Thursday, June 6, 2013

டார்வினும் பண்டைய மூடக்கொள்கையின் மீள் பிரவேசமும்.


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.

பாசிசத்தின் உருவாக்கம் - பாகம் 3

Thales - பரிணாமவியலின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவர்.

18 ஆம் 19 ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் மீள் எழுச்சி பெற்ற பரிணாமக் கொள்கை பண்டைய பேகன்களின் நம்பிக்கைகளில் ஏற்கனவே வழக்கத்தில் இருந்த மூடக்கொள்கைகளில் ஒன்றாகும்.டார்வின் மூலமாக பிரபலமாக துவங்கிய இந்த கோட்பாட்டின்படி உயிரினங்கள் தற்செயலாக வந்திருக்க வேண்டும், ஒன்று மற்றொன்றாக காலப்போக்கில் மாறியிருக்க வேண்டும். இந்த அளவுகோல்படியே மனிதனும் வந்தான். அதாவது, உயிரினங்கள் ஒவ்வொன்றாக மாறி பின்னர் குரங்கு போன்ற ஒன்றிலிருந்து மனிதன் வந்திருக்க வேண்டும் என்று விளக்குகின்றது இந்த கோட்பாடு.


 கடவுளின் இருப்பை பற்றி அறியாதவர்களாக, போலியான கற்பனை சிலைகளை வணங்கி வந்த பண்டைய பேகன் கலாச்சாரத்து மக்கள் உயிர்கள் உருவானது எப்படி ? என்ற கேள்விக்கு அவர்களாகவே உருவாக்கிக் கொண்ட பதில் தான் " பரிணாமக் கோட்பாடு ".இந்த பரிணாமம் சம்பந்தப்பட்ட கருத்து பண்டைய சுமேரிய கல்வெட்டுகளில் காணப்பட்டாலும் இதற்கு ஒரு வடிவம் கொடுத்தவர்கள் பண்டைய கிரேக்கர்களே.பண்டைய பேகன் தத்துவவாதிகளான Thales, Anaximander , Empedocles போன்றவர்களின் கருத்துப்படி உயிர்கள் அதாவது மனிதர்கள், விலங்குகள் மற்றும் தாவரங்கள் அனைத்தும் காற்று - நீர் - நெருப்பு போன்ற உயிரற்ற சேர்க்கை மூலமே என்றனர்.இவர்களின் கருத்துப்படி உயிரினங்கள் என்பது நீரிலிருந்து திடிரென தோன்றியவையாகும்.பின்பு அவை பூமிக்கு ஏத்தது போல் தம்மை இசைவாக்கிப்படுத்திக் கொண்டது.

தேல்ஸ் தனது அதிக காலத்தை எகிப்திலேயே கழித்தார்.அங்குதான் " சேற்றிலிருந்து உயிரினங்கள் தானாகவே தோன்றியது " என்ற ஒரு மூட நம்பிக்கை பரவலாக நம்பப்பட்டு வந்தது.நைல் நதியில் வருடாந்தம் ஏற்படும் வெள்ளப்பெருக்கு காரணமாக அடித்து வரப்படும் வண்டல் மற்றும் களிமண் காரணமாக நைல் நதியை சுற்றியுள்ள பகுதி செழிப்பாகும், இந்த வருடாந்த நிகழ்வே எகிப்தியர்களை அப்படி நம்பத்தூண்டியது.பண்டைய எகிப்தியர்களின் நம்பிக்கைப் படி ஆரம்பத்தில் வானம்,பூமி,பிறப்பு,இறப்பு ஏன் கடவுள் கூட இருக்கவில்லை.படைப்பின் ஆரம்பம் நைல் நதியையே குறித்து நிற்கிறது.இது 'நு' என்று அழைக்கப்படுகிறது.இந்த நீரிலிருந்தே Atum என்ற கடவுளும் உருவானதாக எகிப்தியர்கள் நம்பினர்.'நு' என்று அழைக்கப்படும் இருண்ட எல்லையற்ற நீர்ப் பள்ளத்தாக்கில் இருந்து தானாகவே வெளிப்பட்ட முதல் படைப்புத் தான் இந்த கடவுள் என்று எகிப்தியர்கள் நம்புகின்றனர்.இவர்  திரும்பவும் அந்த பள்ளத்தாக்குக்கு திரும்பி சென்றால் இந்த உலகின் படைப்பு நின்றுவிடும் என்று எகிப்தியர்கள் நம்பிக்கை வைத்தனர்.
According to Egyptians GOD ATUM


எகிப்தியர்களின் இந்த நம்பிக்கையால் கவரப்பட்ட தேல்ஸ் அதற்காக வாதாடினார்.கடைசியில் எந்தவிதமான ஆய்வுகள் பரிசோதனைகள் இல்லாமல் அந்த நம்பிக்கையை ஒரு கோட்பாடாக தனிப்பட்ட முறையில் முன்வைத்தார்.பூமி தட்டை என்றும் அது நீரில் மிதந்து கொண்டிருக்கிறது என்றும் இவர் நம்பினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Anaximender இவர் தேல்சின் மாணவர்களில் ஒருவர்.இவர் தனது குருவின் கோட்பாடுகளை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை.அவர் அதை வேறொரு பாணியில் முன்வைத்தார்.
  1. பிரபஞ்சம் எப்போதும் இருந்தது அது என்றைக்கும் அழியாமல் இருக்கும்.
  2. உயிரினங்கள் ஒன்றிலிருந்து இன்னொன்று உருவானவை அல்லது பரிணாமம் அடைந்தவை.
பரிணாமம் பற்றி விவாதிக்க பண்டைய காலத்தில் எழுதிவைத்த முதல் குறிப்பு ஒரு மரபுக்கவிதையாகும்.இதை எழுதியவர் Anximander தான்.அந்த கவிதையின் பெயர் 'On Nature'.இந்த தத்துவ கவிதையில் Anaximender பூமி,விலங்குகள்,தாவரங்கள் மற்றும் மனித இனம் என்பவற்றின் பரிணாமம் பற்றி விளக்கியுள்ளார்.அவரின் தத்துவப்படி, சூரியனின் சூடான கதிர்களால் கடல் வற்றத்துவங்கிய போது அதிலிருந்து வெளியேறி பூமிக்கு வந்த மீன் இனம்தான் மனிதன் மற்றும் விலங்குகளின் ஆரம்ப உயிரினம்.சடப்பிறப்புக் கோட்பாடு என்ற தனது நூலில் உலகின் முதல் உயிரினம் மூடுபனியில்தான் உருவானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Anaximender

கிரேக்க நம்பிக்கைகளின் படி தவளையிளிருந்து பரிணாமம் அடைந்த  கிரேக்க  கடவுள்  Apollo



பண்டைய பேகன் தத்துவவியலாளர்களால் முன்வைக்கப்பட்ட பரிணாமக் கொள்கை எனும் எண்ணப்போக்கு மீண்டும் 18 ஆம் நூற்றாண்டில் மேற்கத்தைய அறிஞ்சர்களால் முன்வைக்கப்பட்டது.

