இந்தக் கட்டுரை ஈராக் போர் மிக உக்கிரமாக நடக்கும்போது எழுதப்பட்டதாகும்.
ஈராக்..!
வல்லரசுகளின் வயிற்றுப் பசிக்கு இரையாகிக் கொண்டிருக்கின்றதொரு பூமி. மனிதன் நாகரீகமானவன். அவன் மிருகங்களை விட மேலானவன். என்றெல்லாம் மனிதனின் தகவமைப்பைப் பற்றிக் கூறப்படுகின்றன. ஆனால், நாகரீகம் என்ற போர்வையில் இன்றைக்கு நச்சுப் பாம்புகளாக மனிதன் மாறித்தான் போனான் என்பதை ஈராக் நிரூபித்துக் காட்டிக் கொண்டிருக்கின்றது.
அங்கே...?! அரசியல் நெருக்கடி என்றால், பொருளாதார வீழ்ச்சி என்றால் மக்களைத் திசை திருப்ப ஏகாதிபத்திய சக்திகள் இப்பொழுது தீவிரவாதம் என்ற சொல்லை உரத்து முழங்கி மக்களை திசை திருப்ப முனைகின்றன. முன்பு மனிதன் நாகரீகத்தைத் தொலைத்து விட்டு, அவனது செயல்கள் படுபாதளத்தை அடைந்த பொழுது சமூகங்கள் வீழ்ச்சி கண்டன. இப்பொழுது, பொருளாதாரமும், அரசியல் கொள்கைகளும், வெளியுறவுக் கொள்கைகளும் அந்த வீழ்ச்சிக்குக் காரணமாக அமைகின்றன.
வல்லரசுகளின் வயிற்றுப் பசிக்கு இரையாகிக் கொண்டிருக்கின்றதொரு பூமி. மனிதன் நாகரீகமானவன். அவன் மிருகங்களை விட மேலானவன். என்றெல்லாம் மனிதனின் தகவமைப்பைப் பற்றிக் கூறப்படுகின்றன. ஆனால், நாகரீகம் என்ற போர்வையில் இன்றைக்கு நச்சுப் பாம்புகளாக மனிதன் மாறித்தான் போனான் என்பதை ஈராக் நிரூபித்துக் காட்டிக் கொண்டிருக்கின்றது.
அங்கே...?! அரசியல் நெருக்கடி என்றால், பொருளாதார வீழ்ச்சி என்றால் மக்களைத் திசை திருப்ப ஏகாதிபத்திய சக்திகள் இப்பொழுது தீவிரவாதம் என்ற சொல்லை உரத்து முழங்கி மக்களை திசை திருப்ப முனைகின்றன. முன்பு மனிதன் நாகரீகத்தைத் தொலைத்து விட்டு, அவனது செயல்கள் படுபாதளத்தை அடைந்த பொழுது சமூகங்கள் வீழ்ச்சி கண்டன. இப்பொழுது, பொருளாதாரமும், அரசியல் கொள்கைகளும், வெளியுறவுக் கொள்கைகளும் அந்த வீழ்ச்சிக்குக் காரணமாக அமைகின்றன.
வியட்நாம் முதல் ஆப்கான் வரை அமெரிக்காவுக்கு பேரிடி தான் என்னும் பொழுது, அதாவது அமெரிக்க அரசு ஜனநாயகக் காவலன் வேஷம் போட்ட பொழுதெல்லாம் அவர்களது வேஷங்கள் களைக்கப்பட்டே வந்திருக்கின்றன. வியட்நாமை விட்டு வெளியேறும் பொழுது கிட்டத்தட்ட 58 ஆயிரம் அமெரிக்கத் தாய்மார்களின் பிள்ளைகளை இழந்த பின்பே வெளியேறினார்கள். இன்றைய அமெரிக்காவின் சொல்லாடலில் கூற வேண்டுமென்றால், 58 ஆயிரம் டியூப்கள் அமெரிக்காவிற்கு பிணமாக அனுப்பப்பட்டு, இன்றைக்கு மிகப் பெரிய நினைவுச் சின்னம் ஒன்று வைக்கப்பட்டதோடு, வியட்நாம் போர் நிறைவு பெற்றது. ஆனால் போர் நின்றதே ஒழிய போரினால், ஏற்பட்ட மிகப் பெரிய அழிவுகள் இன்றைக்கும் தொடர்ந்து கொண்டே வந்து கொண்டிருக்கின்றன.
