Wednesday, August 31, 2011

லிபியா TO பலஸ்தீன - அடக்குமுறையிலிருந்து சுதந்திரம் வரை.

கடாபியை விரட்டியாச்சி இனித் துவங்குவதே மிகவும் கஷ்டமான போராட்டம்.


நாம் மிகவும் சுவாரஸ்யமான ஒரு காலப்பகுதியில் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.இந்த ஆண்டு மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஒரு குறிப்பிடப்பட வேண்டிய ஒரு ஆண்டாகும்,மற்ற நாட்டினருக்கும்.நீங்கள் எங்கிருந்தாலும் எவராக இருந்தாலும் உலக வரலாற்றில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளை நிச்சயம் உங்கள் வாழ்வு முழுவதும் நினைவில் வைத்திருப்பீர்கள். பல தசாப்தங்களாக பல மில்லியன் மக்களின் விதியை அடக்குமுறை கொண்டு ஆண்டுவந்த பல சர்வாதிகாரிகள் ஒன்றன் பின் ஒன்றாக விழுவதை நீங்கள் எல்லா நாளும் பார்க்க முடியாது. 

லிபியா மக்கள் கடைசியாக எஹிப்து மற்றும் துனிசியா மக்களுடன் இணைந்து கொண்டனர்,அவர்கள் பெற்ற அதே சந்தோசத்தை தற்போது லிபியா மக்களும் பெற்றுக்கொண்டுள்ளனர்.இதற்கு தக்க காரணமும் உள்ளது,நான்கு தசாப்தங்களாக அடக்குமுறையான ஆட்ச்சிக்குள் வாழ்ந்த லிபியா மக்கள் தங்களை நாற்பது வருடங்களாக ஆண்ட கேர்னல் முஅம்மர் கடாபியை நாட்டை விட்டு துரத்திவிட்ட சந்தோசமேயாகும்.இது லிபியா மக்களுக்கு மட்டும் உரித்தான வெற்றியல்ல இது மொத்த மத்திய கிழக்குக்கும்,சுதந்திரம்,தனி மனித கண்ணியம்,விடுதலை போன்றவற்றில் நம்பிக்கையுள்ள அனைவருக்கும் இது ஒரு காவிய வெற்றியாகும்.


எகிப்து மற்றும் துனிசியா மக்களைப்போல் நிச்சயமாக இந்த வருட நோன்புப் பெருநாள் லிபியா மக்களுக்கும்  ஒரு விசேடமான பெருநாளாக இருக்கும்.அவர்கள் பெருநாள் பரிசாக பெற்றது சுதந்திரத்தையே.பயத்திலிருந்து விடுதலை,கொடுங்கோன்மையிலிருந்து விடுதலை,அவமதிப்பிளிருந்து விடுதலை இப்படி அடுக்கிக்கொண்டு போகலாம்.

எனினும் இப்படி விடுதலை செய்யப்பட்ட மத்திய கிழக்கு நாடுகளின் நிலை என்ன ? இது ஒரு முக்கியமான கேள்வியாகும்.

எகிப்து மற்றும் துனிசியா போலன்றி லிப்யா பல பழங்குடியினரைக் கொண்ட நாடாகும்,மேலும் லிபியாவில் ஒரு அடிப்படையான நிறுவனக் கட்டமைப்பு இல்லை.

லிபியாவுக்கு இது ஒரு வரலாறு காணாத வெற்றி என்றாலும் தற்போதைய நிலைமைகளில் லிபியாவின் புதிய நிர்வாகத்துக்கும் மக்களுக்கும் இதை கொண்டாட நேரமில்லை.ஏனெனில் கடாபியின் நாற்பது வருட ஆட்சி இந்த மாதத்துடன் முடிந்துவிட்டது,ஆனால் இனித் துவங்குவதே மிகப் பெரிய போராட்டம்,அதுதான் புதிய லிபியாவை நிர்மாணிக்கும் போராட்டம்,தற்போது துவங்கி இருப்பது அப்போராட்டமே.தற்போது லிப்யா அணைத்து முனைகளிலிருந்தும் பல சவால்களையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்ட வண்ணம் உள்ளது.அனால் லிப்யா மக்கள் இவை அனைத்தையும் தாண்டி ஒரு நல்ல லிபியாவை உருவாக்க பாடுபட்ட வண்ணம் உள்ளனர்,அவர்களின் இதய உறுதியும் நீடித்த நம்பிக்கையும் ஒரு நல்ல லிப்யா உருவாக நிச்சயம் துணை இருக்கும்,இவை கொண்டு உருவாகும் ஒரு சுதந்திரமான லிப்யா நிச்சயம் எந்த தடையையும்  தாண்டும்.

லிப்யா மக்களால் மிகவும் கஷ்டப்பட்டுப் பெற்ற இந்த வெற்றி மேற்குலகில் ஒருவித களிப்பையும் ஒருவித கிலியையும் ஏற்படுத்தியிருக்கும்.கடாபிக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் மேற்குலகம்  மக்கள் மக்கமே நின்றது (அதற்கு தக்க காரணமும் உள்ளது.).நேட்டோவின் விமானங்கள் கடாபியின் மிக முக்கியமான தளங்களுக்கும்,ஏன் சிவிலியன்கள் வாழும் பகுதிகளுக்கும் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி போராளிகளின் பாதையை இலகுவாக்கிக் கொடுத்தது.எனினும், இறுதியில் இந்த புரட்சியின் பெருமை லிபிய மக்களையே சேர்ந்தது.லிப்யா மக்களின் முயட்சியிள்லாமல் நம்பிக்கையில்லாமல் மிக முக்கியமாக அவர்களின் எண்ணற்ற தியாகங்கள் இல்லாமல் ஒருநாளும் இந்த நம்பிக்கையின் விடிவை பெற்றிருக்க முடியாது.

கடாபிக்கு நேர்ந்த இந்த இந்த இழிவான வெளியேற்றம் வெகு விரைவில் அஸ்ஸாதுக்கும் சாலிஹ்க்கும் வெகு விரைவில் இடம்பெறும்.இவர்களின் சரிவும் சாவிற்க முடியாது,இவர்களின் நாடுகளில் இன்ஷா அல்லா நிச்சயம் வெகு விரைவில் நம்பிக்கையின் ஒலி வெகு விரைவில் வீசும்.இனியும் இவர்கள் தம் இருப்பை தக்கவைத்துக் கொள்ள நினைத்தால்,அது பெரிய அவமானத்தில் கொண்டுபோய் சேர்க்கும்.

சிரியா,எமன்,பாலஸ்தீன்,காஷ்மீர்,செச்னிய மற்றும் உலகில் அடக்குமுறைகளுக்கு எதிராக எழுந்த மக்களின் தியாகங்கள் வீண் போகக்கூடாது,விடியல் நெருங்கி வருகிறது.உலகில் நீங்கள் யாராக இருந்தாலும் எங்கிருந்தாலும் வெகு விரைவில் சுதந்திரத்தின் இனிமையான சுகந்தத்தை வெகு விரைவில் சுவாசிப்பீர்.
 
  லிபியாவின் புதிய நிர்வாகம் வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு தமது ஆட்சியை நிறுவுவார்கள் என்று நாம் நம்புகிறோம்.

 லிப்ய மக்கள் கடந்த ஆறு மாதங்களாக சுதந்திரத்துக்காக
போராடினார்கள்,ஆனால் பலஸ்தீன மக்களோ கடந்த ஆறு தசாப்த காலங்களாக போராடிவருகிறனர்.அவர்கள் அவர்களின் விடுதலைப் போராட்டத்தில் எந்தவிதமான் குறைபாடும் வைக்கவில்லை.The Coalition of the Willing has an opportunity to redeem itself.



உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.தவறுகளை சுட்டிக்காட்டவும்.
நன்றி.



Sunday, August 28, 2011

பிகினிகளின் நாட்டில் வேர்விடும் இஸ்லாம்.(Islam In Brazil)

" நான் நீண்ட காலமாக தேடிக்கொண்டிருந்த அனைத்து விடயங்களையும் நான் இஸ்லாத்தில் கண்டுகொண்டேன் "- ஓமர் இஸ்ராபீல் தாவூத் பின் இப்ராஹீம்.இவர் நான்கு வருடங்களுக்கு முன் உள்ளூர் தேவாலயம் ஒன்றில் பாதிரியாக வேலைபார்த்தவர்.மேற்கொண்ட கருத்தை அவர் AFP - (Agence France Presse) க்கு தெரிவித்தார்.(SUNDAY- AUGUST-21-2011).மேலும் அந்தச் செய்தி பின்வரும் விடயங்களை தாங்கி நின்றது.

ரமலான் கால இரவுகளில் ஓமர் இஸ்ராபீல் தம் மனைவி பாதிமாவாக மாறிய முன்னைநாள் அலெக்ஸ்சான்றா பாரியாவுடன் பிரேசிலின் மிக முக்கிய நகரமான ரியோ டி ஜெனிரோவில் எழுப்பட்ட முதல் பள்ளிவாசலான Mesquita Da Luz அதாவது மஸ்ஜிதுன் நூரில் தொழுகைக்காக இஸ்லாமிய பாரம்பரிய உடை  அணிந்து செல்கின்றனர்.

ஓமர் இஸ்ராபீல்லின் மனைவியப் பொறுத்தவரை ஹிஜாப் அணிய அவர் எடுத்த தீர்மான பிரேசிலைப் பொறுத்தவரை ஒரு தைரியமான தீர்மானம் ஏனெனில் ரியோ டி ஜெனீரோ என்பது ஒரு பிகினி நகரம் அப்படிப்பட்ட நகர் ஒன்றில் மிகவும் ஒழுங்கான இஸ்லாமிய அடியினை அணிந்து அவர் செல்வது நிச்சயமாக அனைவருக்கும் அதிசயமாகவே இருக்கும். 

ஓமர் இஸ்ராபீல்லின் மனைவி பாத்திமா கூறும் போது,நான் எனது புதிய மார்க்கத்தை நினைத்துப் பெருமைப்படுகிறேன்,அதுபோல் ஹிஜாபை அணிந்து செல்லும் போது மிகவும் பெருமையாகவும் சந்தோசமாகவும் இருக்கிறது.ஹிஜாப் நான் ஒரு சிறுபான்மை சமூகத்தை சார்ந்தவள் என்ற ஒரு தனித்துவமான எண்ணத்தை என்னுள் ஏற்படுத்தியது.
  
2001 இல் மேட்கோள்ளப்பட்ட சனத்தொகை கணிப்பீட்டின் போது பிரேசிலில் 27239 முஸ்லிம்கள் வாழ்வதாக கணிக்கப்பட்டது.எனினும், இஸ்லாமிய பிரேசிலிய கூட்டமைப்பின் தரவுகளுக்கு அமைய தற்போது பிரேசிலில் 1.5 மில்லியன் முஸ்லிம்கள் வாழ்வதாக கூறுகின்றது.ப்லோமிநேன்சே மத்திய பல்கலைகழகத்தின் இஸ்லாமிய நிபுணர் பலோ பிண்டோவின் கருத்துப்படி பிரேசில் ஒரு மில்லியன் முஸ்லிம்களுக்கு தாயகமாக உள்ளது என்கிறது.

 இஸ்லாம் பிரேசிலில் வளர்ச்சியடைந்து வருகிறது என்பதற்கான ஒரு உறுதியான ஆதாரம் அங்கு அதிகரித்துச் செல்லும் மச்ஜித்களின் எண்ணிக்கையாகும்.தற்போது பிரேசில் முழுவதும் 127 பள்ளிவாசல்கள் உள்ளன.இவற்றில் 80% மான பள்ளிவாசல்கள் 2000 ஆம் ஆண்டுக்குப் பின் எழுப்பப்பட்டவையாகும்.

New Facts - புதிய உண்மைகள் 

முஸ்லிம்களின் வளர்ச்சி தற்போது அதிகரித்துள்ளது அவற்றில் பெரும்பான்மையானவர்கள் பிரேசிலியர்கள்.இவர்கள் தூய இஸ்லாத்துக்கு மாறியவர்கள்.ரியோ டி ஜெனீரோவில் மட்டும் 500 முஸ்லிம் குடும்பங்கள் வாழ்கின்றனர் இவர்களில்  85% மானவர்கள் பிரேசிலியர்கள்.இவர்கள் எந்தவித அரபு தொடர்பும் அற்றவர்கள்.ஆனால் Sao Paulo மற்றும் பிரேசிலின் தென் பகுதிகளில் வாழும் முஸ்லிம்கள் பெரும்பான்மையானவர்கள் அரபு நாடுகளிலிருந்து குடியேறியவர்கள்.19 நூற்றாண்டு  காலப்பகுதிகளிலும் 1970 களிலும் லெபனான்,சிரியா மற்றும் பலஸ்தீன நாடுகளிலிருந்து குடியேறியவர்கள்.2003 இல் இடம்பெற்ற அமெரிக்காவின் இராக்கிய முற்றுகையின் போதும் கணிசமான அளவு முஸ்லிம்கள் இப்பகுதியில் குடியேறினர்.
(ஸாமி இசபெள்ளே (Sami Isabelle) பேச்சாளர் Beneficent Muslim Society.(SBMRJ).)

