பயங்கர இரகசிய சமுதாயம் பாகம் 4
Exodus என்பது யூதர்களுக்கு இறக்கப்பட்ட தவ்ராத் வேதத்தின் இரண்டாவது நூலாகும்.இந்த நூலே அவர்கள் ஹஸ்ரத் மூஸா (அலை) அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் எப்படி இருந்தார்கள் என்பது பற்றி கூறுகிறது.எகிப்தை ஆண்ட பாரோக்கள் இஸ்ரவேலர்களை அடிமையாக பயன்படுத்தி வந்தனர்.அப்படிப்பட்ட சமூகத்துக்கு விடுதலையையும் சுதந்திரத்தையும் பெற்றுக் கொடுக்க அல்லாவின் புறத்திலிருந்து வந்தவரே ஹஸ்ரத் மூஸா (அலை) அவர்கள்.எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளைக் கொண்டு மூஸா நபியவர்கள் தனது சமூகத்தை பரோக்களின் கொடுமைகளிலிருந்து விடுதலை வாங்கிக் கொடுத்தார்.
சாமிரியின் தங்கக் காளை
யூதர்களின் இரண்டாவது நூலான Exodus இல் குறிப்பிடப்பட்டுள்ளதும் இஸ்லாமியர்களின் திருக் குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளதுமான மிக முக்கியமான சம்பவமே சாமிரியின் தங்கக் காளை பற்றிய சம்பவமாகும்.அல்லாஹ்வின் கட்டளையின் பேரில் எகிப்திய ஆட்சியாளர்களிடமிருந்து யூதர்களை காப்பாற்றிய மூஸா (அலை) அவர்களின் கட்டளைக்கு அச்சமூகம் காது கொடுக்காமல் சாமிரியின் பேச்சில் மயங்கி காளை ஒன்றை வணங்கினர்.இப்படிப்பட்ட ஒரு நிலைமை உருவாக மிக முக்கியமான காரணம் மூஸா நபியவர்கள் அவர்களுக்கு போதித்த ஒரு கடவுட் கொள்கையை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.இதனால் அவர்கள் உருவ வழிபாட்டின் பக்கம் மிக இலகுவாக சாய்ந்தனர்.
இது பற்றி திருக் குர்ஆன் இப்படி கூறுகிறது.
"நாம் இஸ்ராயீலின் சந்ததியினரைக் கடலைக்கடந்து (அழைத்துச்) சென்றபோது, தங்களுக்குரிய விக்கிரகங்களை ஆராதனை செய்து கொண்டிருந்த ஒரு கூட்டத்தார் அருகே (அவர்கள்) சென்றார்கள். உடனே அவர்கள், ''மூஸாவே! அவர்களிடமிருக்கும் கடவுள்களைப் போல் நமக்கும் நீங்கள் ஒரு கடவுளை ஆக்கித்தருவீர்களாக!'' என்று வேண்டினர்; ''நிச்சயமாக நீங்கள் ஓர் அறிவில்லாத கூட்டத்தாராக இருக்கின்றீர்கள்'' என்று மூஸா (அவர்களிடம்) கூறினார்."
''நிச்சயமாக இந்த மக்கள் ஈடுபட்டிருக்கும் மார்க்கம் அழியக் கூடியது இன்னும் அவர்கள் செய்பவை யாவும் (முற்றிலும்) வீணானவையே'' (என்றும் கூறினார்)."
''அன்றியும், அல்லாஹ் அல்லாத ஒன்றையா நான் உங்களுக்கு இறைவனாக தேடி வைப்பேன்? அவனோ உங்களை உலகத்திலுள்ள எல்லா மக்களையும்விட மேன்மையாக்கி வைத்துள்ளான்'' என்றும் அவர் கூறினார்."
சூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்)
(138-140)
ஹஸ்ரத் மூஸா (அலை) அவர்கள் அவ்வளவு எச்சரித்தும் அறிவுரை வழங்கிய போதிலும் அவரின் பேச்சைக் கேட்காத இஸ்ரவேலர்கள் தொடர்ந்தும் அவரின் பேச்சை புறக்கணித்து வந்தனர்.ஹஸ்ரத் மூசா (அலை) அவர்கள் எல்லாம் வல்ல அல்லாஹ்வை சந்திக்க தூர் சினை மலைக்கு சென்ற நேரம் பார்த்து அந்த சமுகத்தில் இருந்த சாமிரி என்பவன் அவர்களை வழிகெடுத்து விடுகிறான்.அவன் ஒரு காளை ஒன்றின் சிலையை செய்து அதை இஸ்ரவேலர்களுக்கு வணங்குமாறு கூற,அவர்களும் அதை வணங்க துவங்குகின்றனர்.
