அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.
பாசிசத்தின் உருவாக்கம் - பாகம் 3
![]() |
Thales - பரிணாமவியலின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவர். |
18 ஆம் 19 ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் மீள் எழுச்சி பெற்ற பரிணாமக் கொள்கை பண்டைய பேகன்களின் நம்பிக்கைகளில் ஏற்கனவே வழக்கத்தில் இருந்த மூடக்கொள்கைகளில் ஒன்றாகும்.டார்வின் மூலமாக பிரபலமாக துவங்கிய இந்த கோட்பாட்டின்படி உயிரினங்கள் தற்செயலாக வந்திருக்க வேண்டும், ஒன்று மற்றொன்றாக காலப்போக்கில் மாறியிருக்க வேண்டும். இந்த அளவுகோல்படியே மனிதனும் வந்தான். அதாவது, உயிரினங்கள் ஒவ்வொன்றாக மாறி பின்னர் குரங்கு போன்ற ஒன்றிலிருந்து மனிதன் வந்திருக்க வேண்டும் என்று விளக்குகின்றது இந்த கோட்பாடு.
கடவுளின் இருப்பை பற்றி அறியாதவர்களாக, போலியான கற்பனை சிலைகளை வணங்கி வந்த பண்டைய பேகன் கலாச்சாரத்து மக்கள் உயிர்கள் உருவானது எப்படி ? என்ற கேள்விக்கு அவர்களாகவே உருவாக்கிக் கொண்ட பதில் தான் " பரிணாமக் கோட்பாடு ".இந்த பரிணாமம் சம்பந்தப்பட்ட கருத்து பண்டைய சுமேரிய கல்வெட்டுகளில் காணப்பட்டாலும் இதற்கு ஒரு வடிவம் கொடுத்தவர்கள் பண்டைய கிரேக்கர்களே.பண்டைய பேகன் தத்துவவாதிகளான Thales, Anaximander , Empedocles போன்றவர்களின் கருத்துப்படி உயிர்கள் அதாவது மனிதர்கள், விலங்குகள் மற்றும் தாவரங்கள் அனைத்தும் காற்று - நீர் - நெருப்பு போன்ற உயிரற்ற சேர்க்கை மூலமே என்றனர்.இவர்களின் கருத்துப்படி உயிரினங்கள் என்பது நீரிலிருந்து திடிரென தோன்றியவையாகும்.பின்பு அவை பூமிக்கு ஏத்தது போல் தம்மை இசைவாக்கிப்படுத்திக் கொண்டது.
தேல்ஸ் தனது அதிக காலத்தை எகிப்திலேயே கழித்தார்.அங்குதான் " சேற்றிலிருந்து உயிரினங்கள் தானாகவே தோன்றியது " என்ற ஒரு மூட நம்பிக்கை பரவலாக நம்பப்பட்டு வந்தது.நைல் நதியில் வருடாந்தம் ஏற்படும் வெள்ளப்பெருக்கு காரணமாக அடித்து வரப்படும் வண்டல் மற்றும் களிமண் காரணமாக நைல் நதியை சுற்றியுள்ள பகுதி செழிப்பாகும், இந்த வருடாந்த நிகழ்வே எகிப்தியர்களை அப்படி நம்பத்தூண்டியது.பண்டைய எகிப்தியர்களின் நம்பிக்கைப் படி ஆரம்பத்தில் வானம்,பூமி,பிறப்பு,இறப்பு ஏன் கடவுள் கூட இருக்கவில்லை.படைப்பின் ஆரம்பம் நைல் நதியையே குறித்து நிற்கிறது.இது 'நு' என்று அழைக்கப்படுகிறது.இந்த நீரிலிருந்தே Atum என்ற கடவுளும் உருவானதாக எகிப்தியர்கள் நம்பினர்.'நு' என்று அழைக்கப்படும் இருண்ட எல்லையற்ற நீர்ப் பள்ளத்தாக்கில் இருந்து தானாகவே வெளிப்பட்ட முதல் படைப்புத் தான் இந்த கடவுள் என்று எகிப்தியர்கள் நம்புகின்றனர்.இவர் திரும்பவும் அந்த பள்ளத்தாக்குக்கு திரும்பி சென்றால் இந்த உலகின் படைப்பு நின்றுவிடும் என்று எகிப்தியர்கள் நம்பிக்கை வைத்தனர்.
