Thursday, February 16, 2012

'டார்வின்' சொன்ன தத்துவம்.


அனைத்து வகை உயிரினங்களும் ஆரம்பத்தில் ஒரே வகையாக இருந்து,பின்னர்தான் பல வகை படைப்புகளாக பரிணமித்தன;பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னாள்,நீரில் ஒரே ஒரு செல் மட்டும் தோன்றியது என்பது டார்வின் தத்துவம்.கி.பி.1809 இல் பிறந்த  டார்வின் 1882 இல் மரணமடைந்தார்.இயற்பியல் அறிஞ்சர் என்று போற்றப்பட்ட இந்த ஆங்கிலேயர் முதன் முதலில் பரிணாமக் கொள்கையை வெளியிட்டார்.
 புவியின் வயது 5000 மில்லியன் ஆண்டுகள் என்று மன்னூல் ஆராய்ச்சியாளர்கள் கணிதிரிக்கிரார்கள்.சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்னர் தான்,மனிதன் வாழ்வதற்கு ஏற்ற இடமாக இப்பூமி மாறியதாம்.இதற்கேல்லாம் வலுவான எந்தவிதமான விஞ்ஞான ஆதாரங்கள் இல்லை.மரபியல் கூறுகளின் அறிகுறிகள் சிலவற்றை வைத்து இந்த தகவலை அவர்கள் தருகிறார்கள்.1882 இல் டார்வின் இறந்த பின்னரே " மரபியல் " கல்விக்கு அறிவியல் பூர்வமாக ஒரு அஸ்திவாரம் கண்டறியப்பட்டது என்பதி நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்.



நவீன மரபியல் என்ன சொல்கிறது என்பதை பார்ப்போம்:



அனைத்து உயிரினங்களுக்கும் 'செல்'கள் உள்ளன.மரபியல் கூறுகளை சுமந்து கொண்டிருக்கிற 'செல்'களின் உட்கருவில் (Nucleis) அமையப் பெற்ற வண்ண உயிரிகளே குரும்சோம்கள் எனப்படுகிறது.மனிதன்,மிருகம்,பறப்பன,ஊர்வன மற்றும் தாவரங்கள் ஆகிய படைப்புகளில் குரும்சோம்கள் உள்ளன.பரம்பரை குணாதிசயங்கள் பண்புகள் இயல்புகள் முதலான பண்புகள் இந்த மரபுக்கூறுகள் தான் தீர்மானிக்கிறது.வடிவத்தில் ஏற்படும் எந்த பரிணாமமும் இந்த மரபுக்கூறுகள் மூலமே உண்டாக முடியும்.ஆனால் எந்த ஒரு படைப்பும் வித்தியாசமான வேறுவகைப் படைப்பாக ஒருபோதும் மாறாது.இது இயற்கைக்கு ஒவ்வாத விடயம்.

உயிரினங்களின் உயிரணுக்களில் இந்த குரும்சோம்கள் இருப்பது 1903 இல் தான் கண்டுபிடிக்கப்பட்டது.குரும்சோம்கள் என்பது சில மீட்டர்கள் நீளமுள்ள 'நத்தை' வடிவிலான ஓர் உயிரி என்றும் கண்டறியப்பட்டது.ஒரு மில்லி மீட்டரில் 10 லட்சம் பாகங்களில் 2.3 பாகங்கள் அளவு நீளமுள்ள இடத்தில் அது அடைபட்டுக் கொண்டு இருப்பதுதான் ஆச்சரியம்.அப்படியிருந்தும் அதை நம் கண்களால் நாம் காணமுடியும் என்பது தான் அதனை விடவும் ஆச்சரியம்.ஆனால் இது எவ்வாறு தோன்றுகிறது என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது.'நத்தை' வடிவிலான இந்த குரும்சோம்கள் மிக நுணுக்கமான அணு அளவுள்ள மரபியல் கூறுகளை சுமக்கின்றனவாம்.!


குரும்சோம்கள் அல்லது நிறப்புரி

யூக்காரியோட்டிக் உயிரணுவின் பிரிகையின் பொழுது படியெடுக்கப்படும் நிறப்புரியின் படம். (1) நிறமியன்(Chromatid) – உயிரணுப் பிரிகையில் உருவேறும் நிலை எனப்படும் (S Phase) நிலைக்குப் பிறகு நிறப்புரியில் உள்ள ஒரேமாதிரியான இரண்டு படிகளில் (2) மையப்படி(Centromere) – இவ்விடத்தில் இரண்டு நிறமியன்களும் தொட்டுக்கொண்டு இருக்கும், இங்கே நுண்குழலிகள் (microtubules) ஒட்டிக்கொண்டு இணைப்பு கொள்ளுகின்றன. (3) குறுங்கை இழை. (4) நெடுங்கை இழை (wikipedia)


 இவ்விதம் உயிரணுக்களில் உள்ள குரும்சோம்கள் வகைக்கு வகை எண்ணிக்கையில் வித்தியாசப்படுகின்றன.உயிரினங்களின் வித்தியாசத்தைப் பகுத்துக் காட்டும் விதத்தில் இந்த வித்தியாசம் பெரிய அளவில் காணப்படுகின்றது.

குரங்கு வகைகளான கொரில்லா சிம்பன்சி முதலியவற்றில் 48 குரும்சோம்கள் உள்ளன என்று 1912 இல் அறிஞ்சர்கள் கண்டுபிடித்தனர்.இதே போல் மனிதனிலும் குரும்சோம்கள் 48 என்றே எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்தனர்.ஆனால் மனித செல்களில் உள்ள குரும்சோம்கள் எண்ணிக்கை 46 என 1956 கண்டுபிடிக்கப்பட்டது.இந்த அறிவியல்பூர்வமான கண்டுபிடிப்பு விவாதத்துக்கு இடமின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மனித குரும்சோம்கள்


வேறுபாடு 

இதிலிருந்து மனித செல்களில் உள்ள குரும்சோம்கள் எண்ணிக்கை குரங்கு வகைகளின் குரும்சோம்கள் எண்ணிக்கை வேறுபடுகிறது என்பது தெளிவாகிறது.குரங்கு குரங்காக தோன்றி நிலைத்துவிட்ட ஒரு உயிரினமாகும்.இதேபோலவே மனிதன் மனிதனாக தோன்றி நிலைத்துவிட்ட ஒரு உயிரினமாகும்.டார்வினின் தத்துவம் சுத்தப் பொய் என்பது இதிலிருந்து நிரூபணமாகிறது.

இதற்கிடையே 'ஒபாரின்' என்ற ரஷ்ய அறிவியலாளர் ஆதி மூலக் குழம்பிளிருந்துதான் முதன் முதலில் 'உயிரி மூலக்கூறுகள்' தோன்றின என்றார்.இவரது கருத்தும் மறுக்கப்பட்டு பல வருடங்கள் ஆகின்றன.உலகில் உயிரினத் தோற்றம்  'ஒபாரினின்' கருத்துப்படி கடலில் ஏற்படவில்லை  என்றும் அது களிமன்னில்தான் தோன்றியது என்றும் டாக்டர் கிரஹெம் கைரேன்ஸ் என்ற அறிவியலாளர் அண்மையில் அறிவித்தார்.இவர் கிளாஸ்கோ  பல்கலைக்கழகத்தின் மூத்த வேதியியல் நிபுணர் ஆவார்.


