Showing posts with label சாத்தானிய சல்மான் ருஷ்டி. Show all posts
Showing posts with label சாத்தானிய சல்மான் ருஷ்டி. Show all posts

Saturday, July 30, 2011

சல்மான் ருஷ்டி என்ற சாத்தான் (பகுதி 4 )

மௌலானா மௌதூதி மற்றும் சர் சையத் அஹமத் கான் அவர்களது முயற்சியால் உண்மைகளை உணரத்துவங்கினர் - ஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள். அவர்களும் இதை பகுத்து ஆராயத் தலைப்பட்டனர்.

Professor Kenneth Cragg of Cambridge, a Christian scholar deeply involved in reckoning with his neighbour's scripture', asks, 'In a situation so charged, in any event, with ambiguity, will the theory of deliberate, almost negotiated, compromise, made and withdrawn, be the only or the likeliest hypothesis? Did the Quraish think Muhammad was still negotiable?
Cragg answers himself: 'It would not have been the first time that worship at once common and contrasted. Certainly in the sequel the struggle continued with Muhammed resolute and the paganism stubborn.'

ப்ரொபஸ்ஸர் கென்னத் உறுதிபடுத்துகிறார் ' குரைஷிகளுக்கும் முகமதுவிற்கும் ஒப்பந்தம் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. மேலும் அவரவர் நிலைபாட்டில் அவர்கள் உறுதியாகவே இருந்திருக்கின்றனர். '
இந்த சாத்தானிக் வெர்ஸஸை மறுத்து, இத்தாலிய அறிஞர் Caetani தனது Annali dell'Islam என்ற புத்தகத்தில் எழுதுகிறார்.

When one considers the contempt and enmity which the Quraish tribe, who inhabitated Mecca, showed toward Mohammed on other occasions, it would seem highly improbable that they ever condescended to listen to the Prophet's reading of the Koran, to say nothing of acknowledging him as a prophet on occasion of an insignificant concession. Furthermore, such a sudden abandonment of a principle which he had previously championed so energetically would have utterly cancelled his previous success, and entirely undermined the prestige which he had gained among his followers. And one might add that a compromise with the Quraish tribe could not possibly have been reached by merely changing a few lines of the Koran at a time when a large portion of it was filled with bitter attacks upon the Meccan pagans and their gods.

(முகமதுவின் மீது குரைஷிகள் கொண்டிருந்த வெறுப்பையும், பகையையும் கணக்கிலெடுத்துக் கொண்டால், அந்த குரைஷிகள் முகமது பிரசங்கத்தைப் போய் அமர்ந்து காது கொடுத்து கேட்டிருப்பார்கள் என்ற சாத்தியப்பாட்டிற்கு வாய்ப்பே இல்லை. காசு பெறாத ஒரு சலுகைக்கு (ஒரு வரியை மாற்றிச் சொல்லுதல்) அவரை நபியாக மறுசொல் இல்லாது ஒப்புக் கொண்டிருக்கவும் மாட்டார்கள். மேலும் இந்த திடீரென்ற கொள்கை கைவிடுதலால், அதுவரையிலும் தன்னைப் பின்பற்றும் மக்களிடையே தனக்கிருந்த செல்வாக்கை முகமது இழந்திருப்பார். இத்துடன் மற்றொன்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் ' குரானில் ஒரு வரியை மட்டும் மாற்றி விட்டு, அதைவிட மோசமாக குரைஷிகளைத் தாக்கும் வசனங்களையெல்லாம் விட்டுவைத்திருக்க ஒப்புக்கொண்டு, ஒரு சமதான உடன்படிக்கைக்கு குரைஷிகள் வந்திருப்பார்கள் என நம்புவதற்கு வாய்ப்புகள் இல்லை. )
Caetani ஐக் மேற்கோள் காட்டி, Tor Andrae தனது Mohammad: The Man and his Faith என்ற புத்தகத்தில் எழுதுகிறார்:

It is very apparent that in this form the whole narrative is historically and psychologically contradictory.

இவர் குறிப்பிடும் narrative இப்னு ச'ஆத்-னுடையது.

அடுத்து இன்னுமொரு ஆய்வாளர் Hichem Djait - the well known, historian attached to the universities of McGill and Berkely writes:

Over the centuries Christian tradition came to look upon Islam as a disturbing upstart movement that awakened such bitter passion precisely because it laid claim to the same territory as Christianity.

தாங்கள் இயங்கும் அதே தளத்தில் அதே நிலப்பரப்பில் எழுச்சிமிகு மதமாக வளரத் தொடங்கிய இஸ்லாம் கிறித்துவ ஸ்தாபனங்களைக் கலவரப்படுத்தியது.

இது தான் உண்மை. மனம் தளர்ந்த கிறித்துவ துறவிகள் குரானின் மீதும் முகமதுவின் மீதும் அவதூறுகளை அள்ளி வீசினர். இந்த நிலைமை க்ருசேட் என்னும் சிலுவை யுத்தங்கள் தொடங்கிய காலத்தில் இன்னும் மோசமாகியது.

இவற்றைக் குறித்து, எழுதும் இத்தாலிய வரலாற்றியலாளர் Professor Francesco Francesco Gabrieli யின் வார்த்தைகள்:

We find it in various versions, inconsistent in their content, but entirely consistent in their spirit of vituperation and hatred, in the writing of chroniclers, apologists, hagiographers and encyclopaedists of the Latin Middle Ages; Guibert of Nogent and Hildebert of Tours in the eleventh century, Peter the venerable in the twelfth, Jacques de Vitry, Martinus Polonus, Vincent of Beauvais and Jacobus, a Varagine, in the thirteenth, up to Brunetto Latini and his imitators, an Dante and his commentators

ஆக, மொத்த ஐரோப்பியர்களும் கூட்டணி வைத்து எழுதி இருக்கிறார்கள் - தங்கள் வக்கிரத்தை இஸ்லாத்தின் மீது காட்டி இருக்கிறார்கள்.

அது மட்டுமா? இவர்களுடைய கூட்டணியின் லட்சணத்தைப் பாருங்கள் -

லூதர் என்பவர் முகமதுவையும், போப் ஆண்டவரையும் ஒரு அணியில் வைக்கிறார் - இருவரையும் கிறிஸ்துவின் எதிரி என்கிறார். கத்தோலிக்கர்கள் சொல்கிறார்கள் - முகமது பிராட்டஸ்டண்டுன் இணைந்து கிறிஸ்துவிற்கு எதிராக இருக்கிறார். என்ன சொல்வது!

இத்தனைக்கும் கிறிஸ்துவைத் தூக்கிப் பிடிப்பதிலும், அவரை ஏற்றுக் கொள்வதிலும் முன்னணியில் இருப்பது இஸ்லாம். ஈஸா நபிகளின் பெயர் சொல்லப்படும் பொழுதெல்லாம் - peace be upon him என்ற வாழ்த்தையும் சேர்த்தே கூறுமாறு இஸ்லாமியர்கள் பணிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இஸ்லாமியத்தை முழுதாக அறியாதவர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள் ' முகமது நபிகளை anti-Christ' என்று!!!

இதற்கு நடுவே, இஸ்லாத்தைப் புரிந்து கொள்ள நேர்மையான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. குரானின் சிறந்த மொழி பெயர்ப்புகளும் ஆங்கிலத்திலும் ப்ரெஞ்சு மொழியிலும் வெளிவந்தது ' குறிப்பாக Sale ஆங்கிலத்திலும் Savary ப்ரெஞ்சு மொழியிலும் மொழி பெயர்த்த குரான்கள் சிறப்பாக அமைந்தன. Boulainvilliers and Goethe முகமது நபிகள் மற்றும் அவரது பணியைப் பற்றியும் நேர்மையாக எழுதினார்கள்.

ஆனால், எல்லாம் சாண் ஏறினால் முழம் சறுக்கிய கதை தான். 1742ல் Voltaire என்பவர் Mahomet என்ற நாடகத்தை எழுதினார் - காழ்ப்புணர்ச்சியின் உச்சம் அது. நேர்மையான மனதில் கூட நஞ்சைக் கலக்கும் நாடகம் அது.

அதை சரி செய்யும் பணி Thomas Carlyle என்பவரால் செய்யப்பட்டது. அவரது புத்தகம் - 'Hero's and Hero-worship' என்ற புத்தகத்தில், 1840ல், நபிகள் அனைவரிலும் ஹீரோவாக தேர்வு செய்து எழுதுகிறார்:

Our current hypothesis about Mahomet, that he was a scheming Imposter, a Falsehood incarnate, that his religion is a mere mass of quackery and fatuity, begins really to be now untenable to anyone. The lies, which well meaning zeal has heaped round this man, are disgraceful to ourselves only

அவர் இஸ்லாம் என்பதன் உண்மையான பொருளை தன் இனத்தவருக்குச் சொல்கிறார் - Islam means surrendering to God. If that's so, then we all live in Islam.