இதில் இன்னொரு அரசியலும் அடங்கியிருக்கின்றது. யூதர்கள் அவர்கள் தோன்றிய காலத்திலிருந்து இன்று வரை அவர்கள் எந்த சமூகத்தின் மீதும் நேரடியாகத் தாக்குதல் தொடுக்கத் திராணியற்றவர்களாகவே இருந்தார்கள். அதுபோலவே இன்றைக்கும் அவர்கள், தங்களது குறுகிய நலன்களை அடைந்து கொள்வதற்கு அமெரிக்காவைப் பகடைக்காயகப் பயன்படுத்திக் கொள்கின்றார்கள்.
அரபு தேசத்தில், இஸ்ரேலின் இருப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பவை சிரியா, ஈராக், ஈரான் போன்ற சேதங்களே..! இவற்றில் ஈராக் வாய்ப்புக் கிடைக்கும் பொழுதெல்லாம் இஸ்ரேலை மட்டம் தட்டியே வந்து கொண்டிருந்தது. முதல் வளைகுடா யுத்தத்தின் பொழுது, குவைத்தை நோக்கி ஏவுகனைகளைச் செலுத்தப்பட்டது போலவே, இஸ்ரேலை நோக்கியும் ஈராக் அதிபர் சதாம் ஏகனைகளைச் செலுத்தினார். எனவே, தனக்கு எதிரியாக எவரும் அரபு தேசத்தில் இருக்கக் கூடாது என்றே இஸ்ரேல் நினைக்கின்றது. அதனுடைய ''அகன்ற இஸ்ரேல்'' (மத்திய கிழக்கு முழுவதும், மதீனா உள்ளிட்ட பகுதிகள்) என்ற கனவை நிறைவு செய்து கொடுக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு, அதனை புஷ் செயல்படுத்தி வருகின்றார்.
உலகின் அரசியல் காய்கள் தற்பொழுது மிக வேகமாக நகர்ந்து கொண்டிருக்கின்றன. முன்பு மறைமுக யுத்தம் நடத்திக் கொண்டிருந்த நாடுகள், அதனை ஓரங்கட்டி விட்டு, ஒரு பொது எதிரியை நோக்கி களம் காணும் வகையில் தங்களைத் தயார்படுத்திக் கொண்டிருக்கின்றன. அதேபோல் மறைமுக யுத்தத்தின் பொழுது, அணிகள் மாறி இருந்த நாடுகள் இப்பொழுது தங்களது அணிகளை மாற்றிக் கொண்டு வருகின்றன.
இந்த நாடுகள் யாவும் ஒரே சொல்லாடலை உலகம் முழுக்க உரத்து முழங்கி வருவதோடு, தங்களது தவறான நடவடிக்கைகளுக்கு, இந்தச் சொல்லாடலைக் காரணமாக ஆக்கி விடுகின்றன. ஆம்..! அது தான் 'தீவிரவாதம்', 'அல்காய்தா', 'அடிப்படைவாதம்', என்ற சொல்லாடல்கள்.
ஆனால், இந்தத் தீவிரவாதம், அல்காய்தா, அடிப்படைவாதம் என்ற சொல்லாடல்களை மறைத்திருக்கும் திரையை விளக்கிப் பார்த்தால், அங்கே அமெரிக்க மற்றும் யூத முகங்கள் தெரிவதைக் காணலாம். ஒரு காலத்தில் சிஐஏ வின் வழிகாட்டலில் வாழ்ந்தவர் தான் பின்லாடன், அதனைப் போலவே அமெரிக்காவின் நலன்களுக்காக ஈரானின் மீது பத்து வருடம் போர் தொடுத்தவர் தான் சதாம் உசேன், இன்னும் ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம் சதாமைப் பதவிக் கொண்டு வந்ததில், அமெரிக்காவுக்கு அதிகப் பங்கு உண்டு.
இன்றைக்கு மிக உச்சகட்டப் போர் நடந்து கொண்டிருக்கும் நாடான ஈராக்கில், அதன் தீமைக்குக் காரணமாக அமைந்த நபராக விமர்சிக்கப்படும் சதாம் என்ற ஆளுமையை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்கள் யார்? என்ற ஆய்வை எடுத்துக் கொண்டால், பதிலாகக் கிடைப்பது அமெரிக்க, யூத சக்திகள் என்பது தெளிவாகும்.
