Tuesday, August 2, 2011

அரசியல் பயங்கரவாதம்: நார்வேஜியன் படுகொலை,அமெரிக்க ஊடகங்கள் மற்றும் இஸ்ரேல்



" எனவே நாம் நம் இஸ்ரேலிய சகோதரர்களுடன் இணைந்து போரிடுவோம் சியோனிச சக்திகளுக்கு கைகொடுப்போம்.சியோனிச எதிர்பாளர்களையும் முஸ்லிம்களையும் மாக்சியவாதிகளையும் எதிர்போம் " - அண்டெர்ஸ் பிரிவிக் இன் அறிக்கை     

ஜூலை 22 இல் நோர்வேயில் ஒஸ்லோ நகரில் இடம்பெற்ற கார் குண்டுத்தாக்குதலில் 8 பேரும்,இது நடந்து 20 நிமிடங்களில் ஒடேயோ ( utoeya island ) தீவுகளில் இடம்பெற்ற துப்பாக்கி தாக்குதலில் 68 பேர் இறந்தனர்.இவற்றை செய்த கொடூரனின் அறிக்கையில் உள்ள ஒரு வாசகமே மேலே தரப்பட்டுள்ளது.

மாஸ் மீடியா மற்றும் வலதுசாரி பயங்கரவாத எழுச்சி

முதல் தரமான ஆங்கில பத்திரிகைகளான The New York Times,Wall Street Journal,The Washington Post,The Financial Post மற்றும் ஒபாமா போன்றோர் இது " இஸ்லாமிய பயங்கரவாதிகளின் வேலை " என தமது பழக்கப்பட்ட வார்த்தையை பிரயோகித்தன. இந்த பத்திரிகைகள் இந்த தாக்குதலை " Norway's 9/11 " என செய்தி வெளியிட்டது.இப்படி செய்திகளை வெளியிட்டு இந்த சியோனிச கொலைகாரனின் நடவடிக்கைகளை இவர்கள் சிந்தனைரீதியாக ஊக்குவித்ததல்லாமல் அவனின் நடவடிக்கைகளை இவர்கள் நியாயப்படுத்தவும் செய்தனர்.ஜூலை 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் The Financial Times முதல் பக்கத்தில் இஸ்லாமிய தீவிரவாத அச்சம்: 2005 இன் பின் மோசமான ஐரோப்பிய தாக்குதல் என பிரசுரித்தது.மேலும் ஒபாமாவும் தமது பங்குக்கு இந்த தாக்குதலை கண்டித்து தாம் மேற்கொள்ளும்  இஸ்லாமிய நாடுகளின் மீதான தாக்குதலை நியாயப்படுத்தினார்.போலிஸ் சீருடையில் ஒரு நோர்வே நபர் கைது என நோர்வே பத்திரிகைகள் செய்தி வெளியிட்ட போதிலும் அமெரிக்காவின் பத்திரிகைகளோ இதற்கு இஸ்லாமிய தீவிரவதிகள்தான் காரணம் என செய்தி வெளியிட்டது.

 இவர்களின் இந்த நடவடிக்கைகள் தெளிவாக உணர்த்துவது என்னவென்றால் இந்த குண்டுத்தாக்குதல் மற்றும் படுகொலையை பயன்படித்தி அமெரிக்காவின் வெளிநாட்டு ஆக்கிரமிப்புகளை நியாயப்படுத்த முயற்சிக்கின்றன இந்த அமெரிக்க ஊடகங்கள்.தற்போது ஆரம்பித்திருக்கும் வலதுசாரி தீவிரவாதத்தின் நடவடிக்கைகளை அமெரிக்க ஊடகங்கள் இஸ்லாமிய விரோத கருத்துக்களை செய்திகளை பரப்புவதன் மூலம் மூடிமறைக்க பார்க்கின்றன.

நோர்வே பொலிசாரால் ஒரு நோர்வே நபர் கைது செய்யப்பட்டு அந்நபர் ஒரு புதிய பாசிச தீவிரவாத என கண்டுகொண்ட பின் மேற்கத்தைய ஊடகங்கள் அச்செய்தியை இவ்வாறே வெளியிட்டது," Alone Wolf Assasin Who Acted Alone " (BBC July 24 2011),ஏனைய ஊடகங்களோ அவனை ஒரு புத்தி சுவாசீனம் அற்ற நபராகவே காட்டதுடித்தன.அவனை இந்த செயலை செய்ய சிந்த்தனைரீதியாக ஊக்குவித்த அமெரிக்க ஐரோப்பிய இஸ்ரேலிய சியோனிச வழிகாட்டிகளை மறைக்க துடித்தன.இதில் இன்னொரோ வேடிக்கை என்னவெனில் ஒரு புத்திசுவாதீனம் அற்ற ஒரு நபரால் இத்தகைய சிக்கலான திட்டமிட்ட தாக்குதலை மேற்கொள்ள முடியுமா என்று கூட இந்த மேற்கத்தைய ஊடகங்களுக்கு  தெரியவில்லைபோலும்.

