Saturday, July 9, 2011

சூடேற்றப்பட்ட இரத்தம்




50 ஆண்டுகளுக்கு முன் மௌலான அபுல் அஃலா மௌதூதி (ரஹ்) அவர்களால் பாகிஸ்தான் இஸ்லாமிய மாணவர் சம்மேளனத்தில் ஆற்றப்பட்ட இந்தப் பேருரை இன்றளவும் உலக இளைய சமுதாயத்திற்கும், மாணவ இனத்திற்கும் பொருந்துவதால் இதனை இங்கு தருகிறோம்



நவ யுகத்தின் அறைகூவலும் நமது இளைஞர்களும்! இது தான் இன்று எனக்கு அளிக்கப்பட்டிருக்கும் சொற்பொழிவின் தலைப்பு!

நவயுகம் என்றால் என்ன? இதைப்பற்றி முதலில் நீங்கள் சிந்திக்க வேண்டும். ஒவ்வொரு காலத்திலும் வாழ்ந்து வந்த மனிதன் தனது காலத்தை நவயுகம் என்றே நினைத்துக் கொண்டிருக்கிறான். சென்று போக யுகம் பூர்வீகம். அதில் மனித சமுதாயத்திற்கு எத்தகைய நன்மையும் விளையவிலலை என்றே கருதி வந்தான்.

அக்கால மக்கள் அறியாமையிலும், மௌட்டீகத்திலும் மூழ்கிப் போயிருந்தனர். தெளிவான சிந்தனையுள்ளவர்கள், கல்வி கலைகளில் தேர்ச்சி பெற்றவர்கள், விஞ்ஞான விற்பன்னர்கள் என்றும், சென்ற கால் மக்களுக்கு கிடைக்கப் பெறாத அனைத்து வசதிகளையும் நாம் பெற்றிருக்கின்றோம் என்றெல்லாம் எண்ணி வந்தான். இப்படியே அந்தந்த காலத்தில் வாழ்ந்த மனிதன் தவறான எண்ணத்திற்கு பலியாகி விட்டிருந்தான்.

மனிதனுக்கு இறைவன் சிறுகச் சிறுக அருளியிருந்த அறிவியல் கண்டுபிடிப்புக்களை ஒதுக்கி விட்டு பொதுவாக நாம் பார்க்குமிடத்து, ஆதிமனிதர் ஆதம்நபி (ஸல்) அவர்களின் காலந்தொட்டு இன்று வரை ஆரம்பத்தில் எப்படி இருந்தானோ அப்படியே தான் இருக்கின்றான்.

அவனுடைய அறிவுக்கூறு, பகுத்தறிவுத் திறன், மனவிருப்பங்கள், உடலின் தேட்டங்கள், சிந்தனைப் போக்கு ஆகியவை அப்படியே உள்ளன. இவற்றில் ஒருபோதும் மாறுதலோ, அடிப்படையில் வித்தியாசமோ தோன்றவில்லை.

ஏனெனில் மனிதனின் தோற்றம் ஆதம் நபி (அலை) அவர்கள் தோன்றிய போது எந்த வடிவில் இருந்ததோ அதே போல் இன்றும் உள்ளது. மேலும் ஏறக்குறைய நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன் லூத் நபி (அலை) அவர்களின் காலத்து மக்கள் கூட்டத்தினர், எந்தத் தீமைக்கு பலியாகி இருந்தனரோ – அதே தீமையினை நான்காயிரம் ஆண்டுகளுக்குப் பின் - உலகில் தன்னை விட பல துறைகளில் வளர்ச்சி பெற்ற நாடு எதுவுமில்லை என்று பெருமையோடு கூறிக் கொள்ளும் அமெரிக்கா செய்து வருகிறது.

இன்று அங்கு லூத் நபி (அலை) அவர்களுடைய சமூகத்தாரின் பழக்கத்தைக கொண்டோரின் (தன்னினச் சேர்க்கை புரிவோரின்) எண்ணிக்கை இரண்டு கோடிக்கு மேல் உள்ளது என்று புள்ளி விபரம் காட்டப்படுகிறது.

இந்த இரு சாராருக்குமிடையில் இப்பொழுது என்ன வித்தியாசம் ஏற்பட்டு விட்டது.