இது பற்றி திருமறையின் சூரதுத் தாஹா இப்படி கூறுகிறது.
''நிச்சயமாக, (நீர் இங்கு வந்த) பின்னர் உம்முடைய சமூகத்தாரைச் சோதித்தோம்; இன்னும் அவர்களை 'ஸாமிரி' வழிகெடுத்து விட்டான்'' என்று (அல்லாஹ்) கூறினான்.
"ஆகவே, மூஸா கோபமும் விசனமும் கொண்டவராய்த் தம் சமூகத்தாரிடம் திரும்பி வந்து ''என்னுடைய சமூகத்தவர்களே! உங்கள் இறைவன் உங்களுக்கு ஓர் அழகிய வாக்குறுதி கொடுக்கவில்லையா? எனவே அந்த வாக்குறுதி(க் காலம்) அதிகமாகி விட்டதா? அல்லது உங்கள் மீது உங்கள் இறைவனுடைய கோபம் இறங்க வேண்டுமென்று விரும்பி நீங்கள் எனக்குக் கொடுத்த வாக்குறுதிக்கு மாறு செய்தீர்களா?'' (என்றார்).
''உங்களுக்குக் கொடுத்திருந்த வாக்குறுதிக்கு எங்கள் சக்தியைக் கொண்டு நாங்கள் மாறு செய்யவில்லை ஆனால் நாங்கள் சமூகத்தாரின் அலங்கார (ஆபரண)ங் களிலிருந்து சில சுமைகள் (கொண்டு) சுமத்தப்பட்டோம்; பிறகு, நாங்கள் அவற்றை(க் கழற்றி நெருப்பில்) எறிந்தோம்; அவ்வாறே ஸாமிரியும் எறிந்தான்'' என்று அவர்கள் கூறினார்கள்".
''உங்களுக்குக் கொடுத்திருந்த வாக்குறுதிக்கு எங்கள் சக்தியைக் கொண்டு நாங்கள் மாறு செய்யவில்லை ஆனால் நாங்கள் சமூகத்தாரின் அலங்கார (ஆபரண)ங் களிலிருந்து சில சுமைகள் (கொண்டு) சுமத்தப்பட்டோம்; பிறகு, நாங்கள் அவற்றை(க் கழற்றி நெருப்பில்) எறிந்தோம்; அவ்வாறே ஸாமிரியும் எறிந்தான்'' என்று அவர்கள் கூறினார்கள்".
"பின்னர் அவன் அவர்களுக்காக ஒரு காளைக்கன்றை (உருவாக்கி) வெளிப்படுத்தினான்; அதற்கு மாட்டின் சப்தமும் இருந்தது. (இதைக் கண்ட) சிலர் ''இது தான் உங்களுடைய நாயன்; இன்னும் (இதுவே) மூஸாவின் நாயனுமாகும்; ஆனால் அவர் இதை மறந்து விட்டார்'' என்று சொன்னார்கள்.
( ஸூரத்துத் தாஹா 85 - 88 )
ஹஸ்ரத் மூஸா (அலை) அவர்களின் சமூகத்தில் வாழ்ந்த ஒரு சில இஸ்ரவேலர்களின் இந்த மாறுபட்ட போக்குக்கு காரணம் என்ன ? ஒரு சிலையின் முன் தம் சிரத்தை பணியவைத்து வணங்க அவர்களை தூண்டியது என்ன ? அதற்கு வழியமைத்துக் கொடுத்த காரணம் என்ன ?
உருவ வழிபாட்டில் எந்தவிதமான நம்பிக்கையும் அற்ற ஒரே ஒரு இறைவனை மட்டும் வணங்கும் ஒரு சமூகம் திடீரென உருவ வழிபாட்டை எப்படி ஏற்றுக் கொண்டது ?
