அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.
2009 ஆண்டு உலகம் பூராகவும் சக்கை போடு போட்ட திரைப்படமே "2012" என்ற பேரழிவுத் திரைப்படம்(DISASTER MOVIE).ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மாயன்களால் கணிப்பிடப்பட்ட அவர்களின் நாட்காட்டியை அடிப்படையாக வைத்தே இந்த பேரழிவு பற்றி பேசப்படுகிறது.பாரிய பட்ஜெட், நவீன தொழில்நுட்ப உத்திகள், வசீகரிக்கும் ஆப்டர் எபெக்ட் தொழில்நுட்பங்கள் கொண்டு உருவாக்கப்பட்ட "2012" திரைப்படம்,திரைப்படம் என்ற ஒரு வரையறையைத் தாண்டி மறைமுகமான ஒரு தகவலை ஒரு செய்தியை நமக்கு சொல்கிறது.
ஹாலிவூட்டின் பிரபல இயக்குனர்களில் ஒருவரான ரோலன் எம்ரிச் அவர்களால் இயக்கப்பட்ட இந்த திரைப்படம் 2009 ஆம் ஆண்டு உலகம் பூராகவும் திரையிடப்பட்டது.மாயன் இனத்தவர்களால் பயன்படுத்தப்பட்ட நாட்காட்டியின் அடிப்படையில் 2012 12 21 ஆம் திகதி இந்த பிரபஞ்சம் அழிந்துவிடும் இதுதான் இந்த திரைப்படத்தின் சாராம்சம்.இந்த சாரம்சத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட அச்சம் மற்றும் பீதி கலந்த ஒரு திரைப்படமே இந்த "2012" திரைப்படம். விவிலியம் - புராணம் - மற்றும் வரலாற்று குறிப்புகள் 2012 திரைப்படத்துக்கு ஒரு ஆழமான அடிப்படை அர்த்தத்தைக் கொடுக்கிறது.மேலும் இந்த திரைப்படத்தில் இந்த பேரழிவு கையாளப்படும் முறை குறித்து நாம் கூர்ந்து கவனிக்கின்ற போது ஒரு வலுவான உண்மையான ஒரு தகவல் நமக்கு கிடைக்கிறது.அந்த தகவலின் அடிப்படை இதுவே
" இது போன்று ஒரு பேரழிவு வந்தால் பணக்கார மேட்டுக் குடிகள் மட்டுமே பிழைத்துக் கொள்வார்கள்.மற்ற பரதேசிகள் செத்து மடிவார்கள்."
இந்த திரைப்படத்தில் காட்சிகளாகக் காட்டப்பட்ட சில முக்கியமான மறைந்த சில விடயங்களைப் பற்றி இப்போது பார்ப்போம்.அதற்கு முன் இந்த பதிவு மூலம் சொல்ல வரும் விடயங்களை உள்ளடக்கிய "2012" திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி.(Trailer)
உலகத்தில் ஒரு சில விஞ்ஞானிகள் சூரிய ஒளிக்கற்றைகள் காரணமாக பூமியின் அடிப்படை வெப்பநிலை பாரிய அளவில் உயர்ந்திருப்பதாக கண்டுபிடிக்கின்றனர்.அட்ரியன் ஹேம்ஸ்வி என்ற அமெரிக்க புவியியல் வல்லுநர் உலக அழிவு மிக வேகமாக நெருங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்துகொள்கிறார்.இந்த உயர் அவதானம் மிக்க அவசர நிலைமையை அமெரிக்க தலைமைகளிடம் கூறி எல்லா நாடுகளையும் உள்ளடக்கிய ஒரு மீட்பு நடவடிக்கையை மேட்கொள்ளவேண்டும் என்ற எண்ணத்துடன் வாசிங்டன் வருகிறார் அமெரிக்க விஞ்ஞானி,ஆனால் அவருக்கோ அங்கு காத்திருந்தது ஒரு அதிர்ச்சிமிக்க செய்தி.நிகழப்போகும் இந்த பாரிய அனர்த்தத்தை ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன் அறிந்து கொண்ட உலகின் பணக்கார மேட்டுக்குடியினர் அதற்கான முன்னேற்பாடுகளில் ஏற்கனவே இறங்கிவிட்டனர் என்பதை அறிந்துகொள்கிறார்.மேலும் விலைமதிப்பற்ற ஏனைய மனித உயிர்களை ஒரு துளியேனும் மதிக்காமல் அந்த பேரழிவின் பின் மேட்டுக் குடியினரை மட்டும் உள்ளடக்கிய புதிய உலகத்துக்கு இவ்வுலகின் மிக முக்கியமான கலைப் படைப்புக்களை சேகரிக்கின்றனர் மேட்டுக் குடியினர்.