மேலை நாட்டினர் தங்கள் எண்ணங்களை மாற்றிக் கொண்டிருக்கின்றனர். மைக்கேல் எம் ஹார்ட் என்ற அமெரிக்கர் வெளியிட்ட புத்தகத்தில் - Top 100 - புத்தகத்தின் No 1 - முகமது நபிகள். அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான காரணங்கள், மற்றும் விபரங்களை வேறொரு பதிவில் பார்க்கலாம்.

இவ்வாறு அனைவரும் தங்களது எண்ணங்களை மாற்றிக் கொண்டு, காழ்ப்புணர்ச்சியுடன் எழுதப்பட்டவற்றைத் தூக்கிக் குப்பையில் போட்டுவிட்ட பின்பு - அந்த குப்பையைக் கிளறி, எச்சில் இலைகளிலிருந்து நக்கி எடுத்து வந்த கருவைத் தான் தனது கற்பனையாக வெளியிட்ட கேவலமான மனிதன் - சல்மான் ருஷ்டி. அயோதுல்லா கொமேனியின் அதிதீவிர தண்டனை தீர்ப்பால், எழுந்த அனுதாபம் தான் - இந்த மனிதருக்குக் கிடைத்த பரிதாபம் தான் - இன்று பலருக்கு இந்த மனிதனைப் பற்றி பரிந்து பேச தூண்டுகிறது. கொமெய்னி ஆணையிட்ட தண்டனை தேவையற்றது. முட்டாள்தனமானது. இந்தத் துரோகிக்கு அதுவே ஒரு பாதுகாப்புக் கேடயமாக மாறிவிட்டது. தன் ஈனத்தை freedom of expression என்ற சொற்றோடர்களுக்குப் பின் மறைத்து தான் தப்புவதற்கு வழி ஏற்படுத்திக் கொண்டார் இந்த மனிதன்.

ஆனால் வரலாறுகளின் உண்மையை அறிந்த எந்த ஒரு மனிதனும், மதமாச்சர்யங்களுக்கு அப்பாற்பட்டு, இந்த மனிதனை வர்ணிப்பார்கள் -

'இவன் ஒரு இனத்துரோகி என்று'


பொறுமையாக வாசித்தவர்களுக்கு நன்றி.

உண்மை தான் - ஒரு உண்மையான இஸ்லாமியனின் உணர்வில், உடலின் உயிர் மூச்சில் கலந்து விட்ட பெருமித உணர்வு - முகமது நபி ஸல்லல்லாஹூ அலைஹிஸ்ஸலாம். உலகின் எந்த சிறப்பான பொருளுக்கும் பண்டமாற்று செய்ய இயலாத உணர்வு அது. அல்லாஹ் - ஏக இறைவன் எல்லோருக்கும் பொதுவானவன் - எனக்கு, உங்களுக்கு, மனிதர்களுக்கு, இன்னும் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களுக்கும், உயிரற்றவைகளுக்கும் அவன் தான் இறைவன்.

ஆனால், முகமது நபிகள் இஸ்லாமியர்களுக்குச் சொந்தமானவர். அவர் மீது இறைவனுக்கு அடுத்த படியாக பற்றும் பாசமும் வைப்பது இஸ்லாமியர்களின் இருப்பிற்கு ஆதாரம்.

தொடர் நிறைவடைந்தது.

ARTICLE BY SHAJAHAAN ( SHAJIBLOGSPOT )
THANKS TO SATHYAMARGAM.COM 

Friday, July 29, 2011

சல்மான் ருஷ்டி என்ற சாத்தான் (பகுதி 3)

இதன்  இரண்டாம் பகுதி வாசித்து விட்டு தொடருங்கள், இங்கே:

  ஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள் பலரும் இந்த சாத்தானிக் வெர்ஸஸ்-ஐ கையிலெடுத்டுக் கொண்டு, இஸ்லாத்தைப் பற்றிப் பக்கம் பக்கமாக தூற்றி எழுதினார்கள். Sir William Muir என்ற வரலாற்றியலாளர் தபரி, வாஹிதி எழுதியவற்றை முழுவதுமாக தன் விருப்பத்திற்கேற்றவாறு பயன்படுத்திக் கொண்டார்.

முய்ரின் வார்த்தைகளில்:

It is hardly possible to conceive how the tale, if not in some shape or other founded in truth, could ever have been invented. The stubborn fact remains, and is by all admitted, that the first refugees did return about this time from Abyssinia; and that they returned in consequence of a rumor that Mecca was converted. To this fact the narrative of Waqidi and Tabari affords the only intelligible clue. At the same time it is by no means necessary that we should literally adopt the exculpatory version of Mohammetan tradition, or seek in a supernatural interpolation, the explanation of actions to be equally accounted for by the natural workings of the Prophets mind. It is obvious that the lapse was no sudden event. It was not a concession won by surprise, or an error of the tongue committed unawares, and immediately withdrawn. The hostility of the people had long pressed upon the spirit of the Mahomet; and, in his inward musings, it is admitted even by othodox tradition that he had been mediating the very expression which, as is alleged, the devil prompted him to utter.

ஆக, முய்ர்ன் வாதம் 'நெருப்பில்லாமல் புகையாது' இது தான் மாண்புமிகு முய்ரின் சிந்தனையின் மாண்பு. இந்த வாதத்தை முன்னரே விளக்கி விட்டேன்.

To make an ass of yourself - Assume!

இந்த வாஹிதி மற்றும் தபரியை உபயோகித்துக் கொண்ட மற்ற அறிஞர்களுள் சிலர் -

German Scholar - Dr. A. Sprenger எழுதிய Leben des Muhammad புத்தகத்தில் முகமது நபிகளைத் தாக்கி எழுதுவதற்குப் பயன்படுத்திக் கொண்டார். எந்த ஒரு ஆராய்ச்சியும் மேற்கொள்ளாது எழுதிய இவர், கிறித்துவ பாதிரிகள் எழுதியவற்றிலுமிருந்த கற்பனைகளையும் தாராளமாக எடுத்துக் கையாண்டிருக்கிறார். மேலும் H.Grimme and H.Lammens, என்ற ஆசிரியர்கள் முகமதுவை நபிகள் அல்ல என தூற்றுவதில் முன்னணியில் இருந்தனர். என்றாலும் Grimme கூறுவது ' முகமது ஒரு இறைத்தூதர் அல்ல - என்றாலும் முகமது ஒரு சிறந்த சீர்திருத்தவாதி.' அதாவது, முகமது நபிகளை ஏற்றுக் கொள்வதில் தான் அவருக்கு சிரமமிருந்தது - கிறித்துவ மத சிந்தனைகளை ஒட்டி, முகமதுவை மறுத்தாக வேண்டிய கட்டாயத்தினால் எழுதியவர் அவர். லெம்மன்ஸ் ஒப்புக் கொள்கிறார் - இஸ்லாமிய வாய் வழியான மரபுகள் பலவும் ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல - ஒப்புக் கொள்கிறார். ஆனால் அதற்காக இந்தத் தகவலை புறக்கணிக்கவும் இல்லை. அவற்றை முழுதாகப் பயன்படுத்திக் கொள்கிறார். ஒருபுறம் - இந்த செய்திகள் தவறானவை என்ற அறிவு; மறுபுறம் அதை பயன்படுத்திக் கொள்ளும் மோசடித்தனம் - நப்பாசை.

Maxime Rodinson எழுதுகிறார் தனது Mohammed என்ற புத்தகத்தில் ' There was one incident, in fact, which may reasonably be accepted as true because the makers of Muslim tradition would never have invented a story with such damaging implications' இஸ்லாமிய எழுத்தாளர்கள் இவர்களுக்குப் பெருந்தெய்வம் ஆயினர். தங்கள் காலத்தில் கிடைக்கும் பல வேறு தகவல்களையும் இவர்கள் பொருட்படுத்துவது இல்லை.

Montgomery Watt நபிகளை மதிப்புடன் அணுகினாலும், இந்த சாத்தானிக் வெர்ஸஸ் பற்றி பல பக்கங்கள் எழுதி உள்ளார் - தனது Bell's Introduction to the Qur'an என்ற புத்தகத்தில். அவர் எழுதுகிறார் - 'In essentials, it would seem that the account is true since no Muslim could have invented such a story about Muhammad and, indeed, there is confirmation of it in the Quran.' இவர் ஒரு நிலை கடந்து, முஸ்லிம் எழுத்தாளர்கள் சிலரையும் கடந்து, குரானைப் பற்றியும் பேசியவர்.