பண்டைய பேகன் கொள்கைகளில் அதிக ஈடுபாடு கொண்டவராக காணப்பட்ட டார்வினின் தாத்தாவான Erasmus Darwin ஒரு பரிணாம கொள்கை நம்பிக்கையாளர்.ஸ்காட்லாந்தில் இன்றும் இயங்கி வரும் Canongate Kilwinning  Masonic Lodge இல் Master பதவியில் இருந்தவராவார்.பிரஞ்சு புரட்சியை மிகக் கொடூரமான முறையில் வழிநடத்தியவர்கலான Jacobins அமைப்பினரருடன் மிக நெருங்கிய தொடர்பை பேணிய இவர் மதங்களின் மீது குரோதம் பரப்பிய Illuminati அமைப்புடனும் தொடர்புகளை பேணி வந்தார்.தனது 8 ஏக்கர் தாவரவியல் பூங்காவில் அவர் மேற்கொண்ட ஆய்வு பின்னாட்களில் Darwinism க் கொள்கைக்கு உரமூட்டியது.அவர் தனது ஆய்வுகளை Temple Of Nature மற்றும் Zoonomia போன்ற நூல்களில் எழுதிவைத்தார்.

Erasmus Darwin னும் அவர் எழுதிய நூற்களும்.






இன்ஷா அல்லாஹ் 
தொடரும் ...



தொடர்புடைய பதிவுகள்.









Friday, May 10, 2013

நவீன பேகன் கலாச்சாரமும் பாசிசத்தின் வேர்களும்.


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.



பாசிசத்தின் உருவாக்கம் - பாகம் 2  

அரிஸ்டாட்டில் 

ஐரோப்பிய பேகன் கலாச்சாரம் கிருஸ்தவ மதத்தின் பரம்பல் மூலம் ஐரோப்பியாவிலிருந்து  மறைந்து போனாலும் முழுமையாக அது அழிந்துபோகவில்லை.  கற்கைகள், சில குழுக்கள் மற்றும் பிரீமேசனரி போன்ற இரகசிய சமுதாயங்களின் பலத்தால் பண்டைய பேகன் கலாச்சாரம் மிக ரகசியமாக காக்கப்பட்டு வந்தது.பின்பு 16  ஆம் 17 ஆம் நூற்றாண்டுகளில் அது பாசிசம் என்ற புதுப் பெயர் கொண்டு ஐரோப்பிய களத்துக்கு வந்தது.ப்லேடோ மற்றும் அரிஸ்டாடில் போன்ற கிரேக்க  சிந்தனையாளர்களின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட  ஐரோப்பிய சிந்தனையாளர்களில் சிலர் பேகன் உலகின் கொள்கைகளை  சிந்தனைகளை புதுப்பிக்க நினைத்தனர்.

 இந்த நவீன பேகன் காலச்சாரம் 19 ஆம் நூற்றாண்டளவில் கிருஸ்தவத்தின் செல்வாக்கையும் மீறி தன்னை  முழு ஐரோப்பாவிலும் மிக ஆழமாக நிலைநிறுத்திக் கொண்டது. இந்த நவீன பேகன் கலாச்சாரத்தின் முன்னணியாளர்கள் " Humanist " என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். கிரேக்க சிந்தனைகளில் கவரப்பட்ட இவர்கள் அவற்றை நடைமுறைப்படுத்த நினைத்தனர். கடவுள்  இல்லை என்பதே இந்த " Humanist " களின் அடிப்படை நெறி தவறிய கொள்கை.17 ஆம் 18 ஆம் நூற்றாண்டுகளில் Humanist குழுவினர் Philosophy Of Enlightenment  இன் கொள்கைகளையும் தம் சித்தாந்தங்களில் இணைத்துக்கொண்டனர்.அறிவொளி தத்துவவாதிகள் சடவாத சிந்தனையின் மூலம் கவரப்பட்டு அதை கடுமையாக பாதுகாத்தனர்.சடவாத சிந்தனை Leucippus,Democritus போன்ற கிரேக்க சிந்தனையாலர்களினால் முன்வைக்கப்பட்ட ஒரு பிடிவாதமான கொள்கையாகும்.

பேகன் கலாச்சரத்தின் மறுபிறப்பு பிரான்ஸ் புரட்சியின் போது நன்கு அவதானிக்கப்பட்டது.பிரெஞ்சு புரட்சியை வழிநடத்தியவர்கலான The Jacobins என்ற அமைப்பு பேகன் கலாச்சாரத்தில் தாக்கத்தை கொண்டதாகவும் கிருஸ்தவ மதத்தின் மீது வெறுப்பை கொண்ட ஒரு அமைப்பாக காணப்பட்டது.புரட்சியின் காலத்தின் போது கிறிஸ்தவத்தை நிராகரித்தல் என்ற விடயம் பரவலாக முன்னெடுக்கப்பட்டது.கிருஸ்தவத்துக்குப் பதிலாக     ' Religion Of Reason' என்ற புதிய மதம் ஒன்று உருவாக்கப்பட்டது.இந்த மதத்தை முன் நின்று உருவாக்கியவர்கள் ANTONIYO FRANCIOUS - JACQUES HERBERT - PIERRE GASPARD போன்றவர்களே.கிறிஸ்தவத்துக்கு மாற்றீடாக வந்த இந்த புதிய மதம் கிறிஸ்தவத்தினால் இல்லாமாக்கப்பட்ட பண்டைய பேகன் மதத்தின் குறியீடுகளை மீண்டும்  வழக்கத்துக்கு கொண்டு வந்தது.இதன் முதல் படி 1790 July 14 அன்று புரட்சிகர வழிபாடு (Revolutionary Worship) என்று வழக்கத்துக்கு வந்தது.



பிரெஞ்சு புரட்சியை வழிநடத்தியவர்கலான THE JACOBINS அமைப்பின் தலைவர்களில் ஒருவரான Maximilian De Robesperrire தமது நடவடிக்கைகளை Cult Of Supreme Being என்ற அமைப்பின் கீழ் கொண்டு சென்றார்.இந்த அமைப்பு பிரெஞ்சு புரட்ச்சிக்குப் பின் அரச மதமாக மாறியது.இந்த அமைப்பின் செயற்பாடுகளில் மிகப் பிரபலமான செயற்பாடு எது எனில், பிரான்சின் மிகப் பிரபலமான கிருஸ்தவ தேவாலயமான Notre Dame De Paris, Temple Of Reason ஆக மாற்றப்பட்டதே.இதன் போது கிருஸ்தவ அடையாளங்கள் அழிக்கப்பட்டு அந்த அமைப்பின்அடையாளங்கள் பொருத்தப்பட்டது.மிக முக்கியமாக பண்டைய பேகன் கலாச்சாரத்தின் அறிவின் தேவதையாக வணங்கப்பட்ட Sophia வின் சிலை அங்கு நிறுத்தப்பட்டது.

அந்த தருணம்...


