Monday, July 11, 2011

நாளைய சக்தி இஸ்லாம்

  இஸ்லாத்தின் வெற்றி நிச்சயமானது என்பது பற்றி வந்துள்ள சுபசோபனங்களைப் பற்றி நாம் பேச வேண்டி இருக்கிறது. அவற்றை முஸ்லிம்கள் மத்தியில் பரப்பி, அவர்களது மனோதிடத்தைப் பலப்படுத்தி எதிர்பார்ப்புகள் கொடுப்பதோடு, அவர்களது உள்ளங்களையே பாழாக்கி விடக் கூடிய நம்பிக்கையின்மையைப் போக்க வேண்டியுள்ளது.

இஸ்லாத்தின் வெற்றி சம்பந்தமாக வந்துள்ள சுபசோபனங்கள் ஏராளம். அவற்றுள் சில அல்குர்ஆன், நபிகளாரின் வழிகாட்டல்கள் என்பற்றில், காணப்படுகின்றன. இன்னும் சில வரலாற்றிலும் நடைமுறையிலும் பிரதிபலிக்கின்றன. மேலும் சில அல்லாஹ் தனது படைப்புகளில் ஏற்படுத்தியுள்ள நியதிகளிலும் நிலைத்திருக்கின்றன


அல்குர்ஆனின் சுபசோபனங்கள் (முன்னறிவிப்புக்கள்)


 இஸ்லாத்திற்கு உதவி செய்வதாகவும், காபிர்கள் வெறுத்த போதிலும் தன்னுடைய ஒளியைப் பூரணப்படுத்துவதாகவும், அவ்வாறே இணை வைப்பாளர்கள் விரும்பாத போதிலும் இஸ்லாத்தை அனைத்து மதங்களை விடவும் உயர்ந்ததாக ஆக்குவதாகவும் அல்லாஹ் அல்குர்ஆனில் தனது நல்லடியார்களுக்கு அளித்துள்ள இவ்வாக்குறுதிகளை, இவ்வெற்றிச் செய்திகளின் ஆரம்பமாகக் குறிப்பிடலாம்.

 சூரா அத் தவ்பாவில், அல்லாஹ்வை விட்டு தங்களது சந்நியாசிகளையும் பாதிரிகளையும் கடவுளர்களாக எடுத்துக் கொண்டு, தங்களது மார்க்கத்தைத் திரிவுபடுத்திய அஹ்லுல் கிதாப்கள், (யூத கிறித்தவர்கள்) முஷ்ரிக்குகள் பற்றியும் அடுத்த மனிதர்களது சொத்துக்களைத் தவறான முறையில் புசிப்பவர்கள் பற்றியும் அல்லாஹ்வின் பாதையை விட்டும் மக்களைத் தடுப்பவர்கள் பற்றியும், கூற வந்த அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது :

 அவன் தான் என்னுடைய தூதரை நேரான வழியைக் கெண்டும் சத்திய மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பி வைத்தான். இணை வைத்து வணங்குவோர் (அதனை) வெறுத்த போதிலும் (உலகிலுள்ள) எல்லா மார்க்கங்களையும் அந்தச் சத்திய மார்க்கம் வெற்றி பெற்றே தீரும். [சூரா தவ்பா 32,33]

 இணை வைப்பவர்களிலும் வேதம் கொடுக்கப்பட்டவர்களிலும் உள்ள அல்லாஹ்வை நிராகரிப்பவர்களான காபிர்களே அல்லாஹ்வின் ஒளியை அணைக்கப் பார்க்கின்றார்கள். இங்கு ஒளி என்பது நபிகளாருக்குக் கொடுக்கப்பட்ட சத்திய வழி முறையையே குறிக்கும். ஆனால் நபிகளாரின் தூது இவ்வுலகில் பூரணத்துவம் பெற்று வெற்றியடைவது நிச்சயமான ஒரு விடயமாகும். இதன் காரணமாக காபிர்களுக்கு எதிராக அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்.


 அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர்; ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான்.[61:8]


சத்திய மார்க்கம் என்பது இம்மையிலும் மறுமையிலும் பயன் தரக் கூடிய சீரான நல்லமல்களாகும்.

அனைத்து மதங்களையும் மிகைப்பதற்காகவே அனுப்பி வைத்தான் என்ற பதம் உலகில் ஏனைய மதங்கள், கோட்பாடுகள் அனைத்தையும் ஆக்கிரமித்த சக்தியாக இஸ்லாத்தை ஆக்குவதையே குறிக்கும். நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள் :


''இப்புவியின் கிழக்குப் பகுதிகள் மேற்குப் பகுதிகள் அனைத்தையும் அல்லாஹ் எனக்கு சுருக்கிக் காண்பித்து விட்டான். எதிர்காலத்தில் எனது சமூகத்தின் ஆதிக்கம் எனக்குக் காட்டப்பட்ட உலகின் எல்லாப் பகுதிகளையும் சென்றடையும்.'' (ஸஹீஹ் முஸ்லிம், அல் ஃபிதன் வஅஷ்ராதுஸ் ஸாஆ, ஹதீஸ் எண் 19, அபூதாவூத் 4225.)

மஸ்ஊத் பின் கபீஸா அல்லது கபீஸா பின மஸ்ஊத் என்பவரின் அறிவிப்பொன்று முஸ்னதில் பதிவாகியுள்ளது.



''ஒரு குழுவினர் சுப்ஹுத் தொழுகையை நிறைவேற்றி முடித்த போது அங்கிருந்த வாலிபர்களில் ஒருவர் நபிகளார் கூறியதாகப் பின்வருமாறு மொழிகின்றார். பூமியின் கிழக்குத் தேசங்கள், மேற்குத் தேசங்கள் அனைத்துமே உங்களால் வெற்றி கொள்ளப்படும். அங்கு தமது காரியங்களில் அல்லாஹ்வுக்கு இறையச்சத்துடனும் நேர்மையுடனும் நடப்பவர்களைத் தவிர மற்றவர்கள் நரகம் செல்வர்.''(முஸ்னத் அஹ்மத் பாகம் 5 : பக்கம் 366)

''தமீம் அத்தாரி அறிவிக்கின்றார் இஸ்லாத்தைத் தழுவியவர் நன்மைகளையும், கண்ணியத்தையும், பெருமையையும் பெற்றுக் கொண்டார். காபிர்கள் இழிவையும், சிறுமையையும் அடைந்து ஜிஸ்யா வரியையும் செலுத்த வேண்டிய நிலைக்கு உள்ளானார்கள். இதனை நான் எனது குடும்பத்திலிருந்தே அறிந்து கொண்டேன். (முஸ்னத் அஹ்மத் பாகம் 4 : பக்கம் 103) 


அதீ இப்னு ஹாதிம் (ரலி) கூறுகின்றார்கள் : நான் நபிகளாரிடம் வந்த போது, அதீ இஸ்லாத்தை ஏற்றுக் கொள், பாதுகாப்புப் பெற்றுக் கொள் என்றார்கள். அதற்கு நான், நானும் ஒரு மதத்தைப் பின்பற்றுபவன் தானே என்றேன். உனது மதத்தைப் பற்றி உன்னை விட நான் நன்கு அறிந்தவன் என கூறி விட்டு, உன்னை இஸ்லாத்தை  விட்டும் தடுப்பது என்னவென்று எனக்குப் புரிந்து விட்டது. அதனைப் பின்பற்றுபவர்கள் எந்தவித சக்தியுமற்ற பலவீனர்கள், அரபிகளோ அதனைப் பின்பற்றும் முஸ்லிம்களை ஒதுக்கி விட்டார்கள் எனக் கூறிய ரசூலுல்லாஹ், ஹைரா என்ற பிரதேசத்தை உனக்குத் தெரியுமா? என வினவினார்கள். நான் நேரில் கண்டதில்லை. ஆனால் கேள்விப்பட்டிருக்கின்றேன் என விடை கூறினேன். பின்பு அல்லாஹ்வின் தூதர் பின்வருமாறு கூறினார்கள்.

எனது ஆத்மாவைத் தன்வசம் வைத்திருப்பவன மீது சத்தியமாக! நிச்சயமாக அல்லாஹ் இந்தத் தீனைப் பூரணப்படுத்துவான். எந்த அளவுக்கென்றால் ஹைரா என்ற இத்தூரப் பிரதேசத்திலிருந்து ஒரு பிரயாணி வழியில் யாருக்கும் அஞ்சாது, தனிமையாக மக்கா சென்று கஃபாவை தவாப் செய்து விட்டுத் திரும்புவார்கள். நிச்சயமாக பாரசீக மன்னனான கிஸ்ர இப்னு ஹுர்முஸுடைய கஜானாக்கள் வெற்றி கொள்ளப்படும். கிஸ்ராவுடையதா? என நான் கேட்க ஆம் எனக் கூறி விட்டு, பிற்காலத்தில் ஸகாத் ஸதகாவாக செல்வங்கள் அதிகமாக செலவிடப்படும். ஆனால் அதனைப் பெறத் தகுதி வாய்ந்தவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.

அதீ இப்னு ஹாதிம் கூறுகிறார் :

உண்மையில் நபிகளார் கூறியவாறே, பிற்காலத்தில் ஒரு பிரயாணி யாருக்கும் பயப்படாதவனாக தனிமையில் ஐஹரா என்ற தூரப் பிரதேசத்திலிருந்து புறப்பட்டு மக்கா வந்து கஃபாவை தவாப் செய்து விட்டுச் செல்கின்ற நிலையை நான் பார்த்தேன். மேலும் கிஸ்ரா மன்னனது கஜானாக்கள் வெற்றி கொண்டவர்களில் நானும் இருந்தேன். அல்லாஹ்வின் தூதர்  மீது சத்தியமாக ரசூலுல்லாஹ் கூறிய மூன்றாவது நிகழ்வும் நடந்தே தீரும்.(முஸ்னத் அஹ்மத் பாகம் 4 : பக்கம் 257 (கலீபா உமர் பின் அப்துல் அஜீஸ் அவர்களின் காலப்  பகுதியில் இவ்விடயம் நடைமுறையாகியதை வரலாறு உயிர்ப்பிக்கின்றது.))

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் :

இரவு பகல் இருக்கும் காலமெல்லாம் லாத், உஸ்ஸா போன்ற சிலைகளும் வணங்கப்பட்டுக் கொண்டேஇருக்கும் என நபிகளார் கூறிய போது, அல்லாஹ் தனது தூதரை நேர்வழியைக் கொண்டும் சத்திய மார்க்கத்தைக் கொண்டும் இவ்வுலகிற்கு அனுப்பி வைத்துள்ளான், என்ற வசனம் இறங்கியவுடன் (இவ்வுலகில் சிலை வணக்கமெல்லாம் ஒழிந்து) இம்மார்க்கம் பூரண வெற்றியைப் பெற்று விட்டதென்றல்லவா?! நான் எண்ணிக் கொண்டிருக்கின்றேன் என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் - அல்லாஹ் எதுவரை பூரண வெற்றியுடன் இஸ்லாம் இருப்பதற்கு நாடி இருக்கின்றானோ அதுவரை தான் அந்நிலை காணப்படும். பின்பு தூய காற்றொன்றை அனுப்பி யாருடைய உள்ளத்தில் கடுகளவேனும் ஈமான் காணப்படுகின்றதோ அவர்கள் மரணிக்கச் செய்து விடுவான். தீங்கு செய்து கொண்டிருப்பவர்களே எஞ்சியிருப்பர். அவர்களோ தங்களது மூதாதையரின் வழிமுறைக்கே மீண்டு செல்வார்கள்.(ஸஹீஹ் முஸ்லிம், அல் ஃபிதன் வஅஷ்ராதுஸ் ஸாஆ, ஹதீஸ் எண் 72.)

இக்கருத்துத் தான் சூரத்துஸ் ஸஃப் 8, மற்றும் 9 ஆம் வசனங்களிலும் ஸுரத்துல் பத்ஹ் ன் 28 ம் வசனத்திலும் கூறப்டுகின்றது.

 இஸ்லாத்தின் வெற்றி பற்றி சுபசோபனங்களில் பின்வரும் குர்ஆன் வசனமு; இடம்பெறுகிறது. 

 ''அல்லாஹ் உங்களில் ஈமான் கொண்டு நல்லமல்களில் ஈடுபடுவோருக்கு பின்வருமாறு வாக்குறதியளிக்கின்றான். இதற்கு முன்னர் இருந்தோரை ஆக்கியது போன்று நிச்சயமாக அவன் அவர்களையும் இப்பூமியில் கலீபாக்களாக ஆக்கி வைப்பான். அவர்களுக்காக அவன் பொருந்திக் கொண்ட இஸ்லாத்தை ஆட்சிக்குரிய அந்தஸ்திலும் ஆக்கி வைப்பான். அச்சமான சூழ்நிலையிலிருந்து அவர்களை அவனுக்கு இணை-ஷிர்க் வைக்காது அவனை மாத்திரமே வணங்குவார்கள். அதற்குப் பின்னரும் யாராவது நிராகரித்தால் அவர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தை புறக்கணித்த பெரும்பாவிகளாவார். (அல்குர்ஆன் சூரா அந்நூர் : 24:55)

 இவ்வசனத்திற்கு விரிவுரை கூறவந்த இப்னு கஸீர் (ரஹ்) பின்வருமாறு கூறுகின்றார். நபிகளாரின் சமூகத்தை இப்புவியின் கலீபாக்களாகவும், மக்களைப் பொறுப்பேற்று தலைமை தாங்கிச் செல்லக் கூடியவர்களகாகவும் ஆக்குவதாகக அல்லாஹ் தனது தூதருக்கு வழங்கிய வாக்குறதியே அதுவாகும். அதாவது மக்களின் தலைவர்களாகவும், அவர்களின் பொறுப்புதாரர்களாகவும் ஆக்குவதாகக் கூறுகின்றான். இறையடியார்கள் அவர்களுக்குக் கட்டுப்பட்டு நடப்பர். எனவே அச்சமான நிலையிலிருந்து அவர்களை பாதுகாப்பான ஒரு கட்டத்ததை அடையச் செய்து, மக்கள் மத்தியில் நீதி செலுத்தக் கூடியவர்களாகவும், அவர்களை ஆக்குவதாக அல்லாஹ் அளித்த உறுதியே மேற்கூறப்பட்ட வசனமாகும். அந்த இறைவனுக்கே புகழும் கீர்த்தியும். உண்மையில் அவன் வாக்குறுதியை நடைமுறைப்படுத்திக் காட்டியும் விட்டான்.நபிகளார் (ஸல்) மரணிப்பதற்கு முன்னரே மக்கா, கைபர், பஹ்ரைன், அரபுத் தீபகற்பத்தின் ஏனைய பகுதிகள், எமன் பிரதேசத்தின் முழுமையும் அவர்களின் வசமாகியது. அவ்வாறே ஹஜர் பிரதேசத்து மஜுசி (நெருப்பு வணங்கி)களிடமிருந்தும், ஷாமின் சில பிரிவினரிமிருந்தும் ஜிஸ்யா வரி வசூலிக்கப்பட்டது. மேலும் ரோம் நாட்டு மன்னன் ஹிர்கல், எகிப்து, அலெக்சாந்திரியா ஆகியவற்றுக்கு சொந்தம் கொண்டாடிய முகவ்கிஸ், உம்மான் பிரதேச அரசர்கள், அபீசினியா மன்னர் நஜ்ஜாஷி போன்றோர் நபிகளாருக்குப் பரிசுப் பொருட்களையும் அனுப்பி வைத்தனர்.

 இறைதூதர் (ஸல்) அவர்கள் மரணித்த போது கலீபா அபூபக்கர் ஸித்தீக் (ரலி) அவர்கள் கிலாபத் (இஸ்லாமியத் தலைமைத்துவப்) பொறுப்பை ஏற்கிறார். நபிகளார் செப்பனிட்டு வைத்த இடத்திலிருந்து ஆரம்பிக்கிறார். பாரசீகத்துக்கு காலித் பின் வலீதின் தலைமையில் ஒரு படையை அனுப்பி, அவர்கள் அதன் சில பகுதிகளை வெற்றி கொள்கிறார்கள். அவ்வாறே அபூ உபைதா (ரலி) அவர்களினதும் இன்னும் பல தலைவர்களின் கண்காணிப்பிலும் சிரியாவுக்குப் படை அனுப்பி வைக்கப்படுகின்றது. மூன்றாவது படை அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி) அவர்களின் தலைமையில் எகிப்தை நோக்கி அனுப்பி வைக்கப்படுகின்றது. அபூபக்கர் (ரலி) அவர்கள் உயிரோடு இருக்கும் போதே சிரியா சென்ற படை, பஸ்ரா, டமாஸ்கஸ், ஹவ்ரான், அதனை அடுத்துள்ள பிரதேசங்களையெல்லாம் வெற்றி கொள்கிறது.