2012 இல் நிகழப்போகும் இந்த பேரழிவிலிருந்து தப்பித்துக்கொள்ளும் மீட்பு நடவடிக்கை அல்லது அந்த கப்பல் பற்றி அறிந்தவர்கள் உலகின் பணக்கார மேட்டுக் குடியினர் மட்டுமே.அந்த கப்பலுக்கான அனுமதிச்சீட்டுகளும் மிகவும் ரகசியமாக விற்பனை செய்யப்படுகிறது.ஒரு அனுமதிச்சீட்டின் விலை ஒரு பில்லியன் யூரோ.வேறு வார்த்தையில் கூறுவதாயின் சாதாரண எந்த குடிமகனும் நிகழப்போகும் பேரழிவிலிருந்து தப்பமுடியாது.இது தான் சாராம்சம்.
இதற்கிடையில் வழக்கம் போல பொது மக்கள் ஒரு முட்டாள் கூட்டமாகவும் பீதி வன்முறை என்பவற்றுக்கு இலக்காகும் ஒரு கூட்டமாகவும் சித்தரிக்கப்படுகிறது.
மேற்தட்டு மக்கள் பிரிவினரால் சாதாரண பொதுமக்கள் மீது தீட்டப்பட்டுள்ள சதித்திட்டம் ஒன்றும் சிதம்பர ரகசியம் அல்ல.இவற்றை கண்டுபிடித்து பொதுமக்களை எச்சரித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கும் பல முக்கிய பிரமுகர்கள் மிக விரைவில் அமைதியாக்கப்படுகின்றனர்.கொல்லப்படுகின்றனர்.
பிரான்ஸ் மியுசியத்தின் தலைவர் கொலை அல்லது விபத்து தொடர்பாக வரும் காட்சியில் மிகவும் சுவாரஸ்யமான உண்மைகள் புதைந்துள்ளன.ஏனெனில் திரைப்படத்தில் அந்த காட்சியில் மியுசியத்தின் தலைவர் Pont d’Alma சுரங்கப்பாதையில் கொல்லப்படுகிறார்.இதே சுரங்கப்பாதையில் தான் பிரித்தானிய இளவரசி டயானாவும் கொல்லப்படுகிறார்.(டயானா கொலை பற்றி எனது தளத்தில் வெளியான ஆக்கம்.வாசிக்க இங்கே கிளிக்குங்கள்.)
இந்த நிகழ்வெல்லாம் நடந்து கொண்டிருக்கும் போது 2012 12 21 திகதி நடக்கவுள்ள பேரழிவிலிருந்து உலகின் மேல்தட்டு மக்களை மட்டும் காப்பாற்ற தாயாரிக்கும் கப்பல்களை தயாரிக்கும் வேளையில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது சீனா.
அட்லாண்டிசுக்கு பிரியாவிடை
இந்த காட்சியில் நகல் மோனாலிசா ஓவியம் ஒன்றை அந்த இடத்தில் வைத்துவிட்டு அசல் மோனாலிசா ஓவியத்தை தமது புதிய மேட்டுக்குடி - உலகத்துக்கு கொண்டுசெல்ல தயார்படுத்துகின்றனர். |
2012 இல் நிகழப்போகும் இந்த பேரழிவிலிருந்து தப்பித்துக்கொள்ளும் மீட்பு நடவடிக்கை அல்லது அந்த கப்பல் பற்றி அறிந்தவர்கள் உலகின் பணக்கார மேட்டுக் குடியினர் மட்டுமே.அந்த கப்பலுக்கான அனுமதிச்சீட்டுகளும் மிகவும் ரகசியமாக விற்பனை செய்யப்படுகிறது.ஒரு அனுமதிச்சீட்டின் விலை ஒரு பில்லியன் யூரோ.வேறு வார்த்தையில் கூறுவதாயின் சாதாரண எந்த குடிமகனும் நிகழப்போகும் பேரழிவிலிருந்து தப்பமுடியாது.இது தான் சாராம்சம்.