இஸ்ரவேலர்கள் என்பது ஹஸ்ரத் இப்ராஹீம் (அலை) அவர்களின் காலம் முதல் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மீது பூரண நம்பிக்கை வைத்த ஒரு சமூகமாகும்.இவர்களுக்கு " இஸ்ரவேலர்கள் " அல்லது " இஸ்ரேலின் குழந்தைகள் " என்று பெயர் வரக் காரணம் ஹஸ்ரத் யஹ்கூப் (அலை ) அவர்களாகும்.இவர் ஹஸ்ரத் இப்ராஹீம் அவர்களின் பேரராவார்.ஹஸ்ரத் இப்ராஹீம்,ஹஸ்ரத் இஸ்ஹாக் மற்றும் ஹஸ்ரத் யஹ்கூப் போன்ற நபிமார்களிடமிருந்து பெற்ற ஓரிறைக் கொள்கையை இஸ்ரவேலர்கள் பாதுகாத்து வந்தனர்.ஹஸ்ரத் யூசுப் (அலை) அவர்களின் காலப்பகுதியில்தான் இஸ்ரவேலர்கள் எகிப்தில் பெருமளவில் குடியேறினர்.அப்ப்தும் அவர்கள் ஓரிறைக் கொள்கையை பற்றிப் பிடித்தவர்களாகவே நீண்ட காலம் வாழ்ந்து வந்தனர்.இஸ்ரவேலர்கள் ஓரிறைக் கொள்கையை பின்பற்றிய போது அப்போதைய எகிப்து சிலை வணக்கத்தில் மூழ்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சில இஸ்ரேலியர்கள் பசு வணக்கத்தில் ஈடுபட தாக்கம் செலுத்திய மிக முக்கியமான விடயம் அவர்கள் வாழ்ந்த பண்டைய எகிப்திய சமூகமாகும்.நபி மூஸா (அலை) தூர்சினாய் மலைக்கு எல்லாம் வல்ல அல்லாஹ்வை சந்திக்க போனபோது இஸ்ரேலியர்கள் வணங்கிய தங்கக் காளை பண்டைய எகிப்தியர்கள் வணங்கிய HATHOR என்ற பெண் தேவதையின் நகலாகும்.எகிப்தியர்களின் நம்பிக்கைப்படி அன்பு இசை சந்தோசம் அழகு மற்றும் தாய்மை என்பவற்றுக்கு பொறுப்பான கடவுள்தான் இந்த HATHOR ஆகும்." Too Long In The Sun " என்ற நூலின் ஆசிரியரான Richard Rives என்பவரின் கருத்துப்படி,
HATHOR மற்றும் APHIS எகிப்தியர்களின் பசு மற்றும் காளைக் கடவுள் என்பவை சூரிய வணக்கத்தின் பிரதிநிதிகளாவர்.
சில இஸ்ரேலியர்களின் மீது பண்டைய எகிப்திய மதத்தின் தாக்கம் படிப்படியாகவே ஏற்பட்டது.இஸ்ரவேலர்களை பிரவ்னின் அடிமைத்தன வாழ்விலிருந்து விடுதலை வாங்கிக் கொடுத்த மூஸா நபியவர்களிடம் அவர்கள் கேட்ட முதல் விடயம் பற்றி அல்லாஹ் திருமறையின் சூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்) இல் இப்படி கூறுகிறான்.
Sculpture of Hathor as a cow, with all of her symbols, the sun disk, the cobra, as well as her necklace and crown. |
HATHOR மற்றும் APHIS எகிப்தியர்களின் பசு மற்றும் காளைக் கடவுள் என்பவை சூரிய வணக்கத்தின் பிரதிநிதிகளாவர்.
The goddess Hathor wearing her headdress, a pair of cow horns with a sun disk. |
Apis |
சில இஸ்ரேலியர்களின் மீது பண்டைய எகிப்திய மதத்தின் தாக்கம் படிப்படியாகவே ஏற்பட்டது.இஸ்ரவேலர்களை பிரவ்னின் அடிமைத்தன வாழ்விலிருந்து விடுதலை வாங்கிக் கொடுத்த மூஸா நபியவர்களிடம் அவர்கள் கேட்ட முதல் விடயம் பற்றி அல்லாஹ் திருமறையின் சூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்) இல் இப்படி கூறுகிறான்.
"நாம் இஸ்ராயீலின் சந்ததியினரைக் கடலைக்கடந்து (அழைத்துச்) சென்றபோது, தங்களுக்குரிய விக்கிரகங்களை ஆராதனை செய்து கொண்டிருந்த ஒரு கூட்டத்தார் அருகே (அவர்கள்) சென்றார்கள். உடனே அவர்கள், ''மூஸாவே! அவர்களிடமிருக்கும் கடவுள்களைப் போல் நமக்கும் நீங்கள் ஒரு கடவுளை ஆக்கித்தருவீர்களாக!'' என்று வேண்டினர்; ''நிச்சயமாக நீங்கள் ஓர் அறிவில்லாத கூட்டத்தாராக இருக்கின்றீர்கள்'' என்று மூஸா (அவர்களிடம்) கூறினார்."
