Friday, December 23, 2011

இஸ்லாம் - வாளால் வளர்ந்த மதம் ???





இஸ்லாம் - மார்க்கத்தில் நிர்பந்தமே இல்லை. (2:256) விரும்பினோர் ஏற்கட்டும். விரும்பாதோர் நிராகரிக்கட்டும் (18:29) என்று இறைவன் கூறுகின்றான்.

இஸ்லாத்தை மாற்றார்களிடம் எடுத்துச் சொல்வதில் கூட முஸ்லிம்கள் பலம் பிரயோகிக்கக் கூடாதென எச்சரிக்கப்பட்டுள்ளார்கள். அத்துடன் எவ்வளவு அiதியான வழிகளைப் பயன்படுத்திட முடியுமோ அவ்வளவு அiதியான வழிகளை மேற்கெர்ளள வேண்டும் என்றும் குர்ஆன் கூறுகிறது.

நீர் நளினமாகவும், அழகான நல்லுபதேசத்தைக் கொண்டுமே உம் இறைவனின் வழியின்பால் அழைப்பீராக! அன்றி, அவர்களுடன் (தர்க்கிக்க நேரிட்டல்) நீர் (கண்ணியமான) அழகான முறையில் தர்க்கம் செய்வீராக! அவனுடைய வழியிலிருந்து தவறியவர்கள் எவர்கள் என்பதை நிச்சயமாக உம் இறைவன் நன்கறிவான். நேரான வழியிலிப்போர் யார் என்பதையும் அவன் தான் நன்கறிவான். (16:125)

(விசுவாசிகளே!) நீங்கள் வேதமுடையோர்களுடன் (தர்க்கிக்க நேரிட்டால்) அழகான முறையிலன்றி (அவர்களுடன்) தர்க்கிக்க வேண்டாம். ஆயினும் அவர்களில் எவரேனும் வரம்பு மீறிவிட்டால் (அதற்கு தக்கவாறு நீங்கள் பதில் கூறுவது உங்கள் மீது குற்றமாகாது.

அவர்களுடன் தர்க்கித்தால்) எங்களுக்கு இறக்கப்பட்ட (வேதத்) தையும் உங்களுக்கு இறக்கப்பட்ட (வேதத்) தையும் நாங்கள் விசுவாசிக்கின்றோம். எங்கள் ஆண்டவனும் உங்கள் ஆண்டவனும் ஒருவனே! நாங்கள் அவனுக்குத்தான் முற்றிலும் வழிபட்டு நடக்கின்றோம் என்று கூறுவீர்களாக (29:46) என்று குர்ஆன் உபதேசிக்கின்றது.

இஸ்லாத்தை பரப்புவதில் அமைதிக்கு இவ்வளவு முக்கியத்துவமும், முதன்மையும் தருகின்ற போது அமைதியை இவ்வளவு தூரம் வலியுறுத்திடும் போது முஹம்மது (ஸல்) அவர்கள் ஏன். சில போர்களிலே ஈடுபட்டார்கள் என கேட்கலாம்.

இறைவனின் தூதை இந்த உலகிற்கு எடுத்துச் சொல்லிட வேண்டும் என்னும் பொறுப்பை நபி(ஸல்) அவர்கள் ஏற்றுக் கொண்டதும், மக்கள் கூட்டத்தை அழைத்து தன்னிடம் சொல்லப்பட்ட தூதை எடுத்துச் சொன்னார்கள்.

நபி(ஸல்) அவர்கள் எடுத்து வைத்த உண்மையை, அமைதியான அறிவுப்பூர்வமான வாதத்தை ஏற்று மக்கள் சிறுகசிறுக இஸ்லாத்தின் பால் இணைந்தனர். மதத்தின் பெயரால் மக்களை ஏய்த்து பிழைப்பு, நடத்தியவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் போதித்த இஸ்லாம் எதிராகப்பட்டது. அதனால் எதிர்க்க முற்பட்டனர். எதிர்ப்பின் உச்சத்தில் முஹம்மது (ஸல்) அவர்களை கொலை செய்வது என முடிவ செய்தனர். இதனையறிந்த நப(ஸல்) அவர்கள் தங்கள் தாயகம் துறந்து யாத்ரிப் (மதீனா) சென்று குடியேறினார்கள். அங்குள்ளோர் அநேகர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டபடியால் அங்கே ஒரு இஸ்லாமிய அரசாங்கம் அமைக்கப்பட்ட ஆட்சி செய்து வந்தார்கள்.