இப்படிப்பட்ட பேகன் கலாச்சார குறியீடுகள் மற்றும் நடைமுறைகள் பிரெஞ்சு புரட்சியின் பல இடங்களில் காணலாம்.அதில் ஒன்றுதான் புரட்ச்சியாளர்கள் அணிந்த Liberty Cap, இது பண்டைய பேகன் கலாச்சாரத்தில் இடம்பெற்ற மித்ரா கடவுள் வழிபாட்டுடன் தொடர்புடையது.இது பிரெஞ்சு புரட்சியின் ஒரு அடையாளமாக கருதப்பட்டது.இதை Phrygian Cap என்றும் அழைப்பார்கள்.
Phrygian Cap or Liberty Cap

Phrygian Cap or Liberty Cap in Mithraic Mystries
In French Revolution




மேலே உள்ள படத்தில் குறிப்பது என்னவெனில், பிரெஞ்சு புரட்சியின் போது மிகவும் பிரசித்தி பெற்றிருந்த The Cordeliers Club இன் அங்கத்தவர் அனுமதி அட்டை.இது பிரெஞ்சு புரட்சியின் ஒரு முக்கியமான புள்ளியான Maximilian De Robesperrire க்கு சொந்தமானது.அதில் விசித்திரமான சில குறியீடுகள் காணப்படுகின்றன, ஒன்று ஒற்றைக்கண் மற்றது Liberty Cap.அதில் காணப்படும் இன்னுமொரு விடயம் தான் படத்தில் குறித்துக் காட்டப்பட்டுள்ள பகுதி.அந்த இடத்தில் மரத்தண்டுகளின் பிணைப்பு மூட்டை ஒன்று காணப்படுகிறது, அதனுடன் சேர்த்து ஒரு கோடரியும் கட்டப்பட்டுள்ளது.இதற்கு லத்தீன் மொழியில் Fascis என்று அர்த்தம்.

இப்போது புரிந்திருக்குமே Fasism என்ற வார்த்தை எப்படி ஒருவானதேன்று.

பேகன் கலாச்சாரத்தின் மறுபிறப்பும் அதன் அறிவார்ந்த ஆதிக்கமும் ஐரோப்பாவில் பாசிசம் என்ற ஒரு கொடிய அரசியல் சித்தாந்தத்துக்கு வழி கொடுத்தது.மேலும் ஹிட்லரின் நாசி கொள்கைகள் பண்டைய பேகன் கலாச்சாரத்க்குரிய ஸ்பார்டாவை அடிப்படையாகக் கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.




ஜசாகல்லாஹு ஹைர் 
இன்ஷா அல்லாஹ் 
தொடரும் 



Friday, April 19, 2013

அல்லாமா இக்பால் - பேருரையிளிருந்து ஒரு சிறு துளி.






(இஸ்லாமிய கவிஞர் அல்லாமா இக்பால் (ரஹ்) அவர்கள் 1930 ஆம் ஆண்டு அனைத்து இந்திய முஸ்லிம் லீக் மாநாட்டில் ஆற்றிய தலைமைப் பேருரையின் ஒரு பகுதி)

குறிப்பு : இந்த உரை அடிமை இந்தியாவில் ஆற்றப்பட்டிருந்தாலும், இன்றைக்கும் சுதந்திர இந்தியாவில் அடிமைகளைப் போல நடத்தப்படுகின்றதொரு கூட்டம் இருந்து கொண்டிருக்கின்றது என்பதால், காலத்தினால் பழமை வாய்ந்ததாக இருந்தாலும், சூழ்நிலைக்கு ஒத்துவருவதால் இங்கு பிரசுரிக்கின்றோம்.


இக்கட்டான சூழ்நிலையா? இஸ்லாம் உங்களைக் காப்பாற்றும்!


இந்தியாவில் முஸ்லிம் அரசியல் வரலாறும், செயல்களும் மிகமிக நெருக்கடியை அடைந்துள்ள கட்டமொன்றில் நான் தலைமை உரை ஆற்றுகின்றேன். எந்த கட்சியையும் நான் தலைமை வகித்து நடத்தவிலலை. எந்த தலைவரையும் நான் பின்பற்றவில்லை. இஸ்லாத்தின் சட்டம், கொள்கை, கலை, சரித்திரம், வழிமுறை முதலிய ஒவ்வொன்றையும் ஆழ்ந்து வாசிப்பதில் என் வாழ்வின் பெரும் பாகத்தைச் செலவழித்திருக்கின்றேன். இஸ்லாத்தின் இவ்வித ஆராய்ச்சி என்னை உலக விவகாரங்களுடன் இணைத்து சேர்க்கும்படிச் செய்தது.

கிறிஸ்த்துவ மதம் ஐரோப்பாவில் பரவிய போது மதமென்பது ஒருதனிப்பட்ட நபரின் ஆத்மார்த்த விவகாரமென்றும், அவனது உலக வாழ்விற்கும், அதற்கும், எவ்வித சம்பந்தமுமில்லையென்றும் ஐரோப்பிய மக்கள் கருதினர். இஸ்லாமோ, மனிதனின் மனதில் பொதிந்து கிடக்கும் ஆன்மீக உலக விஷயங்களைத் தனித்தனியே துண்டித்து வைக்கவில்லை.

இஸ்லாத்தில் ஆண்டவனும் - உலகமும், உணர்ச்சியும், செயலும், பள்ளிவாயிலும், அரசாங்கமும் ஒன்றை விட்டொன்று விலக்க முடியாத அளவு பிணைப்பு வாய்ந்தவை எனக் கூறப்படுகின்றது. மனிதன் என்பவன் உணர்ச்சி உலகிலிருந்து அடியோடு அகற்றப்படக் கூடியவனாக உலகில் சஞ்சரிப்பவனல்ல. இஸ்லாத்தில் உணர்ச்சியும், செயலும் சம்பந்தப்பட்டு உணர்ச்சியே செயலாக பரிணமிப்பதாகக் கருதப்படுகிறது.

ஐரோப்பாவில் இவ்விஷயம் உணரப்படவில்லை. இன்று அவர்கள் தங்களுடைய தவறை உணர ஆரம்பித்துள்ளனர். ஐரோப்பிய மதங்களிலும், அரசியல் விஷயங்களிலும், பௌதீக – வைதீக வேறுபாடு இருக்கிறது. இதனால் ஐரோப்பிய அரசாங்க நிர்வாக வாழ்விலிருந்து கிறிஸ்தவ மதம் தனியாகப் பிரிக்கப்பட்டு விட்டது. இதன் விளைவாக ஐரோப்பாவில் நாடுகள் எல்லாம் மானிடத்துவ நலன்களை கொண்டல்லாமல் தேசீய நலன்களை அடிப்படையாகக் கொண்டே அமைக்கப்பட்டிருக்கின்றன.

தற்சமயம் தேசியம் லட்சியம் முஸ்லிம்களின் மதக் கொள்கையுடன் போட்டியிட்டு வேகமாக வளர்கிறது. இதனால் இஸ்லாத்தின் மானிடத்துவ வேலைகளெல்லாம் எதிர்க்கப்படுகின்றன. ஜாதிய உணர்ச்சி வேகமாக வளர்ந்து வருவதால் தர வேறுபாடுகள் அதிகரித்து வருவதுடன் இஸ்லாத்தின் தரத்தையே எதிர்ப்பதாகவும் இருக்கிறது.