அபூபக்கர் (ரலி) அவர்ள் காலமாகின்றார்கள். உமர் (ரலி) அவர்களைக் கலீபாவாக அபூபக்கர் (ரலி) அவர்கள் மூலம் அல்லாஹ் நியமித்து, இந்த இஸ்லாமிய சமூகத்திற்கு பேரருள் புரிந்தான். நபிமார்களுக்குப் பின்னர் இவ்வுலகம் சீரிய நடத்தை கொண்ட பூரண நீதி செலுத்திய ஒரு தனிநபரை உமரிலேயே கண்டு கொண்டது. அவரது காலப்பிரிவில் சிரியா பிரதேசம் முழுவதும், எகிப்தின் கடைசி எல்லை வரை உள்ள பகுதி, பாரசீகத்தின் அதிகமான மாகாணங்கள் என்பன வெற்றி கொள்ளப்பட்டன. கிஸ்ரா மன்னன் முறியடிக்கப்பட்டு, மிக கீழ்மட்டத்திற்கு தாழ்த்தப்பட்டு அவனது முடியாட்சியின் எல்லைப் பகுதிக்கு பின்வாங்கி ஓடச் செய்யப்பட்டான். சிரியா பிரதேசத்தின் கைஸர் மன்னனது அதிகாரம் பிடுங்கி எறியப்பட்டது. அவன் கொன்தாஸ்து நோபிளை நோக்கி புறமுதுகு காட்டி ஓடி விட்டான். அம்மன்னர்கள் இருவரது சொத்துக்களும் அல்லாஹ்வின் பாதையில் செலவிடப்பட்டன. இவைகள் அனைத்தும் அல்லாஹ் நபிமார்களுக்கு வாக்களித்ததைப் போன்றே நடந்து முடிந்தது.

உஸ்மான் (ரலி) அவர்களது காலப்பகுதியில் உலகின் தூரப் பிரதேசங்களுக்கெல்லாம் இஸ்லாமிய சாம்ராஜ்யம் பரவலாகியது. மொராக்கோவிலிருந்து சீனா வரையுள்ள பிரதேசங்கள் இஸ்லாமிய ஆட்சிக்குட்பட்டன. கிஸ்ரா மன்னனும், அவனது ஆட்சியும் பூண்டோடு அழிக்கப்பட்டன. மேலும் ஈராக்கின் மதாயின் பிரதேசம், குராஸான், அஹ்வாஸ் போன்ற பகுதிகளும் கைப்பற்றப்பட்டன. உலகின் மேற்குப் பிரதேசங்கள், கிழக்குப் பிரதேசங்கள் அனைத்திலிருந்தும் கலீபாவை நோக்கி வருமானங்கள் வந்து குவிந்து கொண்டிருந்தன. இது குர்ஆனை ஓதி, அதனைக் கற்று, அதனை ஒன்றிணைந்து தனது சமுதாயத்திற்காக குர்ஆனைப் பாதுகாத்ததினால் கிடைக்கப் பெற்ற அருளாகும். எனது சமூகத்தின் ஆதிக்கம் எனக்கு சுரக்கிக் காண்பிக்கப்பட்டது. அது புவியின் கிழக்கு, மேற்கு நாடுகளுக்கெல்லாம் சென்றடையும் என்ற அந்த சுபச்செய்தி ஒரு நூற்றாண்டு முடிவடைவதற்குள் நிகழ்ந்து முடிந்ததைக் காண்கிறோம்.

முஃமின்களுக்கு அளிக்கப்பட்ட இவ்விறைவாக்கு நிரந்தரமானது அவசியம் இடம் பெறக் கூடியது. குலபாஉர் ராஷிதீன்களின் காலத்தில் கிடைத்த வெற்றி அந்தஸ்து அவர்களைத் தொடர்ந்து வந்தோருக்கும் கிடைப்பது நிச்சயமே ஏனெனில் அல்லாஹ் ஒரு போதும் வாக்கு மீற மாட்டான். எனது இரட்சகனின் வாக்கு என்றைக்கும் சத்தியமானதே. (சூரா கஃப் - 98) ஆனால் இங்கு அல்லாஹ்வின் வாக்கு பல நிபந்தனைகளை வேண்டி நிற்கின்றது. ஈமான், நல்லமல்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே இபாதத் செய்தல், வேறு யாரையும் அவனுக்கு இணை ஆக்காதிருத்தல் என்பனவே அந்நிபந்தனைகளாகும். எனக்கு இபாதத் செய்வார்கள். எவரையும் என்னோடு இiணாயக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். (சூரா அந்நூர் : 55).





மனிதர்கள் இஸ்லாம் சத்தியமானது என விளங்கிக் கொள்வதற்காக பிரபஞ்சத்திலிருந்தும் அவர்களிலிருந்தும் அத்தாட்சிகளைக் காணிப்போம். (சூரா : புஸ்ஸிலத் : 53) என்ற வசனமும் சுபச் செய்தியே ஆகும்.

நாங்கள் பார்க்கின்ற செவிமடுக்கின்ற, உணர்கின்ற எல்லா அம்சங்களிலிருந்தும் அல்லாஹ்வின் இவ்வாக்குறுதி எல்லாக் காலங்களிலும் வெளியிடப்படுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

எத்தனையோ பௌதீக, கணிதவியல் ஆராய்ச்சிகள் அல்குர்ஆனின் அறிவியல் அற்புதத் தன்மையை புதிய கண்ணோட்டத்தில் விளங்க வைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. முஸ்லிம்கள் அல்லாத அறிஞர்கள் கூட இவ்வாராய்ச்சிகளில் பிரதிபலிக்கும் ஆழமான சிறந்த கருத்துக்களை ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்பதை நாம் மறுக்க முடியாது.


வரலாற்றில் சில தீர்ப்புக்கள்


 அல்குர்ஆன் நபிமார்களுக்கும் அவர்களைப் பின்தொடர்ந்தோர்க்கும் ஏற்பட்ட வெற்றிமிக்க முடிவையும் அவர்களை மறுத்தோருக்கு ஏற்பட்ட அழிவையும் சித்தரிக்கின்றது. இதிலிருந்து நாம் பயன்மிக்க படிப்பினைகளைப் பெறுவது அவசியம்

அல்லாஹ் பலவீனமான இஸ்ரவேலர்களுக்கு மூஸா (அலை) அவர்கள் மூலம் வெற்றியைக் கொடுத்தான். அட்டூழியம் புரிந்து கொண்டிருந்த பிர்அவ்ன் அழிவுக்குட்படுத்தினான்.

 ''நிச்சயமாக ஃபிர்அவ்ன் இப்பூமியில் பெருமையடித்துக் கொண்டு, அந்த பூமியிலுள்ளவர்களைப் (பல) பிரிவினர்களாக்கி, அவர்களிலிருந்து ஒரு கூட்டத்தாரை பலஹீனப்படுத்தினான்; அவர்களுடைய ஆண் குழந்தைகளை அறுத்(துக் கொலை செய்)து பெண் குழந்தைகளை உயிருடன் விட்டும் வைத்தான்; நிச்சயமாக அவன் குழப்பம் செய்வோரில் ஒருவனாக இருந்தான். ஆயினும் (மிஸ்று) பூமியில் பலஹீனப் படுத்தப்பட்டோருக்கு நாம் உபகாரம் செய்யவும், அவர்களைத் தலைவர்களாக்கிவிடவும் அவர்களை (நாட்டுக்கு) வாரிசகளாக்கவும் நாடினோம். இன்னும், அப்பூமியில் அவர்களை நிலைப்படுத்தி ஃபிர்அவ்னும், ஹாமானும், அவ்விருவரின் படைகளும் இவர்களைப்பற்றி எ(வ் விஷயத்)தில் பயந்து கொண்டிருந்தார்களோ அதைக் காண்பிக்கவும் (நாடினோம்). (சூரா : அல்கஸஸ் : 4,5,6)

 இங்கு அல்லாஹ் பிர்அவ்னையும் அவனைச் சூழவுள்ள பரிவாரங்களையும் பார்த்துப் பரிகசிக்கின்றான். ஏனெனில் தனது ஆட்சிக்கு எதிராக யாரும் உருவாகி விடாமல் இருக்கவே பனூ இஸ்ராயீல்களில் தோன்றிய ஆண் குழந்தைகளையெல்லாம் கொன்று குவித்தான். ஆனால் எதிர்பார்க்கப்பட்ட குழந்தை அவனது விருப்பத்துடனேயே அவனது நேரடிக் கண்காணிப்பில், அவனது அரண்மணையிலேயே வளர்கிறது. ஆனால் இக் குழந்தைதான் தனது எதிரியென பிர்அவ்ன் இனங் கண்டு கொள்ள முடியவில்லை.

 பிர்அவ்ன் குடும்பத்தினர் தங்களுக்கு எதிரியாக, துன்பம் ஏற்படுவதற்குக் காரணமாகக இருப்பதற்காகவே மூஸா (அலை) அவர்களை எடுத்துக் கொண்டனர். நீச்சயமாக பிர்அவ்ன், ஹாமான் இருவரினதும் பரிவாரங்கள் பெரும் தவறிழைத்தோராகவே இருந்தனர். (சூரா கஸஸ் : 8)

மேலும் குர்ஆன் மூஸா (அலை) போன்றவர்களைப் பற்றி விளக்கமாக கூறும் எல்லாமே உண்மையான இடம் பெற்றன. மூஸாவும் அவரது சகோதரர் ஹாரூனும் பிர்அவ்னுக்கும், அவனது கோத்திரத்தாருக்கும் தூதர்களாக அனுப்பி வைக்கப்பட்டனர். மூஸா (அலை) பெரும் சவாலாகவே பிர்அவ்னுக்குத் தொடர்ந்தும் இருந்து, இறுதியாக அவன் மூஸாவிற்கு எதிராக அழைத்த மந்திரவாதிகளே, அவனது இறுதித் தோல்விக்கு காரணமாக மாறி விட்டனர். ஏனெனில் கீழ்வருமாறு கூறிய வண்ணம் அவர்கள் சுஜுதில் விழுந்தார்கள். இவ்வுலக இரட்சகனும், மூஸா, ஹாரூன் ஆகியோரினது இரட்சகனுமாகிய அல்லாஹ்வை அவன் ஈமான் கொண்டு விட்டான். (சூரா அல் அஃராப் : 121,122)

 உடனே பிர்அவ்ன் பைத்தியம் பிடித்தவனைப் போன்று ஆகி விட்டான். மந்திரவாதிகளை அச்சுறுத்தினான். கோபத்தால் கொதித்துப் போனான்.

எதிரிகள் மோப்பம் பிடித்து வரலாம் என்பதற்காக அல்லாஹ் இரவிலேயே தனது அடியார்களை நாட்டை விட்டு கூட்டிச் சென்று விடுமாறு மூஸா (அலை) அவர்களுக்குக் கட்டளையிட்டான். பின்னர் மூஸாவுக்கு நாம வஹீ அறிவித்தோம். (இஸ்ராயீலின் சந்ததிகளாகிய) என்னுடைய அடியார்களை அழைத்துக் கொண்டு நீர் இரவோடிரவாகச் சென்று விடும். எனினும், நிச்சயமாக அவர்கள் உங்களைப் பின்தொடர்ந்தே வருவார்கள். (அவ்வாறு அவர்கள் சென்று விடவே) பிர்அவ்ன் பல ஊர்களுக்கும் (ஜனங்களை அழைக்கப்) பறைசாற்றுவோரை அனுப்பி வைத்து, நிச்சயமாக (இஸ்ராயீலின் சந்ததிகளாகிய) இவர்கள் வெகு சொற்பத் தொகையினரே, (அவ்வாறிருந்தும்) அவர்கள் நம்மைப் கோபத்திற்குள்ளாக்கி விட்டனர். நிச்சயமாக வாங்ள் பெருந்தொகையினர் அத்துடன் மிக்க எச்சரிக்கையுடையவர்கள் (என்று கூறிய, பல ஊhகளையும் ஒன்று திரட்டிக்கொண்டு இஸ்ராயீலின் சந்ததியினரைப் பின்தொடர்ந்து சென்றான்) இவ்வாறு அவர்களுடைய தோட்டங்களிலிருந்தும் துரவுகளிலிருந்தும் நாம் அவர்களை வெளியேற்றி விட்டோம். (அவர்களுடைய பொக்கிஷங்களிலிருந்தும், மிக்க நேர்த்தியான வீடுகளிலிருந்தும் (அவர்களை வெளியேற்றினோம்). இவ்வாறு இஸ்ராயீலின் சந்ததிகளை அவைகளுக்கு அனந்தரக்காரராகவும் ஆக்கி விட்டோம். (சூரா அஷ்ஷ}அரா : 53,59).

முஃமின்களுக்கு வெற்றியைக் கொடுப்பதும் பாதுகாப்பை வழங்குவதும் அல்லாஹ்வின் பொறுப்பு முஃமின்களுக்கு வெற்றியைக் கொடுப்பதோடு, அவர்களைப் பாதுகாப்போம் என்பது பொதுவாகக் குர்ஆன் கூறும் சுபச் செய்தியாகும்.

''நிச்சயமாக முஃமின்களுக்கு வெற்றியைக் கொடுப்பது என்பது எங்கள் மீது கடமையாகவிருக்கிறது.'' (சூரா அர் ரூம் :47)

நாங்கள் ரசூல்மாரையும் அவர்களை ஈமான் கொண்டோரையும் பாதுகாப்போம். அவ்வாறே இனிமேல் வரக் கூடிய முஃமின்களைப் பாதுகாப்பதும் எங்கள் மீது கடமையாகும். (யூனுஸ் : 103).

நிச்சயமாக அல்லாஹ் ஈமான் கொண்டோரைப் பாதுகாப்பான். (சூரா : அல்ஹஜ் : 38)

நிச்சயமாக அல்லாஹ் ஈமான் கொண்டோருக்குப் பொறுப்பாக இருக்கின்றான். அவர்களை இருளிலிருந்து ஒளியை நோக்கி வெளியேற்றுகின்றான் (சூரா அல் பகரா : 257)

காபிர்களைப் பார்த்து, உங்களது குழு எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அதனால் உங்களுக்கு எந்தப் பயனையும் தர முடியாது. ஏனெனில் அலலாஹ் முஃமின்களோடு இருக்கின்றான். (சூரா அன்ஃபால் : 19)

மேலே கூறப்பட்ட வாக்குகள் முஃமின்களுக்கு பெரும் சோதனைகளும் இன்னல்களும் இடம்பெறுகின்ற போதே தெரியவரும் சொத்துக்களில் சேதங்கள், உடல் ரீதியான அபாயங்கள், உயிர்ச் சேதங்கள் போன்றவை ஏற்படும் போதே இந்த வெற்றி முஃமின்களுக்கு இன்னும் அன்மித்து வரும்.

உங்களுக்கு முன்னர் இரந்தவர்களுக்கு இடம் பெற்ற சோதனைகள் போன்று உங்களுக்கும் வராத நிலையில் நீங்கள் சுவர்க்கத்தில் நுழைந்து விடலாம் என எண்ணிக் கொண்டிருக்கின்றீர்களா? இறைத்தூதரும் முஃமின்களும், அல்லாஹ்வின் உதவி எப்போது வருமென அங்கலாய்க்கும் வரைக்கும் சோதிக்கப்பட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி மிக அண்மையிலேயே இருக்கின்றது. (சூரா அல்பகரா : 214).

வெற்றியின் தாமதமே இறைத்தூதரையும், முஃமின்களையும் எப்போது உதவி வரும்? என அங்கலாய்க்க வைக்கிறது. இது மனிதனது அவசரத்தன்மையினால் எழுகின்ற கேள்வியாகும். ஆனால், அவ்வெற்றி அண்மையிலேயே இருக்கிறது என அல்லாஹ் ஆறதல் படுத்துகிறான். அவனிடம் அனைத்தும் திட்டமிடப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. சற்று முன்னரோ, தாமதித்தோ அல்லாமல் சரியான நேரத்திற்கே அவனது நியதி செயற்படும். நாங்கள் பொய்ப்படுத்தப்பட்டு விட்டோம் என இறைத்தூதர்கள் எண்ணி, நம்பிக்கை இழந்திருந்த வேளையில் அல்லாஹ்வின் உதவி வருகிறது. அல்லாஹ் நாடியோர் தப்பித்துக் கொண்டனர். பாவிகளான சமூகத்தினரை விட்டும் அல்லாஹ்வின் தண்டனையை யாராலும் தடுக்க முடியாது. (சூரா யூஸுப் :110).

 தூதர்கள் நீண்ட காலமாக அல்லாஹ்வின் உதவியை எதிர்பார்த்திருக்கின்றனர். அவர்கள் எதிர்பார்த்த வேளையில் இவ்வெற்றி வராததால் விரக்தியடைகின்றனர். தாங்கள் பொய்ப்படுத்தப்பட்டு விட்டதாகவும் நம்புகின்றனர். பொய்ப்படுதுவோருக்கு அது வாய்ப்பாக அமைகின்றது. ஆனால் திடீரென அல்லாஹ்வின் வாக்கு நிறைவேறுகின்றது. அவன் விரும்பியோர் பாதுகாக்கப்பட்டு ஏனையோர் தண்டிக்கப்படுகின்றனர்.

 அல்லாஹ்வின் உதவி மனிதர்கள் உச்ச தேவையில் இருக்கும் போதே வரும். அதன் விருப்பம் அதன்பால் மிக அதிகம் காணப்படும் போதே கொண்டு வரப்படுகிறது. மேலும் அல்லாஹ்வின் விதி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதாகும். அந்த வகையில் பாவிகளுக்கு இங்கு தண்டனை வழங்கப்படுகின்றது.