 எப்படி அமெரிக்காவில் 9/11 தாக்குதல் இஸ்லாம் சம்பந்தமான தேடலை அதிகரித்ததோ அதைப்போலவே பிரேசிலிலும் ஏற்பட்டதாக ப்லோமிநேன்சே மத்திய பல்கலைகழகத்தின் இஸ்லாமிய நிபுணர் பலோ பிண்டோ கூறுகிறார்.

                                  Interview of Omar,Fathima & Paulo Pinto. 



                                                           இன்ஷா அல்லாஹ் ஒரு நாள் பிரேசில் இப்படி மாறுமா ?

இது மொழிமாற்றம் செய்யப்பட கட்டுரையாகும்.
Very Special Thanks To 
Onislam.com
Islamonline.com(link)
Dawn.com
Flickr.com(link)(சில பிரேசில் பள்ளிவாசல்களின் படங்கள்)

Wednesday, August 24, 2011

மேற்கத்திய நாடுகளால் வஞ்சிக்கப்பட்ட கடாபி (ஆவணப்படம்)


பிரெஞ்சு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கடாபி பற்றிய ஆவணப்படம். மேற்குலகுடன் நட்பு பாராட்டி காரியங்களை சாதிக்கலாம் என்று நம்புவோருக்கு கடாபியின் கதை ஒரு சிறந்த படிப்பினை. கடாபி மிகுந்த தயக்கத்துடனேயே மேற்குலகுடன் நட்பை புதுப்பித்துக் கொண்டார். குறிப்பாக அமெரிக்கா முதுகில் குத்தி விடும் என்று அஞ்சினார். அமெரிக்கா ஈராக் மீது படையெடுத்தது போன்று லிபியாவையும் தாக்கலாம் என்று எதிர்பார்த்தார். பொருளாதாரத் தடையின் பின்னர் மேற்குலகுடன் ஏற்படுத்திக் கொண்ட இராஜதந்திர நகர்வுகள். அமெரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்பு போரில் ஒத்துழைத்து, அல்கைதா குறித்த தகவல்களைக் கொடுத்தது. மேற்குலகின் நட்பை ஏற்படுத்தும் நோக்கில், அணுவாயுத உற்பத்தியை தானாகவே முன்வந்து நிறுத்தியமை. இது போன்ற விடயங்கள் அலசப்படுகின்றன. 

 THANKS TO - KALAIYAGAM

Sunday, August 21, 2011

மீடியாக்களின் திரித்தல் தணிக்கைகளுக்கு அப்பால் லிபியா நிலவரம் ஓர் அலசல்


முஸ்லிம் கண்டமான ஆபிரிக்காவின் வட நாடுகளில் தூனிஸ் முதலாக அல்ஜீரியா மொரோக்கோ என ஆட்சியாளர்களுக்கு எதிரான புரட்சிகள் வெடித்ததைத் தொடர்ந்து எகிப்து பஹ்ரைன் யமன் ஈரான் போன்ற நாடுகளிலும் மக்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராக களமிரங்கியதை கண்டுகொண்டிருக்கும் இவ்வேளையில் வட ஆபிரிக்க நாடுகிளில் ஒன்றான லிபியாவைப் பற்றியும் அதன் அரசியல் வரலாற்று நிலவரங்கள் பற்றியும் தெரிந்து கொள்வோம்.

லிபியா என்ற பிரதேசம் இஸ்லாமிய வரலாற்றில் தராப்லிஸ் என்று வழங்கப்பட்டு வந்தது. இன்று தராப்லிஸ்(ட்ரிபொலி) என்பது அதன் தலை நகரிற்கு வழங்கப்படுகிறது. லிபியா என்ற பெயர் ஓர் ஆதிப் பெயராகும். லீபூ என்ற சொல்லிலிருந்து பிறந்தது. லிபியர்கள் என்ற பழமை இனத்தையும் மொழியையும் இது குறிக்கிறது. ஆரம்பத்தில் கிபியிற்கு முன்னர் ஆபிரிக்கா என்பதற்குப் பதிலாக லிபியா என்றே ஆபிரிக்கக் கண்டம் முழுவதும் அழைக்கப்பட்டது. குறிப்பாக வட ஆபிரிக்க நாட்டுப் பகுதிகளைக் குறிக்க இந்தப் பெயர் பயன்படுத்தப்பட்டது. ஆபிரிக்கா என்ற பெயர் தூனிஸின் மஹ்தியா என்ற நகரத்திற்கே ஆரம்பத்தில் வழங்கப்பட்டது. ஆக்கிரமப்பாளர்கள் அனைவரும் ஒன்றோ எத்தியோப்பா(எரிந்த முகம்) அல்லது லிபியா என்ற பெயர்களையே ஆபிரிக்கக் கண்டத்திற்கு வழங்கி வந்தனர். அதே நேரம் அரேபியர்களிடத்தில் கண்டம் முழுவதையும் குறிக்க எந்தச் சொல் ஆளப்பட்டது என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் இல்லாத போதினும் அவர்கள் பிரதேசவாரியாகவே ஆபிரிக்க நாடுகளுக்குப் பெயர் சூட்டியுள்ளனர் என்பது தெளிவு. லிபியா என்ற பெயர் சுருங்கி இன்று தூனிஸிற்கும் எகிப்திற்கும் தசாத் நைஜீரியாவிற்கும் மத்தியிலுள்ள பிரதேசத்திற்கு வழங்கப்படுகிறது.

உமர் ரழியல்லாஹு அன்ஹுவுடைய ஆட்சிக்களாலத்தில் அம்ர் இப்னுல் ஆஸ் ரழியல்லாஹு அன்ஹுடைய தலைமையில் தராப்லிஸ் (லிபியா) வெற்றிகொள்ளப்பட்டது.ஆபிரிக்காவில் இஸ்லாம் பரவியதில் லிபியர்களின் பங்களிப்பு அதிகமானது. இவ்வாறு பலவிதமான ஆட்சிமாற்றங்களையும் ஆக்கரமிப்புக்களையும் கண்ட லிபியா கடைசியா இத்தாலியின் ஆக்கிரமிப்புக்குள்ளானது.ஸனூஸியப் பாசறையில் வளர்ந்த உமர் முக்தார் என்ற முதிய வயதின் இளந்துடிப்புப் போராட்டமும் உயிர்த்தியாகமும் இவர்களுக்கெதிராகவே நடைபெற்றது. பலவிதமான போராட்டங்கள் ஐரோப்பாவின் சதிவலைகளின் முறியடிப்புகளுக்குப் பின் 1950களில் லிபியா பெயரளவில் சுதந்திரமடைந்தது.

இக்காலப் பகுதியில் மன்னராக இருந்தவர் முஹம்மத் இத்ரீஸ் அஸ்ஸனூஸி இவர் அல்ஜீரியா மூலத்தைச் சேர்ந்தவர்.முஹம்மத் இப்னு அலி அஸ்ஸனூஸி என்ற முஹம்மத் இப்னு அப்தில் வஹ்ஹாபின் பிரச்சாரத்தினால் கவரப்பட்ட ஒரு பிரபல்ய மார்க்க அறிஞர்.இவர் தன் இறுதிக்காலப் பகுதியை லிபியாவிலேயே கழித்தார். ஸனூஸயா என்ற இயக்கத்தின் ஸ்தாபகர். இவர் அகீதாவில் தௌஹீதிலே தெளிவுடையவராக இருந்தார். ஆனால் போக்கிலே ஸுபித்துவத்தை வழியாகக் கண்டவர். ஆக்கிரமிப்பாளர்களுக்கெதிரான நடவடிக்கைகளில் கடுமையாக ஈடுபட்டார். வட ஆபிரிக்காவில் ஸனூஸிய அமைப்பின் தாக்கம் குறிப்பிடத்தக்கது. இவரது மூன்றாவது தலை முறையில் உருவான போரர்தான் இத்ரீஸ் அஸ்ஸனூஸி. 1969ம் ஆண்டு இவர் நாட்டுக்கு வெளியே சிகிச்சைக்காகச் சென்றிருந்த சமயமே முஅம்மர் அல்கதாபி புரட்சியின் மூலம் இளகுவாக ஆட்சியை கைப்பற்றிக் கொண்டார்.

இத்ரீஸின் ஆட்சியில் நாட்டில் பல துறைகளில் ஸ்தீரனமின்மை காணப்பட்டாலும் இத்ரீஸ் மார்க்க நிலைப்பாடுகளுக்கு மிக நெருங்கியவராக இருந்தார். வட்டி முறையற்ற பொருளாதாரத்தைக் சட்டமாக்கினார். ஆனாலும் அமைச்சரவை அதை குறிப்பிட்ட துறைகளில் மாத்திரமே நடை முறைப்படுத்தியது. லிபிய ஆட்சியை ஸஊதி போன்று மம்லகதுஸ் ஸனூஸியா என்று பெயர் சூட்டுமாறு ஆலோசனை முன்வைக்கப்பட்டும் அதனை மறுத்து விட்டார்.(ஆனால் இந்த ஆலோசனையை முன்வைத்தவர்தான் முஆம்மர் கதாபியின் புரட்சியின் வெற்றியை வரவேற்றவர்களில் முதன்மையானவராக இருந்தார் என்பது தனிவிடயம்) நாட்டு மக்களால் தன் மீது உள்ள சில அதிருப்திகளை உணர்ந்த அவர் மக்களுக்கு அழகான கடிதம் ஒன்றை எழுதினார். இவருக்கெதிராக கொடி தூக்கியவர்கள் எழுப்பிய கோசம்தான் ‘இத்ரீஸல்ல இப்லீஸ்’ ‘இத்ரீஸல்ல இப்லீஸ்’ என்ற வாசகம் அந்த ஒவ்வொரு கனத்திலும் அந்த மன்னர் சொன்ன வார்த்தை ‘யாஅல்லாஹ் அவர்களின் பிரார்த்தனையை அங்கீகரிப்பாயாக’ நாட்டில் நிலவிய ஆன்மீக அமைதியைக் கவனிக்காமல் வெறும் பொருளாதார ரீதியான பார்வையால் ஒரு நல்லவரை இழந்தார்கள். அல்லாஹ் அந்த மன்னரின் பிரார்த்தனையை அங்கீகரித்தது போல் ஒரு இப்லீஸ் ஆட்சிபீடம் ஏறினான்.

ஆட்சி பீடம் ஏறிய கதாபி மூலம் ஒரு நல்ல விடிவை மக்கள் எதிர்பார்த்தார்கள். கடாபி மேற்கத்தேயத்தை எதிர்த்தார். அரபுலகில் அந்நியத் தலையீட்டை கடுமையாக எதிர்த்தார். வீரமான உரைகள் நிகழ்த்தினார். பொருளாதார முறைமையில் பல வித மாற்றங்களை நாட்டில் கொண்டு வந்தார். சம்பளம் வாங்கினால் அவன் அடிமை எனவே தொழிலாளர்களல்ல பங்குதாரர்கள் என சம்பள முறைமையை பங்கு முறைமையாக்க திட்டங்களைக் கொண்டு வந்தார். இது போன்று இன்னும் பல மாற்றங்களைக் கொண்டு வந்தார். தனது அரசியில் செல்வாக்கையும் எகிப்திய அதிபர் ஜமால் அப்துந் நாஸருடைய தொடர்பையும் பயன்படுத்திப பல நூல்களை தனக்குச் சார்பாக எழுத வைத்தார். அதில் பிரபல்யமான நூலில் ஒன்றுதான் ‘காலித் இப்னு வலீத் தொடக்கம் கதாபி வரைக்கும்’. ஆனால் கடாபி நாட்டில் கொண்டு வந்த மாற்றங்கள் மற்றும் மேற்கு எதிர்ப்பு நிலைப்பாடுகள் அனைத்தும் அவரது இஸ்லாமிய மார்க்கப் பற்றின் விளைவாகவோ நாட்டு மக்கள் மீது கொண்ட ஈர்ப்பின் விளைவாகவோ உருவானதல்ல மாறாக தனது சோஸலிஸ சித்தாந்தத்தின் நகலே அவைகள் என்பதை உலகம் உணர நீண்ட காலம் எடுக்கவில்லை.

ஆனால் இவர் தனது குருட்டுச் சீர் திருத்தங்களை இத்தோடு நிறுத்தவில்லை. மார்க்க மார்க்க அம்சங்களில் தன் விருப்பப்படி விளையாட ஆரம்பித்தார். எதிர்த்தவர்களை சிறைப்பிடித்தார். சித்திரவதை செய்தார். பள்ளிவாயல்களை குண்டு வைத்துத் தகர்த்தார்.

