Sunday, July 8, 2012

வாஸ்கொடகாமாவின் ஹஜ் பிரயாணிகள் மீதான தாக்குதல்.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.

வாஸ்கொடகாமாவின்
  ஹஜ் பிரயாணிகள் மீதான தாக்குதல்

வஸ்கொடகாமா

 வாஸ்கோ ட காமா (பிறப்பு: 1460 அல்லது 1469 – இறப்பு: 24 திசம்பர் 1524) ஒரு போர்ச்சுகீசிய நாடுகாண்பயணி ஆவார். மேலும் இவர்தான் முதன்முதலாக ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிற்குக் கடல் வழியைக் கண்டுபிடித்தார். குறைந்த காலத்திலேயே இவர் வைசிராய் என்ற பெயரில் 1524ஆம் ஆண்டு போர்ச்சுகீசிய இந்தியாவின் ஆளுனர் ஆனார்.

வஸ்கொடகாமா 1498 மே 20 ஆம் திகதி இந்தியாவின் கோழிக்கோடு அருகே கரையோதிங்கினார்.அப்போது கோழிக்கோடு சாமூத்திரிகளால் ஆளப்பட்டு வந்தது.வஸ்கொடகாமாவுக்கு கோழிக்கோடில் சம்பிரதாயபூர்வமாக வழங்கப்படும் எல்லாவிதமான வரவேற்புக்களும் வழங்கப்பட்டன.என்றாலும் அவருக்கும் சாமூத்ரிகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை அவ்வளவு உறுதியாக இருக்கவில்லை.1498 ஆகஸ்ட் 29 ஆம் திகதி கோழிக்கோடை விட்டு சொந்த நாடு போகும் நோக்கில் அங்கிருந்து வெளியேறினார்.

 ஹஜ் பிரயாணிகள் மீதான தாக்குதல்


 வஸ்கொடகாமா என்ற பெயர் வரலாற்றுப் புத்தகங்களில் ஒரு திறமையான கப்பலோட்டியாக சாமர்த்தியம்மிக்க தலைவராக ஒரு ராஜதந்திரியாக அறியப்பட்டுள்ளார்.ஆனால் உண்மையில் அவர் அப்படிப்பட்டவரா ? அவர் சம்பந்தப்பட்ட வன்முறை மிலேச்சத்தனம் கொண்ட நிகழ்வுகள் வரலாற்றில் இடம்பெற்றே இல்லையா ? நீங்கள் வரலாற்றுப் புத்தகங்களை கொஞ்சம் அலசினால் போதும் மேலே கூறிய வன்முறை மிலேச்சத்தனம் என்ற பண்புகளை அவர் பல இடங்களில் அரங்கேற்றியுள்ளார்.அப்படி அவர் அரங்கேற்றிய ஒரு நிகழ்வு பற்றியே இப்போது பார்க்க உள்ளோம்.

பத்கள்(BATHKAL) மற்றும் ஹோன்னாவூர் (HONNAVAR) போன்ற இடங்களில் தமது ஆதிக்கத்தைப் பரப்பிய போர்த்துக்கேயர்கள் அந்த இரு நகரங்களையும் அவர்களுக்கு கப்பம் கட்டும் இரு அடிமைகளாக ஆக்கிக்கொண்டனர்.பத்கள்(BATHKAL) நகரிலிருந்து வெளியேற வஸ்கொடகாமா அவ்வூர் நிர்வாகத்துக்கு விதித்த நிபந்தனைகள் இரண்டு முதலாவது வருடத்துக்கு 1000 மூட்டை சாதாரண அரிசியும் 500 மூட்டை பாஸ்மதி அரிசியும் வழங்கப்படவேண்டும்.இரண்டாவது அரபு நாட்டு முஸ்லிம் வியாபாரிகள் அனைவரும் வெளியேற்றப்படவேண்டும் என்பவையாகும்.

1502 ஆகஸ்ட் இறுதிப் பகுதியில் பத்கள்(BATHKAL) நகரில் மிகவும் இலாபகரமான வியாபாரத்தை (கொள்ளையை) முடித்துக்கொண்டு எலிமலை என்ற மலையை அண்டிய பகுதியில் நங்கூரமிட்டிருந்தது வாஸ்கோடகாமாவின் கப்பல்.இந்த பகுதி ஜித்தாவுக்கும் கோழிக்கோடுக்கும் இடையே கப்பல் போக்குவரத்து செய்யும் பகுதியில் அமைத்திருந்தது.1502 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 ஆம் திகதி கில் மடாசோ என்று அழைக்கப்படும்  கப்பலின் கப்டன் மக்காவிலிருந்து ஹஜ் பிரயாணிகளை அழைத்துக் கொண்டு வரும் ஒரு பாரிய கப்பல் ஒன்றை அவதானித்தான்.

