உலக மக்களின் அருள்மறையாம் புனிதக் குர்ஆன் இந்த ரமளான் மாதத்தில் தான் இறக்கியருளப்பட்டது.
ஹிஜ்ரி 2ஆம் ஆண்டு ரமளான் 17 ம் நாள் பத்ரு யுத்தம் நடந்தது.
ஹிஜ்ரி 2ம் ஆண்டு ரமளான் 10ம் நாள் தான் ஜகாத்துல் ஃபித்ர் கடமையாக்கப்பட்டது.
ஹிஜ்ரி 5ஆம் ஆண்டு நடைபெற்ற அஹ்ஸாப் யுத்தத்திற்கான ஏற்பாடுகள் ரமளான் 9ம் நாள் மேற்கொள்ளப்பட்டது.
ஹிஜ்ரி 8ம் வருடம் பத்ஹுமக்கா எனப்படும் மக்கா வெற்றி, ரமளான் 7 ம் நாள் நடைபெற்றது.
ரமளான் 21ல் தபூக் யுத்தம் நடைபெற்றது. ரோமர்களுடன் நடந்த போரில் முஸ்லிம்கள் வெற்றி பெற்றனர்.
ஹிஜ்ரி 9ம் வருடம் ரமளான் 8ல் ஹிம்யர் கோத்திரத்துக்காரர்கள் இஸ்லாத்தைத் தழுவினார்கள்.
ஹிஜ்ரி 40 ம் வருடம் ரமளான் 10 ல் அலி (ரலி) அவர்கள், கவாரிஜ்களால் கொல்லப்பட்டார்கள்.
ஹிஜ்ரி 57 ம் வருடம் ரமளான் 10 ல் ஆயிஷா (ரலி) அவர்கள் மரணமடைந்தார்கள்.
உமைய கலீஃபா வலீதின் காலத்தில் முஸ்லிம்கள் ஸ்பெயினை வெற்றி கொண்டது, ஹிஜ்ரி 91, ரமளான் 19 ல் ஆகும். இப்படையெடுப்பின் போது தாரிக் பின் ஸியாத் (ரஹ்) அவர்கள் ஸ்பெயின் எல்லையை அடைந்த பின்தான் வந்த கப்பலைத் தீயிட்டுக் கொளுத்தி விட்டு, வெற்றி அல்லது வீரமரணம் என்று சூளுரைத்துக் களம் புகுந்தார்.
பாத்திமா வம்ச கலீஃபா முஇஸ்ஸினுடைய கட்டளையின்படி கட்டப்பெற்ற பள்ளிவாசலான அல் அஸ்ஹர் பிற்காலத்தில் உலகத்திலேயே மிகப் பெரிய இஸ்லாமியப் பல்கலைக்கழகமா மாறியது. இப்பள்ளி கட்டப்பட்டது ஹிஜ்ரி 309 ம் வருடம் ரமளான் மாதத்திலேயாகும்.
ஹிஜ்ரி 524, ரமளான் 29 ல் தான் சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி சிலுவை யுத்தத்தில் கிறிஸ்தவர்களைத் தோற்கடித்து வெற்றி பெற்றார்.
ஜன்ஜலூத் என்ற இடத்தில் நடைபெற்ற யுத்தத்தில் வெல்ல முடியாது என்ற கூறப்பட்ட தார்த்தாரியர்களை முஸ்லிம்கள் தோற்கடித்தது இந்த ரமளானில் தான்!
SOURCE - A 1 REALISM
No comments:
Post a Comment