Wednesday, December 7, 2011

2012,மாயன்கள் மற்றும் உலக முடிவு


2012 என்ற இந்த நான்கு இலக்கங்கள் அல்லது அவ்வருடம் " 2012 " என்ற ஹாலிவூட் திரைப்படம் வரும்வரை உலக மக்களிடையே அவ்வளவு பேசப்பட்ட ஒரு வார்த்தையல்ல.எப்ப அந்த திரைப்படம் உலக திரையரங்குகளில் வெளியிடப்பட்டதோ அதிலிருந்து இந்த வார்த்தை உலக மக்களிடையே பேசப்படும் ஒரு பிரபலமான வார்த்தையாகிப்போனது,அதக்கு காரணம் அத்திரைப்படம் தாங்கிவந்த 2012 இல் உலகம் அழியும் என்ற செய்திதான்.

இந்த திரைப்படத்தைப் பார்த்துவிட்டு 2012 இல் உலகம் அழியும் என குலம்பிப்பியிருப்பவர்களுக்கு மெக்சிகோவின் மானுடவியளுக்கான  தேசிய நிறுவகம் ஒரு ஆறுதல் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது(National Institute Of Anthropological).இதோ அந்த செய்தி.

நீங்கள் 2012  இல் உலகம் அழிந்து விடும் என்ற கவலையில் வாழும் ஒருவரா ? உங்களுக்கு இனி அந்த கவலையே வேண்டாம்.ஏனெனில் மாயன்களை   அடிப்படையாக வைத்து கணிக்கப்பட்ட அந்த கணிப்பு தற்போது தவறென்று நிரூபிக்கப்பட்டுள்ளது.இதை நிரூபித்தவர்கள் மெக்சிகோவின் மானுடவியளுக்கான நிறுவனம் ஆகும்.

மாயன் நாட்காட்டி நம் பாவிக்கும் நாட்காட்டியின் 2012-12-21 திகதியுடன் முடிவுக்கு வருகிறது.இது 5126 ஆவது மாயன் ஆண்டின் முடிவாகும்.இந்த ஆண்டின் முடிவின் பின் மாயன்களின் படைப்பிக்கும் யுத்தத்துக்கும் பொறுப்பான கடவுளான போலோன் யோக்தே (BOLON YOKTHE) இன் வருகை இடம்பெறும் என மாயன்கள் கணித்து வைத்திருந்தனர்.

போலோன் யோக்தே
 2012  உலகம் அழியும் அதை  மாயன்கள் அறிந்து வைத்திருந்தனர்.அதையே அவர்களின் நாட்காட்டி குறிக்கிறது என்ற கணிப்பை முதன் முதலில் வெளியிட்டவர் ஜோஸ் ஆர்குலஸ் ( JOSE ARGULOSE ) என்ற எழுத்தாளராவார்.இவர் 1987 ஆம் ஆண்டு வெளியிட்ட "தி எண்டிங் ஒப் தி டைம் வி நோ இட் " என்ற நூலிலேயே இதை முதன் முதலாக வெளியிட்டார்.அந்த நாட்களிலேயே இந்த கருத்துக்கு எதிர் கருத்துக்கள் எழுந்தன.ஜோஸின் கருத்துக்கு பதில் கருத்துகக் கூறிய மாயன் வரலாற்று நிருபர்கள் மாயன்களின் நாட்காட்டி முடிவென்பது உலகத்தின் முடிவல்ல அது ஒரு சகாப்தத்தின் முடிவேயாகும் என்று அப்போதே பதில் கூறப்பட்டது.மீண்டும் 2012 என்ற திரைப்படம் மூலம் உலக மக்களின் கவனத்தை ஈர்த்த இந்த விடயம் தொடர்பாக மெக்சிகோவின் மாயன் நிபுணர்கள் மீண்டும் தமது கருத்தை தெரிவித்துள்ளனர்.


"நாங்கள் இந்த விடயம் தொடர்பாக மக்களை அறிவூட்ட விரும்புகிறோம்,ஏனெனில் 2012 தொடர்பாக மாயன்கள் எந்த விதமான முன்னரிவித்தளையும் கணிக்கவில்லை.அது ஒரு தசாப்பத்தத்தின் முடிவேயன்றி உலகின் முடிவல்ல.இந்த கட்டுக்கத்தையை பரப்பியவர்களின் நோக்கம் வியாமாரமே அன்றி வேறில்லை" என எரிக் வேலச்கிவ் தெரிவித்தார்.இவர் மெக்சிகோவின் மானுடவியல் பல்கலைக்கழகத்தின் மாயன் காலாச்சார நிபுணர் ஆவார்.
மெக்சிகோவின் மானுடவியளுக்கான தேசிய நிறுவனம், 2012 உலகம் அழியும் என தவறான கணிப்பை வெளியிட்டு அதனை மீடியாக்கள் மூலம் பரப்பி வருபவர்களுக்கு தமது கண்டனங்களை தெரிவித்துள்ளது.மேலும் "தான்களே
உலகை காப்பவர்கள் என்ற பகல் கனவில் வாழும் மேற்கு  உலகம் தமது குறுகிய அரசியல் பொருளாதார நோக்கங்களுக்காக மாயன் கலாச்சாரங்கள் போன்ற பண்டைய கலாச்சாரங்களின் உண்மைத் தன்மையை மறைத்து பொய்யை பரப்பி வருகின்றன" என அந்த கண்டன அறிக்கை கூறுகிறது.
 


(இந்த 2012 திரைப்படம் மற்றும் அதனூடாக காட்டப்பட்ட விடயங்கள் தொடர்பான இஸ்லாமிய நிலைப்பாடு இன்ஷா அல்லாஹ் அடுத்த ஆக்கத்தில் அலசப்படும்.மேலே உள்ள செய்தி Reuters செய்திச் சேவை வெளியிட்ட ஆக்கத்தை தழுவி எழுதப்பட்ட ஒன்றாகும்.)


இந்த ஆக்கத்தை வாசித்தமைக்கு நன்றி.தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டவும்  திருத்திக்கொள்கிறேன்.
ஜசாகல்லாஹு ஹேர்.

உங்கள் நண்பன்
எம்.ஹிமாஸ் நிலார்  




No comments:

Post a Comment