தனிப்பட்டவர்கள் வாழ்விலும், அரசாங்கங்களின் செயல்முறைகளிலும் மதமே மிக மிகச் சக்தி வாய்ந்ததென்று நம்புபவன் நான். இறுதிக்கதியோட்ட முடிவே இஸ்லாம். அதற்கு வேறொரு முடிவும் கிடையாது என்பது என் திட நம்பிக்கை.

மதம் என்பது தனிப்பட்ட நபரின் அந்தரங்க விஷயமென்ற மனப்பான்மையைத் தான் ஐரோப்பாவில் கிறித்துவ மதம் பரவச் செய்தது. ஆனால் பரிசுத்த குர்ஆன் ஷரீபில் அருளப்பட்டபடி நாயகம் (ஸல்) அவர்களின் மத போதனைகளின் தன்மை முற்றிலும் மாறானவை. அது வைதீகக் கோட்டபாடுகளை மட்டும் கொண்டவையல்ல. அரசியலும் சட்ட கோட்பாடுகளும் இஸ்லாம் மதத்தின் அடிப்படைகளாக விளங்குகின்றன. ஆதலால் இஸ்லாத்தின் மத இலட்சியம் வாழ்வில் தீவிர தொடர்பு கொண்டுள்ளது. தேசிய அரசியல் இலட்சியம் இஸ்லாத்தின் கட்டுப்பாட்டுத்தன்மையை அகற்றுவதாயிருப்பின் அதை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ள முடியாது.

இப்பொழுது நெருக்கடியை நீக்க ஒரே திட இலட்சியத்தில் கட்டுப்பாடான விசுவாசமும் ஆழ்ந்த விருப்பமுள்ள மக்களுக்குத் தான் சாத்தியமாகும். இத்தகைய கட்டுப்பாடான ஐக்கிய விருப்பத்தை ஏற்படுத்துவது உங்களுக்கு சாத்தியமா? ஆம்! சாத்தியம் தான். பிரிவு நலன்களை உதறித் தள்ளுங்கள். சொந்த விருப்பு வெறுப்புக்களை அடித்து விரட்டுங்கள். உங்கள் லட்சியங்களை மனதில் வைத்து உங்கள் தனிப்பட்ட செயல்களை அடையவும், கூட்டுச் செயல்களுடையவும், மதிப்பை உறுதிப்படுத்தவும் பயிற்சி செய்து கொள்ளுங்கள். சொல்லிலிருந்து உணர்வுக்கு மாறுங்கள். சொல் என்பது யூகம் தான். உணர்வு என்பது தீபம், வாழ்வு ஐக்கிய எனலாம்.

நான் முஸ்லிம்களின் வரலாறுகளிலிருந்து ஒரு பிடிப்பினையை கற்றிருக்கின்றேன்.

முஸ்லிம்களின் வரலாற்றில் நெருக்கடியான சமயங்களில் இஸ்லாம் தான் முஸ்லிம்களைக் காப்பாற்றி இருக்கின்றதே தவிர முஸ்லிம்கள் இஸ்லாத்தைக் காப்பாற்றிடவில்லை.

இன்று நீங்கள் இஸ்லாத்தின் பக்கம் உங்கள் கண்ணோட்டத்தைத் திருப்பி அதில் காணப்படும் முக்கிய இலட்சியங்களிலிருந்து ஏதேனும் உணர்ந்து கொள்ள விரும்பினால், சிதறுண்டு கிடக்கும் உங்கள் சக்திகளை ஒன்றுபடுத்தியவர்களாவீர்கள்! இழந்து போன உங்கள் சக்தியை பெற்றவர்களாவீர்கள்! குர்ஆன் ஷரீப் கூறுவதைக் கவனியுங்கள்.

விசுவாசிகளே! உங்களையே பாதுகாத்துக் கொள்ளுங்கள். நீங்கள் நேரான வழியில் சென்றால் வழிதவறிய எவனுடைய தீங்கும் உங்களைப் பாதிக்காது. (அல்குர்ஆன் 5:105)

அன்புள்ள சகோதரர்களே! அல்லாமா இக்பால் (ரஹ்) அவர்கள் 80 ஆண்டுகளுக்கு முன்னாள் கூறிய கருத்துக்கள் இன்றைய இந்திய அரசியலுக்கும், இந்திய முஸ்லிம்களுக்கும் மிகப் பொருத்தமானது தான். இக்பால் (ரஹ்) அவர்களின் பேச்சிலிருந்து நாம் உணர வேண்டிவை இதை தாம் :

இந்திய முஸ்லிம்களைப் பாதுகாப்பது எந்தவொரு அரசியல் கட்சியோ, தலைவர்களோ அல்ல. மாறாக இஸ்லாமும் அதன் கொள்கைகளும் தான்.

இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையை புறக்கணித்து விட்டு வெறும் இனம், சமூகம், உணர்ச்சிகளின் அடிப்படையில் நடத்தப்படும் எந்தவொரு இயக்கமோ, கட்சியோ, இஸ்லாமிய இயக்கம் என்றோ கூற முடியாது. அதற்கு அல்லாஹ்வின் அருளும் கிடைக்காது.

எனவே இந்தியா சுதந்திரம் பெற்று 60 வருடங்களான பின்பும் இந்திய முஸ்லிம்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. அல்லது பறிக்கப்படுகின்றன என்றால், இந்திய முஸ்லிம்கள் தங்களது எதிர்காலம் பற்றி அச்சப்படுகின்றார்கள் என்றால், அதற்குக் காரணம் முஸ்லிம்கள் தங்களை ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்களென எண்ணுகின்றனரே தவிர தாங்கள் உயர்ந்த கொள்கைகளை உடைய இலட்சியவாதிகள் என எண்ணுவதில்லை. எப்பொழுது இந்திய முஸ்லிம்கள் தங்களை சுயநலமிக்க, கூடுவிட்டு கூடுபாயும் அரசியல்வாதிகளைத் தலைவராக கொண்ட கட்சிகளின் தொண்டர்களாகக் கருதாமல் எக்காலத்திற்கும் சிறந்த இஸ்லாத்தின் சித்தாந்தங்களை செயல்படுத்திக் காட்டும் கொள்கை வீரர்களாக மாறுவார்களோ அன்று தான் இந்திய முஸ்லிம்கள் நம்பிக்கை மிக்க, அச்சமில்லா எல்லா உரிமைகளும் கிடைக்கப் பெற்ற சமுதாயமாகத் திகழ்வார்கள்.

குர்ஆன் கூறுவதைக் கேளுங்கள்!

மனிதர்களே! உங்களில் யார் உண்மையாக விசுவாசம் கொண்டு நற்செயல்கள் புரிகின்றனரோ அவர்களுக்கு கீழ்க்கண்ட வாக்குறுதிகளை அல்லாஹ் வழங்குகின்றான்.

அவர்களின் முன்னோர்களை ஆட்சியில் அமர்த்தியது போன்றே இவர்களையும் ஆட்சியில் அமர்த்துவான்

அவன் விரும்பும் நேரிய மார்க்கத்தில் அவர்களை உறுதிபட வாழ வைப்பான்.

அவர்களுடைய அச்சத்தைப் பாதுகாப்பாக்கி விடுவான்.