இதே போன்று முற்காலத்தில் ஃபிர்அவ்ன் தனது அமைச்சரிடம், எனக்காக ஒரு கோபுரத்தை எழுப்புங்கள். அதில் ஏறி மூசாவின் இறைவன் யார்? அவன் எப்படி இருக்கின்றான் என்பதனை நான் கண்டு கொள்ள வேண்டும் என்று கூறினான்.

அது போன்று தான் ஃபிர்அவ்ன் மறைந்து இன்றைக்கு மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்குப் பின் ரஷ்யா தனது ஸ்புட்னிக் ஐஐ ஐ பூமியிலிருந்து விண்வெளியில் ஏவிவிட்டு, அது இருநூற்றைம்பது மைலை அடைந்ததும், நாங்கள் விண்வெளியில்  இறைவனைத் தேடுவோம். அவனை எங்குமே காண முடியவில்லை எனக் குருஷ்சேவ் வாயிலாகச் சொன்னது.

மேற்கூறப்பட்ட உதாரணங்களிலிருந்து கடந்த மூவாயிரத்து ஐநூறாண்டு கால இடைவெளியில் மனிதனின் மனப்பான்மையிலும், சநிதனைப் போக்கிலும் எத்தகைய மாறுதலும் ஏற்படவில்லை என்பது தெளிவாகிறது.

ஃபிர்அவ்ன் தனது நோக்கத்தை அடைவதற்காக அதிகபட்சம் உயரிய கோபுரம் ஒன்றை எழுப்பினான். ரஷ்யா ஸ்புட்னிக் ஐஐ ஐத் தயாரித்து விண்வெளியில் மிதக்க விட்டு, தான் தொழில் நுட்பத்துறையில் முன்னேறி விட்டதாக விளம்பரப்படுத்திக் கொண்டது.

ஆனால், இவருடைய சிந்தனைப் போக்கும் ஒரே மாதிரியாகத் தான் உள்ளது. அதில் எத்தகைய மமாறுதலையும் காண முடியவில்லை. நாத்திகர்கள் முற்காலத்தில் எந்த நிலையில் இருந்தார்களோ அதே நிலையில் தான் இப்போது உள்ளனர்.

மாபெரும் குற்றமிழைத்தோரும், இழிவான, மானக்கேடான செயல்கள் புரிந்தோறும் பூர்வ காலத்தில் எப்படி இருந்தார்களோ அப்படியே இன்றும் உள்ளனர்.

இது போன்று சத்தியத்தை நேசித்தவர்களும், அதற்காகப் பாடுபட்டவர்களும் நூஹ் நபி (அலை) அவர்கள் காலத்தில் எப்படியிருந்தனரோ அதே போல் தான் இன்றும் உள்ளனர்.

இதானல் புலப்படுவது யாதெனில், நன்மையும் அதே போன்று தான் இருக்கிறது. இதில் எந்த மாற்றமும் ஏற்பட்டதில்லை என்பது தான்.

மனிதனின் போக்குவரத்து சாதனங்களின் வளாச்சியும், அறிவியல் கண்டுபிடிப்புக்கள், அவற்றைப் பயன்படுத்தல் போன்றவற்றில் ஏற்பட்டிருக்கின்ற மகத்தான மாற்றங்கள் என்று சொல்ல முடியாது.

இது மட்டுமா? ஒவ்வொரு காலத்திலும் வாழ்ந்த மக்கள், தாம் வாழ்ந்த காலத்தில் ஏற்பட்ட முன்னேற்றத்தை மனித முன்னேற்றத்தின் இறுதி எல்லை எனக் கருதினர்.

ஆனால் சிறிது காலம் சென்றதுமே ஒவ்வொரு யுகமும் பழமையான யுகமாகவே போய் விட்டது. இவ்வாறே பிற்காலத்தில் தோன்றிய மக்களும் முற்கால மக்களைப் போல் தவறான எண்ணத்திற்கு; பலியாகி விட்டனர். ஏன், சென்ற நூற்றாண்டின் இறுதிவரை, உருக்கினால் செய்யப்படும் வண்டியோ, காற்றைவிட அதிகம் பறுவாயுள்ள் ஒரு பொருளையோ வானவெளியில் காற்றில் பறப்பது சாத்தியமில்லை எனக் கூறிய விண்வெளி ஆராய்ச்சியாளர்களும், தத்துவஞானிகளம் இருக்கத்தான் செய்தனர். 19 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை இவர்கள் சாத்தியமில்லை என்பதை அழுத்தந்திருத்தமாக வாதித்தனர்.