குர்ஆனிலிருந்து குல் என்ற வார்த்தைகளை அகற்ற வேண்டும் என்றார். அது நபியவர்களுக்கு மட்டும் உரியது. இப்பொழுது தேவையில்லை. சொன்னது மாத்திரமல்லாமல் அஸர் தொழுகையின் போது மூன்று ரக்அத்களாக அஸரைத் தொழுலித்து அதில் குல்ஹுவல்லாஹு அஹத் அத்தியாயத்தை குல் என்ற சொல்லை விட்டு ஓதினார். அந்த நேரமே இந்தக் கருத்தையும் பகிரங்கமாகத் தெரிவித்தார்.

ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என நபிகளார் பெயரைக் கேட்டவுடன் கூறுதல் இன்னும் எம்மில் மாறாமல் இருக்கம் ஜாஹிலிய இணைவைப்பு என விமரிசித்தார்.


பசுமை நூல் என்ற பெயரில் நூலொன்றை எழுதி அதுவே தனது ஆட்சிமுறை என பகிரங்கமாகத் தெரிவித்தார். இது தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

டென்மார்க் நபியவர்களுக்கு கேலிச்சித்திரம் வரைந்ததைத் தடை செய்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களைப் பொலிஸாரை ஏவி பலரைச் சுட்டுக் கொண்டார். அந்த நாளியே இந்தப் புரட்சியும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பல அடக்குமுறைகள் அநியாயங்களுக்கு எதிராக மக்கள் கிளர்ந்துள்ளனர். முஹம்த் இத்ரீஸ் அஸ்ஸனூஸிக் கெதிரான புரட்சியில் களந்து கொண்ட மக்கள் இதிலும் களந்து கொள்வது ஆச்சரியமல்ல. ஆனால் அவர்கள் எதிர்பார்ப்பது மார்க்க அடையாளங்களின்றிய ஒரு திறந்த சுதந்திரமான ஆட்சியைத்தான் என்பதை அவர்களது நடவடிக்கைகள் தெளிவாகவே காட்டுகின்றன.

எது எவ்வாறிருந்தாலும் மேற்குலகின் தலையீட்டை இதில் அங்கீகரிக்க முடியாது. பொதுமக்களுக்கு எதிராக ஆயுதங்களைப் பயன்படுத்துகிறார் என்பதே முதன்மைக் காரணியாக முன்வைக்கப்படுகிறது. மீடியாக்கள் வழியாக இக்கருத்தை மக்கள் மயப்படுத்தவிட்டார்கள். தூனிஸிய எகிப்தியப் புரட்சியோடு இதை ஒப்பிட முடியாது. அங்கே நிராயுதபாணியான மக்களின் புரட்சியே நிகழ்ந்தது. எந்த உடமைக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை. ஆனால் இங்கே போராடுபவர்கள் முதல் நாளே ஆயுதங்களுடன் புரட்சியில் இறங்கிவிட்டனர். நாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதம் தாங்கும் போது ஒரு நாடு இராணுவ பலத்தைப் பிரயோகிப்பது இயல்பானதே. இதைக் காரணங் காட்டி இவ்வளவு அவசரமாக லிபியாவை 3 வீட்டோ நாடுகள் தாக்க முற்பட்டிருப்பதும் அதற்கு பொதுமக்கள் இறக்கிறார்கள் எனக் காரணங்காட்டுவதும் ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுத கதையே.

சதாம் ஹுசைன், கடாபி ஆகியோர் தனது சொந்த மக்களை கொன்று குவித்தார்கள். மக்கள் படுகொலை, ஏகாதிபத்திய தலையீட்டுக்கு காரணமாக காட்டப்படுகின்றது. இது பல நூற்றாண்டுகளாக, காலனியாதிக்க காலத்தில் இருந்தே கற்பிக்கப்படும் நியாயம். ‘இந்தியாவில் வாழும் இந்துக்கள் பெண்களை உயிரோடு எரிக்கும் காட்டுமிராண்டிகள்.”இந்தியப் பெண்களை காப்பாற்றும் நல்லெண்ணத்துடன்’ தான் பிரித்தானியா இந்தியாவை தனது காலனியாக்கியது. ஐரோப்பாவில் இதனை ‘வெள்ளை மனிதனின் கடமை’ என்று கூறிக் கொள்வார்கள். அதாவது ‘காட்டுமிராண்டிகளான இந்தியர்கள்இ அரேபியர்இ ஆப்பிரிக்கர்களுக்கு நாகரீகம் கற்றுக் கொடுப்பது’ ஐரோப்பியரின் கடமை ஆகுமாம். காலனிய சுரண்டலை நியாயப் படுத்தும் நியாயப் படுத்தும் கதையாடல்கள்இ இன்று லிபியா வரை தொடர்கின்றது. இன்று மேற்குலக மக்களை மட்டுமல்ல, அனைத்து உலக மக்களையும் தங்கள் பக்கம் ஈர்ப்பதற்கு வசதியாக தொலைத் தொடர்பு ஊடகங்கள் வந்து விட்டன. சி.என்.என்.பி.பி.சி., எல்லாமே ஏகாதிபத்திய தலையீட்டுக்கு வழி சமைத்துக் கொடுக்கின்றன.

பெங்காசியா நகரம் ஆர்ப்பட்டக்காரர்களின் கரமிருந்து கடாபியின் கையில் வருவதற்கு முன்னர் நேடோ களமிருங்கியதற்கான காரணம். பெங்காசியா பொருளாதாரத் தலைநகர். எண்ணைவளம் அங்கேதான்.அங்கேதான் ஆடு நனைகிறது என எமெரிக்கா அழுகிறது. எல்லாம் நாடகம். கடாபி ஒழிய வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் ஆர்ப்பட்டம் எந்த இலக்கை நோக்கி நகர்கிறது என்பதே இப்பொழுதுள்ள முக்கிய கேள்வி.


ARTICLE FROM MUJAHID SRILANKA.

Friday, August 19, 2011

யூதரை சிறை மீட்ட முஸ்லிம் மக்களின் எழுச்சி


பொஸ்னியாவில் நடந்த உண்மைச் சம்பவம் (1819). வரலாற்று உண்மைகளை மறைத்து, மக்களை மூடராக்கும் இனவெறியர்களின் முகமூடியைக் கிழிக்கும் கதை இது


ஆயிரமாயிரம் ஆண்டுகளாக யூதர்களும், முஸ்லிம்களும் வன்மம் கொண்ட எதிரிகளாக காட்டும் பரப்புரைகள் மலிந்து விட்ட காலமிது. தமிழ் இலக்கிய அறிவுஜீவிகளும், மேலைத்தேய காலனிய ஆக்கிரமிப்பாளர்களின் விஷமப் பிரச்சாரத்தை உண்மையென்று நம்புகின்றனர். ஆனால், கிறிஸ்தவ நாடுகளில் வாழ்ந்த யூதர்கள் அடிக்கடி மதக்கலவரங்களால் பாதிக்கப்பட்டனர். அதற்கு மாறாக, முஸ்லிம் நாடுகளில் யூதர்களுக்கு பாதுகாப்புக் கிடைத்தது. ஸ்பெயின் கிறிஸ்தவ மன்னர்களால் கைப்பற்றப் பட்ட வேளை, மதச்சுத்திகரிப்புக்கு அஞ்சி ஓடிய யூதர்கள் பொஸ்னியாவில் தஞ்சம் அடைந்திருந்தனர். 20 ம் நூற்றாண்டு வரையில், அதாவது நாசிகளின் இனப்படுகொலைக் காலம் வரையில், சாராஜெவோ நகரில் ஸ்பானிய மொழி பேசும் யூத சமூகம் வாழ்ந்து வந்தது.

மாபெரும் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை ஆண்ட "ஓட்டோமான் துருக்கியர்கள்", இன்றைய பொஸ்னியா வரை தமது ஆட்சிப்பரப்பை விஸ்தரித்திருந்தார்கள். செர்போ- குரோவாசிய மொழி பேசும் மக்கள் பலர் இஸ்லாமிய மதத்தை தழுவியிருந்தனர். ஓட்டோமான் சாம்ராஜ்யத்திற்குட்பட்ட, பொஸ்னிய மாநிலத்தில் அவர்களின் விகிதாசாரம் அரைவாசிக்கும் அதிகமாகவிருந்தது. ஓட்டோமான் இஸ்லாமிய சாம்ராஜ்யம், அன்றைய ஐரோப்பாக் கண்டத்தில் வளர்ச்சியடைந்த நாகரீகத்தைக் கொண்டிருந்தது. 

19 ம் நூற்றாண்டு பொஸ்னியாவில், யூதர்களும், முஸ்லிம்களும் சமாதானமாக வாழ்ந்து வந்தனர். ஆனால், இஸ்லாமிய மதத்திற்கு மாறிய யூத இளைஞன் ஒருவன், மதக்கலவரத்திற்கு காரணகர்த்தா ஆகினான். பெரும்பாலும், புதிதாக மதம் மாறியவர்கள், தமது விசுவாசத்தைக் காட்டுவதற்காக மதத் தீவிரவாதிகளாக நடந்து கொள்வார்கள். Travnik என்ற நகரில், Moses Chavijo என்ற யூதன் இஸ்லாமிய மதத்திற்கு மாறியிருந்தான். டெர்விஷ் அஹ்மத் என்று தனது பெயரையும் மாற்றிக் கொண்டு, முஸ்லிம்களை யூதர்களுக்கு எதிராக தூண்டி விட்டான். யூத எதிர்ப்பு மட்டுமல்ல, இஸ்லாமிய அடிப்படைவாதத்தையும் பிரச்சாரம் செய்த அஹ்மத்தின் பின்னால், சில முஸ்லிம் இளைஞர்கள் அணி திரண்டார்கள். இந்த தீவிரவாதக் கும்பல், யூதர்களை இலக்கு வைத்து தாக்கி வந்தது. யூதர்களும் அதற்குப் பதிலடி கொடுப்பதற்காக, தீவிரவாத தலைவனான அஹ்மத்தை பிடித்து கொலை செய்து விட்டார்கள். சாராஜெவோ நகர் யூதர்களின் தலைமை மதகுருவான Moshe Danon உம் அந்தப் படுகொலையில் சம்பந்தப் பட்டிருந்தார்.

தலைவனை இழந்ததால் ஆத்திரமுற்ற முஸ்லிம் தீவிரவாத கும்பலை சேர்ந்தோர், துருக்கி ஆளுநரிடம் இது குறித்து முறையிட்டனர். ஊழல்வாதியான ஆளுநரும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பக்கம் சாய்ந்து விட்டார். யூதர்கள் ஐந்து இலட்சம் தங்கக் காசுகளை, படுகொலைக்கான குற்றப்பணமாக கட்ட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார். குற்றப் பணம் செலுத்தப் படும் வரையில், யூத மதகுருவும், பத்து யூத பிரமுகர்களும் பணயக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். மூன்று நாட்களுக்குள் பணம் வராவிட்டால், யூத பணயக்கைதிகள் கொலை செய்யப் படுவார்கள் என்று எச்சரிக்கை விடப்பட்டது. மரண தண்டனை நிறைவேற்றப் படுவதற்கு முதல் நாள், யூதர்கள் முஸ்லிம் சகோதரர்களிடம் உதவி கோரினார்கள். சாராஜெவோ நகர முஸ்லிம் மக்களுக்கும், அந்தத் தீர்ப்பு அநீதியாகப் பட்டது. ஊழல்மய ஆளுனரை முஸ்லிம்களும் வெறுத்தார்கள். மேலும், தீவிரவாதக் கும்பல்களின் வன்முறைகளையும் அங்கீகரிக்கவில்லை.

அடுத்து நடந்த சம்பவங்கள், மக்கள் சக்தியின் மகத்துவத்தை பறைசாற்றியது. ஆயுதமேந்திய மூவாயிரம் முஸ்லிம்கள், ஆளுநர் மாளிகையை சுற்றி வளைத்தனர். பணயக்கைதிகளாக வைக்கப் பட்டிருக்கும் யூதர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கோரினார்கள். முஸ்லிம் மக்களின் எழுச்சிக்கு ஆளுநரும், மதத் தீவிரவாதிகளும் அடிபணிந்தார்கள். பிடித்து வைத்திருந்த யூதர்களை உடனடியாக விடுவித்தார்கள். தன்னை விடுவித்த முஸ்லிம் சகோதரர்களுக்கு நன்றிக்கடன் செலுத்துவதற்காக, யூத மதகுரு மோஷே டானன் மெக்காவுக்கு புனிதப் பயணம் செல்ல விரும்பினார். ஆனால், அவரது குறிக்கோள் நிறைவேறும் முன்னரே மண்ணை விட்டு மறைந்து விட்டார். யூத- முஸ்லிம் நல்லுறவுக்காக இதயசுத்தியுடன் வாழ்ந்து மறைந்த மகானின் கல்லறை, இரு மதத்தவரும் வழிபடும் புனிதஸ்தலமாகியது. 1940 ல் நாஜிகளின் படையெடுப்பு அந்த வழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது.