நெருக்கடி உச்சகட்டத்தை அடைந்த பின்னரே விடுதலைக்கான வழி திறக்கப்படுகிறது என்பது முஃமின்களின் உள்ளங்களில் பதிவாகின்றது. இரவின் கடுமையான இருளைத் தொடர்ந்து வரவிருப்பது உதயம் தான்.


அனைத்தையும் மிகைத்து விடும் இஸ்லாம்

ஸுன்னாவின் வழிகாட்டலில்...

  இஸ்லாத்தின் வெற்றி பற்றி வந்துள்ள சுபசோபனங்கள் அனைத்து ஹதீஸ் கிரந்தங்களிலும் அதிகமாகக் காணப்படுகின்றன. பிற்பட்ட கால முஸ்லிம்கள் அவற்றை மறந்து புறக்கணித்து விட்டது மட்டுமின்றி, பித்னாக்கள் தோன்றுவது பற்றியும், மறுமை நாளின் அடையாளங்கள் பற்றியும் வந்துள்ள ஹதீஸ்களையே பிரஸ்தாபித்து வருகின்றனர். இன்று முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள சாதாகமான நிலை, சமூகத்தை அதன் வீழ்ச்சியிலிருந்து எழுச்சி பெறச் செய்வதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் போன்றவற்றிலெல்லாம் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தும் வகையிலேயே நபிகளாரின் போதனைகளை விளங்கிச் செயல்படுகின்றார்கள். நடைமுறையில் இருக்கின்ற நிலைமையை அதைவிடச் சிறந்த உயர்வான நிலைமைக்கு மாற்றியமைப்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கும் சமூகத்தில் இடம் பெறும் மாற்றங்களுக்கும் வழிகோல வந்த சமூகத்தினரிடமிருந்து அம் முயற்சிகளுக்கெதிரான நடவடிக்கைகள் தோன்றுவது அறிவுக்குப் புறம்பான அம்சமாகும்.

 எதிர்காலம் இஸ்லாத்துக்கே என்ற நற்செய்தியை எங்களுக்குத் தெரிவித்திருப்பவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களாவார்கள். அவ்வாறு அறிவித்திருப்பவர் மனோ இச்சைக்கு உட்பட்டுப் பேசக் கூடியவரல்லர்.

''அதே வேளை அல்லாஹ்வுக்குரிய மறைவான அறிவினைப் பெற்றவராகவும் அவர் இல்லை. வானங்கள் பூமியிலுள்ள எவருமே மறைவான விடயங்களை அறிந்தவரல்லர். அல்லாஹ் மட்டுமே அவற்றை அறிந்தவன் என்பதை நபியே நீர் அவர்களுக்குத் கூறுவீராக. (சூரா அந்நம்ல் : 65) என அல்லாஹ் கூறுகின்றான்.''

ஆனால் அல்லாஹ் வஹியினூடாக அறிவித்த மறைவான விசயங்களை நபிகளார் அறிந்திருந்தார்கள் என்பதை அல்குர்ஆன் தெரிவிக்கின்றது. ''மறைவான விசயங்களை அறிந்த அல்லாஹ் அவ்றறைத் தான் விரும்பிய ஒரு ரஸுலுக்கன்றி வேறு எவருக்கும் தெரியப்படுத்த மாட்டான்.,'' (சூரா அல்ஜின் : 26-27).


முழு உலகிலும் இஸ்லாமியப் பிரச்சாரத்தின் பரவல்

ஐரோப்பாவுக்கு இஸ்லாத்தின் வருகை

 அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) அவர்கள் அறிவித்துள்ளதாக இமாம் அஹ்மத் பின்வரும் ஹதீஸைப் பதிவு செய்துள்ளார்கள். நபிகளார் (ஸல்) அவர்கள் கொன்ஸ்தாந்துநொபிள், ரோம் ஆகிய நகரங்களில் எது முதலாவது வெற்றி கொள்ளப்படும் என வினவப்பட்டார்கள். ஹிர்கல் (ஹிர்கல் என்பவன், முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் வழங்கப்பட்ட காலத்தில் பைஸாந்திய ரோம் பிரதேசத்தை ஆட்சி செய்த அரசன் ஆவான். இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும்படி அழைப்பு விடுத்து நபியவர்கள் இம் மன்னனுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பினார்கள். அபூசுப்யான் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளு முன்னர் இவனது சபைக்கு வந்த போது நபியவர்கள் பற்றி இவ்வரசன் கேட்ட நுணக்கமான கேள்விகள் அவனது புத்திக் கூர்மையையம், தூர நோக்கையும் எடுத்துக் காட்டுவனவாக அமைந்திருந்தன. அவ்வினாக்கள் மூலம் நபியவர்கள் உண்மையாளர் என்பது அவனுக்குப் புலனாகியது. என்றாலும் தன்னைச் சூழ இருந்தவர்களின் பிடிவாதமும் இஸ்லாத்தின் மீதான வெறுப்பும் சத்தியத்தைப் பின்பற்றுவதை விட தனது ஆட்சியை மேலாக மதிக்கும் நிலைக்கு அவனைத் தள்ளி விட்டன. இம்மைக்காக மறுமையை அவன் விற்று விட்டான். உமர் (ரலி) அவர்களின் காலப்பிரிவில் சிரியா வெற்றி கொள்ளப்பட்ட போது அதன் பின்னர் உன்னை நான் சந்திக்கவே வாய்ப்பில்லை என சிரியாவுக்குப் பிரியாவிடை கூறி அப்பிரதேசத்தை விட்டுச் சென்றான்.) மன்னனது நகரம் தான் முதலில் வெற்றி கொள்ளப்படும் என ரஸுல் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.(முஸ்னத் அஹ்மத் (ஹதீஸ் எண் : 6645) இமாம் அல்பானி அவர்கள் இந்த ஹதீஸை தமது ஸஹீஹான ஹதீஸ்களின் தொகுப்பில் சேர்த்துள்ளார்கள் (ஹதீஸ் எண் :4)) ரோம் என்பது தற்போதைய இத்தாலியின் தலைநகரான ரோமாபுரியாகும். கொன்ஸ்தாந்து நோபிள் என்பது தற்போதைய இஸ்தான்பூல் நகரமாகும். மேலே வினவப்பட்ட வினாவிலிருந்து நபித்தோழர்கள் இவ்விரு நகரங்களும் வெற்றி கொள்ளப்பட்டு, அந்நகரவாசிகள் இஸ்லாத்தில் நுழைவர் என முன்னரே அறிந்திருந்தனர் என விளங்க முடியும். ஆனால் முதலில் வெற்றி கொள்ளப்படப் போவது எது என அவர்கள் அறிய விரும்பினர். எனவே ரஸுலுல்லாஹ் (ஸல்) அவர்கள் ஹிர்கல் இன் நகரம் - கொன்ஸ்தாந்துநொபிள் - முதலில் வெற்றி கொள்ளப்படுமென பதிலளித்தார்கள்.

 இம்முன்னறிவிப்பு 23 வயது நிரம்பிய உஸ்மானிய சாம்ராஜ்ய இளைஞர் முஹம்மத் பின் முராத் என்பவர் கொன்ஸ்தாந்துநொபிளை வெற்றி கொண்ட போது நிறைவேறுகிறது. இவ்விளைஞர் முஹம்மத் அல் ஃபாத்திஹ் (வெற்றியாளர்) என வரலாற்றில் பிரபல்யமானார். ஹிஜ்ரி 857 ஜுமாதா அல் ஊலா 20 ஆம் நாள் புதன் கிழமை (கி.பி.1453, மே 29 ல்) கைப்பற்றப்பட்டது.

 ஸ்பெயினிலிருந்தும், பால்கன் பிரதேசங்களிலிருந்தும் இஸ்லாம் 2 தடவைகள் துரத்தப்பட்ட பின்னர் மீண்டும் ரோம் கைப்பற்றப்பட்டு ஐரோப்பாவுக்குள் இஸ்லாம் நுழையும் என நபிகளாரின் சுபசோபனத்தின் 2 வது பகுதி இன்னும் நிறைவேறாத நிலையில் காணப்படுகிறது.

வாள், ஈட்டி போன்றவற்றினாலன்றி பேச்சு, எழுத்துத் துறைகளினாலேயே இவ்வெற்றியைச் சாதிக்க முடியும் என நான் கருதுகின்றேன். மனிதனால் இயற்றப்பட்ட கொள்கைகள் விளைவித்த கேட்டுக்குப் பின்னால் இன்று உலகம் இஸ்லாத்திற்காகத் தனது கதவுகளை மனப்பூர்வமாகத் திறந்து வைத்திருக்கின்றது. வானத்திலிருந்து உதவிகளையும் அல்லாஹ்விடமிருந்து வழிகாட்டுதல்களையும் எதிர்பார்த்து நிற்கின்றது. இவ்வேளையில் மீட்சிக்கான ஓடமாக இஸ்லாத்தின் மீது நம்பிக்கையும் கொண்டுள்ளது.

 தமீம் அத்தாரி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நபியவர்கள் கீழ்வருமாறு கூறினார்கள் : இரவு பகல் சென்றடையும் பிரதேசங்களையெல்லாம் இம்மார்க்கம் நிச்சயம் சென்றடையும். மதர், வபர் ஆகிய எந்தப் பிரதேசத்தையும் இறைவன் விட்டு வைக்க மாட்டான். அவற்றிலும் இந்த தீனை அல்லாஹ் நுழைவிப்பான். கண்ணியமுடையவன் கண்ணியம் பெறுவான். இழிவானவன் இழிவடைவான். இஸ்லாத்தைக் கண்ணியப்படுத்தவதன் மூலம் ஒருவனுக்குக் கண்ணியமும் குப்ரை இழிவடையச் செய்வதன் மூலம் அடுத்தவனுக்கு இழிவும் ஏற்படும்.(முஸ்னத் அஹ்மத் பாகம் 4 : பக்கம் 103)

 இரவு பகல் சென்றடையும் பிரதேசங்கள் என்பது முழு உலகிலும் இஸ்லாம் பரவுவதைக் குறிக்கும். நாகரீகமடைந்த பகுதிகளில் இஸ்லாம் நுழையும் என்பதை மதர் என்ற பிரயோகம் காட்டும். மதர் என்பது அரபு மெரியில் கல் எனப் பொருள்படும். நாகரீகமடைந்த பிரதேசங்கள் எப்போதும் கற்களினால் உருவாக்கப்பட்ட கட்டடங்களைக் கொண்டிருக்கும் என்பது தெளிவான விடயமாகும். அதுமட்டுமின்றி நாட்டுப்புறங்களுக்கும் இஸ்லாம் சென்றடையும். வபர் என்ற பதம் உரோமம் எனப் பொருள்படும். ஏனெனில் நாகரீகமடையாத மக்கள் தங்களது வீடுகளை அமைத்துக் கொள்ள உரோமங்களையும் தோல்களையும் பாவிப்பார் என்பதும் நாம் அறிந்ததே.

இங்கு அல்லாஹ்வின் வாக்கு நிறைவேறுகிறது இவ்வுலகத்திலுள்ள மதங்கள் கொள்கைகள் போன்ற அனைத்தையும் மிகைத்ததாக இந்த தீனை ஆக்கவே அல்லாஹ் தனது தூதரை நேர்வழியைக் கொண்டும் சத்திய வேதத்தைக் கொண்டும் அனுப்பி வைத்தான். (சூரா அத்தவ்பா : 33, சூரா அல்பத்ஹ் : 128, சூரா அஸ்ஸஃப் : 09).

 கடந்த நூற்றாண்டுகளில் இஸ்லாம் உலகின் சில மதங்களை மட்டுமே வெற்றி கொண்டிருந்தது. யூதம், கிறிஸ்தவம், அரபு நாட்டு சிலை வணக்கம், பாரசீகத்திலிருந்த நெருப்பு வணங்கிகளின் மதம் ஆசியா, ஆப்பிரிக்கா பிரதேசங்களில் காணப்பட்ட இன்னும் சில மதங்களே அவைகளாகும். அனைத்து மதக் கொள்கைகளையும் மிகைத்ததாய் அது காணப்படவில்லை. அனைத்தையும் மிகைக்கும் என்ற சுபச் செய்தி நிறைவேறாது காணப்படுகின்றது. அல்லாஹ் தான் வாக்களித்தவற்றுக்கு ஒருபோதும் மாறு செய்ய மாட்டான். எனவே அவ்வாக்கையும் அவன் நிறைவேற்றுவான் என்பதை நாம் தொடர்ந்து எதிர்பார்த்திருக்க வேண்டும்.

 மேற்கூறப்பட்ட கருத்தை அல்மிக்தாத் பின் அல் அஸ்வத் (ரலி) அவர்கள் அறிவிக்கும் நபிமொழி உறுதிப்படுத்துகின்றது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நாகரீகமடைந்த (மதர்) நாகரீகமடையாத (வபர்) எல்லாப் பிரதேசங்களிலும் அல்லாஹ் இஸ்லாத்தை நுழைவிப்பான்.(முஸ்னத் அஹ்மத் பாகம் 6 : பக்கம் 4 : தபரானி 20:601 இப்னு ஹிப்பான் 6699, 6701, ஹாகிம் 4:30, இமாம் புகாரி, இமாம் முஸ்லிம் ஆகியோரின் நிபந்தனைகளின்படி இந்த ஹதீஸ் ஸஹீஹானது என இமாம் ஹாகிம் குறிப்பிடுகிறார்.)



இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் பரவல்



 ஸப்வான் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கின்றார்கள் : இப்புவியை அதன் கிழக்குப் பகுதிகள் மேற்குப் பகுதிகள் அனைத்தையும் பார்க்கக் கூடியதாக அல்லாஹ் எனக்குச் சுரக்கிக் காண்பித்தான். எனது சமூகத்தாரின் ஆதிக்கம் எனக்குக் காண்பிக்கப்பட்ட இப்பிரதேசங்கள் முழுவதையும் நிச்சயம் சென்றடையும் (ரோம மன்னர்கள் சேமித்து வைத்திருக்கும்) தங்கப் புதையல்களும் (பாரசீக ஆட்சியாளரின் வெள்ளிச் சொத்துக்களும் என்னை வந்தடையும்.(ஸஹீஹ் முஸ்லிம் கிதாபுல் ஃபிதன் வ அஷ்ராதுஸ் ஸாஆ, ஹதீஸ் எண் :2289, அபூதாவூத் :4353.)

சுருக்கிக் காண்பித்தான் என்பது முழுப் புவியை ஒரேயடியாக முழுமையாகக் காண்பித்ததைக் குறிக்கும். உலகின் முழுப் பிரதேசங்களையும் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் ஆதிக்கம் சென்றடையும் என்பதற்கான முன்னறிவிப்பாக இந்த ஹதீஸ் காணப்படுகின்றது. முன்னர் கூறப்பட்ட இரு ஹதீஸ்களும் இஸ்லாமிய தஃவாவின் பரவலையும், இஸ்லாம் ஏனைய அனைத்து மதங்களையும் மிகைத்து நிற்கும் தன்மையையும் அறிவிக்கும் அதேவேளை இந்த நபிமொழி, முழு உலகத்தையும் தன்னத்தே வைத்திருக்கும் அளவுக்கு இஸ்லாமிய சாம்ராஜ்யம் பலம் பெற்றிருக்கும் என முன்னறிவிப்புச் செய்கிறது.

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் கூறியதாக பின்வருமாறு அறிவிக்கின்றார்கள். சோலைகளையும் ஆறகளையும் கொண்டதாக அரபிகளின் பிரதேசம் மாறும் வரை மறுமை நிகழ மாட்டாது. இமாம் அஹ்மத் தனது அறிவிப்பில் ஈராக்குக்கும் மக்காவுக்குமிடையில் பயணம் செய்கின்ற ஒரு மனிதர் பாதை தவறி விடுமோ எனப் பயப்படும் அளவுக்குச் சோலைகள் மிகைத்திருக்கும் என்ற ஒரு பகுதியைச் சேர்த்துள்ளார்.(ஸஹீஹ் முஸ்லிம் கிதாபுஸ் ஸகாத் ஹதீஸ் எண் :60, 1012, அஹ்மத் 2: 370, 371.)

மேலும் அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் இன்னுமொரு நபிமொழியையும் அறிவிக்கின்றார்கள் : உங்களிடம் சொத்துக்கள் மேலதிகமாகக் காணப்படுமளவுக்கு பெருகியிருக்கும். ஒரு செல்வந்தன் தன்னிடமிருந்து ஸதாகாவை பெற்றுக் கொள்ள யாரும் வரவில்லையே எனக் கவலைப்படுவான். யாரிடமாவது கொண்டு சென்று இந்த ஸதகாவை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டினால் அவர் தனது தேவை பூரணமாகி விட்டது எனக் கூறிவிடுவார். இவ்வாறான நிலை ஏற்படும் வரை உலக முடிவு நாள் தோன்ற மாட்டாது.(ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்.)

இதனை அபூ மூஸா (ரலி) அவர்கள் நபிகளாருடன் தொடர்புபடுத்தி அறிவிக்கும் கீழ்வரும் ஹதீஸ் உறுதிப்படுத்துகின்றது. உங்களில் ஒருவர் தனது ஸதகாவைப் பெறத் தகதியானவரைத் தேடியலைவார். யாரையும் அவரால் கண்டு கொள்ள முடியாது போகும்.(ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்.)