(சூரத்துல் அஃராஃப் : 138)
இப்படி கேட்ட அந்த இஸ்ரேலிய சமூகம் இன்னுமொரு படி மேலே சென்று மூஸா நபியவர்களின் இப்படியொரு முட்டாள்தனமான கோரிக்கை ஒன்றையும் முன்வைத்தனர்.அந்த கோரிக்கை பற்றி திருமறையின் சூரத்துல் பகரா (பசுமாடு) இப்படி கூறுகிறது.
"இன்னும் (இதையும் நினைவு கூறுங்கள்;)நீங்கள், 'மூஸாவே! நாங்கள் அல்லாஹ்வை கண்கூடாக காணும் வரை உம்மீது நம்பிக்கை கொள்ள மாட்டோம்'' என்று கூறினீர்கள்; அப்பொழுது, நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்களை ஓர் இடி முழக்கம் பற்றிக்கொண்டது."
(சூரத்துல் பகரா : 55)
திருமறையின் இந்த வசனத்தை நாம் நன்றாக ஆய்வு செய்யும் போது,இஸ்ரேலியர்கள் ஓரிறைக் கொள்கையில் நம்பிக்கை கொண்டிருந்த போதிலும் அதனை விளங்கிக் கொள்ளகூடிய அறிவு அவர்களுக்கு இருக்கவில்லை அதனாலே அவர்கள் ஒன்றாக வாழ்ந்த சமூகமான பண்டைய எகிப்தியர்களின் தாக்கம் அவர்களிடம் ஏற்பட்டது.
பழைய ஏற்பாட்டிலும் திருக் குரானிலும் கூறப்பட்டுள்ள இந்த சம்பவம் நபி மூஸா (அலை) அவர்கள் தூர் சினாய் மலைக்கு அல்லாஹ்வை சந்திக்க சென்றிருந்த சமயம் இடம்பெற்றது.தவ்ராத்தில் இந்த தங்கக் காளை நபி ஹாரூன் (அலை) செதுக்கியதாக கூறப்படுகிறது.ஆனால் திருக்குர்ஆன் இதனை மறுக்கிறது.திருக்குர்ஆன் இந்த சிலை சாமிரி என்பவனால் செதுக்கப்பட்டதாக கூறுகிறது.அல்லாஹ்வை சந்திக்கச் சென்ற மூஸா (அலை) அவர்கள் நீண்ட நாட்களாக (40 நாட்கள்) திரும்பாத நிலையில் சாமிரி என்பவன் முன் வந்து மூஸா காணாமல் போய்விட்டார் அவர் திரும்பி வரமாட்டார் எனக் கூறிய அவன் பிரவ்னின் அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெற்று வரும் போது கொண்டு வந்த தங்க நகைகளையும் பனி இஸ்ரவேலர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட சில தங்க நகைகளையும் சேர்த்து உருக்கி ஒரு தங்க காளைக்கன்றுச் சிலை ஒன்றை உருவாக்கி இது தான் நம் கடவுள் இதை வணங்குங்கள் என்றான்.மேலும் இதுதான் மூஸாவின் கடவுளும் கூட இதை அவர் மறந்து விட்டார் என இஸ்ரவேலர்களிடம் கூறினான்.அதை மூஸா (அலை) அவர்களின் சகோதரர் ஹாரூன்(அலை) எவ்வளவு தடுத்தும் அவர்கள் அதை கேட்காமல் தொடர்ந்து செய்து வந்தனர்.ஹாரூன் (அலை) அவர்கள் இஸ்ரவேலர்களை தடுத்தது பற்றியும் அவர்கள் அதை மறுத்தது பற்றியும் திருக்குர்ஆன் சூரத்துல் தாஹாவில் இப்படி கூறுகிறது.
இதற்கு முன்னரே ஹாரூன் அவர்களை நோக்கி, ''என் சமூகத்தாரே! நிச்சயமாக இதைக் கொண்டு நீங்கள் சோதிக்கப்ட்டிருக்கிறீர்கள், நிச்சயமாக உங்களுடைய இறைவன் 'அர்ரஹ்மானே' ஆவான்; எனவே, என்னைப் பின்பற்றுங்கள். இன்னும் என் கட்டளைக்குக் கீழ்ப்படியுங்கள்'' என்று கூறினார்.
''மூஸா எங்களிடம் திரும்பி வரும் வரையில், நாங்கள் இதன் ஆராதனையை நிறுத்த மாட்டோம்'' என்று அவர்கள் கூறினர்.