தன்னுடைய இருப்பை ஈரானிலிருந்து அகற்றிய அதிபர் கொமைனிக்கு எதிராகக் களமிறக்கத் தயார்படுத்தப்பட்டவர் தான் சதாம். ஒரு காலத்தில் ஈரான் மன்னர் ஷா, அமெரிக்காவும் பிரிட்டனும் சொன்ன இடத்தில் கையெழுத்துப் போட்டு வந்தார். ஈரானின் நலன்கள் அமெரிக்காவிற்கும், பிரிட்டனுக்கும் கப்பல் கப்பலாகச் சென்று கொண்டிருந்தன. இதனைத் தடுத்து நிறுத்தியதோடு, மன்னர் ஷாவின் ஆட்சியையும் கொமைனி முடிவுக்குக் கொண்டு வந்தார். தங்களுடைய வாழ்வாதாரத் தேடலை முடிவுக்குக் கொண்டு வந்த கொமைனியும், அவர்களது போராட்டமும் விடுதலைப் போராகச் சித்திரிக்கப்படவில்லை, வன்கொடுமையாக உலகுக்குக் காட்டப்பட்டது. அடிப்படைவாதமாகக் காட்டப்பட்டது. ஈரானில் கொமைனி இஸ்லாமிய ஆட்சியை நடத்தினார் என்பதில் கருத்துவேறுபாடு இருப்பினும், அதற்கு இஸ்லாமிய அடிப்படை வாத முத்திரை குத்தப்பட்டு, ஜனநாயக உரிமை மறுக்கப்படுகின்றது என்ற கூப்பாடும் போடப்பட்டு, அங்கு பெண்கள் அடக்குமுறைக்கு ஆளாகின்றார்கள் என்ற மனித உரிமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு, இப்பொழுது தங்களது இழந்த உரிமைகளை மீண்டும் மீட்கப் போராடுவதற்கு உறுதுணை புரிந்து வரும் ஒரு ஈரான் அம்மணிக்கு நோபல் பரிசும் கொடுத்து அழகு பார்த்தாகி விட்டது.
மேற்கண்ட காரணங்களுக்காக அமெரிக்க உளவுத்துறையினால் ஈராக்கில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டு சதாம் முன்னிலைப்படுத்தப்பட்டு, ஈரானுக்கு எதிராகக் களமிறக்கி விடப்பட்டார். இப்பொழுது கொடுங்கோலாராகச் சித்தரிக்கப்படக் கூடிய சதாம், அன்றைக்கும் இதே போலத்தான் இருந்தார். ஆனால் அன்றைய சதாம், அமெரிக்காவின் நலன்களுக்கு ஈடுகொடுத்தவர், ஆனால் இன்றைய சதாம் தனது கள்ளக்குழந்தையின் இருப்புக்கே வேட்டு வைக்கக் கூடியவர்.
எனவே, ஆப்கானைப் போல இஸ்லாமியத் தீவிரவாதம், ஜனநாயக மறுப்பு, பெண்கள் உரிமை மறுப்பு போன்ற காரணங்களைக் கூற முடியாது. காரணம், சதாம் ஒரு சோஸலிஸ்ட். அதுவும் பாத் சோஸலிஸ்ட். இந்த பாத் சோஸலிஸத்திற்கும் அதன் பிறப்பிற்கும் யூத ஸியோனிஸத்திற்கும் கூட தொடர்புண்டு. இந்தக் கட்சியின் பிறப்பிடம் ஸியோனிஸம் - அதாவது மைக்கேல் அஃப்லாக் என்ற யூதரின் மூளையில் உதித்தது தான் பாத் சோஸலிஸக் கட்சி. எனவே, மேற்கண்ட குற்றச்சாட்டுகள் இல்லாத நிலையில், அணு ஆயுதம் தயாரிப்பு மற்றும் குர்த் இன மக்கள் படுகொலை என்ற குற்றச்சாட்டின் கீழ் அமெரிக்கா பிரிட்டன் நாடுகள் ஈராக் மீது யுத்தம் தொடுத்தன.
ஒரு காலத்தில் அதாவது முதல் வளைகுடா யுத்தத்திற்கு முன்பு, ரம்ஸ்பெல்டு சதாமின் நண்பனாக ஈராக்கில் நுழைந்தார். இன்றைக்கு அதே ரம்ஸ்பெல்டு சதாமின் அழிவுக்கு காரணமானவர்களில் ஒருவரானார். இறுதியாகக் கிடைத்த செய்திகளின்படி, சதாம் இப்பொழுது அமெரிக்காவின் வளைக்குள் சிக்கி, தனது இறுதிக்காலத்தை நெருங்கிக் கொண்டிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.
