Wednesday, December 28, 2011

இஸ்லாமும் அடிமைத்தனமும்.


மனிதர்கள் அனைவரும் ஒரே மூலத்திலிருந்து பிறந்தவர்கள். நீங்கள் ஒருவரிலிருந்து மற்றொருவராகத் தோன்றியவர்களே. என்று மனிதர்களின் பரிபூரண சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுப்பப்பட்ட இஸ்லாம் அடிமைத்தனத்தைத் தனது சமூக வாழ்க்கையின் ஒர் அம்சமாகக் கொள்ளுமா?

ஆதத்தின் மக்களை நாம் உண்மையிலேயே கண்ணியப்படுத்தியுள்ளோம் என்று கூறும் குர்ஆனே மனித சமுதாயத்தில் ஒரு கூட்டதார்களை வீட்டுத் தட்டு முட்டு சாதனங்களைப் போல் விற்கப்பட்டுக் கொண்டும், வாங்கப்பட்டுக் கொண்டும் இருக்கும்படியான ஏற்பாடுகளைச் செய்யுமா?

'எவர்; எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ.. அவர்.. அவர்களுடைய பழுவான சுமைகளையும் அவர்கள் மீதிருந்த விலங்குகளையும் (கடினமான கட்டளைகளையும் இறக்கிவிடுவார்' (7:157) என்றே குர்ஆன் கூறுகிறது.

எனில் அடிமைகளை வைத்துக் கொள்ளவும், நிர்வகிக்கவும் சில விதிமுறைகளை ஏற்படுத்தியது என்றால் அது காலச்சூழ்நிலையைக் கருத்தில் கொண்ட ஒரு தற்காலிக விதிமுறையாகும்.

முந்தைய கால கட்டங்களில் போருக்குப் பின் வெற்றி பெற்ற நாட தோல்வியடைந்த நாடுகளின் போர் வீரர்களையும், பெண்களையும், குழந்தைகளையும் அடிமைகளாக உபயோகப்படுத்துவதையும், விற்கப்படுவதையும் வழக்கமாக கொண்டிருந்தது. இந்நிலை திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்ட கால கட்டத்தில் இறக்கியருளிய நாட்டிலும், அதன் சுற்றுச்சூழலிலும் இருந்து வந்தது. மேல் நாடுகளில் 18-ம் நூற்றாண்டின் கடைசி வரை கூட இருந்து வந்தது. அதுவும் யுத்தக் களத்தில தோல்வியடைந்தவர்களையல்ல. யுத்தம் என்றால் என்னவென்றே தெரியாத நிரபராதிகளையாகும்.

அமெரிக்காவில் மேற்கிந்தியர் எனப்படும் கருப்பு இனமக்களை பிடித்து விற்பனை செய்யும் வழக்கம். இந்த 20-ம் நூற்றாண்டு வரை இருந்தது. மேனாட்டவர் ஆப்ரிக்காவின் மத்திய பகுதியில் வாழ்ந்த கருப்பு இனமக்களை மிருகத்தனமாக வேட்டையாடிப் பிடித்து அடிமைகளாக விற்பதற்காக கப்பலேற்ற உபயோகிக்கப்பட்ட கடற்கரைக்கு அடிமைக்கரை என்று பெயரே வைக்கப்பட்டது. இப்படி ஒரு நூற்றாண்டுக்குள் (1680-1786) பிரிட்டானிய குடியேற்ற நாடுகளுக்கு அடிமைகளாக அனுப்பப்பட்ட கருப்பர் தொகை இரண்டு கோடி என்று அவர்களின் அறிக்கையே கூறுகிறது.1790-ம் ஆண்டில் மட்டும் 75,000 அப்பாவி மக்கள் அடிமைகளாக்கப்பட்டு பிரிட்டானிய குடியேற்ற நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர். அமெரிக்காவில் ஆபிரஹாம் லிங்கன்; காலக்கட்டம் வரை கூட அடிமைத்தனம் இருந்து வந்தது என்று அலெக்ஸ்ஹெய்ல் தன்னுடைய வுhந சுழழவள என்றும் நூலில் கூறுகிறார்.

அடிமைகள் (சூத்திரர்) கடவுளின் பாதத்திலிருந்து பிறந்தவர்கள் அவர்கள் பிறப்பாலே இழிந்தவர்கள். பிராமணர், ஷத்திரியர், வைஷியர் இட்டப் பணியை ஏற்றுப் நடப்பதே அவர்கள் தலைவிதியாகையால் அதனை அவர்கள் எதிர்க்கவோ, மாற்றவோ முடியாது என்று சாதி இந்துக்கள் நம்பி நடத்தினர். அவர்களுக்கு கடவுள் இட்ட ஒரே வழி மரணத்திற்கு பின் தன் ஆன்மாக்கள் மறுபிறவியில் ஒரு தலைசிறந்த நிலையினை அடையலாம் என்ற நம்பிக்கையில் தன் இழிநிலையையும், தண்டனையையும் மிகப் பொறுமையுடன் சகித்து கொண்டு வாழ வேண்டாம் என்று போதிக்கப்பட்ட, அவர்களை அடக்கி ஆண்டவர்கள் மிக இழிந்த நிலைக்கு அவர்களை தாழ்தியதோடு நில்லாது, அடிமைகள் தம்மை இவ்இழிநிலைக்கும், துன்பத்திற்கும் ஆளாக்கிய அநீதியான சமூக அமைப்புக்கு எதிராக கிளர்ந்தெழும் எண்ணத்தைக் கூட அகற்றி வைத்தனர்.

ரோமிலும், கிரேக்கத்திலும், பரசீகத்திலும், பண்டைய இந்தியாவிலும் அடிமைகளை எவ்வாறு எவ்வளவு குரூரமாக நடத்தினார்கள் என்பதை இன்று நினைத்தாலும் வேதனை பொங்கும். நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை எடுத்து போதித்த அரபு நாட்டின் நிலையோ அடிமைத்தனம் பேணுவதில் எந்நாட்டவர்களுக்கும் சளைத்தவர்களாக இருந்ததில்லை. அச்சூழ்நிலையில் மனித குலத்தின் அருட்கொடையாக வந்த முஹம்மது (ஸல்) கொண்டு வந்த மார்க்கம் அடிமைத்தனத்தை நிறுத்த பல்வேறு வழிமுறைகளை கையாண்டது.

கணவன், மனைவி, குழந்தைகள் உட்பட ஒட்டு மொத்த குடும்பத்தையுமே அடிமைப்படுத்தி அவர்களைக் கொண்டு கடினமான வேலைகள் வாங்கியும், அவர்களுடைய சம்பாத்தியத்தை அனுபவிக்கவும் செய்திருந்த ஒரு சமூகமாயிருந்தது அரபு சமூகம். அத்தகைய சமூகத்தில் இஸ்லாம் அடிமைத்தனத்தை உடனே தடை செய்யாமல் படிப்படியாக குறைத்து முடிவு நிலைக்கு கொண்டு வந்தது. நேரடியாக தீடிரென்று அடிமைத்தனத்தை தடை செய்யுமாயின் அது சுய சமூகத்தில்; மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதோடு அல்லாமல், பிற சமூகத்தால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்பதாலே அடிமைத்தனத்தை திடிரென்ற தடை செய்யாமல் நிர்பந்தத்தின் அடிப்படையில் அடிமைகளை வைத்துக்கொள்ள அனுமதித்தது.


 அடிமைகளைப் பேணுதல்



நிர்பந்தத்தின் அடிப்படையில் அடிமைகளை வைத்துக்கொள்ள அனுமதித்த இஸ்லாம் அவர்களை எவ்வாறு பேண வேண்டும் என்று சில வரைமுறைகளை வகுத்துத் தந்தது.

'தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினகளக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும் (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும் உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள் நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக வீண் பெருமையுடையோர்களாக இருப்பவர்களை நேசிப்பதில்லை (4:36)

'உங்கள் அடிமைகள் உங்கள் சகோதரர்களே. எனவே யார் தனது ஆதிக்கத்தில் ஒரு சகோதரரைப் பெற்றிருக்கினறரோ அவர் தாம் உண்பது போலவும் உடுப்பது போலவும் தமது சகோதரருக்கும் உண்ணவும் உடுக்கவும் கொடுக்க வேண்டும். அவர்களின் சக்திக்கு அப்பாற்பட்ட எதையும் செய்யுமாறு அவர்களைக் கேட்க வேண்டாம். அப்படியான எதையும் செய்யம் படி கேட்டால் அதில் அவர்களுக்கு உதவிபுரியுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் உபதேசித்துள்ளார் (புகாரி)

உங்களில் எவரும்'இவன் எனது அடிமை', 'இவள் எனது அடிமைப்பெண்' என்று சொல்லக்கூடாது பதில் 'இவர் எனது ஆள்' என்றும் 'இவள் எனது பணிப்பெண்' என்றும் சொல்ல வேண்டும் என்றும் நபி (ஸல்) அவர்கள் போதித்துள்ளார்கள். இன்னும்

'யார் தனது அடிமையைக் கொல்கிறாரோ அவரை நாம் கொல்வோம். அவரது மூக்கை அங்கவீனப்படுத்துபவரின் மூக்கை நாம் அறுப்போம், அடிமைக்கு விதையடிப்பவரை அதற்குப்பதில் நாம் விதையடிக்கச் செய்வோம்' என்றும் எச்சரிக்கை செய்துள்ளார்கள். (புகாரி முஸ்லிம்)

அடிமைகளுக்கு விதையடித்து பாலியல் உணர்வுகளை நசித்து மிருகங்களைப் போல் நடத்திவந்த காலச் சூழ்நிலையில் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து விவாக பந்தம் ஏற்படுத்திக் கொடுக்கக் கூட இஸ்லாம் கட்டளையிட்டது.

உங்களில் வாழ்க்கைத் துணை இல்லா (ஆடவர், பெண்டி)ருக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையில்லா) ஸாலிஹான உங்கள் (ஆண் பெண்) அடிமைகளுக்கும் விவாகம் செய்து வையுங்கள் (24:32)

'தங்கள் கற்பைப் பேணிக் கொள்ள விரும்பும் உங்கள் அடிமைப் பெண்களை அற்பமான உலக வாழ்க்கை வசதிகளைத் தேடியவர்களாக விபச்சாரத்திற்கு (அவர்களை) நிர்பந்திக்காதீர்கள்' (24:33) என்றும் கட்டளையிட்டது.

இன்னும் அடிமைகள் தங்கள் உணர்வுகளை தவறான வழிகளில் தணித்துக் கொள்ளும் வகையில் சென்றடாதிருக்க அவர்களின் உணர்வுகளை மதித்து விவாகம் செய்து வையுங்கள். அல்லது நீங்களே திருமணம் செய்து கொள்ளுங்கள். (பார்க்க திருக்குர்ஆன் 4:25) என்றும் போதிக்கப்பட்டது.

இணைவைக்கும் ஒரு பெண் உங்களை கவரக்கூடியவர்களாக இருந்த போதிலும் அவளைவிட மூஃமினான ஓர் அடிமைப்பெண் நிச்சயமாக மேலானவன் ஆவாள் (2:221) என்று கூறி அடிமைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதோடு சம அந்தஸ்தையும் வழங்கியது.

அடிமைகளை கண்ணியத்தோடு பேணினாலும், அடிமைத்தனத்தை முற்றாக தடை செய்யாமல் போர்க்கைதிகளை மேலும் மேலும் அடிமைகளாக்கி வைத்துக் கொண்டது ஏனென்றால்: தூதரின் கால கட்டத்திலும் சரி பின் சில கால கட்டங்களிலும் சரி யுத்தக் கைதிகளை அடிமைகளாக்கி வைத்துக் கொண்டதென்றால் அது எதிரி நாட்டார்கள் நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு ஆகும். இரு நாடுகளுக்கு மத்தியில் போர் மூண்டால் பிடிபட்ட யுத்தக் கைதிகளை அடிமைகளாக்கி வைப்பதும், சித்திரவதை செய்து கொல்வதுமான பழக்கம் பழங்காலந்தொட்டு நிலவி வந்தது.

UNIVERSAL HISTORY OF THE WORLD  என்னும் வரலாற்று கலைக்களஞ்சியத்தில் (PAGE 2273) பின்வரும் நிகழ்ச்சி கூறப்பட்டுள்ளது. '599-ம் ஆண்டில் ரோம சக்ரவர்த்தி ஆண்டில் மாரியஸ் போர்களில் தன் படைகள் கைப்பற்றிய இலட்சக்கணக்கான கைதிகளில் ஒரு சிலரைக் கூட விடுதலை செய்ய மறுத்துவிட்டான். பதிலாக அவர்கள் அனைவரையும் வாளுக்கு இறையாக்கினான். இவ்வாறு செய்யக் காரணம் அவர்களை வாழ விடுவதை விடக் கொன்றுவிடுவதே சிக்கனமானது என்ற அவன் கருதியதாகும்'.

யுத்தக் கைதிகளை கூட்டதோடு கொன்று குவிக்கும் பழக்கம் பிற்காலத்திலும் தாராளமாக இருந்தே வந்தது. தேசத் துரோகிகள் என்றும் எதிரிநாட்டு உளவாளிகள் என்றும், எதிரி நாட்டு கைதிகள் என்றும் கூறி கொன்று குவித்த சம்பவங்கள் ஹிட்லரின் ஜெர்மனியிலும், முசோலினியின் இத்தாலியிலும் மட்டுமல்ல, கம்யூனிஸ்டுகளின் சொர்க்க பூமியாக இருந்த ரஷ்யாவிலும். அண்மையிலே கன்பூசியாவிலும் நடந்ததுண்டு. இத்தகைய கொடூரமான மிருகச் செயலை இஸ்லாம் ஒரு போதும் அங்கீகரிக்கவோ அனுமதிக்கவோ செய்ததில்லை.

(மூஃமீன்களே! வலிந்து உங்களுடன் போரிடவரும்) நிராகரிப்பவர்களை நீங்கள் (போரில்) சந்திப்பீர்களாயின், அவர்களுடைய கழுத்துக்களை வெட்டுங்கள். கடும் போர் செய்து (நீங்கள் அவர்களை வென்று) விட்டால் (அவர்களுடைய) கட்டுக்களை பலப்படுத்தி விடுங்கள். அதன் பிறகு யாதொரு ஈடுபெற்றோ அல்லது (ஈடுபெறாது) உபகாரமாகவோ அவர்களை விட்டு விடுங்கள். (47:4) என்று இறைவன் கூறுகிறான்.

இவ் இறைவசனத்தில் எதிரிகளை போர்க்களத்தில் வைத்து நேருக்கு நேர் போரிடும் போது மட்டும் வெட்டுங்கள் என்று கட்டளையிடுகிறது. போருக்குப்பின் போர்வீரர்களை கைதிகளாக பிடித்திருந்தால் அவர்களுக்கு பதிலாக ஈட்டுத் தொகை பெற்றுக் கொண்டோ அல்லது உபகாரமாகவோ விடுவித்து விடுங்கள் என்று கூறுகிறது.

நபித்தோழர்களில் பிரசித்திப்பெற்ற இப்னு உமர் (ரலி) குர்ஆன் வியாக்யானிகளான ஹஸன் பஸரி, ஹம்மாத் இப்னு அபீசுலைமான் போன்றோர்கள் இவ்வசனத்தின் அடிப்படையில் போர்க்கைதிகளை கொல்வது கூடாது என்று ஃபத்வா வழங்கியுள்ளார்கள். அப்படியாயின் போர்க்கைதிகளை என்ன செய்ய வேண்டும். ஆயுட்காலம் முழுவதுமோ அல்லது சொற்ப காலமோ சிறையிலடைத்து வைக்க வேண்டும் என்றால் அத்தகைய சிறைச்சாலை வசதி ஏற்பாடுகள் எதுவும் அக்காலக்கட்டத்தில் இருந்ததில்லை. எனவே போர்க்கைதிகளை போர் வீரர்களுக்கு பங்கிட்ட வழங்கிவரும் வழக்கத்தை கையாண்டது. அடிமைகளைப் பெற்றுக் கொண்டவர்கள் தங்கள் வேலைகளை வாங்கிக் கொண்டு அவர்களை பராமரித்து வந்தனர். இவர்களே அடிமைகளாக கருதப்பட்டு வந்தனர். இத்தகைய அடிமைத்தனத்தை நிர்பந்தத்தின் அடிப்படையில் சகித்துக் கொள்ள வேண்டியதாயிற்று.