மதீனாவில் அமைதி நிலவினாலும், மக்காவின் எதிரிகள் ஒயவில்லை. முஸ்லிம்கள் மீது அவர்கள் கொண்டிருந்த வெறுப்பு வளர்ந்தது. இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் ஒழித்திட அவர்கள் திட்டங்களை தீட்டிய வண்ணமிருந்தனர். முஸ்லிம்களுக்கு முடிந்தவரை தொல்லை தருவதில் முனைப்புக் காட்டினார்கள். இறுதியில் முஸ்லிம்களை அழித்தொழிக்க படைதிரட்டி போர் தொடுக்க வந்தனர். ஒட்டுமொத்தமாக அழிந்துப் போவதை தவிர வேறு வழியில்லை என்ற நிலை வந்தபோது முஸ்லிம்கள் தங்களை தற்காத்துக் கொள்ள அவர்களை எதிர்த்து போர்புரிய வேண்டி வந்தது. உதாரணத்திற்கு நபி(ஸல்) அவர்களும், முஸ்லிம்களும் சந்தித்த முதல் போரை எடுத்துக் கொள்ளுங்கள். முதல் போர் நடந்த பத்ரு என்னும் இடமானது முஸ்லிம்கள் வாழும் மதீனாவிலிருந்து 80 மைல் தொலைவிலும். எதிரிகள் வாழ்ந்த மக்காவிலிருந்து 200 மைல் தொலைவிலும் உள்ளது. இரண்டாவது போரான உஹது போர் நடந்த உஹது என்னும் இடமானது மதீனாவிலிருந்து 5 மைல் தொலைவிலும், மக்காவிலிருந்து 300 மைல் தொலைவிலும் உள்ளது. இதிலிருந்து முதலில் வலிய போருக்கு வந்தத யாரென விளங்கியிருக்கும். முஸ்லிம்களை கொன்றொழிக்க எதிரிகள் நூற்றுக்கணக்கான மைல்களுக்கப்பாலிலிருந்து பெரும்படையுடன் வரும் போது அவர்களை எதிர்கொள்ள மதீனாவை விட்டு வெளிவந்து எதிர்கொண்டார்கள். இதுபோலவே பல போர்களும் தற்காப்புக்காக நடத்தப்பட்ட போர்களேயாகும்.

எனினும் ஒரு சில போர்கள் வலிய செய்தவைகளும் உண்டு. ஏனென்றால் இஸ்லாம் முஸ்லிம்களை நன்மையை ஏவவும், தீமையை தடுக்கவும், அமைதியை நிலைநாட்டவும், அமுக்ககப்பட்டோருக்கு உதவி செய்திடவம், அடிமைப்பட்டு கிடப்பவர்களை விடுவிக்கவும் பணித்துள்ளது. அவ்வித்தில் ஒரு நாட்டு மக்கள் அல்லது ஒரு சமூகத்தவர்களுக்கு அந்த அரசு அநீதி இழைக்குமானால் அவர்களை காப்பதற்காக அந்நாட்டின் மீது போர் தொடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

'பலஹீனமாக ஆண்களையும், பெண்களையும், சிறு குழந்தைகளையும் பாதுகாப்பதற்காக, அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் போர் செய்யாதிருக்க காரணம் யாது? (அவர்களோ) 'எங்கள் இறைவனே அக்கிரமக்காரர்கள் இருக்கும் இவ்வூரைவிட்டு எங்களை வெளிப்படுத்துவாயாக. எங்களுக்காக உன்னிடமிருந்து (தக்க) ஒரு பாதுகாவலனை அளித்தருள்வாயாக. இன்னும் எங்களுக்காக உன்னிடமிருந்து ஒர் உதவியாளனையும் அளித்தருள்வாயாக என்று பிரார்த்தனை செய்கிறார்கள் (4:75)

என்று இறைவன் கூறியதால் அமைதியையும். சமூக நீதியையும் நோக்கமாகக் கொண்டு அத்தகைய போர்களைச் செய்தார்கள். முஹம்மது (ஸல்) அவர்கள் செய்த போர்கள் எதுவும் அரசியல், பொருளாதார ஆதாயத்திற்காகவோ, தேசிய, இன மொழி உணர்வுகளை காட்டக் கூடியதாகவே இருக்கவில்லை.