சதாமின் கைதும், அதன் பின்னணிகளும், இன்னும் நடந்து கொண்டிருப்பவை யாவும் நமக்கு புதிதாக அல்லது புரியாத புதிராக இருக்கலாம். ஆனால், இவையெல்லாம் மிக நெடுங்காலமாக யூதர்களால் திட்டமிடப்பட்டு, அரங்கேற்றம் நடத்தி வரும் யூதர்களின் சதித்திட்டங்களாகும்.
அமெரிக்காவின் சரிந்து வரும் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்துவதற்கு உண்டான முன் முயற்சியே ஈராக் பிரவேசம் என்றும் கூறப்படுகின்றது. ஈராக்கில் இருந்து எடுக்கும் எண்ணெய் மூலமாக தனது பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்துவதோடு, பரந்து விரிந்து கிடக்கும் அரபு சாம்ராஜ்யத்தைக் கண்காணிக்க வசதியாகவும் இருக்கும் என்றும் அமெரிக்க கருதுகின்றது. ஏனெனில், அரபுலகில் அமெரிக்காவின் இருப்பு பற்றி அதிகதிகமாக இப்பொழுது வெறுப்புணர்வு மக்களிடம் தலைதூக்கி வருவதும் காரணமாகும்.
ரஷ்யாவுடன் இணைந்து கொண்டு, ஈரான் அணு உலையை வடிவமைத்துக் கொண்டிருப்பதும் அமெரிக்காவுக்குத் தலையிடியாக உள்ளது. ஏனெனில், ஈரான் அணு ஆயுத உற்பத்தியைப் பெற்று விட்டால், அது தனது கள்ளக் குழந்தை இஸ்ரேலுக்குத் தலையிடியாக மாறி விடுமே என்றும், அதன் மூலம் அரபுலகத்தில் தனது ஆதிக்கம் கேள்விக்குறியாகி விடும் என்றும் அமெரிக்கா அஞ்சுகின்றது.
இன்னும் சில ஆண்டுகளில் அமெரிக்காவில் உள்ள பல நிறுவனங்கள் இழுத்து மூடப்படும் நிலையில் உள்ளன. உதாரணமாக, ஏர்பஸ் நிறுவனம் ஆர்டர் இல்லாததால், ஆள் குறைப்புச் செய்து வருகின்றது. மேலும், இந்தியாவானது ஏர்பஸ் நிறுவனத்திடம் விமானங்கள் வாங்குவதற்குண்டான பரிசீலனையைச் செய்து வந்தது. அந்த ஆர்டரை உடன் வழங்குமாறு அமெரிக்கா இந்தியாவிடம் வேண்டுகோள் விடுத்ததோடல்லாமல், அதன் மூலம் ஏர்பஸ் நிறுவனத்திற்கு மறுவாழ்வு அளிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளது. இதனை அடுத்து, அமெரிக்கா குடிமக்களை வேலைக்கு அமர்த்துவதை விட இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் இருந்து வரும் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதைத் தான் அமெரிக்க நிறுவனங்கள் விரும்புகின்றன. ஏனெனில், குறைந்த விகித ஊதியமே இதன் காரணமாகும்.
ஆனால், இப்பொழுது நடக்கும் விவகாரங்கள் யாவும் அவர்களது திட்டமிட்டபடி நடைபெறாததால் ஏமாற்றத்துக்குள்ளாகி இருக்கும் புஷ் அரசு, கடந்த ஆறு மாதங்களாக எதனையும் சாதிக்காது போனதால், தனது சொந்த மக்களின் எதிர்ப்பையும் சம்பாதித்துக் கொண்டு வருகின்றது. டைம்ஸ் பத்திரிக்கை ஐரோப்பாவில் நடத்திய கணக்கெடுப்பில் 80 சதவீத ஐரோப்பியர்கள் உலக அமைதிக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பது அமெரிக்காவே என வாக்களித்துள்ளார்கள். 10 சதவீதத்துக்கும் குறைவானோரே ஈராக்குக்கும், வட கொரியாவுக்கும் வாக்களித்துள்ளார்கள்.