ஹாரிஸ் பின் வஹப் அவர்கள் அறிவிக்கின்ற ஒரு ஹதீஸும் இக்கருத்தையே குறிக்கிறது. நீங்கள் ஸதகாவை (விரைவாகக்) கொடுங்கள். ஒரு காலம் வரும். அப்போது தனது ஸதகாவைப் பெறத் தகுதியானோரைத் தேடி ஒரு மனிதர் அலைந்து திரிவார். அதனைப் பெற யாரும் முன்வர மாட்டார்கள். நேற்று நீர் கொண்டு வந்திருந்தால் ஏற்றுக் கொண்டிருப்பேன். இன்று எனக்கு அது தேவையில்லை என்று தான் பதில் கிடைக்கும்.(ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்.)

மேற்குறிப்பிட்ட நபிமொழிகள் அனைத்தும் உலகில் செழிப்பும் வசதி மிக்க வாழ்க்கையும் உருவாகும் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றன. ஸதகாப் பங்குகளைக் கூடப் பெற்றுக் கொள்ளத் தகுதியான ஏழைகள் கிடைக்காத அளவுக்கு சமூகத்திலிருந்து ஏழ்மை அகன்று விடும். மனிதர்களுடைய வாழ்க்கையில் ஈமான், இறையச்சம் என்பன தோற்றுவித்த விளைவுகளோடு இஸ்லாமிய ஆட்சியின் நீதியினால் கிடைக்கப்பெற்ற அருட்கொடையாகவே மேற்கூறப்பட்ட மாற்றங்களைக் கருத வேண்டியுள்ளது.

மக்கள் ஈமான் கொண்டு தங்களது முழு வாழ்க்கையிலும் அல்லாஹ் ஏவியவைகளைப் பின்பற்றுவதோடு தடுத்தவைகளை விலக்கி இறையச்சத்துடன் செயற்படுவார்கள் என்றிருந்தால் நாங்கள் வானம் பூமி ஆகியவற்றிலுள்ள அனைத்து அருட்கொடைகளையும் அவர்களுக்குத் திறந்து கொடுப்போம். (சூரா அல் அஃராப் : 99).



கிலாபத்தின் மீள் உருவாக்கம்


 குதைபத் தபின் அல் யமான் (ரலி) அவர்கள் நபிகளார் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கின்றார்கள் : அல்லாஹ் நாடிய காலம் வரைக்கும் நபித்துவம் உங்கள் மத்தியில் நீடித்திருக்கும். அவன் நாடுகின்ற போது அதனை நீக்கி விடுவான். பின்பு நபித்துவத்தின் வழிமுறையிலான இஸ்லாமிய ஆட்சி தோற்றம் பெறும். விரும்பிய போது அதனையும் அல்லாஹ் இல்லாமல் செய்து விடுவான். பின்பு அநியாயக்கார முடியாச்சி அரசோச்சும். அதனையும் அல்லாஹ் விரும்பிய போது இல்லாமல் செய்து விடுவான். அடுத்துக் கொடுங்கோல் ஆட்சியாளர்கள் ஆதிக்கம் செலுத்துவர். அதனையும் குறிப்பிட்ட காலத்தின் பின்னால் அல்லாஹ் இல்லாமல் செய்து விடுவான். அதனையடுத்து நபித்துவத்தின் வழிமுறையிலான ஆட்சி ஏற்படுத்தப்படும் எனக் கூறிய நபியவர்கள் பின்னர் மௌனமாக இருந்து விட்டார்கள்.(முஸ்னத் அஹ்மத் 4 : 273 இமாம் தபரானி இந்த ஹதீஸின் ஒரு பகுதியை மட்டும் பதிவு செய்துள்ளார்கள்.)

அநியாயக்கார ஆட்சியில் மக்கள் நீதியின்மையினால் துன்பங்களுக்குள்ளாவார்கள். ஆட்சிபீடம் தனது வேட்கைப்பற்களை மனிதர்கள் மீது செலுத்துவதில் தயங்காது செயற்படும். கொடுங்கோலாட்சி மனிதர்களை அடிமையாக நடாத்தும். இன்று காணப்படும் இராணுவ கொடுங்கோல் ஆட்சியாளர்களை இவ்வகையில் குறிப்பிடலாம்.

ஆனால் நபிகளார் பொன்மொழி உலகில் அநீதி கொடுங்கோல் என்பன நீங்கி விடும். அல்லாஹ்வின் வரம்புகளைப் பேணி மனித உரிமைகளை மதித்து நடக்கக் கூடிய வழிமுறையான கிலாபத் தோற்றம் பெறும் என சுபச் செய்தி கூறுகின்றது.


யூதர்கள் மீதான வெற்றி


 இப்னு உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டதாக அறிவிக்கிறார் : உங்களுடன் யூதர்கள் போராடுவார்கள். நீங்கள் வெற்றி பெறுவீர்கள். அவ்வேளை பாறைகள் கூட இவ்வாறு கூறும்! ஓ முஸ்லிமே! எனக்குப் பின்னால் ஒரு யூதன் மறைந்திருக்கின்றான். அவனைக் கொன்று விடு!(ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்.)

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிப்புச் செய்துள்ளார்கள் : முஸ்லிம்களம் யூதர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு முஸ்லிம்கள் யூதர்களைக் கொல்லும் வரை உலக முடிவு நாள் ஏற்படாது. அப்போது யூதன் கற்களுக்குப் பின்னாலும் மரங்களுக்குப் பின்னாலும் மறைந்து கொள்வான். கற்களும் மரங்களும் ஓ! முஸ்லிமே! அல்லாஹ்வின் அடிமையே! எனக்குப் பின்னால் ஒரு யூதன் இருக்கின்றான். இங்கே வந்து அவனைக் கொல்! எனக் கூறும்.(ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்.)

கற்களினாலும் மரங்களினாலும் பேச முடியுமா? அப்படி இடம் பெற்றால் அது அல்லாஹ்வின் அத்தாட்சியாக அமையும். ஏனெனில் அவ்வாறு செய்வது கூட அல்லாஹ்வுக்குக் கஷ்டமான ஒன்றல்ல. மேலும் அவ்வேளையில் உலகில் உள்ள ஒவ்வொன்றும் யூதர்களைக் காட்டிக் கொடுக்கும் என்ற பொருளில் இப்பதம் பயன்படுத்தப்பட்டிருக்க முடியும்.

எக்கருத்தை நாம் எடுத்துக் கொண்டாலும் சரி அக்குறிப்பிட்ட வேளையில் அனைத்தும் முஸ்லிம்களின் நலன்கள் சார்பாகவும் அவர்களது எதிரிகளான யூதர்களுக்கு எதிராகவும் செயற்படும். நிச்சயமாக முஸ்லிம்களுக்கு வெற்றி வருவதில் எவ்வித சந்தேகமுமில்லை. பலம் இருக்கப் பயம் ஏன்? என்ற யூதர்களின் பிரமை தொடர்ந்து நிலைக்கப் போவதில்லை. ஆயுத பலத்தினாலும் பலம் என்ற ஆயுதத்தினாலும் பலஸ்தீனை ஆக்கிரமித்த அவர்களை அல்லாஹ் இழிவுபடுத்துவது நிச்சயம். அநியாயக்காரர்களுக்கு அவகாசம் கொடுத்த பின்பே மிகக் கடுமையாகத் தண்டிப்பது அல்லாஹ்வின் வழிமுறையாகும்.


வெற்றி பெறும் குழுவினர்


முஅவியா (ரலி) அவர்கள் உட்பட பல நபித்தோழர்கள் நபிகளாரின் கீழ்வரும் பொன் மொழியை அறிவிப்புச் செய்கிறார்கள். அல்லாஹ்வின் மார்க்கத்தை நடைமுறைப்படுத்தும் ஒரு குழுவினர் எனது சமூகத்தில் தொடர்ந்தும் நிலைத்திருப்பர். அல்லாஹ்வின் கட்டளை வரும் வரை யார் அவர்களை இப்பணியில் கைவிட்டுச் சென்றாலும் அல்லது முரண்பட்டு ஒதுங்கினாலும் அது அவர்களுக்கு எந்தத் தீங்கையும் விளைவிக்காது. அவர்கள் என்றும் மனிதர்களை மிகைத்தே காணப்படுவர்.(முஸ்னத் அஹ்மத், ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்.)

உமர், முகீரா, ஸவ்பான், அபூஹுரைரா, குhரா பின் இயாஸ், ஜாபிர், இம்ரான் பின் ஹஸீன், உக்பா பின் ஆமிர்,(இவர்களின் ஹதீஸ் அறிவிப்புகள் ஜாமிஉஸ் ஸகீரி – ல் இடம் பெற்றுள்ளன.) ஜாபிர் பின் சமுரா,(ஸஹீஹுல் ஜாமிஉஸ் ஸகீர்.) அபூஉமாமா (ரலி – அன்ஹும்) ஆகிய ஸஹாபாக்கள், நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கின்ற கீழ்வரும் நபிமொழி மூலம் மேற் குறிப்பிட்ட ஹதீஸ் உறுதிப்படுகிறது. இந்த தீனை உயர்த்தக் கூடிய ஒரு குழுவினர் எனது உம்மத்தில் நிலைத்திருப்பர் எதிரியை மிகைத்திருப்பர். அவர்களுக்கு இப்பாதையில் ஏற்படும் இன்ப துன்பங்களைத் தவிர அவர்களுடன் முரணாகச் செயற்படுகின்ற யாராலும் எந்தத் திருப்பத்தையும் அவர்களுக்கு ஏற்படுத்த முடியாது. மறுமை வரை இவர்கள் இவ்வாறே தொடர்ந்துமிருப்பர், அப்போது ஸஹாபாக்கள் அவர்கள் எங்கே காணப்படுவர் என வினவ பைதுல் மக்திஸிpனதும் அதனைச் சூழவுள்ள பிரதேசத்திலும் எனப் பதிலளித்தார்கள்.(அல் முஸ்னத் 5 : 269)

இந்த சமூகத்தில் நன்மை தொடர்ந்துமிருக்கும் என்பதை இந்த ஹதீஸ்கள் சுட்டிக் காட்டுகின்றன. அல்லாஹ்வின் மார்க்கமே சத்தியமானது என வாதிடுவோரும் சத்தியத்திற்கு உதவி புரிவோரும் சத்தியத்தை உறுதியுடன் பற்றிப் பிடிப்போரும் மறுமை வரை இந்த சமூகத்தில் இருக்கவே செய்வர். எத்தனை துன்பங்கள் தான் இவர்களைப் பீடித்தாலும், இறைவனது முடிவு வரும் வரை இந்த வெற்றியாளர் கூட்டம் நிலைத்திருக்கும்.

அபூ மாலிக் அல் அஷ்அரி (ரலி) அறிவிக்கின்ற பின்வரும் நபிமொழி இதனை உறுதிப்படுத்துகிறது. நபியவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள். நிச்சயமாக அல்லாஹ் மூன்று விடயங்களை விட்டும் உங்களைப் பாதுகாத்து விட்டான். உங்களது நபி உங்களுக்கெதிராகப் பிரார்த்தித்து நீங்கள் அழிவுக்குள்ளாவதை விட்டும், அசத்தியவாதிகள் சத்தியவாதிகளை மிகைப்பதை விட்டும் நீங்கள் அனைவரும் வழிகேட்டில் ஒன்று சேர்வதை விட்டும் (அல்லாஹ் உங்களைப் பாதுகாத்து விட்டான்)(அபூதாவூத் கிதாபுல் ஃபிதன் 4253)



சீர்திருத்தவாதிகள் தோற்றம்


நபிகளார் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள். நிச்சயம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் இந்த மார்க்கத்திற்குப் புத்துயிரளிக்கக் கூடிய ஒருவரை அல்லாஹ் இந்த சமூகத்திற்கு அனுப்பி வைப்பான்.(அபூதாவூத் கிதாபுல் மலாஹிம் 4291, இமாம் ஹாகிம் இதனை ஸஹீஹாகிம் இதனை ஸஹீஹான ஹதீஸாகக் குறிப்பிடுகிறார்.)

இந்த ஹதீஸில் குறிப்பிடப்படுகின்ற மன் என்ற அரபிச் சொல் கலீபா உமர் பின் அப்துல் அஜீஸ், இமாம் ஷாபிஈ, இமாம் கஸ்ஸாலி முதலியோர் போன்ற தனி நபர்களைக் குறிப்பது போலவே பலர் என்ற கருத்தையும் உள்ளடக்கும் என சில விரிவுரையாளர்கள் தெரிவிக்கின்றார்கள். இரண்டாவது கருத்தையே நாங்கள் தெரிவு செய்துள்ளோம். அந்த வகையில் ஒரு தஃவா இயக்கத்தின் மூலம் அல்லது மார்க்க ரீதியான பண்பாட்டுப் பயிற்சி வழங்கும் ஓர் அமைப்பின் மூலம் அல்லது ஒரு போராட்ட அணியின் மூலம் மார்க்கத்தைப் புதுப்பிப்பது இடம் பெறலாம். எனவே மார்க்கத்துக்குப் புத்துயிரளிக்கும் ஒருவரை எதிர்பார்ப்பதை விட சீர்திருத்த இயக்கத்தில் தனது பங்கு என்ன என்பதே ஒருவன் கேட்டுக் கொள்ளும் வினாவாக இருக்க வேண்டும்.



வரலாற்றில்.... சுபச் செய்திகள்



அல்குர்ஆனின் வசனங்களும், நபிகளாரின் பொன் மொழிகளும் இஸ்லாத்தின் வெற்றிக்குக் கட்டியம் கூறுவது போன்றே இறந்த கால நிகழ்வுகள் எதிர்காலம் இஸ்லாத்திற்கே என்பதைப் பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன. இஸ்லாமிய எழுச்சிக்கு முன்னால் பெரும் பெரும் தடைகள் பாரிய இன்னல்கள் என்பன குறுக்கிட்ட போதிலும் வரலாற்றுச் சம்பவங்கள் அனைத்தும் இஸ்லாத்தின் வெற்றி நிச்சயமானது என்ற நம்பிக்கையை எமது உள்ளங்களுக்கும் தந்து கொண்டிருக்கின்றன.

இஸ்லாத்திற்கு வெளியிலிருக்கும் எதிரிகள் மட்டும்தான் எழுச்சிப் பாதையில் தடையாக இருப்பவர்களல்லர். இஸ்லாத்திற்குள்ளும் எதிரிகள் இருக்கின்றனர். ஆச்சரியம் யாதெனில் அவர்களில் அநேகர் இஸ்லாமியப் பெயர்களைச் சுமந்து கொண்டிருந்தாலும் இஸ்லாத்திற்கு எதிரான பேரணியில் இணைந்து கொண்டிருக்கின்றனர். இஸ்லாமிய ஒழுக்க மாண்புகள் மக்களை வழிநடாத்துவதையோ அல்லாஹ்வின் மார்க்கம் மேலோங்குவதையோ இவர்கள் விரும்புவதில்லை.

இஸ்லாம் ஓர் உள்ளார்ந்த சக்தியை தன்னத்தே மறைத்து வைத்துள்ளது என்பதற்கு வரலாறு சான்றாகவுள்ளது. அதனது மைதானத்தில் பெரும் இன்னல்களும் துன்பங்களும் பிரவாகித்து அதனது உம்மத்தை சோதனைகள் சூழ்கின்ற போது இப்பாரிய இஸ்லாமிய சக்தியை வெளிக் கொணரப்படும். அப்போது இஸ்லாம் அசைக்க முடியாத மலை போன்று பலம் பெற்றுவிடுகின்றது. இவ்வேளை தனது சமூகத்திற்காக அது மறைத்து வைத்திருந்த சக்திகளெல்லாம் வெளிப்படும்.('மின் அஜ்லி ஸஹ்வதின் ராஷிதா' என்ற எமது நூலில் சுன்னாவின் ஒளியில் மார்க்கத்தைப் புதுப்பித்தல் என்ற தலைப்பில் பார்க்கவும் (மக்தபுல் இஸ்லாமியா பெய்ரூட், தாருல் பஷீர், தன்தா, எகிப்து).

இஸ்லாத்தின் தோற்றக் காலப் பகுதியிலேயே இதனை நாம் கண்டு கொண்டோம். பத்ரில் முஸ்லிம்களது சின்னஞ்சிறு குழு பெரும் படையை மிகைத்தனர். ஆன்மீக பலமே சடரீதியான பலத்தை முறியடித்தது.

அல்லாஹ் முஸ்லிம்கள் மீது புரிந்த அருளை கீழ்வருமாறு குறிப்பிடுகிறான். நீங்கள் சொற்ப தொகையினராய் இருந்த போது பத்ர் தினத்தில் அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்தான். எனவே நன்றி தெரிவிக்கும் பொருட்டு நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடவுங்கள். (சூரா ஆல இம்ரான் : 123)

புவியில் மனிதர்கள் உங்களை அடித்துக் சென்று விடுவார்களோ எனப் பயந்தவர்களாக பலவீனர்களாக சொற்ப தொகையில் நீங்கள் காணப்பட்ட சந்தர்ப்பத்தை எண்ணிப் பாருங்கள். நீங்கள் நன்றியோடு நடந்து கொள்ளும் பொருட்டு அன்று அல்லாஹ் உங்களுக்கு அடைக்கலம் தந்தான். தனது உதவியிhல் உங்களைப் பலப்படுத்தினான். நல்ல ஆகாரங்களை உங்களுக்கு வழங்கினான். (அல் அன்ஃபால் : 26)


ரித்தத் போரில்


இது நபியவர்களின் மரணத்திற்குப் பின்னர் இடம் பெற்றது. மதீனா, மக்கா, தாயிப் தவிர்ந்த ஏனைய பகுதிகளிலிருந்து கோத்திரங்கள் முர்தத்துக்களாக (இஸ்லாத்தை விட்டு) மாறி விட்டன. அரபு மண்ணிலிருந்த மத போதகர்களில் சிலர் போலி நபிமார்களாகத் தோற்றம் பெற்றனர்.