ஆனால் இஸ்லாம் தந்த உற்சாகத்ததால் முஸ்லிம்கள் தங்களால் முடிந்த வரை வாளால் மதம் பரப்பினார்கள். முஸ்லிம் மதவெறிக் கூட்டம் உருவிய வாளை ஏந்திய வண்ணம் அல்லாஹ் அக்பர் என்று முழுங்கியவண்ணம் கண்ணில் கண்டவர்களையெல்லாம் லாஇலாஹ இல்லல்லாஹு சொல் இல்லையென்றால் உன் தலை கொய்யப்படும் என்று கர்ஜிப்பது போல் ஒரு கோர சித்திரம் கூட ஒரு சில வரலாற்றாசிரியர்களால் தீட்டிவைக்கப்பட்டது.

உண்மையுள்ளவர்கள் இதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இஸ்லாம் அது வாளால் பரப்பிடக்கூடிய மதமுல்ல. அதன் இயற்கை, வன்முறைகளை ஆதரிக்கின்ற, அனுமதிக்கின்ற விதத்திலேயும் இல்லை. நம்பிக்கையை வாள் முனையில் திணிக்க முடியுமா? முஸ்லிம்கள் தாங்கள் வாகை சூடிய மக்கள் மீது இஸ்லாத்தை பலவந்தமாக திணித்திருப்பார்களேயானால் அது இவ்வளவு காலம் நிலைத்திருக்குமா? வாளுக்கு பயந்து இஸ்லாத்தை ஏற்றிருந்தால் சில காலத்திற்குள் அதை காற்றில் பறக்க விட்டிருப்பார்கள்! ஆனால் இஸ்லாம் பரவிய இடங்களிலெல்லாம் நிலைத்தே இருக்கின்றது என வரலாறு சாட்சி பகருகிறது.

முஸ்லிம்கள் வாளால் மதம் பரப்பினார்கள் என்றால் தங்கள் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் இறைநிராகரிப்பவர்களை வாழ விட்டிருப்பார்களா? ஆனால் முஸ்லிம்கள் ஆட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் முஸ்லிமல்லாதவர்கள் தங்கள் மத உரிமைகளைப் பேணி வாழ்ந்திருக்கின்றார்களே.

உலக வரலாற்றிலே இஸ்லாத்தை எதிர்த்தவர்களில் முக்கிய இடம் வகித்தவர்கள் தாத்தாரிகயார்கள் ஆவார்கள். அவர்களோ இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு பின் இஸ்லாத்தின் காவலர்களாக மாறியதை சரித்திரம் அறியும்.

முஸ்லிம்களை படையெடுத்துச் செல்லாத இந்தோனிஷியா, மலேசியா போன்ற நாடுகளிலுள்ள மிகப்பெரும்பான்மை மக்கள் முஸ்லிம்கள் ஆவார்கள். வல்லரசான அமெரிக்காவில் தற்போது அதிவேகமாக இஸ்லாம் பரவிவருகிறதே. இது எதனால் ஏற்பட்ட வளர்ச்சி?

நீண்ட நெடுங்காலம் முஸ்லிம்கள் அரபு நாட்டை ஆண்டு வருகின்றார்கள். அரபு நாட்டிலுள்ள யூதர்களும், கிறிஸ்தவர்களும் வாளுக்கு பயந்த இஸ்லாத்தை ஏற்றார்கள் என்றால் - பிரிட்டீஷ், பிரஞ்ச் ஆதிக்கத்தின் போது முந்தைய மதங்களுக்கு திரும்பியிருக்க வேண்டுமே. அப்படி ஒருவராவது திரும்பியிருக்கின்றார்களா?

800 ஆண்டுகள் ஸ்பெயினை ஆண்ட முஸ்லிம்கள் அங்குள்ள மக்களை மதம் மாற நிர்பந்தித்ததே இல்லை. ஆனால் பின் வந்த சிலுவைப் போராழிகள் முஸ்லிம்களை ஸ்பெயினை விட்டே துரத்தி துடைத்தார்கள். பாங்கு கூற ஒரு முஸ்லிம் கூட இல்லாத நிலைமைய ஏற்படுத்தினார்கள்.