ஆனால் சிறிது காலத்திற்குள்ளாகவே 1911ஈ 1912 ஆம் ஆண்டுகளில் உருக்கினால் தயாரிக்கப்பட்ட வண்டி காற்றில் மிதந்தது. அப்போது பதினைந்து ஆண்டுகளுக்கு முன் இது சாத்தியமில்லை என்று கருதி வந்தவர்கள், பழமைவாதிகள் என்பது தெரிய வந்தது.

அப்படியென்றால், இது நவயுகம் என்று கூறி வந்தவர்களின் வாதமும், இது முன்னேற்றத்தின் இறுதி எல்லை என்று கூறியவர்களின் கருத்தும் முற்றிலும் தவறானவையாகும்.

ஒவ்வொரு காலத்திலும் வாழ்ந்து வந்த மனிதன், தான் முன்னேற்றத்தின் இறுதி எல்லையை அடைந்து விட்டதாகவே கருதினான். ஆனால் பிற்காலத்தில் அதிக முயற்சிகள் மேற்கொள்ளப்படவே மேலும் பல வழிகள் திறக்கலாயின. அதிக முன்னேற்றங்களும் ஏற்பட்டன. எனவே முந்திய யுகம் பூர்வயுகமாகவே இருந்து விட்டது.

தத்துவத்தின் நிலையும் இப்படித்தான். இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் அது அடைந்திருந்த சீரழிவை விட இப்போது மிக பயங்கரமான அளவிற்கு சீரழிந்து விட்டிருக்கிறது.

நவயுகத்தை பற்றி நன்கு தெரிந்து கொண்ட பின்னர் இளைஞர் என்ற சொல்லின் கருத்து என்ன என்பதைக் கவனியுங்கள்.

இளைஞர் என்பது நன்மையின் மொத்த உருவத்திற்கோ, தீமைகயின் மொத்த உருவத்திற்கோ பெயரல்ல! மாறாக சூடேற்றப்பட்ட இரத்தத்தின் பெயராகும். புத்தம் புதியவற்றைக் கவர்ந்து கொள்ளும் ஆற்றலுக்குப் பெயராகும். ஒரு பொருள் அது முயற்சி செய்து அடைய வேண்டிய ஒன்று என மனதில் தோன்றி விட்டால், அது நல்லதோ கெட்டதோ உயிரைக் கொடுத்தேனும் அதனை அடைந்து விட நினைக்கும் ஒரு சக்திக்குப் பெயராகும்.

உதாரணத்திற்கு வாள் ஒன்றை எடுத்துக் கொள்வோம். இது போர் வீரனுக்கும் பயன்படுகிறது. கொள்ளைக் காரனுக்கும் பயன்படுகிறது, எனவே இளைஞர் என்பது ஒரு வலிமையின் பொருளாகும்.

முற்காலத்தில் கூட தீமைகளுக்குத் துணை போவோர் இதே இளைஞர்களாகத்தானிருந்தனர். தீமைகளைப் பெருக்கும் ஓர் இராணுவமாகவும் இவர்கள் செயல்பட்டனர். இவர்கள் மூலமே தீமைகள் உலகெங்கும் பரவலாயின. மேலும் தீமைகளைக் கவர்ந்து கொள்வதில் பெரியவர்களை விட இவர்களே அதிகமான ஆர்வத்தைக் காட்டினர். இதே நிலை தான் இன்றும் உள்ளது.

இக்காலத்தில் பரவிவரும் ஒழுக்கக் கேடுகளை மற்றவர்களை விட சீக்கிரம் இளைஞர்களே ஏற்றுக் கொள்கின்றனர். இவர்களே அவற்றைப் பரப்புவதிலும் மற்ற எவரையும் விட முதன்மை வகிக்கின்றனர்.

