Thursday, May 24, 2012

இங்கிலாத்தின் முதல் முஸ்லிம்


வில்லியம் அப்துல்லாஹ் க்யுலியம்
பிரித்தானியாவின் முதல் முஸ்லிம் என்பதைவிட பிரித்தானிய பிரஜைகளில் முதன் முதலில் புனித இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர் என்ற தலைப்பே இந்த பதிவுக்குப் பொருந்தும் என்றாலும் பதிவின் தலைப்பின் நீளம் கருதியே மேலுள்ள தலைப்பை இட்டேன்.லிவெர்பூல் இங்கிலாந்தின் துறைமுக நகரங்களில் மிகவும் பிரசித்திபெற்ற ஒரு நகரமாகும்.துறைமுக நகரம் என்பதால் அங்கு பல்வேறுபட்ட சமயத்தவர்களும் வந்து போவார்கள்.அப்படி வந்து போகும் முஸ்லிம்களுக்கும் அங்கு வாழும் முஸ்லிம்களுக்கும் அவர்களின் தொழுகைக் கடமைகளை நிறைவேற்ற கம்பீரமாக காட்சி தருகிறது லிவெர்பூல் அர்-ரஹ்மா ஜும்மா பள்ளிவாசல்.இந்த நகருக்கும் பிரித்தானியாவின் இஸ்லாமிய வரலாற்றுக்கும் இடையே மிக மிக நெருங்கிய தொடர்பொன்று உள்ளது.ஏனெனில் லிவெர்பூல் நகரிலே பிரித்தானியாவின் பதிவு செய்யப்பட முதல் பள்ளிவாசல் துவங்கப்பட்டது.அது லிவெர்பூல் அர்-ரஹ்மா ஜும்மா பள்ளிவாசல் அல்ல.மாறாக இன்று யாருடையதும் கவனிப்பாரற்று காணப்படும் ஒரு பள்ளிவாசல்.அதை துவங்கியவரே பிரித்தானியாவில் முதன் முதலாக இஸ்லாத்தை தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட வில்லியம் அப்துல்லாஹ் கியுலியம்


வில்லயம் அப்துல்லாஹ் கியுலியம் ஒரு சட்ட ஆலோசகர் ஆவர்.இவர் கிருஸ்தவ மெதடிஸ்ட் பிரிவை சேர்ந்தவராவர்.இவரின் தந்தை ஒரு பிரிசித்தி பெற்ற கடிகார உற்பத்தியாளரும் விற்பனையாளரும் ஆவர்.1887 இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட இவர் பிரித்தானிய கிறிஸ்தவர்களில் முதன் முதலாக இஸ்லாத்தை தழுவியவராவர்.வில்லியம் ஹென்றி கியுலியம் என்ற பெயரோடு ஒரு மெதடிஸ்ட் குடும்பத்தில் பிறந்த இவர் தனது 17 வது வயதில் ஏற்பட்ட ஒருவித நோய்க்கு மொரோக்கோ சென்றிரிந்த நேரம் இஸ்லாம் பற்றி அறிந்து கொண்டு திரும்பி வரும் போது ஒரு முஸ்லிமாகவே இங்கிலாந்து வந்தார்.1882 இல் வடக்கு பிரான்சுக்கு சென்றிருந்த போதே இஸ்லாத்தின் அறிமுகம் அவருக்குக் கிடைத்தது.மேலும் அவரின் மொரோக்கோ பயணத்தின் போது துனிசியா மற்றும் அல்ஜிரிய போன்ற நாடுகளிலும் இஸ்லாத்தைப் பற்றி அறிந்து கொண்டார்.

