உயிரினம் உருவானது பற்றி டார்வின் (1809 - 1882 ) மற்றும் கிளவுட் பெர்னாட் ( 1813 - 1878 ) ஆகிய அறிஞ்சர்கள் தெரிவித்துள்ள கருத்தைத்தான் நாம் அனைவரும் அறிந்து வைத்துள்ளோம்.மனித இனம் தண்ணீரிலிருந்து ஆரம்பமானது என்று கூறும் இந்த அறிஞ்சர்கள்,உயிரினங்களின் உதயமும்,நீரில் ஒரே செல்லாக இருந்து பின்னர் பல்லாயிரம் ஆண்டுகளில் படிப்படியாக வளர்ந்து பலவகை உயிரினங்களாக பரிணமித்தது என்று கருதுகிறார்கள்.இதை விளக்கும் முகமாக அனேக பல அனுமானக்கருத்துக்களை அல்லிவீசுகின்றனர்.இருப்பினும் இவர்களின் கூற்றை உறுதி செய்யக் கூடிய அறிவியல் சான்றுகள்,ஆராச்சி பூர்வமான ஆதாரங்கள் ஒன்றும் கிடையாது.
உயிரினம் உருவானது எப்படி என்பது பற்றி அறிஞ்சர்கள் கடும் கருத்து வேறுபாடு கொண்டு, ஒவ்வொருவரும் தம்மையே அதற்கு விளக்கம் என்று நினைத்துகொல்கிறார்கள்.ஆய்வுப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட சான்றுகள் எதையும் அவர்கள் காட்டவில்லை.இவர்கள் குழப்பத்தில் மூழ்கி இருக்கும் வரை உண்மை அவர்களின் கைக்கு எட்டப்போவதில்லை.ஆனால் நாம் முஸ்லிம்கள் எந்த விடயத்திலும் வலி தவறி செல்லவேண்டியதில்லை.திருக்குருஆனின் வழிகாட்டுதல் நமக்கு ஒரு பேரருளாக கிடைத்திருக்கும் பொது நாம் வழுக்கி விழ வேண்டியதில்லை.
உயிரினம் உருவானது பற்றி மனித மூலைகளில் ஒருவான கருத்துக்கள் எதற்கும் எந்தவிதமான வலுவான ஆதாரமும் இல்லை.இந்த விடயத்தில் தெளிவான விளக்கத்தை எந்த அறிஞ்சரும் அளிக்கவில்லை.அனுமானம்,யூகம்,கற்பனை என்ற அளவிலேயே அவர்களின் அபிப்ராயங்கள் அலைமோதுகின்றன.இதற்கு காரணம்,உயிரினம் உறவான போது அதை யாரும் அறிகிளிருந்து பார்க்கவில்லை.அதை பற்றி அறிவிக்கும் அறிவியல் சாட்ச்சியும் இல்லை.தான்,இந்த உலகை படைக்கும் போது எவரையும் உடன் வைத்துக்கொள்ளவில்லை.என்பதை "குகை" என்ற அத்தியாயத்தில் அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்.
வானங்களையும், பூமியையும் படைப்பதற்கோ, இன்னும் அவர்களையே படைப்பதற்கோ (அவர்களை நான் உதவிக்கு) அருகே வைத்துக் கொள்ளவில்லை! வழி கெடுக்கும் இவர்களை (எதிலும்) நான் உதவியாளர்களாக ஏற்படுத்திக் கொள்ளவுமில்லை.
(18:51)
இதிலிருந்து படைப்புக்களின் தோற்றம் பற்றி ஒன்றும் தெரியாது என்று தெளிவாக அறியமுடிகிறது.திருக்குருஆன் வந்து சொல்லிக் கொடுத்ததை தவிர,இது தொடர்பாக நமக்கு ஒன்றும் மேலதிகமாக தெரியாது என்பதே உறுதி.படைப்புக்களின் தோற்றம் பற்றி திருமறை பின்வருமாறு கூறுகிறது.
மேலும், அவன்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் அவனுடைய அர்ஷு நீரின் மேல் இருந்தது. உங்களில் யார் அமலில் (செய்கையில்) மேலானவர் என்பதைச் சோதிக்கும் பொருட்டு (இவற்றைப் படைத்தான்; இன்னும் நபியே! அவர்களிடம்) “நிச்சயமாக நீங்கள் மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவீர்கள்” என்று நீர் கூறினால், (அதற்கு அவர்களிலுள்ள நிராகரிப்பவர்கள்) காஃபிர்கள், “இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறில்லை” என்று நிச்சயமாகக் கூறுவார்கள்.
(11:07)
நபிமொழி
இந்த இடத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அமுதவாக்கு ஒன்றை குறிப்பிடலாம்.இம்ரான் பின் ஹுசைன் (ரலி) அவர்கள் அறிவிக்கும் அந்த ஹதீஸில் நபியவர்கள் கூறுகிறார்கள்.
எந்தவொரு பொருளும் இல்லாத நேரத்திலிருந்தே அல்லாஹ் இருக்கிறான்.அவனது ''அர்ஷ்'' நீரின் மீது இருந்தது.பின்னர் வானங்கள் மற்றும் பூமி என்பவற்றை அவன் படைத்தான்.அனைத்தையும் எட்டில் பதித்தான்.(புஹாரி)
அப்துல்லா பின் அம்ர் (ரலி) அறிவிக்கும் இன்னொரு ஹதீஸில் நபிகள் நாயகம் அறிவிக்கிறார்கள்.