அல்லாஹ் கூறுகின்றான் :


அவர்கள் எனக்கு எதனையும் இணை வைக்காது என்னையே வணங்கவும். இதன் பின்னரும் உங்களில் எவரேனம் நிராகரிப்பாளர்களாகி விட்டால் நிச்சயமாக அவர்கள் பெரும்பாவிகள் தாம். (அல்குர்ஆன் : 24:55)


ஜசாகல்லாஹு ஹைர் 
TO
A ONE REALISM 


Tuesday, April 9, 2013

" The Hunger Games " - திரைப்படம் கூறவரும் தகவல் என்ன ?


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அருளால் ஆரம்பம் செய்கிறேன்.


 "THE HUNGER GAMES" - POSTER




இந்த ஆண்டு வெளிவந்த வெற்றித் திரைப்படங்களில் ஒன்றான " The Hunger Games " , எதிர்காலத்தில்  Dystopian உலகில் சர்வாதிகார கொடுன்கொன்மைமிக்க செல்வந்தர்களால் ஆளப்படும் அப்பாவி மக்கள் பற்றிய கதை.புதிய உலகுக்கான பிரகடனம் மூலம் உலகின் மேற்தட்டு செல்வந்த கும்பல் உருவாக்கத் துடிக்கும் சமூகத்தினை இந்த திரைப்படம் பிரதிபலிக்கிறதா ?. " The Hunger Games "மூலம் அவர்கள் சித்தரித்த உலகின் அடையாளங்களைப் பார்ப்போம், மேலும்  அவை எப்படி புதிய உலகுக்கான பிரகடம் மூலம் உருவாக்கத் துடிக்கும் உலகுத்துடன் ஒத்துபோகின்றது என்று பார்ப்போம்.


மிகப்பெரிய அளவில் உலகம் பூராகவும் சந்தைப்படுத்தடும் ஒரு வருடாந்த விளையாட்டுப் போட்டியே  " தி ஹங்கர் கேம்ஸ் " என்று அழைக்கபடுகிறது.உலகளாவியரீதியில் பரபரப்பை ஏற்படுத்தும் இவ்விளையாட்டுப் போட்டி இளையோர்கள் மற்றும் வயது வந்தவர்களிடம் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாக திரைப்படம் சித்தரிக்கின்றது.

DYSTOPIAN உலகில் (DYSTOPIAN என்றால் என்ன ? விக்கியில்) நிகழ்வதாக சித்தரிக்கப்பட்டுள்ள " தி ஹங்கர் கேம்ஸ் " திரைப்படம், சமூக - பொருளாதார மற்றும் அரசியல் என எல்லா கோணங்களிலும் பார்த்தாலும் எதிர்காலத்தில் செல்வந்த மேட்டுக்குடி மக்கள் உருவாக்கத் துடிக்கும் ஒரு இருண்ட உலகத்தைக் காட்டுகிறது.மேலும் பட்டினியால் வாடும் மக்களின் முதுகில் வாழும் மேட்டுக் குடிகள் பற்றி இந்த திரைப்படம் காட்டுகிறது.




இளையோருக்கான புதிய உலகுக்கான பிரகடனம்

இந்த திரைப்படம் இடம்பெறும் பின்னணியை நாம் கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால் நமக்கு பளிச்சென்று தெரியவரும் ஒரு விடயம் தான், இன்றைய உலக செல்வந்த உயருக்கு மக்களால் உருவாக்கத் துடிக்கும் புதிய உலகுக்கான பிரகடனத்தின் சாயல்கள் இந்த திரைப்படத்தில் காட்டப்படுகிறது.அப்படிப்பட்ட புதிய உலகுக்கான பிரகடனத்தில் காணப்படும் மிக மிக மிக முக்கியமான அடையாளம் தான் எல்லா நாடுகளும் களையப்பட்டு தனி ஒரு நாடாக இந்த உலகை மாற்றி அதை குறிப்பிட்ட இடத்தில் இருந்து கொண்டு அவ்விடத்தை இவ்வுலகின் தலைநகரமாகக் கொண்டு ஆள்வது." Panem " என்ற நாட்டில் இந்த நிகழ்வுகள் நடப்பதாக கற்பனை செய்யப்பட்டு அங்கிருந்துகொண்டு மக்கள் ஆளப்படுவது நாம் மேலே சொன்ன அந்த அடையாளத்தை பிரதிபலிக்கிறது.இந்த திரைப்படத்தில் அமெரிக்காவும் கனடாவும் ஒன்றிணைக்கப்பட்டு ஒரு பிராந்தியமாக மாற்றப்பட்டு ஒரு இடத்தில்  இருந்து கொண்டு ஆளப்படுகிறது.நிறைய பேரின் கருத்துக்கு அமைய புதிய உலகுக்கான பிரகடனத்தின் முதல் படி இதுதான் என்கிறார்கள்.



'Panem' ஆகா மாற்றப்பட்ட அமெரிக்க மற்றும் கனடா பிராந்தியத்தின் தலைவர்.[திரைப்படத்தில்]

கண்காணிப்பை அடிப்படையாகக் கொண்ட அதி தொழில்நுட்ப சர்வாதிகாரம் ஊடக கட்டாயப்படுத்தல் போலீஸ் அடக்குமுறை மற்றும் சமூக வர்கங்களின் தீவிர பிரிப்பு போன்றவற்றின் காரணமாக அமெரிக்காவின் ஜனநாயகம் மற்றும் சுதந்திரம் என்ற கோட்பாடுகள் தடயம் தெரியாமல் அழிக்கப்பட்டிருந்தது.PANEM நாட்டின் பெரும்பாலான மக்கள் மூன்றாம் நிலை நாடுகளின் மக்களைப் போன்ற ஒரு வாழ்க்கைத் தரத்தையும் தொடர்ந்தும் வறுமை - பஞ்சம் - நோய் போன்றவற்றை சந்தித்த வண்ணம் வாழ்கின்றனர்.இப்படிப்பட்ட கடினமான வாழ்க்கை நிலைமைகள் காரணமாக வட அமெரிக்காவின் பொருளாதார நிலைமைகள் சீர்குலைந்து போயுள்ளன.திரைப்படத்தின்படி,கதையின் நாயகி கட்னிஸ் எவர்டீன் 12 ஆவது மாவட்டத்தில் வாழ்கிறாள்.இந்த மாவட்டம் தொழில்புரட்சிக்கு முந்தைய ஒரு நிலைமையை ஒத்த ஒரு சூழலாக காட்டப்படுகிறது.


 மேட்டுக்குடியினருக்கு நரபலி.
12 ஆவது மாவட்டத்தின் காணிக்கை.
மேட்டுக்குடியினருக்கு எதிராக கிளர்ச்சியை செய்ததை நினைவூட்டும் பொருட்டு, அதை பெரிய ஒரு துரோகமாக கருத்தில் கொண்டு ஆளும்வர்கத்தினர் இந்த Hunger Games ஐ அறிமுகம் செய்கின்றனர்.12 மாவட்டங்களிலும் வாழும் மக்களின் கீழ்படியாமைக்கு தண்டனை வழங்க எல்லா மாவட்டங்களிலும் 12 க்கும் 18 க்கும் இடைப்பட்ட வயதில் உள்ள ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இந்த போட்டிகளுக்கு வழங்கப்படவேண்டும்.பண்டைய ரோம க்லடியெடர்கள் போல் இறக்கும் வரை போராட வேண்டும்.மேலும் இந்த போட்டி தலைநகர் உட்பட அனைத்து மாவட்டங்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும்.இந்த போட்டியின் விதிகள் மனித வாசமே அற்ற விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.  மக்களை பட்டினியால் வாட விடுவதன் மூலம் அவர்களை தொடர்ந்து அடக்குமுறைக்கு உள்ளாக்கலாம் என்று இந்த திரைப்படத்தின் மூலம் குறிப்பிடப்படுகிறது.அந்த விளையாட்டின் பெயரும் அதையே நினைவு படுத்துகிறது.

