருக்கொருவர் கைகளைக் குலுக்கிக் கொள்ளும் அந்த குழுவினர் தொழில் புரட்சியை ஒருங்கிணைக்கின்றனர்.அந்த நீண்ட தொப்பிகளை அணிந்த குழுவினரை Isambard Kingdom Brunel என்றழைக்கப்படும் சிவில் இஞ்சினியர் வழிநடத்துகிறார்.


Isambard Kingdom Brunel போன்று சித்தரிக்கப்பட்ட ஒருவர் Glastanbury Tor அருகிலிருந்து கொண்டு ஷேக்ஸ்பியரின் The Tempest பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு ஓக் மரம் நிலத்திலிருந்து வெளியாகி வருகிறது அதனுடன் சேர்த்து நூற்றுக்கணக்கான தொழிலாளிகள் Glastanbury Tor இன் அடியிலிருந்து வெளியாகின்றனர்.

இந்த காட்சியில் குறிப்பிட்டுக் கூறக்கூடிய மிக முக்கியமான மூன்று அம்சங்கள் இருக்கின்றன.
  • கிங் ஆர்தர் புராணக்கதையில் Annwn என்றழைக்கப்படும் பாதாள உலகுக்கு நுழைவு Glastonbury Tor இன் மேலால் என்பது,
  • தொழில் புரட்சி பற்றிய இந்த நிகழ்வுக்கு விழ ஏற்பாட்டுக் குழுவினர் வைத்த அதிகார்வபூர்வமான பெயர் " Pandemonium " ஆகும்.ஆங்கில எழுத்தாளர் John Milton எழுதிய " Paradise Lost " என்ற காவியத்தில் வரும் நரகத்தின் தலைநகரமே இந்த " Pandemonium " ஆகும்.இதன் மூலம் அவர்கள் கூறவரும் தகவல் ஆங்கில கவி வில்லியம் ப்ளேக் குருப்பிட்டது போல் இங்கிலாந்து ஒரு புதிய ஜெருசலம் ஆக மாற்றமடையாது மாறாக அது இந்த பூமியின் நரகமாகவே மாறும் என்றா ?
  • உலகில் காணப்பட்ட முடியாட்சிகளை கவிழ்த்துவிட்டு அந்த நாடுகளை தொழில் புரட்சியின் பக்கம் கொண்டு சென்றவர்கள் யாரெனில் உலகின் மிக பலம்வாய்ந்த இரகசிய சமூகங்களான Orient Freemasons மற்றும் Bavarian Illuminati போன்றவையாகும்.18 ஆம் நூற்றாண்டின் தொழில் புரட்சிக்குப் பிற்பாடு உலக அரங்கில் பல சமூக கலாச்சார மற்றும் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.




  • இன்னும் சில மர்மங்கள்....

மேலிருந்து பார்க்கும் போது தெரியும் பாரிய ஒற்றைக் கண்.


 
 
YouTube இல் கிடைத்த இந்த காணொளி இன்னும் பல விடயங்களை கூறுகிறது.

JUST CHECK IT





ஒலிம்பிக் இறுதி நாள் விழாவின் மர்மமான விடயங்கள் பற்றி அடுத்த பதிவில் 
இன்ஷா அல்லாஹ்
 பார்ப்போம்.