(சூரத்துல் தாஹா 90-91)
தூர் சினாய் மலையிலிருந்து அவசரமாக திரும்பி வந்த நபி மூஸா (அலை) அவர்கள் தம் சமூகம் வழிகேட்டில் இருப்பதைப் பார்த்து கோபம் கொண்டு தம் சகோதரரான நபி ஹாரூன் (அலை) அவர்களிடம் கோபம் கொண்டு இவ்வாறு கேட்கிறார்கள்.
(மூஸா திரும்பியதும் தம் சகோதரரிடம்) ''ஹாரூனே! இவர்கள் வழி கெடுகிறார்கள் என்று நீங்கள் கண்ட போது (அவர்களுக்கு போதனை செய்து திருத்துவதில் நின்றும்) உங்களைத் தடை செய்தது யாது? என்று கேட்டார்.
''நீங்கள் என்னைப் பின்பற்றியிருக்க வேண்டாமா? (அவ்வாறு செய்வதை என்ன தடுத்தது?) நீங்கள் என் கட்டளையை மீறினீர்களா?
''(இதற்கு ஹாரூன்;) ''என் தாயின் மகனே! என் தாடியையோ என் தலை (முடி)யையோ பிடி(த்திழு)க்காதீர்கள்; 'பனீ இஸ்ராயீலிடையே நீங்கள் பிரிவினையை உண்டாக்கி விட்டீர்கள்; என் வார்த்தைக்காக நீங்கள் காத்திருக்கவில்லை!' என்று நீர் கூறுவீரோ என நிச்சயமாக நான் அஞ்சினேன்'' என்று கூறினார்.
(சூரத்துல் தாஹா 92-94)
பிறகு இதற்கேல்லாம் காரணமாக இருந்த சாமிரியைப் பார்த்து நபி மூஸா (அலை) அவர்கள்
''ஸாமிரிய்யே! உன் விஷயமென்ன?'' என்று மூஸா அவனிடம் கேட்டார்.
(சூரத்துல் தாஹா - 95 )
நபி மூஸா (அலை) அவர்களின் கேள்விக்கு சாமிரி இவ்வாறு பதிலளிக்கிறான்.
''அவர்கள் காணாத ஒன்றை நான் கண்டேன்; ஆகவே, நான் அந்த தூதர் காலடியிலிருந்து ஒரு பிடி (மண்ணாகப்) பிடித்து, அதை எறிந்தேன்; அவ்விதம் (செய்வதை) என் மனம் எனக்கு அழகா(ன செயலா)க ஆக்கிற்று'' என (ஸாமிரீ பதில்) சொன்னான்.
(சூரத்துல் தாஹா - 96 )
"பனு இஸ்ராயில்களில் மற்றவர்கள் பார்க்காத ஒரு விடயத்தை நான் பார்த்தேன்.அத்தூதர் (ஜிப்ரயீல்) காலடி மண்ணிலிருந்து ஒரு பிடி எடுத்து தங்கக் காளைச் சிலை மீது போட்டேன்.ஏனென்றால் அந்த தூதர் காலடி பட்ட இடமெல்லாம் புற்பூண்டுகள் பசுமையாக வளர்வதைப் பார்த்தேன்."என்று தான் அச்சிலையை இயங்கச்செய்த விதத்தை விளக்கினான்.மற்றவர்கள் பார்க்க இயலாத அதாவது ஜிப்ரயீல் (அலை) அவர்களை சாமிரி எப்படி பார்த்தான்.யார் இந்த சாமிரி ?
இந்த சாமிரி என்பவனின் இயற்பெயர் மூசா பின் சபர் ஆகும்.சில வரலாற்றாசிரியர்களின் கருத்துக்கு அமைய இவன் மூஸா (அலை ) அவர்களின் ஒன்று விட்ட சகோதரன் என்றும் கூறப்படுகிறது.இவன் காளை மாட்டை வணங்கும் மக்களான பஜர்மா கோத்திரத்தைச் சேர்ந்தவன் என்றும் இவன் ஸமாரா என்ற ஊரைச் சேர்ந்தவன் என்றும் தப்சீர் இப்னு கசீர் கூறுகிறது.
அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.
தவறுகள் இருந்தால் சுட்டிக் காட்டவும் ஜசாகல்லாஹு ஹைர்
அஸ்ஸலாமு அழைக்கும் ..... நீங்கள் குறிப்பிட்டு உள்ளத்தில் அதாவது அது ஜிப்ரேல் காலடி மண் என்பது எந்த ஆதாரத்தில் உள்ளது ????? அதரம் தேவை.....
ReplyDeletemail to athaullah.19dma@ymail.com