முஸ்லிம்களுக்கும், எதிரிகளுக்குமிடையில் பலபோர்கள் நடைபெற்றன. இப்போர்களில் கைதிகளாக்கப்பட்ட பல முஸ்லிம்கள் எதிரிகளால் அடிமைகளாக்கப்பட்டனர். அவர்களின் சுதந்திரம் பாதிக்கப்பட்டது. அவர்கள் அடக்கி ஒடுக்கப்பட்டதோடு அக்காலத்தில் அடிமைகள் அனுபவித்த எல்லாவித இன்னல்களையும், அவர்களும் அனுபவிக்க நேர்ந்தது. பெண்மணிகளின் கண்ணியம் மிக மோசமாக பங்கப்படுத்தப்பட்டது. தந்தையும் மகனும், நண்பர்களுமாக பல ஆண்கள் ஒரே பெண்ணை பகிர்ந்து கொண்டனர். கைப்பற்றப் பட்ட குழந்தைகள் வெறுக்கத்தக்க இழிவான அடிமை நிலையில் வளர்க்கப்பட்டனர். இத்தகைய நிலைமைகள் அக்கால வாழ்க்கையில் நிலைத்துவிட்டதால் இஸ்லாத்தின் கைக்குள் வந்த எல்லா கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்வது சாத்தியமாகவில்லை. கைது செய்யப்பட்ட முஸ்லிம்களும் அவர்களின் உற்றார் உறவினர்களும், பகைவர்களால் அடிமைகளாக்கப்பட்டு மிகக் கொடிய சித்திரவதைக்குள்ளும் மானபங்கப்படுதத்பபட்டுமிருந்தனர். இந்நிலையில் முஸ்லிம்கள் கைது செய்தவர்களை விடுதலை செய்வது, அடிமைப்பட்ட முஸ்லிம்களுக்குச் செய்யப்படும் கொடுமைகளுக்கு உற்சாக மூட்டவதாகவும் அமைந்திருக்கும். எதிரி நாட்டு போர்க்கைதிகளை அடிமைப்படுத்தாமல் விட்டுவிட்டாலோ அவர்கள் திரும்பத் திரும்ப போருக்கு வர தயங்க மாட்டார்கள். நாம் வெற்றி பெற்றால் அவர்களை அடிமைப்படுத்தி அனுபவிக்கவும், கொடுமைப் படுத்தவும் செய்யலாம். நாம் தோற்றுவிட்டாலோ நம்மை முஸ்லிம்கள் கைது செய்யவம் மாட்டார்கள் அடிமைப்படுததவும் மாட்டார்கள் என்ற கருதி திரும்பத் திரும்ப போருக்கு வர தயங்க மாட்டார்கள். எனவே மேலும் மேலும் போரைத் தவிர்க்க இஸ்லாம் மேற்கொள்ளத்தக்கதாக இருந்த ஒரே சிறந்த வழி தனது கைதிகளையும் அடிமைகளாக நடத்துவதாகும்.

பகைவர்கள் தாம் யுத்தங்களிற் சிறைப்படுத்தியவர்களைத் தொடர்ந்து பிடிவாதமாக அடிமையாக்கி வர இஸ்லாம் மட்டும் தனது போர்க்கைதிகளை அடிமைகளாக்குவதைச் தன்னிச்சையாக ஒழித்துவிட இயலாது. எனவே இதற்கு மாற்றுவழி இல்லாதவரையும். உலகம் முழுவதும் உள்ள மக்கள் யுத்தக் கைதிகளை அடிமைகளாகவன்றி வேறு விதத்தில் நடத்துவதற்கான ஓர் அடிப்படைப் பற்றி இணக்கம் காணும் வரை இஸ்லாம் அடிமைத்தனத்தை சகித்துக. கொள்ள வேண்டியதாயிற்று.

அரசு நடத்தும் போர் அல்லாமல் எந்த ஒரு தனிமனிதனும் மற்றொரு தனிமனிதனை அடிமையாக்க முடியாது என்றும் விளங்கிக் கொள்ள வேண்டும்.


 அடிமை விடுதலை


இஸ்லாம் தன் வசமிருந்த எல்ல வழிவகைகளையும் பயன்படுத்தி அடிமைத்தனத்தை ஒழிக்க முயற்சி செய்ததேயன்றி கொள்கையளவில் கூட அதனை அங்கீகரிக்கவில்லை.

'பின்னர் ஓர் உதவியாக அவர்களை விடுதலை செய்து விடுங்கள் அல்லது யுத்தம் முடியும் வரை அவர்கள் பணங்கொடுத்து தம் விடுதலையைப் பெற்றுக் கொள்ள அனுமதியுங்கள் (47:4) என்று குர்ஆன் உபதேசிக்கிறது. இஸ்லாத்திற்காக நடந்த முதல் யுத்தமான பத்ர் யுத்தத்தில் கைது செய்யப்பட்ட சில கைதிகளை முஸ்லிம்களை மீட்பதற்குப் பதிலாக விடுதலை செய்தனர். அத்துடன் வேறு சிலரை கருணையின் நிமித்தம் விடுதலை செய்தனர்.

அடிமைகளைப் படிப்படியாக ஒழிக்க திட்டமிட்ட இஸ்லாம் முதலாவதாக எல்லோருமே அல்லாஹ்வின் அடிமைகள் என்ற உணர்வை மக்களிடையே பரப்பி, உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பேதம் இறைவனை வழிப்படுவதில் எள்ள ஏற்றத்தாழ்வின் மூலமமேயன்றி வேறு எதிலும் கணிக்க முடியாது. இஸ்லாமிய வாழ்க்கை முறையை நம்பி அதை ஏற்று வாழும் யாவரும் சகோதரர்கள் என்ற எண்ணத்தை வளர்த்தது. மக்கள் மனங்களில் அன்பு, ஆதரவு அரவணைப்பு, ஆறுதல் கூறல் போன்ற அருட்குணங்களை வளர்த்து அப்போதிருந்த அடிமைகளை நடுத்தெருவில் தவிக்க விட்டுவிடாமல் அவர்களை அன்போடும், பண்போடும் நடத்தச் செய்தது. அடிமைகளை விடுவித்தல் இதை அல்லாஹ்வுக்கு மிக்க விருப்பமான ஒரு செயலாக அறிமுகம் செய்து இறைநேசர் பலரும் தம்மிடமிருந்த அடிமைகளை விடுதலை செய்ய வைத்தது.

'(நன்மை தீமையாகிய) இருபாதைகளை நாம் அவனுக்குக் காண்பித்தோம். ஆயினும் அவன் கணவாயைக் கடக்கவில்லை.

(நபியே!) கணவாய் என்பது என்ன என்பதை உமக்கு எது அறிவிக்கும் (அது) ஒர் அடிமையை விடுவித்தல்...' என்று குர்ஆன் (90:10,14) போதித்தது.

ஒரு சமயம் நபித்தோழர் அபூதர் (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். 'அடிமைகளை விடுவித்தலில் மிகச் சிறப்பானது எது? என்ற அதற்கு நபி (ஸல்) அவர்கள், எஜமானனின் மிகவும் விலையுர்ந்த அடிமைகளை விடுவித்தலாகும்' என்றார்கள். (புகாரி, முஸ்லிம்)

பல்வேறு குற்றங்களுக்கும், பாவச் செயல்களுக்கும் தண்டனையாக அடிமைகளை விடுதலை செய்ய வேண்டும் என்னும் சட்டத்தையும் கூறி அடிமைகளை விடுவிக்க ஏற்பாடுகளை செய்தது. உதாரணமாக

1. ஒரு முஸ்லிம் தன் மனைவியுடன் பாலுறவு கொள்வதன் மூலம் தன் நோன்பை முறிப்பாராயின் இச்செயலுக்கு தண்டனையாக ஒரு அடிமையை விடுதலை செய்ய வேண்டும்.

2. அவ்வாறே ஹஜ் கடமையை நிறைவேற்றும் போது மனைவியுடன் பாலுறவு கொண்டாலும் தண்டனையாக ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்.

3. ஒரு முஸ்லிம் தன் மனைவித் தன் தாய் போன்றிருக்கிறாள் என்ற ஒப்பிட்டுக் கூறினால் இது ஒரு தீயப் பேச்சாகக் கருதப்படுகிறது. இக்குற்றத்திற்கு பரிகாரமாக ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும் என்றது.

-இத்தகைய காரணங்கள் எதுவும் இல்லாத போதும் ஓர் அடிமையை உரிமை விடுவத அல்லாஹ்வின் அன்பைப் பெறுதலுக்குரிய மிகச் சிறந்ததோர் செயலாகும் என்றும். உரிமை விடப்படும் ஓர் அடிமையின் ஒவ்வொரு உறுப்பும் அவ்வடிமையை உரிமை விட்டவனை நரக நெருப்பிலிருந்து காப்பாற்ற உதவும் என்றும் இறைதூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்ட ஆரம்ப கால முஸ்லிம்கள், தங்களிடமிருந்த அடிமைகளை மட்டுமல்ல இயன்றளவு அடிமைகளை விலைகொடுத்து வாங்கியும் உரிமையிட்டடார்கள். இறைதூதர் (ஸல்) அவர்கள் 63 அடிமைகளை விடுதலை செய்துள்ளதாகவும், அவர்களின் அருமை மனைவி ஆயிஷா (ரலி) அவர்கள் 67 அடிமைகளை விடுதலை செய்ததாகவும் சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன.

அடிமைத்தளையிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ள பொருளோ, பணமோ தேவைப்படும் அடிமைகளுக்கு ஜகாத் நிதியிலிருந்து கொடுத்தும் அவர்களை விடுதலை செய்ய உதவ வேண்டும் என்றும் குர்ஆன் கூறுகிறது (பார்க்க குர்ஆன் 9:60)

இஸ்லாம் அடிமைத்தனத்தை ஆதரிக்கவில்லை. அடிமைத்தளையை அறுத்தெரியவும் மனிதனுடைய சமத்துவத்தைக் காக்கவும் அக்கரை எடுத்துள்ளது.



ஆக்கம் எழுதியவர் - அபூ ஆஸியா






Friday, December 23, 2011

இஸ்லாம் - வாளால் வளர்ந்த மதம் ???





இஸ்லாம் - மார்க்கத்தில் நிர்பந்தமே இல்லை. (2:256) விரும்பினோர் ஏற்கட்டும். விரும்பாதோர் நிராகரிக்கட்டும் (18:29) என்று இறைவன் கூறுகின்றான்.

இஸ்லாத்தை மாற்றார்களிடம் எடுத்துச் சொல்வதில் கூட முஸ்லிம்கள் பலம் பிரயோகிக்கக் கூடாதென எச்சரிக்கப்பட்டுள்ளார்கள். அத்துடன் எவ்வளவு அiதியான வழிகளைப் பயன்படுத்திட முடியுமோ அவ்வளவு அiதியான வழிகளை மேற்கெர்ளள வேண்டும் என்றும் குர்ஆன் கூறுகிறது.

நீர் நளினமாகவும், அழகான நல்லுபதேசத்தைக் கொண்டுமே உம் இறைவனின் வழியின்பால் அழைப்பீராக! அன்றி, அவர்களுடன் (தர்க்கிக்க நேரிட்டல்) நீர் (கண்ணியமான) அழகான முறையில் தர்க்கம் செய்வீராக! அவனுடைய வழியிலிருந்து தவறியவர்கள் எவர்கள் என்பதை நிச்சயமாக உம் இறைவன் நன்கறிவான். நேரான வழியிலிப்போர் யார் என்பதையும் அவன் தான் நன்கறிவான். (16:125)

(விசுவாசிகளே!) நீங்கள் வேதமுடையோர்களுடன் (தர்க்கிக்க நேரிட்டால்) அழகான முறையிலன்றி (அவர்களுடன்) தர்க்கிக்க வேண்டாம். ஆயினும் அவர்களில் எவரேனும் வரம்பு மீறிவிட்டால் (அதற்கு தக்கவாறு நீங்கள் பதில் கூறுவது உங்கள் மீது குற்றமாகாது.

அவர்களுடன் தர்க்கித்தால்) எங்களுக்கு இறக்கப்பட்ட (வேதத்) தையும் உங்களுக்கு இறக்கப்பட்ட (வேதத்) தையும் நாங்கள் விசுவாசிக்கின்றோம். எங்கள் ஆண்டவனும் உங்கள் ஆண்டவனும் ஒருவனே! நாங்கள் அவனுக்குத்தான் முற்றிலும் வழிபட்டு நடக்கின்றோம் என்று கூறுவீர்களாக (29:46) என்று குர்ஆன் உபதேசிக்கின்றது.

இஸ்லாத்தை பரப்புவதில் அமைதிக்கு இவ்வளவு முக்கியத்துவமும், முதன்மையும் தருகின்ற போது அமைதியை இவ்வளவு தூரம் வலியுறுத்திடும் போது முஹம்மது (ஸல்) அவர்கள் ஏன். சில போர்களிலே ஈடுபட்டார்கள் என கேட்கலாம்.

இறைவனின் தூதை இந்த உலகிற்கு எடுத்துச் சொல்லிட வேண்டும் என்னும் பொறுப்பை நபி(ஸல்) அவர்கள் ஏற்றுக் கொண்டதும், மக்கள் கூட்டத்தை அழைத்து தன்னிடம் சொல்லப்பட்ட தூதை எடுத்துச் சொன்னார்கள்.

நபி(ஸல்) அவர்கள் எடுத்து வைத்த உண்மையை, அமைதியான அறிவுப்பூர்வமான வாதத்தை ஏற்று மக்கள் சிறுகசிறுக இஸ்லாத்தின் பால் இணைந்தனர். மதத்தின் பெயரால் மக்களை ஏய்த்து பிழைப்பு, நடத்தியவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் போதித்த இஸ்லாம் எதிராகப்பட்டது. அதனால் எதிர்க்க முற்பட்டனர். எதிர்ப்பின் உச்சத்தில் முஹம்மது (ஸல்) அவர்களை கொலை செய்வது என முடிவ செய்தனர். இதனையறிந்த நப(ஸல்) அவர்கள் தங்கள் தாயகம் துறந்து யாத்ரிப் (மதீனா) சென்று குடியேறினார்கள். அங்குள்ளோர் அநேகர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டபடியால் அங்கே ஒரு இஸ்லாமிய அரசாங்கம் அமைக்கப்பட்ட ஆட்சி செய்து வந்தார்கள்.

மதீனாவில் அமைதி நிலவினாலும், மக்காவின் எதிரிகள் ஒயவில்லை. முஸ்லிம்கள் மீது அவர்கள் கொண்டிருந்த வெறுப்பு வளர்ந்தது. இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் ஒழித்திட அவர்கள் திட்டங்களை தீட்டிய வண்ணமிருந்தனர். முஸ்லிம்களுக்கு முடிந்தவரை தொல்லை தருவதில் முனைப்புக் காட்டினார்கள். இறுதியில் முஸ்லிம்களை அழித்தொழிக்க படைதிரட்டி போர் தொடுக்க வந்தனர். ஒட்டுமொத்தமாக அழிந்துப் போவதை தவிர வேறு வழியில்லை என்ற நிலை வந்தபோது முஸ்லிம்கள் தங்களை தற்காத்துக் கொள்ள அவர்களை எதிர்த்து போர்புரிய வேண்டி வந்தது. உதாரணத்திற்கு நபி(ஸல்) அவர்களும், முஸ்லிம்களும் சந்தித்த முதல் போரை எடுத்துக் கொள்ளுங்கள். முதல் போர் நடந்த பத்ரு என்னும் இடமானது முஸ்லிம்கள் வாழும் மதீனாவிலிருந்து 80 மைல் தொலைவிலும். எதிரிகள் வாழ்ந்த மக்காவிலிருந்து 200 மைல் தொலைவிலும் உள்ளது. இரண்டாவது போரான உஹது போர் நடந்த உஹது என்னும் இடமானது மதீனாவிலிருந்து 5 மைல் தொலைவிலும், மக்காவிலிருந்து 300 மைல் தொலைவிலும் உள்ளது. இதிலிருந்து முதலில் வலிய போருக்கு வந்தத யாரென விளங்கியிருக்கும். முஸ்லிம்களை கொன்றொழிக்க எதிரிகள் நூற்றுக்கணக்கான மைல்களுக்கப்பாலிலிருந்து பெரும்படையுடன் வரும் போது அவர்களை எதிர்கொள்ள மதீனாவை விட்டு வெளிவந்து எதிர்கொண்டார்கள். இதுபோலவே பல போர்களும் தற்காப்புக்காக நடத்தப்பட்ட போர்களேயாகும்.