இந்த போட்டிக்காக தெரிவு செய்யப்பட ஆணும் பெண்ணும் " Tributes " என்று அழைக்கப்பட்டனர்.அதாவது அஞ்சலி அல்லது காணிக்கை.இந்த வார்த்தை சாதரணமாக கடவுளுக்கு எதாவது நேர்சை செய்தவர் கடவுளுக்கு அந்த நேர்சையை கொடுக்கும் போது அதுக்குப் பெயர்தான் காணிக்கை.வரலாற்றிலும் வரலாற்றுக்கு முந்திய காலப்பகுதிகளும் நரபலி என்பது கடவுளுக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய காணிக்கை.அந்த கால ஆட்சியாளர்களும் மந்திரவாதிகளும் அமானுஷ்ய சக்திகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இப்படி நரபலி கொடுப்பார்கள்.எனவே இந்த இந்த திரைப்படத்தில் இவர்களுக்கு Tributes என பெயர் வைத்ததன் உள் கருத்துதான் என்ன ???.

A single child cemetery called Tophet in early Carthegian Empire.

கிறிஸ்துவுக்கு முன் வட ஆப்ரிக்க பகுதிகளில் பரந்திருந்த கார்தேஜியன் இராஜதானியில் பால் (Baal) மற்றும் மொலோச் கடவுள்களுக்கு சிறு குழந்தைகளை நரபலி கொடுப்பார்கள்.ஆனால் இங்கு வளர்ந்த வாலிபர்களை தலைநகருக்காக பலி கொடுப்பார்கள்.



    இந்த திரைப்படத்தில் இளைஞர்கள் ஒரு சடங்குரீதியாக கொல்லபடுவது மேட்டுக்குடி மக்களால் ஒரு ரியாலிட்டி ஷோவாக உருவாக்கப்பட்டு நாடு பூராகவும் ஒரு கொண்டாட்டத்துக்குரிய நிகழ்வாக உருமாற்றம் செய்து மேலும் ஏழை மக்களை அதில் பங்குகொள்ளச் செய்து அவர்களின் சார்பாக வந்த இளைஞர்கள் யுவதிகள் வன்முறையில் ஈடுபடுவதை ரசிக்கும்படி செய்கின்றனர்.இந்த நிலைமையை ஏற்படுத்த மேட்டுக்குடி மக்களுக்கு பக்கபலமாக இருப்பது அவர்களால் செயற்படுத்தப்படும் ஊடகங்களே.எந்தவிதமான குப்பையாக இருந்தாலும் அவற்றை சாதாரண மக்களிடம் கொண்டு போய் அதை அவர்களின் தினசரி வாழ்வில் ஒரு அங்கமாக மாற்ற ஊடகங்களால் முடியும் என்பதை இத்திரைப்படம் காட்டுகிறது.  

இந்த வன்முறை விளையாட்டு ஒரு ரியாலிடி ஷோவாக நாடு பூராகவும் ஒளிபரப்பப்பட்டு அதை ஒருவர் தொகுத்தும் வழங்குகிறார், மேலும் அவர்  விளையாட்டில் ஈடுபட்டிருப்பவர்களின் வன்முறைகளை ஆய்வு செய்கிறார்,அவர்களை பேட்டி காண்கிறார்,இப்படி நாம் சாதரணமாக காணும் ரியாலிட்டி ஷோக்கள் போல் இதுவும் நடக்கிறதாக காட்டப்படுகிறது.Tributes அதாவது போட்டியாளர்கள் இந்த கோரமான போட்டியின் விதிகளை ஏற்று போட்டி ஆரம்பமான நேரம் முதல் அடுத்தவரை கொலை செய்யும் நோக்கில் அலைகின்றனர்.பொது மக்களும் போட்டியில் மூழ்கி தமது மாவட்டத்தை பிரிதிநிதித்துவப்படுத்தும் போட்டியாளர்கள் வன்முறையில் ஈடுபடுவதையும் கொலை செய்வதையும் கடைசியில் கொலையுண்டு மாண்டு போவதையும் ரசிக்கின்றனர்.இது ஒரு கவலைக்குரிய விடயமாக இருந்தாலும் இதுதான் உண்மை.இங்கு ஊடகத்தின் பங்கு முக்கியமானது.எந்தவிதமான விடயமும் மக்களைப் போய் சேரும் எப்போது ? அந்த விடயம் பொது மக்களின் கவனத்தை ஈர்க்கும் போது இதை ஊடகங்களுக்கு நன்றாக தெரியும்.இரண்டு விடயங்கள் வெகு சீக்கிரமாக நமது கவனத்தை ஈர்க்கின்றன,

1) BLOOD   2) SEX 

இந்த இரு விடயங்களுமே ரியாலிட்டி ஷோக்களின் ரூபத்தில் நம் வீட்டுக்கு வருபவை.

போட்டியில் காணப்படும் யதார்த்தமான உண்மையான வெளிப்படையான வன்முறை பொதுமக்களின் உண்மையான நிலையை மேட்டுக்குடி மக்களுக்கு அடிமைப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையை மறக்கடிக்கச் செய்கிறது.இப்படிப்பட்ட நிலைமைகளை நாம் கண்கூடாக பார்த்துள்ளோம் பார்த்தும் வருகிறோம்.தனது குடும்பத்துக்கே ஒரு வேளைக்கு சாப்பாடு கொடுக்க வசதியில்லாதவர்கள் தனது ஆருயிர் ??? நடிகரின் கட்டவுடுக்கு லீட்டர் கணக்கில் பால் ஊற்றுகின்றனர்.இது ஒரு உதாரணம் மட்டுமே கொஞ்சம் தேடிப்பாருங்கள் உங்களுக்கு ஆயிரக்கணக்கில் கிடைக்கும்.

திரைப்படத்தில் கறுப்பின சிறுமி கொல்லப்படும் போது அந்த சிறுமி பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்டத்தில் எழும்பும் உணர்ச்சிபூர்வமான கிளர்ச்சி பொலிஸ் படைகளால் மிக இலகுவில் தடுக்கப்படுகிறது.இப்படிப்பட்ட காட்சிகள் நம் அன்றாட வாழ்க்கையில் நாம் சகஜமாக காண்கிறோம்.என்றாலும் திரைப்படத்தில் அப்படிப்பட்ட காட்சி மிக அழுத்தமான ஒரு செய்தியை நமக்குச் சொல்கிறது.