 'நாசா'வின் ஏமிஸ் ஆய்வு மையத்தில்ஆய்வு செய்துவந்த ஒரு குழுவின் ஆய்வு கைரேன்சின் ஆய்வுகளுக்கு மேலும் புதிய சாட்சியங்களை சேர்த்துக் கொடுத்தது.உயிர் தோன்றுவதற்கு இன்றியமையாத இரண்டு அடிப்படையான குணங்கள் சாதாரண களிமண்ணில் உள்ளன.அவையாவன.
  1. ஆற்றலை சேமித்து வைக்கும் திறமை.
  2. அதை ஒரு பொருளிலிருந்து இன்னொரு பொருளுக்கு மாற்றுகிற திறமை.

அருள்மறை


இனி முதல் மனிதர் எப்படி படைக்கப்பட்டார் குரான் என்ன சொல்கிறது என்று பார்ப்போம் :

நிச்சயமாக நாம் (ஆதி) மனிதரைக் களி மண்ணிலிருந்துள்ள சத்தினால் படைத்தோம்.
(23:12)

அவன்தான், உங்களைக் களிமண்ணிலிருந்து படைத்துப் பின்னர் (உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட) தவணையையும் ஏற்படுத்தியுள்ளான்; இன்னும், (உங்களைக் கேள்விகணக்கிற்கு எழுப்புவதற்காகக்) குறிக்கப்பட்ட தவணையும் அவனிடமே உள்ளது; அப்படியிருந்தும் நீங்கள் சந்தேகப்படுகிறீர்கள்.
(6:2)

அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே; அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப் பின் “குன்” (ஆகுக) எனக் கூறினான்; அவர் (மனிதர்) ஆகிவிட்டார்.
(3:59)




முதல் மனிதர் களிமண்ணால் படைக்கப்பட்டார்,அடுத்தடுத்து மனிதர்கள் விந்தினால் படைக்கப்பட்டனர் என்ற கருத்தை குரான் சுமார் 15 இடங்களில் வலியுறுத்திக் கூறுகிறது.இதேபோல் மனித இனம் ஆரம்பத்திலிருந்து ஒரே மூலத்திலிருந் படைக்கப்பட்டது தான் என்றும் ஒரே ஆன்மாவிலிருந்தே மனித இனம் பல்கிப் பெருகியது என்றும் 5 இடம்களில் குரான் கூறுகிறது.




இங்கு பலருக்கு ஒரு சந்தேகம்.இஸ்ரேவேலர்கள் இறைச்சட்டங்கள் மீறி பூமியில் அக்கிரமம் புரிந்தபோது அவர்களைக் குரங்குகளாக இறைவன் மாற்றியதாக திருக்குரான்  குறிப்பிடுகிறது.


உங்க(ள் முன்னோர்க)ளிலிருந்து சனிக் கிழமையன்று (மீன் பிடிக்கக் கூடாது என்ற) வரம்பை மீறியவர்களைப்பற்றி நீங்கள் உறுதியாக அறிவீர்கள். அதனால் அவர்களை நோக்கி “சிறுமையடைந்த குரங்குகளாகி விடுங்கள்” என்று கூறினோம்.
(2:65)

 முந்தைய சமூக மக்கள் இப்படி குரங்குகளாக மாற்றப்பட்டார்கள் என்று குரான் மூன்று இடங்களில் கூறுகிறது.ஒரு வேளை டார்வினின் தத்துவத்தை இவ்வசனங்கள் வலியுருத்துவனவாக எடுத்துக் கொள்ளக் கூடாதா ??? இதுவே அந்த சந்தேகம்.

முதலில் மனித இனமே குரங்கிலிருந்து உருவானது என்பதே டார்வினின் கொள்கை.இஸ்ரேவேலர்கள் இடையில் வந்தவர்கள்.இரண்டாவதாக மனிதர்கள் குரங்குகளாக உருமாற்றப்பட்டார்கள் என்றே குரான் கூறுகிறது மற்றபடி குரங்குகள் மனிதர்களாக உருமாற்றப்பட்டார்கள் என்றல்ல.மூன்றாவதாக குரங்குகளாக மாற்றப்பட்ட அந்த தீய மனிதர்கள் சில தினங்களிலேயே அளிக்கப்பட்டு விட்டார்கள்.மேலும் வாரிசுகளும் அற்றுப்போனார்கள் என்று ஹதீஸ் கூறுகிறது.(முஸ்லிம்)




(படங்கள் - விக்கிபீடியா)



இந்த அறிவியல் கட்டுரை 
அறிவியல் தமிழ் அறிஞ்சர் 
  மணவை முஸ்தபா  
அவர்களால் எழுதப்பட்டது.




Sunday, February 12, 2012

முடியாது என்பதற்கு முற்றுப்புள்ளி வைப்போம்.



இன்றைக்கு இஸ்லாத்திற்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள கொடுமைகள், இஸ்லாத்தின் எதிரிகளுடைய சவால்கள் ஆகியவற்றைக் காணும் மக்கள், இவற்றுக்கெல்லாம் ஈடு கொடுத்து முஸ்லிம்களுடைய நிலை உயர்வது எவ்வாறு? அது இயலாத காரியம் என்ற கொள்கை முடிவுக்கு வந்து விடுகின்றார்கள். தோல்வி மனப்பான்மையானது, அவர்களைக் கவ்விக் கொண்டு, மன ரீதியாகக் கோழைகளாக மாற்றி விடுகின்றது.

உண்மையில் இன்றைக்கு முஸ்லிம் உம்மத் மீது பொழியப்படும் ஏவுகணை போன்ற எதிர்ப்புகள் மிகவும் கொடூரமானவை தான், கடுமையானவை தான். ஆனால் இவற்றுக்கெல்லாம் ஈடு கொடுத்து, முஸ்லிம்களுடைய நிலையை சீர்திருத்துவது என்பது இயலாது காரியம் என்பது தவறான வாதமாகும். நம்முடைய முதல் குறைபாடு என்னவென்றால் நம்மைப் பற்றி நமக்கே சரியாகத் தெரியாதது தான். நம்மைப் பற்றிய சரியான கணக்கீடு நம்மிடையே கிடையாது என்பது தான்.

நாம் யார், நம்முடைய கொள்கை என்ன, நம்முடைய வாழ்க்கைப் போக்கு சரியானதா அல்லது பிழையானதா, நம்முடைய பண்புகள், நோக்கங்கள் எதனைச் சார்ந்தது, நம்மைச் சுற்றிலும் உள்ளவர்களிடம் நம்முடைய உறவு முறைகள் எவ்வாறு அமைந்திருக்கின்றன என்பதைப் பற்றிய மதிப்பீடு நம்மிடையே இருப்பது அவசியமாகும்.

எது ஒன்றை நம்மால் இயலவே இயலாது என்ற முடிவுக்கு வருகின்றோமோ, முயற்சித்தால் நிச்சயமாக அதனை நம்மால் சாதித்து முடிக்க முடியும் என்பதே உண்மையாகும்.