இவர்கள் கிளப்பிய அவதூறுகள் இஸ்லாமியர்களை மிகவும் பாதித்தது. அப்படி பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் - சர். சையத் அஹமத் கான் (1817 - 1898) இந்திய முஸ்லிம்களின் தலைவர்களில் ஒருவரும், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்தவரும் ஆவார். அவர் தன் பணிகளை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, லண்டன் பயணமானார். இரண்டு வருடங்கள் அங்கேயே தங்கியிருந்து, பல வரலாற்று ஆவணங்களையும் ஊன்றிப் படித்தார். நூல்களையும் படித்தார். பின்னர் இஸ்லாமியர்கள் எழுதிய பல புத்தகங்களையும் ஆவணங்களையும் முழுவதுமாகப் படித்து முடித்தார். பின்னர் அவற்றைத் தொகுத்து, உருது மொழியில், குதாபெட் - இ - அஹமதிய்யா என்ற புத்தகத்தை எழுதினார். பின்னர் அதை ஆங்கிலத்திலும் அவரே மொழி பெயர்த்தார். விரிவான ஆராய்ச்சிகள் மூலம், பல அறிஞர்களையும் ஆய்ந்து, மேற்கோள் காட்டி, இந்த சாத்தானிக் வெர்ஸஸ் என்ற செய்தியில் துளியும் உண்மை இல்லை என்பதை நிருவினார்.

அவரது புத்தகத்தில் இருந்து -

ஹாபிஸ் இப்னு ஹாஜ்ர், மத ஆய்வாளர் எழுதுகிறார் - ' தபரி எடுத்துக் கொண்ட மரபுகள் யாவற்றிலும் துளியும் உண்மை இல்லை' என்று. மற்றுமொரு அறிஞரான மௌலானா ஷிப்லி நுமானி (சீரத்துன் நபி எழுதியவர்) சொல்கிறார் ' உண்மையை சற்றும் விரும்பாதவர் - புரணி மற்றும் ஊழல்களில் பெரிதும் விருப்பமுள்ளவர்' இப்னு ச'ஆத் இஷாக்கின் புத்தகத்தில் இருந்து பலவற்றையும் எடுத்துக் கொண்டாலும், தீர்மானமாக எதையும் கூறிவிடாமல், இவையெல்லாம் 'interpretive jugglery' என்றே கூறுகிறார். இவர்களை எல்லாம் இஸ்லாமியர்கள் ஒதுக்கி வைத்தாலும் இவர்களைத் தான் இஸ்லாமிய விமர்சகர்கள் விரும்பி ஏற்றுக் கொண்டார்கள். ஏனென்றால், மேற்கொண்ட ஆராய்ச்சிகள் எதுவும் செய்ய வேண்டாம். ஒரு முஸ்லிமைக் கொண்டே அவர்களை விமர்சித்தால் போதுமே என்ற எண்ணம் தான்.

மேலே கூறிய 'வாட்'ஐத் தான் சல்மான் ருஷ்டி தனது ஆதாரமாகக் கொண்டார். சர் சையத் அஹமத் கான், மௌலான மௌதூதி போன்ற இஸ்லாமிய அறிஞர்கள் தந்த கருத்துகளை இவர் அறிந்திருக்கவே இல்லை. அல்லது மூடி மறைத்து விட்டு, இஸ்லாமியர்கள் இந்த குற்றச்சாட்டுக்கு, பதிலே சொல்லாத மாதிரி நினைத்துக் கொண்டு, அவர் தன் இனத்துக்கு எதிராக தன் அறியாமையால் வரலாறாகக் கூட அல்லாமல், புனைவாக முன் வைத்து தன் மீது நீக்க முடியாத இழிவை அள்ளிப் பூசிக் கொண்ட idiot - இந்த சல்மான் ருஷ்டி.

முஸ்லிம்கள் எழுதி வைத்த ஆதாரம் தானே என்றாலும், இது குறித்து ஒரு சிறு ஐயப்பாட்டைக் கூட எழுப்பாது, ஒரு சுட்டுவிரலைக் கூட அசைக்காது, தனது புரணி பேசும் நூலுக்கு - It would sell in millions என்ற வியாபார நோக்கில், தனது கற்பனைகளையும் கலந்து விற்பதற்குத் தயாரானார்.

மற்ற வரலாற்றாசிரியர்கள், தாங்கள் சார்ந்த நம்பிக்கைகளின்படி, மத-வரலாற்றுத் தளங்களில் மட்டுமே விவாதித்துக் கொண்டிருந்த இந்த விஷயத்தை, அது தீர்ந்து பல ஆண்டுகள் கழித்து - வரலாற்றியலாளர்களே தங்கள் தவறை உணர்ந்து, தொடர்ந்து வரும் நூல்களில் இந்த சம்பவத்தைக் குறிப்பிடுவதை தவிர்த்துக் கொண்ட பின்னரும், தனது புத்தக விற்பனையை மட்டுமே நோக்காகக் கொண்டு, ஒரு வரலாற்றுப் புரட்டை மீண்டும், fiction என்று புனைவாக, நஞ்சாக, விற்க முயன்ற கீழ்மையை, கிளம்பிய எதிர்ப்பைக் கண்டதும், அய்யோ, freedom of speech இல்லாமல் போயிற்றே என்று புலம்பிய கோழைத்தனம் ' இவை தான் இந்த நபர் மீது வெறுப்பு கொள்ள வைத்தது. வரலாற்றை சரியாக அறிந்த எந்த ஒரு மனிதனும் - இஸ்லாமியன் அல்ல என்றால் கூட, இந்த ஈனன் மீது காறி துப்புவான். மேலை நாட்டு ஆய்வாளர்கள், கிறித்துவ போதகர்கள் சிறிது சிறிதாக தங்களை மாற்றிக் கொள்ளும் நேரத்தில், இனத்தின் உள்ளிருந்து கிளம்பிய ஒரு நச்சுப் புழு, மீண்டும் இஸ்லாமியர்களின் காயத்தை ஆழ்ந்து கீறியது. உலகம் முழுவதிலுமுள்ள அனைத்து இஸ்லாமிய இதயங்களையும் கீறியது - இதயம் என்று ஒன்று உள்ள எந்த ஒரு இஸ்லாமியனும் இந்த ஈனனின் பெயர் கேட்டால் - இதயம் கொதிப்பான்.

வாட் குரானைப் பற்றி பேசினார் அல்லவா? ஆதையும் ஆராய்ந்து விடுவோமே! மௌலானா அபுல் ஆலா மௌதூதி (founder of Jamat-i-Islami) மிக ஆழ்ந்து இந்தப் பிரச்சினைக்குரிய குரான் வாசகங்களை ஆராய்ந்தார். வரலாற்றை எழுதியவர்கள் எத்தகைய ஆதாரங்களை வைக்கிறார்கள் என்று பரிசோதித்தார். மேலும், இந்த சாத்தானிக் வெர்ஸஸ் நிகழ்ந்ததாக நடந்த காலத்தைப் பரிசோதித்தார். இந்த நிகழ்வு, இஸ்லாத்தின் அடிப்படைக்கே முரணானது என்பதால், இந்த வசனங்கள் என்ன ஆயிற்று என்று கேள்வி கேட்டார். நீக்கப்பட்டது என்றால், எவ்வாறு? எப்பொழுது இந்த re-proof by Allah had come? என்ற கேள்வியை எழுப்பினார்! Reproof பார்த்த பின் எப்பொழுது நீக்கும் உத்தரவிடப்பட்டது? When the order to expunge had come?

மௌதூதி தனது வாதங்களை வைக்கிறார் -


அல்நஜ்ம் என்ற அத்தியாயத்தில் இருந்து,

53:19 நீங்கள் (ஆராதிக்கும்) லாத்தையும், உஸ்ஸாவையும் கண்டீர்களா?

53:20 மற்றும் மூன்றாவதான 'மனாத்"தையும் (கண்டீர்களா?)

53:21 உங்களுக்கு ஆண் சந்ததியும், அவனுக்குப் பெண் சந்ததியுமா?

53:22 அப்படியானால், அது மிக்க அநீதமான பங்கீடாகும்.

உச்சரிக்கப்பட்டதினாலே, ஏற்றுக் கொண்டதாகப் பேசப்பட்ட இந்த வசனங்களில், they are exalted birds, whose intercession is hoped for என்ற வரிகள் என்ன ஆயிற்று? இந்த வரிகள் நீக்கப்படவில்லை என்றால், இந்த வசனங்களின் பொருள் ஒன்றுக்கொன்று முரணாகப் போகின்றதே? தொடர்பில்லாத இந்த வரி, இந்த வசனங்களில் பொருந்த வில்லையே என்ற வாதத்திற்குப் பதில் இல்லை.

53:23 இவையெல்லாம் வெறும் பெயர்களன்றி வேறில்லை. நீங்களும் உங்கள் மூதாதையர்களும் வைத்துக் கொண்ட வெறும் பெயர்கள்! இதற்கு அல்லாஹ் எந்த அத்தாட்சியும் இறக்கவில்லை. நிச்சயமாக அவர்கள் வீணான எண்ணத்தையும், தம் மனங்கள் விரும்புபவற்றையுமே பின் பற்றுகிறார்கள். எனினும் நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடமிருந்து, அவர்களுக்கு நேரான வழி வந்தே இருக்கிறது.
53:24 அல்லது, மனிதனுக்கு அவன் விரும்பியதெல்லாம் கிடைத்து விடுமா?

53:25 ஏனெனில், மறுமையும், இம்மையும் அல்லாஹ்வுக்கே சொந்தம்.