எனினும் ஒரு சில போர்கள் வலிய செய்தவைகளும் உண்டு. ஏனென்றால் இஸ்லாம் முஸ்லிம்களை நன்மையை ஏவவும், தீமையை தடுக்கவும், அமைதியை நிலைநாட்டவும், அமுக்ககப்பட்டோருக்கு உதவி செய்திடவம், அடிமைப்பட்டு கிடப்பவர்களை விடுவிக்கவும் பணித்துள்ளது. அவ்வித்தில் ஒரு நாட்டு மக்கள் அல்லது ஒரு சமூகத்தவர்களுக்கு அந்த அரசு அநீதி இழைக்குமானால் அவர்களை காப்பதற்காக அந்நாட்டின் மீது போர் தொடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

'பலஹீனமாக ஆண்களையும், பெண்களையும், சிறு குழந்தைகளையும் பாதுகாப்பதற்காக, அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் போர் செய்யாதிருக்க காரணம் யாது? (அவர்களோ) 'எங்கள் இறைவனே அக்கிரமக்காரர்கள் இருக்கும் இவ்வூரைவிட்டு எங்களை வெளிப்படுத்துவாயாக. எங்களுக்காக உன்னிடமிருந்து (தக்க) ஒரு பாதுகாவலனை அளித்தருள்வாயாக. இன்னும் எங்களுக்காக உன்னிடமிருந்து ஒர் உதவியாளனையும் அளித்தருள்வாயாக என்று பிரார்த்தனை செய்கிறார்கள் (4:75)

என்று இறைவன் கூறியதால் அமைதியையும். சமூக நீதியையும் நோக்கமாகக் கொண்டு அத்தகைய போர்களைச் செய்தார்கள். முஹம்மது (ஸல்) அவர்கள் செய்த போர்கள் எதுவும் அரசியல், பொருளாதார ஆதாயத்திற்காகவோ, தேசிய, இன மொழி உணர்வுகளை காட்டக் கூடியதாகவே இருக்கவில்லை.

ஆனால் இஸ்லாம் தந்த உற்சாகத்ததால் முஸ்லிம்கள் தங்களால் முடிந்த வரை வாளால் மதம் பரப்பினார்கள். முஸ்லிம் மதவெறிக் கூட்டம் உருவிய வாளை ஏந்திய வண்ணம் அல்லாஹ் அக்பர் என்று முழுங்கியவண்ணம் கண்ணில் கண்டவர்களையெல்லாம் லாஇலாஹ இல்லல்லாஹு சொல் இல்லையென்றால் உன் தலை கொய்யப்படும் என்று கர்ஜிப்பது போல் ஒரு கோர சித்திரம் கூட ஒரு சில வரலாற்றாசிரியர்களால் தீட்டிவைக்கப்பட்டது.

உண்மையுள்ளவர்கள் இதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இஸ்லாம் அது வாளால் பரப்பிடக்கூடிய மதமுல்ல. அதன் இயற்கை, வன்முறைகளை ஆதரிக்கின்ற, அனுமதிக்கின்ற விதத்திலேயும் இல்லை. நம்பிக்கையை வாள் முனையில் திணிக்க முடியுமா? முஸ்லிம்கள் தாங்கள் வாகை சூடிய மக்கள் மீது இஸ்லாத்தை பலவந்தமாக திணித்திருப்பார்களேயானால் அது இவ்வளவு காலம் நிலைத்திருக்குமா? வாளுக்கு பயந்து இஸ்லாத்தை ஏற்றிருந்தால் சில காலத்திற்குள் அதை காற்றில் பறக்க விட்டிருப்பார்கள்! ஆனால் இஸ்லாம் பரவிய இடங்களிலெல்லாம் நிலைத்தே இருக்கின்றது என வரலாறு சாட்சி பகருகிறது.

முஸ்லிம்கள் வாளால் மதம் பரப்பினார்கள் என்றால் தங்கள் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் இறைநிராகரிப்பவர்களை வாழ விட்டிருப்பார்களா? ஆனால் முஸ்லிம்கள் ஆட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் முஸ்லிமல்லாதவர்கள் தங்கள் மத உரிமைகளைப் பேணி வாழ்ந்திருக்கின்றார்களே.

உலக வரலாற்றிலே இஸ்லாத்தை எதிர்த்தவர்களில் முக்கிய இடம் வகித்தவர்கள் தாத்தாரிகயார்கள் ஆவார்கள். அவர்களோ இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு பின் இஸ்லாத்தின் காவலர்களாக மாறியதை சரித்திரம் அறியும்.

முஸ்லிம்களை படையெடுத்துச் செல்லாத இந்தோனிஷியா, மலேசியா போன்ற நாடுகளிலுள்ள மிகப்பெரும்பான்மை மக்கள் முஸ்லிம்கள் ஆவார்கள். வல்லரசான அமெரிக்காவில் தற்போது அதிவேகமாக இஸ்லாம் பரவிவருகிறதே. இது எதனால் ஏற்பட்ட வளர்ச்சி?

நீண்ட நெடுங்காலம் முஸ்லிம்கள் அரபு நாட்டை ஆண்டு வருகின்றார்கள். அரபு நாட்டிலுள்ள யூதர்களும், கிறிஸ்தவர்களும் வாளுக்கு பயந்த இஸ்லாத்தை ஏற்றார்கள் என்றால் - பிரிட்டீஷ், பிரஞ்ச் ஆதிக்கத்தின் போது முந்தைய மதங்களுக்கு திரும்பியிருக்க வேண்டுமே. அப்படி ஒருவராவது திரும்பியிருக்கின்றார்களா?

800 ஆண்டுகள் ஸ்பெயினை ஆண்ட முஸ்லிம்கள் அங்குள்ள மக்களை மதம் மாற நிர்பந்தித்ததே இல்லை. ஆனால் பின் வந்த சிலுவைப் போராழிகள் முஸ்லிம்களை ஸ்பெயினை விட்டே துரத்தி துடைத்தார்கள். பாங்கு கூற ஒரு முஸ்லிம் கூட இல்லாத நிலைமைய ஏற்படுத்தினார்கள்.

இந்தியாவிற்குள் முஸ்லிம்கள் படையெடுத்து வருவதற்குள கேரளக் கடற்கரை வழியாக இஸ்லாம் இந்தியாவிற்குள் நுழைந்துவிட்டதே. முகலாயர்கள் இந்தியாவின் மீது படையெடுத்தார்கள் என்றால் இஸ்லாத்தை பரப்பிடுவதற்காக அல்ல. அந்த போர்களுக்கும், இஸ்லாத்திற்கும் எந்த தொடர்பும் இருந்ததில்லை. நாடு பிடிப்பது என்பது அந்த காலத்தது அரசு நெறியாக இருந்தது. ஒவ்வொரு வருடமும் விஜயதசமி அன்று ஒவ்வொரு இந்து மன்னனும் மற்ற இந்து அரசிடம் சென்று 'யுதம் தேஹி' என்று கூறுவான். அதன் பொருள் போருக்கு வா! அல்லது உன் அரசை என்னிடம் ஒப்படைத்துவிடு என்பதாகம். இந்து மன்னர்களான ராஜராஜனும், ராஜேந்திரனும் ஜாவா. சமத்திரா மற்றும் கீழ்த்திசை நாடுகளின் மீது படையெடுத்தார்கள். இன்றைக்கும் அங்கெ இந்துமதத்தின் சுவடுகள் இருக்கின்றன. அப்படியானால் இந்து மதத்தைப் பரப்பிடத்தான் அவர்கள் வாளெடுத்தார்கள் என்று தானே கொள்ளவேண்டும்.

'அபொல்லோனியஸ் தியான நகரிலிருந்து பேரொளி வீசிய சூரியன் ஆவார். மானிடரின் துன்பம் துடைப்பதற்காகவே விண்ணுலகத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட கருணாமூர்த்தி ஆவார் என்று கிரேக்கர்களால் வர்ணிக்கப்பட்டவர். இவர் இயேசுகிறிஸ்து போன்று பல அற்புதங்களை செய்துள்ளார் என்று அபொல்லோனியஸ் பக்தர்கள் புகர்ந்துரைத்தபோது சகிக்காத கிறிஸ்தவ சமயவாதிகளின் ஆத்திரமெல்லாம் அபொல்லோனியஸ்ஸின் நினைவச் சின்னங்களின் மீது திரும்பியது. கி.பி. 331-ல் மகா கான்ஸ்டன்டைன் ஒரு பெரும்படையை ஏய்கா நகருக்கு அனுப்பி அங்க அபொல்லோனியஸ் முதன்முதலில் மருத்துவ நகருக்கு அனுப்பி அங்கு அபொல்லோனியஸ் முதன் முதலில் மருத்துவ சேவை புரிந்து புகழ்பெற்ற அங்கிளிபியஸ் ஆலயத்தை இடித்துத் தரைமட்டமாகச் செய்தான். எபிஸஸ் நகரில் இருந்த அபொல்லோனியஸ் சிலையை உடைத்து தூளாக்கினான். அவர் எழுதிவைத்த யோக தத்துவம் பயிற்சி பற்றிய நான்கு நூற்தொகுப்புகள் இருக்கும் நூல்களையெல்லாம் தேடிப்பிடித்து அப்பிரதிகளையும், மற்றும் அவர் எழுதிய கட்டுரைப் பிரதிகளையையும் ஒட்டுமொத்தமாகத் தீயிட்டு எரித்துவிட உத்தரவிட்டான். அபொல்லோனியஸ் பற்றி பிறர் எழுதிய நூல்களும் கூட அழிக்கப்பட்டன.

'மிலான் அரசாணை' (EDICT OF MILAN) – அதாவது கிறிஸ்துவ மதம் சட்டப்படியாக ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு மதமாகும் என்று கூறி பல போர்களை நடத்தி பிறமதக் கலாச்சாரங்களை முற்றாக அழித்து கிறிஸ்தவ மதத்தை பரப்பியவர் மகா கானஸ்டன்டைன்.

கிறிஸ்துவ மதத்தை அங்கீகரித்துக் கொண்ட ஐரோப்பியர்கள் அனைத்துவித ஆயுதங்களையும் ஏந்தி வெறி கொண்ட கொள்ளையர்களைப் போல் உலகம் எங்கானும் எல்லா திசைகளிலும் பாய்ந்து சென்றார்கள். சென்ற இடங்களிலெல்லாம் வணிக மண்டிகளை, மூலப் பொருட்களின் குவியல்களi, பதியப் புதிய குடியேற்றங்களை (காலணிகளை) நிர்மாணித்தார்கள். பெரும் பெரும் சாம்ராஜ்ஜியங்களை நிறுவினார்கள். அங்கெல்லாம் கிறிஸ்தவர்கள் பெருகினார்கள். அப்படியானால் கிறிஸ்தவமும் வாளால் பரப்பப்பட்டது தானே.

இஸ்லாத்தைப் பரப்பத்தான் முஸ்லிம்கள் படையெடுத்தார்கள் என்றால் டில்லியை ஆண்ட சுல்தானை எதிர்த்து முகலாய மன்னர் பாபர் வரவேண்டியது ஏன்? பலர் அறியாத உண்மை எதுவென்றால் கஜினி முஹம்மதுவின் முக்கியப் படைத்தளபதியாக இருந்தது 'திலக்' எனப்படும் இந்துதான். அப்போதிருந்த தர்கிஸ்தான் புரட்சியாளர்களை கொடூரமான முறையில் அடக்கியதும், இந்தியப் படையெடுப்பில் மிகமுக்கியப்பங்கு வகித்தவனும் திலக் தான்.

கஜனி, கோரி வம்சத்தினர்களும், முகலாயர்களும் இந்தியாவின் மீது போர் தொடுத்தது நாடுபிடிக்கும் ஆசையில் ஏற்பட்ட போர்களே தவிர இஸ்லாத்தைப் பரப்பிட புரிந்த போர்கள் அல்ல. எனினும் ;ஒரு உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும். 200 ஆண்டுகால ஆங்கிலேய ஆட்சியை ஏற்றுக் கொள்ளாமல் எதிர்த்துப் போராடிய நம் முன்னொர்கள் 800 ஆண்டு கால முகலாயர்கள் ஆட்சியை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அவர்கள் ஆட்சி ஒரளவு நியாயமாக இருந்ததால் தானேயாகும்.







Saturday, December 17, 2011

பரிணாமம்




  குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்...???
 

இந்த உலகிலுள்ள உயிரினங்கள் அனைத்தும் அழிந்துவிட்டன எனக்கொள்வோம். சற்று கற்பனைதான். பல்லாண்டுகள் கழித்து வேற்று கிரகத்திலிருந்து மனிதர்கள் அல்லது மனிதர்களையொத்த ஜீவிகள் இந்த பூமிக்கு வருகின்றனர். அழிந்து புதைந்து கிடக்கும் பொருட்களையெல்லாம் பார்க்கின்றார்கள். அவைகளில் சைக்கிள், மோட்டார் சைக்கிள், ஆட்டோ, கார், பஸ், கப்பல் விமானம் எல்லாவற்றையும் பார்க்கின்றான். இவைகள் எப்படி தோன்றியிருக்கும் என்று சிந்திக்கின்றான். பின் ஒரு கோட்பாட்டை உருவாக்குகின்றான். இப்படி 'ஆரம்பத்தில் வெறும் ரப்பர் மட்டும்தான் இருந்தது. அது தானாக பரிணாம வளர்ச்சியடைந்து டயராக மாறியது. இபபடி உருவான டயரால் யாதொரு பயனும் ஏற்படாது போக அத தானாக ஒரு சைக்கிளாக மாறியது. இந்த சைக்கிளை கொண்டு வேகமாக செல்ல முடியாது போக அதில் தானாக ஒரு என்ஜின் உருவாகி அது மோட்டார் சைக்கிளாக மாறியது அந்த மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் போது பக்கவாட்டில் சரிந்து விபத்து ஏற்பட வாய்ப்பு வந்த காரணத்தினால் அந்த மோட்டார் சைக்கிள் தானாக ஒரு ஆட்டோ ரிக்ஷாவாக மாறியது அந்த ஆட்டோ ரிக்ஷாவால் வேகமாக செல்ல முடியாது போக அது ஒருகாராக மாறியது. கார் தன் கொள்ளளவை அதிகப்படுத்திக் கொள்ள அது பஸ்ஸாக மாறியது. பின் இன்னும் கொள்ளவை அதிகமாக்கிக் கொள்ள அது டபுள் டக்கர் பஸ்ஸாக மாறியது. பஸ் வேகமாக சென்று பல வகைகளில் உபயோகமாயிருந்தது. பின் அந்த பஸ் கடற்கரையை எத்திய போது மேற்கொண்டு செல்ல இயலாத நிலையில் பஸ்ஸின் மேற்பகுதி தனியே பிரிந்து அது ஆகாய விமானமாக மாறி பறந்தது. கீழ்பகுதியோ அது கப்பலாக மாறி தண்ணீரில் மிதந்தது. இவ்வாறு தான் வாகனங்கள் தோன்றின.