இதற்கிடையில் வழக்கம் போல பொது மக்கள் ஒரு முட்டாள் கூட்டமாகவும் பீதி வன்முறை என்பவற்றுக்கு இலக்காகும் ஒரு கூட்டமாகவும் சித்தரிக்கப்படுகிறது.
மேற்தட்டு மக்கள் பிரிவினரால் சாதாரண பொதுமக்கள் மீது தீட்டப்பட்டுள்ள சதித்திட்டம் ஒன்றும் சிதம்பர ரகசியம் அல்ல.இவற்றை கண்டுபிடித்து பொதுமக்களை எச்சரித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கும் பல முக்கிய பிரமுகர்கள் மிக விரைவில் அமைதியாக்கப்படுகின்றனர்.கொல்லப்படுகின்றனர்.
பிரான்ஸ் மியுசியத்தின் தலைவர் கொலை அல்லது விபத்து தொடர்பாக வரும் காட்சியில் மிகவும் சுவாரஸ்யமான உண்மைகள் புதைந்துள்ளன.ஏனெனில் திரைப்படத்தில் அந்த காட்சியில் மியுசியத்தின் தலைவர் Pont d’Alma சுரங்கப்பாதையில் கொல்லப்படுகிறார்.இதே சுரங்கப்பாதையில் தான் பிரித்தானிய இளவரசி டயானாவும் கொல்லப்படுகிறார்.(டயானா கொலை பற்றி எனது தளத்தில் வெளியான ஆக்கம்.வாசிக்க இங்கே கிளிக்குங்கள்.)
இந்த நிகழ்வெல்லாம் நடந்து கொண்டிருக்கும் போது 2012 12 21 திகதி நடக்கவுள்ள பேரழிவிலிருந்து உலகின் மேல்தட்டு மக்களை மட்டும் காப்பாற்ற தாயாரிக்கும் கப்பல்களை தயாரிக்கும் வேளையில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது சீனா.
அட்லாண்டிசுக்கு பிரியாவிடை
Farewell Atlantis
திரைப்படத்தின் ஹீரோ ஜெக்சன் எல்லா ஹாலிவூட் திரைப்படங்களைப் போலவும் ஒரு விவாகரத்துப் பெற்ற ஒரு தந்தை.
திரைப்படத்தைப் பொறுத்தவரை ஹீரோ ஒரு சுமாரான எழுத்தாளர்.அவர் எழுதிய புத்தகத்தின் பெயர்தான் Farewel Atlantis.அட்லாண்டிஸ் என்பது பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பாரிய வெள்ளத்தில் மூழ்கிய ஒரு கண்டமாகும்.சிலர் இப்படியொரு கண்டம் இருக்கவில்லை என வாதாடுகிறார்கள்.ஆனால் சிலர் இப்படியொரு கண்டம் இருந்ததாகவும் அன்றைய காலகட்டத்தில் அந்த கண்டத்து மக்களே நாகரீகம் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் சிறந்து விளங்கினார்கள் என வாதாடுகிறார்கள்.இப்படி வாதடுபவர்களின் கருத்துப் படி இந்த பாரிய வெள்ளத்தில் தப்பிய சிலர் எகிப்து அமெரிக்கா மற்றும் ஆசிய பகுதிகளில் குடியேறியதாகவும் அவர்களே அந்த பகுதிகளின் நாகரீக வளர்ச்சிக்கு வித்திட்டதாகவும் கூறுகின்றனர்.
இன்று இரகசிய சமுதாயங்களின் நம்பிக்கைக்கு அமைய இன்றைய காலத்தின் "அட்லாண்டிஸ்" தான் ஐக்கிய அமெரிக்க குடியரசு.