19 ம் நூற்றாண்டு பொஸ்னியாவில் நடந்த கதை, 21 ம் நூற்றாண்டின் இன/மதப் பூசல்களுக்கான தீர்வை சுட்டிக் காட்டுகின்றது. இன/மத/மொழித் தீவிரவாதத்தை வளர்க்கும் நபர்கள், அந்தந்த சமூகத்தினரால் ஒதுக்கப் பட வேண்டும். சிறுபான்மையினரின் உரிமைகளை பெற்றுக் கொள்வதற்கு, பெரும்பான்மை இனத்தை/மதத்தை சேர்ந்தவர்களின் ஆதரவு அவசியம். இனங்களுக்கு/மதங்களுக்கு இடையிலான சகோதரத்துவம் வலுவடைந்தால், எதேச்சாதிகார ஆட்சியாளரின் அதிகாரம் செல்லாக்காசாகி விடும். ஈழத்தமிழரின் விடுதலைக்கு அவசியமான பாடத்தையும், இந்தக் கதையில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். வரலாற்றில் இருந்து எதையும் கற்றுக் கொள்ளாதவர்கள், தவறை திருப்பிச் செய்யும் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகின்றனர்.


உசாத்துணை:
1.Die Sephardim in Bosnien(Moritz Levy)(ஜெர்மன் மொழி)
2.Sarajevo Rose: A Balkan Jewish Notebook
3.Moshe Danon


ARTICLE FROM - KALAIYAGAM.BLOGSPOT.COM.




Thursday, August 18, 2011

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிளும் வளரும் வலதுசாரி தீவிரவாதம்.



ஒஸ்லோவில் ஜூலை 22 இல் இடம்பெற்ற தாக்குதலில் வலதுசாரி தீவிரவாதியான ஆண்டர்ஸ் ப்றேவிக் என்ற பாசிசவாதியுடன் இன்னொரு பயங்கரவாதமும் மிக நீண்டநாளுக்குப் பின் கண்டுகொள்ளப்பட்டது.


அமெரிக்காவில் 1980 களில் உருவான கடும் அரச எதிர்ப்புக் குழுவான sovereign citizen movement போன்றவை அமெரிக்க அப்போதே வலதுசாரி தீவிரவாதத்தில் விலுந்துவிட்டதேன்பதை காட்டியது.இவர்கள் அமெரிக்காவின் Fedaral law க்கு கட்டுப்பட மாட்டார்கள்,இவர்கள் கட்டுபடுவது English common law க்கு மட்டுமே.முக்கியமாக இவர்கள் வரி கட்டமாட்டார்கள்.இவர்கள் வரி கட்டாமல் இருப்பதோடு இனத்துவேசன்களைப் பரப்புவதிலும் முன்னிப்பவர்கள்.மேலும் தீவிர வலது சாரிகளுடன் இணைந்து கொண்டு தமது கொள்கையைப்பரப்ப வன்முறையை கையாள்பவர்கள்.இவர்கள் பிற தவிர இனத்துவேச இயக்கங்களுடன் இணைந்து செயல்படுபவர்கள் ( சியோனிசம் ).மதிய தலைமை ஒன்று இல்லாத காரணத்தினால் இவர்களை கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டமாக உள்ளாதாக அமெரிக்காவின் FBI தெரிவிக்கிறது,என்றாலும் இவர்கள் அதிக எண்ணிக்கயில் இருப்பதாக அது கூறுகிறது.இவர்களைப் பற்றி FBI வெப்தளத்திலும் Domestic Terrorism என்றே கூறப்பட்டுள்ளது.
 


America’s Militia movement என்ற தீவிர வலதுசாரிக் குழுவும் இதே கொள்கையுடனே வழிநடத்தப்படுகிறது.மேலே கூறப்பட்ட குழுபோல் அல்லாமல்  இது அரசியல்ரீதியாக குறிப்பிடத்தக்க ஒரு அரசியல் குழுவாகும்.இந்த குழுவினர் ஆயுதம் வைத்திருப்பது அமெரிக்காவில் சட்டப்படி குற்றமாகும்.சமீபத்தில், அமெரிக்காவில் தோன்றிய Tea Party Movement [ 2009 ] அமெரிக்காவின் அரசியலில் பாரிய அளவில் தாக்கம் செலுத்துகிறது.இது அமெரிக்கா தீவிர வலதுசாரி அரசியலில் ஈடுபடுகிறது என்பதை  காட்டுகிறது.இந்த அனைத்து குழுக்களும் தீவிர வலதுசாரிகளின் நிதியுதவியிலேயே இயங்குகிறது.முக்கியமாக டேவிட் மற்றும் சார்லஸ் கோச் போன்ற பில்லியனர்கள் நிதியுதவி இவர்களுக்கு பெரும் உதவியாக உள்ளது.தற்போது இந்த இயக்கங்கள் அவர்களுக்கு சார்பான ஊடகங்களைப் பயன்படுத்தி அமெரிக்காவில் தேசியரீதியாக ஒரு அங்கிகாரத்தை பெற்றுவருகிறது.

2003 இல் Laurence W. Britt என்ற அரசியல் ஆய்வாளர் தனது “Fascism Anyone?” என்ற கட்டுரையில்  ஒரு பாசிச அரசின்
14 பண்புகளைபற்றி விளக்கினார். 


1.தேசியவாதைதை பலப்படுத்தல் மற்றும் அதை எல்லா இடங்களிலும் தொடர்ச்சியாக வெளிப்படுத்தல்.


2.மனித உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகள் என்பவற்றின் முக்கியத்துவத்தை புறக்கணித்தல்.உரிமைகள் வழங்கினால் அது மேல்தட்டு அதிகார வர்கத்தின் செயற்பாடுகளுக்கு இடையூறாக இருக்கும் என நினைக்கின்றனர்.


3.தமக்கு அரசியல்ரீதியாக எதிரியாக உள்ளவர்களை கேவலப்படுத்தல்.அரசியல் ஆதாயத்துக்காக வீண் பலிகளையும் குற்றகளையும் அவர்கள் மேல் சுமத்துதல்.
4.நாட்டின் இராணுவத்துரையில் அளவுக்கு  மிஞ்சிய ஆதிக்கம் செலுத்தல்.அதற்கு தேசிய சொத்தில் சமமற்ற பங்கீடு செய்தல்.




5.வரையறையற்ற பாலியல்.இதனூடாக பெண்களை இரண்டாம் தர குடிமகன்களாய் பாவித்தல்.


6. "ஒரு கட்டுப்படுத்தப்பட்ட வெகுஜன ஊடகங்கள்," தனியார் வசமாக அல்லது அரசின் வசமாக ஊடகத்தை வைத்துக் கொண்டு மேல்தட்டு அதிகார வர்கத்தின் தவிர கொள்கைகளைப் பரப்பல்.


7."தேசிய பாதுகாப்பை மிகைப்படுத்திக் காட்டல்".இதை மக்களை அடக்குவதற்கும் மக்கள் மீது கலகத்தை பாவிப்பதற்கும் ஒரு கருவியாக பயன்படுத்தல்.


8. மதமும் ஆளும் மேல்தட்டு வர்க்கமும் ஒன்றாக செயல்படல்.இந்த மேல்தட்டு வர்க்கம் தங்களை மதத்துக்காக போராடும் போராளிகளாக காட்டும்.மற்ற நம்பிக்கைகளை இழிவாகவும் தரக்குறைவாகவும் நினைக்கும்.
 
9.
பொருளாதாரத்தை தம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளல்.


10.தொழிலாளர் உரிமைகள் ஒடுக்கப்பட்டு மெது மெதுவாக அகற்றப்படல்.அரசியல்ரீதியாக பலமுள்ள நிறுவனக்களின் ஆதிக்கம் அதிகரித்தல்.


11.அறிவுஜீவிகள் மற்றும் அறிவார்ந்த கலைகளை அடக்குதல்,தடைசெய்தல்.
 

12.குற்றங்களும் தண்டனைகளும் அதிகரித்தல்.அவற்றின்மீது கடுமையான சட்ட நடைமுறைகளை எடுத்தல்.


13.ஊழல் மலிந்து காணப்படல்.மேற்தட்டு அதிகார வர்க்கம் ஊழல் மூலம் தங்களை செளிப்பாக்கிக் கொள்ளல்.


14.தேர்தல் மோசடி அதிகளவில் இடம்பெறல்.


இந்த அனைத்துப் பண்புகளும் அமெரிக்காவில் தற்போது நாம் காணலாம்.அமெரிக்காவில் ஜனநாயகம் என்பது வெறும் ஒரு வார்த்தையே ஆகும்.அனால் அங்கு அரசியல்ரீதியாக முடிவுகளை எடுப்பது ஒரு குறிப்பிட்ட அதிகார வர்கத்தினரே.


  Huey Long என்ற அறிஞ்சர் " பாசிசம் உங்கள் நாடுகளுக்கு உங்களையறியாமல் வரும் எப்படி என்றால் அது அமெரிக்க கொடியால் மூடப்பட்டிருக்கும்,ஆனால் நீங்கள் நினைப்பதோ அது ஜனநாயம் என்றே ஆனால் அது தீவிர பாசிசமேயாகும்".மிகவும் சினேகபூர்வமாக வரும் இந்த பாசிசம்,அந்நாட்டில் அதன் இருப்பை உறுதியாகிக் கொண்ட பின் அதன் இருண்ட பக்கத்தைக் காட்ட ஆரம்பிக்கும்.தனியுரிமை, முதலாளித்துவம் கையாலாகாத நிலையில் பாசிசத்தைச் சரணடைகின்றது என்பது உண்மையே.தனியுரிமை முதலாளித்துவத்தின் தேய்ந்த நிலையே பாசிசம் என மார்க்சியவாதிகள் அதனைக் கண்டிப்பதுண்டு.


அமெரிக்காவின் பொதுவான விடயங்களில்,அதாவது இராணுவம்,மற்ற நாடுகளின் மீதான போர்,பெருநிறுவனங்களின் ஆதிக்கம் மற்றும் நிதிக் கொள்கை என்பவற்றில் Republicans ஆகா இருக்கட்டும் Democrats ஆகா  இருக்கட்டும் இரு கட்சிக்கும் இடையே மிகச் சிறிய வித்தியாசங்களே உள்ளன.
இவர்கள் மக்களின் நலனைவிட அவர்களின் நலனுக்கே முன்னுரிமை வழங்குகின்றனர்.




இதன் விளைவாக, முன்னெப்போதையும் விட, அமெரிக்கவில் தற்போது தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் செல்வத்துக்காகவும் ஆட்சி அதிகாரத்துகாகவும் மனித மற்றும் சிவில் உரிமைகள் பாரிய அளவில் மீறப்படிகின்றன.

 
இதன் விளைவாக, முன்னெப்போதையும் விட, அமெரிக்கவில் தற்போது தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் செல்வத்துக்காகவும் ஆட்சி அதிகாரத்துகாகவும் மனித மற்றும் சிவில் உரிமைகள் பாரிய அளவில் மீறப்படிகின்றன.For Example
 
1.
9 /11 க்கு முன்னும் அதற்குப் பின்னும் அதிகரித்துள்ள பயங்கரவாதத்துக்கு எதிரான செயற்பாடுகள்.


2.சட்டரீதியற்ற முறையில் பல தசாப்தங்களாக தனி நபர் செயட்பாட்டாலர்களையும் செயற்பாட்டுக் குழுக்களையும் கண்காணித்தல்.இது தற்போது ஒபாமாவின் ஆட்சியில் அதிகரித்துள்ளது எனலாம்.குறிப்பாக இவர்களின் மின்னஞ்சல்.தனிப்பட்ட பதிவுகள்,நிதிக் கொடுக்கல் வாங்கல்கள்,இண்டர்நெட் மற்றும் செல் என்பவற்றை எந்தவித கட்டுப்பாடும் இன்றி அமெரிக்க அரசு கண்காணிக்கிறது.இதன் விளைவாக,அமெரிக்காவை இவர்கள் யாரும் கேள்வி கேட்க முடியாத ஒரு இராச்சியமாக மாற்ற துடிக்கின்றனர்.