இறைவன் படைத்திருக்கின்ற படைப்புகளில் மாற்றங்களைச் செய்வது, விண்ணில் நீந்துகின்ற கோள்களின் இயக்கங்களில் மாற்றங்களைக் கொண்டு வர முடியும் என்பதைத் தவிர்த்து, மற்ற பிற மனிதர்களினால் செய்யக் கூடிய அனைத்தும்.., முயற்சி செய்தால் நம்மாலும் செய்ய முடியும் என்பதே நிதர்சனமாகும். இறைவன் தன் திருமறையில் கூறுகின்றான் :

அல்லாஹ் தனக்கு அரசாட்சி கொடுத்ததின் காரணமாக (ஆணவங்கொண்டு), இப்ராஹீமிடத்தில் அவருடைய இறைவனைப் பற்றித் தர்க்கம் செய்தவனை (நபியே!) நீர் கவனித்தீரா? இப்ராஹீம் கூறினார்; ''எவன் உயிர் கொடுக்கவும், மரணம் அடையும்படியும் செய்கிறானோ, அவனே என்னுடைய ரப்பு(இறைவன்)'' என்று; அதற்கவன், ''நானும் உயிர் கொடுக்கிறேன். மரணம் அடையும் படியும் செய்கிறேன்'' என்று கூறினான்; (அப்பொழுது) இப்ராஹீம் கூறினார்; ''திட்டமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கில் உதிக்கச் செய்கிறான்; நீ அதை மேற்குத் திசையில் உதிக்கும்படிச் செய்!'' என்று (அல்லாஹ்வை) நிராகரித்த அவன், திகைத்து வாயடைப்பட்டுப் போனான்; தவிர, அல்லாஹ் அநியாயம் செய்யும் கூட்டத்தாருக்கு நேர் வழி காண்பிப்பதில்லை. (2:258)

எனவே, எது நம்மால் முடியும், இன்னும் எதனை நம்மால் செய்யவே இயலாது, எவை நம்முடைய சக்திக்கும் அப்பாற்பட்டவை என்பதனைப் பிரித்துப் பார்க்க வேண்டும்.

உதாரணமாக, ஒருவருக்கு எது இயலாததாக இருக்கின்றதோ, அது இன்னொருவருக்கு மிகவும் எளிதானதாக இருக்கும் அல்லது குறிப்பிட்ட செயலை ஒருவருக்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்க இயலாமல் இருக்கும், ஆனால் அதனை பல தடவைகளுக்குப் பிறகு அவரால் அதை நிறைவேற்றி விட முடியும். இன்னும் சில திட்டங்கள் சில இடங்களில் செயல்படுத்த இயலாத நிலை இருக்கும். ஆனால் அதே திட்டம் இன்னொரு பகுதியில் செயல்படுத்துவற்குண்டான அனைத்து சாதகங்களையும் பெற்றிருக்கும்.

''இயலாமை'' என்பது நாம் எதைச் செய்கின்றோம், எங்கே செய்கின்றோம், எவ்வாறு செய்கின்றோம் என்பதைப் பொறுத்தது. ஆனால் ''நம்மால் முடியவே முடியாது'' என்பது, அந்தச் செயலுக்குரிய திட்டங்களை நாம் எவ்வாறு திட்டமிட்டிருக்கின்றோம் என்பதைப் பொறுத்தது, அதில் நம்முடைய ஆர்வம் மற்றும் உழைப்பு, செயல்திறன் ஆகியவற்றைப் பொறுத்தது. முந்தைய இயலாமை என்பதில் உள்ள ஆபத்து என்னவென்றால், தனிப்பட்ட அந்த நபரின் இயலாமை அல்லது அது சார்ந்த அம்சங்கள் இறுதியாக அவரை முடியவே முடியாது என்ற முடிவுக்குக் கொண்டு வந்து விடுகின்றது. நம்மால் முடியாததொன்று பிறருக்கு எளிதானது என்ற முடிவுக்கும் அவரால் வர இயலாமல் ஆகி விடுகின்றது.

மேலும், அவரது இந்த முடிவின் காரணமாக, மற்ற மனிதர்களையும் அந்த முயற்சியில் ஈடுபடுவதனின்றும் தடுக்க விளைகின்றார், தான் தோல்வியடைந்ததற்கான காரணத்தையே இங்கும் கற்பிக்க விரும்புகின்றார்.

இன்றைக்கு நம்முடைய முஸ்லிம் சமுதாயத்திற்குத் தேவையானதெல்லாம், ''உன்னால் முடியும்'' என்ற தன்னம்பிக்கையை ஊட்டுவதொன்றே அறிஞர்கள் மற்றும் உலமாக்களின் பணியாக இருக்க வேண்டும். மன ரீதியாக அவர்களைத் தயார் செய்வது இன்றைக்கு மிகவும் அவசியமானதாக இருக்கின்றது. ஏனெனில், பல மனிதர்கள் இன்றைக்கு, ''என்னால் முடியாது'', ''கனவிலும் நடந்தேறாதது'' என்று கூறுவதானது அவர்களின் பலவீனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக உள்ளது. இத்தகைய பலவீனர்கள் இஸ்லாத்தின் பலத்திற்கு வலுச் சேர்க்க மாட்டார்கள் என்பது நிதர்சனம்.

இயலுமான வகையில் சட்ட ரீதியாகவும், வளங்கள் ரீதியாகவும் நாம் எதிர்பார்க்கின்ற அந்த இஸ்லாமிய மறுமலர்ச்சியை அடைவதற்காக கடினமாக உழைக்க வேண்டிய தேவையில் இருக்கின்றோம் என்பதை முஸ்லிம்கள் அனைவரும் உணர வேண்டும். ஒன்றை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்..! இந்த உலகத்தில் சாதனைகளைப் படைத்த அனைவரும் ஒரே முயற்சியில் சாதனையின் சிகரத்தைத் தொட்டு விடவில்லை. மாறாக, பல தடவைகள் தடுக்கி விழுந்தார்கள், தடுமாற வைக்கப்பட்டார்கள். ஆனால் அவை எல்லாம் அவர்களிடம் சோர்வை உண்டாக்கவில்லை. மாறாக, சுவற்றில் எறிந்த பந்தாக மீண்டும் மீண்டும் எழுந்தார்கள். தோல்விக்கான காரணத்தைத் தேடினார்கள். தவறைத் திருத்தி மறுபடியும் மறுபடியும் முயற்சித்தார்கள். அவர்கள் சாதனைச் சிகரத்தை எட்டும் வரை ஓயவில்லை.

இன்னும் உலகப் புகழ் பெற்ற புத்தகங்கள் யாவும் ஒரே மூச்சில் எழுதி முடிக்கப்பட்டவை அல்ல. மாறாக, பல தடவை அடித்தல், திருத்தல் போன்றவற்றிற்கு உட்பட்டு, விடுபட்டுப் போன கருத்துக்களை இணைத்து, சேர்த்து, சுருக்கி என பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வெளிவந்து, வெற்றி பெற்றன என்பது தான் உண்மை.