அதாவது முதல் வரிகளில், அவைகள் உய்விக்கப்பட்ட பறவைகள் - அவைகளின் குறுக்கீடுகள் விரும்பத்தக்கதே என்று சொல்லிவிட்டு அடுத்த வாக்கியத்தில், 53:23ல், இவைகளெல்லாம் வெறும் பெயர்களன்றி வேறில்லை என்று சொல்ல வேண்டிய அவசியம்? ( உண்மை, சாத்தானிக் வெர்ஸஸ் என்ற வாக்கியம் பேசப்படவே இல்லை.)

மேலும், குரைஷிகள் என்ன அத்தனை முட்டாள்களா? அடுத்த வாக்கியம் முற்றிலும் எதிரான ஒரு பொருளைத்தருவது குறித்து எந்த ஒரு கேள்வியும் எழுப்பாமல், அப்படியே விழுந்து வணங்கி விட அவர்கள் என்ன முட்டாள்களா? இது நியாயமாக சிந்திக்கக்கூடிய அறிவிற்குப் பொருத்தமாக இல்லையே?

சரி, அப்புறம் இந்த் re-proof எப்பொழுது எப்படி வந்தது? எந்த வசனத்தின் மூலமாக? அது பனுஇஸ்ரெய்ல் என்னும் அத்தியாயத்தில், வசனம் 73-5 மூலமாக இந்தத் திருத்தம் அனுப்பப்பட்டதாம். அதன் பின்னர் அல்-ஹஜ் என்னும் அத்தியாயம் மூலம் 22:52-3 வசனங்கள் மூலம் நீக்கம் செய்யப்பட்டதாம். வேடிக்கை தான்.

வசனம் 73-5 இறங்கிய காலம், சாத்தானிக் வெர்ஸஸ் ஓதப்பட்டதாக சொல்லப்பட்ட காலத்திலிருந்து - ஆறு வருடங்கள்!!! நீக்கம் செய்யப்பட்ட வசனம் வந்த காலம் மேலும் மூன்றாண்டுகள் கழித்து. அதாவது அந்த தவறான வசனம் - சாத்தானின் வேதம் - நீக்கப்பட 9 வருடங்கள் காலமாகியதாம்!!! இந்த 9 வருடங்களும் குரைஷிகளுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே சமாதானம் நிலவியதா? இல்லையே! சமாதான உடன்படிக்கையின் படி தான், இந்த வசனத்தை நபிகள் முன்மொழிந்தார் என்றால், இந்த 9 வருடங்களும் சமாதானம் நிலவி இருக்க வேண்டுமே - ஏன் இல்லை? இந்தத் தவறை உணர்வதற்கு 9 வருடங்கள் ஆகியதா, இறைவனுக்கு?

ஒரு குருட்டு மனிதனை அவமானப்படுத்தியதற்காக, நபிகளை கடிந்து இறைவன் இறக்கித்தந்த வசனம், அந்த குருட்டு மனிதன் திரும்பி போகுமுன் வந்தது.


80:1 அவர் கடுகடுத்தார்; மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார்.
80:2 அவரிடம் அந்த அந்தகர் வந்தபோது,
80:3 (நபியே! உம்மிடம் வந்த அவர்) அவர் தூய்மையாகி விடக்கூடும் என்பதை நீர் அறிவீரா?
80:4 அல்லது அவர் (உம் உபதேசத்தை) நினைவு படுத்திக்கொள்வதன் மூலம், (உம்முடைய) உபதேசம் அவருக்குப் பயனளித்திருக்கலாம்.
80:5 (உம் உபதேசத்தின்) தேவையை எவன் அலட்சியம் செய்கிறானோ-
80:6 நீர் அவன்பாலே முன்னோக்குகின்றீர்.
80:7 ஆயினும் (இஸ்லாத்தை யேற்று) அவன் தூய்மையடையாமல் போனால், உம் மீது (அதனால் குற்றம்) இல்லை.
80:8 ஆனால், எவர் உம்மிடம் விரைந்து வந்தாரோ,
80:9 அல்லாஹ்வுக்கு அஞ்சியவராக-
80:10 அவரை விட்டும் பராமுகமாய் இருக்கின்றீர்.


கணப்பொழுதில், கடிந்து கொள்ளும் வசனத்தை நபிகள் ஒளித்து வைக்கவில்லை. மாறாக அதையும் தன் சகாக்களிடம் கூறி, எழுதி வைக்குமாறு கூறினார். எப்படி தனக்கு வசனங்கள் கூறப்பட்டதோ, அப்படியே. கூடுதலும் கிடையாது, குறைவும் கிடையாது.

இவ்வாறிருக்கும் பொழுது, ஒரு தவறைக் கண்டுபிடிக்க ஆறு வருடங்கள் இறைவன் காத்திருந்தானா? ஏன்? ஆறு வருடங்களுக்குப் பின் அதை நீக்குவதற்கு மேலும் மூன்று வருடங்கள் காத்திருந்தானா? அறிவிற்குப் பொருந்தாத இந்த தர்க்கங்களை, தன்னைக் கழுதையாக்கிக் கொள்ளும் தத்துவக்காரர்களால் மட்டும் தான் ஏற்றுக் கொள்ள இயலும். எந்த நேர்மையான ஆய்வாளர்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

அடுத்த கட்டமாக, இந்த வசனங்கள் தான் திருத்துவதற்கும், நீக்குவதற்கும் அனுப்பப்பட்டது என்று கொண்டாலும், அந்த வாசகங்கள் அந்தப் பொருளைத் தான் தருகின்றனவா? கிடையாது.

கிடையவே கிடையாது. இந்த வசனங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை. ஒட்ட இயலாதவை. சூழ்நிலை விட்டு விலகி நிற்பவை. பனுஇஸ்ரெய்ல் வசனம் (73-5):

17:73 (நபியே!) இன்னும் நாம் உமக்கு வஹீ மூலம் அறிவித்தோமே அதை விட்டும், அதல்லாததை நம்மீது நீர் இட்டுக்கட்டிக் கூறும்படி உம்மைத் திருப்பிவிடவே அவர்கள் முனைந்தார்கள், (அவ்வாறு நீர் செய்திருந்தால்) உம்மை தம் உற்ற நண்பராகவும் அப்போது எடுத்துக் கொண்டிருப்பார்கள்.

17:74 மேலும், நாம் உம்மை (ஹக்கான பாதையில்) உறுதிப்படுத்தி வைத்திருக்க வில்லையெனின் நீர் கொஞ்சம் அவர்கள் பக்கம் சாய்ந்து போயிருத்தல் கூடும்.

17:75 (அவ்வாறு நீர் சாய்ந்திருந்தால்) நீர் இவ்வாழ்நாளில் இரு மடங்கு (வேதனையும்,) மரணத்தில் இரு மடங்கு (வேதனையு)ம் நுகருமாறு நாம் செய்திருப்போம், பின்பு, நமக்கு எதிராக உமக்கு உதவியாளர் எவரையும் நீர் காணமாட்டீர்


இதில் என்ன திருத்தம் அனுப்பப்பட்டது என்று இந்த வசனத்தை முன் வைத்தவர்களால் விளக்கிச் சொல்ல முடியவில்லை. 'அவர்கள் முனைந்தார்கள்' என்ற வார்த்தைகள் நபிகளுக்கு எதிராக சூழ்ச்சி செய்தவர்களையே அடையாளம் காட்டுகிறதே தவிர, நபிகள் தவறான வசனங்களை மொழிந்தார் என்று கூறவில்லை. அவ்வாறு செய்யவில்லை நீர் என்பதை உறுதிபடுத்துகிறது. மேலும், தவறான பாதையை நோக்கி சாய்ந்தால் கூட, அதற்கு எத்தனை கொடிய தண்டனையை வழங்குவோம் என்ற எச்சரிக்கையும் கலந்திருந்தது. இத்தகைய எச்சரிக்கைகள், ஆங்காங்கு இருக்கின்றது - நம்பிக்கையாளர்களுக்கு.

அத்தகைய வசனங்களில் ஒன்று தான் இது தவிர, இதில் எந்த reproofம் அனுப்பப்படவில்லை. அடுத்ததாக சொல்லப்பட்ட, expunging order அந்த வசனங்களைப் பார்ப்போம் -

22:52 (நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பி வைத்த ஒவ்வொரு தூதரும் நபியும் (ஓதவோ நன்மையையோ) நாடும்போது, அவர்களுடைய அந்த நாட்டத்தில் ஷைத்தான் குழப்பத்தை எறியாதிருந்ததில்லை, எனினும் ஷைத்தான் எறிந்த குழப்பத்தை அல்லாஹ் நீக்கியப் பின்னர் அவன் தன்னுடைய வசனங்களை உறுதிப்படுத்துகிறான் - மேலும், அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவனாகவும், ஞானம் மிக்கோனாகவும் இருக்கின்றான்.
22:53 ஷைத்தான் (மனங்களில்) எறியும் குழப்பத்தை, தங்களுடைய இருதயங்களில் நோய் இருக்கிறதே அவர்களுக்கும், தங்களுடைய இருதயங்கள் கடினமாக இருக்கின்றனவே அவர்களுக்கும் ஒரு சோதனையாக ஆக்குவதற்கே (அவ்வாறு செய்தான்) அன்றியும், நிச்சயமாக. அநியாயம் செய்பவர்கள், நீண்ட (எதிர்ப்பிலும்) பகையிலும் தான் திடனாக இருக்கிறார்கள்.