எனவே, மக்களின் எதிர்ப்பைச் சமாளிக்க இயலாத புஷ் அரசு, எதையாவது செய்து மக்களின் எதிர்ப்பை மட்டுப்படுத்த முயற்சிக்கும் அதன் முயற்சிக்கு, அவலாக அமைந்த கதை தான் சதாமின் கைது. இதிலும், உலக அரசியல் ஆய்வாளர்களிடையே கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இரண்டாவது, வளைகுடா யுத்தம் ஆரம்பித்த பொழுது எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு எதிர்ப்பு சதாமிடமிருந்தும் அவரது படையினரிடமிருந்து எழாதது, அரசியல் நோக்கர்களிடையே விமர்சனத்தையும், கேள்விகள் பலவற்றையும் எழுப்பியுள்ளது. சதாமின் மிக நெருங்கிய சகாகக்கள் கூட அமெரிக்காவின் பகட்டுக்கு முன் விலை போய் விட்டனர். தனக்கு மிக நெருங்கியவர்களின் இத்தகைய போக்கு பற்றி எதுவும் தெரியாவதவராக சதாம் எவ்வாறு இருந்திருக்க முடியும் என்றும், சதாமும் கூட அமெரிக்காவின் ஆதரவுக் கரங்களுக்குள் வீழ்ந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகின்றது. அதனால், மக்களின் எதிர்ப்பு உச்ச கட்டத்தில் இருக்கும் இந்த நிலையில், அமெரிக்காவால் திட்டமிட்டபடி சதாமை மக்கள் முன் கொண்டு வர முடிந்துள்ளது.
ஆட்சியையும் அதிகாரத்தையும் முழுமையாக அடைய இயலாத தாலிபான்களால் தப்பிச் செல்ல முடியும் என்றிருக்கும் பொழுது, நாட்டின் ஒட்டு மொத்த அதிகாரத்தையும் கையில் வைத்திருந்த ஒருவர் எவ்வாறு தப்பிக்காமல் அமெரிக்காவின் கரங்களுக்குள் சிக்கிக் கொண்டார் என்பதோடு, தனது மகன்களையும் இழந்திருக்கின்றார் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
சதாமின் கைது காரணமாக, வரும் தேர்தலில் அமெரிக்காவின் மேலாண்மைக்குச் சவால் விட்ட ஒருவரின் கொட்டத்தை அடக்கிய கதாநாயகனாக புஷ் வலம் வருவதற்குச் சந்தர்ப்பம் கிடைத்திருப்பதோடு, நாட்டின் பொருளாதாரத் தேக்கங்கள் பற்றிய எதிர்ப்புக்களை ஒரு கட்டுக்குள் கொண்டு வரவும் முடிந்திருக்கின்றது.
அமெரிக்காவின் இந்த அடாவடித்தனம் இரண்டு வழிகளில் கட்டுப்படுத்தப்படலாம். ஒன்று, தானாகவே எங்காவது ஓரிடத்தில் முட்டிக் கொண்டு தலைகுப்புற கவிழ்ந்து விடும். இன்னொன்று, உள்நாட்டில் மக்கள் அதன் ராணுவ இயந்திரத்தை பலமாக தடுத்து நிறுத்துவார்கள். இவை இரண்டுக்குமான அறிகுறிகள் ஏற்கனவே தென்பட ஆரம்பித்து விட்டன.
அதையே தான் பாக்தாத் வரலாறு எடுத்தியம்பிக் கொண்டிருக்கின்றது. பாக்தாத் வீழ்ந்த பொழுதெல்லாம் அது தன்னை வீழ்த்தியோரையே தனக்குள் உள்வாங்கிக் கொண்ட அதிசயத்தை நிகழ்த்தி உள்ளது. இன்னும் அவர்களைத் தனது கொள்கையால், இறுகப் பிணைத்துள்ளது.
அபுபக்கர் (ரலி) அவர்கள் காலமாகின்றார்கள். உமர் (ரலி) அவர்களைக் கலீபாவாக அபூபக்கர் (ரலி) அவர்கள் மூலம் அல்லாஹ் நியமித்து, இந்த இஸ்லாமிய சமூகத்திற்கு பேரருள் புரிந்தான். நபிமார்களுக்குப் பின்னர் இவ்வுலகம் சீரிய நடத்தை கொண்ட பூரண நீதி செலுத்திய ஒரு தனிநபரை உமரிலேயே கண்டு கொண்டது. அவரது காலப்பிரிவில் சிரியா பிரதேசம் முழுவதும், எகிப்தின் கடைசி எல்லை வரை உள்ள பகுதி, பாரசீகத்தின் அதிகமான மாகாணங்கள் என்பன வெற்றி கொள்ளப்பட்டன. கிஸ்ரா மன்னன் முறியடிக்கப்பட்டு, மிக கீழ்மட்டத்திற்கு தாழ்த்தப்பட்டு அவனது முடியாட்சியின் எல்லைப் பகுதிக்கு பின்வாங்கி ஓடச் செய்யப்பட்டான். சிரியா பிரதேசத்தின் கைஸர் மன்னனது அதிகாரம் பிடுங்கி எறியப்பட்டது. அவன் கொன்தாஸ்து நோபிளை நோக்கி புறமுதுகு காட்டி ஓடி விட்டான். அம்மன்னர்கள் இருவரது சொத்துக்களும் அல்லாஹ்வின் பாதையில் செலவிடப்பட்டன. இவைகள் அனைத்தும் அல்லாஹ் நபிமார்களுக்கு வாக்களித்ததைப் போன்றே நடந்து முடிந்தது.