நமது விவாதங்களில் எவ்வாறு வெற்றி பெறுவது என்பது இல்லாமல், அதனை விட நாம் எதனைச் செய்து முடித்தால் வெற்றி நமது கரங்களில் தவழும் என்பதாக நமது பார்வை இருக்கட்டும்.


நாமும் அந்த சுலோகத்தை சொல்லிக் கொள்வோமா? ''முடியவே முடியாது என்று என்னிடம் சொல்லாதீர்கள்''.


Monday, February 6, 2012

உங்கள் நண்பன் யார்?

 
உங்கள் நண்பன் யார்?

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நல்ல நண்பன் கஸ்தூரி வியாபாரியைப் போலாவான். கஸ்தூரி வியாபரி உனக்கு அதனை (இனாமாகத்) தரலாம். அல்லது நீ அதனை அவனிடமிருந்து விலை கொடுத்து வாங்கலாம். அல்லது ஒருவேளை அவனிடமிருந்து நீ நறுமணத்தையாவது நுகரலாம். கெட்ட நண்பன் துருத்தியில் ஊதுகின்ற கொல்லனைப் போலாவான். அவன் உனது ஆடையை எரித்து விடலாம். அல்லது நீ அவனிடமிருந்து துர்நாற்றத்தை நுகருவாய். 

அறிவிப்பவர் : அபூ மூஸா அல் அஷ்அரீ (ரலி). 
ஆதாரம் : புகாரி, முஸ்லிம்.

தனிமனித சீர்திருதத்திற்கும் சீரழிவுக்கும் உள்ளமும் சூழலும் அடிப்படைக் காரணங்களாக அமைகின்றன. மேற்குறிப்பிட்ட ஹதீஸ் தனிமனித வாழ்வில் சூழல் ஏற்படுத்தும் பாதிப்புப் பற்றி விளக்குகிறது. நபி (ஸல்) அவர்கள் அதனை அழகிய உதாரணத்தினூடாக விளக்குகிறார்கள்.

சூழல் எனும் போது பெற்றோர், உற்றார், உறவினர், சுற்றத்தார், நண்பர்கள் கருத்திற் கொள்ளப்படுகின்றனர். ஒரு குழந்தையின் வாழ்வில் ஆரம்பமாக பாதிப்பை ஏற்படுத்துவோர் பெற்றோர்களாவர். எனவே தான் நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள் :
ஒவ்வொரு குழந்தையும் இஸ்லாத்தில் தான் பிறக்கிறது. அதனது பெற்றோர்களே அதனை யஹுதியாக, கிறிஸ்தவராக, நெருப்பு வணங்கியாக மாற்றி விடுகின்றன.

பெற்றோருக்கு அடுத்தபடியாக, உற்றார் உறவினரை விட நண்பர்களால் ஒரு பிள்ளை பாதிப்படைகிறது. பால்ய வயதை அடைவதற்கு முன்பே அது கூடி விளையாடுவதற்கு நண்பர்களைத் தேடுகிறது. நட்பு கிடைக்கும் பட்சத்தில் அது உள அமைதி அடைகிறது. நட்புக்கத் தடையாக பெற்றோர் அமைகின்ற போது அது உளச் சிக்கலுக்கும் உள இறுக்கத்திற்கும் ஆட்படுத்தப்பட்டு, வேண்டத்தகாத விளைவுகளை குடும்பத்தில் தோற்றுவிக்கிறது. அநேகமாக பெற்றோரின் வழிகாட்டல் இன்றிய நட்புத் தேடல் படுமோசமான பாதிப்புகளை ஆறாத வடுக்களாய் பிள்ளைகளிடம் விட்டுச் செல்கிறது. இஸ்லாம் எனும் வாழ்க்கை நெறியை நட்புத் தேடலையும் நெறிப்படுத்தி வழிகாட்டியிருப்பது எம்மை வியப்பிலாழ்த்துகிறது.

நபித்துவ வழிகாட்டலின் வெளிச்சத்தில் நட்புத் தேடலை விளங்க முயற்சிப்போம். நண்பர்களை எக்கோணத்திலிருந்து விளங்கினாலும் கூட அவர்களை இரு வகையாக அமைகின்றனர். நல்ல நண்பர்கள் கெட்ட நண்பர்கள்.

நல்ல நண்பன் தனது நட்பை முதலில் எவ்வித பேரமும் பேசலும் இன்றி, முன் நிபந்தனையின்றி விரிந்த மனப்பான்மையுடன் கருமித்தனம் ஏதுமின்றி அள்ளி வழங்கத் தயாராக இருப்பான். இவன் கஸ்தூரியை இனாமாக வழங்குபவன் போலாவான். சிலபோது பிறரினால் இவன் வஞ்சிக்கப்படலாம். அப்பாவியாகக் கருதப்படலாம். நல்ல நண்பன் தனது தரத்தினை பெறுமதியாகக் கருதுகிறான். தனது சிந்தனை ஆன்மா, பண்பாடு, நடத்தை, ஒழுக்கம் விழுமியம் என்பனவற்றை இலவசமாகக் கொடுத்துக் கிராக்கியைக் குறைத்துக் கொள்ள விரும்பவில்லை. தனது ஆளுமைப் பண்புகள் இதர மனிதர்களால் மாசுபடுவதை இம்மியளவும் விரும்புவதில்லை. எனவே, அவன் தனது நட்பை நாடி வரும் மனிதர்களை நோக்கி முன் நிபந்தனை - உறுதிப்பிரமாணம் என்பனவற்றின் அடிப்படையில் நகருகிறான்.

எனது நல்ல நண்பர்களுக்கு உங்களால் மாசு கற்பிக்கப்படும் போது கெட்ட பாதிப்பு ஏற்படும் போது உங்களுடன் உள்ள நட்பை முறித்துக் கொள்வேன் என்று பேரம் பேசி நட்பைப் பகிர்ந்து கொள்கிறான்.

இவன் பணத்திற்கு கஸ்தூரியை விற்பனை செய்பவன் போலாவான். ஹதீஸின் மூலத்தில் தப்தாஅ என்ற பதம் உள்ளது. ஒரு பொருளை திருப்பதியின் அடிப்படையில் விலை கொடுத்து வாங்குதல் என்ற கருத்து அப்பதத்தில் தொணிகிறது. வியாபாரம் என்பது ஒரு வகை உடன்படிக்கையாகும். விசுவாச பிரமாணத்திற்கு பைஅத் என்ற சொல் பிரயோகப்படுத்தப்படுகிறது. தப்தாஅ - பைஅத் என்ற இரு சொற்களும் கிட்டத்தட்ட ஒரே கருத்தைத் தருகின்ற இருவேறு சொற்களாகும்.

நல்ல நண்பனுடன் ஆழ்ந்த நட்பை கொள்ளப்படா விட்டாலும் கூட அவனால் நல்லன விளையும் என்பதையும் ஹதீஸ் விளக்குகிறது. இக்காலகட்டத்தைப் பொறுத்தவரையில் இனாமாக வழங்கப்படும் பொருள்களுக்கு எவ்வித பெறுமானத்தையும் மனிதன் வைப்பதில்லை. ஆகவே உறுதிப் பிரமாணத்தின் அடிப்படையில் பகிர்ந்து கொள்ளப்படும் நட்பே நித்தியமானதும், நிரந்தரமானதுமாகும்.