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு நாடு திரும்பிய வில்லியம் அப்துல்லாஹ் கியுலியம் 1889 இல் லிவேர்பூளில் முஸ்லிம்களுக்கான கலாச்சார நிலையம் ஒன்றை நிறுவினார்.அந்நிலையத்தில் பள்ளிவாசல் பாடசாலை அநாதை இல்லம் மற்றும் பிற மதத்தவர்களுடன் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளவதட்கான அரங்குகள் என்பன காணப்பட்டன.இது லிவேர்பூலை அண்மித்து வார்ந்து வந்த இஸ்லாத்தின் மத்திய நிலையமாக திகழ்ந்தது.இங்கு ஆரம்பிக்கப்பட்ட பள்ளிவாசலே இங்கிலாத்தின் முதல் பதிவு செய்யப்பட பள்ளிவாசல் ஆகும்.

இவர் கிட்டத்தட்ட 600 மேற்பட்ட ஆங்கிலேயர்களை இஸ்லாத்தின் பக்கம் கொண்டுவந்தார்.1893 முதல் 1908 வரை இவர் THE CRESENT என்ற சஞ்சிகையின்  தலைமை ஆசிரியராக செயட்பாட்டார்.மேலும் இவரின் THE FAITH OF ISLAM என்ற நூல் இஸ்லாமிய உலகில் இவருக்கு ஒரு சிறந்த அறிமுகத்தை கொடுத்தது.அந்த நூல் பதிமூன்று மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.1894 இல் அன்றை உஸ்மானியா கிலாபாத்தின் கலீபா 2 வது அப்துல் ஹமீதினால் பிரித்தானியாவின் சைஹுள் இஸ்லாம் ஆகா நியமிக்கப்பட்டார்.மேலும் ஆப்கானிஸ்தானின் அமீர் அப்துர் ரஹ்மான் கான் லிவெர்பூல் இஸ்லாமிய நிலையத்தை அபிவிருத்தி செய்ய இவருக்கு பலவிதத்தில் உதவிகளை வழங்கியுள்ளார். பாரசீக ஷாஹ் மன்னரால் பாரசீகத்துக்கான பிரித்தானிய துணை தூதுவராகவும் நியமிக்கப்பட்டார்.இங்கிலாந்தின் எழாவது ஏழாவது எட்வேர்டின் காலத்தில் வில்லியம் அப்துல்லாஹ் பிரித்தானிய முஸ்லிம்களின் தலைவராக ஏற்றுக்கொள்ளப்பற்றிருந்தார்.
ISLAM IN VICTORIAN TIMES நூலின் ஆசிரியர் பேராசிரியர் ரோன் ஜீவ்ஸ் அவர்களின் கருத்துப்படி வில்லியம் அப்துல்லாஹ் கியுலியம் ஒரு பக்தியான கிருஸ்தவ குடும்பத்தில் பிறந்தார்.மேலும் அவர் மதுப்பாவனையை தடை செய்யக்கோரும் TEMPERANCE MOVEMENT இன் செயற்பாட்டு உறுப்பினர்களில் ஒருவராவர்.இஸ்லாத்தில் மது பாவனை முற்றாக தடை செய்யப்பட்டிருப்பது  அவருக்கு இஸ்லாத்தின் மீது  ஆர்வம் ஏற்படக் காரணங்களில் ஒன்றாகும் மேலும் கிறிஸ்தவத்தின் திருத்துவக் கொள்கை மீது அவருக்கு எந்தவிதமான நம்பிக்கையும் இருக்கவில்லை.

இங்கிலாந்தில் முதன் முதலாக இஸ்லாத்தை தழுவிய வில்லியன் அப்துல்லாஹ் கியுலியம் 1932 இல் மரணம் அடைந்தார்.

1 comment:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்,

    நல்ல கட்டுரை,சிறந்த கருத்துக்கள் உங்கள் தளம் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.உங்கள் பணி சிறக்க உங்கள் தளத்தில் என்னை இணைத்துக்கொண்டேன்

    எனது தள கட்டுரைகளில் சில:அஹமது தீதாத் -கிறிஸ்தவர்களின் சிம்மசொப்பனம்,திருமண வீட்டில் வீடியோ!-அதிர்ச்சி சம்பவம்,இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் பெண்கள் பற்றிய தவறான கருத்திற்கு தக்க பதிலடி-www.tvpmuslim.blogspot.com

    ReplyDelete