மேலும் இலாபம் மட்டுமே குறிக்கோளாய் உள்ள வெகுஜன ஊடகங்களின் வியாபார தந்திரங்களும் இப்படத்தில் நாம் காணலாம்.மாவட்டம் 12 இலிருந்து வந்த கட்னிஸ் எவ்ர்டீனுக்கும் பீடா மேலர்க்குக்கும் இடையே காதல் என புரளிய கிளப்பி ரத்தத்தில் இருந்த நிகழ்ச்சியை செக்ஸ் இன் பக்கம் திருப்பி விட்டு மீண்டும் மக்களை அதே மயக்கத்தில் வைக்கின்றனர்.இதன் மூலம் முடிவுக்கு வந்த கொலைவெறி நிகழ்ச்சி காதல்வெரியாக புதிய பரிணாமம் எடுக்கிறது.

ஹாலிவூட் திரைப்படங்களில் வன்முறைக்கு பஞ்சம் இல்லை.என்றாலும் இந்த THE HUNGER GAMES திரைப்படம் ஒரு படி மேல் சென்று வன்முறையை காட்டியுள்ளது.இதுவரை எந்த திரைப்படத்திலும் காட்டாத வன்முறை காட்சி தான் சிறார்களே சிறார்களை கொல்வது - அடிப்பது - கழுத்தை நெரிப்பது - துப்பாக்கியால் சுடுவது என்றாலும் இந்த திரைப்படம் இவை அனைத்தையும் காட்டியுள்ளது.

இறுதியாக பல வரைமுறைகளைத் தாண்டி எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் எதிர்காலத்தில் செல்வந்த மக்களின் சக்தியையும் சாதாரண பொதுமக்களின் இயலாமையும் அந்த இயலாமையை பயன்படுத்தி செல்வந்த மக்கள் அவர்களை எப்படியெல்லாம் ஆள்கிறார்கள் என்று மிகத் தெளிவாக காட்டுகிறது.மேலும் செல்வந்த மக்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள ஊடகங்கள் எப்படி துணை போகின்றன என்றும் காட்டுகிறது.




நன்றி 


Wednesday, January 9, 2013

ஊனமுற்றோர் படுகொலை - மறந்துபோன படுகொலைகள்.



அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பம் செய்கிறேன்

"பரம்பரை நோயால் அவதிப்படும் இவருக்கு வாழ்நாள் முழுவதும் 60000 ரீச்மார்க்கள் செலவாகிறது.மக்களே இது உங்கள் பணம்."நாசிகளின் பிரச்சார போஸ்டர் 1938


 உலகில் பெரும்பாலான மக்கள் ஹிட்லர் யூதர்களை மட்டும்தான் படுகொலை செய்ததாக நினைக்கின்றனர்.ஆனால் ஹிட்லரின் நாசிப்படைகள் தங்களின் கொலைவெறியை யூதர்களை கொல்வதன் மூலம் மட்டும் நிறுத்திக் கொள்ளவில்லை.அவர்களின் கொலைவெறியை தனித்துக்கொள்ள அவர்களினால் கொல்லப்பட்ட இன்னொரு மனிதக் கூட்டம் தான் உடல் ஊனமுற்றோர்கள் மற்றும் பரம்பரை நோயால் அவதிப்படுபவர்கள்.

நாசிகளின் இந்த கொடுமையான நிகழ்ச்சித் திட்டம் T4 என்ற குறியீட்டுப் பெயர் கொண்டு அழைக்கப்பட்டது.ஹிட்லரின் நாசி கட்சியால் திட்டமிடப்பட்ட இந்த திட்டத்தின் அடிப்படை குறிக்கோள் " இனத்தை சுத்தப்படுத்தல் " ஆகும்.ஜேர்மனிய இனத்தை வலுவற்றதாக்கக் கூடிய ஊனமுற்றவர்களிடமிருந்து இனத்தை சுத்தப்படுத்துவதாகும்.நாசி கட்சியிடம் இருந்த இந்த நம்பிக்கையே யூதர்களையும் இனப்படுகொலை செய்ய தூண்டியது.

இதற்கான காரணத்தை நாம் புரிந்துகொள்ள, இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட நாசி சித்தாந்தத்தை அறிந்துகொள்ள வேண்டும்.தனது இனத்தை தூய்மை படுத்த நாசிகள் தேர்ந்தெடுத்த முறை அல்லது கொள்கையே யுஜெநிக்ஸ் (Eugenics).இந்த தவறான கொள்கையை தேர்தெடுத்த நாசிகல் முதலில் உடல்ரீதியாக மனரீதியாக அங்கவீனப்பட்டவர்களையும் பரம்பரை நோய்களினால் பாதிப்பட்டவர்களையும் படுகொலை செய்தனர்.

இந்த யுஜெநிக்ஸ் கொள்கை டார்வினின் பரிணாமக்கொள்கையாலே உருவானது.டார்வின் தனது The Origin Of Species என்ற புத்தகத்தில் இனங்களின் முன்னேற்றம் குறித்து தொடர்ந்து குறிப்பிட்டு வந்தார், மேலும் அவரின் The Descent Of Man என்ற நூலில் மனித இனம் வெறும் இன்னொரு விலங்கினமே என்று குறிப்பிட்டார்.சார்லஸ் டார்வினின் ஒன்று விட்ட சகோதரரான பிரான்சிஸ் கேல்டன் ஒரு படி மேலே சென்று தனது சகோதரரின் பிழையான கொள்கையை அடிப்படையாகக் கொண்டு யுஜெநிக்ஸ் கொள்கைக்கு வித்திட்டார்.
சார் பிரான்சிஸ் கேல்டன் 

1869 இல் பிரான்சிஸ் கேல்டன் எழுதிய " Heredity Geniuses " என்ற புத்தகத்தில் பிரித்தானிய வரலாற்றில் வாழ்ந்த மேதைகளைப் பற்றி விவரித்துள்ளார்.மேலும் அந்த மேதைகள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட இனப் பண்புகளை கொண்டிருந்தார்கள் என்ற தவறான பொய்யான கருத்தை முன்வைத்தார்.பிரான்சிஸ் கேல்டனின் அந்த உரிமைக் கோரல் அதாவது அந்த மேதைகள் ஒரு குறிப்பிட்ட இன பண்புகளை கொண்டிருந்தனர் என்பது ஒரு படி மேலே சென்று அடுத்த அடுத்த நாட்டு இனங்களை விட பிரித்தானிய இனமும் அதன் ரத்தமும் மரபணுரீதியாக உயர் அந்தஸ்தைக் கொண்டது என்றார்.அதனால் அதை நாம் பாதுகாக்க வேண்டும் என்றார்.