இது ஒரு பொதுவான, எந்த ஒரு நிகழ்வையும் குறித்து சொல்லப்படாமல், ஒவ்வொரு நபிமார்களின் வாழ்விலும் சாத்தான் ஏற்படுத்தும் குழப்பங்களை எவ்வாறு இறைவன் நீக்கி, எல்லா நபிமார்களின் சொற்களையும் உறுதிபடுத்தினான் என்பதைத் தான் பொதுப்படையாக பேசி இருக்கிறதே தவிர, நபியே நீர் கூறிய தவறான வசனத்தை மாற்றிக் கொள்ளும் என்ற உத்தரவெல்லாம் இல்லை.

எல்லா நபிமார்களும் சாத்தானால் குழப்பத்திற்குள்ளாக்கப்பட்டார்கள். அவற்றிலிருந்து அவர்களைக் காத்து, இறைவன் தன் சொன்னவற்றை நிரூபித்தான் என்ற வசனம் இவர்களால் தவறாக மேற்கோளிடப்பட்டது. அத்தனையே!!!

மேலும் இந்த வசனங்களுக்கு முன்னும் பின்னும் அமைந்த வசனங்கள், இவை சாத்தானிக் வெர்ஸஸ் என்ற வசனத்தை நீக்குவதற்காக ஏற்பட்டதாகச் சொல்லப்படும் வசனங்களுடன் இணைத்துப் பார்த்தால், தெரியும் - பொருத்தமின்மை.

இவ்வாறு அனைத்து வாதங்களுக்கும் மறுப்பு தெரிவித்த பின்னர், என்ன நடந்தது என்பதை மௌதூதி அவர்களே தொகுத்து வழங்கினார்கள்.

1. குரைஷிகள் தலை தாழ்த்தி வணங்கியது.

2. லாத், உஸ்ஸா, மனாத் என்ற அவர்களின் ப்ரிய தெய்வங்களின் பெயர் சொல்லப்பட்டதும் பரவசம் கொண்டது. (இவைகள் வெற்று பெயர்களே என்ற கண்டன வரிகள் பின்னர் வருவதை இவர்கள் அறிந்திருக்கவில்லை. கண்டுகொள்ளவுமில்லை.)

3. அபிசீனியாவில் இருந்து முஸ்லிம்கள் மக்கா திரும்பத் துவங்கினர்.


இவைகளெல்லாம் ஒன்றாக இணைக்கப்பட்டு, சாத்தானிச் வெர்ஸஸ் என்ற கதை உருவாக்கப்பட்டது. இந்தக் கட்டுக்கதையை ஆராயாது, கேட்டதை கேட்டவாறே எழுதி வைத்தனர் - உண்மையை விட, Romantic fables ஐ அதிகம் விரும்பிய சில இஸ்லாமிய அறிஞர்கள். தங்களுக்குக் கூறப்படும் வசனத் தொடர்கள் - strong / weak என ஆராய முற்படவில்லை. மேலும் இவர்கள் தாங்கள் கேட்டதை கேட்டவாறு எழுதி வைத்திருக்கிறோம் என்ற Disclaimerஐயும் எழுதி வைத்திருந்தார்கள். இவர்களை மேற்கோள் காட்டிய ஐரோப்பிய அறிவுஜீவிகள் இந்த டிஸ்க்ளெய்மர்களை சாதூர்யமாக மறைத்துக் கொண்டனர்.

இவர்கள் (இஸ்லாமிய / ஐரோப்பியர்கள்) செய்த தவறையெல்லாம், மௌதூதியின் வாதங்கள் தவிடு பொடியாக்கியது. 'தன்னைக் கழுதையாக்கிக் கொள்ளும் தத்துவவாதிகள்' அத்துடன் தொலைந்து போயினர்.

புதிய வரலாற்றாசிரியர்கள் தோன்றினர். அவர்கள் எழுதியதைப் பற்றி அடுத்த பகுதியில் காண்போம்..

இன்ஷா அல்லாஹ் தொடரும்  

ARTICLE BY - SHAJAHAAN ( SHAJIBLOGSPOT )

Thursday, July 28, 2011

சல்மான் ருஷ்டி என்ற சாத்தான் (பகுதி 2)

இதன் முதல் பகுதியைப் படித்த பின்னர் தொடருங்கள்.

    நபிகள் பொய் பேசாதவர் என்ற நற்பெயரைக் கெடுக்க வேண்டும். இந்த உத்தியின் முதல் கட்டமாக அவர்கள் செய்தது - சமாதானம் என்ற நேசக்கரம். எப்படியாவது, அவரைத் தங்கள் மேலாண்மையை ஏற்கச் செய்து விட்டால், அதற்குப் பகரமாக, அவரது மதத்தையும் அங்கீகரிப்பது, பொருள் மற்றும் அதிகாரமுள்ள பதவி ஒன்றைத் தருவது. காலங்காலமாக மனிதனைப் போதை கொள்ளச் செய்வது அதிகாரம். அந்த அதிகாரத்தைத் தருவதற்கு அவர்கள் முன் வந்தனர். சராசரி மனிதனால் புறந்தள்ள முடியாத கவர்ச்சிகரமான - சலுகைகள்!!!

நபிகளுக்கு இவையெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. இத்தனைக்கும் நபிகள் தன்னை 'உங்களைப் போன்ற மனிதன் நான்' என்று சொல்லி அவ்வாறே வாழ்ந்து கொண்டிருப்பவர். என் ஒரு கையில் சூர்யனையும், மறு கையில் நிலவையும் கொடுத்தாலும் கூட, ஏக இறை வணக்கத்தை நான் கைவிடேன் என்று உறுதிபட கூறி மறுத்து விடுகிறார். இந்த சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஒரு புறமிருந்தாலும், மறுபுறத்தில், அவரைச் சுற்றி ஒரு கூட்டம் தூற்றுவதற்கென்று எப்பொழுதும் சூழ்ந்திருக்கும் அந்தச் சூழ்நிலையில் தான், அச்சம்பவம் நிகழ்கிறது.

இஸ்லாமியர்களின் இறைவணக்கத்தைக் கூர்ந்து கவனித்தவர்கள் - ஒன்றைப் புரிந்து கொண்டிருப்பார்கள் - குரானிலிருந்து சில வாக்கியங்களை சப்தமிட்டு ஓதி, தங்கள் தொழுகையை நிறைவேற்றுவார்கள். நபிகளின் காலத்தில், கஃஃபா ஆலயத்தில், முஸ்லிம்களும் தங்கள் தொழுகையை நிறைவேற்றிக் கொள்வர் - பகான் அரபிகளும் தங்கள் சிலை வணக்கத்தை செய்து கொள்வர்.

அன்று நடந்ததும் இது போல் ஒரு சாதாரண நிகழ்வே. வரலாறு 1400 வருடங்கள் கழித்தும் இதை விவாதித்துக் கொண்டிருக்கும் என்று எவரும் நினைத்துக் கூடப் பார்த்திராத வக்கிரத்தை அன்றைய இஸ்லாமிய எதிரிகள் தோற்றுவித்தார்கள்.

அவர்கள் பரப்பிய செய்தி இது தான் - முகமது நமது தெய்வங்களை ஏற்றுக் கொண்டார் என்ற பொய்யைப் பரப்பினர்.


அன்று தொழுகையின் போது நபிகள் வாசித்த குரான் வாக்கியங்கள் இவை தாம்.

53:19 நீங்கள் (ஆராதிக்கும்) லாத்தையும், உஸ்ஸாவையும் கண்டீர்களா?

53:20 மற்றும் மூன்றாவதான 'மனாத்"தையும் (கண்டீர்களா?)

53:21 உங்களுக்கு ஆண் சந்ததியும், அவனுக்குப் பெண் சந்ததியுமா?

53:22 அப்படியானால், அது மிக்க அநீதமான பங்கீடாகும்.

நபிகளின் கம்பீரமான குரலில், லாத், உஸ்ஸா மற்றும் மனாத் என்ற சிலைகளின் பெயர்கள் உச்சரிக்கப்பட்டதும், அவர் தங்கள் தெய்வங்களின் இருப்பை ஏற்றுக் கொண்டதாக நினைத்துக் கொண்ட பகான் அரபிகள், அந்த வாக்கியங்களின் முழு பொருளையும் உணர்ந்திருக்கவில்லை. மாறாக, குலவை ஒலி எழுப்பி, தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்திக் கொண்டனர். தாங்களும் தலை தாழ்த்தி, தரையில் சிரம் புதைத்து, வணங்கிக் கொண்டனர்.