எகிப்தியர்களின் இந்த நம்பிக்கையால் கவரப்பட்ட தேல்ஸ் அதற்காக வாதாடினார்.கடைசியில் எந்தவிதமான ஆய்வுகள் பரிசோதனைகள் இல்லாமல் அந்த நம்பிக்கையை ஒரு கோட்பாடாக தனிப்பட்ட முறையில் முன்வைத்தார்.பூமி தட்டை என்றும் அது நீரில் மிதந்து கொண்டிருக்கிறது என்றும் இவர் நம்பினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Anaximender இவர் தேல்சின் மாணவர்களில் ஒருவர்.இவர் தனது குருவின் கோட்பாடுகளை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை.அவர் அதை வேறொரு பாணியில் முன்வைத்தார்.
- பிரபஞ்சம் எப்போதும் இருந்தது அது என்றைக்கும் அழியாமல் இருக்கும்.
- உயிரினங்கள் ஒன்றிலிருந்து இன்னொன்று உருவானவை அல்லது பரிணாமம் அடைந்தவை.
பரிணாமம் பற்றி விவாதிக்க பண்டைய காலத்தில் எழுதிவைத்த முதல் குறிப்பு ஒரு மரபுக்கவிதையாகும்.இதை எழுதியவர் Anximander தான்.அந்த கவிதையின் பெயர் 'On Nature'.இந்த தத்துவ கவிதையில் Anaximender பூமி,விலங்குகள்,தாவரங்கள் மற்றும் மனித இனம் என்பவற்றின் பரிணாமம் பற்றி விளக்கியுள்ளார்.அவரின் தத்துவப்படி, சூரியனின் சூடான கதிர்களால் கடல் வற்றத்துவங்கிய போது அதிலிருந்து வெளியேறி பூமிக்கு வந்த மீன் இனம்தான் மனிதன் மற்றும் விலங்குகளின் ஆரம்ப உயிரினம்.சடப்பிறப்புக் கோட்பாடு என்ற தனது நூலில் உலகின் முதல் உயிரினம் மூடுபனியில்தான் உருவானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
![]() |
Anaximender |
பண்டைய பேகன் தத்துவவியலாளர்களால் முன்வைக்கப்பட்ட பரிணாமக் கொள்கை எனும் எண்ணப்போக்கு மீண்டும் 18 ஆம் நூற்றாண்டில் மேற்கத்தைய அறிஞ்சர்களால் முன்வைக்கப்பட்டது.
பண்டைய பேகன் கொள்கைகளில் அதிக ஈடுபாடு கொண்டவராக காணப்பட்ட டார்வினின் தாத்தாவான Erasmus Darwin ஒரு பரிணாம கொள்கை நம்பிக்கையாளர்.ஸ்காட்லாந்தில் இன்றும் இயங்கி வரும் Canongate Kilwinning Masonic Lodge இல் Master பதவியில் இருந்தவராவார்.பிரஞ்சு புரட்சியை மிகக் கொடூரமான முறையில் வழிநடத்தியவர்கலான Jacobins அமைப்பினரருடன் மிக நெருங்கிய தொடர்பை பேணிய இவர் மதங்களின் மீது குரோதம் பரப்பிய Illuminati அமைப்புடனும் தொடர்புகளை பேணி வந்தார்.தனது 8 ஏக்கர் தாவரவியல் பூங்காவில் அவர் மேற்கொண்ட ஆய்வு பின்னாட்களில் Darwinism க் கொள்கைக்கு உரமூட்டியது.அவர் தனது ஆய்வுகளை Temple Of Nature மற்றும் Zoonomia போன்ற நூல்களில் எழுதிவைத்தார்.
Erasmus Darwin னும் அவர் எழுதிய நூற்களும்.
இன்ஷா அல்லாஹ்
தொடரும் ...
தொடர்புடைய பதிவுகள்.
பாகம் 1 - பாசிச சிந்தனையின் உருவாக்கம்.
No comments:
Post a Comment