தீமைகள் புரிவோருக்கு மிகுந்த அதிகபட்ச ஊக்கத்தை இவர்களே தோற்றுவிக்கின்றனர் என்றால், இளைஞர்களுக்கு நன்மை உருக் கொண்டவர்கள் என்று எவ்வாறு பெயர் சூட்ட முடியும்?

இதே போன்று இளைஞர்கள் தீமையே உருக்கொண்டவர்களுமல்லர். இது நன்மையானது தான் என்று ஒன்றைத் தெரிந்து கொண்டதும் அதில் மனநிறைவு அடைந்து விட்டால் அதற்காக வேண்டி உயிரையும் அர்ப்பணிக்கத் தயங்காத மாபெரும் ஆற்றலும் அவர்களுள் அமைந்துள்ளது.

எகிப்திய நாகரீகத்த உற்று நோக்குங்கள். யூசுஃப் (அலை) அவர்கள் காலத்தில் எகிப்திய நாகரீகம் எப்படி இருந்தது? அது இன்றைய அமெரிக்கா, ஐரோப்பிய நாகரீகத்துக்கு வேறுபட்ட ஒன்றாகயிருக்கவில்லை.

ஆனால் யூசுஃப் (அலை) அவர்கள் ஓர் இளைஞராகவே இருந்தார்கள். அவர்கள் தமது ஒழுக்க வலிமையால், தமது விவேகத்தின் வீரியத்தால் அரசு முழுவதும் தமது கைக்கு வந்து விடும் அளவுக்கு அந்த நாகரீகத்தின் மீது பலத்த அடி கொடுத்தார்.

யூசுஃப் நபி (அலை) அவர்கள் ஆட்சியில் அமர்ந்ததும் செல்வக் களஞ்சியங்களை என் முன் கொண்டு வந்து குவியுங்கள் என்று கூறினார்கள். செல்வச் சீமான்களாயிருந்த அனைவரும் அக்கணமே இதே எம்மிடம் இருக்கும் செல்வங்களை எடுத்துக் கொள்ளுங்கள் என்றனர்.

இதே போன்று பெருமானார் (ஸல்) அவர்களின் காலத்தை உற்று நோக்குங்கள். பெரியவர்களெனப்படுவோர் பெருமானார் (ஸல்) அவர்ககு;கு பற்பல இடையூறுகளை விளைவித்துக் கொண்டிரு;நதனர். அவர்கள் தம்மோடு இளைஞர்களின் அணியொன்றைத் திரட்டி வைத்துக் கொண்டு பெருமானார் (ஸல்) அவர்களுக்கும், அவர்கள் தம் அருமைத் தோழர்களுக்கும் சொல்லொண்ணாத் துன்பங்களையும் தொல்லைகளையும் கொடுத்து வந்தார்கள்.

பிலால் (ரலி) அவர்களை கொதிக்கும் பாலைவன வெயிலில் கிடத்தி – மணிலிலே இழுத்துச் சென்றவர்கள் மக்காவின் இளைஞர்கள் தாம். இவர்கள் பெரியவர்களின் தூண்டுதலுக்கு இலக்காகி தவறாக வழியை மேற்கொண்டனர். மற்றொரு கோணத்திலிருந்து கவனியுங்கள். பெருமானார் (ஸல்) அவர்களின் அன்புத் தோழர்கள் சத்தியத்திற்காக உயிர்த்தியாகம் புரிவதில் ஈடு இணையற்று விளங்கினார்கள். பெருமானார் (ஸல்) அவர்களின் ஆரம்ப கால நண்பர்களின் பட்டியலைப் புரட்டுங்கள்.

பெருமானார் (ஸல்) அவர்களை விட வயதில் இரண்டு ஆண்டு மூத்தவர் ஒருவர் மட்டுமே அதில் இடம் பெற்றிருந்தார். அதில் பெற்றிருந்த மற்ற அனைவரும் அவர்களை விட வயதில் குறைந்தவர்களாகவே இருந்தனர்.