இவர்களது கோத்திரத்தினர் தமது கோத்திர உணர்வு காரணமாகவே இவர்களைப் பின்பற்றினர். ரபீஆ கோத்திரத்தைச் சேர்ந்த பொய்யன் 'முழர்' கோத்திர உண்மையாளனை விட எங்களுக்கு விருப்பத்திற்குரியவன் என்ற இவர்களது வார்த்தை இதனை உண்மைப்படுத்துகிறது. அஸ்வதுல் அன்ஸீ, துலைகா அல் அஸதி போன்றோரோடு முஸைலமா, ஸஜாஹ் போன்ற இன்னும் பலரையும் தங்களிடம் நபித்துவம் இருப்பதாக வாதிட்ட பொய்யர்களின் பட்டியலில் சேர்க்கலாம். தொழுகையை ஏற்றுக் கொண்டு ஸகாத்தைக் கொடுக்க மறுத்த குழுவினரும் இவர்களுடன் சேர்ந்து கொண்டனர். இந்த நிகழ்வு மிக அளவு கடந்த குழப்பத்தையும் கடுமையான சோதனையையும் இஸ்லாமிய கிலாபத்திற்கு ஏற்படுத்தியது. சில ஸஹாபாக்கள் அபூபக்கர் (ரலி) அவர்களிடம், கலீபா அவர்களே! முழு அரபுகளுடன் போராடுவதற்கு உம்மிடம் சக்தியில்லை. கதவைப் பூட்டிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறாது மரணம் வரும் வரைஉமது இரட்சகளை வழிபட்டுக் கொண்டிருங்கள் என்று கூறுமளவுக்கு இந்நிலை உக்கிரமடைந்தது.

ஆனால், அபூபக்கர் (ரலி) அவர்கள் இளகிய மனம் படைத்தவராக இருந்த போதும் இக்கருத்துக்கு உடன்பட மறுத்தார்கள். தனது கருத்தில் மலை போன்று உறுதியாக நின்றார்கள். முர்தத்துக்களுக்கெதிராகவும் ஸகாத் கொடுக்க மறுத்தோருக்கு எதிராகவும் பதினொரு படைகளைத் தயார் செய்தார்கள். லா இலாஹ இல்லல்லாஹ் என்ற வார்த்தையைக் கூறும் வரை அவர்களுடன் போராடும்படி நான் ஏவப்பட்டுள்ளேன். அவ்வாறு அவர்கள் கூறி விட்டால் உரிய காரணங்களுக்காகவன்றி அவர்களத உயிர்,  பொருள் என்பவற்றுக்கு என்னிடமிருந்து பாதுகாப்புக் கிடைக்கும். அவர்களுக்குக் கூலி கொடுப்பது இறைவனின் கடமை என்ற இறைத்தூதரின் வார்த்தையைக் கொண்டு ஸகாத் கொடுக்க மறுத்தோருடன் போராடுவது கூடாதென உமர் (ரலி) அவர்கள் வாதிட்டார்கள். இவ்வேளை உமர் (ரலி) அவர்களுக்கு அபூபக்கர் (ரலி) அவர்கள் பின்வருமாறு பதிலளித்தார்கள்.

அல்லாஹ்வின் மீது சத்தியமாக எவன் தொழுகைக்கும் ஸகாத்திற்குமிடையில் பிளவை ஏற்படுத்துகின்றானோ அவனுக்கெதிராக தான் போராடுவேன். ஸகாத், செல்வத்தின் மீதுள்ள கடமை அல்லாஹ்வின் மீது சத்தியமாக, ஒட்டகையின் கழுத்தில் கட்டப்படுகின்ற சிறிய கயிற்றுத் துண்டை ரஸுலுல்லாஹ் (ஸல்) அதனை ஸகாத்தாக அறவிட்டிருந்தால் அதனைப் பெறுவதற்கும் நான் போராடுவேன்.

குறைந்த எண்ணிக்கையைக் கொண்ட ஸஹாபாக்களுக்கும் பெருந்தொகையான முர்தத்துகளுக்கும், ஸகாத் கொடுக்க மறுத்தோர்களைக் கொண்ட குழுவினருக்கும் இடையில் யுத்தம் இடம் பெற்றது. இந்தப் போர்களில் முஸ்லிம்கள் வெற்றி பெற்றனர். எதிராளிகள் பின்னர் பாவ மன்னிப்புக் கேட்டு இஸ்லாமிய அணியுடன் சேர்ந்து கொண்டனர். தமது வழிகேடான கொள்கையைத் தூக்கியெறிந்து விட்டு ரோம, பாரசீகர்களுடனான போரில் ஈடுபட்டிருந்த முஜாஹித்களுடன் இணைந்து கொண்டனர். அப்போராட்டத்தில் அவர்களுக்கேற்பட்ட சோதனைகளை ஏற்றுக் கொண்டு, அவை இஸ்லாத்தின் உரிமை சம்பந்தமாக தம்மிடமிருந்து வந்த தவறான வெளிப்பாடுகளுக்குப் பகரமாக ஏற்பட்டதாகக் கருதிக் கொண்டனர்.

எனவே அரபுத் தீபகற்பம் மீண்டும் அடுத்த வந்த நூற்றாண்டுகளில் இஸ்லாத்தின் காப்பரணாகத் திகழ்ந்தது.


சிலுவை யுத்தங்கள்


மேற்குலகக் கிறிஸ்தவர்கள் பெருந்திரளாகத் திரண்டு தமது திரித்துவக் கொள்கையுடனும் சிலுவையுடனும் போராட்டத்தில் குதித்த போது இஸ்லாம் தன்னகத்தே மறைத்து வைத்திருந்த பலம் இன்னொரு தடவை வெளிப்பட்டது.

சிலுவை யுத்தங்கள் என வரலாற்றில் பிரபல்யம் பெற்றுள்ள இந்த யுத்தங்கள் 9 தடவைகள் இடம் பெற்றுள்ளன.

முஸ்லிம்கள் மீது ஆக்கிரமிப்பு மேற்கொள்ள வந்த இம்மேற்குலகக் கிறிஸ்தவர்கள் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராகக் கடும் குரோதமும் துவேசமும் கொண்டிருந்தனர். இஸ்லாமிய நாடுகளின் வளங்கள் மீது பேராசை கொண்டிருந்ததோடு மட்டுமின்றி, இஸ்லாத்தின் பலத்தையும் அதன் ஆட்சிப் பரம்பரையையும் தகர்த்தெறியவும் அவா கொண்டிருந்தனர். இவ்வேளை முஸ்லிம்களின் பொடுபோக்கு இவர்களுக்குப் பேருதவியாக இருந்தது. அதே போன்று இக்கால முஸ்லிம் ஆட்சியாளர்கள் கேளிக்கைகளில் மூழ்கியிருந்தனர். இவ்வுலக இன்பங்களுக்காகப் பிளவுபட்டிருந்தனர். தலைமைத்துவ மோகம் அவர்களை ஆட்கொண்டிருந்தது. தன்னுடைய சகோதரனை விற்று அந்நியரிடமிருந்து வருமானம் பெறவும் தயாராக இருந்தனர். அவ்வாறே தலைமைத்துவத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காகச் சமூகத்தை விலை பேசவும் தயங்கவில்லை.

இவ்வாறான நிலையில் முதலாவது தடவையிலேயே கிறிஸ்தவர்கள் வெற்றி பெற்றுப் பல சிற்றரசுகளையும் மாநிலங்களையும் இஸ்லாமிய மண்ணில் நிறுவுவதற்கு முஸ்லிம் ஆட்சியாளர்கள் உடந்தைகளாயினர். பைதுல் மகத்திஸில் கிறிஸ்தவர்கள் நுழைந்த நிகழ்வு, முழங்கால் வரை இரத்தம் பீறிட்டுப் பாயும் அளவு பல்லாயிரக் கணக்கான முஸ்லிம்களைப் பலியெடுத்த பின்னரே நிகழ்ந்தது.

சுமார் 200 வருடங்கள் ஷாமில் சிலுவை வீரர்கள் நிலை பெற்றிருந்தனர். முழுமையாக 90 வருடங்கள் பைதுல் மக்திஸ் அவர்களது கைவசம் சிக்கியிருந்தது.

அப்போது அக்கிரமக்காரருடன் போராடவும், ஆக்கிரமிக்கப்பட்ட பூமியை மீட்டெடுக்கவும் தமது உரிமைகளை மீளப் பெறவும் போராடுவதற்கு உறுதி பூண்ட சில மனிதர்களை அல்லாஹ் உருவாக்கினான்.

இமாதுத்தீன் ஸன்கி, தனது நடத்தை, வீரம் நீதி முதலானவற்றில் குலபாஉர் ராஷிதீன்களை ஒத்திருந்த அவரது வீரமகன் நூருத்தீன் மஹ்மூத் அஷ்ஷஹீத், அவரது மாணவரான வெற்றி வீரர், ஹித்தீன் போராட்டத்திலும் பைதுல் மக்திஸ் வெற்றியிலும் சிலுவை யுத்த வீரர்களைத் தோற்கடித்தனவரான ஸலாஹுத்தீன் அய்யூபி முதலியோர்களே அம்மனிதர்கள். ஸலாஹுத்தீன் அய்யூபியின் போராட்டத்திலும் பைதுல் மக்திஸ் மீட்கப்பட்டது. அதன் பின்னர் எகிப்தில் நடந்த போரில் 9 ஆம் லூயிஸ் மன்ஸுரா எனுமிடத்தில் வைத்து ஸலாஹுத்தீன் ஐயூபியினால் சிறைபிடிக்கப்பட்டார்.

மேற்கூறப்பட்டவை அனைத்தும் முஸ்லிம் சமூகம் சற்று உறக்கமடையலாம். நோய் வாய்ப்படலாம். ஆனால் ஈமானிய இரத்தம் அதன் உறுப்பினர்களின் உடலில் ஓடும் வரை லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் என்ற நாமத்தின் கீழ் அச்சமூகத்தைத் தலைமை தாங்கி நடாத்துகின்றவர்கள் காணப்படும் வரை அது நிச்சயம் மரணித்து விடாது என்பதையே இவை சுட்டிக் காட்டுகின்றன.


தார்த்தாரியப் படையெடுப்பு


மேற்கிலிருந்து ஐரோப்பியக் கிறிஸ்தவர்கள் மேற்கொண்ட படையெடுப்புக்கு இஸ்லாம் உட்பட்டமை போன்ற சிலை வணக்கத்தில் மூழ்கிப் போயிருந்த கீழைத் தேய தார்த்தாரியர்களின் ஆக்கிரமிப்புக்கும் இஸ்லாம் இலக்காக்கியது. தன்னெதிரே நிற்கின்ற எதனையும் விட்டு வைக்காது துகள் துகள்களாக ஆக்கி விடக் கூடிய சூறாவளி போன்று இஸ்லாமிய உலகை அவர்கள் திடீரெனத் தாக்கினர். முஸ்லிம்கள் சின்னாபின்னமாகி பலவீனர்களாக இருந்த காலப் பகுதியிலேயே இவர்கள் மேலோங்கினார்கள். முஸ்லிம்களிடம் தமது சிதறிய அணிகளை ஒன்றுபடுத்தும் ஒரு பலமிக்க தலைமைத்துவமோ, மக்களைத் தட்டியெழுப்பக் கூடிய ஓர் ஈமானிய உணர்வோ இருக்கவில்லை. ஆனால் தார்த்தாரியர்கள், யாராலும் அசைக்க முடியாத பலம் பெற்ற இராணுவ சக்தியாக அன்று விளங்கினர். அவர்களது தலைமைத்துவத்திற்கு அச்சத்துடன் கூடிய மதிப்பிருந்தது. பெரும் படைகளெல்லாம் தோற்கடித்த மன்னர்கள், தலைவர்கள் பெரும் செல்வ வளம் பெற்றிருந்த ஆட்சியாளர்கள் போன்ற எவருக்கும் அவர்கள் முன்னே எதிர்த்து நிற்க தைரியம் ஏற்படவில்லை. நாடுகளெல்லாம் ஒவ்வொன்றாக அவர்கள் வசமாகின. ஆட்சியாளர்கள் புறமுதுகு காட்டி ஓடத் தொடங்கினர். அத்தோடு படிப்படியாக தலைவர்கள் அவர்கள் முன் கைகட்டி நிற்கலாயினர். ஒரு வெற்றி அடுத்ததை நோக்கி அவர்களைத் தூண்டி விட்டது. வெற்றிமேல் வெற்றி கிடைத்தது. தார்த்தாரியர்கள் தோற்கடிக்கப்பட்டனர் னக் கூறப்பட்டால் அதனை நம்பி விடாதே என்ற வார்த்தைகள் அன்று பிரபல்யமாயிருந்தன. தார்த்தாரியர் என்போர் மிகைக்க முடியாத சக்தி என்ற கருத்து காலகாலமாகச் சொல்லப்பட்டு வந்தது.

இறுதியாக இஸ்லாத்தின் பூமியான பக்தாத் மீது படையெடுத்தனர். அப்பாஸிய கிலாபத்தின் தலைமைப்பீடமாக, இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் உயர் மதிப்பிற்குரிய தளமாக இந்நகரம் விளங்கியது. பலத்த அடிகளுக்கு இலக்காகிய இவ்வாட்சி பீடம் அவர்கள் கைவசம் சிக்கிக் கொண்டது. முஸ்லிம்களின் பெயர்களைச் சுமந்த புல்லுருவிகளும் இவ்வீழ்ச்சிக்கு உடந்தையாகச் செயல்பட்டனர். ஆறுகளாக இரத்தம் பெருக்கெடுத்தோடியது. எமது நாகரீகத்தைத் தன்னகத்தே கொண்டிருந்த பெரும்பாலான நூல்கள் தைகிரீஸ் நதியில் வீசப்பட்டன. புத்தகங்களின் கறுப்புநிற மையினால் அந்நதி முழுவதும் கருமை நிறமாக மாறி விட்டது.

இவ்வாறு வருடங்கள் கடந்து சென்றன. அதோ! இஸ்லாம் தன்னகத்தே மறைத்து வைத்திருந்த அற்புதம் இரண்டு தடவைகளில் வெளிப்படுகிறது.

முதலாவது, வரலாற்றில் இடம் பெற்ற தீவிர யுத்தங்களில் ஒன்றில் இராணுவ ரீதியாக தார்த்தாரியர்களை இஸ்லாம் வெற்றி கொண்டது. ஐன்ஜாலூத் என்றழைக்கப்படும் இந்த யுத்தம் நேர்த்தி மிக்க மம்லூக்கிய தளபதி ஸைபுத்தீன் என்பவரது தலைமையில் எகிப்திய படையினருடன் இணைந்து நடாத்தப்பட்டது. ஹிஜ்ரி 658 ரமழான் 25 ஆம் தேதியையே இவ்வெற்றியின் நாளாக ஆக்கியிருந்தான். அதாவது பக்தாத் வீழ்ச்சியடைந்து இரண்டே வருடங்களில் இது நிகழ்ந்தது.

தார்த்தாரியர்களின் உள்ளங்களையும் இஸ்லாம் ஆக்கிரமித்துக் கொண்டமை இஸ்லாம் அடைந்த இன்னொரு வெற்றியாகும். இதோ! இஸ்லாத்துடன் போர் தொடுத்த இக்கொடுங்கோலர்களுடன் இஸ்லாம் யுத்தம் புரிகின்றது. படை வீரனின் உருவிய நிலையிலுள்ள வாள், நிராயுதபாணியான இஸ்லாமியக் கோட்பாட்டின் தாக்கத்திற்கு முன்னால் நிலைத்திருக்க முடியாது வீழ்ந்து விடுகிறது. வெற்றியாளர்கள் இறுதியாக வெற்றி கொள்ளப்பட்டவர்களின் மார்க்கத்தினுள்ளே நுழைந்து விடுகின்றனர். தோல்வியுற்றவன் வெற்றியாளனுக்குப் பின்னால் கண்ணை மூடிக் கொண்டு செல்வதிலே ஆர்வமாக இருப்பான் என இப்னு கல்தூன் கூறிய வழக்கத்திற்கும் பிரபல்யத்திற்கும் நேர் முரணாகவல்லவா இது இடம் பெற்றுள்ளது! எனவே இது இரண்டாவது வெற்றியாகும்.