பிரான்சிஸ் கேல்டனுக்குப் பிறகு யுஜெனிக்ஸ் என்ற தவறான கொள்கையை மூர்க்கத்தனமாக ஆதரித்தவர் தான் நாசி சிந்தனையின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவரும் டாவினின் பரிணாமக் கொள்கையை ஜெர்மனியில் பிரபலமாக்கியவருமான எர்னஸ்ட் ஹெகல்.எர்னஸ்ட் ஹெகல் யுஜெனிக்ஸ் நோக்கத்துக்காக அதாவது மனித இன மேம்பாட்டு ஆராய்ச்சி நோக்கத்துக்காக படுகொலைகளை ஆதரித்துப் பேசினார்.அவரின்   " Wonders Of Life " என்ற நூலில் " அங்கவீனக் குழந்தைகள் பெற்றவுடன் நேரம் வீணாக்காமல் கொல்லப்படவேண்டும் என்றும் அக்குழந்தைகள் இன்னும் சுயநினைவை பெறாததால் அது கொலையாக கொள்ளமுடியாது என்றும் மனித வாசமே இல்லாமல் வாதிட்டார்.அவர் தனது நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்...

Hundreds of thousands of incurable people, for instance the mentally ill,
lepers, and those suffering from cancer are being artificially kept alive,
yet that brings no advantage to them or to society in general... In order to
be freed from this evil, these patients must be given a quick-acting and
effecting poison, by decision and under the observation of an authorized
commission.
 Ernst Haeckel, The Wonders of Life, New
York, Harper, 1904( Page 118-119)

எர்னஸ்ட் ஹர்க்ல் 

Nazi propaganda slide contrasting how far 5.50 German Marks will go. The cost of feeding one person with a hereditary disease for one day is the same as it would cost to feed an entire family of healthy Germans.


Social Darwinism த்தை நடைமுறைப்படுத்தி வந்த நாசிகள் யுஜெனிக்ஸ் என்ற தவறான கொள்கையை எந்தவிதமான மாற்றமும் இன்றி தமது நாட்டிலும் நடைமுறைப்படுத்தினர்.Susanne E Evens என்பவரால் எழுதப்பட்ட Forgotten Crimes என்ற நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்...  

எல்லா சமூகங்களிலும் காணப்படுவதைப் போன்று அங்கவீனம் என்பது ஒரு பொதுவான இயற்கையான விடயமாக நாசிகள் நோக்கவில்லை.நாசி  ஜெர்மனியோ அதை ஒரு இழிநிலையாக இனத்தின்பன்புக்கேடாக நோக்கினர்.உடல் அங்கவீனர்கள்,கண்பார்வையற்றவர்கள், காது கேட்க முடியாதவர்கள்.மன அழுத்தங்களுக்கு உட்பட்டவர்கள், பரம்பரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என அனைவரும் நாசிகளின் பார்வையில் சும்மா தின்றுவிட்டு காலத்தைக் கழிப்பவர்கள் அதாவது " Useless Eaters".ஹிட்லரின் முதன்மை இனத்தை உருவாக்க நாசிகளின் முதல் பலிக்கடாவாக ஆனவர்கள் தான் அங்கவீனர்கள்.தனது ஆரிய இனத்தை தூய்மைபடுத்த லட்ச்சக்கணக்கான அங்கவீனர்களை படுகொலை செய்தான் ஹிட்லர். 


நாசிகளின் சிறையில் அங்கவீனர்கள்.

ஊனமுற்றவர்களின் பெருக்கத்தைக்க குறைக்க நாசிகள் கையாண்ட முறை மலடாக்கல்.இந்த கொடிய ஈவிரக்கம் அற்ற முறை 1933 ஆம் ஆண்டு முதல் இரண்டாம் உலக மகா யுத்தம் துவங்கும் வரை நாசிகளால் மேற்கொள்ளப்பட்டது.வைத்தியசாலைகளிலும் வீடுகளிலும் வாழ்ந்த ஆயிரக்கணக்கான உடல் ஊனமுற்றவர்கள் சுற்றிவளைக்கப்பட்டு பலவந்தமாக மலடாக்கப்பட்டனர்.இந்த விகாரமான அருவருப்பான நடவடிக்கையின் காரணமாக பலர் இறந்தனர்.மற்றும் பலர் பல மாதங்களாக வலியில் துடித்தனர்.மேலும் பலர் உளவியல்ரீதியாக பாதிக்கப்பட்டு பல ஆண்டுகளாக தன் நிலை மறந்தவர்களாக வாழ்ந்து வாழ்ந்தனர்.

ஊனமுற்ற குழந்தைகள் பிறந்தவுடன் கொல்லப்படவேண்டும் என கூறிய Dr Karl Brandt .

ஹிட்லரின் திட்டம் ஒன்றன் பின் ஒன்றாக நடைமுறைக்கு வந்தது.1933 முதல் 400,000 க்கும் மேற்பட்டவர்கள் வலுக்கட்டாயமாக மலடாக்கப்பட்ட்னர்.அதன் பின்னர் துவங்கிய கொலைப்படலமே Action T4 ஆகும்.

ஊனமுற்றவர்களை படுகொலை செய்யும் திட்டம் மனிதாபிமானரீதியாக ஊனமுற்றவர்களால் உருவாக்கப்பட்டது.யூதர்களை படுகொலை செய்ய நாசிகளால் பிரயோகிக்கப்பட்ட முறைகள் அனைத்தும் முதன் முதலில் ஊனமுற்றவர்களை படுகொலை செய்யவே உருவாக்கப்பட்டது.நாசிகளின் இந்த கொரூரச் செயல் கடைசியில் 275000 த்துக்கும் மேற்பட்ட அங்கவீனர்களுக்கு மரணத்தை கொடுத்தது.மேலும் Action T4 நிகழ்ச்சித் திட்டம் அல்லாமல் நாசிகள் தாங்கள் ஆக்கிரமிக்கும் நாடுகளில் கொன்ற அங்கவீனர்களின் எண்ணிக்கை யாருமே அறியாத ஒன்று.

விக்டர் பராக் - Action T4 ஏற்பாட்டாளர் 


இந்த மிலேச்சத்தனமான கொடூரச் செயல் மருத்துவர்களினதும் பொது அதிகாரிகளினதும் கடமை என்றும் அவர்கள் அதை சரிவர செய்யவேண்டும் என்றும் நாசிகள் கட்டளையிட்டனர்.நாசிகளினால் மூளைசலவை செய்யப்பட்ட அவர்கள் அதை தாங்களின் பெரும் கடமையாக செய்தனர்.ஹிட்லரின் ஆட்சி கவிழ்ந்ததன் பின்னர் இந்த மருத்துவர்கள் பலருக்கு மரணதண்டனை அளிக்கப்பட்டது.இது வரலாற்றில் Doctors Trail என்று அழைக்கப்படுகிறது.

Philipp Bouhler, Head of the T4 programme



படுகொலைகள் நிகழ்த்தப்பட்ட இடங்கள்
Killing Centers

Hadamar Euthanasia Center

இப்படிப்பட்ட அறைகளில் விஷ வாயு புகுத்தப்பட்டு அங்கவீனர்கள் கொல்லப்படுவார்கள்.
படுகொலை நடந்து கொண்டிருக்கும் போது........

Sonnenstein Euthanasia Center

Grafeneck Euthanasia Centre

Hartheim Euthanasia Centre

Bunker No. 17 in artillery wall, in world war II used by Germans as improvised gas chambers in Fort VII 


Thanks To WikiPedia.com article about Action T4 program.for more details click on below link.Action T4


ஜசாகல்லாஹு ஹைர்

எல்லாம் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே 

உங்கள் சகோதரன் 
M.ஹிமாஸ் நிலார்