இந்தியாவிற்குள் முஸ்லிம்கள் படையெடுத்து வருவதற்குள கேரளக் கடற்கரை வழியாக இஸ்லாம் இந்தியாவிற்குள் நுழைந்துவிட்டதே. முகலாயர்கள் இந்தியாவின் மீது படையெடுத்தார்கள் என்றால் இஸ்லாத்தை பரப்பிடுவதற்காக அல்ல. அந்த போர்களுக்கும், இஸ்லாத்திற்கும் எந்த தொடர்பும் இருந்ததில்லை. நாடு பிடிப்பது என்பது அந்த காலத்தது அரசு நெறியாக இருந்தது. ஒவ்வொரு வருடமும் விஜயதசமி அன்று ஒவ்வொரு இந்து மன்னனும் மற்ற இந்து அரசிடம் சென்று 'யுதம் தேஹி' என்று கூறுவான். அதன் பொருள் போருக்கு வா! அல்லது உன் அரசை என்னிடம் ஒப்படைத்துவிடு என்பதாகம். இந்து மன்னர்களான ராஜராஜனும், ராஜேந்திரனும் ஜாவா. சமத்திரா மற்றும் கீழ்த்திசை நாடுகளின் மீது படையெடுத்தார்கள். இன்றைக்கும் அங்கெ இந்துமதத்தின் சுவடுகள் இருக்கின்றன. அப்படியானால் இந்து மதத்தைப் பரப்பிடத்தான் அவர்கள் வாளெடுத்தார்கள் என்று தானே கொள்ளவேண்டும்.

'அபொல்லோனியஸ் தியான நகரிலிருந்து பேரொளி வீசிய சூரியன் ஆவார். மானிடரின் துன்பம் துடைப்பதற்காகவே விண்ணுலகத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட கருணாமூர்த்தி ஆவார் என்று கிரேக்கர்களால் வர்ணிக்கப்பட்டவர். இவர் இயேசுகிறிஸ்து போன்று பல அற்புதங்களை செய்துள்ளார் என்று அபொல்லோனியஸ் பக்தர்கள் புகர்ந்துரைத்தபோது சகிக்காத கிறிஸ்தவ சமயவாதிகளின் ஆத்திரமெல்லாம் அபொல்லோனியஸ்ஸின் நினைவச் சின்னங்களின் மீது திரும்பியது. கி.பி. 331-ல் மகா கான்ஸ்டன்டைன் ஒரு பெரும்படையை ஏய்கா நகருக்கு அனுப்பி அங்க அபொல்லோனியஸ் முதன்முதலில் மருத்துவ நகருக்கு அனுப்பி அங்கு அபொல்லோனியஸ் முதன் முதலில் மருத்துவ சேவை புரிந்து புகழ்பெற்ற அங்கிளிபியஸ் ஆலயத்தை இடித்துத் தரைமட்டமாகச் செய்தான். எபிஸஸ் நகரில் இருந்த அபொல்லோனியஸ் சிலையை உடைத்து தூளாக்கினான். அவர் எழுதிவைத்த யோக தத்துவம் பயிற்சி பற்றிய நான்கு நூற்தொகுப்புகள் இருக்கும் நூல்களையெல்லாம் தேடிப்பிடித்து அப்பிரதிகளையும், மற்றும் அவர் எழுதிய கட்டுரைப் பிரதிகளையையும் ஒட்டுமொத்தமாகத் தீயிட்டு எரித்துவிட உத்தரவிட்டான். அபொல்லோனியஸ் பற்றி பிறர் எழுதிய நூல்களும் கூட அழிக்கப்பட்டன.

'மிலான் அரசாணை' (EDICT OF MILAN) – அதாவது கிறிஸ்துவ மதம் சட்டப்படியாக ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு மதமாகும் என்று கூறி பல போர்களை நடத்தி பிறமதக் கலாச்சாரங்களை முற்றாக அழித்து கிறிஸ்தவ மதத்தை பரப்பியவர் மகா கானஸ்டன்டைன்.

கிறிஸ்துவ மதத்தை அங்கீகரித்துக் கொண்ட ஐரோப்பியர்கள் அனைத்துவித ஆயுதங்களையும் ஏந்தி வெறி கொண்ட கொள்ளையர்களைப் போல் உலகம் எங்கானும் எல்லா திசைகளிலும் பாய்ந்து சென்றார்கள். சென்ற இடங்களிலெல்லாம் வணிக மண்டிகளை, மூலப் பொருட்களின் குவியல்களi, பதியப் புதிய குடியேற்றங்களை (காலணிகளை) நிர்மாணித்தார்கள். பெரும் பெரும் சாம்ராஜ்ஜியங்களை நிறுவினார்கள். அங்கெல்லாம் கிறிஸ்தவர்கள் பெருகினார்கள். அப்படியானால் கிறிஸ்தவமும் வாளால் பரப்பப்பட்டது தானே.