இவர்கள் கிளப்பிய பொய் செய்தி, மக்காவின் எல்லைகள் பல கடந்து, அபிசீனியா தேசம் வரைக்கும் சென்றது. அங்கிருந்த முஸ்லிமகள் உண்மை அறியாது, தங்களின் துயரங்களைக் கண்டு, சமாதான உடன்படிக்கை செய்து கொண்டார் நபிகள் என்று எண்ணி மக்கா திரும்பத் துவங்கினர். பின்னர் தான் இது தவறான செய்தி என உணர்ந்து, தங்கள் வருகையை தள்ளிப் போட்டனர்.

இந்தப் பொய், கிளம்பிய சில நாட்களிலே அடங்கி விட்டது. எல்லோரும் மறந்து போன செய்தியாகியது. ஆனால், வரலாறு அவ்வாறு நிறுத்திக் கொள்ளவில்லை. இஸ்லாத்தை எதிர்த்தவர்கள், இஸ்லாம் பரந்து விரிந்த பின்னும் இருக்கத் தான் செய்தனர். இந்தப் பொய் செய்திக்கு, கண் காது மூக்கு வைத்து ரகசியமாக வளர்த்துக் கொண்டிருந்தனர். சாதாரணமாக உச்சரிக்கப்பட்ட பெயர்கள் ஒன்றே தங்கள் தெய்வங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக சொல்வதற்கு தகுந்தது அல்ல என்பதால், அவர்களே இல்லாத ஒரு வாக்கியத்தை உருவாக்கிக் கொண்டனர். அது - 'they are exalted birds whose intercession is hoped for'

'அவைகள் உய்விக்கப்பட்ட பறவைகள் - அவற்றின் குறுக்கீடுகள் விரும்பத்தக்கது..'

இவ்வாறு உருவாக்கப்பட்ட இந்தப் பொய் வாக்கியங்கள் பின் என்னவாயிற்று?

அவை நீக்கப்பட்டன. நபிகள் சொன்னாராம் 'இந்த வாக்கியங்களை நான் சொல்லவில்லை. அவைகளை சாத்தான் என் காதில் ஓதிற்று. அதை நானும் கூறினேன். பின்னர் நான் தவறை உணர்ந்தேன் - அதை நீக்கிவிட்டேன்.'

பின்னர் அனைத்தும் அமைதியாயிற்று. இந்த அண்டப் புளுகு முஸ்லிம்களிடையே எடுபடவில்லை. யாரும் இந்தப் பொய்யர்களை துளிகூட மதிக்கவில்லை. ஆனால், இஸ்லாம் தனக்குள் மட்டும் புழங்கிக் கொண்டிருந்த காலத்தில் குப்பைத் தொட்டியில் தூக்கி எறியப்பட்ட இந்த வதந்தி, பின்னர், இஸ்லாம் தன் கதவுகளைத் திறந்து கொண்டு, மேற்கு நோக்கிய பயணத்தைப் புறப்பட்ட பொழுது, கிறித்துவ மதம் தனது நிலங்களையும் மேலாண்மையையும் முஸ்லிம்களிடம் இழக்கத் தொடங்கியது. கிறித்துவமும், இஸ்லாமும் நேருக்கு நேர் நின்ற பொழுது, இஸ்லாத்தை எதிர்கொள்ள அன்றைய கிறித்துவ தத்துவவியலாளர்கள் எடுத்துக் கொண்ட வழிமுறை - அவதூறுகளுக்கு உயிரூட்டுவது - கற்பனை கதைகளை அடுக்கி வைப்பது.

இந்த வரலாற்றாசிரியர்கள் தங்களுக்குத் தெரிந்த அரைகுறை ஞானத்துடன், மொழி அறியாது, இஸ்லாமிய வழிமுறைகளை வரலாற்றை தத்துவவியலை எல்லாம் ஆராயத் துவங்கினர். அவர்களுக்குக் கை கொடுத்தது - சில இஸ்லாமிய அறிஞர்கள் எழுதி வைத்த - உண்மையோ, பொய்யோ தாங்கள் கேள்விப்பட்ட அனைத்தையும் பதிவு செய்து வைக்க வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்ட சில அறிஞர்கள், இதையும் பதிவு செய்து வைத்தனர் - ஒரு செய்தி என்ற அளவில்.

புகாரி, முஸ்லிம் போன்ற அறிஞர்கள் ஒவ்வொரு செய்தியையும், அதை கூறியவர் தந்த சங்கிலித் தொடர் போன்ற நபர்களின் வரிசையைத் தொடர்ந்து, மூலநபரை அடைந்து, அவர் நபிகளுடன் எவ்வாறு தொடர்புடையவர் என்ற மூலத்தை ஆராய்ந்து, அதில் துளியும் சந்தேகமில்லாத பொழுது அதை ஏற்றுக் கொண்டனர். சிலருக்கு அத்தகைய பொறுமை இருந்ததில்லை. ஆனாலும் தங்கள் அறிவை பறைசாற்றிக் கொள்ள, அல்லது தாங்களும் வரலாற்றில் இடம் பெற்றுவிட வேண்டும் என்ற ஆவலுடன், செய்தி சொல்ல வரும் நபர்களை எல்லாம் ஏற்றுக் கொண்டு பதிவு செய்து வைத்தனர்.

அவர்களில் ஒருவர் - இப்னு இஷாக்.

இப்னு இஷாக் இஸ்லாத்திற்கு ஆற்றிய பணி அளப்பரியது. போற்றப்பட வேண்டியது. அவர் தான் முதன்முதலாக நபிகளின் வாழ்க்கை வரலாற்றைத் தொகுக்க முனைந்தவர். அவரது காலம் - d.768. அதாவது நபிகளின் காலத்திற்கு பின் முதல் நூற்றாண்டில் வாழ்ந்து மறித்தவர்.

நபிகள் தான் வாழ்ந்த காலத்தில் ஒரு கட்டுப்பாட்டை விதித்திருந்தார். தன்னைப் பற்றிய குறிப்புகளைத் தொகுப்பதற்கு தடை விதித்திருந்தார். தான் கூறும் வார்த்தைகளைக் கூட தொகுப்பதற்கு தடை விதித்திருந்தார். தான் கூறும் குரான் வாக்கியங்களைத் தவிர மற்ற அனைத்தும் பிரதி எடுக்கப்படுவது தடை விதிக்கப்பட்டிருந்தது. தன்னை இறைவன் அளவிற்கு பக்தியினால், பாசத்தினால் மனிதர்கள் உயர்த்தி விடுவார்கள் என்ற அச்சம் அவருக்கு இருந்தது. அதனால், தன்னை ஓவியமாக வரைவது, தன்னைப் பற்றிய குறிப்புகள் என்று எதையும் பதிவு பெறாமல் பார்த்துக் கொண்டார். தன் கல்லறையில், எந்த ஒரு கட்டிடமும், நினைவுக் குறிப்பும் செய்யக் கூடாது என்றும் தடை விதித்திருந்தார். இன்றுவரையிலும் அது அவ்வாறே காப்பாற்றப் பட்டிருக்கிறது.

ஒரு நூற்றாண்டு காலத்திற்குப் பின்னே, தான் இந்த வாழ்க்கை வரலாறும், மற்றும் நபி மொழிகளும் பதிவு பெற முயற்சிகள் தொடங்கப்பட்டன. அதன் காரணமும் கூட, நபிகளின் பெயரால், பலரும், பலவாறான கதைகளையும், புது மொழிகளையும் கூறிக்கொண்டிருந்தனர். அவற்றையெல்லாம் தடுத்து நிறுத்த வேண்டுமெனில், முறைப்படி தொகுக்கப்பட்ட, ஹதீது நூற்களும், வாழ்க்கை வரலாறும் அத்தியாவசியம் என்பதால், அவைகள் தொகுக்கப்பட ஆரம்பிக்கப்பட்டன.

ஒரு சாரார் - நபிகளின் மொழியை - அதன் தாக்கம் இந்த உலகம் இருக்கும் வரையிலும் வாழும் என்பதால், மிகவும் கவனத்துடன் ஆராய்ந்து ஆராய்ந்து, உண்மை என துல்லியமாக அறியப்பட்டவைகளை மட்டுமே பதிந்து வைத்தனர்.

ஆனால், வாழ்க்கை வரலாற்றைத் தொகுக்க முனைந்தவர்கள் இத்தகைய ஆராய்ச்சி மனப்பான்மையை மேற்கொள்ளவில்லை. வெறும் தர்க்க விதிகளை மட்டும் வைத்துக் கொண்டு, விளங்கிக்கொண்டதை பதிவு செய்து வைத்தார்கள். அவர்களுக்கு முகமது நபி அவர்கள் ஒரு கதாநாயகன். நபி அவர்கள் எதை மறுத்தார்களோ அதையே அவர்கள் செய்தனர். They tried to Glorify The Prophet...They tried to romanticize his life. They tried to project him as a superman.. They tried that prophet won over the satan by identifying and removing the verses...