என்று அந்த வேற்று கிரகத்து ஜீவி விஞ்ஞானக் கோட்பாடு வகுத்தால் அந்த ஜீவியை புத்தி ஜீவி என்பீர்களா? பைத்தியக்காரன் என்பீர்களா?

வாயுக்களுக்கு, தூசுக்களுக்கு ஒன்றாக சேர்ந்த பொருள் தானாக வெடித்து பூமி எட்பட ஏனைய கிரகங்களும் தோன்றின. பூமி ஒருவித திரவத்ததைக் கக்கின. இந்த திரவத்திலிருந்து ஆரம்பத்தில் மிக நுண்ணிய முதல் உயிரணு தானாக தோன்றியது. பின்னர் அதிலிரந்து ஏராளமான செல்களைக் கொண்ட உயிரணுக்கள் தோன்றின. அவைகளில் சில கடலிலிருந்து வெளிப்பட்டு ஊர்ந்து செல்லும் உயிரினங்களாக நிலத்தில் வாழ வந்தன. இன்னும் சில பறப்பனவாகின. ஊர்ந்து செல்லும் பிராணிகளிலிருந்து குட்டி போடும் பிராணிகள் உருவாயின. இத்தகைய பிராணிகளிலிருந்து தானாக ஒரு தனி இனம் தோன்றியது. அது தோற்றத்தில் குரங்கைப் போல் இருந்தது. அது மரத்தில் வாழ்வதை விட்டு விட்டு நிலத்தில் வாழ ஆரம்பித்தது. காலப்போக்கில் இவை நிமிர்ந்து நின்று கைகளை நடப்பதற்குப் பதிலாக கருவிகளோடு பரிமாறும் அனுபவத்தை சந்தர்ப்பவசத்தால் பெற்றுக் கொண்டது. நீண்ட நெடிய காலங்களுக்குப் பின்னர் அவை மனித வடிவம் பெற்றன. இந்நிலையில் அவை சிந்திக்கவும், பேசவும் கற்றுக் கொண்டன. பல வருடங்கள் கழித்தபிறகு இந்த குரங்கு குணங்கள் அதனிடமிருந்து அகன்றது. முழுமையான மனிதன் உருவானான்.

என்று கூறுபவர்களுக்குப் பெயர் புத்தி ஜீவி, அறிவியல் ஞானி.

இந்த கோட்பாட்டிற்கு சார்லஸ் டார்வினும் அவர் பக்தர்களும் எடுத்து வைக்கும் ஆதாரம் ஒரு சில உயிரினங்களின் (அதாவது மீன், பாம்பு, பல்லி, ஓணான், கீரி, நாய், குரங்கு. மனிதன் என்று சிலவற்றின் எலும்புகளை வரிசைப்படுத்தி வைத்து ஒன்றை அடுத்து மற்றொன்றின் தொடர்பை பார்த்தீர்களா? இது தான் மனிதன் குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியில் தோன்றினான் என்பதற்கு ஆதாரம் என்றார்கள்.

பரிணாம கோட்பாட்டின் அடிப்படையில் குரங்கிலிருந்து தான் மனிதன் பிறந்தான் என்றால் இன்று வாழும் மனித குரங்குகளும், வாலில்லாத குரங்குகளம் ஏன் இதுவரை மனிதனாக மாறவில்லை. அவ்வாறு மாறுவதிலிருந்து தடுத்தது எது?

இந்த பரிணாம மாற்றம் நிகழ போதிய காலம் அவைகள் வாழ்ந்தே இருக்கின்றன. விஞ்ஞானியின் கால அளவு படி பலலட்சம் ஆண்டுகள் குரங்குத் தலைமுறைக் குரங்காகவே வாழ்ந்து வருகின்றன. அவைகள் ஏன் இன்னும் அந்த பரிணாம மாற்றத்தை அடையவில்லை?

பரிணாம வளர்ச்சியின் மூலம் மனித இனத்தை அடைந்த பின் இன்னும் வேறு ஒரு வர்க்கமாக மனிதன் பரிணாம வளர்ச்சியடையாதது ஏன்?

வரலாறு அறிந்த காலத்திலிருந்து எங்காவது எந்த குரங்காவது மனிதனாக மாறியிருக்கிறதா? இல்லை மனிதனாவது பரிணாம வளர்ச்சியடைந்து வேறு இனமாக மாறியிருக்கிறானா?

சில உயிரினங்களை 50 வருடங்கள் வரை பாலூட்டி உணவூட்டிக் கவனமாக வளர்த்துப் பார்த்த பிறகும் அவற்றிலிருந்த எந்தப் பதிய இனமும் தோன்றக் காணோம். இந்த உயிரினங்களை 50 ஆண்டுகள் வளர்ப்பது என்பது 1000 மனிதத் தலைமுறைக்கு ஒப்பானதாகும். கழுதைக் காலம் கடந்தால் குதிரையாக. குதிரைக்காலம் கடந்தால் ஒட்டகமாகவே மாறியதை எவரும் கண்டதில்லை.

ஒர் உயிரினம் காலப்போக்கில் முற்றிலும் மாறுபட்ட இன்னொரு உயிரினமாக மாறும் என்னும் பரிணாமக் கோட்பர்டடை நீருபிக்கும் விதமான ஆதாரம் ஒன்றைக் கூட நடைமுறை உலகில் எடுத்துக்காட்டியதில்லை.

மிருகங்களுக்கு உள்ளது போலவே மனிதனுக்கும் உடலுள்ளது தின்பது, குடிப்பது, சுவாசிப்பது, மலஜலம் கழிப்பது, உடலுறவு கொள்வது போன்றவைகளில் இரு வர்க்கத்திற்குமிடையே வேறுபாடு இல்லை எனினும் ஒருசிலவகையில் அவைகள் மனிதர்களை விட மிகைத்தே காணப்படுகின்றன. இந்த பிரபஞ்ச அறிவிலிருந்து தேடி எடுத்துக்கொள்ளாமல் இயல்பாகவே சில சிறப்பத் தன்மைகளுடன் பிறக்கும் ஜீவிகள் பல உண்டு.

தேனீக்களைப் பாருங்கள், விரிந்து கிடக்கும் பூவில் எந்த பூவில் அதிகம் தேனுள்ளது என்பதை அறிந்து அதை உறிஞ்சும் வல்லமை அதற்கு இருக்கிறது. எத்தகைய அறிவ ஜீவி மனிதனுக்கு கூட தேனிருக்கும் பூ எது? தேன் இல்லாத பூ எது? அதிக தேனுள்ளது எது? என்பதை அறிய முடியாது. ஆனால் அப்பூவை கடந்த செல்லும் தேனீக்களுக்கு அது தெரியும். அன்னும் தேனீக்கள் தம் சிறகுகளுக்கு இடையேயிருந்து ஒழுகக்கூடிய மெழுகை உபயோகித்து சமஅளவில் அறுகோண வடிவில் அறைகளுடன் கூடிய கூடு கட்டுகிறது. அதன் அறைகள் ஒன்றைவிட மற்றொன்றிற்கு எந்த வொரு மாற்றமுமில்லாது அளந்து கட்டியது போல் கட்டுகின்றது.

ஐரோப்பியக் காடுகளிலும், வட அமெரிக்கக் காடுகளிலும் காணப்படும் காட்ட என்ஜினியர் என்று அழைக்கப்படும் பீவரியைப் பாருங்கள் அவைகள் சராசரி ஒரு மீட்டர் நீளமும், 17 கிலோகிராம் எடையுமுடையவையாகும். அதிக கனமுடைய மரங்களை தன்னுடைய கூரான பற்களைக் கொண்டு வெட்டி முறித்து காட்டாற்றிலே தள்ளிவிட்டு தனக்கு வீடு கட்ட நாடிய இடத்திற்கு கொண்டு செல்கிறது. ஆற்றின்ள ஆழம் குறைந்த இடத்தில் கல்லும். தொழி மண்ணும் உபயோகித்து தேவையுடைய அளவு உயரமாக்கி மரக்கட்டைகளையும். தொழிமண்ணையும் கொண்ட தேங்காய் மூடி (சிரட்டை) வடிவில் வீடுகட்டி. அது உட்செல்லும் வாசலுக்கு, பூமிக்கு அடியிலே துளையிட்ட சுரங்கம் அமைத்துக்கொள்கிறது. அது போய் வருவது எல்லாம் ஆற்றுநீர் வழியாகத்தான். வீட்டினுள் காற்று போய்வருவத்றகாக மேல்பாகத்தில் சிறய துளையிட்டுக் கொள்கிறது. நவீன நாகரீக மனிதர்களின் ஏர்கண்டிஷன் வீடுகளைப் போன்ற வீடுகளை பீவரிகள் எவரிடம் சென்று கற்றுவராமல் சுயமாக கட்டிவருகின்றன.

ஆரல்  மீனின் அற்புதம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் அற்புதமாகும். ஐரோப்பிய கடலில் வசிக்கின்ற ஆரல்கள் தங்களுடைய முட்டையிடும் காலம் வந்ததும், பெர்மூடாயிலிருந்து சமார் 4000 கிலோமிட்டர் நீந்தி ஸ்hஹாஸோ கடலில் வந்து - ஸர்ஹாஸோவில் சஞ்சாரமற்ற இடம் சென்ற இலட்சக் கணக்கில் முட்டையிட்டவிட்டு அங்கே படிகின்றன. இந்த முட்டையிலிருந்து வெளிவந்த குஞ்சு ஆரல்கள் தன் தாய் வந்த வழியாக ஐரோப்பிய சமுத்திரத்தில் தன் தாய் எங்கிருந்து புறப்பட்ட வந்ததொ அங்கு சென்ற வசிக்கின்றது. யாரும் வழிகாட்டிக் கொடுக்காத முன்பொருமுறையேனும் செல்லாத வழிகள் வழியாக நீந்தி செல்ல குஞ்சி ஆரல்களால் எப்படி முடிந்தது.

ஆர்ட்டிக்கில் வசிக்கும் தேஷாடனப்பறவைகள் துருவ காலம் வந்தால் ஆர்ட்டிக்கிலிருந்த புறப்பட்டு 17 ஆயிரம் கிலே மீட்டர் பறந்து கோடை காலம் ஆகும் போது அண்டார்டிக் வந்து செருகிறது. அங்கு சிலகாலம் தங்கிய பின்பு தாம் வந்த வழியே பறந்து சென்று குறிப்பிட்ட காலத்தில் புறப்பட்ட இடம் வந்து சேர்கிறது.

தேனீக்களுக்க ஒரே அளவிலான கூடு கட்டவும், தேனுடைய பூக்களை அறியவும், பீவரிகள் அழகிய ஏர்கண்டிஷன் வீடு கட்டவும், ஆரல்களுக்கு சமுத்திரத்தில் பயணிக்கவும், தேஷாடனப் பறவைகளுக்கு ஆகாயத்தில் வாழிகாட்டவும் எவரும் கற்றுக்கொடுக்கவில்லை. பிரபஞ்ச அறிவிலிருந்து தேடி எடுத்துக் கொள்ளவும் இல்லை. இயல்பிலே அத்தன்மைகளைப் பெற்றே தோன்றுகின்றன.

இத்தகைய சிறப்புத் தன்மைகளுடன் கூடிய உயிரினங்களிலிருந்து தான் பரிணாம வளர்ச்சியில மனிதன் தோன்றினாhன் என்றால் இந்த உயிரினங்களுக்கு இருக்கும் சிறப்புத் தன்மைகள் அனைத்தும் மனிதனுக்கும் இருக்க வேண்டும். பரிணாம வளர்ச்சியில் வளர்ந்து ஏற்றம் பெற்றுள்ள மனிதனுக்கு தேனியைப் போல் பீவரியைப் போல் நன்றாக உறைவிடம் உண்டாக்கவும் கூடிய தன்மையும். இயல்பும் இருந்திருக்க வேண்டும். ஆரல் மீன்கள் போன்றும், தேஷாடனப் பறவைகள போன்றும முன்பின் தெரியாத இடத்திற்கு சுயமாக இயல்பாக செல்லும் தன்மை இருந்திருக்கக வேண்டும். ஆனால் பரிணாம வளர்ச்சியில் வந்த மனிதன்இத்தகைய தன்மைகளையெல்லாம் இழந்தது எப்படி என்பதற்கு திருப்தியான பதிலை பரிணாமவாதிகள் இதுவரை கூறியதில்லை.

அடிப்படையில் மிகவும் குறைவான தன்மையுடைய தன்னுடைய உடலுக்கு பதிலாக அவனுக்கு கிடைத்தது. நரம்பு மண்டலத்தின் தலைமைக் கேந்திரமாக பெரியதும், நுட்பமுமான பிரச்சனைகளுடன் கூடிய மூளையாகும்' என்கிறார். பிரபல பரிணாமவாதி ஹோர்டன் சைல்ட் (ஆயn ஆயமநள hiஅளநடக) மூளை வளர்ந்த போது மற்ற தன்மைகளெல்லாம் அவனைவிட்டுப் போய்விட்டது என்று பரிணாமவாதிகள் கூறுவது ஒரு விசித்திர வாதமாகும். மனிதன் தன் தன்மைகளை இழந்ததற்கு எந்தவொரு குழளளடை ஆதாரமோ நுஅடிசலழடழபல ஆதாரமோ இதுவரை சமர்ப்பிக்கப்பட்டதில்லை.

உடலியல் தன்மைகளில் மிருகங்களை விட எவ்வளவோ பின்நிற்கும் மனிதன் - தன்மைவிட எவ்வளவோ சக்தியுள்ள மிருகங்களை விட முன்னேறி செல்லும் வகையான தன்மைகளைப் பெற முடிந்தது அறிவால் ஆகும். இந்த அறிவு பரிணாம வளர்ச்சியில் எந்த கட்டத்தில் அவனுக்கு கிடைத்தது என்பதற்கும் தெளிவானப் பதில் இல்லை.

சகல வித சூழ்நிலைகளில் விதங்களில் பார்க்கும் விதத்திலான கண்களும், சகலவிதங்களிலும் சுழற்றி எதையும் செய்ய ஏதுவான கைகளும் பருமான மூளையும் தான் மனிதனை அறிவு ஜீவியாக ஆக்கியது' என்னும் நவீன பரிணாமவாதி ஸ்டீபன் ஜெய் கோல்டின் (நுஎநச ளுinஉந னுயசறin) வாதம் பூசிமொழுகும் வாதமே தவிர விஞ்ஞான அடிப்படை ஆதாரங்களுடன் கூடிய வாதமும் அல்ல. ஒரு இனத்திலிருந்து இன்னொரு இனமாக மனிதனாக எப்படி வந்தான் என்பதை தெளிவு பட இதுவரை எந்த பரிணாம வாதிகளும் கூறியதில்லை.

முயலைப் போன்று வேகமாக ஓடும் கால்கள் மனிதனுக்கு இல்லை. யானையைப் போல் பழுதூக்கும் கைகளும் அவனுக்கில்லை. எதிரிகளிடமிருந்து தன்மை தற்காத்துக் கொள்ள முளளம்பன்றிக்கிருப்பது போன்ற முட்களோ, ஆமைக்குள்ளது போன்ற ஒடுகளோ அவனக்கில்லை. துருவப்பிரதேசங்களில் குளிரிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ள கம்பளி ரோமங்களோ அவனுக்கில்லை. தேனீயைப் போன்ற கண்களோ வவ்வாலை போன்ற காதுகளோ நாயை போன்ற மோப்பசத்தியுடைய மூக்கோ, ஆகாயத்தில் பறப்பதற்குரிய இறக்கைகளோ, சமுத்திரத்தில் நீந்துவதற்குரிய துடுப்புகளோ ஒன்றும் அவனுக்கில்லை. இத்தகைய எந்தவொரு தன்மையுமில்லாமல் ஒன்றுமறியாதவனாகத்தான் இவ்வுலகிற்கு வருகின்றான் மனிதன்.