இந்த ஆண்டர்ஸ் பிரிவிக் என்ற கொலைகாரன் தீவிர வலதுசாரிக் கட்சி ஒன்றின் உறுப்பினராக இருக்கிறான் மேலும் நவ நாசி இணையத்தளம் ஒன்றின் ஒருங்கினைப்பாலராகவும் பங்காளியாலராகவும் இருக்கிறான்.
இவன் நோர்வேயின் ஆளும் தொழிலாளர் கட்சி மீது தனது வெறுப்பை அடிக்கடி வெளிக்காடுபவனாக இருந்தான்.இதற்கு காரணம் ஆளும் கட்சி குடியேறியவர்கள் மீது காட்டும் சகிப்புத்தன்மையே ஆகும்,அதிலும் முஸ்லிம்களின் மீது தனது அதிக வெறுப்பை காட்டுபவனாக
இருந்தான்.இதற்கு தக்க உதாரணம் இஸ்ரேல் பாலஸ்தினியர்கள் மீது மேற்கொள்ளும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருந்தான்.
அவன் செய்த இந்த குற்றத்துக்கு பின்னணியில் பரந்துபட்ட அரசியல் நோக்கம் உள்ளது என்பது தற்போது நிரூபணமாகிறது.இந்த மேற்கத்தைய ஊடகங்கள் அவசரமாக இதற்கும் இஸ்லாமிய விரோத கருத்துக்களை பரப்பும் சியோனிசவாதிகலான Daniel Pipes, David Horowitz, Robert Spencer and Pamela Geller மற்றும் டச்சு தீவிர வலதுசாரியான Geert Wilders  போன்றோருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என செய்திகளை வெளியிட்டன.

ஒஸ்லோ நகரில் தாக்குதல் நடந்து இருபது நிமிடத்திலே ஒடேயா தீவுகளில் துப்பாக்கித தாக்குதல் நடந்துள்ளது.இங்கு குறிப்பிட வேண்டிய விடயம் என்னவென்றால் ஒஸ்லோ நகரிளிருந்தி வெறும் இருபது நிமிட தூரத்தில் உள்ள குறித்த தீவுகளுக்கு போலீசார் வந்தது சுமார் ஒன்றரை மணித்தியாலம் தாண்டியே ஆகும்.இந்த தாமதம் கொலையுண்டவர்களின் எண்ணிக்கையில் நிச்சயமாக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

நோர்வே அரசுக்கு ஆப்கானுக்கு தமது படையை அனுப்ப முடியுமென்றால் உலகம் முழுவதும் ஆறு இடங்களில் உள்ள தமது விமானப்படை தளங்களிலிருந்து லிபியாவின் மீது குண்டு மழை பொழிய  முடியுமேன்றால் ஏன் அவர்களால் தமது நாட்டுக்குள் வெறும் 20 நிமிட பயணத்தை மேற்கொள்ள  ஒரு படகொன்றை தேடிப்பிடிக்க முடியவில்லை,ஏன் ஒரு ஹெலிகாப்டர் அவர்களின் கைவசம் இருக்கவில்லை ஏன் அவர்களால் தமது நாட்டுக்குள் வளர்ந்து தற்போது விருட்சமாகியுள்ள வலதுசாரி தீவிரவாதத்தை கண்ணடுபிடிக்க முடியவில்லை ? 

இங்கு தெளிவாகும் ஒரு விடயம் என்னவெனில் நோர்வேயும் மற்ற ஸ்கேன்டிநேவிய நாடுகளும் அமெரிக்க ஏகாதிபத்திய சிலுவைவீரர்களுடன் இணைந்து முஸ்லிம் விரோத நடவடிக்கைகளில் இறங்கவேண்டும் என ஊக்கமளித்து தூண்டக்ககூடிய வளதிசாரி தீவிரவாதத்தின் நடவடிக்கையே இது என்பதாகும்.

இந்த கொலைகாரன் பிரதிநிதித்துவப்படுத்தும் " The Progress Party " நோர்வேயில் இரண்டாவது பெரிய கட்சியாகும்.ஒருவேளை வரும் தேர்தலில் ஆளும் கட்சியை தோற்கடித்து இந்த நவ பாசிச கட்சி ஆட்சிக்கு வந்தால் நிலைமை மிக மோசமாக மாறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

                                  ஒரு பாசிச அரசாங்கத்தின் நடவடிக்கைகள்.




No comments:

Post a Comment