இந்த ஹீரோ வழிபாட்டில் முன் நின்றவர் - இப்னு இஷாக். முதன் முதலாக வாழ்க்கை வரலாற்றைத் தொகுத்தவர் - சீரத் ரசூல் அல்லாஹ் என்ற பெயரில் தொகுத்தவர் மூளையைப் பயன்படுத்தியதை விட, தன் ஹீரோ மீது கொண்டிருந்த அபரிமிதமான அன்பினால், தன் இதயம் விரும்பிய பராக்கிரமான செயல்களை எல்லாம் நபிகள் மீது சூடி பெருமிதம் கொண்டவர் - அவர் அறிந்திருக்கவில்லை - இது எத்தனை தவறாக புரிந்து கொள்ளப்படும் என்று. இவரது இந்த செயலை - செயல்பாடுகளை அவரது சமகாலத்து அறிஞர்களே கண்டித்திருக்கின்றனர் - விமர்சித்திருக்கின்றனர்.

இமாம் மாலிக் - மாலிக் மத்ஹபு என்ற தத்துவ இயல் வழியாக பாதை ஒன்றை அமைத்தவர் - இப்னு இஷாக் காலத்தவர். இஷாக் பற்றி இவர் சொல்வதை கேளுங்கள்: 'DEVIL' ஹா! சாத்தானின் வேதத்தைப் பற்றிய குறிப்புகளை எழுதி வைத்த முதல் சாத்தான்?

ஹிஷாம் பின் உராமா, மற்றுமொரு சம காலத்திய மார்க்க அறிஞர் என்ன சொல்கிறார் தெரியுமா - 'The rascal lies'

இமாம் ஹன்பால், சிறப்புமிக்க மார்க்க ஆய்வாளர் இவரது வரலாற்றை முற்றிலுமாக நிராகரித்துப் பேசுகிறார். பல மார்க்க அறிஞர்களும் இவரது தொகுப்பை குப்பை என ஒதுக்கிவிட வேண்டும் என்ற கருத்தையே முன்வைக்கின்றனர்.

எதனால் இப்னு இஷாக் இவ்வாறு செய்தார்? சற்று கூட ஆராய்ந்திருக்க மாட்டாரா? அவர் எடுத்துக் கொண்ட தர்க்க முறை - Theory of deduction. இரண்டு சம்பவங்கள் உண்மையாக இருக்கும் பொழுது அது சம்பந்தப்பட்ட மூன்றாவது செய்தியும் உண்மையாக இருக்கும் என்ற அனுமானம். இது ஒரு assumption. இதில் புரிந்து கொள்ள தவறியது - when you are making an assumption - you are making an ass of yourself என்பது தான். ASS - U !!!

கொஞ்சம் விளக்கிச் சொல்வது என்றால், இந்த உதாரணத்தைப் பாருங்கள்.

சூர்யன் மேற்கே அடைகிறான்.

மேற்குத் தொடர்ச்சி மலை மேற்கே இருக்கிறது.

சூர்யன் மேற்குத் தொடர்ச்சி மலை பின்னால் அடைகிறான்.


இவ்வளவு தான் Theory of Deduction. முதல் இரண்டு செய்திகள் உண்மையாக இருக்கும் பொழுது, மூன்றாவது உண்மையாக இருக்க வேண்டும் என்பது தான். மூன்றாவது செய்தி உண்மைதான். மலைக்கு கிழக்கு பக்கம் வாழும் தமிழகத்தார்களுக்கு. ஆனால், இந்த கண்டுபிடிப்பை மலையாளிகளிடம் சொன்னால் சிரிப்பார்கள். அங்கு, மேற்குத் தொடர்ச்சி மலை மேற்கில் இல்லை. இரண்டாவது வாக்கியம் அவர்களைப் பொறுத்தவரை பொய். ஆக உண்மை எது பொய் எது என்பதற்கான ஆதாரமும் கொடுக்கப்பட வேண்டும்.

இங்கு அவற்றைப் பற்றிய ஆராய்ச்சிகள் சரிவர செய்யப்படவில்லை. இது வரலாற்றை ஆராய்பவர்களுக்குப் புரியும். ஆனால், இஷாக் ஆராய்ந்த விதம் இவ்வளவு தான்.

நபிகள் பெருமானார் குரானை ஓதினார்.

எங்கும் உற்சாகக் குரல்களும், குலவை ஒலியும், கிளம்பியது.

நாடு கடந்து சென்ற முஸ்லிம்கள் மக்கா திரும்ப ஆரம்பித்தனர்.

ஆக, மேற்கண்ட அனைத்தும் உண்மையானால், இந்த செய்தியும் உண்மை தான் என்று நம்பி, தன் ஆராய்ச்சியை முடித்துக் கொண்டு பதிவு செய்து வைத்தார் - The Satanic Versus என்ற செய்தியையும்.

சிலர் நினைத்துக் கொண்டிருப்பது போல - இப்னு ச'ஆத் அல்ல இந்த செய்தியைப் பதிவு செய்தவர். ஆங்கிலத்தில் சில புத்தகங்கள் வரும். அவற்றின் தலைப்பே 'How to bluff your way through.. .. .. .. ' எதைப்பற்றியதாக வேண்டுமானாலும் இது இருக்கலாம். அதன் காரண காரியம் - உங்களுக்கு சில சொற்றோடர்களை அது கற்பிக்கும். Some jargons, some connected phrases.. .. .. இதைத் தான் இப்பொழுது சில நண்பர்களும் செய்ய முனைந்திருக்கின்றனர். ச'ஆத்-திற்கு முன்பே இவை விவாதிக்கப்பட்டு திருத்தமும் செய்யப்பட்டுள்ளது.

இஷாக்- எழுதியதை முழுவதும் வாசித்த இப்னு ஹிஷாம் அதை முற்றிலுமாகத் திருத்தி, romantic வாக்கியங்கள், செய்திகள், புனைவுகள் அனைத்தையும் நீக்கி, சுத்தமான ஒரு சீரத் நபி - நபி வரலாற்றை எழுதினார். இவரது காலம் - d.834. இவரது சமகாலத்தவரான வாஹிதி (757 - 822) மீண்டும் இஷாக் எழுதிய வரலாற்றை எடுத்துக் கொண்டார் - காரணம் சுவை. வாஹிதியின் மாணவர் தான் இப்னு ச'ஆத்.(764-845) பின்னர் வந்தவர் - தபரி. (839-923) இவர்கள் அனைவரும் வரலாற்றில் குறிக்கப்படுகின்றனர் - ' the earliest sources of the history of Islam'

இவர்களைத் தான் பிரதி எடுத்து ஐரோப்பிய ஆய்வாளர்கள் கூறுவது - ' quoting earliest sources of Islam' அவர்கள் மறந்து விட்ட விஷயம் - The earliest sources of Islam is Quran itself. குரானை வாசித்துப் புரிந்து கொள்ள சக்தியற்ற வரலாற்றாளார்கள், மேற்கண்ட 'அறிஞர்'களின் எழுத்துகளை அப்படியே மொழி பெயர்த்து, தாங்கள் எழுதிய வரலாறாக மாற்றிக்கொண்டு விட்டனர் ' ஆராய்ச்சிக்கு உட்படுத்தாமல். அல்லது இந்த தவறுகளை தர்க்கித்து, விவாதித்து, ஆராய்ந்து, இவற்றை நீக்கி எழுதிய, இப்னு ஹிசாமையோ அல்லது பிற்காலத்தைய ஆராய்ச்சியாளர்களையோ அவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. அவர்களும் Theory of deduction என்ற 'தங்களைக் கழுதையாக்கிக் கொள்ளும்' தத்துவத்தைத் தான் பயன்படுத்திக் கொண்டனர்.


' இஸ்லாமியர்கள் முகமதுவின் மீது அதீத பற்று கொண்டவர்கள்' 

' இஸ்லாமியர்களே எழுதி வைத்த செய்தி'

' அதனால், சாத்தானிக் வெர்ஸஸ் உண்மை'

ரொம்ப எளிது. ஒரு அவதூறைக் கூறுபவர்களுக்கு இது எளிது. ஆனால், அதை மறுத்து, உண்மையை நிறுவுவது கடினம்.

ஆனாலும் இஸ்லாமியர்கள் - நிறுவினார்கள். இந்த அவதூறு பொய் என்று.

எப்படி? அடுத்த பகுதியில் காண்போம்....

இன்ஷா அல்லாஹ் தொடரும்

ARTICLE BY SHAJAHAN ( SHAJIBLOGSPOT )

Wednesday, July 27, 2011

சல்மான் ருஷ்டி என்ற சாத்தான் (பகுதி 1)

  
ல்மான் ருஷ்டி என்றால், ஒரு சராசரி முஸ்லிம், யார் என்று தான் கேட்டிருப்பான் -அவர் The Satanic Verses என்ற புத்தகத்தை எழுதும் முன் வரைக்கும்.