நவீன காலத்தில், பிற இஸ்லாமிய நாடுகளில் காலனித்துவப் படைகளுக்கு எதிராக வீரமிக்க முஸ்லிம்களின் ஜிஹாதியப் போராட்டத்தைக் காண்கிறோம். பிரான்ஸியர்களுக்கு எதிராக அமீர் அப்துல் காதிர் அல் ஜஸாயிரிஜி அவர்கள் அல்ஜீரியாவில் போராடுகிறார்கள், ஸ்பானியர்களுடன் அமீர் அப்துல் கரீம் கிதாபி மொரோக்கோவில் யுத்தம் புரிகிறார். வீரர் உமர் முக்தார் லிபியாவில் இத்தாலியர்களுடன் போர் தொடுக்கிறார். ஆங்கிலேயர், யூதர்கள் போன்றோருடன் ஷெய்க் இஸ்ஸதீன் அல் கஸ்ஸாம் பலஸ்தீனில் மோதுகிறார். பிரான்ஸியக் காலனித்துவத்திற்கெதிரான புரட்சி யூத, சியோனிஸவாதிகளுக்கெதிரான பலஸ்தீன போராட்டம், ஆங்கிலேயருக்கெதிராக சுயஸ்கால்வாய்ப் போராட்டம் முதலியவற்றையெல்லாம் வரலாற்றில் கண்டு வந்துள்ளோம்.

பேர்னாட் லூயிஸ் தனது மேற்குலகமும், மத்திய கிழக்கும் என்ற நூலின் ஏற்றுக் கொண்டதைப் போன்று, ஏனைய மேற்கத்தேய வரலாற்று ஆசிரியர்களும் கீழ் வருகின்ற கருத்தை ஒப்புக் கொண்டுள்ளனர். இஸ்லாமியப் பிரதேசங்களில் இடம் பெற்றுள்ள காலனித்துவத்திற்கெதிரான விடுதலைப் போராட்டங்களை வழிநடாத்திச் சென்றவை மார்க்கம் சார்ந்த இயக்கங்களே. கமால் அதார்துர்கினது இயக்கமும் கூட அந்தப் பெயரை வைத்தே போராட்டத்தை முன்னெடுத்தது. ஆனால் மிகவும் துர்பாக்கியமான விடயம் யாதெனில் இஸ்லாமியவாதிகள் விதைத்தவற்றின் முழுப் பயனையும் சடவாதிகள் அறுவடை செய்கிறார்கள். ஜிஹாதின் மூலமும் முஜாஹிதீன்களின் ஊடாகவும் கிடைக்கப் பெற்ற முழு விளைச்சலையும் திருடுவதற்காகப் பயிற்றுவிக்கப்பட்டவர்களே இஸ்லாத்திற்கெதிரான இவ்விரோதிகள்.



நாளைய சக்தி இஸ்லாம்


நடைமுறையில்.. .. ..


வரலாற்றுப் பக்கத்தில் நாங்கள் தேடிப்பார்த்தால் பல்வேறு முன்னறிவிப்புக்களும் சுபசோபனங்களும்.. இஸ்லாத்தின் உள்ளார்ந்த பலமும் உள்ளது. இந்த சமூகத்தின் இருப்பில் சக்திமிக்க ஆற்றல்கள் காணப்படுகிறது. இன்னல்களின் போதும், அவற்றை வெளிக் கொணர்வோர் காணப்படுகின்ற போதும் நிச்சயம் அது வெளிப்பட்டேயாகும்.

நவீன காலத்திலும் இந்த உமமத்தினது நடைமுறையை உற்றுநொக்குவொமானால் ஏராளமான நன்மாரயங்கள்.. பல்வேறு திக்குகளிலிருந்தும் புயல்கள் வீசிய போதும் இந்த சமூகத்ததைத் திடமாக நிற்க வைத்துள்ளது. உப்பு நீரில் கரைந்து விடுவது போன்று பிரளயமாக உருவெடுத்த வெள்ளத்தில் அமிழ்ந்து விடுமென, மறைந்து விடுமென பலர் எதிர்பார்த்தும் இஸ்லாமிய சமூகத்தின் இருப்பை நிச்சயப்படுத்தியுள்ளது.

வீசிய புயல்கள் அனைத்தையும் எதிர்த்து போராட்டங்களை இந்த சமூகம் மேற்கொண்டது.. . சண்டையில் தோற்கடிக்க முடியாது என்பதை பாடமாகப் பெற்ற எதிரிகள் பல்வேறு விலங்குகளையிட்டு ஒடுக்கப் பார்த்தார்கள். இருப்புக் கூடுகளினுள்ளும் தங்கமாளிகைகளுக்குள்ளும் அடைத்து வைக்கவும் பார்த்தார்கள். ஆனால் முஸ்லிம்கள் தமது இருப்பை மீள உணர ஆரம்பித்தார்கள். அதனை புதிதாக ஒரு முறை கண்டுபிடித்தும் கொண்டார்கள். எனவே, இந்த மார்க்கத்தை புதுப்பிக்கக் கூடிய இந்த உம்மத்தை தட்டியெழுப்பக் கூடிய, அதன் நேர்வழியில் பல்வேறு பரம்பரையினரைத் தயாரித்து வழங்கக் கூடிய மனிதர்களை அல்லாஹ் நிச்சயம் இந்த தீனுக்கு ஏற்படுத்தியே வந்திருக்கின்றான். அவர்களது முயற்சிகள் ஒரு போதும் வீணாகி விடவில்லை.

நவீன இஸ்லாமிய எழுச்சி அதற்காக உழைத்த,அதற்கு உயிரூட்டிய, புதுவடிவம் கொடுத்த இயக்கம் போன்வற்றினது பயன்கள் - சிலர் பிரமை கொள்வது போன்று - ஒரு பாலைவனத்தில் கூவப்பட்ட வெறும் சத்தமாகவோ அல்லது சாம்பலின் மீது ஊதியது போன்றோ ஆகிவிடவில்லை. மாறாக மாற்றமாக அல்லாஹ்வின் அருளினால் பிரமாண்டமான எழுச்சி அலையாக உருவாகி விட்டது. அரபு இஸ்லாமிய நாடுகளில் மட்டுமல்ல. மாறாக அதற்கு வெளியே முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வந்தேறுகுடிகளாக வாழுகின்ற பிரதேசங்களிலெல்லாம் ஊடுருவிச் சென்று விட்டது. மூளைகளுக்கு உற்சாகத்தையும், உள்ளங்களுக்கு உணர்வையும் தொடர்ந்தேர்ச்சியாக செயற்படுவதற்கான உத்வேகத்தையும் வழங்கியுள்ளது.

இஸ்லாத்தின் கொடி வீழ்ந்து விட்டது. அதன் நிழல் சுரங்கி விட்டது. அதன் மனிதர்கள் புறமுதுகு காட்டி பின்வாங்கிச் சென்று விட்டனர். சடவாதம் அதன் சீடர்களிடம் ஊடுருவி விட்டது. எதிர்ப்பலைகள் அதனை திக்குமுக்காட வைத்து விட்டது. அதற்கு எதிராக சூழ்ச்சிகளையும் சதிகளையும் திட்டமிட்டு விட்டது. காரணமின்றி அதனைக் குற்றஞ்சாட்டுகிறது. விளங்குவதிலும் நடைமுறைப்படுத்துவதிலும் - மனோவேதனைக்குரிய விடயம் - தவறுவிட்ட சில முஸ்லிம் குழுக்களைப் பயன்படுத்தி இவ்வெழுச்சி அலையை ஒடுக்குவதற்காக இஸ்லாத்திற்கெதிராக செயற்பட அழைப்பு விடுக்கிறது. குறுக்கே நிற்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றது.

இவ்வாறெல்லாம் எண்ணியவர்களது காலம் முடிவடைந்து கனவில் வந்த பிரமைகளாக மாறி விட்டது. நவீன இஸ்லாமிய எழுச்சி மீண்டும் மக்களுக்கு இந்த மார்க்கத்தின் மீது நம்பிக்கையை வழங்கியுள்ளது. அது நிச்சயம் வெற்றி பெற்றே தீரும் என்ற எதிர்பார்ப்பை பலப்படுத்தியுள்ளது. ஏனெனில் அவர்கள் சூழ்ச்சி செய்கிறார்கள். ஆனால் அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கின்றான். சூழ்ச்சி செய்கின்றவர்களிலெல்லாம் மிகச் சிறந்தவன் அவனே (சூரா அல் அன்பால் : 30) என அல்லாஹ் கூறுகின்றான்.

சில மனிதர்கள் இஸ்லாமிய எழுச்சி அலையின் பலத்தை அற்பமாகக் கருதுவதோடு குறைத்துக் காட்டவும் முயற்சிக்கிறார்கள். அதுமட்டுமின்றி இஸ்லாத்திற்கெதிரான சடவாத அலையின் பலத்தை பிரம்மாண்டமானதாக ஆக்கி இஸ்லாமிய வழிமுறையான ஷரீஅத் வாழ்க்கை வழிகாட்டலுக்கு தகுதியற்றது எனக் காட்டவும் எத்தனிக்கின்றார்கள். அவர்கள் உண்மையில் மதிப்பீடு செய்வதில் தவறிழைத்து விட்டார்கள் அல்லது யதார்த்தத்தை புரிந்தும் மனோஇச்சையின் காரணமாக வேண்டுமென்றே தெரியாதது போன்று நடிக்கிறார்கள் என்றே நான் நம்புகின்றேன்.

எங்களுக்கு சார்பான எதிரான இரு பக்க கருத்துக்களையும் ஆழமாக மதிப்பிட்டு தராசில் நிறுத்துப் பார்க்கின்ற போது – அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் - இஸ்லாத்தினதும் அதன் அழைப்பாளர்களினதும் பக்கமே பராமாக எடை கூடியதாக உள்ளது.

அச்கொன்றும் இங்கொன்று என உருவெடுக்கின்ற எந்த ஓர் அழைப்புப் பணியும் கொண்டிராத பாரிய பொக்கிஷத்தை வளத்த இஸ்லாத்தின் மூலம் நாம் சொந்தமாக வைத்திருக்கின்றோம். அல்லாஹ்வை, குர்ஆனை, நபிகளாரை ஈமான் கொண்ட, அல்லாஹ்வின் பெயரால் தங்களை வழிநடாத்தக்கூடிய ஒருவரை எதிர்பார்த்து நிற்கக் கூடிய பெரியதோர் மக்கள் பலம் இஸ்லாத்தின் பின்னாலுள்ளது. அல்லாஹ்வின் ரசூலுடன் தனது கைகளை கோர்த்துக் கொண்ட இந்த முகம் உடமைகளையும் உயிர்களையும் முழு மனத்திருப்தியுடன் தியாகம் செய்யத் தயாராக உள்ளது. இயல்பிலும் வரலாற்றிலும் மார்க்கத்தைப் பொதிந்த இச்சமூகத்தின் ஆளமையின் திறவுகோலாக ஆற்றல்களை மெருகூட்டி வீரதிருச் சாதனைகளை தோற்றுவிக்கக் கூடிய பெரும் பெரும் வெற்றிகளினது இரகசியமாக இருந்து வந்தது. இன்றிருப்பது இந்த தீனே இஸ்லாமே ஆகும். அநியாயக்கார ஆக்கிரமிப்பாளராயினும் சரி பேராசைமிக்க சதிகாரனாயினும் சரி, புகுத்திய எந்தவொரு சிந்தனை கொள்கையை விட இந்த தீனுக்கு இச்சமூகம் அவசரமாக அடிபணிவதோடு அதனைச் சூழவே நின்று கொள்ளும் என்பது வெளிப்படையான அம்சம் ஆகும்.

நிலையான மகத்தான இஸ்லாமிய அடிப்படைகளைக் கொண்ட பலமிக்க ஒரு வழிமுறையை நோக்கியே நாம் அழைக்கின்றோம்.தெளிவு, பரந்த தன்மை, ஆழம், சமநிலை,தாக்கம் என்பவற்றைப் பிரதிபலிக்கக் கூடிய மார்க்கத்தின் பலத்தை நாம் சொந்தமாக்கி வைத்துள்ளோம்.  இம்மார்க்கம் மனித சிந்தனையுடன் பேசக் கூடிய நம்பிக்கைக் கோட்பாடாகும். மனித ஆன்மாவை தூய்மைப்படுத்தும் வழிமுறையாகும். இயல்போடு ஒத்துச் செல்லும் பண்பாடுகளாகும். நீதியையும் சமநிலையையும் நிலைநாட்டும் சட்டங்களாகும். தீங்குகளை விரட்டி நலன்களையே கொண்டு வருவதில் கவனமாக இருக்கும் இந்த தீன் ஒவ்வொருவருக்கும் உரிய உரிமையை வழங்கக் கூடிய வழிமுறையாகும்.

சக்தி வாய்ந்த வழிமுறையை இந்த மார்க்கம் பொதிந்துள்ளது என்பதற்கான சிறந்த அடையாளம் யாதெனில் இது மனித உருவாக்கமல்ல. உலக இரட்சகனாகிய அல்லாஹ்விடமிருந்து இறக்கப்பட்டதாகும். இந்த தெய்வீகத் தன்மை மனிதர்கள் இயற்றிய ஒவ்வொரு சிந்தனைக்கும் வழமையாக ஏற்படும் போதாமை, குறைவு, அளவு கடந்த போக்கு போன்றவற்றிலிருந்து இஸ்லாத்தைப் பாதுகாத்திருக்கின்றது.

இச்சிறப்பம்சமே பெருந்திரளான மக்கள் கூட்டம் இந்த மார்க்கத்தை ஏற்று கட்டுப்படுவதற்கு வாய்ப்பானதாக ஆக்கிக் கொடுத்துள்ளது. ஏனெனில் தன்னுடைய இரட்சகனுக்கு மனிதனிடமிருந்து இடம் பெற வேண்டிய கட்டுப்பாடாகவே இது உள்ளது. அந்த இரட்சகன் அவனைப் படைத்து செப்பனிட்டான். தனது அருட்கொடைகளைக் கொண்டு உதவி புரிந்தான். வாழ்வளித்தான். அவனது உறவையே மனிதன் வேண்டி நிற்பதோடு அவனது தண்டனைக்கே அஞ்சுகின்றான்.

ஆனால் இதற்கு மாற்றமாகக மனிதன் உருவாக்கிய கொள்ககைளுக்குக் கட்டுப்படுவதென்றால், பெரும் பேராசையுடன் அல்லது முழு நிர்ப்பந்தத்தின் கீழே தான் அடிபணிவான். முடியுமானவரை அதன் சட்டங்களிலிருந்து விரண்டோடவே முயற்சிப்பான்.

இஸ்லாம் இந்த உம்மத்தின் ஆழத்திலிருந்து ஊற்றெடுத்த வழிமுறை இடையில் புகுத்தப்பட்டு, புதிதாகத் திணிக்கப்பட்டு அதனை உள்வாங்கிக் கொள்வதற்கு, அங்கீகரிப்பதற்கு சடரீதியான அல்லது மானசீக ரீதியான அழுத்தங்கள் கொடுக்கப்பட வேண்டிய ஒன்றல்ல என்பது இன்னும் பலத்தையே இம்மார்க்கத்திற்குச் சேர்க்கிறது.

இஸ்லாமிய வழிமுறை பொதிந்துள்ள சக்திக்கு முகம் கொடுத்து உடன்பட்டுச் செல்லக் கூடிய ஆற்றல்கள் இந்த உம்மத்திடம் மட்டுமே காணப்படுகின்றது.

முஸ்லிம்கள் பலவீனப்பட்டு சிதறுண்டு கையாலாகாதவர்களாகக் காணப்பட்ட வேளைகளிலெல்லாம் மழுங்கடிக்கப்பட்டிருந்த இவ்வாற்றல்களும் சக்திகளும் பெரும் எரிமலைகளாக வெளிவந்துள்ளன. சிலுவை வீரர்களை ஹித்தீனில் துண்டு துண்டாக உடைத்தெறிந்தது. தார்த்தாரிய படைவீரர்களை அய்ன் ஜாலூத்தில் புறமுதுக காட்டி விரண்டோடச் செய்தது. மன்சூராவில் உள்ள தார் இப்னு லுக்மானில் 9 வது லூயிஸ் மன்னனை சிறைக் கைதியாகப் பிடித்துக் கொடுத்தது.

இஸ்லாம் கொண்டிருக்கின்ற பலம் பற்றிய அந்நியர்களது எச்சரிக்கைகள் எங்களது உம்மத்தினது இயல்பு, இந்த மார்க்கத்தின் சிறப்பம்சங்கள், எமது மக்களிலே பொதிந்து காணப்படுகின்ற ஆற்றல்கள், என்பவற்றை நன்கு புலப்படுத்துகிறது. இவற்றை ஆய்வு செய்த கீழைத்தேய ஆய்வாளர்களுக்கும் வேறுபல அந்நிய அறிஞர்களும் நாம் கொண்டுள்ள உள்ளார்ந்த சக்தியின் யதார்த்தத்தை புரிந்து வைத்துள்ளனர். மிக்க கவனமாகக் கணக்கிட்டு வைத்துள்ளனர். என்றாவது இந்த சமூகம் எழுச்சி பெற்றே தீரும் என்ற அச்சம் அவர்களைச் சூழ்ந்துள்ளது.