3.அமெரிக்காவில் கருத்துச் சுதந்திரம் வெறும் ஒரு மாயையே ஆகும்.அது கருத்துச் சுதந்திரத்தை அடக்கவே முயற்ச்சிக்கிறது.அமெரிக்க மக்களுக்கு அதன் அரசியலமைப்பினால்  வழங்கப்பட்டுள்ள உரிமைகளையும் தற்போது அமெரிக்கா மறுத்துவருகிறது.1996 இல் அமெரிக்காவில் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத  எதிர்ப்புச் சட்டம் மற்றும் Effective Penalty Act என்பன இந்த நடவடிக்கைகளை அமெரிக்க அரசுக்கு இலகுபடுத்தியுள்ளது.இவை மக்கள் மீது தடைகளையும் கடுமையான தண்டனைகளையும் பிரயோகிக்க  பாவிக்கப்படுகிறது.இந்த வழிமுறையைப் பின்பற்றியே 2001 இல்  Patriot Act உருவாக்கப்பட்டு இந்த அடக்குமுறைகள் அமெரிக்க மக்கள் மீது திணிக்கப்பட்டுவருகிறது.நவம்பர் 2002 இல், புஷ் நிர்வாகத்தின் உள்நாட்டு பாதுகாப்பு சட்டம் (Home Land Security Act .) ஒரு விரிவான சர்வாதிகார கருவியாக  பயன்பட்டது.இது மக்களின் சுதந்திரத்தை அடக்க தொடர்ந்து பயன்பட்டு வருகிறது.புஷ்ஷின் இந்த சட்டமூலத்தை தற்போது ஒபாமாவும் ஒரு வரி தப்பாமல் பின்பற்றி வருகிறார்.இந்த பாசிசவாதிகள் தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் மக்களின் அடிப்படை சுதந்திரத்திலும் கைவைத்துள்ளனர்.




சட்டரீதியாக அறிவிக்கப்படாமல் அமெரிக்காவில் தற்போது ஒரு மிகத்தீவிரமான ஒரு பாசிச ஆட்சி நடைபெறுகிறது என்பது உறுதி.தீவிர பாசிசம் அமெரிக்காவை தனது  இரும்புக் கரம் கொண்டு வழிநடத்திச் செல்கிறது என்பதும் நூற்றுக்கு நூறு வீதம் உறுதி.


ஐரோப்பாவில் மீண்டும் எழுச்சி பெரும் வலதுசாரி தீவிரவாதம்.


  தீவிரவாதியான ஆண்டர்ஸ் ப்றேவிக் தன்னை விட ஐரோப்பாவில் வளர்ந்து  வரும் ஒரு பாரிய கருத்தியல் தீவிரவாதத்தை இனங்காட்டினான்.அது அவனை விட அட்டூழியம் நிறைந்ததாகவும் பயங்கரமானதாகவும் கண்டுகொள்ளப்பட்டது.அதுவே ஐரோப்பாவில் மீள் எழுச்சி பெற்றுவரும்  வலதுசாரி தீவிரவாதம்.


Xenophobia இதன் வெளிப்பாடுகளில் ஒன்றாகும்.Xenophobia என்பது அந்நியர்கள் அல்லது பிற கலாச்சாரங்கள் மீதான் அச்சம் ஆகும்.இதனால் பல மக்கள் பாதிக்கப்பட்டாலும் குறித்த சிலரே வன்முறையல் இடுபடுகின்றனர்.


அமெரிக்காவில் இதனை Tea Party குழுவினர் பிரதிபலிக்கின்றனர்.இவர்கள் அமெரிக்காவில் உள்ள தீவிர வலதுசாரிக் கொள்கையுடையவர்களுக்கும் அவர்களின் செயற்பாடுகளுக்கும் முழுமையான ஆதரவை வழங்குகின்றனர்.அமெரிக்காவில் அரசாங்கத்துக்கெதிராக நடைபெறும் ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில்  பெரும்பாலும் இவர்களே உள்ளனர்,மாநில ரீதியான பிளவுக்கு ஆதரவு வழங்குகின்றனர்.இன்றைய நாளில் அமெரிக்கா சிக்கித்தவிக்கும் பொருதார சரிவுக்கும் இவர்களே காரணம் என பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.




 ஐரோப்பா முழுவதும், கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலும் உள்ள தீவிர வலதுசாரிக் கட்சிகளின் நோக்கம் ஒன்றே அது வெளிநாட்டவர்கள் விரட்டப்பட வேண்டும்,அதனூடாக தம் நாடு சுத்தப்படுத்தப்பட வேண்டும்,நாட்டை அதற்கு உரிமையுள்ளவ்ர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.


பாசிசம் என்ற இச்சொல் பெனிடோ முசோலினி என்ற சர்வாதிகாரியால் உருவாக்கப்பட்டது.இந்த பெனிடோ முசோலினி ஒரு தீவிர இடதுசாரியாக இருந்து பின்னர் வலதுசாரியாக மாறியவன்.இன்று இந்த கொள்கை மிக நுட்பமாக அதுபோல் மிகவும் பயங்கரமாக பின்பற்றப்படுகிறது.இது ஜனநாயக உரிமைகளையும் சமூக உரிமைகளையும் அறிப்புக்குல்லாக்கும் ஒரு கேடுகெட்ட கொள்கையாகும். 


இதன் விளைவாக, சமூக ஜனநாயகஆட்சி கிட்டத்தட்ட மறைந்துவிட்டது.குறிப்பாக நார்டிக் நாடுகளை பெரும்பாலும் வலதுசாரி கட்சிகளே ஆளுகின்றன.நோர்வேயைத்தவிர.

பழமைவாத,இனவெறியுள்ள,தீவிர போக்குடைய இந்த அண்டெர்ஸ் ப்றேவிக் போன்றவர்களும் அவனின் குழுவினரும் தற்போது நோர்வே அரசுக்கு பெரும் சவாலாக உள்ளனர்.இந்த அண்டெர்ஸ் ப்றேவிக் தனது கொள்கை பிரகடனத்தில் தொழிலார்களை வலதுக்கு திரும்பும்படி கூறியுள்ளான்,மேலும் சுதந்திர பலஸ்தீன அரசுக்கான ஆதரவை நிறுத்தும் படியும்,இஸ்ரேலை விமர்சனம் செய்வதை  நிறுத்தும் படியும் கூறியுள்ளான்.நேட்டோ சர்வதேச ஏகாதிபத்தியத்தின் உறுதியாக இருக்கும் எனவும் கூறியுள்ளான்.

ஸ்வீடனில்  வலதுசாரி எழுச்சி பெற்றமை,ஐரோப்பாவின் சமூக ஜனநாயகத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியது எனலாம்.ஸ்வீடனின் சமூக ஜனநாயகவாதிகள் கடந்த செப்டம்பர் தேர்தலில் பின்னடைவை சந்தித்தது,இது அவர்கள் 1914 ட்க்குப் பின் சந்தித்த மோசமான பின்னடைவாகும்.முதன்முறையாக குடியேற்ற எதிர்ப்பு கட்சி ஒன்று ஆசனங்களை வென்றது.

ஐரோப்பா முழுவதும் வளர்ந்து  வரும்  இஸ்லாமிய எதிர்ப்பு.மார்க்க்சசிய எதிர்ப்பு,குடியேற்றக்காரகளின் மீதான வெறுப்பு தற்போது நோர்வே மற்றும் டென்மார்க்கில் கொடிகட்டிப் பறக்கிறது.பாசிசத்துக்கு  முன்னால் ஒரு குறுகிய பாய்ச்சல் உள்ளதா? நாசிசம் வன்முறையில் எழுந்தது.அவர்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்தனர்.அந்த மாற்றத்தில் திட்டமிடப்பட்டதை விட நிறையவிடயங்கள் உள்ளடங்கி இருந்தன.வன்முறையால் எல்லோரையும் வளத்துக்குத் திருப்புதல்,சகியாமை,சர்வாதிபத்தியம் மற்றும் உலகப் போர்கள் என்பன அடங்கியிருந்தன.இவை உலகை ஒரு வாழத் தகுதியற்ற இடமாக மாற்றியது.

தற்போது அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் இந்த வலதுசாரி தீவிரவாதம் வெகுவாக பாதித்திருக்கிறது.இன்று அங்கு எல்லா இடங்களிலும் அடக்குமுறை தலைவிரித்தாடுகிறது.குறிப்பாக முஸ்லிம்கள்.இன்று அமெரிக்காவில் முஸ்லிகளில் அரைவாசிப்பேர் மதரீதியான அடக்குமுறைகளுக்கு அலாவதாக ஒரு கணிப்பீடு கூறுகிறது.இன்று இந்த நாடுகள் ஒரு பாசிச தலைமையின் கீழ் அணிதிரண்டு அந்நாடுகளில்  வாழும் பிற இனத்தாருக்கு பல்வேறுபட்ட தொந்தரவுகளை வளங்கியவண்ணம் உள்ளனர்.


 9/11 தாக்குதல் அமெரிக்காவில் ஒரு தீவிர வலதுசாரி இயக்கத்தை தூண்டிவிட்டது.அதேபோல் ஐரோப்பாவில் இந்த அன்றேஸ் ப்றேவிக் மேற்கொண்ட கொலைவெறித் தாக்குதல் ஏற்கனவே முடுக்குவிடப்பட்டிருந்த தீவிர வலதுசாரி இயக்கத்தை இன்னும் தூண்டிவிடும் என்பது நிச்சயம்.ஐரோப்பாவில் ஏற்கனவே விதைக்கப்பட்டிருந்த பாசிச விதைகள் இன்று விருட்சமாய் வளைந்து நிற்கின்றன.

 

 

 

Monday, August 15, 2011

பொய்த்துப்போன முதலாளித்துவம்! (பகுதி-3)

உலகப் பொருளாதார வீழ்ச்சியின் அடிவேரை அலசி, வீழ்ச்சியிலிருந்து விடுபடுவதற்கான வழிவகைகளை இக்கட்டுரையில் விவரிக்கிறார் பொருளியலாளர் சகோ. ஸலாஹுத்தீன். 
 கழுத்தறுப்புப் போட்டிகள்!




"ஒய்யாரக் கொண்டையாம்! ஒன்பது முழம் பூவாம்! உள்ளே நெளியுதாம் ஈறும் பேனும்!" என்று தமிழில் ஒரு சொல்வடை உண்டு. அதைப் போன்றதுதான் "முதலாளித்துவம் என்பது தனிமனித உரிமைகளை முழுமையாக அங்கீகரிக்கும் ஒரு சமுதாய அமைப்பு" என முதலாளித்துவ ஆதரவாளர்கள் பெருமையாகப் பேசுவதும்.


வெளிப்பார்வைக்கு ஆடம்பரமும் பகட்டுமாக தெரிந்தாலும் முதலாளித்துவத்தின் உண்மை முகம் கோரமானது. இலாபம் பெறுவது மட்டுமே குறிக்கோள் என உச்ச பட்ச சுயநலத்தையே முதலாளித்துவம் ஊக்குவிக்கிறது.


இந்த முரண்பாட்டை விளக்குவதற்காக பொதுவுடைமைக்காரர்கள் ஒரு கதை சொல்வார்கள். இங்கிலாந்து குளிர் பிரதேசம் என்பதால் உணவுத் தேவைக்குச் சமமாக வீட்டில் கணப்பு மூட்டிக் குளிர் காய்வதும் அங்கு ஒரு அத்தியாவசியத் தேவை. ஒரு ஏழைத் தொழிலாளியின் வீட்டில் ஒருநாள் கணப்பு மூட்டப்படவில்லை.

"அம்மா, ஏன் கணப்பு மூட்டவில்லை?"
"நிலக்கரி வாங்க காசு இல்லை"
"ஏன் காசில்லை?"
"அப்பாவை வேலையில் இருந்து நிறுத்தி விட்டார்கள். அதனால் காசு இல்லை"
"அப்பாவை ஏன் வேலையிலிருந்து நிறுத்தி விட்டார்கள்?"
"அப்பா வேலை செய்த நிலக்கரிச் சுரங்கத்தில் ஏராளமான நிலக்கரியைத் தோண்டி எடுத்து விட்டார்களாம்; விற்கவில்லை; அதனால் வேலையில்லை என்று நிறுத்தி விட்டார்களாம்"


முரண்பாடு புரிகிறதா? நிலக்கரி அதிகமாக உற்பத்திச் செய்யப்பட்டதால் ஒரு தொழிலாளியின் வீட்டில் நிலக்கரி இல்லாமல் போய் விட்டது.
இது வெறும் கதைதானே என்று நாம் நினைக்கலாம். ஆனால் இன்றைய முதலாளித்துவத்தில் இதைப்போன்ற உண்மை நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அமெரிக்காவின் ஆரஞ்சுப் பழ உற்பத்தியாளர்கள், விளைச்சல் அதிகமாகி, ஏற்றுமதி செய்யும் வாய்ப்புகளும் குறைவாக இருந்தால் மீதமான பழங்களை தீயிலிட்டு எரித்து விடுவார்களாம். ஏனெனில் அதிக அளவிலான பழங்கள் சந்தைக்குச் சென்றால் அதன் விலை சரிந்து விடுமாம்.