பத்துவயது நிரம்பப் பெற்ற வரும், பதினைந்து நிரம்பப் பெற்றவரும், இருபத்தைந்து வயதைத் தாண்டியவரும் அதிகபட்சம் முப்பது, முப்பத்தைந்து வயதினை ஒத்தவர்களும் தாம் அதில் இருந்தனர். இவர்கள் தம் கண்ணெதிரே தோற்றமளித்த நெருப்புக் குண்டத்தை கண்ணால் கண்டும் இஸ்லாத்தைத் தழுவினார்களென்றால், வனவிலங்குகளை நொக்கி, உங்களது பசியினைப் போக்க இதோ நாங்கள் இருக்கிறோம் எங்களைக் கீறிக்கிழித்து உண்டு மகிழுங்கள் என்றும், அக்கிரமக்காரர்களை நோக்கி, வாருங்கள்! இதோ தெரிகின்ற நெருப்புக் குண்டத்தில் எங்களைப் போட்டு பொசுக்குங்கள் என்று வருந்து அழைத்துக் கொண்டது போலல்லவா இருக்கிறது!

இவ்வித பயங்கரச் சூழ்நிலையிலும் அவர்கள் தைரியமாக எழுந்து நின்றி, லா யிலாஹ இல்லல்லாஹ் எனும் திருக்கலிமாவை ஓங்கி முழங்கினார்கள். பேராபத்துக்களை கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை. எண்ணற்ற இன்னல்களைச் சகித்தார்கள். விதவிதமாக அக்கிரமங்களுக்கு ஆட்பட்டார்கள்.

இனி மக்காவில் மார்க்கப்பணி புரிவது சிரமமானது எனக் கண்ட அவர்கள் நாடு, வீடு, உற்றார், உறவினர் ஆகிய அனைவரையும் அப்படியே விட்டு விட்டு பிற நாட்டில் புகலிடம் தேடினார்கள். சொந்த நாட்டை விட்டுப் பிறநாடு சென்றால் என்ன நேரிடும்? நமது நிலை என்னவாகும் என்பதைப் பற்றி அவர்கள் சிந்திக்கவேயில்லை. இவர்களும் இளைஞர்கள் தாம்! இவர்களில் பருவம் அடைந்த பாவையரும், இளங்காளையரும் இருந்தனர்.

இறுதியில் இவர்கள் அனைவரும் தமது தீரமிக்க செயல்களால் இஸ்லாத்தின் கொடியினைத் தாங்கிப் பிடித்தார்கள். பெருமானார் (ஸல்) அவர்களுக்குப் பெருந்துணையாய் நின்று இவர்கள் தோற்றுவித்த மாபெரும் புரட்சி பல நூற்றாண்டு காலம் வரை உலகில் நிலைத்து நின்று, உலகிற்கு வழி காட்டிற்று. ஏன், இன்றும் கூட வழிகாட்டிக் கொண்டிருக்கிறது. இனி இன்ஷா அல்லாஹ் மறுமை நாள் வரை அதன் பிரதிபலிப்பு உலகில் இருந்து கொண்டே இருக்கும். இவை அனைத்தும் அப்புண்ணிய சீலர்களின் அரிய தியாகங்களாலும் வீர மிக்க செயல்களாலும் நிகழ்ந்தவையன்றோ!

திருக்குர்ஆனும், பெருமானார் (ஸல்) அவர்களும் கற்றுத் தந்த ஒழுக்கத்தை நீங்கள் பின்பற்றுங்கள். உங்களது அறிவாற்றறை உலகின் சிந்தனையைக் கவர்கின்ற அளவிற்க எடுத்தியம்புங்கள். உங்கள் நாவுகள் வசை மாறி பொழிவதிலிருந்து தூய்மை பெற உதவுங்கள்.

பெருமானார் (ஸல்) அவர்கள் எந்த நற்பணியை மேற்கொண்டு தமது அருமைத் தோழர்களையும் மேற்கொள்ளச் செய்தார்களோ அந்த நல்ல பணியை நீங்களும் மேற் கொள்ளுங்கள். நிச்சயம் வெற்றி உங்கள் பக்கம் வரும். உலகம் உங்கள் வசப்படும்.


(நன்றி : நம்பிக்கை - ஆகஸ்டு 2000)
SOURCE FROM ONE REALISM

No comments:

Post a Comment