இஸ்லாத்தின் போக்கு, என்ற தனது நூலில் பேராசிரியர் ஜிப் கீழ்வருமாறு தெரிவிக்கின்றார். இஸ்லாமிய இயக்கங்கள் திடீர் வேகத்தில் ஆச்சரியப்படத்தக்க வகையிலே வழமையாக வளர்ச்சியடைகின்றன. சந்தேகத்தைத் தூண்டும் எந்தவொரு அடையாளத்தையும் அவதானிகள் கண்டு கொள்வதற்கு முன்னால் திடீரென வெடித்து வெளிவந்து விடுகின்றன. தலைமைத்துவம் மட்டுமே இன்று அவற்றிற்கு குறையாகவுள்ளது. புதிதாக ஒரு ஸலாஹுத்தீன் அய்யூபி தோன்றுவது மட்டுமே நிரப்பப்பட வேண்டிய இடமாக உள்ளது.

1936 ல் வெளியாகிய இஸ்லாம் நாளை சக்தி என்ற நூலில் ஜெமனிய பயண அறிஞராகிய போல் அஷ்மத் பின்வருமாறு எழுதுகிறார். இஸ்லாமிய கிழக்கின் பல்தை கீழ்வருகின்ற மூன்று காரணிகளினடிப்படையில் மதிப்பிடலாம்.

1.ஒரு தீன் என்ற வகையிலும் அதன் நம்பிக்கைக் கோட்பாட்டிலும் இஸ்லாத்தின் பலம் மிகையானது. வேறுபட்ட நிறத்தை இனத்தை கலாச்சாரத்தைக் கொண்டுள்ள மக்களை சகோதரர்களாக ஆக்குவதிலுள்ள வெற்றியும் அதன் பலத்திற்கு அடிப்படையாகும்.

2.இஸ்லாமிய கிழக்கின் நிலப்பரப்பில் இயற்கை வளங்களுக்கான மூலங்கள் நிறைந்து காணப்படுவதும் இஸ்லாத்தின்க பலத்தையே சுட்டிக்காட்டுகின்றது. மேற்கே மொராக்கோவின் எல்லைகளை அண்டியுள்ள அட்லாண்டிக் சமுத்திரத்தில் ஆரம்பித்து கிழக்கே இந்தோனேஷியாவை அண்டியுள்ள பசிபிக் சமுத்திரம் வரை அதன் இருப்பு நீட்சியடைந்துள்ளது. இப்பிரதேசம் கொண்டுள்ள பல்வேறுபட்ட மூலவளங்கள் சக்தி வாய்ந்த சீரான ஒரு பொருளாதார தனித்துவத்திற்கும் தன்னிறைவு நடைமுறைக்கும் போதுமானதாகும். முஸ்லிம்கள் ஒன்றுபட்டு கூட்டுறவுடன் செயற்பட்டால் ஐரொப்பாவிலோ வேறு எந்த நாட்டிலோ பொதுவாக தங்கியிருக்க வேண்டிய எந்தத் தேவையும் ஒரு போதும் ஏற்பட மாட்டாது.

3. மனித இன விருத்தி முஸ்லிம்களிடம் செழிப்பாக நிறைவாக உள்ளது. மேற்கூறப்பட்ட அம்சங்களுடன் சேர்த்து இன்னும் பலமிக்க சக்தியாக அவர்களை ஆக்கி விடுகின்றது.(குடும்பக்கட்டுப்பாட்டிற்காக இஸ்லாமிய நாடுகளிலிருந்து அழைப்பு விடுப்பவர்கள் இதனை செவிமடுக்கட்டும்.)

இன்னும் விளக்குகையில் இம்மூன்று காரணிகளும் ஒன்று சேர்ந்த முஸ்லிம்கள் நம்பிக்கைக் கோட்பாட்டிலும் அல்லர்வின் கீழும் சகோதரர்களாக இணைவார்கள் என்றிருந்தால், அவர்களது மூலவளங்கள் இனிமேல் அதிகரித்து வரும். அவர்களது சனத்தொகைக்கும் போதுமானதாக நிறைவு செய்யக் கூடியதாக இருக்கின்ற நிலையில் - இஸ்லாம் ஐரொப்பாவின் அழிவிற்கான அபாய மணியை அடித்து விடும். முழு உலகிலுள்ள மத்தியத் தளமாக இருக்கும் இப்பிரதேசத்திலிருந்து சர்வதேச தலைமைத்துவத்திற்காக எச்சரிக்கையையும் விடுத்தே தீரும்.


புனித வாள் என்ற தனது நூலில் ரொபர்ட் பென் குறிப்பிடுகிறார். அரபிகளை நாங்கள் நன்கு ஆய்வுக்குட்படுத்துவதுடன் அவர்களது சிந்தனைகளை அதன் ஆழத்திலிருந்து அளவிட்டுப் பார்ப்பது எம்மீது கடமையாகும். ஏனெனில் அவர்கள் உலகில் ஏற்றிய தீப்பந்தம் பலமாக இன்னும் எரிந்து கொண்டே இருக்கின்றது. அத்தீப்பந்தம் அணைக்கப்பட முடியாதது என உறுதியாக நம்புவதற்கான அடையாளங்களும் தெளிவாக காணப்படுகின்றன. வாசகர்கள் அவர்களது அடிப்படைகளை நன்கு ஆராய்ந்து புரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக நான் இந்த நூலை எழுதுகிறேன். பத்ர் போராட்ட வெற்றியைக் குறிக்குமுகமாக முஹம்மத் பெற்றிருந்த இரு முனையிலும் கூர்களைக் கொண்டிருந்த வாளின் பெயராலேயே இப்புத்தகத்தின் பெயரைச் சூட்டியுள்ளேன். ஏனெனில் வாள் சாம்ராஜ்ய சக்கராதிபத்தியத்தை வேண்டுவதற்கான அடையாளமாகவே உள்ளது.(மூஸா அல் ஹுஐஸனி மொழிபெயர்த்து 1950 களின் இறுதிப் பகுதியில் அல் அஸ்ஹர் பல்கலைக்கழக கலாச்சார பீடத்திற்கு வழங்கிய புத்தகத்திலிருந்து பெற்றுக் கொண்டோம்.)

மேற்கூறப்பட்ட வார்த்தைகளில் காணப்படும் அளவு மீறிய தன்மை அவர்கள் மறைத்து வைத்திருக்கும் துவேஷம் என்பதை ஒரு புறமிருக்க முஸ்லிம்களது பலம் எவ்வளவு தூரம் அவர்களைச் சிந்திக்கத் தூண்டியிருக்கிறது என்பதை விளங்கக் கூடியதாக இருக்கின்றது. சோவியத் யூனியனின் வீழ்ச்சியுடன் சிவப்பு அபாயம் நீங்கி, மஞ்சள் அபாயம் ஆக விளங்கிய சீனாவுடன் நெருங்கிய உறவுகளை ஏற்படுத்தியதன் பின்னர் பச்சை அபாயம் என இஸ்லாத்திற்கு நாமம் சூட்டியுள்ளார். உண்மையில் இஸ்லாம் நாஸ்திகம் அக்கிரமம் அட்டூழியம் ஒழுக்கச் சீர்கேடு அடிமைத்துவம் என்பவற்றிற்கு அபாயமாகவே அமையும். இதோ இஸ்லாத்தின் உள்ளார்ந்த பலத்திற்கு நடைமுறை உதாரணத்தை முன்வைக்கிறேன். கமால் அதாதுர்க்கும் அவனது கட்சியும் துருக்கியை இஸ்லாத்தின் ஆடை பாண்பாடுகள், பழக்க வழக்கங்கள், சட்டங்கள், மொழி இஸ்லாத்துடன் தொடர்புடைய பெண்கள் ஹிஜாப் அணிவதை சட்டத்திற்கு முரண் என ஆக்கின. அரபு மொழி எழுத்தமைப்பைக் கொண்ட துருக்கி மொழியை லத்தீன் எழுத்தமைப்புக்கு மாற்றினர். ஆங்கிலேயர் அணியும் தொப்பியையே முஸ்லிம்கள் அணிய வேண்டும் என நிர்ப்பந்தித்தனர். மார்க்கம் பேசப்படுவது முழுமையாகத் தடுக்கப்பட்டது. அதான் சொல்வதென்றாலும் சரியே, முஸ்லிம் பெண் யூதனை, கிறிஸ்தவனையெல்லாம் கூட திருமணம் செய்ய முடியுமென சட்டம் கொண்டு வரப்பட்டது. வாரிசுச் சொத்தைப் பங்கிடுவதில் குர்ஆனுக்கு முரணாக ஆணும் பெண்ணும் சம அந்தஸ்து வழங்கப்பட்டன. இரத்த ஓட்டம் கூட மேற்கத்திய சட்டப்படியே இயங்க வேண்டுமென்று கூறுமளவுக்கு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. முஸ்லிம் தனியார் சட்டத்திலும் எவ்வித சலுகையும் வழங்கப்படவில்லை. அரபு இஸ்லாமிய பண்பாடுகளும் கலாச்சாரங்களும் துரத்தியடிக்கப்பட்டது. அவற்றபை; பின்பற்றுகின்ற மக்களுக்கு எதிராகப் போராட்டம் தொடுக்கப்பட்டது. கொலைக்களங்களும் நிறுவப்பட்டன. மீண்டும் வரவே முடியாது என்று சொல்லுமளவுக்கு இஸ்லாமியச் சந்திரன் மறைந்து விட்டது என்று துருக்கியில் மக்கள் எண்ணினர். மீள முடியாதவாறு அதன் நிழல் கூட சுரங்கச் செய்யப்பட்டு விட்டதோ! என உறுதியான நம்பிக்கை உள்ளங்களில் இடம்பிடித்தது. இஸ்லாமிய உணர்வு மரணித்து விட்டது. இஸ்லாம் பற்றிய நம்பிக்கையீனம இதயங்களை நிரப்பி விட்டது என்பதை நிரூபிக்கக் கூடிய வகையில் தேக்கம் நிறைந்த பல தசாப்தங்கள் கடந்து சென்றன.

ஆனால் துருக்கி மக்களின் இதயங்களில் மறைந்திருந்த இஸ்லாம் மரணிக்கவில்லை. அதனை இவ்வாறு கூற முடியும். சில காலம் சற்றுத் தூங்கியது. ஆனால் சந்தர்ப்பம் வாய்த்ததும் பூதாகரமாக வெளிக்கிளம்பி விட்டது. ஆட்சிக்கு மீண்டும் ஒரு தடவை வருமளவுக்கு தாக்கம் செலுத்தும் பெரும் சக்தியாக தோற்றம் பெற்றது. மார்க்கப்பற்று அங்கு எவ்வளவு தூரம் நீண்டு செல்கின்றது என்பதைப் பத்திரிக்கைகளில் வாசிப்பது போலவே வானொலிகளில் கேட்கின்றோம். மேலும் நாஸ்திகமும் அதனடியாக உருவான ஒழுக்கக் கட்டுக்கோப்பின்மையும் - இவற்றைப் பரப்புவதற்கான சட்டரீதியான இலக்கிய ரீதியான வசதிகள் செய்து கொடுக்கப்பட்ட போதிலும், அதன் அழைப்பாளர்கள் வெளிநாடுகளிலிருந்தும் உள்நாட்டிலிருந்தும் பெரும் உதவிகளையும் ஆதரவுகளையும் பெற்ற நிலையிலும் ஒடுங்கி வருகின்றது. அவற்றின் சத்தம் நாளுக்கு நாள் ஓய்ந்தே வருகின்றது. ஆயிரக்கணக்கில் குர்ஆனிய பாடசாலைகள் உருவாகி விட்டன. மீண்டும் பள்ளிவாசல்கள் கட்டப்பட்டு வருகின்றன. இஸ்லாமிய நூல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இஸ்லாமிய சிந்தனை வளர்ச்சி பெற்று மக்களுடைய வாழ்க்கையில் தாக்கம் செலுத்தி வருகின்றது.

இந்த வருடம் இடம்பெற்ற தேர்தலில் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி மூன்றாவது தடவையாக துருக்கியின் ஆட்சியை பிடித்தது.இக்கட்சி இஸ்லாமிய அடிப்படையை கொண்ட கட்சியாகும்.

இந்த தீனிலும், இந்த உம்மத்தின் மீதான அதன் தாக்கத்திலும் உள்ள அத்தாட்சிகளிலெல்லாம் மிகப் பெரியது – நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று – அபாயங்களும் நெருக்கடிகளும் தன்னைச் சூழ்ந்து கொள்கின்ற போது, தனது உம்மத் சோதனைகளுக்குட்பட்டு சிக்கலிலே மாட்டிக் கொண்டு உலகிலுள்ள பலமிக்க சக்திகளில் கடுமையானதாகவும் எதிர்ப்புகளுக்குக் கொடுக்கும் தீவிர புயலாகவும் மாறி விடுகிறது.

இந்த வேளையில் இஸ்லாம் தனது அற்புதத்தை நிகழ்த்திக் காட்டும். உடனே மரணித்திருந்த உடம்பு உயிர் பெற்று எழும். சமூகத்தின் நரம்புகளிலே பலமிக்க இரத்த ஓட்டம் பிரவாகிக்கும். சத்தியத்தின் வீரர்கள் பாசறையிலிருந்து பூதங்களாக வெளிக்கிளம்பி விடுவார்கள். தூங்கியவன் விழிப்படைந்து விடுவான். கோழை வீரம் பெற்று விடுவான். பலவீனன் பலம் பெற்று விடுவான். துரத்தப்பட்டவன் மீள வந்து விடுவான். சிதறடிக்கப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து விடுவர். எந்த ஓர் அணையும் தாக்குப் பிடிக்க முடியாதவாறு ஆங்காங்கே தொடர்ந்தேர்ச்சியாக விழுகின்ற இச்சிறு சிறு துளிகள் பெரும் வெள்ளமாக மாறி விடும்.('மின் அஜ்லி ஸஹ்வதி ராஷிதா' என்ற புத்தகத்தின் 103-107 வரையுள்ள பக்கங்களில் பார்க்கவும்.)

சிலர் இவ்வாறு குறுக்கீடு செய்ய முடியும். இஸ்லாமிய அழைப்பாளர்களின் தலைகளில் கடுமையான சோதனைத் தனல்கள் அள்ளிக் கொட்டப்படுகின்றது. அங்கு மிங்குமென பலத்த அடிகள் அவர்கள் மீது வீழ்த்தப்படுகின்றன. எனவே கடுமையான சித்திரவதைக்கும் துன்புறுத்தல்களுக்கும் உட்படுத்தப்பட்டு சிதறடிக்கப்பட்பட்டுள்ள இவர்களுக்கு எங்கே ஒர் எழுச்சி ஏற்பட முடியும்? அவர்களது போதனைகள் எவ்வாறு மேலோங்க முடியும்? பாக்குவெட்டிக்கு அகப்பட்ட பாக்குப் போன்று இக்கட்டிலுள்ள இவர்களால் அழைப்பு விடுக்கப்படுகின்ற அரச ஒழுங்கும், திடமான அவர்களால் நம்பப்பட்டவரும் இஸ்லாமிய அழைப்புப் பணியும் எவ்வாறு வெற்றி பெறும் என எதிர்பார்க்க முடியும்?

இந்த குறுக்கீட்டாளர்களுக்கும் நம்பிக்கையீனர்களுக்கும் நாம் கூறுவோம். நீங்கள் குறிப்பிடும் சோதனைகளும் நெருக்கடிகளும் இஸ்லாமிய அழைப்பாளர்களைப் பொறுத்த வரையில் இயலாமையையோ மரணித்து விட்ட நிலையையோ சுட்டிக் காட்டாது. ஏனெனில் உயிரற்று பிணமாகிப் போனவனைத் தாக்குவதில் எவ்வித பயனும் ஏற்படப் போவதில்லை. ஆகவே உயிர்பெற்று இயக்கமடைந்து, எதிர்ப்புக்களை முன்வைக்கின்றவனையே துன்புறுத்தவும் தண்டனைக்குட்படுத்தவும் முடியும். இது தான் இன்றைய இஸ்லாமிய அழைப்பாளர்களது நிலை. அவர்கள் உயிர்பெற்று எழுச்சியடைந்து விட்டார்கள். பலத்துடன் சவால்களை எதிர் கொள்கிறார்கள். அச்சமடைந்த எதிரிகள் அடக்கமுற்படும் போது மேற்கொள்ளும் துன்புறுத்தல்களும் சித்திரவதைகளுமே நாங்கள் இந்த வேளைகளில் எல்லாம் மீண்டும் மீண்டும் உற்சாகம் பெற்று இயங்க வழி செய்கிறது. இந்நிலைப்பாடு பலவீனமா? என்பதைப் புரிந்து கொள்வீர்கள். தன்னை தத்தெடுத்தவர்கள், தனக்காக அழைப்பு விடுக்கின்றவர்கள் துன்புறுத்தப்பட்ட போது கஷ்டங்களை எதிர்கொள்ளாத நிலையில் எந்த ஒரு தஃவாவும் அழைப்புப் பணியும் அற்பமான உயிரற்ற உடலைப் போன்றது. குறைந்தபட்சம் அவ்வழைப்பாளர்களே கோழைகளாக உயிரோட்டமில்லாதவர்களாக இருப்பர்.