உலகப் பொருளாதார மந்தநிலை, உணவுப் பொருள்களின் விலை உயர்வு போன்ற பல காரணங்களினால் உலக அளவில் அன்றாட உணவிற்கு வழியில்லாமல் பட்டினி கிடப்பவர்களின் எண்ணிக்கை ஒரு பில்லியனைத் தொட்டிருக்கிறது என ஐ.நா. அமைப்பின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. அதே உலகில்தான் "தனது லாபம் குறைந்து விடக்கூடாது" என்பதற்காக உணவுப் பொருள்களைத் தீயிட்டு எரிக்கும் அராஜகங்களும் நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது. இந்தப் "பெருமை"யெல்லாம் முதலாளித்துவத்தையே சாரும்.


தனது லாபத்தைத் தக்க வைத்துக் கொள்ள என்ன தகிடுதத்தம் வேண்டுமானாலும் செய்ய முதலாளித்துவவாதிகள் தயார். சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் விமான நிறுவனம் மீது அப்போதுதான் புதிதாக துவங்கி நடத்தப் பட்டுக் கொண்டிருந்த வெர்ஜின் அட்லாண்டிக் விமான நிறுவனம் ஒரு வழக்குத் தொடர்ந்தது.
இங்கிலாந்தின் ஒரே விமான நிறுவனம் என்று சொல்லத்தக்க அளவில் பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருந்த நேரம் அது. முழு ஐரோப்பாவிலும், ஏன் உலக அளவிலேயே மிகப் பிரபலமான விமான நிறுவனமாக அது இருந்தது. அந்தச் சூழலில்தான் ரிச்சர்ட் பிரான்ஸன் என்பவர் வெர்ஜின் அட்லாண்டிக் எனும் விமான நிறுவனத்தைத் துவக்கினார். பிரிட்டிஷ் ஏர்வேய்ஸைவிட மலிவுக் கட்டணத்தில், தரமான மற்றும் சில புதுமையான சேவைகளை அவர் அறிமுகப் படுத்தினார். அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. விமானப் பயணம் என்றாலே விமான நிறுவனங்கள் வைத்ததுதான் சட்டம் என்று இருந்த சூழலை மாற்றி பயணிகள் எதிர்பார்ப்பது என்ன என்பதை அறிந்து அதற்கேற்ற சேவைகளை வெர்ஜின் அட்லாண்டிக் நிறுவனம் வழங்கத் தொடங்கியது.


மார்க்கெட்டிங் துறையில் சந்தையின் போக்கை "விற்பவர் சந்தை" "வாங்குபவர் சந்தை" என இருவகையாக குறிப்பிடுவார்கள். உதாரணமாக, மக்களுக்கு அவசியத்தேவையான ஒரு பொருளை ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே தயாரிக்கிறது என்றால் அதற்கு அந்நிறுவனம் என்ன விலை வைத்தாலும் மக்கள் வாங்கித்தான் ஆக வேண்டும். இது விற்பவருக்குச் சாதகமான "விற்பவர் சந்தை" (Sellers" Market). மாறாக, அதே பொருளை 10 நிறுவனங்கள் தயாரித்தால், வாடிக்கையாளர்களைக் கவருவதற்காக போட்டி போட்டுக்கொண்டு விலையைக் குறைப்பார்கள். தரத்தை அதிகரிப்பார்கள். இது வாங்குபவருக்குச் சாதகமான "வாங்குபவர் சந்தை" (Buyers" Market). அன்று வரை "விற்பவர் சந்தை"யாக இருந்த விமானப் பயணச் சேவைகளை "வாங்குபவர் சந்தை"யாக மாற்றியது வெர்ஜின் அட்லாண்டிக்.


இதுதான் பிரிட்டிஷ் ஏர்வேய்ஸுக்குப் பிடிக்கவில்லை. அதுவும், இங்கிலாந்திலேயே தனக்குப் போட்டியாக இந்த நிறுவனம் தோன்றி வளர்ந்து வருவது அவர்களுக்குப் பெரும் எரிச்சலைத் தந்தது. போட்டி என்றால் யாருக்குத்தான் பிடிக்கும்? அதை முளையிலேயே கிள்ளியெறிய அவர்கள் விரும்பினார்கள். முன்பொருமுறை ஃப்ரெடி லேகர் என்பவர் தொடங்கி நடத்திய மலிவுக் கட்டண விமானச்சேவை நிறுவனம் இப்படித்தான் பெரிய விமான நிறுவனங்களின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் மூடப்பட்டது. ஆனால் வெர்ஜின் அட்லாண்டிக்கை ஒழித்துக் கட்ட பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் மேற்கொண்ட சில மறைமுக நடவடிக்கைகள், "போட்டியென்றால் இப்படியெல்லாமா செய்வார்கள்?" என்று உலகையே அதிசயப் படுத்தியது. லாபத்தைத் தக்க வைத்துக் கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்யலாம் எனத் தூண்டும் முதலாளித்துவத்தின் அசிங்கமான முகமும் கொஞ்சம் வெளிச்சத்திற்கு வந்தது.


வெர்ஜின் அட்லாண்டிக் பயணங்களில் பாதுகாப்பு உத்தரவாதமில்லை என்ற வதந்தி முதலில் பரப்பப் பட்டது. அதில் பயணம் செய்ய பதிவு செய்திருந்தவர்களைச் சில மர்ம நபர்கள் தொலைபேசியில் அழைத்து "உங்கள் ஃபிளைட் கேன்சலாகி விட்டது. வேண்டுமானால் பிரிட்டிஷ் ஏர்வேய்ஸுக்கு மாறிக் கொள்ளுங்கள்" என்றார்கள். அதையும் மீறி விமான நிலையத்திற்கு வந்தவர்களைச் சிலர் திசை திருப்பி விட்டார்கள். இவை ஒரு புறம் இருக்க, வெர்ஜின் அட்லாண்டிக் கேட்ட பல பயண வழித்தடங்கள் அவர்களுக்குக் கிடைப்பதிலும் யாரோ முட்டுக்கட்டை போட்டிருந்தார்கள். கடன் கொடுத்துக் கொண்டிருந்த வங்கிகள் முரண்டு பிடிக்க ஆரம்பித்தன.


இவற்றையெல்லாம் செய்வது பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ்தான் என ரிச்சர்ட் பிரான்ஸன் நம்பினார். ஆனால் அவரிடம் அதற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை. இருந்தாலும், இந்த ஒவ்வொரு சம்பவத்தையும் ஊடகங்களில் பெரிதாக புகார் வாசித்து பொதுமக்களின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். அதில் அவரது நிறுவனத்திற்கு இலவச விளம்பரம் தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருந்தது.


ஆரம்பத்தில் அவரின் புகார்களை அலட்சியப்படுத்திவந்த பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ், ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல், "ரிச்சர்ட் பிரான்ஸன் ஒரு விளம்பரப் பிரியர், அவர் ஒரு பொய்யர்" என்றெல்லாம் பதிலளிக்க ஆரம்பித்தது. ரிச்சர்ட் பிரான்ஸன் இதற்காகவே காத்திருந்தது போல, தன்னை பொய்யர் என்று சொன்னதற்காக பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் மீது மானநஷ்ட வழக்குத் தொடர்ந்தார்.


ரிச்சர்ட் பிரான்ஸன் ஒரு பொய்யர் என்று சொன்னதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் பிரிட்டிஷ் ஏர்வேய்ஸுக்கு ஏற்பட்டது. வழக்கு, விசாரணை என்று தொடர்ந்தால் அது தனக்குப் பாதகமாகவே முடியும் என்பதை உணர்ந்த பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ், சண்டைக்காரர் காலிலேயே விழுந்துவிட தீர்மானித்தார்கள். இரு தரப்பு வக்கீல்களும் கலந்து பேசி, கோர்ட்டுக்கு வெளியிலேயே இதைத் தீர்த்துக் கொள்வது என்று முடிவு செய்யப் பட்டது. ரிச்சர்ட் பிரான்ஸனுக்கு 500,000 பவுண்டுகளும் அவரது வெர்ஜின் அட்லாண்டிக் நிறுவனத்திற்கு 110,000 பவுண்டுகளும் நஷ்ட ஈடாக கொடுக்க பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் ஒப்புக் கொண்டது.


முதலாளித்துவவாதிகள் தங்களது லாபத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும் போட்டியாளர்களை நசுக்குவதற்காகவும் என்ன விதமான தில்லுமுல்லுகளுக்கும் தயார் என்பதற்கு இது ஒரு சிறு சாம்பிள் மட்டுமே. உலகின் ஆகப்பெரிய பணக்காரரும், "வெற்றிகரமான முதலாளித்துவவாதி" (The Most Successful Capitalist) என்று புகழப்படுபவருமான பில் கேட்ஸின் மைக்ரோஸாஃப்ட் நிறுவனம் போட்டியாளர்களை நசுக்குவதில் உலகப் பிரசித்திப் பெற்றது. இதன் தொடர்பில் பல நூற்றுக் கணக்கான வழக்குகளையும் அந்நிறுவனம் சந்தித்து வருகிறது.



SOURCE - SATHYAMARGAM

Saturday, August 13, 2011

பொய்த்துப்போன முதலாளித்துவம்! (பகுதி-2)

உலகப் பொருளாதார வீழ்ச்சியின் அடிவேரை அலசி, வீழ்ச்சியிலிருந்து விடுபடுவதற்கான வழிவகைகளை இக்கட்டுரையில் விவரிக்கிறார் பொருளியலாளர் சகோ. ஸலாஹுத்தீன்.

முதலாளித்துவம் – அடிப்படையிலேயே கோளாறு!

 

 "உலகப் பொருளாதாரம் எந்தக் கொள்கைகள், சட்டதிட்டதிட்டங்களின் அடிப்படையில் அமைக்கப் பட்டிருக்கிறதோ, அவை குறைபாடுடையவை.  விரைவிலேயே அவை சரிசெய்யப்படவில்லை என்றால், உலகப் பொருளாதார வீழ்ச்சிக்கு அவையே காரணமாகி விடும்" என்றார் பொருளியல் நிபுணர் மாரிஸ் அலைஸ்.  ஆனால் இன்றைய உலகப் பொருளாதாரத்தின் பெரும்பகுதி முதலாளித்துவக் கொள்கைகளின் அடிப்படையிலேயே அமைந்திருக்கிறது. மாற்றுக் கொள்கையான பொதுவுடைமைக் கொள்கைகளை நடைமுறைப் படுத்தியிருக்கும் நாடுகளில்கூட முதலாளித்துவத்தின் தாக்கம் மிகுந்தே காணப்படுகிறது.  கம்யூனிஸ சீனா இன்று முதலாளித்துவ எஜமானர்களின் அபிமானத்திற்குரிய பிரதேசமாகவே ஆகிவிட்டது.  அவ்வளவு பிரபலமான முதலாளித்துவத்தில் அப்படி என்ன குறைபாடு?



"முதலாளித்துவம் என்பது தனிமனித உரிமைகளை முழுமையாக அங்கீகரிக்கும் ஒரு சமுதாய அமைப்பு" என்கிறார்கள் முதலாளித்துவ ஆதரவாளர்கள்.  "தனிமனித உரிமை என்பது சொத்துரிமையையும் உள்ளடக்கியது. முதலாளித்துவத்தில் எல்லா சொத்துக்களுமே தனி மனிதர்களின் உடைமையாக மட்டுமே இருக்கும். உற்பத்தி, வர்த்தகம் போன்ற பொருளாதார நடவடிக்கைகளில் அரசு பங்கேற்காது. இதுவே அரசியல் சுதந்திரம்" என மேலும் விளக்கமளிக்கிறார்கள் இவர்கள். 



முதலாளித்துவத்தை "லெஸ்-ஸெய்-ஃபேர் கொள்கை" (laissez faire system) என்றும் அழைக்கிறார்கள். இந்த பிரெஞ்சு வார்த்தையின் பொருள் "அப்படியே விட்டு விடு" என்பதாகும். வர்த்தக மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் அரசாங்கம் தலையிடாமல் அவற்றைச் சந்தையின் போக்கிலேயே விட்டுவிட வேண்டும் என்ற முதலாளித்துவத்தின் அடிப்படையையே இது பிரதிபலிக்கிறது.



வர்த்தகத்தை, சந்தையின் போக்கிலேயே விட்டுவிடுவது எப்படி என்பதை ஓர் உதாரணம் மூலம் பார்ப்போம். ஒரு பழ வியாபாரி ஒரு மாந்தோப்பிலிருந்து மாம்பழங்களை வாங்கி, தனது ஊர்ச் சந்தையில் ஒரு பழம் ரூ.2 என்ற விலையில் விற்கிறார். நன்றாக வியாபாரம் நடக்கிறது. சில மாதங்கள் ஆன பிறகு இன்னொரு வியாபாரி அதே தோப்புப் பழங்களை அதே சந்தையில் ரூ.1.80-க்கு விற்கத் தொடங்குகிறார். தனியாளாக ஒருவர் மட்டும் வியாபாரம் செய்து வந்து வந்த பழச்சந்தையில் இப்போது போட்டி வந்து விட்டது. முதலாமவரின் வாடிக்கையாளர்கள் இப்போது இரண்டாமவரிடம் வாங்கத் தொடங்கி விட்டார்கள். வேறு வழியின்றி முதலாமவரும் தனது விலையை ரூ.1.80-க்கு குறைத்தார். 