சேர் பிரான்சிஸ் பேகன் அவர்களால் 1605 இல் எழுதப்பட்ட " New Atlantis " என்ற புத்தகம்.இந்த புத்தகம் அமெரிக்க எப்படி ஸ்தாப்பிக்கப்பட்டது என்பது பற்றி பேசுகிறது. |
சேர் பிரான்சிஸ் பேகன் அவர்களின் புத்தகம் " நியூ அட்லாண்டிஸ் - New Atlantis " அமெரிக்காவின் ஆரம்பத்தைப் பற்றி பேசுகிறது." 2012 " திரைப்படத்தின் ஹீரோ ஜாக்சன் கர்டிசின் புத்தகம் " பாயார்வெல் அட்லாண்டிஸ் - Farewell Atlantis " அமெரிக்காவின் அழிவைப்பற்றி எதிர்வு கூறுகிறது.ஆதி காலத்தில் நடந்ததாக கூறப்படும் நிகழ்வு போலவே திரைப்படத்தின் இறுதிப் பகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.அட்லாண்டிஸ் - அமெரிக்கா- மேட்டுக் குடியினரின் தாயகம் பாரிய வெள்ளத்தில் அழிக்கப்படுகிறது - வசதி படைத்த பணக்காரர்கள் மேட்டுக் குடியினர்கள் பாரிய கப்பல்களை உருவாக்கி அதன் மூலம் உயிர் பிழைக்கின்றனர்.அப்படி தப்பிய மேட்டுக் குடியினர்கள் ஒரு புதிய உலகத்துக்கு வித்திடுகின்றனர்.இப்படி போகிறது படத்தின் காட்சிகள்.
இந்த உலகை எல்லாத் துறைகளிலும் ஆளும் மேட்டுக் குடியினர்கள் அவர்களின் நம்பிக்கைகள் கொள்கைகள் மற்றும் புராணக் கதைகளை திரைப்படங்கள் மூலம் நமது மூளைக்கு ஊற்றுகின்றனர்.
இந்த உலகை எல்லாத் துறைகளிலும் ஆளும் மேட்டுக் குடியினர்கள் அவர்களின் நம்பிக்கைகள் கொள்கைகள் மற்றும் புராணக் கதைகளை திரைப்படங்கள் மூலம் நமது மூளைக்கு ஊற்றுகின்றனர்.
பேரழிவு - The Disaster
திரைப்படத்தின் இறுதிக் காட்சிகள் நெருங்கும் போது உலக அழிவு ஆரம்பவதைக் காட்டுவார்கள்.பூமி வெப்பமடைந்து நிலப் பிளவுகள் லாஸ் ஏஞ்சல்ஸில் தோன்றுவதைக் காட்டுவார்கள்.பாரிய அழிவொன்று வர இருப்பதை தெளிவாக அறிந்திருந்தும் மேட்டுக் குடியினரின் ஆதிக்கத்தில் இருக்கும் வெகுஜன ஊடகங்கள் மக்களிடமிருந்து அதை மறைத்து மக்களை உண்மையான தகவளை பெற்றுக்கொள்வதிளிருந்து தடுக்கிறது.
எல்லா உண்மைகளையும் அறிந்த இந்த கதாபாத்திரம் எல்லா ஹாலிவூட் திரைப்படங்களைப் போலவும் ஒரு பைத்தியக்காரனைப் போல சித்தரிக்கப்படுகிறது. |
உலகம் அழியப் போகிறது - கப்பலில் ஏற நேரம் வந்துவிட்டது |
உலகமே பாரிய அழிவில் அழிய இருக்கும் போது உலகளாவிய மேட்டுக் குடியின் அங்கத்தவர்களுக்கு அந்த அழிவின் ஆரம்பத்தையும் அதற்கு ஏற்கனவே திட்டமிட்ட விடயத்துக்கு தயார் ஆகும்படியும் மிகவும் ரகசியமான முறையில் குறுங் செய்திகள் அனுப்பப்படுகின்றன.
உலக அழிவு துவங்கும் போது திரைப்படத்தில் உலகின் மிக முக்கியமான நினைவுச் சின்னங்கள் அழிவதைக் காட்டுவார்கள்.இந்த காட்சிகளைப் பார்க்கும்போது அவை மிகவும் உயர் தொழில்நுட்பத்தில் கண்கவர் கிராபிக் நுட்பங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளன என்பது புரிகிறது.ஆனால் அந்த காட்சிகளில் மறைந்திருக்கும் கருத்து என்னவோ நமக்கு புரியவில்லை.அந்த காட்சிகளூடாக அவர்கள் - மேட்டுக் குடியினர் சொல்ல வரும் விடயம்தான் புதிய தசாப்தத்தின் ஆரம்பம் அதாவது அவர்களின் நம்பிக்கைப் படி கூறுவதாயின் Age Of Aquarius இன் ஆரம்பம்.திரைப்படத்தில் ஒரு காட்சியில் பிரேசிலில் உள்ள " Chirst The Redeemer " என்றழைக்கப்படும் உலகப் பிரசித்து பெற்ற சிலை பூகம்பத்தினால் அழிவது போன்று காட்டுகிறார்கள்.
