Tuesday, November 22, 2011

முஹம்மத் அலி கொடுத்த பதிலடி



உலக மக்களின் இரத்தத்தை சிந்தவைப்பதில் வல்லவனான அமெரிக்கா வியட்நாமுக்கு எதிராக போர் தொடுத்த காலமது.போரில் பங்கு கொள்ள அமெரிக்கா முழுவதிலிருந்தும் ஆட்களை சேர்த்துக் கொண்டிருந்தது அமெரிக்க அரசு.அதன்போது முஹம்மத் அலி தமது கறுப்பின மக்களுக்கு ஆற்றிய உரை.(1967)
 


"இந்த நாட்டில் கறுப்பின மக்கள் நாய்களை விட கேவலமாக நடத்தப்படும்போது எமது ஆகா அடிப்படை மனித உரிமைகள் கூட மீறப்படும்போது அவர்கள் என்னை கேட்கிறார்கள் இராணுவ உடை அணிந்து 10000 மைல்களுக்கு அப்பால் உள்ள வியட்நாமில் குண்டு போடும்படி."

"நிச்சயமாக என்னால் முடியாது,நான் போகவும் மாட்டேன்.ஒரு எளிய நாட்டை அளிக்கவும் இந்த வெள்ளைக்காரனின் மக்களை அடிமைப்படுத்தும் கொள்கை தொடரவும் நான் உதவி புரியமாட்டேன்"

"இந்த நாளுடன் இந்த தீமைகள் முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டும்.அத்தகைய நிலைப்பாட்டை நாம் எடுக்க வேண்டுமானால் நாம் அதிக விலை ஒன்றை கொடுக்க வேண்டும் என்று எனக்கு நன்றாக தெரியும்.ஆனால் நாம் அதற்கு தயாராக இருக்க வேண்டும்.நான் பலமுறை சொல்லிவிட்டேன் மீண்டும் ஒருமுறை சொல்கிறேன்,"என் மக்களின் உண்மையான எதிரி வெளியில் இல்லை நம் எதிரி இந்த நாட்டுல்லேயே உள்ளது" "

"என்னுடைய மதத்தை,மக்களை என்னை அவமானத்துக்குள்ளக்கிக் கொண்டு,தம்முடைய சுதந்திரத்துக்காகவும் சமத்துவத்துக்காகவும் சொந்த நீதிக்காகவும் போராடும் மக்களை அடிமையாக்க நினைக்கும் வெள்ளை ஏகாதிபத்தியத்தின் ஒரு கருவியாக நான் மாறமாட்டேன்"

"என் நம்பிக்கைகளுக்காக கொள்கைகளுக்காக நான் எதையும் இழக்க தயார்"

"நான் சிறைக்கு போகவேண்டி வந்தாலும் அதை வெற்றிகரமாக எதிர்கொள்வேன்"

"ஏனெனில் சிறை என்பது கறுப்பின மக்களுக்கு ஒன்றும் புதிதல்ல,காரணம் நாம் கடந்த 500 வருடங்களாக சிறையிலே வாழ்கிறோம்."


(இந்த உரையை ஆற்றிய பிறகு அமெரிக்க அரசு முஹம்மத் அலியின் குத்துச் சண்டை அனுமதிப்பத்திரத்தை ரத்துச் செய்தது.இதன் பின் அவர் 4 வருடங்கள் சிறை வாழ்க்கையை அனுபவித்தார்.)








No comments:

Post a Comment