உஸ்மான் (ரலி) அவர்களது காலப்பகுதியில் உலகின் தூரப் பிரதேசங்களுக்கெல்லாம் இஸ்லாமிய சாம்ராஜ்யம் பரவலாகியது. மொராக்கோவிலிருந்து சீனா வரையுள்ள பிரதேசங்கள் இஸ்லாமிய ஆட்சிக்குட்பட்டன. கிஸ்ரா மன்னனும், அவனது ஆட்சியும் பூண்டோடு அழிக்கப்பட்டன. மேலும் ஈராக்கின் மதாயின் பிரதேசம், குராஸான், அஹ்வாஸ் போன்ற பகுதிகளும் கைப்பற்றப்பட்டன. உலகின் மேற்குப் பிரதேசங்கள், கிழக்குப் பிரதேசங்கள் அனைத்திலிருந்தும் கலீபாவை நோக்கி வருமானங்கள் வந்து குவிந்து கொண்டிருந்தன. இது குர்ஆனை ஓதி, அதனைக் கற்று, அதனை ஒன்றிணைந்து தனது சமுதாயத்திற்காக குர்ஆனைப் பாதுகாத்ததினால் கிடைக்கப் பெற்ற அருளாகும்.
எனது சமூகத்தின் ஆதிக்கம் எனக்கு சுருக்கிக் காண்பிக்கப்பட்டது. அது புவியின் கிழக்கு, மேற்கு நாடுகளுக்கெல்லாம் சென்றடையும் என்ற அந்த சுபச்செய்தி ஒரு நூற்றாண்டு முடிவடைவதற்குள் நிகழ்ந்து முடிந்ததைக் காண்கிறோம்.
மேற்கிலிருந்து ஐரோப்பியக் கிறிஸ்தவர்கள் மேற்கொண்ட படையெடுப்புக்கு இஸ்லாம் உட்பட்டமை போன்ற சிலை வணக்கத்தில் மூழ்கிப் போயிருந்த கீழைத் தேய தார்த்தாரியர்களின் ஆக்கிரமிப்புக்கும் இஸ்லாம் இலக்காக்கியது. தன்னெதிரே நிற்கின்ற எதனையும் விட்டு வைக்காது துகள் துகள்களாக ஆக்கி விடக் கூடிய சூறாவளி போன்று இஸ்லாமிய உலகை அவர்கள் திடீரெனத் தாக்கினர். முஸ்லிம்கள் சின்னாபின்னமாகி பலவீனர்களாக இருந்த காலப் பகுதியிலேயே இவர்கள் மேலோங்கினார்கள். முஸ்லிம்களிடம் தமது சிதறிய அணிகளை ஒன்றுபடுத்தும் ஒரு பலமிக்க தலைமைத்துவமோ, மக்களைத் தட்டியெழுப்பக் கூடிய ஓர் ஈமானிய உணர்வோ இருக்கவில்லை.
ஆனால் தார்த்தாரியர்கள், யாராலும் அசைக்க முடியாத பலம் பெற்ற இராணுவ சக்தியாக அன்று விளங்கினர். அவர்களது தலைமைத்துவத்திற்கு அச்சத்துடன் கூடிய மதிப்பிருந்தது. பெரும் படைகளெல்லாம் தோற்கடித்த மன்னர்கள், தலைவர்கள் பெரும் செல்வ வளம் பெற்றிருந்த ஆட்சியாளர்கள் போன்ற எவருக்கும் அவர்கள் முன்னே எதிர்த்து நிற்க தைரியம் ஏற்படவில்லை. நாடுகளெல்லாம் ஒவ்வொன்றாக அவர்கள் வசமாகின. ஆட்சியாளர்கள் புறமுதுகு காட்டி ஓடத் தொடங்கினர். அத்தோடு படிப்படியாக தலைவர்கள் அவர்கள் முன் கைகட்டி நிற்கலாயினர். ஒரு வெற்றி அடுத்ததை நோக்கி அவர்களைத் தூண்டி விட்டது. வெற்றிமேல் வெற்றி கிடைத்தது.