உங்கள் மாதாக்களின் வயிறுகளிலிருந்து ஒன்றும் அறியாதவர்களாக இருந்த நிலையில் உங்களை அல்லாஹ் அறியாதவர்களாக இருந்த நிலையில் உங்களை அல்லாஹ் வெளிப்படுத்துகிறான்' (திருக்குர்ஆன் 16:78)

எந்தவொரு சிறப்புத்தன்மையையும் பெறாமல் ஒன்றுமறியாத நிலையில் பிறக்கும் மனிதன். இவ்வுயிரினங்களையெல்லாம் மிகைக்கும் வகையில் பல சாதனைகளை தன் அறிவு மூலம் சாதிக்கின்றான். முயலைத் தோற்கடிக்கும் வாகனத்தை கண்டுபிடிக்கிறான் பீவரியை விட அழகிய வீடுகளை கட்டுகிறான் கழுகை தோற்கடிக்கும் விமானங்களையும், மீனைத் தோற்கடிக்கும் கப்பல்களையும் கண்டுபிடிக்கிறான். ஆனால் இத்தகைய சாதனைகளை இயல்பிலேயே பெற்றவனாக பிறப்பதில்லை. ஒரு டாக்டரின் மகளையோ, ஒரு என்ஜீனியரின் மகளையோ காட்டிலே கொண்டுவிட்டால் காட்டுமிராண்டியாக வளருவானே தவிர டாக்டராக என்ஜீனியராகவோ ஆகமாட்டான்.

அளவற்ற அருளாளன் இக்குர்ஆனை (அவன்தான் கற்றுக்கொடுத்தான். அவன மனதனைப் படைத்தான். அவனே (பேச்சு) விளக்கத்தையும் கற்றுக்கொடுத்தான். (திருக்குர்ஆன் 55:1-4) அவனே எழுதுகோலைக் கற்றுக் கொடுத்தான். மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றக்கொடுத்தான். (திருக்குர்ஆன் 96;3-5)

மனிதனுக்கு இறைவன் கொடுத்த அறிவே சுற்றுச் சூழ்நிலை ஆய்வில் விருத்தியடைந்து வளர்ச்சியடைகிறது. மரத்தோடு மரம் உரசிபற்றிக் கொண்ட நெருப்பைக் கண்டு பண்டைய மனிதன் மரக்கட்டையுடன் மரக்கட்டையையுரசி நெருப்பை பெற்றுக் கொண்டான். அன்று அவன் மரத்தோடு மரம் உரசி நெருப்பை கண்டு பிடித்ததாலே தான் இன்று அணுவைப் பிளந்து அதிலும் நெருப்பை கொண்டு வர முடிந்தத. இவ்வுண்மையை கண்ணியத்துடன் ஏற்று, 'நாங்கள் முன்னோர்கள் முதுகில் ஏறி நின்று தான் உயர்நதவர்களானோம்' என்று கூறினார் பிரபல விஞ்ஞானி நியூட்டன்.

மனிதனை மிருகத்திடமிருந்தும் இதர வர்க்கங்களிலிருந்தும் Nவுறுபடுத்தி தனிததன்மையுடையவனாக்கியது அவனுக்கு வழங்கப்பட்ட பகுத்தறிவேயாகும். அந்த பகுத்தறிவு இறைவனால் வழங்கப்பட்டது பரிணாமத்தால் வந்தது அல்ல என்று குர்ஆன் கூறுகிறது.

அறிவு பரிணாம வளர்ச்சியில் கிடைத்தது என்றால் பீவரியை போல் வீடுகட்டவும், தேனீயைப் போல் கூடுகட்டவும், ஆரலைப் போல் வழியறியவுமான இயல்பான தன்மைகளை மனிதன் இழந்தது எப்படி???

மனிதன் பரிணாம வளர்ச்சியில் தோன்றியவன் என்றால் அவன் நாயைப் போல் மோப்பம் பிடிக்கவும். முயலைப் போல் ஒடவும், புலியைப்போல் பாயவும், குரங்கைப் போல் தாவவும் முடியாதது ஏன்???

பரிணாம வளர்ச்சி நிலையில் இயல்புகளிலும் வளர்ச்சியல்லவா ஏற்பட வேண்டும். இழப்புகள் ஏற்பட்டது ஏன்? எப்படி???

தேனீக்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எப்படி கூட கட்டியதோ - இப்போதும் அதுபோலவே கட்டுகின்றது. பீவரிகள் பல ஆண்டுகளுக்கு முன் எப்படி வீடு கட்டியதோ இப்போதும் அதுபோலவே கட்டுகின்றன. அவைகளில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை. ஆனால் மனிதனோ கடந்த நூற்றாண்டை விட இந்நூற்றாண்டில் மிகைத்த முன்னேற்றம் பெற்று வருகிறான். வனாந்தரத்தில வாழ்ந்த மனிதன் - குகைகளை வீடாக்கினான். பின் தேவனுயுடைய இடத்தில் வீடுகளைக் கட்டினான். கூரை வீடு ஓட்டு வீடாகி பின் மாடி வீடாகி அது உயர்ந்து கொண்டே போகிறது. இனி வரும் காலத்தில் மனிதன் எத்தகைய வீடுகளை உருவாக்குவான் என்பதை இப்போது எவரும் உறுதிபட கூறிட முடியாது. பல்லாயிரம் ஆண்டுகளாக இயல்பிலே சில சிறப்புத்தன்மைகளைக் கொண்ட ஜந்துக்களால் எந்வொரு முன்னேற்றமும் பெற முடியாத போது எதுவுமே அறியாமல் பிறந்த மனிதன் அவைகளை மிகைக்கக் காரணமான அறிவை எந்தக் கட்டத்தில் பெற்றான்???

பெறுவதற்கு காரணமானது எது???

மனிதனால் மட்டும் பெற முடிந்தது எப்படி???

மற்ற ஜந்துக்கள் பெறாமல் போனதற்கு காரணமாக இருந்தது எது??

வெட்கம் எந்தவொரு உயிரினத்திற்கும் இல்லாத மனிதனுக்கு மட்டுமேயுள்ள சிறப்புத்தன்மையாகும். '(ஆதி மனிதர்களான ஆதம் (அலை) ஹல்வா (அலை) அவர்கள் இருவரும் (அம்மமரத்தின் கனியை) சுவைத்த போது அவர்களுடைய வெட்கத்தலங்கள் அவர்களுக்கு வெளியாயிற்று. அவர்கள் சுவனபதியின் இலைகளால் தங்களை மூடிக் கொள்ள முயன்றனர்? என்று குர்ஆன் (20:121) கூறுகிறது. வெட்கத்தை மறைக்க உடையின் அவசியம் எப்போது ஏற்பட்டது என்று இறைவன் தெளிவாகக் குறிப்பிடுகின்றான். பரிணாம கோட்பாட்டில் மனிதன் எந்நிலையில் வெட்கமுடையவனானான்? அவன் மூதாதையர்களாக கருதும் ஜந்துக்கள் எவற்றிற்கும்; இதுவரையும் வெட்க உணர்வுகள் இல்லாதிருக்கும் போது மனிதனக்கு மட்டும் வெட்கம் வர காரணம் என்ன???

மிருகங்கள் எல்லாம் குறிப்பிட்ட காலச் சூழ்நிலையில் மட்டுமே உடலுறவு கொள்ளக் கூடியதாக இருக்கிறது. மனிதனோ அதற்கென்று நேரம் காலம் இல்லாமல் விரும்பும் நேரத்தில் உடலுறவு கொள்ளக் கூடியவனாக இருக்கிறான். மாறுபட்ட இத்தகைய நிலை பரிணாம மனிதனில் எந்த கட்டம் ஏற்பட்டது? ஏன் ஏற்பட்டது?

மிருகங்கள் எவையெவைகளுடன் கூடி உறவு கொண்டாலும் அவைகளுக்கு பாலியல் தீதியான நோய் எதுவும் தாக்காதிருக்க சின்பன்ஜீன்களின் வால் முறிந்ததால் உண்டானவன் என்று கூறும் மனிதன் மட்டும் விபச்சாரம் செய்தால் எயிட்ஸ் போன்ற ஆட்கொல்லி பாலியல் நோய்கள் வரக் காரணம் என்ன???

-ஆக பரிணாம கோட்பாடு என்பது ஒரு விஷயத்தை விளக்குவதற்காக கற்பனையாக செய்து கொண்ட கணிப்பு. அனமானமேயன்றி காலத்தின் சோதனைகள் கடந்து வந்த உண்மையல்ல. இன்னும் எத்தனையோ சோதனைகளை அது கடந்து செல்ல வேண்டியுள்ளது. இந்த சோதனைகளிலெல்லாம் அது நீரூபிக்கப்படும் போது தான் அது நீரூபிக்கப்பட்ட விஞ்ஞானம் என்ற அந்தஸ்தை அடைய முடியும். பொதுமக்களில் யார் வேண்டுமானாலும் உறுதி செய்யக்கூடிய உண்மையான ஆதாரங்களை விஞ்ஞானக் கருவி கொண்டு உறுதி செய்யப்பட்ட ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட விஞ்ஞான தத்துவங்களை ஏற்றுக் கொள்வதே பகுத்தறிவுப் பூர்வமானதாகும்.

'மனிதன் குரங்கிலிருந்து பிறந்தவன் என்னும் கோட்பாடானது படைத்த இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதை மறுக்க வேண்டும் என்பதற்காக புனையப்பட்ட ஒரு தத்துவமே தவிர நீரூபிக்கப்பட்ட விஞ்ஞான உண்மைகளை ஆதாரமாகக் கொண்ட தத்துவம் அல்ல.



ஆக்கம் - அபூ ஆஸியா.
நன்றி - A ONE REALISM.






Wednesday, December 14, 2011

தாரிக் இப்னு ஸியாத்.




மத்தியத் தரைக்கடல் வழியாக அட்லாண்டிக் மகா சமுத்திரத்திற்குள் நுழையும் ஒவ்வொரு கப்பலும் ஜிப்ரால்டர் ஜலசந்தியைக் கடந்தே சென்றாக வேண்டும் அல்லது அங்கு சிறிது தாமதித்து இளைப்பாறிச் செல்ல வேண்டும் என்பது கட்டாயமாகும். இந்த ஜிப்ரால்டர் ஜலசந்தியானது ஐரோப்பாவின் தென்மேற்கு முனையில் மற்றும் மொராக்கோவுக்கு எதிர்புறமாக அமைந்துள்ளது.

சரி..! ஜிப்ரால்டர் என்று ஏன் அழைக்கப்படுகின்றது என்று தெரியுமா உங்களுக்கு? ஜிப்ரால்டர் என்பது ஜபல் அல் தாரிக் அல்லது ''தாரிக்(இப்னு ஸியாத்)மலைக்குன்று'' என்பதனை மொழிமாற்றி, சுருங்கச் சொல்லப் பொன்னால் அரபி மொழியை மோசடி செய்து, அதனை ஜிப்ரால்டர் என்று மேற்குலகு அழைத்துக் கொண்டிருக்கின்றது. இது நாம் காணப் போகும் வரலாற்று நாயகரான தாரிக் இப்னு ஸியாத் அவர்களின் பெயரைத் தாங்கித் தான் நிற்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. அத்தகைய வரலாற்றுச் சிறப்புக்குச் சொந்தக்காரரைப் பற்றி நாம் இங்கு சிறிது காண்போமா..!

வடக்கு ஆப்ரிக்காவில் உள்ள பெர்பர்களின் வம்சாவழியில், நஃப்ஸாவா என்னும் குலத்தில் தோன்றியவர் தான் தாரிக் பின் ஸியாத். உக்பா இப்னு நாஃபி அல் ஃபிஹ்ரி என்பவரின் தலைமையில் சென்ற முஸ்லிம்களின் படை வடக்கு ஆப்ரிக்காவைக் கைப்பற்றிய பொழுது, அதன் ஆரம்ப காலத்தில் இஸ்லாத்தைத் தன்னுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டவர் தான், தாரிக் இப்னு ஸியாத் தந்தை. தந்தை இறந்ததன் பின்பு, வாழ்க்கையின் வசந்த காலத்தில் வீற்றிருந்த தாரிக் பின் ஸியாத் அவர்கள், தன்னுடைய இளமைக்காலத்தை வடக்கு ஆப்ரிக்க முஸ்லிம் படையில் இணைந்து தனது உன்னத சேவையை ஆரம்பித்தார். இளமையின் வேகம்.., அதனுடன் இணைந்த இறைநம்பிக்கையின் உறுதி, இவை ஆப்ரிக்க மக்களின் மனங்களில் இஸ்லாத்தின் தூதுத்துவத்தை நிரப்புவதற்கான பணிகளில் முனைப்புடன் இவரை ஈடுபட வைத்தது.

தாரிக் இப்னு ஸியாத் அவர்களின் இளமைக்கால அர்ப்பணிப்புகளால் கவரப்பட்ட ஆட்சியாளர் மூஸா இப்னு நுஸைர், டேன்ஜியர் என்ற பகுதிகளை ரோமர் வசமிருந்து கைப்பற்றிக் கொண்டவுடன் அந்தப் பகுதிக்கு, அதாவது இன்றைய மொராக்கோ பகுதிக்கு தாரிக் பின் ஸியாத் அவர்களை ஆளுநராக நியமித்தார். ரோமப் பேரரசின் சியூடா பகுதிக்கு கவர்னராக இருந்த ஜுலியன் அவர்களைச் சந்தித்துப் பேசும் அதிகாரத்தை ஆட்சியாளர் மூஸா பின் நுஸைர் அவர்கள் தாரிக் பின் ஸியாத் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து, இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் புதிய அத்தியாயம் ஒன்று ஆரம்பமானது.

ஸ்nபியினின் உண்மையான ஆட்சியாளர்களிடமிருந்து, ரோட்ரிகஸ் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டது முதல் ஸ்பெயினில் கொடுமையான ஆட்சி முறை அரங்கேற ஆரம்பித்தது என்று ஸ்பெயின் வரலாறு கூறுகின்றது. நாம் ஏற்கனவே பார்த்த கவர்னர் ஜுலியன், தன்னுடைய மகளை டொலிடோ நகரில் அமைந்துள்ள ஸ்பானிஸ் அவைக்கு தனது மகளை கல்வி கற்றுக் கொள்வதற்காக அனுப்பி வைத்திருந்தார். அரச வம்சத்தவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற இங்கிதம் கூடத் தெரியாத ரோட்ரிகஸ், ஜுலியன் மகளைக் கைது செய்து சிறையிலடைத்து விட்டார். தனது மகள் சிறையிலடைக்கப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்ட ஜுலியன் சினத்தால் கொதித்தெழுந்தார். ரோட்ரிகஸ் மன்னனுக்கு சரியான பாடம் கற்பித்துக் கொடுக்க விரும்பிய ஜுலியன், தங்களுக்கு மிகவும் சமீபமாகவும், இன்னும் வடக்கு ஆப்ரிக்கா தேசம் முழுவதையும் தங்களது ஆளுகையின் கீழ் கொண்டு வந்திருக்கின்ற அரபுக்களிடமிருந்து உதவியைப் பெற்று அதன் மூலம் ரோட்ரிகஸ் மன்னனுக்கு பாடம் கற்பித்துக் கொடுக்க விரும்பிய ஜுலியன், தன்னுடைய திட்டத்திற்காக ஸ்பானிஷ் அரசவை அங்கத்தவர்களை சம்மதிக்கவும் வைத்து விட்டார்.

எனவே, இது குறித்த திட்டத்தை ஜுலியன் தாரிக் இப்னு ஸியாத் அவர்களிடம் கலந்தாலோசனை செய்த பொழுது, இது குறித்த விஷயத்தை தன்னுடைய அமீரும் துனிசியாவின் ஆட்சியாளராகவும் உள்ள மூஸா பின் நுஸைர் அவர்களிடம் பேசும்படி அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.

இதற்கு முன்னதாகவே, ஸ்பெயினின் ஊடாக இஸ்லாத்தை எவ்வாறு எடுத்துச் செல்வது என்ற திட்டம் ஒன்று குறித்து, மூஸா பின் நுஸைர் அவர்களும் தாரிக் பின் ஸியாத் அவர்களும் கலந்தாலோசனை செய்து, அதற்கான திட்டத்தை எவ்வாறு வரையறை செய்து கொள்வதென்ற ஆலோசனையில் இருந்தனர்.