அவர் ஏன் எதனால் அந்தப் புத்தகம் எழுதினார் என்பதற்கு யாராலும் விடை சொல்ல முடியாது. அவரே சொல்லி இருப்பது கூட, freedom of expression should never be curtailed. (Sick of it!) இந்தக் கருத்து சுதந்திரம் - ஒருவர் ஒரு கருத்தை எழுதி அதை வாசித்த பின் தான் அது சரியா, தவறா என்ற பிரச்னை விவாதிக்கப்பட்டு, எழுதியவர் சொல்லிய கருத்தை எல்லோரும் ஒரு பிடி பிடிக்கின்றனர். ஆனால், எழுதும் முன்னே, அந்தக் கருவானது, ஒருவர் மனதில், விதையாக முளைக்கும் பொழுது, யாரும், உன்னிடத்திலே ஒரு தவறான கருத்து முளைத்துக் கொண்டிருக்கிறது என்று சண்டை பிடிப்பதில்லை. தான் தவறான ஒரு கருத்தை வளர்க்கிறோமே என்ற சுயவிசாரணையெல்லாம் செய்து கொள்ள மாட்டேன் என்று அடம்பிடிப்பெதல்லாம் சரி - ஆனால், சொல்ல வந்தது இன்னொருவனின் கருத்தை இம்சித்து, பரிகசித்து, அவமானப்படுத்த இருக்கிறது அதிலும், நேர்மைக்குப் புறம்பாக என்கையிலும் கூட, இவர்களது கருத்தை அடுத்தவர் மதிக்க வேண்டும் என்பது எத்தனை சிறுபிள்ளைத் தனம்.

சரி - சல்மான் ருஷ்டி அப்படி என்னதான் செய்தார்?

அவர் செய்தது இஸ்லாமியர்களுக்கெதிரான பச்சைத் துரோகம். சாக்கடையில் விழுந்து புரண்ட ஒரு பன்றி, வீட்டிற்குள் நுழைந்து விட்ட அருவெறுப்பு. தன் இனத்தின் மீது சேறு வாரி அடித்து, அதற்கு அடுத்தவனிடத்தில் கூலிக்குக் கையேந்தும் இலக்கிய ரவுடித்தனம். எல்லாவற்றையும் இறுதியில் இது புனைவு தானே என்று கூறி தப்பித்துக் கொள்ள முயலும் கோழைத்தனம்.

தான் எழுதுவதைப் பற்றி, முழுதான, ஒரு விரிவான ஆராய்ச்சி செய்யாமல், இஸ்லாத்தின் மீது வெறுப்புமிழும் ஒரு தலைப்பட்சமான சில வரலாற்றாசிரியர்களின் தவறான வாதங்களை ஆதாரமாகக் கொண்டு தன் கண்களை மூடிக் கொண்டு அவதூறு எழுதியவர். தன்னை ஒரு பெரும் எழுத்தாளானாகக் காட்டிக் கொள்ள முயன்று, இஸ்லாமியர்கள் அன்னை என்று ஏற்றுக்கொண்ட நபியவர்களின் மனைவியர் மீது அவதூறு கூறியவர். பெண் கருத்தியல் பேசும் பெருந்தலைகள் எவரும் காலத்தால் மறைந்து விட்ட பெண்களை இழிவு படுத்தும் இந்த ஈனனிடம் கேட்கவில்லை - எதை ஆதாரமாகக் கொண்டு நீ இதை செய்கிறாய் என்று? Hypocrites!

- முற்றிலுமாகத் தவறு என நிரூபிக்கப்பட்டு வரலாற்றாசிரியர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, வரலாறுகளைத் திருத்தி எழுத ஆரம்பித்துள்ளனர் வரலாற்றாசிரியர்கள். ஆனால், இவரோ, அவற்றையெல்லாம் புறக்கணித்து, குப்பை என தூக்கி எறியப்பட்ட, ஆதாரமற்ற போலியான நிகழ்வுகளை சுவையாக இருக்கிறது என்று அவதூறை எழுதினால் பின்னர் அனைவராலும் வெறுக்கப்படுவது நியாயம் தானே?

அப்படி என்னதான் செய்தார் இவர்?

இவர் ஒரு புனைவை எழுதினார். The Satanic Versus என்ற புனைவை.

வரலாற்றில் பெருமானார் அவர்கள் மீது அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே, அவரது ஆளுமையை இழிவு செய்ய முயன்ற பகான் அரபிகள் இட்டுக் கட்டிய கதை தான் இது.

கொஞ்சம் வரலாற்றின் உள்நுழைந்து பார்ப்போம்.

நபிகள் வெளிப்படையாகப் பிரச்சாரம் தொடங்கி, பலரது கவனம் பெற்று, தங்களை இஸ்லாத்தில் இணைத்துக் கொள்ள சிறிது சிறிதாக மக்கள் முன் வந்து கொண்டிருந்த காலமது. முஸ்லிம்களுக்குப் பலவகையிலும் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தனர் - குரைஷி இன அரபிகள். அரபிகளிலே மிக வலுவான குலம் குரைஷி இனம். கஃபா எனப்படும் பழங்கால இறை வணக்க ஆலயம் அவர்களது கட்டுப்பாட்டில் இருந்தது. அதனுள் பல சிலைகளும் நிறுவப்பட்டு, அதன் வணக்க வழிபாடுகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததன் மூலம், அரபிகள் அனைவரையும் தங்கள் மேலாண்மையை, ஆளுமையை மறைமுகமாக ஏற்க வைத்திருந்தனர்.

ஆனால், இன்றோ, அந்த அரபிகளின் குலத்திலிருந்தே ஒருவர் தோன்றி - இந்த சிலைகள் வணக்கத்திற்குரியவை அல்ல - வணக்கத்திற்குரிய இறைவன் வேறு - அவனது பாதைக்கு வாருங்கள் என்று அறை கூவல் விட்டதும் மிரண்டு போய்விட்டனர். ஏனென்றால், விடுக்கப்பட்ட அறை கூவல் நேரிடையாக அவர்களது ஆளுமையை - அதிகாரத்தை - கேள்விக்குட்படுத்தியது. கேள்வி கேட்டவரோ -நம்பிக்கைக்குரியவர் என்று அனைவராலும் பாராட்டப் பெறும், அல் அமீன் என்று விளிக்கப்பட்ட நபிகள் பெருமானார். அவரது நேர்மையை எவரும் சந்தேகிக்கவில்லை. இப்படிப்பட்டவரின் பிரச்சாரத்தால், தினமும் அவர் பக்கம் கூட்டம் பெருகுவதையும், தங்கள் பக்கம் தேய்கிறதையும் கவனித்த அவர்கள் புரிந்து கொண்டனர் - வெகு சீக்கிரமே தாங்கள் தங்கள் அதிகாரமனைத்தையும் இழந்து விடுவோமென்று. அதை தடுக்க அவர்கள் பல வழிகளிலும் தொல்லைகள் கொடுக்க முனைந்தனர் - முஸ்லிம்களின் கூட்டம் பெருகுவதை கண்டிப்பாகத் தடுத்து நிறுத்திட வேண்டுமென்று.

நபிகள் மீது நேரிடையான தாக்குதல் தொடுக்க அவர்கள் தயங்கினர். அவரது குலம் வலுவானது. நபிகள் மீது கை வைக்கும் எவரும் தாங்கள் மட்டுமல்ல தங்கள் வம்சமும் பூண்டோடு அழிக்கப்பட்டு விடும் என்பதை அறிந்து வைத்திருந்தனர் - அதனால், அவர்கள் நேரிடையான மோதலைத் தவிர்த்து விட்டு, வழக்கம் போல் கோழைகள் செய்யும் உத்தியை மேற்கொண்டனர்.

- நபிகளை விடுத்து, வலுவற்ற ஏழ்மை நிலையில் இருக்கும் முஸ்லிம்களை மிகுந்த துயரத்திற்குள்ளாக்குவது. அதன் மூலம் மத மாற்றத்தைத் தவிர்ப்பது
- நபிகளின் நற்குணத்திற்குக் களங்கம் விளைவித்து அதன் மூலம் எங்கனமாகிலும், மக்களை நபிகளிடமிருந்து விலகச் செய்வது.

இந்த இரண்டு உத்திகளிலும் முதலாவதை செய்வது எல்லோருக்கும் மிக எளிதாக இருந்தது. அதற்கு பெரிய அளவில் மூளை தேவைப்படவில்லை. ஆனால், பிந்தைய செயலைச் செய்ய மிகுந்த கவனம் தேவைப்பட்டது. எதிரியின் பலம் அவர்களுக்கு நன்றாகத் தெரியும். நபிகளுக்குப் பொய் பேசாதவர் என்ற நற்பெயர் உண்டு. அந்த நற்பெயரை மட்டும் கெடுத்து விட்டால்...?

பொய்பேசாதவர் என்ற நற்பெயரை மட்டும் கெடுத்து விட்டால்..!?

இன்ஷா அல்லாஹ் தொடரும்   

ARTICLE BY SHAJAGAAN (SHAJIBLOGSPOT)