வானங்கள் மற்றும் பூமியை படைப்பதற்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே படைப்புகளின் விதியை அல்லாஹ் எழுதிவிட்டான்.அவனது ''அர்ஷ்'' நீரின் மீது இருந்தது.(முஸ்லிம்)
இந்த வசனம் மற்றும் நபிமொளிகளிளிருந்து படைப்புக்களின் தொடக்கத்திலிருந்து நீர் இருந்தது என்றும் எல்லா படைப்புகளுக்கும் முன்னால் இறைவன் நீரை படைத்து இருந்தான் என்றும் தெரிகிறது.இந்த நீர் எதைக் குறிக்கிறது ? அது சாதரணமான தண்ணீர் தான ? அல்லது திடப்பொருட்கள் இதற்கு முன் பெற்றிருந்த திரவ நிலையைக் குறிக்க " நீர் " எனும் சொல் ஆளப்பட்டுள்ளதா என்பதை அறுதியிட்டுச் சொல்ல முடியாது.திருக்குர்ஆன் இங்கு அடிப்படை விடயத்தை மட்டும் சொல்லியிருக்கிறது.பொதுவாக அறிவியல் சம்பத்தப்பட்ட விடயத்தை மட்டும் கூறிவிட்டு,அதன் விளக்கங்களை மனிதனின் ஆய்வுக்கு விட்டு விடுவதே திருமறையின் மரபாகும்.
இதன்படி அல்லாஹ்வின் "அர்ஷ்"நீரின் மீது இருந்தது:நீரே அல்லாஹ்வின் முதல் படைப்பு என மேற்கண்ட வசனம் தெரிவிக்கின்றது.வேறு சில வசனங்களை ஆராயும் போது,நீரஈருந்து உயிரினம் உருவானது என்று தெரிகிறதே ஒழிய ஆரம்பத்தில் உயிரினங்கள் நீரில் ஒரே செல்லாக இருந்தது என்று தெரியவில்லை.
மேலும், எல்லா உயிர்ப் பிராணிகளையும் அல்லாஹ் நீரிலிருந்து படைத்துள்ளான்; அவற்றில் தன் வயிற்றின் மீது நடப்பவையும் உண்டு; அவற்றில் இரு கால்களால் நடப்பவையும் உண்டு; அவற்றில் நான்கு (கால்)களை கொண்டு நடப்பவையும் உண்டு; தான் நாடியதை அல்லாஹ் படைக்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான்.
(24:45)
என்று திருமறை பறைசாற்றுகிறது.அனைத்து உயிரினங்களையும் நீரிலிருந்து படைத்ததாக சந்தேகத்துக்கு இடமின்றி இந்த வசனம் மூலமிறைவன் விவரிக்கின்றான்.உயிரினக்களில் ஒரு குறிப்பிட்ட இனமான மனிதனைப் படைத்தது பற்றி அல்லாஹ் தனது திருமறையில் பின்வருமாறு குறிப்பிடுகிறான்.
இன்னும் அவன்தான் மனிதனை நீரிலிருந்து படைத்து, பின்னர் அவனுக்கு வம்சத்தையும், சம்பந்தங்களையும் ஏற்படுத்துகிறான்; மேலும் உம்முடைய இறைவன் பேராற்றலுள்ளவன்.
(25:54)
மனிதன் தன்னைப்பற்றி தீவிரமாக ஆராய்வான் என்பதற்காகவே மனிதப்படைப்பு குறித்து அவன் தனியாகவே குறிப்பிடுகிறான்.
இந்த கட்டுரையை எழுதியவர்
அறிவியல் தமிழ் அறிஞ்சர்
மணவை முஸ்தபா
அவர்கள்.
ஜசாகல்லாஹு ஹைரைன்.
அறிவியல் தமிழ் அறிஞ்சர்
மணவை முஸ்தபா
அவர்கள்.
ஜசாகல்லாஹு ஹைரைன்.
சுட்டியை சொடுக்கி படியுங்கள்
ReplyDelete1.
காணத்தவறாதீர்கள். உலகிலேயே மிக பெரிய, மிக சிறிய திருகுரான் பிரதிகளின் அரிய சிறுகண்காட்சி விடியோக்கள் .
மழலைகள், சிறார்கள் குரான் ஓதும் விடியோக்கள்.
.
சுட்டியை சொடுக்கி படியுங்கள்
2. ---- >
புலிகளின் தமிழ்முஸ்லிம் இனஒழிப்பின் ஈரநினைவுகள். பகுதி 3.
ஈழத்தில் புலிகளால் வதைக்கப்பட்ட இன அழிப்பு செய்யப்பட்ட இஸ்லாமியர்கள் குறித்தப் பேச மறுப்பவனும் பேசுவதைத் தடைசெய்பவனும் தான் விரும்பிய குரலில் இஸ்லாமியர்களைப் பேச நிர்ப்பந்திப்பவனும் இஸ்லாமியர்களின் தோழனா அல்லது மூத்த நரேந்திர மோடியா எனத் தோழர்கள் சிந்திக்க வேண்டும்.
இலங்கையில் முஸ்லிம்களுக்கு நடந்திருப்பது என்ன? நடப்பது என்ன? என்பது பற்றி தெளிவாக இந்திய மக்களுக்கு கூற வேண்டியுள்ளது. உண்மை அறியாத மக்கள் கொடூரப் புலிகளுக்கு ஆதரவுக் கொடி தூக்குகின்றனர் < ----