இந்த நிலையில், ஜுலியன் அவர்களது வேண்டுகோளானது, ஸ்பெயினைப் பற்றி அறிந்து கொள்வதற்கானதொரு நல்வாய்ப்பை முஸ்லிம்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தது. இந்த நிலையில், ஸ்பெயின் மீது படையெடுப்பு நடத்துவதற்குண்டான சம்மதத்தைப் பெற்றுக் கொள்வதற்காக முழு இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் தலைமைப்பீடமாக அன்றிருந்த சிரியாவின் டமாஸ்கஸ் நகருக்கு ஒரு கடிதம் ஒன்றை, மூஸா பின் நுஸைர் அவர்கள் அனுப்பி வைத்தார்கள். போர்க்கலைகளில் நல்ல அனுபவம் வாய்ந்த கலீஃபா அவர்கள், மூஸா பின் நுஸைர் அவர்களின் திட்;டத்தினை அங்கீகரித்து, படையெடுப்பு நடவடிக்கைகளுக்கு சம்மதம் தெரிவித்ததோடு, சில ஆலோசனைகளையும் வழங்கினார். அதன்படி, முழுமையான போர் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக சிறு படை ஒன்றை ஸ்பெயினுக்கு அனுப்பி வைத்து, நிலைமைகளை ஆய்வு செய்யுமாறு அறிவுறுத்தினார்.

இந்த ஆலோசனையின் அடிப்படையில், தரீஃப் என்பவரது தலைமையில் 400 வீரர்கள் கொண்டதொரு சிறு படையொன்று தயார்படுத்தப்பட்டது. இந்த முதல்படை வெற்றிகரமாகச் சென்று திரும்பி வந்தது. இந்த முதல் படையெடுப்பு வெற்றிகரமாக அமைந்து விட்டதையடுத்து, முழுமையான நுழைவுக்கான தயாரிப்பு ஆரம்பமானது.

இந்த நிலையில், ஜுலியன் அவர்களது வேண்டுகோளானது, ஸ்பெயினைப் பற்றி அறிந்து கொள்வதற்கானதொரு நல்வாய்ப்பை முஸ்லிம்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தது. இந்த நிலையில், ஸ்பெயின் மீது படையெடுப்பு நடத்துவதற்குண்டான சம்மதத்தைப் பெற்றுக் கொள்வதற்காக முழு இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் தலைமைப்பீடமாக அன்றிருந்த சிரியாவின் டமாஸ்கஸ் நகருக்கு ஒரு கடிதம் ஒன்றை, மூஸா பின் நுஸைர் அவர்கள் அனுப்பி வைத்தார்கள். போர்க்கலைகளில் நல்ல அனுபவம் வாய்ந்த கலீஃபா அவர்கள், மூஸா பின் நுஸைர் அவர்களின் திட்;டத்தினை அங்கீகரித்து, படையெடுப்பு நடவடிக்கைகளுக்கு சம்மதம் தெரிவித்ததோடு, சில ஆலோசனைகளையும் வழங்கினார். அதன்படி, முழுமையான போர் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக சிறு படை ஒன்றை ஸ்பெயினுக்கு அனுப்பி வைத்து, நிலைமைகளை ஆய்வு செய்யுமாறு அறிவுறுத்தினார்.

இந்த ஆலோசனையின் அடிப்படையில், தரீஃப் என்பவரது தலைமையில் 400 வீரர்கள் கொண்டதொரு சிறு படையொன்று தயார்படுத்தப்பட்டது. இந்த முதல்படை வெற்றிகரமாகச் சென்று திரும்பி வந்தது. இந்த முதல் படையெடுப்பு வெற்றிகரமாக அமைந்து விட்டதையடுத்து, முழுமையான நுழைவுக்கான தயாரிப்பு ஆரம்பமானது. இந்த முதன்மைப் படைக்கு தாரிக் பின் ஸியாத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டு, அவரது தலைமையின் கீழ் 5000 வீரர்கள் போர் செய்வதற்குத் தயார் செய்யப்பட்டு, ஸ்nபியினின் முடியாட்சியைக் காக்கும் பொறுட்டு களமிறங்கத் தயாராக இருந்தனர். தாரிக் பின் ஸியாத் அவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கென, பெர்பர்கள் மற்றும் அரபுகளைக் கொண்ட சிறப்பு ஆலோசனைக் குழுவொன்றும் நியமிக்கப்பட்டது. மேலும், இந்தப் படைகள் யாவும் ஸ்பெயினின் கடற்கரையை அடைவதற்கு உதவியாக, ஜுலியன் தனது கப்பல் படைகளைக் கொடுத்து உதவியதோடல்லாமல், அவனே முன்னின்று ஸ்பெயின் நாட்டினுள் படைநகர்வதற்குண்டான வழியையும் காட்டிச் சென்றான். மேலும், இந்தக் கடற்போரானது பல வகையிலும் முக்கியத்துவம் பெற்றதாகவும், போர் வரலாற்றில் மிகவும் புகழ் பெற்ற திட்டமிடலையும் கொண்டதாகவும் அமைந்து விட்டது. அதன் காரணமென்னவெனில், முஸ்லிம் படைகள் தங்களது சொந்த கப்பலின் மூலமாக ஸ்பெயின் கடற்கரையை அடைந்திருந்தார்களென்றால், எதிரிகளின் கண்களுக்கு மிகவும் எளிதாக இவர்களது வருகை தெரிந்திருக்க வாய்ப்பிருந்தது. இந்த வாய்ப்பை எதிரிகள் இழந்ததோடல்லாமல், முஸ்லிம்கள் ஒட்டு மொத்தமாக படையை நகர்த்தாமல், சிறிய சிறிய கும்பலாக கடலைக் கடந்து பின் ஸ்பெயினுக்குள் சென்று, அங்கிருந்ததொரு குன்றின் கீழ் தங்களை ஒருங்கிணைத்துக் கொண்டனர். இந்தக் குன்று தான் இன்றைக்கு ஜிப்ரால்டர் (தாரிக் குன்று - ஆழரவெ ழக வுயசஙை) என்றழைக்கப்படுகின்றது. இந்தச் சாதனையை முஸ்லிம்கள் ஹிஜ்ரி 92 ல் அதாவது கி.பி.711 ல் நடத்திக் காட்டினர்.

இந்தப் போரின் முக்கியத்துவத்தையும், அதில் ஈடுபட்ட வீரர்களின் உளப்பாங்கையும் ஒருங்கிணைப்பதற்காக முஸ்லிம்களின் படைத்தளபதியாகிய தாரிக் பின் ஸியாத் அவர்கள் கையாண்ட முறைதான் இன்றைக்கும் போர் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்யப்பட்டு, காலங் கடந்தபின்பும் ஞாபகமூட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது

வீரர்கள் அனைவரும் கப்பலில் இருந்து இறங்கியவுடன், அவர்களைச் சுமந்து வந்த கப்பல்கள் அனைத்தையும் தீயிட்டுக் கொளுத்தி விடுமாறு தாரிக் பின் ஸியாத் அவர்கள் தனது படையினருக்குக் கட்டளையிட்டார்கள். அதன்படியே அந்தக் கப்பல்கள் யாவும் ஐபீரியன் தீபகற்பத்தில் வைத்துக் கொளுத்தப்பட்டது. அதன்பின் வீரர்களிடையே தாரிக் பின் ஸியாத் அவர்கள் ஒரு உணர்ச்சிப்பூர்வமான உரை ஒன்றை நிகழ்த்தினார்கள்.

ஓ என்னருமை மக்களே..! யுத்த பூமிக்கு வந்திருப்பவர்களே..! உங்களுக்குப் பின்னால் கடல்.., உங்களுக்கு முன்னால் நிற்பதோ எதிரிகள்..! யுத்தம் ஒன்றே இப்பொழுது மிச்சம்..! இறைவன் மீது சத்தியமாக..! (இந்த நிலையில் நீங்கள்) பொறுமையோடும் இன்னும் இறைநம்பிக்கையில் உறுதியோடும் இருப்பதை அன்றி வேறெதுவும் உங்களுக்கு உதவப் போவதில்லை. வெற்றி அல்லது வீரமரணம், இவற்றில் ஒன்றைத் தேர்வு செய்து கொள்ளுங்கள் என்றார்.

ரமளான் மாதம் 28 ம் நாள் ஞாயிற்றுக் கிழமை, அதவாது கி.பி. ஜுலை, 19, 711 அன்று, முஸ்லிம் படைகள் தாரிக் பின் ஸியாத் அவர்களின் தலைமையின் கீழும், ஸ்பானியப் படைகள் ரோட்ரிகஸ் தலைமயின் கீழும் களமிறங்கினர். இப்பொழுது முஸ்லிம்களுக்கு உதவுவதற்காக மேலும் 5000 பேர் கொண்ட படையை, முஸ்லிம்களுக்குச் சொந்தமான கப்பலிலேயே அனுப்பி வைக்கப்பட்டனர். இப்பொழுது ஜுலியன் தலைமையின் கீழ் இயங்கும் ஸ்பானியப் படையினர் முஸ்லிம்களைப் பற்றிய நன்மதிப்பை தங்களது சொந்த நாட்டு மக்கள் மத்தியில் பரப்ப ஆரம்பித்தனர்.

முஸ்லிம்கள் ஆக்கிரமிப்பாளர்களும் அல்லர் அல்லது நம்மை ஆக்கிரமித்து தங்களது சர்வாதிகாரத்தை நிலைநிறுத்த வந்தவர்களுமல்லர். மாறாக, அவர்கள்.., சாந்தியையும் சமாதானத்தையும் இன்னும் விடுதலையையும் பெற்றுத் தருவதற்காக வந்துள்ள சமாதானத்தூதுவர்கள் என்ற நற்சான்றினை மக்கள் மத்தியில் பரப்பினார்கள்.

இந்தச் செய்தியானது ரோட்ரிகஸ் தலைமையின் கீழ் வந்திருந்த இராணுவத்தினரிடையே நல்ல தாக்கத்தினை ஏற்படுத்தியது. ரோட்ரிகஸ் தலைமையின் கீழ் வந்திருந்த ஸ்பானிய வீரர்கள் படையிலிருந்து பின்வாங்க ஆரம்பித்தனர். ஸ்பானியப் படைகளுக்குள் இப்பொழுது குழப்பம் ஆரம்பமானது. குழப்பத்தின் விளைவாக ஸ்பானிய வீரர்கள் தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள படையை விட்டும் விலகி ஓடினார்கள். இருப்பினும், போர் தொடர்ந்தது, இறுதியில் படைகளை விட்டு விட்டு ரோட்ரிகஸ் தப்பி ஓடி விட்டான். இதன் மூலம் ஐபீரியன் தீபகற்பத்தில் முஸ்லிம்களின் முதல் போர் வெற்றிகரமாக முடிந்தது. இதன் பின் மீண்டும் முஸ்லிம்கள் தரப்பிலிருந்து படைகள் ஸ்பெயினுக்குள் வந்து குவிந்தார்கள். இந்த முறை மூஸா பின் நுஸைர் அவர்களே நிவாரணப் படையை முன்னின்று நடத்தி வந்தார்கள்.

படை எடுப்பு நடத்தி வந்த 14 மாதங்களுக்குள் ஸ்பானிய தேசத்தின் மிக முக்கிய நகரங்களான டொலிடோ, செவில்லி, மோர்டா மற்றும் பல நகரங்கள் முஸ்லிம்களின் கைவசமாகின. இன்னும் இரண்டே வருடத்தில் குறிப்பாக அனைத்து ஸ்பானிய நகரங்களும் முஸ்லிம்களின் கைவசம் ஆகின. இந்த நிலை கிட்டத்தட்ட 800 ஆண்டுகள் தொடர்ந்தன.

முஸ்லிம்களின் இந்தப் படையெடுப்பின் மூலமாக, ஐரோப்பாவானது இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வந்தது போல, முஸ்லிம்களின் மூலமாக கலாச்சாரப் புத்துணர்வைப் பெற்றுக் கொண்டது என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றார்கள். இதன் மூலம், சீனாவின் கிழக்குப் பகுதி முதல், இந்தியாவின் மேற்குப் பகுதி உண்டான பகுதிகள் உள்ளிட்ட நிலப்பகுதிகள் மற்றும் அவர்கள் தங்கள் மேன்மையான கலாச்சாரத்தை அட்லாண்டிக் பெருங்கடல் வரைக்கும் கொண்டு வந்தார்கள்.

முஸ்லிம்களின் ஆளுகையின் கீழ் ஸ்பெயின் வந்ததன் பின், நிர்மாணிக்கப்பட்ட இஸ்லாமியக் கல்விக் கூடங்களிலிருந்து கல்வியைக் கற்றுக் கொள்வதற்காக ஐரோப்பாவின் அறிஞர்கள் விரைந்தனர். இதன் மூலம் பல அறிஞர்களை உருவாக்கிய பெருமையை முஸ்லிம்களின் கல்விக் கூடங்கள் பெற்றுக் கொண்டன.

இன்றைக்கு ஸ்பெயின் முஸ்லிம்களின் கரங்களிலிருந்து சென்று விட்டாலும், ஐரோப்பிய உலகத்திற்கு நாகரீகத்தை வழங்கியதற்காகவும், வரலாற்றுச் சிறப்பு மிக்க தளங்களை விட்டுச் சென்றமைக்காகவும், அதாவது கிரணடா, கார்டோபா, செவில்லி மற்றும் பல நகரங்களில் இன்றளவும் முஸ்லிம்கள் ஏற்படுத்திய வரலாற்றுச் சுவடுகள் நினைவுச் சின்னங்களாக நிலைத்து நின்று கொண்டிருக்கின்றன. இதற்காக அவர்கள் என்றென்றும் முஸ்லிம்களுக்கு நன்றிக் கடன் செலுத்தக் கடமைப்பட்டவர்களாக இருக்கின்றார்கள். இந்த வரலாற்று நினைவுச் சின்னங்களைப் பார்வையிடுதற்காக வருடந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நகரங்களுக்கு வந்து சென்ற வண்ணம் இருக்கின்றார்கள்.

இத்தகைய அழியாத வரலாற்றுச் சுவடுகளை ஏற்படுத்தி விட்டுச் சென்றமைக்கான காரணகர்த்தவாக, இன்றளவுக்கும் வரலாற்று நாயகராக தாரிக் பின் ஸியாத் நினைவு கூறப்பட்டுக் கொண்டிருக்கின்றார். அதுமட்டுமல்ல, இஸ்லாமிய நாகரீகத்தையும், கலாச்சாரத்தையும் ஸ்பெயின் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு எடுத்துச் சென்றதில், தாரிக் பின் ஸியாதின் பங்கு மகத்தானது.

ஆம்..! காரிருள் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த ஐரோப்பாவுக்கு இஸ்லாத்தின் வெளிச்சப் புள்ளிகளை அறிமுகப்படுத்தி வைத்த பெருமை தாரிக் பின் ஸியாத் அவர்களையே சாரும்..!




Saturday, December 10, 2011

கமாண்டோ கான்



1724இல் இராமநாதபுரம் பனையூரில் மருதநாயகம் பிள்ளையாகப் பிறந்து முகமது யூசுப் கானாக வளர்ந்து கமாண்டோ கானாக உயர்ந்தவன். மதுரை மக்களால், “கமாந்தோ கான்’’ என அன்பாக அழைக்கப்பட்டவன். இந்துவாகப் பிறந்து, கிறிஸ்துவர்களிடம் கல்விப் பயின்று இஸ்லாமியனாக இறந்தவன். 40 வயதே வாழ்ந்தாலும் நாடறிந்தவனாக மட்டுமல்ல இந்திய வரலாற்றில் சிறந்தப் போர் வீரனாக, இராணுவ நிபுணனாக, தன்னை நிலைநிறுத்திக் கொண்டவன் கமாந்தோ கான். இந்திய இராணுவ வரலாற்றில் ஹைதர் அலியும், முகமது யூசுப் கானும் குறிப்பிடத்தக்கவர்கள். ஹைதர் அலி வேகத்திற்கு புகழ்பெற்றவர் என்றால், முகமது யூசுப்கான் விவேகத்துடன் தாக்குதலில் சிறந்தவன். ஆற்காட்டு நவாபும், கிழக்கிந்திய கம்பெனியும் பாளையக்காரர்களை அடக்கிட யூசுப் கானை முழமையாகப் பயன்படுத்திக் கொண்டனர்.