மனித வாழ்வில் நட்பு என்பது விசித்திரமானது. விந்தையானது. அதனால் ஏற்படும் பாதிப்பு ஆழமானது. பலரது வாழ்வில் பெரும் திருப்பங்களுக்குக் காரணமாகவும் அது அமைகிறது. பெற்றோர்களது அன்பு உற்றார் உறவினர்களது பாசம், நேசம் சாதிக்க முடியாததை நட்பு சாதித்து விடுகிறது. பெற்றோர்களுக்குப் பிள்ளைகளை சீர்திருத்த முடியாத கையாலாகாத நிலை உருவாகும் பட்சத்தில் அவர்கள் பிள்ளைகளின் நண்பர்களை அணுகி தமது பிள்ளைகளை சீர்திருத்த முனைவது அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நிதர்சன நிகழ்வுகளாகும். பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கு இடையில் உள்ள உறவில் மரியாதைப் பண்பின் காரணமாக அல்லது வெறுப்பின் காரணமாக விரிசல் அதிகரிக்க அதிகரிக்க நண்பர்களுடனான நட்பு படிமுறை ரீதியாக அதிகரிப்பதையும் அவதானிக்கிறோம். நட்பு என்பது ஒரே அச்சில் வார்க்கப்பட்ட பொருள்களைப் போல அமைந்த விடுகிறது. அதாவது ஒரு நண்பனின் மறு உருவமாக அடுத்தவன் மாறிவிடுகின்றான். சிந்தனைப் பாங்கு பண்பாடு, நடத்தை, நடை, உடை, பாவனை போன்ற சகல விவகாரங்களிலும் ஒருவன் தனது நண்பனை பிரதிபலித்துக் காட்டுகிறான். இப் பேருண்மையை நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு விவரித்தார்கள்.
ஒருவர் தனது நண்பனின் மார்க்கத்தில் இருப்பார். எனவே உங்களில் ஒருவர் தன் நட்பு கொள்கின்றவரை நன்றாக அவதானிக்கட்டும். 
(ஆதாரம் : அபூதாவூது).

எனவே, இவ்விடத்தில் நல்ல நட்பை தேடல் முக்கியத்துவம் பெறுகிறது. நல்ல நட்பு என்பது சுவன பிரவேசத்திற்கு வழி வகுக்கின்றன. நரக விடுதலை பெற்றுத் தருகின்ற நட்பாகும். சடவாத ஜாஹிலிய்யா சிந்தனையை அடிப்படையாகக் கொண்ட குறுகிய உலகில் நலன்களை இலக்காகக் கொண்ட நட்பு கெட்ட நட்பாகும். இத்தகைய நட்பு மனிதனது உயர் லட்சியத்தை விடுவதோடு, சேர்த்து அவனையும் நரகத்தில் எறிந்து எரித்து விடுகிறது. கெட்ட நட்பினால் வழி தவறி, நரகம் சேர்ந்து விட்ட மனிதனது கைசேதம் இவ்வாறு அமைகிறது.
அந்த நாளில் அக்கிரமக்காரன் தன் இரு கைகளையும் கடித்துக் கொண்டு நம் தூதருடன் நானும் நேரான வழியில் சென்றிருக்க வேண்டாமா? என்று கூறுவான். அன்றி அய்யோ பாவம் செய்யும்படி தூண்டிய இன்ன மனிதனை என்னுடைய சிநேகிதனாக ஆக்கிக் கொள்ள வேண்டாமா? என்னிடம் நல்லுபதேசம் வந்தது. பின்னரும் அதிலிருந்து அவன் தன் என்னை வழி கெடுத்து விட்டான். அந்த ஐஷத்தான் மனிதனுக்குப் பெரும் சதிகாரனாக இருந்தான் (என்றும் கைசேதப்படுவான்). 
(சூரா அல் ஃபுர்கான் : 27 : 2)

அநேகமாக நட்பு கொள்ளல் என்பது இத்தகைய அறிவுப் பின்னணியும் இன்றியே ஆரம்பமாகிறது. கல்வி வாழ்க்கையிலும் வியாபார கொடுக்கல் வாங்கல் தொழில் சார்ந்த நடவடிக்கைகளின் போது உருவாகும் நட்பு குறுகிய நலன்களைப் பின்னணியாகக் கொண்டு உருவாகுகிறது. அறிவுத் தேடல் தொழில் பணம், பெண் போன்றவை இலக்காகக் கொள்ளப்படுகின்றன. அவ்வாறு பொழுது போக்கு பின்னணியை கொண்டு எழுகின்ற நட்பு சமூக தீமைகளுக்கு வழி வகுக்கின்றன. புகைத்தல், போதைப் பொருள் பாவனை, பாலியல் வல்லுறவு, கொலை, கொள்ளை, நாசகார நடவடிக்கைகள் முதலானவை கெட்ட நண்பன் எனும் நுழைவாயில் மூலம் குடும்பத்தில் நல்லவனாக இருந்த மனிதனிடமும் குடி கொள்கிறான். பின்னர் பெற்றோரும் மற்றோரும் கன்னத்தில் விரல் வைத்து நெற்றி சுருக்கி ஆச்சரியத்துடனும், கவலையோடும் வினா எழுப்புகின்ற அளவுக்கு அந்தப்பிள்ளை கெட்டுப் போய் விடுவான். ஆகவே தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நட்புத் தேடல் விசயத்தில் நல்லதொரு வழிகாட்டலைத் தருகின்றார்கள்.

நட்பு அல்லாஹ்வுக்கு அமைகின்ற போது அது நல்ல நட்பாக மாறுகின்றது. நித்திய தன்மை பெற்று நிகழ்கிறது. அதுவல்லாத போது தற்காலிகமாக நீடித்து விரைவில் அது காலத்தால் அழிந்து விடுகிறது. மார்க்கத்தின் பெயரால் உருவாகும் நட்பு கூட உளத்தூய்மை இழந்து இஸ்லாமிய கருத்துக்கு பகரமாக நச்சுக் கருத்துக்களை வளர்க்கும் வகையில் உருமாறினால் அத்தகைய நட்பு விரைவில் அழிந்து விடும். இதுவும் கெட்ட நட்பே! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மறுமை நாளில் அல்லாஹுத்தஆலா எனக்காக பரஸ்பரம் அன்பைப் பரிமாறிக் கொண்டு வாழ்ந்த மனிதர்கள் எங்கே! எனது நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத இன்றைய தினம் அவர்களுக்கு எனது நிழலில் இடமளிப்பேன் என்று கூறுவான். 
(முஸ்லிம்)

வகுப்பறைத் தோழர்கள், பயணத் தோழர்கள், ஆருயிர்த் தோழர்கள் தாம் பகிர்ந்து கொள்ளும் நட்பு இறைச் சிந்தனை இஸ்லாத்தின் கடமைகள் ஷரீஅத்தின் சட்ட வரம்புகளை விட்டு தூரமாக்கி படுமோசமாக உறவுகளுக்கு வழிவகுக்கலாகாது. தமக்கு மத்தியில் பரஸ்பரம் நன்மையை ஏவி தீமையைத் தடுத்துக் கொள்வார்கள்.
முஃமினான ஆண்களும் பெண்களும் ஒருவருக்கொருவர் நேசர்களாக இருக்கின்றனர். நன்மையை ஏவி தீமையைத் தடுத்துக் கொள்கின்றனர். (சூரா அத்தவ்பா : 71)