சோதனைகளும் சித்திரவதைகளும் இஸ்லாத்தின் கொள்கையில் உள்ள உயிரோட்டத்தையும் அதன் அழைப்பாளர்களின் கொள்கை பற்றுக்குமான பெரும் சான்றாகும். ஒவ்வொரு கட்டத்திலும் போராட்டங்களில் உயிரையே மதியாது அர்ப்பண சிந்தனையுடன் செயற்படும் வீரத்தியாகிகளை இஸ்லாம் உருவாக்கிக் காட்டியிருக்கிறது. தங்களது இரத்தத்தால் இஸ்லாமிய விருட்சத்திற்கு நீர் புகட்டி இருக்கிறார்கள். சின்னாபின்னமான தமது உடல் உறுப்புக்களின் மீது இஸ்லாத்தின் கண்ணியத்தை பறைசாற்றும் கோபுரத்தைக் கட்டி எழுப்பியிருக்கிறார்கள்.

தனிநபர்கள் என்ற வகையில் இச் சோதனைகளும் கஷ்டங்களும் அழைப்பாளர்களுக்கு ஆழமான பாடங்களையும் அழுத்தமான பயிற்சிகளையும் வழங்கிக் கொண்டிருக்கிறது. கஷ்டங்கள் சோதனைகள் மூலம் அவர்களது ஆன்மாவும் தெளிவடைந்து பரிசுத்தமாகின்றது. சோதனைகள் பீடித்துக் கொள்கின்ற முஃமின் நெருப்பிலே நுழைகின்ற இரும்பினை ஒத்தவன். தேவையற்ற அழுக்குகளை நீக்கி நல்ல பகுதி மட்டுமே அவ்விரும்பிலே எஞ்சியிருக்கும் என நபிகளார் (ஸல்) அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.(அல் பஸ்ஸார் தபரானி ஆகியோர் அல்கபீர் எனும் கிரந்தத்தில் அல் ஹாகிம் அல் முஸ்தரக்கில் ஸஹீஹ் எனக் கூற அத் தாரமீ அங்கீகரித்துள்ளார். 1 ம் பாகம் 73, 345 பக்கங்களில் அல் அல்பானி அறிவிப்பாளர் வரிசை ஹஸன் ஆகும். மேலதிக ஆதாரங்கள் பிரபல்யமானவை. ஆகையால் ஹதீஸ் 'ஹுஹாகும் ஸில்ஸிலத்துல் அஹதீஸ் அஸ்ஸஹீஹா 4ம் பாகம் 290, 291 ம் பக்கங்கள் 1714 வது ஹதீஸ்)



இறைநியதிகளின்படி சுப சோபனங்கள்


 படைப்புகளிலும் மனித சமூகத்திலும் அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள நியதிகளில் இருந்து இன்னும் பல சுபசோபனங்களை கண்டு கொள்ள முடியும். முன்னையவர்கள் மீது செயலாகியதைப் போன்றே அடுத்தடுத்து வருகின்ற அனைவரிலும் அது செயலாகும் சக்தி பெற்ற நிலையான தன்மை கொண்டவை. இணைவைப்பாளர்களாயினும் முஸ்லிம்களாயினும் சரி, இடம் பெற்று தீரக் கூடிய மாற்ற முடியாத உறுதியானவைகளாக அல்லாஹ் ஆக்கியுள்ளதாக 'அல்லாஹ்வுடைய நியதி விதியைப் பொறுத்தவரை எவ்வித மாற்றத்தையோ திரிபையோ உம்மால் கண்டு கொள்ள முடியாது' (சூரா அல் ஃபாதிர் :43) என தெரிவிக்கின்றான்.


மாறி மாறி வருதல்


 நாட்களை அல்லாஹ் சார்பாகவும் எதிராகவும் உலகின் பரம்பரையினருக்கு மத்தியில் மாறி மாறி வரச் செய்வதை நியதியாக ஆக்கி வைத்துள்ளான். உஹதுப் போராட்டத்தில் முஸ்லிம்கள் கடுமையான சேதத்திற்குட்படுத்தப்பட்ட வேளையில் 'அல்லாஹ் உங்களுக்கு இன்று ஏற்பட்ட தீங்கு போன்றே (பத்ரில்) இந்த சமூகத்திற்கும் (குறைஷிகளுக்கும்) சேதங்கள் ஏற்பட்டன. இவ்வாறு தான் அல்லாஹ் நாட்களை மனிதர்களுக்கு மத்தியில் மறிமாறி கொண்டு வருவான்' (ஆல இம்ரான் : 140) என்று தெரிவிக்கிறான்.

எனவே தான் வழக்காறாக தெரிவிக்கப்பட்டு வருகிறது காலம் இரண்டு வகைப்படும். உமக்கு சார்பாகவும், எதிராகவும் செயற்படக் கூடியது. ஒரேநிலை தொடர்ந்திருப்பது சாத்தியமற்றது. எத்தனையோ செல்வந்தர்கள் ஏழைகளாக மாறியிருக்கின்றனர். எத்தனையோ வறியவர்கள் பணம்படைத்தவர்களாக மாறியுள்ளனர். எத்தனையோ மகான்கள் இழிவடைந்துள்ளவாறே எத்தனையோ அற்பர்கள் மகாத்மாக்களாக மாறியுள்ளனர். கஷ்டமும் இலகுவும் கூட அவ்வாறே அல்லாஹ் கஷ்டத்துக்குப் பின்னால் இலகுவையே கொண்டு வருவான். (சூரா அத்தலாக் : 7).

வரலாற்றிலே சமூகங்களது நிலைமைகளை நன்கு உற்று நோக்கியவர்கள் எவ்வாறு நாகரீகத் தீப்பந்தம் ஒரு சமூகத்தின் கையிலிருந்து இன்னுமொரு சமூகத்திற்கு கைமாறியிருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்வர். எங்களுடைய அதிர்ஷ்டம், மாறிமாறி வருதல் - நியதி எங்களுக்குச் சார்பாக உள்ளது. கட்டம் இப்போது எங்களுக்கு உரியது. எதிரானதல்ல என இமாம் ஹஸனுல் பன்னா அவர்கள் தெரிவித்துள்ளார்கள். பண்டையகாலத்தில் உலகின் தலைமைத்துவம் கிழக்கின் கைகளிலே தவழ்ந்தது. பிர்அவ்னியம், அசைரியம், பாபிலோனியம், கல்தானியம், பைனீக்கியா, இந்தியா, சீனா போன்ற நாகரீகங்களே உலகின் வழிகாட்டிகளாக செயலபட்டன. அடுத்து. பிரபல்ய தத்துவத்திற்கு பெயர் போன கிரேக்க நாகரீகம், புகழ்மிக்க சடவாதத்தை உடைய ரோம நாகரீகம் போன்றவை மேற்கிலிருந்து தலைமைத்துவத்தை தமதாக்கிக் கொண்டன. பின்னர் மீண்டும் இஸ்லாமிய அரபு நாகரீகத்திற்கு உலகின் கடிவாளம் வந்தது. ஈமானையும் அறிவையும் ஆன்மீக நலன்களையெல்லாம் ஒருங்கிணைத்துக் கொண்ட தனித்துவம் மிக்க அந்நாகரீகம் நீண்டதொரு காலப்பகுதிக்கு உலகின் பிடியை தன்னிடம் வைத்திருந்தது.

அடுத்து வந்த காலப்பகுதிகளில் கிழக்கு உறங்கி விட்டது. தனது தூதுத்துவப் பணியிலே பொடுபோக்காக இருந்து விட்டது. இன்னும் ஒரு தடவை மேற்கு உலகை தன்வசமாக்கிக் கொண்டது. ஆனால் அமானிதமாகிய இத்தலைமைத்துவமப் பொறுப்பை கரிசனையோடு நடக்கவில்லை. ஆன்மீக பண்பாட்டு அம்சங்களில் குறைவிட்டு விட்டது. நீதித்துறையும் அவ்வாறே சத்தியத்தை விட பணத்திற்கும் ஆன்மாவை விட லௌஹீகத்திற்கும், மனிதனை விட சடப்பொருட்களுக்கும் மேலாண்மையை முன்னுரிமையை வழங்கி விட்டது. மனித விவகாரங்களிலே இரு அளவுகோல்களைக் கொண்டு அளவிட ஆரம்பித்து விட்டது எனவே அல்லாஹ்வின் விதி தலைமைத்துவம் பிறரிடம் நகர்ந்து செல்வதை வேண்டி நின்றது. வரலாற்று ஆய்வுகளின்படி மீண்டும் கிழக்கு நோக்கியே கடிவாளம் மீள வேண்டும் என்ற எடுகோள் வலுவாகத் தெரிவிக்கப்படுகிறது. ஏனெனில் இங்கு காணப்படுகின்ற தூது மேற்கு வைத்திருக்கும் தூதுக்கு நேர் முரணமானது. இஸ்லாமிய கிழக்கு மட்டுமே அத்தூதை சொந்தமாக வைத்துள்ளது. எனவே அப்பொறுப்பை சுமந்து கொள்ளத் தயாராகுவதோடு அதற்கான ஆயத்தங்களையும் முஸ்லிம்கள் மேற்கொள்வது கட்டாயமாகும். உங்களது எதிரியை அழித்து உங்களை பூமியின் ஆட்சியாளர்களாக ஆக்கி நீங்கள் எவ்வாறு செயற்படுகிறீர்கள் என உமது இரட்சகன் அவதானிக்கக் கூடியவன். (சூரா அல் அஃராப் :129).

என்னுடைய நல்லடியார்களே பூமியின் அனந்தரக்காரர்களாக வருவார்கள் என தவ்றாத்தில் குறிப்பிட்ட பின்னர் சபூர் வேதத்திலும் கடமையாக்கினோம். (சூரா அல் அன்பியாஃ : 105).


மாற்றம்


முஸ்லிம்களின் புறத்தே காணப்படுகின்ற சுபசோபனங்களில் ஒன்றாகவுள்ள, அல்குர்ஆன் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வலியுறுத்தியிருக்கின்ற 'மாற்றி விடுதல்' என்பது இறை நியதியாக உள்ளது.

நன்மையிலிருந்து தீங்கிற்கும், நேர்வழியிலிருந்து வழிகேட்டிற்கும் சீரான நிலையிலிருந்து சீரழிவுக்கும் மாற்றம் பெறுகின்றவர்களைப் பொறுத்தவரையில் அல்லாஹ் தான் இந்நிலைகளை அவர்களில் தோற்றுவிக்கிறான். அருட்கொடை தண்டனையாகவும், பலம் பலவீனமாகவும், கண்ணியம் இழிவாகவும், செழிப்பு வறண்டதாகவும் மாறுவதற்கு ஏற்பாடு செய்கின்றான். பிர்அவ்னினது கோத்திரத்தாரையும் அவர்களுக்கு முன்னிருந்தோரையும் நிராகரிப்பின் காரணமாகவும் பாவங்களுக்காகவும் பிடித்துக் கொண்டதை இப்படிக் கூறுகின்றான். ஒரு சமூகம் தங்களை மாற்றிக் கொள்ளாத வரைக்கும் அவர்களுக்கு அருட்கொடை அல்லாஹ்  புரிவதுமிலலை. அந்நிலையிலிருந்து அவர்களுக்கு மாற்றங்களை ஏற்படுத்துவதுமில்லை. அவன் நன்கு கேட்பவனாகவும் அறிந்தவனாகவும் உள்ளான். ஆனால் பிர்அவ்னது குழுவினரும் அதற்கு முன்னிருந்தோரும் தங்களது இரட்சகனது அத்தாட்சிகளைப் நிராகரித்தனர். எனவே நாங்கள் அவர்களது பாவங்களைக் கொண்டு, பிடித்து அழிவுக்குட்படுத்தினோம். பிர்அவ்னினது குழுவினரை ஆழ்கடலில் மூழ்கடிக்கச் செய்தோம். ஏனெனில் அவர்கள் ஒவ்வொருவரும் அநியாயக்காரர்களாக இருந்தார்கள். (சூரா அல் அன்பால் : 53-54

அல்லாஹ்வின் இதே நியதியை நாங்கள இன்று மேற்கு நாகரீகத்திற்கு நடைமுறைப்படுத்தலாம். உலக இரட்சகன் மேற்கத்தையர்களுக்கு பூமியில் அதிகாரத்தை வழங்கியுள்ளான். அதன் சக்திகளை வசப்படுத்திக் கொடுத்துள்ளான். அதன் பயன்பாடுகள் ஒவ்வொன்றிலிருந்தும் சுவிக்கக் கொடுத்துள்ளான். அவர்கள் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்துள்ளான். தனது அருட்கொடைகளை வாரி வழங்கியுள்ளான். அதன் காரணமாக தலைக்கு மேலிருந்தும் கால்களுக்குக் கீழாலிருந்தும் அவர்கள் எல்லா வளங்களையும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்களே பொறுப்பு தலைமைத்துவம் என்ற அமானத்தைப் பேணி நடக்காது மோசடி செய்து விட்டனர். பூமியில் அட்டூழியங்கள் அக்கிரமங்ள் புரிவதில் அத்துமீறிச் சென்று விட்டனர். சுரங்கக் கூறின் தங்களை தீங்கின்பால், அவர்களை மாற்றி விடுவதோடு மட்டுமின்றி தலைமைத்துவத்தை பறித்து அதற்கேயுரிய பிறரிடம் வழங்குவது மிகப் பொருத்தமானதே.

இந்த விதியின் முடிவு யாருடைய உள்ளங்கள் மாற்றமடைந்து அவர்களில் காணப்பட்ட தீங்குகள் நீங்கி நன்மைகளாக மாறுகிறதோ, வழிகேடு நேர்வழியாக மாறுகிறதோ! சீர்கேடு நீங்கி சீர்திருத்தம் உருவாகிறதோ, சோம்பல் நீங்கி உற்சாகம் தோற்றம் பெறுகிறதோ இழிவான பண்புகள் நற்குணங்களாக திரும்புகின்றதோ நிச்சயம் அவர்களை அல்லாஹ் மாற்றி விடுவான் அவர்கள் பலவீனத்திலிருந்து பலத்தை நோக்கியும் இழிவிலிருந்து பாதுகாப்பான நிலைக்கும் அடிமைத்தளையிலிருந்து அதிகாரத்திற்கும் மாற்றப்படுவதற்கு தகுதியானவர்களே.

இதை இன்னுமொரு வசனம் குறிப்பிடுகிறது, 'தங்களிலுள்ளவற்றை மாற்றிக் கொள்ளாதவரைக்கும் அல்லாஹ் எந்த ஒரு சமூகத்தையும் மாற்றி விட மாட்டான்'. (சூரா அர்ரஃத் : 11).

முஸ்லிம்கள் என்ற வகையில் எமது நிலைமைகளை மாற்றிச் சீர்செய்து கொள்வதில் அந்நியதி ஒரு நம்பிக்கையை வழங்குகின்றது. இஸ்லாமிய எழுச்சி மேலோங்கிக் கொண்டிருக்கின்ற இக்காலப்பகுதியில் பெரும்பாலான முஸ்லிம்கள் தங்களை மாற்றிக் கொள்வதை கண் கூடாகக் கண்டு கொணடிருக்கின்றோம்.

அடிப்படையிலேயே முழுமையான மாற்றமாக அது காணப்படுகிறது. புறக்கணித்தவர்கள் ஆர்வத்துடன் இஸ்லாத்தை நோக்கி வருகின்றார்கள். இஸ்லாமியச் சட்டங்கள் பற்றி எண்ணியுமில்லாதவர்கள் ஆழமாக அவைகளைக் கற்றுத் தேர்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். அவைகளை அலட்சியம் செய்து விரண்டோடியவர்கள் இன்று அவைகளை முழுமையாக பேணி வருகிறார்கள். அவ்வாறே உடன்பாடுடனும் தூய்மையுடனும் இப்பணியில் ஈடுபடுகிறார்கள். சிறிய விவகாரங்களில் கூட தீனையும் அதன் உரிமைகளையும் பாதுகாப்பதிலும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அரைநிர்வாண வாழ்க்கையில் ஆர்வம் காட்டிய எத்தனையோ பெண்கள் ஹிஸாப் அணிந்து இஸ்லாத்திற்குச் சான்று பகர்கின்றனர். பள்ளிவாசல்களை விட்டும் தூரமாகயிருந்த எத்தனையோ பேர் இன்று அவைகளை தொழுகைகள் மூலமும், அங்கு நடைபெறும் பாட போதனைளில் பங்கு கொள்வதன் மூலமும் உயிர்ப்பிக்கிறார்கள். இந்த அனைத்து நடவடிக்கைகளம் விளைவுகளும் இஸ்லாமிய சமூகம் பாரிய அளவில் மாற்றம் பெற்றுள்ளதை உணர்த்திக் கொண்டிருக்கின்றன. அல்லாஹ்வின் நீயதியும் வேண்டி நிற்பது அவன் இச்சமூகத்தைக் கைவிட மாட்டான் என்பதாகும். தன்னில் உளரீதியாக நடத்தை ரீதியாக ஆழமாக ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்களுக்குப் பகரமாக அல்லாஹ் அதனைப பீடித்துள்ள கஷ்டங்களை நீக்கி மிகச் சிறந்ததொரு மாற்றத்தை ஏற்படுத்தி உயர்வடையச் செய்வான்.

இன்ஷா அல்லாஹ் 
எதிர்காலம் இஸ்லாத்துக்கே

No comments:

Post a Comment