இந்நிலையில் மூன்றாவதாக ஒரு வியாபாரி வருகிறார். அவரும் அதே பழங்களை ரூ.1.50-க்கு விற்கத் தொடங்கி விட்டார். போட்டி இன்னும் கடுமையாகி விட்டது. முதல் இருவரும் தங்கள் விலையையும் ரூ 1.50-க்கு குறைத்தாலன்றி வியாபாரம் செய்ய முடியாது என்ற நிலையில் அவர்களும் விலையைக் குறைத்தனர். 



முதலாமவர் கொஞ்சம் மாற்றி யோசித்தார். இப்படியே போய்க் கொண்டிருந்தால் போட்ட முதலைக்கூட எடுக்க முடியாது. ஒரே தரத்திலுள்ள பழத்தை வைத்துப் போட்டி போட்டுக் கொண்டிருப்பதை விட்டு நாம் சற்று உயர்தர பழத்தை விற்கலாமே என்ற யோசனை அவருக்குத் தோன்றியது. சிறிது தூரத்திலுள்ள வேறொரு தோப்பிற்குச் சென்று விசாரித்தார். அங்கு விளையும் பழம் சந்தையில் இருக்கும் பழத்தைவிட உயர்தரமானது. ஆனால் கொள்முதல் விலை கிட்டத்தட்ட அதேதான். அவர் அந்த உயர்தர பழங்களை வாங்கி வந்து தனது கடையில் அறிமுகப் படுத்தினார். விலை ரூ. 1.50. அதே விலைக்கு உயர் தரமான பழம் கிடைக்கிறது என்பதால் வாடிக்கையாளர்கள் திரும்பவும் அவரது கடைக்கு வரத் தொடங்கினார்கள். தான் ஏற்கனவே விற்றுக் கொண்டிருந்த பழத்தின் விலையையும் அவர் ரூ. 1.40 எனக் குறைத்தார். 



கூட்டிக் கழித்துப் பார்த்தால், இந்த நடவடிக்கையில் நிகர பலன் அடைந்தது வாடிக்கையாளர்கள்தான். சந்தையில் அவர்கள் வாங்கிக் கொண்டிருந்த பழத்தின் விலை ரூ 2.00-லிருந்து 1.40-க்கு குறைந்ததோடல்லாமல், ரூ.1.50-க்கு உயர்தர பழவகை ஒன்றும் கிடைக்கிறது.  இவையெல்லாம் வெளியார் யாருடைய தலையீடும் இல்லாமல் சந்தையில் போட்டி ஏற்பட்டதன் விளைவு. முதலாளித்துவத்தால் கிடைக்கும் மிகச் சில பலன்களுள் இதுவும் ஒன்று!



ஆனால், முதலாளித்துவத்தின் இன்னொரு முகம் இதிலிருந்து வேறுபட்டது. பொதுநலம் கடுகளவுமின்றி, முழுக்க முழுக்கச் சுயநலம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் பணக்கார முதலைகளைப் பாதுகாப்பதற்காக ஏற்பட்டது அது. இன்னொரு உதாரணம் பார்ப்போம்:
அமெரிக்காவில் கோடி கோடியாகச் சம்பாதித்த பணத்தை எடுத்துக் கொண்டு ஒருவர் இந்தியா திரும்புகிறார் என்று வைத்துக் கொள்வோம்.  இந்தியாவில் அவர் முதலீடு செய்வதற்கு ஏற்ற நூற்றுக் கணக்கான வாய்ப்புகள் இருப்பது அவருக்கு தெரிகிறது. அவற்றுள் தனக்குச் சாத்தியமான 10 துறைகளை அவர் தேர்ந்தெடுக்கிறார். அவற்றை மேலும் ஆராய்ந்ததில் மற்ற அனைத்தையும்விட இரண்டே இரண்டு துறைகளுக்கு மட்டுமே மிக வளமான எதிர்காலம் இருப்பது அவருக்குத் தெரிகிறது. அவற்றுள் ஒன்று மருந்துகள் தயாரிப்பு. மற்றொன்று மதுபான உற்பத்தி. இந்த இரண்டில் ஒன்றை அவர் தேர்ந்தெடுக்க வேண்டும். 



இது போன்ற சூழ்நிலைகளில் அவர் மதுபானத் தொழிலை தேர்ந்தெடுக்கவே முதலாளித்துவம் வழி காட்டும். ஏன் அப்படி? மதுபானத் தொழிலுக்கு வாடிக்கையாளர்கள் அதிகம். இதற்கு அதிக விளம்பரங்கள் தேவையில்லை. விற்பனைப் பிரதிநிதிகளும் அதிகம் பேர் தேவையில்லை. போட்டி நிறுவனங்கள் குறைவு. எனவே மருந்துத் தயாரிப்பைவிட இதில் செலவு குறைவு, லாபம் அதிகம். இதுதான் விஷயம்.  எதை உற்பத்தி செய்வது என்று முடிவெடுக்க வேண்டிய சூழலில், மற்றெல்லாவற்றையும்விட லாப நோக்கமே பிரதானமாக நிற்கும். மதுபானம் உற்பத்தி செய்வதால் சமூகத்திற்கு ஏற்படும் பாதிப்பு, அதே சமயத்தில் மருந்துகள் உற்பத்தி செய்வதால் சமுதாயத்திற்குக் கிடைக்கும் பலன் என்பதெல்லாம் முக்கியமே அல்ல. முதலாளித்துவம் ஊக்குவிக்கும் "தலையீடற்ற பொருளாதாரச் சுதந்திரம்" என்பது இதுதான்!



முதலாளித்துவப் பொருளாதாரத்தில் பணம் படைத்த முதலாளிகளும் மெகா கார்ப்பரேட் நிறுவனங்களுமே 'எதை உற்பத்தி செய்வது?, எதை யாருக்கு வினியோகம் செய்வது?' போன்றவற்றையும் பொருள்கள் மற்றும் சேவைகளுக்கான விலைகளையும் தீர்மானிக்கிறார்கள். இந்த முடிவெடுத்தல்களில் அவர்களைச் செலுத்துவது ஒன்றேதான்: லாபம், அதிக லாபம், மேலும் மேலும் லாபம். 



நாம் இதுவரை பார்த்த 'தனியார் பொருளாதாரச் சுதந்திரம்' முதலாளித்துவத்தின் உயிர் மூச்சு என்றால், அதன் உடலெங்கும் ஓடும் இரத்தம் என வட்டியைச் சொல்லலாம். பொருளாதார இயந்திரம் சிக்கலில்லாமல் இயங்க உதவும் மசகு எண்ணெய்தான் வட்டி என முதலாளித்துவ ஆதரவாளர்கள் பெருமைப் பட்டுக் கொள்வார்கள். ஆனால் உண்மையில், பணக்காரர்கள் கொழுத்த பணக்காரர்களாகவும் ஏழைகள் பரம ஏழைகளாகவும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மென்மேலும் அதிகரிக்க வகை செய்யும் கருவியே வட்டி.


நாம் முன்பு பார்த்த அமெரிக்க ரிட்டர்ன் கோடீஸ்வரரை மீண்டும் உதாரணமாக எடுத்துக் கொள்வோம். சொந்தமாகத் தொழில் தொடங்குவதில் சில காரணங்களினால் அவருக்குத் தயக்கம் உண்டானது. அதே சமயத்தில் மருந்துத் தொழிலில் பல ஆண்டுகள் அனுபவம் உள்ள ஒருவர் தனியாகத் தொழில் தொடங்க முயல்வதாகவும் அவரிடம் அதற்குப் போதுமான பண வசதி இல்லை என்றும் ஒரு தகவல் அமெரிக்காவிலிருந்து திரும்பிய கோடீஸ்வரருக்குக் கிடைக்கிறது. கோடீஸ்வரர் அவரிடம் போய், தனது பணம் 100 கோடியைக் கடனாகக் கொடுப்பதாகவும் அதற்கு அவர் 10% மட்டும் வட்டியாகக் கொடுத்தால் போதும் என்றார். அதற்கு அந்தத் தொழில் முனைவரும் சம்ம்மதிக்கவே, பணம் கை மாறுகிறது.  விரைவிலேயே மருந்துத் தயாரிப்பும் தொடங்குகிறது.



தம்மால் சுமக்க முடியாத ஒரு பெரும் சுமை தம் தலைமேல் ஏற்றப் பட்டதை அந்தத் தொழில் முனைவர் மிகத் தாமதமாகவே புரிந்துக் கொண்டார். மருந்து வியாபாரம் எப்படி நடந்தாலும் கடனுக்கான வட்டி 10 கோடியை வருடா வருடம் கட்டாயம் கட்ட வேண்டி இருந்தது.  மருந்துகளை குறைந்த விலைக்கு விற்க வேண்டும் என்ற அவரது திட்டத்தை ஓரம்கட்டிவிட்டு மருந்துகளின் விலையை உயர்த்தினார்.  அடுத்ததாக, செலவுகளை குறைக்க வேண்டி நிறையத் தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பினார். அதற்கும் அடுத்து, விலை மலிவான தரம் குறைந்த மூலப் பொருள்களை உபயோகிக்கத் தொடங்கினார். அவர் செய்த ஒவ்வொரு மாற்றத்திற்குப் பிறகும் மருந்து வியாபாரம் மேலும் சரிந்துக் கொண்டே சென்றது. வட்டி கட்ட முடியாத நிலையில் அவர் தனது சொத்துக்களையும் விற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இறுதியில் நாட்டில் கடன் வாங்கி நொடித்து ஏழையாகிப் போனவர்களின் எண்ணிக்கையில் ஒன்று உயர்ந்தது.



முதலாளித்துவத்தின் இரத்த ஓட்டமான வட்டியின் யதார்த்த நிலை இது! வட்டியின் கொடுமைகளைப் பற்றி நாம் நிறையப் பேச வேண்டியுள்ளது.  இப்போதைக்கு இதோடு நிறுத்திக் கொள்வோம்.



- தொடரும், இன்ஷா அல்லாஹ் 
SOURCE - SATHYAMARGAM 

Friday, August 12, 2011

பொய்த்துப்போன முதலாளித்துவம்! (பகுதி-1)

உலகப் பொருளாதார வீழ்ச்சியின் அடிவேரை அலசி, வீழ்ச்சியிலிருந்து விடுபடுவதற்கான வழிவகைகளை இக்கட்டுரையில் விவரிக்கிறார் பொருளியலாளர் சகோ. ஸலாஹுத்தீன். 
( 2007-ல் அமெரிக்காவில் தொடங்கிய பொருளாதார நெருக்கடி பற்றிய கட்டுரையாகும் )
2007-ல் அமெரிக்காவில் தொடங்கிய பொருளாதார நெருக்கடி, இன்று பல உலக நாடுகளின் பொருளாதாரத்தையே ஆட்டம் காண வைத்திருக்கிறது.  அமெரிக்காவில் மட்டும் நூற்றுக்கணக்கான சிறு நிதி நிறுவனங்கள் மூடப்பட்டோ, நடவடிக்கைகளை நிறுத்திக் கொண்டோ காணாமல் போய்விட்டன.  அவற்றில் முதலீடு செய்தவர்களின் பணம் காற்றில் கரைந்து போனது.  HSBC, Merrill Lynch, Citigroup, Lehman Brothers போன்ற பெரும் நிதி நிறுவனங்கள் மட்டுமின்றி AIG போன்ற காப்புறுதி நிறுவனங்கள்கூட பெருமளவில் பாதிப்படைந்தன.

இந்த அமெரிக்கப் பொருளாதார நெருக்கடி ஒரு தொற்றுநோயைப் போல உலகமெங்கும் பரவி, பல நாடுகளின் நிதி நிறுவனங்களைப் பாதித்தது.  சிறியது பெரியது என்ற பாகுபாடுகளில்லாமல் சகட்டுமேனிக்கு நிதி நிறுவனங்கள் பாதிப்படைந்து, நிதிஉலகின் எதிர்காலமே சட்டென்று இருண்டு போனது.  பாதிப்படைந்த நாட்டு அரசாங்கங்கள், மாற்று வழிகளைக் கண்டுபிடிக்கும்படி தங்கள் நாட்டுப் பொருளியல் நிபுணர்களை பணித்தன.  அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் போன்ற நாடுகளில், சாவின் விளிம்பை எட்டிப் பார்க்கும் தங்கள் நாட்டு நிதி நிறுவனங்களைத் தூக்கி நிறுத்த அரசாங்கங்கள் பெரும் தொகையைச் செலவு செய்து கொண்டிருக்கின்றன.