நண்பர்களாக இருப்போம்! நன்மையை தீமையைத் தடுத்துக் கொள்ளும் விவகாரத்தில் நாம் தலையிடுவதில்லை என்ற வாதம் இஸ்லாமிய சிந்தனைக்கு உட்பட்டதல்ல. இது கெட்ட நட்பாகும். கொல்லனின் துருத்தியில் இருந்து தெறிக்கும் தீப் பொறிகள் ஆடையை எரித்து விடுவது போல் கெட்ட நட்பு மறுஉலக பயன்பாடுகளை எரித்து விடும். கொல்லனின் துருத்தியில் இருந்து வெளிவரும் துர்நாற்றத்தைப் போல இவ்வுலக வாழ்வு துர்நாற்றமிக்கதாகவே அமையும்.

எனவே பெற்றோர் பிள்ளைகளுக்கு நல்ல நட்பைப் பெற்றுத் தர முயற்சிப்பதோடு துரதிருஷ்டவசமாக பிள்ளைகளுக்கிடையில் கெட்ட நட்பு அமைந்து விட்டால் மாற்று பரிகாரமாக நல்ல நட்பை பெற்றுக் கொடுக்க முனைய வேண்டும். 



ஹதீஸ் விளக்கவுரை 

அஷ்ஷெய்க் ர்.ஆ. மின்ஹாஜ் 
(இஸ்லாஹி)

Thanks To
One Realism







Thursday, February 2, 2012

மதச்சார்பின்மையும் இளைஞர்களும்


இஸ்லாமிய இளைஞர்கள் எதிர்நோக்கும் கொள்கைப் பிரச்சினைகளுள் மதச்சார்பற்ற சிந்தனையும் ஒன்றாக இன்று தாக்கம் செலுத்துகின்றது.இஸ்லாமிய இளைஞர்களை கொள்கையிலிருந்து கடத்திச் சென்று,கொள்கையற்ற கோமாளிகளாக மாற்றுகின்ற சதினாஷ நடவடிக்கைகள் இன்று முஸ்லிம் கிராமங்களிலும் இடம்பெறும் இவ்வேளையில் - அது பற்றி நாம் கட்டாயம் அறிந்து கொள்ளவேண்டும்.

   அறிவியலும் தொழில்நுட்பமும் மாபெரும் வளர்ச்சியுற்று மனித வாழ்வில் மிகப் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன.அவை பகுத்தறிவுக்குக் சிந்தனைக்கும் ஆராய்ச்சிகளுக்கும் களம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளன.

     அதனால்,மத நம்பிக்கையின் செல்வாக்கு மறைந்து பகுத்தறிவினைநாடி எழுந்துள்ள அறிவியல்,விஞ்ஞான தொழில்நுட்ப யுகம் தோன்றி ஆதிக்கம் செலுத்தும் புத்துலகம் ஏற்பட்டு விட்டதாக மனித மனங்களில் ஒரு பிரமை தோற்றுவிக்கப்பட்டுலதை இன்று பரவலாக அவதானிக்க முடிகிறது.     இதன் விளைவாக மதச்சார்பின்மை (SECULARISM)  என்ற சிந்தந்ததை ஆதிகளவில் பிரச்சாரப்படுத்தி,இளைஞர்களை அதிகளவில் கவர்வதொடு,இறை நம்பிக்கையின் அடித்தளத்தில் கட்டி எழுப்பப்பட்டுள்ள மதங்களை கொச்சைபடுத்துவதும் ஒழுக்கப் பெறுமானங்கள்,வணக்க வழிபாடுகள்,எள்ளி நகையாக்கப்பட்டு,உயர் ஒழுக்க விழிமியங்கள் மலினப்படுத்தப்படுகின்ர காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம்.

         ஆனால் அறிவுபூர்வமான கருத்துக்களை தன்னகத்தே கொண்டு,காலத்தை வென்று,வளர்ச்சி அடைந்து வரும் இஸ்லாத்தையும்,சிறுமைத்தனமான சித்தாந்தங்களில் சிறைப்பட்டுப் போன சிலர் பத்தோடு பதினொன்றாக விமர்சித்தும் கொச்சைப்படுத்தியும் வருகின்றனர்.நமது இளம் பிஞ்சுகளின் உள்ளங்களில்  நஞ்சை விதைக்கின்றனர்.எனவே நாம் இந்த சதிவலையிலிருந்து மீள இது பற்றி தெளிவு அவசியமாகின்றது.

         இன்றைய உலகப் பிரச்சினைகளுக்கு மதச்சார்பின்மை ஒரு தீர்வாக வைக்கப்படுகிறது.எனினும் பல வளர்ச்சி கண்டதாக இருமாந்திருக்கும் நாடுகளில் கூட இந்த சிந்தனை நடைமுறை பிரச்சினைகளுக்கான தீர்வாக அமையவில்லை என்பது நிரூபமான இந்தக்காலப்பிரிவில்அந்நாடுகளில் ஒரு கணிஷமனவர்களும் முஸ்லிம் சமூகத்தில் படித்த ஒரு பிரிவினரும் இளைஞர்கள் சிலரும் இச்சிந்தனைக்கு உட்பட்டு இதை பிரபலப்படுத்தியும் முக்கியம் கொடுத்துப் பேசியும் வருகின்றனர்.

            இன்று ஷிர்க்,பிதுஅத்,மூடநம்பிக்கை போன்றவைகளைவிட மதச்சார்பின்மைச் சிந்தனை முஸ்லிம் வீடுகளில் கிராமங்களில் பாடசாலைகளில் பல்கலைக்களகங்களில் ஆகிய அனைத்திலும் நுழைந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.எனவே மதச்சார்பின்மை கருத்தியலின் தோற்றம்,காரணம்,அதுபற்றி சமூக உளவியல் சார்ந்தோரின் கருத்து போன்றவை கீழ்வரும் பந்திகளில் ஆராயப்படுகிறது.

 அன்று படாடோபத்தில் திளைத்திருந்த கிருஸ்தவ உலகம்  ''பூமி சுழல்கிறது'' என்பது பைபிளுக்கு விரோதமானது.பூமி தட்டைப்போல் விரிக்கப்பட்டிருப்பதாக பைபிள் கூறுகிறது.''ஏசு நாதர் பிறந்த பூமி சூரியனை சுற்றுவதா? இல்லவே இல்லை.அப்படி சொல்பவர்களின் நாக்கை வெட்டி விடுவோம்'' என விஞ்ஞானிகளை மிரட்டி,சிறையில் அடைத்து,எரித்து,தூக்கில் இட்டு அவர்களின் குரலை ஒடுக்கியது அக்கால திருச்சபை.