"மிரி" என்றழைக்கப்படும் இந்தக் கப்பல் கோழிக்கோட்டின் பெரிய செல்வந்தர் ஒருவருக்கு சொந்தமானது.ஹஜ் பிரயாணிகளை உள்ளடக்கிய அந்தக் கப்பலை மடக்கிப் பிடிக்க கில் மடாசோ வேகமாக தனது கப்பலை செலுத்தினான் என்றாலும் அவன் நினைத்ததை விட மிக விரைவில் பிரயாணிகள் கப்பல் அவர்கள் வசம் வந்தது.கப்பல் தலைவன் வஸ்கொவின் கொலைகார கொள்ளைக்கார கும்பலுக்கு அவர்களுக்கு வேண்டிய அளவில் பணமும் பொன்னும் தருவதாக பேரம் பேசினார்.என்றாலும் வாஸ்கோ அதற்கு உடன்படவில்லை.கப்பலில் இருந்த அனைத்து சரக்குகளும் வாஸ்கொவின் கப்பலுக்கு மாற்றப்பட்டது.பெண்கள் அணிந்திருந்த தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.வாஸ்கொவின் கும்பலின் இந்த செயல் பிரயாணிகள் கப்பலில் இருந்தவர்களை பதற்றத்துக்குள்ளாக்கியது.கப்பலுக்குள் இருந்த ஆயுதமேந்திய போர்த்துக்கேய கொள்ளைக்காரர்களுடன் வெறும் கைகளால் போராடினார்கள்.என்றாலும் அவர்களின் அந்த செயல் ஒருவிதத்திலும் அவர்களுக்கு பயனளிக்கவில்லை.
 
1502 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 03 திகதி நடந்த இந்த கோர நிகழ்வின் நேரடி சாட்சிகளில் மிகப் பிரபல்யமானவர் தோமே லோபஸ் என்பவர்.இவர் கப்பல் கப்டனின் உதவியாளாராக காமாவுடன் பயணமானவர்.மேலும் இந்தியாவுக்கான காமாவின் இரண்டாவது பயணம் சம்பந்தமான விடயங்களை நேரடியாக பார்த்தவர்.இவர் வஸ்கொவின்  இந்த இரக்கமற்ற நிகழ்வு பற்றி கூறும் போது "என் வாழ்நாள் பூராகவும் மறக்க முடியாத நிகழ்வுதான் அது" என்கிறார் அவர் எழுதிய புத்தகத்தில்.வஸ்கொடகாமாவின் கட்டளையின் பேரில் யாத்ரீகக் கப்பல் முழுமையாக கொள்ளையடிக்கப்பட்டது.கப்பலில் இருந்த யாத்ரீகர்கள் கப்பலின் அடித்தளத்தில் நுளைவிக்கப்பட்டனர்.பின்பு யாத்ரீகக் கப்பல் மீது தீவைக்கப்பட்டது.பின்பு பிரங்கிகள் மூலம் தாக்கப்பட்டு கப்பல் மூழ்கடிக்கப்பட்டது.கப்பல் மூழ்க சில நாட்கள் எடுத்தது.கப்பல் மூழ்கும் வரை கொலைகார போர்துக்கேசிய கும்பல் ஈட்டிகளை தாங்கிய வண்ணம் ரோந்து பார்த்தனர்.அவர்களின் குறிக்கோள் யாரும் தப்பிவிடக்கூடாது என்பதாகும்.

வஸ்கொடகாமாவினால் "மிரி" என்றழைக்கப்படும் யாத்ரீகக் கப்பல் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்ட  சம்பவம் இந்தியாவில் போர்துக்கேயர்களுக்கேதிரான ஒரு நிலைப்பாட்டை அதிகப்படுத்தியது.என்றாலும் வஸ்கொடகாமா தனது இந்த செயலை பழிக்குப்பழி தீர்க்கும் ஒரு செயலே என நியாயப்படுத்தினான்.1500 டிசெம்பர் 17 ஆம் திகதி கோழிக்கோடில் நடந்த கலவரத்தில் 50 அல்லது 70 போர்த்துக்கேயர்கள் கொல்லப்பட்டனர்.இதற்கு பழிவாங்கும் செயலே என தனது செயலை நியாயப்படுத்தினான் வஸ்கொடகாமா.

வஸ்கொடகாமாவினால் மேட்கோள்ளப்பட்ட இந்த படுகொலையில் கிட்டத்தட்ட 300 பேர் கொல்லப்பட்டனர்.இதன்போது உயிர் பிச்சை வழங்கப்பட்ட 20 முஸ்லிம் சிறார்கள் ஜெரோநிமஸ் மாடலயத்தில் கிருஸ்தவ துறவிகளாக மதம் மாற்றப்பட்டனர்.போர்த்துகேய படைவீரர் ஒருவர் இஸ்லாத்தை தளுவியதட்கு பழிக்குப் பலி வாங்கவே அவர் இந்த மத மாற்றத்தையும் செய்து வைத்தார்.



இணையத்தில் எனக்கு கிடைத்த சில ஆக்கங்களைக் கொண்டு இந்த சிறு ஆக்கத்தை எழுதினேன்.மேலதிக தகவல்கள் தெரிந்தவர்கள் அல்லது நான் மேலே எழுதிய தகவல்களில் ஏதாவது தவறு இருப்பின் தெரிவிக்கவும்.இன்ஷா அல்லாஹ் திருத்திக் கொள்கிறேன்.
எல்லாம் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே.













 

No comments:

Post a Comment