பனையூரில் இருந்த இல்லத்துப் பிள்ளைமார்களின் பல குடும்பங்கள் இஸ்லாத்தைத் தழுவின, மருதநாயகத்தின் குடும்பமும் அதில் ஒன்று. கட்டுக் கடங்காமல் சுற்றித்திறிந்த யூசுப்கான் பாண்டிச்சேரிக்கு வந்து அன்றைய பிரெஞ்சு கவர்னர் மான்சர் காக்லா வீட்டில் வேலைக்காரனாகச் சேர்ந்தான். சில காலம் கழித்து வேலையிலிருந்து விலகி அல்லது நீக்கப்பட்டு தஞ்சைக்கு சென்று படைவீரனாகச் சேர்ந்தான். தஞ்சையில் தளபதி பிரட்டன், யூசுப் கானுக்கு கல்வி கற்றுக் கொடுத்தான். தனது ஆர்வத்தால் தமிழ், பிரெஞ்சு, போர்த்துகீசியம், ஆங்கிலம், உருது ஆகிய மொழிகளை கற்றுத் தேர்ந்தான். அங்கிருந்து நெல்லூருக்கு மாற்றப்பட்டான் அங்கு தண்டல் காரனாக, ஹவில்தாராக, சுபேதார் என பதவி உயர்வை உழைப்பால் அடைந்தான். ஆற்காட்டில் சந்தா சாஹிப்புடன் வந்து தங்கி இருந்தபோது யூசுப்கானிடம் இருந்த வீரம், விவேகத்துடன் காதலும் சேர்ந்து கொண்டது. இந்தோ  ஐரோப்பிய கலப்பின வழித்தோன்றலான மார்சியா என்ற பெண்ணைக் காதலித்து மணம் முடித்தான்.

திறமைக்கு திறவுகோல்

1750 களில் ஆங்கிலேயருக்கும், பிரெஞ்சுகாரர்களுக்கும் இந்தியாவில் நாடுபிடியுத்தம் நடந்த காலம். அதேநேரத்தில் 1751இல் ஆற்காட்டு நவாபு பதவிக்கு முகமது அலி வாலாஜாவிற்கும் சந்தா சாஹிப்பிற்கும் போட்டியும் யுத்தமும் மூண்டது. முகமது அலி வாலாஜா திருச்சிக்கு தப்பித்து ஆங்கிலேயர்களிடம் சரண்அடைந்தார். சந்தா சாஹிப்பின் தாக்குதலை இராபர்ட்கிளைவ் தலைமையில் ஆங்கிலேயர்கள் முறியடித்தனர். ஆற்காட்டை மீட்பதற்காக சந்தாசாஹிப் தனது மகன் இராசாசாஹிப் தலைமையில் 10,000 படைகளை அனுப்பினான். இவர்களுக்கு உறுதுணையாக நெல்லூர் சுபேதாராக இருந்த யூசுப்கான் இருந்தான். யுத்தத்தில் பிரெஞ்சு ஆதரவளித்த சந்தாசாஹிப் படைதோல்விகண்டது. ஆங்கிலேயர்கள் முகமது அலி வாலாஜாவை நவாபாக நியமித்தனர். இதற்கு கைமாறாக மதுரை மற்றும் நெல்லையில் வரிவசூலிக்கும் உரிமையை கிழக்கிந்திய கம்பெனிக்கு கொடுத்தான் நவாபு.

யுத்தக்களத்தில் முகமது யூசுப்கானின் திறமை கண்டு வியந்தான் இராபர்ட்கிளைவ் தனது படையுடன் அவனை இணைத்தான். மேஜர் ஸ்டிங்கர்லா, யூசுப்கானுக்கு ஐரோப்பிய இராணுவ முறைகளில் பயிற்சி அளித்தான். 1755ஆம் ஆண்டுகளில் மதுரை, நெல்லை பாளையக்காரர்களை அடக்குவதற்காக தளபதி அலெக்சாண்டர் கெரானுடன் யூசுப்கான் அனுப்பிவைக்கப்பட்டான்.

எட்டயபுரம், பாஞ்சாலங்குறிஞ்சி படைகளின் தளபதியாக இருந்த “வீரன்’’ அழகு முத்துக்கோனை, பெருநாழிகாட்டில் முகமது யூசுப்கான் சாகடித்தான். மறவர் பாளையங்களை தாக்கி வெற்றி கொண்டான். பூலித்தேவனை தோற்கடித்தான். மதுரையில் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துவதில் வெற்றிபெற்றான். தனது வெற்றிப் பயணத்தை தடைகளைத் தகர்த்து தொடர்ந்தான். இக்காலத்தில் சென்னையை பிரெஞ்சுப்படை, முற்றுகையிட்டதால் யூசுப்கான் சென்னைக்கு அழைக்கப்பட்டான். பிரெஞ்சு தளபதி தாமஸ் ஆர்தர்லாலி தலைமையில் முற்றுகையிட்ட பிரெஞ்சு படையை 1758இல் யூசுப்கான் யாரும் எதிர்பாராத நேரத்தில் கொரில்லாத் தாக்குதல் நடத்தி அதிசயிக்கத் தக்கவகையில் தோற்கடித்தான். இந்த தாக்குதல்பற்றி லாலி கூறுகையில், யூசுப்கான் தலைமையிலான படைகள் ஈக்களைப் போல் பறந்தார்கள் ஒரு பக்கத்தில் தடுத்து தாக்கிட முயலும்போது, அடுத்த நிமிடம் மறுபக்கத்திலிருந்து தாக்கினார்கள் என்று கூறினார். இவ்வெற்றி முகமது யூசுப்கானுக்கு பெரும் புகழ்தேடித்தந்தது. கிழக்கிந்திய கம்பெனி முகமது யூசுப்கானுக்கு “கமாண்டன்ட்’’ பதவி உயர்வை அளித்தது.

மதுரையின் மகுடத்தில்

கமாண்டோ கான் என்ற பதவி உயர்வுடன் முகமது யூசுப்கானை மதுரைக்கு மீண்டும் அனுப்பிவைத்தது கிழக்கிந்திய கம்பெனி. மதுரை மற்றும் திருநெல்வேலியில் வரிவசூல் செய்து வருடத்திற்கு 5 லட்சம் கொடுக்க வேண்டுமென கூறினர். யூசுப்கான் தெற்குசீமையின் தளநாயகனாக ஆட்சிபுரிய ஆரம்பித்தான். யூசுப்கான் சென்னையில் இருந்த போது மீனாட்சி அம்மன் கோயில் நிலங்களை எல்லாம் சூறையாடி இருந்தனர். யூசுப்கான் சூறையாடிய கயவர்களை தோற்கடித்து நிலங்களை மீட்டு கோயிலிடம் ஒப்படைத்தான். சட்டம் ஒழுங்கு பிரச்சனையை நிலைநாட்டுவதற்கு அன்றைய தினம் கள்ளர்கள் சவாலாக இருந்தனர். அவர்களது கலவரங்களை அடக்கி சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்தினான். நத்தம் பகுதியில் கலவரங்களை அடக்கியபோது 2000 க்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர்.

மதுரையின் குளங்களையும், ஏரிகளையும் பழுதுபார்த்து பாசன வசதிகளை மேம்படுத்தினான். இடிந்துகிடந்த கோட்டைகளை பழுதுபார்த்தான். நிதித்துறை மற்றும் வணிகர்கள் பாதுபாப்பை மேம்படுத்தினான். யூசுப்கான் காலத்தில் நிர்வாக செயல்பாடு மேம்பட்டது. இதனால் மதுரை மக்கள் இவனை “கமாந்தோகான்’’ என்று அன்பாக அழைத்தனர். அவர்களின் உள்ளங்களிலேயே குடியேறினான். இதனால் நவாபுக்கும், கம்பெனிக்கும் வருவாய் பெருகினாலும் யூசுப்கான் வலுவாவதை பெரும் ஆபத்தாகக் கருதினர்.

நவாப்பின் நயவஞ்சகம்

முகமது யூசுப்கானின் செல்வாக்கை குறைக்கவும், கட்டுப்படுத்தவும் முயற்சித்தான் திடீரென புதிய உத்தரவைப் பிறப்பித்தான். வணிகர்களும், மற்றவர்களும் என் மூலமாகத்தான் வரிகளை செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டான். யூசுப்கான் இதை ஏற்றுக்கொள்ளவில்லை கிழக்கிந்திய கம்பெனியும் தந்திரமாகக் காயை நகர்த்தினர். நவாப்பின் பணியாளர்தான் யூசுப்கான் என்று அறிவித்தனர். இதனால் நவாபுக்கும், யூசுப்கானுக்கும் மோதல் அதிகமானது. டெல்லியின் ஷாவும், ஹைதராபாத் நிஜாம் கிமாம் அலியும் யூசுப்கான்தான் மதுரையின் சட்டப்படியான கவர்னர் என்று அறிவித்தாலும், நவாப்பும், கம்பெனியும் இதை ஏற்கவில்லை. 1761ஆம் ஆண்டு 7லட்சம் வரிவசூல் செய்து செலுத்திட முன்வந்தான்.

நவாபும், கம்பெனியும் எற்கவில்லை. காரணம் தங்களைவிட வலுவான மக்கள் செல்வாக்கு உள்ளவனை வளர்க்க விரும்பவில்லை. தெற்கு சீமையில் இருந்த பல கம்பெனி வணிகர்கள், யூசுப்கான் மக்களிடம் பிரிட்டிஷாருக்கு எதிரான உணர்வை உருவாக்கியுள்ளான் என்று புகார் தெரிவித்திருந்தனர். எனவே, கம்பெனியும், நவாபும் யூசுப்கானை கைது செய்துவர கேப்டன் மேன்சனிடம் உத்திரவிட்டனர். இதனிடையே யூசுப்கான் “தன்னை சுதந்திர ஆட்சியாளன்’’ என்று முதன்முதலாக அறிவித்துக்கொண்டு, படைதிரட்டினான் மதுரையில் 27,000 படைவீரர்களைக் கொண்டு பலமாக இருந்தான். அவனுக்கு ஆதரவாக பிரெஞ்சுத் தூதர்கள் வந்து சேர்ந்தனர்.

துரோகத்தின் வெற்றி

துரோகம் பல நேரத்தில் வீரம் செறிந்த போரின் முடிவை விரைவுபடுத்திவிடும், வீரர்கள் யுத்தக்களத்திலே வீழ்வதை தடுத்திடும். இங்கே யூசுப்கானுக்கும் அதுதான் நேர்ந்தது. 1763 செப்டம்பர் மாதம் காலோனல் மேன்சன் தலைமையில் மதுரையைத் தாக்கினர் தஞ்சை, திருவிதாங்கூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, பாளையங்கள் கும்பினியருடன் கைகோர்த்தனர். மழையின் காரணமாக தாக்குதல் நிறுத்தப்பட்டது. மீண்டும் கம்பெனி படையும், நவாபுவின் படையும் இணைந்து 22 நாட்கள் தாக்குதலை தொடுத்தனர். 120 ஐரோப்பியர்களும் 9 அதிகாரிகளும் மாண்டனர். கும்பினியர் படை நிலைகுலைந்து பின்வாங்கியது.
மீண்டும் சென்னை, பம்பாய் பகுதிகளிலிருந்து அதிக படைகள் நவீன ஆயுதங்கள் தருவித்து மதுரை மேஜர் பிரஸ்டன் தலைமையில் தாக்குதல் தொடங்கினர்.

முதலில் நத்தம் கள்ளநாட்டில் பாதைக் காவல்கள் அனைத்தையும் கைப்பற்றினர். 1764 ஜூன் மாதம் கோட்டையை முற்றுகையிட்டனர். கோட்டையைத் தகர்க்க முடியவில்லை. கும்பினியர் படையில் 160 பேர்கள் பலியாகினர். தாக்குதல் மூலம் தோற்கடிக்கும் பாத்தியங்கள் குறைவு எனக் கருதினர். எனவே, கோட்டைக்குச் செல்லும் உணவை நிறுத்தினர். குதிரையும், குரங்கும் உணவாக வேண்டிய நிலை ஏற்பட்டது. பிறகு குடிநீரை நிறுத்தினர். இதனால் கோட்டைக்குள் இருந்த படைகள் மற்றும் மக்களிடம் சோர்வும், குழப்பமும் ஏற்பட்டது. யூசுப்கான் தப்பிக்கும் முயற்சி வெற்றிபெறவில்லை. சரணடைய பிரெஞ்சு தளபதி மார்சன்ட் முடிவெடுத்தான். இந்த சர்ச்சையால் யூசுப்கான் தளபதியை அறைந்தான். இந்த அவமானத்தை பழிதீர்க்க எண்ணினான் மார்சன்ட், யூசுப்கான் சரண் அடையாமல் சண்டையிட்டு வீரமரணம் எய்திட விரும்பினான். இதனிடையே ஆற்காடு நவாபு, சிவகங்கை தளபதி தாண்டவராய பிள்ளை மூலமாக மதுரை கோட்டையில் இருந்த திவான் சீனிவாசராவ், யூசுப்கான், பாக்டா பாபா சாஹிப், தளபதிமார்சன் பேசி வஞ்சக வலையில் வீழ்த்த திட்டமினர். சரணடைவோருக்கும், சண்டையிட்டு மடிய விரும்பியவர்களுக்கும் இடையே துரோகத்தை அரங்கேற்றினர்.
1764 அக் 13இல் முகமது யூசுப்கான் தொழுகையில் ஈடுபட்டபோது சீனிவாசராவ், பாபாசாஹிப், மார்சன், இன்னும் சிலர் யூசுப்கானை அவனது டர்பன் கொண்டு கட்டிப்போட்டுவிட்டனர். விவரம் அறிந்து யூசுப்கானின் மனைவி சிறுபடையுடன் வந்தாலும், துரோகிகளிடம் வெற்றிபெற முடியவில்லை. எனவே, யூசுப்கான் கும்பினிப் படைகளிடம் ஒப்படைக்கப்பட்டான். அக் 15ஆம் நாள் மதுரை சம்மட்டிபுரத்தில் உள்ள மரத்தில் தூக்கிலிடப்பட்டான். இருமுறை கயிறு அறுந்து கீழே வீழ்ந்தான். மூன்றாவது முறை தூக்குக்கயிறு அவனது உயிரைப் பறித்தது. அவனைக் கண்டு அஞ்சு நடுங்கிய கும்பினியர்களும், நவாபும் அவனது தலையை திருச்சிக்கும், கைகளை பாளையங்கோட்டைக்கும், கால்களை தஞ்சைக்கும், திருவிதாங்கூருக்கும் அனுப்பிவைத்தனர்.

உடலை, தூக்கிலிட்ட சம்மட்டிபுரத்தில் புதைத்தனர். 1808இல் அந்த இடத்தில் மசூதி கட்டடப்பட்டு கான்சாஹிப் பள்ளி வாசல் என்று அழைக்கப்படுகிறது. இன்றும் ஏழாவது தலை முறையாக அதை பராமரித்து வருகின்றனர். கும்பினியர்களை எதிர்த்ததால் முதன்முதலாக தூக்கிலிப்பட்ட வீரன் விவசாயக் குடும்பத்தில் பிறந்து வீரத்தின் மூலம் புகழின் உச்சிக்குச் சென்றான். தன்னை “சுதந்திர ஆட்சியாளன்’’ என்று பறைசாற்றி கும்பினியர்களுடன் போரிட்டான் வீரமரணம் எய்தினான் 40 வயதே நிரம்பிய “கமாந்தோ கான்’’



ஆக்கம் 
ஏ.பாக்கியம்

நன்றி 
கீற்று.கொம்

  

Wednesday, December 7, 2011

2012,மாயன்கள் மற்றும் உலக முடிவு


2012 என்ற இந்த நான்கு இலக்கங்கள் அல்லது அவ்வருடம் " 2012 " என்ற ஹாலிவூட் திரைப்படம் வரும்வரை உலக மக்களிடையே அவ்வளவு பேசப்பட்ட ஒரு வார்த்தையல்ல.எப்ப அந்த திரைப்படம் உலக திரையரங்குகளில் வெளியிடப்பட்டதோ அதிலிருந்து இந்த வார்த்தை உலக மக்களிடையே பேசப்படும் ஒரு பிரபலமான வார்த்தையாகிப்போனது,அதக்கு காரணம் அத்திரைப்படம் தாங்கிவந்த 2012 இல் உலகம் அழியும் என்ற செய்திதான்.