''தார்த்தாரியர்கள் தோற்கடிக்கப்பட்டனர் எனக் கூறப்பட்டால் அதனை நம்பி விடாதே'' என்ற வார்த்தைகள் அன்று பிரபல்யமாயிருந்தன. தார்த்தாரியர் என்போர் மிகைக்க முடியாத சக்தி என்ற கருத்து காலகாலமாகச் சொல்லப்பட்டு வந்தது.
இறுதியாக இஸ்லாத்தின் பூமியான பக்தாத் மீது படையெடுத்தனர். அப்பாஸிய கிலாபத்தின் தலைமைப்பீடமாக, இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் உயர் மதிப்பிற்குரிய தளமாக இந்நகரம் விளங்கியது. பலத்த அடிகளுக்கு இலக்காகிய இவ்வாட்சி பீடம் அவர்கள் கைவசம் சிக்கிக் கொண்டது. முஸ்லிம்களின் பெயர்களைச் சுமந்த புல்லுருவிகளும் இவ்வீழ்ச்சிக்கு உடந்தையாகச் செயல்பட்டனர். ஆறுகளாக இரத்தம் பெருக்கெடுத்தோடியது.
''எமது நாகரீகத்தைத் தன்னகத்தே கொண்டிருந்த பெரும்பாலான நூல்கள் தைகிரீஸ் நதியில் வீசப்பட்டன. புத்தகங்களின் கறுப்புநிற மையினால் அந்நதி முழுவதும் கருமை நிறமாக மாறி விட்டது''.
இவ்வாறு வருடங்கள் கடந்து சென்றன. அதோ! இஸ்லாம் தன்னகத்தே மறைத்து வைத்திருந்த அற்புதம் இரண்டு தடவைகளில் வெளிப்படுகிறது.
முதலாவது, வரலாற்றில் இடம் பெற்ற தீவிர யுத்தங்களில் ஒன்றில் இராணுவ ரீதியாக தார்த்தாரியர்களை இஸ்லாம் வெற்றி கொண்டது. ஐன்ஜாலூத் என்றழைக்கப்படும் இந்த யுத்தம் நேர்த்தி மிக்க மம்லூக்கிய தளபதி ஸைபுத்தீன் என்பவரது தலைமையில் எகிப்திய படையினருடன் இணைந்து நடாத்தப்பட்டது. ஹிஜ்ரி 658 ரமழான் 25 ஆம் தேதியையே இவ்வெற்றியின் நாளாக இறைவன் ஆக்கியிருந்தான். அதாவது பக்தாத் வீழ்ச்சியடைந்து இரண்டே வருடங்களில் இது நிகழ்ந்தது.
தார்த்தாரியர்களின் உள்ளங்களையும் இஸ்லாம் ஆக்கிரமித்துக் கொண்டமை இஸ்லாம் அடைந்த இன்னொரு வெற்றியாகும். இதோ! இஸ்லாத்துடன் போர் தொடுத்த இக்கொடுங்கோலர்களுடன் இஸ்லாம் யுத்தம் புரிகின்றது. படை வீரனின் உருவிய நிலையிலுள்ள வாள், நிராயுதபாணியான இஸ்லாமியக் கோட்பாட்டின் தாக்கத்திற்கு முன்னால் நிலைத்திருக்க முடியாது வீழ்ந்து விடுகிறது. வெற்றியாளர்கள் இறுதியாக வெற்றி கொள்ளப்பட்டவர்களின் மார்க்கத்தினுள்ளே நுழைந்து விடுகின்றனர்.
'தோல்வியுற்றவன் வெற்றியாளனுக்குப் பின்னால் கண்ணை மூடிக் கொண்டு செல்வதிலே ஆர்வமாக இருப்பான்' என இப்னு கல்தூன் கூறிய வழக்கத்திற்கும் பிரபல்யத்திற்கும் நேர் முரணாகவல்லவா இது இடம் பெற்றுள்ளது! எனவே இது இரண்டாவது வெற்றியாகும்.