திரைப்படத்தில் இன்னொரு காட்சியில் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புனித ஆலயமான St.Peters Basilica Church இடிந்து விழுவதையும் அதன்போது வணக்கத்தில் ஈடிபட்டுக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மாண்டு போவதையும் காட்டுவார்கள்.
தமது புதிய உலகத்தில் கிறிஸ்தவத்துக்கு இடமில்லை - கிறிஸ்தவத்தின் வீழ்ச்சி - இதில் எதைக் குறிக்கிறது இந்த காட்சி. |
திரைப்படத்தில் இன்னொரு காட்சியில் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புனித ஆலயமான St.Peters Basilica Church இடிந்து விழுவதையும் அதன்போது வணக்கத்தில் ஈடிபட்டுக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மாண்டு போவதையும் காட்டுவார்கள்.
வெள்ளை மாளிகை - அமெரிக்க சக்தியின் அடையாளம் - பாரிய வெள்ளத்தால் அழிக்கப்படும் காட்சி. |
நோவாவின் கப்பல் - Ark Of Noah
நோவாவின் கப்பல் |
உலக மக்கள் தொகையில் பாரிய தொகையினர் வெள்ளத்தால் கொள்ளப்பட இருக்கையில் " தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் " மட்டும் சீனாவிலுள்ள பிரம்பாண்டமான கப்பல்களில் ஏற தயாராக இருக்கின்றனர்.
பைபிள் மற்றும் திருக்குரானில் கூறப்பட்டுள்ள மஹா பிரளயம் சம்பவத்தை நினைவு படுத்தும் ஒரு காட்சி. |
பேரழிவுக்குப் பின் உலகம் புதிய ஒரு சகாப்தத்துக்குள் நுழைகிறது,புதிய ஒரு நாட்காட்டி துவங்குகிறது.ஏற்கனவே பாவித்து வந்த ஜீசசின் பிறப்பை அடிப்படையாகக் கொண்ட நாட்காட்டி முடிவடைகிறது. |
திரைப்படத்தின் இறுதியில் முழு உலகமே நீரில் மூழ்கியிருக்க ஆப்ரிக்காவின் ஒரு பகுதி மட்டும் மூழ்காமல் இருக்கிறது.அதற்கு இவர்கள் வைக்கும் பெயர் "Cape Hope".
முடிவுரை
இந்த திரைப்படம் பற்றியும் அது சொல்லவரும் தகவல் பற்றியும் எனது நிலைப்பாடு அது வெறும் கற்பனையே என்பதைத் தவிர வேறெதுவுமல்ல.ஹாலிவூட் திரைப்படங்கள் மூலம் அந்த துறையில் இருப்பவர்களிடம் காணப்படும் நம்பிக்கைகள் கொள்கைகள் எதிர்பார்ப்புக்கள் என்பவற்றை எங்களைப் போல சாதாரண மக்களிடம் கொண்டுவர அல்லது நமக்கு இந்த விடயங்களில் நம்பிக்கையை ஏற்படுத்த அவர்கள் பாவிக்கும் கருவிகளே இப்படிப்பட்ட திரைப்படங்கள்.பல்லாயிரக்கணக்கான திரைப்படங்களில் இது வெறும் ஒரு உதாரணம் மட்டுமே .இந்த திரைப்படத்தின் இயக்குனரைப் பொறுத்தவரை அவர் இயக்கிய தயாரித்த பல திரைப்படங்கள் பேரழிவுகளையும் வெறும் கற்பனை வரலாருகளையுமே தாங்கி வந்துள்ளன.
- GODZILLA
- HELL
- DAY AFTER TOMORROW
- 2012
- 10000 BC
- INDEPENDENCE DAY
- STARGATE
- MOON 44
- MAKING CONTACT
கக்கப்போராரோ ?
எனவே இப்படிப்பட்ட திரைப்படங்களை ரசிப்பவர்கள் இவற்றை இயக்கியவர்களின் உண்மையான நோக்கத்தை அறிந்திருப்பது மிகவும் நல்லது.
தவறுகள் பிழைகள் இருக்குமாயின் அதை குறிப்பிடவும் இன்ஷா அல்லாஹ் திருத்திக் கொள்கிறேன்.
JUST CHECK THESE VIDEOS
அமெரிக்காவின் டென்வர் விமான நிலையத்தின் மறைந்த இரகசியங்கள்.
No comments:
Post a Comment