இந்த திரைப்படத்தைப் பார்த்துவிட்டு 2012 இல் உலகம் அழியும் என குலம்பிப்பியிருப்பவர்களுக்கு மெக்சிகோவின் மானுடவியளுக்கான  தேசிய நிறுவகம் ஒரு ஆறுதல் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது(National Institute Of Anthropological).இதோ அந்த செய்தி.

நீங்கள் 2012  இல் உலகம் அழிந்து விடும் என்ற கவலையில் வாழும் ஒருவரா ? உங்களுக்கு இனி அந்த கவலையே வேண்டாம்.ஏனெனில் மாயன்களை   அடிப்படையாக வைத்து கணிக்கப்பட்ட அந்த கணிப்பு தற்போது தவறென்று நிரூபிக்கப்பட்டுள்ளது.இதை நிரூபித்தவர்கள் மெக்சிகோவின் மானுடவியளுக்கான நிறுவனம் ஆகும்.

மாயன் நாட்காட்டி நம் பாவிக்கும் நாட்காட்டியின் 2012-12-21 திகதியுடன் முடிவுக்கு வருகிறது.இது 5126 ஆவது மாயன் ஆண்டின் முடிவாகும்.இந்த ஆண்டின் முடிவின் பின் மாயன்களின் படைப்பிக்கும் யுத்தத்துக்கும் பொறுப்பான கடவுளான போலோன் யோக்தே (BOLON YOKTHE) இன் வருகை இடம்பெறும் என மாயன்கள் கணித்து வைத்திருந்தனர்.

போலோன் யோக்தே
 2012  உலகம் அழியும் அதை  மாயன்கள் அறிந்து வைத்திருந்தனர்.அதையே அவர்களின் நாட்காட்டி குறிக்கிறது என்ற கணிப்பை முதன் முதலில் வெளியிட்டவர் ஜோஸ் ஆர்குலஸ் ( JOSE ARGULOSE ) என்ற எழுத்தாளராவார்.இவர் 1987 ஆம் ஆண்டு வெளியிட்ட "தி எண்டிங் ஒப் தி டைம் வி நோ இட் " என்ற நூலிலேயே இதை முதன் முதலாக வெளியிட்டார்.அந்த நாட்களிலேயே இந்த கருத்துக்கு எதிர் கருத்துக்கள் எழுந்தன.ஜோஸின் கருத்துக்கு பதில் கருத்துகக் கூறிய மாயன் வரலாற்று நிருபர்கள் மாயன்களின் நாட்காட்டி முடிவென்பது உலகத்தின் முடிவல்ல அது ஒரு சகாப்தத்தின் முடிவேயாகும் என்று அப்போதே பதில் கூறப்பட்டது.மீண்டும் 2012 என்ற திரைப்படம் மூலம் உலக மக்களின் கவனத்தை ஈர்த்த இந்த விடயம் தொடர்பாக மெக்சிகோவின் மாயன் நிபுணர்கள் மீண்டும் தமது கருத்தை தெரிவித்துள்ளனர்.


"நாங்கள் இந்த விடயம் தொடர்பாக மக்களை அறிவூட்ட விரும்புகிறோம்,ஏனெனில் 2012 தொடர்பாக மாயன்கள் எந்த விதமான முன்னரிவித்தளையும் கணிக்கவில்லை.அது ஒரு தசாப்பத்தத்தின் முடிவேயன்றி உலகின் முடிவல்ல.இந்த கட்டுக்கத்தையை பரப்பியவர்களின் நோக்கம் வியாமாரமே அன்றி வேறில்லை" என எரிக் வேலச்கிவ் தெரிவித்தார்.இவர் மெக்சிகோவின் மானுடவியல் பல்கலைக்கழகத்தின் மாயன் காலாச்சார நிபுணர் ஆவார்.
மெக்சிகோவின் மானுடவியளுக்கான தேசிய நிறுவனம், 2012 உலகம் அழியும் என தவறான கணிப்பை வெளியிட்டு அதனை மீடியாக்கள் மூலம் பரப்பி வருபவர்களுக்கு தமது கண்டனங்களை தெரிவித்துள்ளது.மேலும் "தான்களே
உலகை காப்பவர்கள் என்ற பகல் கனவில் வாழும் மேற்கு  உலகம் தமது குறுகிய அரசியல் பொருளாதார நோக்கங்களுக்காக மாயன் கலாச்சாரங்கள் போன்ற பண்டைய கலாச்சாரங்களின் உண்மைத் தன்மையை மறைத்து பொய்யை பரப்பி வருகின்றன" என அந்த கண்டன அறிக்கை கூறுகிறது.
 


(இந்த 2012 திரைப்படம் மற்றும் அதனூடாக காட்டப்பட்ட விடயங்கள் தொடர்பான இஸ்லாமிய நிலைப்பாடு இன்ஷா அல்லாஹ் அடுத்த ஆக்கத்தில் அலசப்படும்.மேலே உள்ள செய்தி Reuters செய்திச் சேவை வெளியிட்ட ஆக்கத்தை தழுவி எழுதப்பட்ட ஒன்றாகும்.)


இந்த ஆக்கத்தை வாசித்தமைக்கு நன்றி.தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டவும்  திருத்திக்கொள்கிறேன்.
ஜசாகல்லாஹு ஹேர்.

உங்கள் நண்பன்
எம்.ஹிமாஸ் நிலார்  




Friday, December 2, 2011

இஸ்ரேல் மீது மரியாதை செலுத்தாமைக்கான 10 காரணங்கள்.




அமெரிக்க அரசியல் அரங்கங்களில் இஸ்ரேலின் மீது அனுதாப அலைகள் வீசினாலும் பெரும்பாலான அமெரிக்க மக்களிடையே இஸ்ரேளின் மீதும் அதன் கொலைகார செயற்பாடுகள் மீதும் வெறுப்பே காணப்படுகிறது.அதற்கான  பல ஆயிரம் காரணங்களில் முக்கியமான பத்து காரணங்கள்.

1.லிபர்ட்டி போர் கப்பல் தாக்கப்பட்டமை.
  •  1967 ஆம் ஆண்டு ஜூன் 8 ஆம் திகதி அமெரிக்காவின் "லிபர்ட்டி" போர் கப்பலுக்கு இஸ்ரேலின் விமான மற்றும் கடட் படையினர் திடீர் தாக்குதல் நடத்தினர்.இந்த எதிர்பாராத கோரமான தாக்குதலில் அமெரிக்காவின் 34 படையினர் கொல்லப்பட்டதுடன் 174 பேர் காயமடைந்தனர்.  
தாக்குதலில் சேதமடைந்த லிபர்ட்டி

தாக்குதல் பட்டப் பகலிலேயே இடம்பெற்றது,அதுவும் சர்வதேச கடற்பரப்பிலே நண்பகல் 2 மணிக்கு இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
கபட புத்தியுள்ள இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு காரணம் அமெரிக்காவையும் எகிப்தையும் மூட்டி விடுவதேயாகும்.ஏனெனில் அப்போது அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் யுத்தம் நடந்து கொண்டிந்தது.

2.ரேச்சல் கோரி படுகொலை.
  •  2003 மார்ச் 16 திகதி இடம்பெற்ற முழு உலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இஸ்ரேலின் படுகொலை.அமெரிக்காவின் சமாதான செயற்பாட்டாளர் சகோதரி ரேச்சல் கோரி (Rachel Corrie) இஸ்ரேலின் சட்டவிரோத குடியேற்றம் மற்றும் ஆக்கிரமிப்புக்கு எதிராக செயலில் போராடியவர்.அவர் காஸா பகுதியில் இஸ்ரேலின் பாதுகாப்பு படையினர் பலஸ்தீன மக்களின் வீடுகளை தரைமட்டமாக்கும் போது BULLDOZER முன் வந்து எதிர்ப்பை தெரிவித்த சந்தர்ப்பத்தில் கொடிய மனம் கொண்ட அந்த BULLDOZER சாரதி எந்த விதமான ஈவுஇரக்கமும் இன்றி அவரின் உடம்புக்கு மேலால் BULLDOZER ஐ ஏற்றிச் சென்று படுகொலை செய்தான்.

RACHEL CORRIE ஐந்து வயதில் ஆற்றிய உரை.
 
IDF இனால் கொல்லப்பட்ட அவரின் உடல்.

3.புர்கான் டோர்கன் படுகொலை.
  •  2010 மே மாதம் துருக்கியின் மாவிமர்மாரா உதவிக் கப்பலின் மீது இஸ்ரேலின் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட கொடூரத் தாக்குதலில் பல நாட்டைச் சென்ற சமாதான செயற்பாட்டாளர்கள் கொல்லப்பட்டனர்,அதில் அமெரிக்காவைச் சேர்ந்த 19 வயது சமாதான செயற்பாட்டாளர் புர்கான் டோர்கன் (FURKAN DORGAN) கொல்லப்பட்டமை.
புர்கான் டோர்கன் 

 4.காங்கிரஸ் பெண் சின்தியா மக்கினி கடத்தல்.

  • 2009 இல் முன்னால் காங்கிரஸ் பெண் சின்தியா மக்கினி இஸ்ரேலிய  பாதுகாப்பு படையினரால் (IDF) கடத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.அவருடன் சேர்த்து 20 க்கும் மேற்பட்ட சமாதான செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டனர்.1500 க்கும் மேட்பட்டவர்களுக்கு மரணத்தையும் 10000 க்கும் மேட்பட்டவர்களுக்கு காயத்தையும் ஏற்படுத்திய இஸ்ரேலின் காஸா மீதான 2008 டிசம்பர் தாக்குதலில் சின்னாபின்னமாகிப்போன காஸா மக்களுக்கு தேவையானா மருந்துகள்,சீமெந்து,ஒலிவ் மரங்கள் மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டுப் பொருட்கள் என்பவற்றை கப்பலில் காஸாவுக்கு கொண்டு போகும் போதே அவர் கைது செய்யப்பட்டார்.இஸ்ரேலின் இந்த தாக்குதலில் 50000 வீடுகள்,800 தொழிற்சாலைகள்,200 பாடசாலைகள்,39 பள்ளிவாசல்கள் மற்றும் இரண்டு தேவாலயங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன.

சின்தியா மக்கீனி 
5. ஐ.நா.வில் ஆகக் கூடிய எதிர்ப்பு ஆனால்...

  • ஐக்கிய நாடுகள் சபை 1945 இல் உருவாக்கப்பட்டு நடைமுறைக்கு வந்த பின் பொதுச் சபையில் கொண்டு வந்த 700 பொதுச் சபை தீர்மானங்களில் 450 தீர்மானங்கள் இஸ்ரேலுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து நிறைவேற்றப்பட்டவையே ஆகும்.இது வரை ஐ.நா.வில் ஒரு முஸ்லிம்  நாட்டுக்கு எதிராக பொதுச் சபையில் தீர்மானகள் நிறைவேற்றப்பட்டு இல்லை.

6. அமெரிக்காவின் கோரிக்கைக்கு எதிர்ப்பு.

  • மேற்குக் கரையில் இஸ்ரேல் சட்டவிரோத குடிய்ற்றங்களை நிறுத்தவேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி மேற்கொண்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

7.ஓரினச்சேர்க்கையாளர்களின் சொர்க்க பூமி.

  • மத்திய கிழக்கில் ஓரினச்சேர்க்கை குற்றமாக கருதப்படாமல் ஊக்குவிக்கப்பட்டு வருடாவருடம் பகிரங்கமாக நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் ஒரே ஒரு நாடு இஸ்ரேலாகும்.உலகில் இஸ்ரேலிலே ஒரு விலைமாதுக்கு தனி நபர் நுகர்வு அதிகம்.மேலும் இதன் காரணமாக பாலுறவு சம்பந்தப்பட்ட நோய்கள்,கருக்கலைப்பு என்பன இஸ்ரேலில் உச்சத்தை தொட்டுள்ளன.ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்களை முறை தவறிப் பிறந்தவர் என்றும் மர்யம்(அலை) அவர்களை விபச்சாரி என்றும் இஸ்ரேலிய மீடியாக்கள் சித்தரிக்கின்றன(அஸ்தஹ்பிருல்லாஹ்).இங்கு வருடா வருடம் இடம்பெறும் ஓரினச்சேர்க்கையாளர்களின் ஒன்று கூடலில் பகிரங்கமாக அனைத்து விதமான அனாச்சாரங்களும் இடம்பெறுகின்றன.இஸ்ரேலுக்கு உலகம் முழுதும் ஆதரவு திரட்டி திரியும் அமெரிக்காவின் CHRISTIAN UNITED FOR ISRAEL என்ற அமைப்புக்கு ஏன் இவை புலப்படுவதில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது.
2009 இல் இடம்பெற்ற GAY PRIDE PARADE ஊர்வலத்தில்

8.அமெரிக்காவின் இராணுவ ரகசியங்கள் விற்கப்பட்டமை.

  • அமெரிக்காவும் இஸ்ரேலும் நீண்ட நாள் நண்பர்களாக இருந்தாலும் இஸ்ரேல் முழு உலகை எப்படி எந்நேரமும் கவனித்துக் கொண்டு இருக்குமோ அதுபோல் அமெரிக்காவையும் கண்காணித்துக் கொண்டே இருக்கும்.இப்படி கண்காணிக்கப்பட்டு சேகரிக்கப்பட்ட பல தகவல்களை இஸ்ரேல் அமெரிக்காவின்  எதிரிகளான ரஷ்யா மற்றும் சீனாவுக்கு வழங்கிய சம்பவம் அமெரிக்க மக்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.இந்த நம்பிக்கை துரோகத்தை செய்தவன்  நம்பிக்கை துரோகத்திலே உருவான நாட்டின் குடிமகனான ஜோனதன் போலார்ட் என்பவனாவான்.
ஜோனதன் போலார்ட்

9.பலஸ்தீன மக்கள் மீதான அடக்குமுறை.

  • இஸ்ரேலானது பலஸ்தீன மக்கள் மீது பாரிய அளவில் அடக்குமுறைகளை கட்டவிழ்த்து அவர்களை ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் அடக்கி வருகிறது.இந்த அடக்கு முறை மூலம் ஆட்கடத்தல்,முற்றுகை,நாடு இரவில் வீடுகளை சோதனை செய்தல் ,எந்தவிதமான காரணமும் இன்றி கைது செத்தல் என்பன அடங்கும்.சட்விரோத குடியேற்றவாசிகள் தொடந்தும் பலஸ்தீன மக்களின் ஒலிவ் மர தோட்டங்களுக்கு செய்யும் அநியாயம்  தொடர்ந்து கொண்டே செல்கிறது.



10.உடல் உருப்பு திருட்டு.


  • இந்த விடயம் உலக  மீடியாக்களில் பரவலாக பேசப்பட்ட ஒரு மிகமுக்கியமான விடயமாகும்.இஸ்ரேலில் சோதனைச் சாவடிகளிலும் நாடு இரவு வீச்ச சோதனைகளிலும் கைது செய்யப்படும் பல பேரின் உடல் உறுப்புக்கள்  திருடப்பட்டு வருகின்றது.

இந்த ஆக்கத்தை வாசித்தமைக்கு நன்றி.தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டவும்  திருத்திக்கொள்கிறேன்.
ஜசாகல்லாஹு ஹேர்.

உங்கள் நண்பன்
எம்.ஹிமாஸ் நிலார்