ஆனால் மக்களோ இதுநாள்வரை இந்த நாடுகளின் பொருளியலின் இயங்கு சக்தியாக இருந்த முதலாளித்துவக் கொள்கையின் மீது நம்பிக்கை இழந்து விட்டனர். "முதலாளித்துவம் பொய்த்து விட்டது!" என்ற கோஷம் மேற்கத்திய நாடுகளிலிருந்தே உரக்க ஒலிக்கிறது.  முதலாளித்துவக் கொள்கைகள் வீழ்ச்சியடைந்ததற்கான காரணங்களையும் மாற்று வழிகளைப் பற்றியும் பொருளியல் நிபுணர்கள் ஆராயத் தொடங்கியுள்ளனர்.

இத்தனைப் பிரச்னைகளுக்கும் முதல் காரணம் அமெரிக்காவில் ஏற்பட்ட ‘subprime நெருக்கடி’ எனப்படும் திரும்பச் செலுத்தப் படாத வீட்டுக் கடன்கள்தான் என்கிறார்கள்.  அமெரிக்காவில் ஏற்பட்ட இந்தக் கடன் பிரச்னை உலகமெங்கும் பரவியது எப்படி? அதைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், இந்தப் பிரச்னை எப்படித் தோன்றியது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
அமெரிக்கப் பொருளாதார நடவடிக்கைகளில் பெரும்பகுதி கடன் அடிப்படையில் நடத்தப் படுகின்றன.  ஒவ்வொரு சராசரி அமெரிக்கரும் தனது வருமானத்தில் கால் பங்கை கிரெடிட் கார்டு கடன்களை அடைக்கப் பயன்படுத்துகின்றனர்.  வீட்டுக் கடன், வாகனக் கடன் போன்ற பெரிய கடன்களை அடைக்க இன்னொரு கால்பங்கு வருமானம் தேவைப்படும்.  கடன் வாங்குவதில் தேக்கநிலை ஏற்படும்போதெல்லாம் கடன்களுக்கான வட்டி விகிதத்தை அரசாங்கம் குறைத்து, மக்களை மேலும் கடன் வாங்கத் தூண்டும்.  அதாவது கடனிலிருந்து மக்களை மீளவிடாமல் பார்த்துக் கொள்ளும்.

1990-களின் ஆரம்பத்தில் உழைப்பாளர் மற்றும் நடுத்தர வருமானம் உடைய மக்களை இலக்காக வைத்து மிகக் குறைந்த வட்டிக்கு வீட்டு அடமானக் கடன்கள் வாரி வாரி வழங்கப் பட்டன.  "குறைந்த வட்டியில் சொந்தமாக வீடு" என்று ஆசை காட்டப் பட்டு, பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தினர் கடனாளிகளாக்கப் பட்டனர்.

கொஞ்ச நஞ்சம் தயக்கம் காட்டியவர்களைக் கூட, "நீங்கள் வாங்கப் போகும் வீட்டின் மதிப்பு 10 வருடங்களில் பல மடங்கு உயர்ந்து விடும்.  ஒருவேளை உங்களுக்குக் கடனை அடைக்க முடியாத நிலை ஏற்பட்டால்கூட அந்த வீட்டை விற்று, கடனையும் அடைத்து மேற்கொண்டு நீங்கள் லாபமும் பார்க்கலாம்" என்று ஆசை காட்டிக் கடன் வாங்க வைத்தார்கள்.  ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் இந்தப் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டன.  வீடுகள் விற்க விற்க அவர்களுக்கும் லாபம்தானே!

குறைந்த பட்ச மாத வருமானம் உடைய ஒருவர் 5 லட்சம் டாலர் மதிப்புள்ள ஒரு வீட்டை வாங்க விரும்பினாலும், அவர் 5 லட்சத்தையும் வங்கியிலிருந்து கடனாகப் பெற்று, விரும்பும் வீட்டை வாங்கி விட முடியும்.  மாதாமாதம் அவர் 1000 டாலர் திரும்பச் செலுத்தினாலும் முழுக் கடனையும் வட்டியுடன் அடைத்து முடிக்க 60-70 வருடங்களாகி விடும்.

'இதெல்லாம் எளிதில் திரும்பி வராதக் கடன்கள்' என்று கடன் கொடுத்த நிதி நிறுவனங்களுக்குத் தெரியாதா என்ன?  இதைச் சமாளிக்க அவர்கள் ஒரு வழியைக் கண்டுபிடித்தனர்.  இந்தக் கடன்களையெல்லாம் 'கடன் பத்திரங்களாக' மாற்றி உலகச் சந்தையில் விற்று விட்டார்கள்.  இவ்வாறு விற்கப் பட்ட கடன்களின் மதிப்பு 11.8 டிரில்லியன் டாலர்கள் என்ற கணக்கு இப்போது வெளியாகி இருக்கிறது (ஒரு டிரில்லியன் என்பது, இலட்சம் கோடி). அமெரிக்க ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்வதாகப் பெருமையுடன் நினைத்துக் கொண்டு, பல நாட்டு நிதி நிறுவனங்களும் இந்தக் கடன் பத்திரங்களை வாங்கின.

ஆரம்பத்தில், புதிதாகத் தொடங்கப்பட்ட நம்மூர் ஹோட்டல்களைப்போல் எல்லாம் சுவையாக இருந்தது.  வீட்டு விலைகள் ஏறிக் கொண்டே இருந்தன.  அதற்கேற்றாற்போல் மக்களின் கடன் சுமையும் அதிகரித்துக் கொண்டிருந்தது.   பெரும் தொகையைக் கடனாகப் பெற்று வீடு வாங்கிய மாதச் சம்பளக்காரர்கள் நாளாக ஆக கடன் தவணை கட்ட சிரமப்பட ஆரம்பித்தார்கள்.  வாடகை வீட்டிற்கு 1000 டாலர் கட்டிக் கொண்டிருந்தவர்கள், சொந்த வீட்டிற்கு 3000 டாலர் கட்ட வேண்டியிருந்தது.  தவணைகள் தவறத் தொடங்கின.  அமெரிக்காவில் வேலையின்மையும் அதிகரித்துக் கொண்டிருந்தது.

கடன் வாங்கி வீடு வாங்கியவர்களின் பெரும் நம்பிக்கை, 'வீட்டு விலை உயர்ந்து கொண்டே போகும்' என்பதுதான்.  அந்த நம்பிக்கையில் இடி விழுந்தது! சூட்சுமம் அவிழத் தொடங்கியது!  வீட்டு விலைகள் எதிர்பாரா விதமாக சரியத் தொடங்கின.  அதாலபாதாளச் சரிவு என்றுகூடச் சொல்லலாம்.  5 லட்சத்திற்கு வாங்கிய வீட்டின் மதிப்பு 1 லட்சத்துக்குக் கீழிறங்கி விட்டது.  இப்போது கடன் வாங்கியவர்கள் வீட்டை விற்றாலும், வங்கியிடமே திருப்பிக் கொடுத்தாலும், கடன் வாங்கிய 5 லட்சத்தைத் திருப்பிச் செலுத்தியே ஆக வேண்டும்.

வீட்டு விலைகள் ஏறியதே இயல்பானதல்ல.  நிதி நிறுவனங்கள், காப்புறுதி நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மற்றும் வீடுகளின் சந்தை விலையை மதிப்பிடும் நிறுவனங்கள் கூட்டணி அமைத்து நடத்திய கூட்டுக் கொள்ளை.  இவர்கள் ஒன்று சேர்ந்து வீட்டு விலைகளை இருமடங்கு, மும்மடங்கு என ஏற்றி விட்டார்கள்.  போதாக்குறைக்கு வீடு வாங்கச் செலவு செய்யும் பணத்திற்கு வரி விலக்கு அளித்து ரியல் எஸ்டேட் சந்தையை மேலும் ஊக்கப் படுத்தி, மக்களை நிரந்தரக் கடன்காரர்களாக ஆக்கியது அரசு.

மாத வருமானக் காரர்களால் கடன் தவணைகளைத் தொடர்ந்து செலுத்த முடியவில்லை.  வீடுகளை வங்கியிடமே ஒப்படைத்து விட்டு வீட்டை விட்டு வெளியேறினார்கள். ஆளில்லா வீடுகளின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் அதிகரித்தது.  புது வீடுகளின் கட்டுமானப்பணிகள் அப்படியப்படியே நிறுத்தப் பட்டன.  மக்களிடம் பணப்புழக்கம் வெகுவாக குறைந்தது.  கடன் கொடுத்த வங்கிகளுக்கு இரண்டு பக்கம் இடி.  கொடுத்த கடன் திரும்பவில்லை.  அந்த வங்கியில் பணம் டெபாசிட் செய்திருந்தவர்கள் தங்கள் பணத்தை திரும்ப எடுத்துக் கொள்ள விரைந்தனர்.  இதன் விளைவாகப் பல வங்கிகள் திவாலாயின.

வங்கிக் கடனை நம்பியே தொழில் நடத்திக் கொண்டிருந்த பல வணிக நிறுவனங்கள் சிக்கலில் விழுந்தன.  அவர்களுக்கு வேண்டிய அளவிற்குக் கடன் பெற முடியவில்லை.  கிடைக்கும் கொஞ்சக் கடன் தொகைக்கும் அதிகமான வட்டி கொடுக்க வேண்டியிருந்தது.  தொழில் முதலீடுகள் சுருங்கின.  வேலையிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்தது.  பங்குச் சந்தைகள் சரிந்தன.  நாட்டின் முழுப் பொருளாதாரமும் ஸ்தம்பித்தது.

அமெரிக்க நிதி நிறுவனங்கள் அடமானக் கடன்களை, 'கடன் பத்திரங்களாக' மாற்றி உலகச் சந்தையில் விற்றுவிட்டதை முன்னர் பார்த்தோம்.  அக்கடன் பத்திரங்களில் முதலீடு செய்திருந்த, அக்கடன்களைக் காப்பீடு செய்திருந்த பல வெளிநாட்டு நிதி நிறுவனங்களும் பெரும் நட்டமடைந்தன.  அமெரிக்கா என்ற தனியொரு நாட்டின் கடன் பிரச்னை, முழுஉலக நிதிச் சந்தையின் பிரச்னையாக மாறியது இப்படித்தான்.

ஆனால், இத்தனைப் பிரச்னைகளுக்கும் ஒரே காரணம் ‘Subprime நெருக்கடி’தான் என்றால் அது முழுஉண்மையல்ல.  மயிலிறகேயானாலும் வண்டியின் தாங்கும் சக்திக்கு மேலாக ஏற்றிக் கொண்டேயிருந்தால் ஒரு சந்தர்ப்பத்தில் வண்டியின் அச்சு முறிந்து போகும் (பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ் சால மிகுத்துப் பெயின் - குறள்). கடைசியாக ஏற்றப்பட்ட இறகுதான் அச்சை முறித்தது என்று சொல்ல முடியாது.  அதுபோல Subprime நெருக்கடியைக் கடைசியாக வைக்கப் பட்ட இறகு என்று வேண்டுமானால் சொல்லலாம்.  அப்படியானால் இந்தப் பொருளாதாரப் பிரச்னையின் அடிப்படைக் காரணம் என்ன?



"எந்த ஆதாரமும் இல்லாமல் இன்றைய மத்திய வங்கிகள் அச்சடிக்கும் பணத்திற்கும் திருட்டுத்தனமாக அச்சடிக்கப்படும் கள்ள நோட்டிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.  இதைச் சொல்வதற்கு எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை"
பொருளியலில் நோபல் பரிசு பெற்ற மாரிஸ் அலைஸ், "உலகப் பொருளாதாரம் எந்தக் கொள்கைகள், சட்டதிட்டதிட்டங்களின் அடிப்படையில் அமைக்கப் பட்டிருக்கிறதோ, அவை குறைபாடுடையவை.  விரைவிலேயே அவை சரிசெய்யப்படவில்லை என்றால், உலகப் பொருளாதார வீழ்ச்சிக்கு அவையே காரணமாகி விடும்" என எச்சரிக்கைச் செய்திருக்கிறார்.  "எந்த ஆதாரமும் இல்லாமல் இன்றைய மத்திய வங்கிகள் அச்சடிக்கும் பணத்திற்கும் திருட்டுத்தனமாக அச்சடிக்கப்படும் கள்ள நோட்டிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.  இதைச் சொல்வதற்கு எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை" என்றும் சொன்னவர் மாரிஸ் அலைஸ்.

இந்தப் பொருளியல் நிபுணரின் கூற்றுப்படி, உலகப் பொருளாதாரத்தைச் சீர்படுத்த வேண்டுமென்றால், இன்றைய நடைமுறைப் பொருளியலின் அடிப்படையிலிருந்து மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.  அவ்வாறு மாற்றங்கள் செய்யப்பட்டு, சீர்திருத்தங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டால், உலகப் பொருளாதாரத்தின் இயங்குதளமாக இருப்பது இஸ்லாமியப் பொருளியலாக இருக்கும்.


தொடரும், இன்ஷா அல்லாஹ்
SOURCE - SATHYAMARGAM