இஸ்லாத்தைப் பரப்பத்தான் முஸ்லிம்கள் படையெடுத்தார்கள் என்றால் டில்லியை ஆண்ட சுல்தானை எதிர்த்து முகலாய மன்னர் பாபர் வரவேண்டியது ஏன்? பலர் அறியாத உண்மை எதுவென்றால் கஜினி முஹம்மதுவின் முக்கியப் படைத்தளபதியாக இருந்தது 'திலக்' எனப்படும் இந்துதான். அப்போதிருந்த தர்கிஸ்தான் புரட்சியாளர்களை கொடூரமான முறையில் அடக்கியதும், இந்தியப் படையெடுப்பில் மிகமுக்கியப்பங்கு வகித்தவனும் திலக் தான்.

கஜனி, கோரி வம்சத்தினர்களும், முகலாயர்களும் இந்தியாவின் மீது போர் தொடுத்தது நாடுபிடிக்கும் ஆசையில் ஏற்பட்ட போர்களே தவிர இஸ்லாத்தைப் பரப்பிட புரிந்த போர்கள் அல்ல. எனினும் ;ஒரு உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும். 200 ஆண்டுகால ஆங்கிலேய ஆட்சியை ஏற்றுக் கொள்ளாமல் எதிர்த்துப் போராடிய நம் முன்னொர்கள் 800 ஆண்டு கால முகலாயர்கள் ஆட்சியை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அவர்கள் ஆட்சி ஒரளவு நியாயமாக இருந்ததால் தானேயாகும்.







3 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்


    வரலாற்றில் திரிபுப்படுத்தப்பட்ட வார்த்தை தான் இஸ்லாம் வாளால் பரப்பட்ட மார்க்கம் என்பது.

    சிலுவைப்போர் என முழக்கமிட்டு ஆயிரமாயிரம் இஸ்லாமியர்கள் கொன்றொழிக்கப்பட்ட சம்பவங்கள் திட்டமிட்டு மேற்கத்திய ஊடகங்களால் மறைக்கப்பட்டது எதார்த்தமான உண்மை.

    வெளிகொணாரும் வகையில் மிக தெளிவான இடுகை.,

    தொடரட்டும் உங்கள் பணி

    ReplyDelete
  2. முகம்மது அவர்கள் காலத்தில் நடத்திய போா்கள் அரேபிய சமூக சமய சீா்திருத்தத்தை அடிப்படையான காரணத்தைக்கொணடதே. தான் போதித்த கருத்துக்களுக்கு வெளியே நன்மை இருக்க முடியாது. அரேபிய கலாச்சாலத்தை பின்பற்றாமல் கடவுளின் அருளைப்பெற முடியாது சொர்க்கத்தை அடைய முடியாது என்று ஏகபோகம் பேசும் முகம்மதுவை எப்படி சமாதான மதவாதியாகக் கொள்ள முடியும்.முகம்மது தனது காலத்தில் நடத்திய போர்கள் 46 ம் சமய சமூக திட்டங்களின் அடிப்படைதான். வாள் மூலம் சமய சமூக சீா்திருத்தம் செய்வதையே முகம்மது விரும்பினாா். செய்தாா் என்பது அரேபிய வரலாறு.தாங்கள் அ9த மறைக்க நினைப்பது வேடிக்கை

    ReplyDelete
  3. சிலுவைப்போர் என முழக்கமிட்டு ஆயிரமாயிரம் இஸ்லாமியர்கள் கொன்றொழிக்கப்பட்ட சம்பவங்கள் திட்டமிட்டு மேற்கத்திய ஊடகங்களால் மறைக்கப்பட்டது எதார்த்தமான உண்மை.
    நிச்சயம் உண்மை.ஆனால் ஆண்டவன் பேரில் முகம்மது செய்த 46 போர்களும் சமாதாத் தூதா ? அன்பின் ஊற்றா ? உடைத்த சிலைகள் எத்தனை தலைகள் எத்தனை நாசமாகப் போன சொத்துக்கள் எத்தனை ? முகம்மது தலைமையில் நடந்த போர்களில் வெட்டி வீசப்பட்ட பேரீத்தம் பழ மரங்கள் எத்தனை ? முகம்மதுவின் பேரால் குரான் படித்தவர்கள் நடத்திய நடத்திக் கொண்டிருக்கின்ற படுகொலைகள் எத்தனை எத்தனை ? ஐயோ இறைவா! என் படைத்தாள் முகம்மது என்ற அரேபியனை.

    ReplyDelete