நவீன காலத்தில், பிற இஸ்லாமிய நாடுகளில் காலனித்துவப் படைகளுக்கு எதிராக வீரமிக்க முஸ்லிம்களின் ஜிஹாதியப் போராட்டத்தைக் காண்கிறோம். பிரான்ஸியர்களுக்கு எதிராக அமீர் அப்துல் காதிர் அல் ஜஸாயிரிஜி அவர்கள் அல்ஜீரியாவில் போராடுகிறார்கள், ஸ்பானியர்களுடன் அமீர் அப்துல் கரீம் கிதாபி மொரோக்கோவில் யுத்தம் புரிகிறார். வீரர் உமர் முக்தார் லிபியாவில் இத்தாலியர்களுடன் போர் தொடுக்கிறார். ஆங்கிலேயர், யூதர்கள் போன்றோருடன் ஷெய்க் இஸ்ஸதீன் அல் கஸ்ஸாம் பலஸ்தீனில் மோதுகிறார். பிரான்ஸியக் காலனித்துவத்திற்கெதிரான புரட்சி, யூத - சியோனிஸவாதிகளுக்கெதிரான பலஸ்தீன போராட்டம், ஆங்கிலேயருக்கெதிராக சுயஸ் கால்வாய்ப் போராட்டம் முதலியவற்றையெல்லாம் வரலாற்றில் கண்டு வந்துள்ளோம்.
பேர்னாட் லூயிஸ் தனது ''மேற்குலகமும், மத்திய கிழக்கும்'' என்ற நூலில் ஏற்றுக் கொண்டதைப் போன்று, ஏனைய மேற்கத்தேய வரலாற்று ஆசிரியர்களும் கீழ் வருகின்ற கருத்தை ஒப்புக் கொண்டுள்ளனர். இஸ்லாமியப் பிரதேசங்களில் இடம் பெற்றுள்ள காலனித்துவத்திற்கெதிரான விடுதலைப் போராட்டங்களை வழிநடாத்திச் சென்றவை மார்க்கம் சார்ந்த இயக்கங்களே.
இன்றைக்கு சதாமைக் கைது செய்ததன் மூலம் ஈராக்கின் பிரச்னைகளுக்கு முற்றுபுள்ளி வைத்து விடலாம் என்று அமெரிக்காவும், பிரிட்டனும் மனப் பால் குடித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், இன்றைக்கு ஈராக்கில் நடைபெறுகின்ற போராட்டத்திற்கும், சதாமிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.
எனவே, இந்தப் போராட்டம் இறுதி வரை தொடரும். டியூப்களில் அமெரிக்க ராணுவத்தினரின் பிணங்கள் அன்றாடம் கொண்டு செல்லப்படும் நிகழ்வுகளும் தொடரும். எதுவரையெனில், வியட்நாமில் அமெரிக்கா பாடம் படித்த வரலாற்றை, மீண்டும் அது ஞாபகப்படுத்திக் கொள்ளும் வரை தொடரும்..!
மீண்டும் பாக்தாத் தனது பழைய வரலாற்றைப் புதுப்பிக்கும். ஆம்..! 'தோல்வியுற்றவன் வெற்றியாளனுக்குப் பின்னால் கண்ணை மூடிக் கொண்டு செல்வதிலே ஆர்வமாக இருப்பான்' என்ற இப்னு கல்தூன் கூறிய வழக்கத்திற்கும் பிரபல்யத்திற்கும் நேர் முரணாக, தார்த்தாரியர்களைத் தனதாக்கிக் கொண்ட வரலாற்றைப் படைத்த பாக்தாத், இந்த அமெரிக்கர்களையும் தனாக்கிக் கொள்ளும். அது இஸ்லாத்திற்குள் அவர்களை உள்வாங்கிக் கொள்ளும். ஆம்..! அதற்கான அறிகுறிகள் அமெரிக்காவில் தென்பட ஆரம்பித்து விட்டன.
இஸ்லாத்தை அணைத்துக் கொள்ளும் மக்கள் தொகை அங்கே அன்றாடம் அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இன்ஷா அல்லாஹ்..! விரைவில் அமெரிக்காவின் அரசியல் அதிகாரத்தை தீர்மானிக்கின்றவர்களாக முஸ்லிம்கள் மலரும் காலம் வெகுதொலைவில் இல்லை என்பதை, நிகழ்வுகள் மெய்ப்பித்துக் காட்டிக் கொண்டிருக்கின்றன.
பாக்தாத் மீண்டும் எழுச்சியுறும். அது எழும் பொழுது, உலகத்து அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாக அமெரிக்காவும், யூதர்களும் இருக்க மாட்டார்கள். அந்த சக்தி இஸ்லாத்தின் கைகளில் இருக்கும். இன்ஷா அல்லாஹ்..!
அந்த நாளுக்காகக் காத்திருக்கத் தேவையில்லை. நாளை நெருக்கமாக்கி வைக்க கடுந் தவம் புரிவோம்..! அஞ்ஞான இருளில் கட்டுண்டு கிடக்கும் பூமியை, படைத்தவனின் கொள்கையால் பிணைத்து வைத்திடுவோம்...!
ARTICLE FROM - A ONE REALISM
No comments:
Post a Comment