     இப்படியான காலப்பகுதியில் தான் தொலைநோக்கியின் முன்னோடியான கலிலியோ கலிலி (1564-1642) ''பூமி சூரியனை சுற்றுகிறது'' என்றார்.இது எங்கள் வேதத்துக்கு முரணானதென்று  69 வயது தளர்ந்த கலிலியோவை படாதுபாடுபடுத்தினர்.இவ்வாறன கொடூர புத்தி கொண்ட கொடியவர்கள் இஸ்லாத்தை நாகூசாமல் விமர்சனம் செய்யவும் துணிந்துள்ளனர் என்பதே ஆச்சரியமிக்க விசயமாக உள்ளது. 

      15,16,17 ஆம்  நூற்றாண்டுளில் அறிவியலை அடக்கி தடை விதிக்கப்பட்டதால் ஐரோப்பா அறிவியல்,பண்பாடு,நாகரீகத் துறைகளில் பின்னடைந்து இருட்டில் மூழ்கியது.

       ஐரோப்பா இத்தகைய இருளில் மூழ்கியிருந்த வேலையில் தான் முஸ்லிம்கள் ஸ்பெயினிலும் உலகின் ஏனைய பகுதிகளிலும் ஏற்றி வைத்த அறிவுத்தீபம் பிரகாசித்துக்கொண்டிருந்தது.ஐரோப்பிய மன்னர்கள் கையெழுத்துப் பழகும் போது நம் முஸ்லிம் விஞ்ஞானிகள் குர்துபா (Cordoba) பல்கலைக்கழகத்தில் உலகத்தை உருண்டை வடிவில் வைத்து பாடம் நடத்திகொண்டிருண்டார்கள்.அன்று அவர்கள் ஐரோப்பியாவில் ஏற்றி வைத்த அறிவுத்தீபம் இன்றும் பிரகாசித்துக்கொண்டிருக்கிறது.

         ''கி.பி.எட்டாம் நூற்றாண்டிலிருந்து கி.பி.பதிமூன்றாம் வரை இடைப்பட்ட காலப்பகுதியில் முஸ்லிம்களே உலகில் கலாச்சாரத்திலும்,நாகரீகத்திலும் ஒளியை ஏற்றி நின்றனர்.''என பேராசிரியர் P.K.Hitti  குறிப்பிடுகிறார்.

        ''மேற்கத்தைய உலகம் ஆழமான அறிவை பெற்றுக்கொள்ள எண்ணியபோதும் புராதன சிந்தனையோடு தன் உறவை  புதுப்பித்துக்கொள்ள எண்ணிய போதும் அது முதலில் அரபு மூலாதாரங்களை நோக்கியே திரும்பியது.''பேராசிரியர் GOERGE SARTON - HISTORY OF SCIENCE.

            இதுபற்றி தெளிவட்ட்றோரும் ஆழமான அறிவற்றவர்களும் புனிதமான இஸ்லாத்தை விரும்பாதொரும் முஸ்லிம் உம்மத்துக்குள் இருந்து கொண்டே மதச்சார்பின்மையை முன்வைக்கின்றமை வேதனை மிகு விசயமாகும்

    காலனித்துவ காலத்தில் ஐரோப்பிய கலாச்சார்ப் பன்பாடுகள் முஸ்லிம் நாடுகளிலும் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளிலும் விதைக்கப்பட்டன.முஸ்லிம்களில் ஒரு சாரார் அபிவிருத்திக்கு ஒரே வலி மதத்தை விட்டு வெளியேறுவதுதான் என நினைக்கலாயினர்.ஆனால் இவர்கள் பின்பட்ட்ரும் வளர்ச்சியடைந்த நாடுகளில் கணிசமானோர் இப்போக்கை மறுக்கின்றனர்.அங்குள்ள பல உளவியலாளர்கள் ''மனித குலத்தின் மாண்புக்கு மதமே சிறந்த வழி'' என்று தற்போது இஸ்லாத்துக்குள் வந்த வண்ணம் உள்ளனர்.

     நாம் மேலே வரலாற்றின் நிகழ்வுகளிலிருந்து எடுத்துக் காட்டிய ஐரோப்பிய உலகினதும் இஸ்லாமிய உலகினதும் நிலை,மதச்சார்பின்மை தோன்றுவதற்கு காரணம் ஐரோப்பாவில் நடந்த சில துயரமான நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து எழுந்தது என்பதை தெளிவாக தெரிந்துகொண்டோம்.உலகின் மனித இன வரலாற்றின் ஓட்டத்தில் மதம் அறிவியலுக்கு தடையாக ஐரோப்பா தவிர வேறு எங்கும் இடம்பெறவில்லை.ஐரோப்பாவில் நிகழ்ந்த இந்த வரலாறு இன்று உலகின் பல பாகத்திற்கும் பரப்பப்பட்டு,எமது முஸ்லிம் சமூகத்திலும் பரவி நம் முஸ்லிம் புத்திஜீவிகளிடத்திலும் திணிக்கப்பட்டுள்ளது.


மதச்சார்பற்ற நிலை என்பது இறைவன் இருக்கிறான் என்ற உண்மையைஇருட்டடிப்புச்செய்கிறது. 

''உலகில் உள்ள அனைத்தும் பகுத்தறிவுக்குட்பட்டதே! இயற்கையின்யதார்த்தத்தில் மனித வாழ்வை விளக்கவும் முடியும் என்ற விசயத்தில்மனிதன் உறுதியாக நம்பிக்கை கொள்கிறான்.இதனடிப்படையில் மறுமைவாழ்வு என்று ஒன்று இல்லை என்பதோடு,மறு உலக வாழ்விலிருந்தோஅல்லது இறைவன் மீதான நம்பிக்கையிளிருந்தோ பெறப்பட்ட எல்லாகருத்தியலையும் தவிர்த்தல் என்ற வகையில் உலக வாழ்வின் மனிதஇனத்தின் சுயனலனைக்குறித்த வகையில் மட்டுமே ஒழுக்கம் அடிப்படையாகஅமையவேண்டும்''என்பதே மதச்சார்பற்ற  சிந்தனையின் கருப்பொருளாகும்.

   உண்மையில் மதச்சார்பின்மை என்பதன் பொருள் ஒரு மதத்தையோஇனத்தையோ பிரநிதிதுவப்படுத்துவதில்லை என்ற நிலை மட்டுமல்ல.நாம்முன்னர் குறிப்பிட்டது போல் ஆன்மா,கடவுள்,மறுமை வாழ்வு அனைத்தையும்மறுத்துரைக்கும் சடவாத சிந்தனைப் போக்கையே அது குறித்து நிற்கிறது இதுஉலக வாழ்வில் எல்லையட்ட்ற மோகத்தையும் ஆன்மீக வறுமையையும்தோற்றுவித்துள்ளது.இதனால் மேற்கத்தைய உலகம் மனஅமைதியின்மையால் வாடுகிறது.அங்கே பெரும் எண்ணிக்கையானோர்நரம்புத்தளர்ச்சிக்கும் மனநோய்க்கும் ஆளாகியுள்ளனர்.மதச்சார்பின்மை என்றமுட்டாள் கோட்பாடு இன்று மனித வாழ்வுக்கு பொருளையும் கருத்தையும்குறிக்கோளையும் இலட்ச்சியத்தையும் வழங்க முடியாமல்தோற்றுவிட்டது.எனவே வாழ்க்கைப் போராட்டத்தில் சிக்கித்தவிக்கும் மேதகுநாட்டவர்கள் ஆறுதலையும் நிம்மதியையும் தேடி இஸ்லாமிய மடியை நாடிஅடைக்கலம் புகும்போது நம்மவர்கள் அந்தக் குப்பையில் போய் விழுவதும்வீழ்ந்திருப்பதும் தான் ஆச்சரியமாக உள்ளது. 

         கிருஸ்தவ பாதிரிமார்களின் கடும் போக்கு நிலை காரணமாகவே மனிதன் மதத்தை வெறுத்தான்.இதனால் அவனின் இறை நம்பிக்கையும் விசுவாசமும் ஆட்டம் கண்டது.கிருஸ்தவ மதப்பிடியிளிருந்து விடுப்படும்பொருட்டு மனிதன் அனைத்து மதகொள்கையையும் தூக்கி எறிந்துவிட்டு தனிப்பாதையில்(மதச்சார்பின்மை) தனது                 பயணத்தை தொடர்ந்தான்.இந்தப்பாதையில் அவன் மகத்தான வெற்றி கண்டான்.எனினும்ஆத்மீக ஒளியற்ற  இவ்வளர்ச்சியினால் அவன் அவனது வாழ்வை இருட்டிலே கழிக்கிறான்.அறிவு வளர்ச்சிக்கும் ஆராய்ச்சி முயற்ச்சிக்கும் எதிராககிருஸ்தவ திருச்சபையும் அதனை பிரதிநிதித்துவப்படுத்திய மதகுருமார்களும் நடந்துகொண்டதால் மதத்துக் எதிரான சிந்தனைப்போக்கு ஆரம்பமானது.

     கிருஸ்தவ போதனை போன்று மனித வாழ்விற்குரிய தெளிவானவரையறுத்த பகுத்தறிவுபூர்வமான அறிவியலை புறக்கணிக்காத சட்டங்களும் கொள்கைகளும் பல மதங்களில் கனப்படாமையே மதச்சார்பின்மை வளர காரணமாக அமைந்தது.இச்சிந்தனையின் கருத்தாடலில் கவரப்பட்டவர்கள் இஸ்லாத்தையும் அதே மனப்பதிவோடு மேலோட்டமாக விமர்சிக்கின்றனர்.இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்களில் எந்த உடுருவலும் இடம்பெற முடியாது.அது தெய்வ வழிகாட்டல்.அதன் பாதுகாப்பு இறைவன் அவன் வசம் வைத்துள்ளான்.இங்கு மனித கையாடலோ நினைத்தவுடன் பெரும்பான்மை பலத்துடன் மாற்றுவதற்கோ இடமில்லை.எனினும் அது சில விசயங்களில் நெகிழ்ந்துகொடுக்கும் தன்மையுடன் பகுத்தரிவுபூர்வமாக காணப்படுகிறது. 

மனிதன் வெறும் சடப்பொருலன்று,அவனின் புரத்தேவைகள் பூர்த்தியாக்கப்பட்டிருப்பது போல் அவனது ஆத்மாவின் தேவைகளும் பூர்த்தியாக்கப்பட வேண்டும்.

இதனைப் புறக்கணித்துவிட்டு எழுந்த சிந்தனையால் இன்று  நிலைத்துநிற்க முடியாது போய்விட்டது.
 அடிப்படையில் மனிதுள்ளத்தில் இறைவன் பற்றிய எண்ணம் இருந்து கொண்டே இருக்கும்.இறைவனைப்பற்றிய ஏதாவதொரு அமைப்பில் காணப்படாத சமூகமொன்று வரலாற்றில் காணவே முடியாது.இதற்கு புறம்பான(மதச்சார்பின்மை) கொள்கையுடையவர்கள் தற்போது இதற்கே மீண்டுள்ளனர்.எங்கு  இந்த மதச்சார்பின்மை   துளிர்விட்டு வளர்சியுற்றதோ அங்கேயே அது சாத்தியப்படாது என்று புரிந்து கொண்டு இன,மத,கலாச்சார பாரம்பரியங்களுக்கு மெல்ல மெல்ல மனித இனம் நகர்கிறது.எனவே இந்த மதச்சார்பின்மை என்ற எண்ணக்கரு தோல்வி கண்டு வருவதை நாம் கண்கூடாக காண்கிறோம்.

  இக்கருத்தியல் உலகில் சமாதானம் சகவாழ்வு சமத்துவம் போன்றவற்றை ஏற்படுத்த தவறிவிட்டது.மேலை நாடுகளின் மேலாதிக்க உணர்வு,கருப்பு வெள்ளையன் என்ற நிறவெறி,பிறரை ஒழித்துக்கட்டும் வக்கிர புத்தி பலமற்றவனின் மீது அதிகார வெறியாட்டம் போன்றன மிகக்கொடுரமான நோய்களாகும்.

      உலகில் சமாதனம் சகவாழ்வு சமத்துவம் போன்றவற்றை ஏற்படுத்த ஒரு வெற்றிகரமான வழி உள்ளது அது தான் இஸ்லாம்.பதினான்கு நூற்றாண்டுகள் தாண்டியும் அது எதுவித மாற்றமும் இன்றி அப்படியே உயிரோட்டமாக வாழ்ந்துகொண்டிருக்கிறது.அந்த நெறியின் பால் முழு மனித சமூகமும் மீள வேண்டும்.அப்போதுதான் உண்மையான சமாதனம் சகவாழ்வு சமத்துவம் ஏற்படும்.

      இஸ்லாம் காட்டிய உண்மைப்பாதையில் மனித இனம் செழித்து வளர்ந்து கிழக்கேயும் மேற்கையும் ஓர் உயிர்துடிப்புமிக்க ஆன்மீகநெறி அறிவியக்கம் செயல்படதுவங்கியுள்ளது.தீய சக்திகாளாலும் வக்கிர உணர்வாலும் கட்டவிழ்த்துவிட்ட பொய்மைகலாலும் அதன் முன்னேற்றத்தை தடுத்துநிறுத்த முடியாது.இனியும் முடியாது.

    அதே வேளை,இஸ்லாமிய சிந்தனையில் கொள்கையில் வார்த்தேடுக்கப்பட்டவர்கள்,ஷிர்க்கில் மூழ்கி தர்காக்களில் தஞ்சமடைவதால்,இதுதான் இஸ்லாமிய பாரம்பரியம் என்று நினைகிறார்கள்.சில முஸ்லிம்களின் நடவடிக்கை இஸ்லாம் ஆகிவிடாது.இஸ்லாம் என்பது  குரானும் சுன்னாவுமாகும். இதுவரை அதில் எந்தவிதமான மாற்றமும் நிகழவில்லை அதற்கான அவசியமும் இல்லை.இஸ்லாமே ஈருலக  வெற்றிக்கும் விமொசனத்திகும் ஒரே வழி.வேறு எந்த நம்பிக்கைகளுக்கும் மனிதனை இருளிலிருந்து விடுவிக்க முடியாது.



இந்த ஆக்கத்தை எழுதியவர் 
எம்.எ.ஹபீழ்
பேராதனை பல்கலைக்கழகம் 
இலங்கை.