Saturday, October 29, 2011

சுல்தான் மான்ஸா மூஸா - ஹஜ் பிரயாணத்தால் அறியப்பட்ட மாலி சுல்தான்.

மான்ஸா  மூஸா
மான்ஸா மூஸா என பொதுவாக அழைக்கப்படும் முதலாம் மூஸா ஆப்ரிக்க கண்டத்தின் மாலி இராஜதானியின் பத்தாவது மான்ஸா ஆவார்.மான்ஸா என்றால் மாலி மொழியில் அரசருக்கெல்லாம் அரசர் என்று பொருள்.அந்தக் காலத்தில் இருந்த மிகவும் செல்வம் படைத்த அரசர்களின் மூசாவும் ஒருவர்.

சுல்தான் மான்ஸா மூஸா  மாலி இராஜதானியை நிறுவிய அரசர் சுன்ஜாடாவின் பேரராவார்.மாலியை 1312 முதல் 1337 வரை 25 ஆண்டுகள் சீரும் சிறப்புமாக ஆண்டு வந்தார்.இவரின் இந்த 25 வருட ஆட்சி மாலியின்  பொற்காலமாக வருணிக்கப்படுகிறது.சுல்தானின் பாட்டனார் சுன்ஜாடா மாலி இனத்தை பிரதிபலிக்கும் ஒரு இராஜ்ஜியத்தை  நிறுவினார்,ஆனால்  மூஸா அவர்களோ இஸ்லாத்தை பிரதிபலிக்கும் ஒரு ராஜ்ஜியத்தை  நிறுவ பாடுபட்டார்.சுல்தான் மான்ஸா மூஸா தனது ஹஜ்ஜை 1324 இல் நிறைவேற்றினார்.சுல்தான் மான்ஸா மூஸா அவரது ஹஜ் பிரயாணம் சம்பந்தமாக மிகவும் பிரசித்தி பெற்றவர்.நம் சகோதரர்கள் பலர் அறிதிராத அந்த வரலாற்று உண்மை பற்றி இப்போது பார்ப்போம்.

சுல்தான் மான்ஸா மூஸா அவரது ஹஜ் பிரயாணம் சம்பந்தமாக மிகவும் அறியப்பட்டவர்.மான்ஸா மூஸா ஒரு நல்ல முஸ்லிமாக இருந்தார்.அவரின் ஹஜ் பிரயாணம் அவரை வடக்கு ஆப்ரிக்காவிலிருந்து மத்திய கிழக்கு வரை அறிமுகப்படுத்தியது.அவர் அல்லாஹ்வையும் நபிமார்களையும் குரானின் வசனகளையும் ஆழமாக நம்பினார்.அவரை பொறுத்தவரை மத்திய தரைக் கடலின் கிழக்கு  பிராந்தியத்தில் கலாச்சாரத்துக்கு  ஒரு அடிக்கல்லை நாட்டியது இஸ்லாமே.சுல்தான் மான்ஸா மூஸா தனது இராஜ்ஜியத்தில் இஸ்லாத்தை பரவுவதற்கும் வளரப்பதட்கும் அதிக காலத்தை செலவிட்டார்.


சுல்தான் மான்ஸா மூஸாவின்  ஹஜ் யாத்திரை கி.பி.1324 இடம்பெற்றது.அக்காலங்களில் மாலியிலிருந்து கைரோ ஊடாக புனித மக்கா நகரத்தை அடைய கிட்டத்தட்ட இரு வருடங்கள் பிடிக்கும்.ஒரு சக்திவாய்ந்த அரசரோன்றாலே தனது நாட்டை விட்டு இப்படி அதிக காலம் வெளியில் இருக்க முடியும்.சுல்தான் மான்ஸா மூஸா சக்திவாய்ந்த அரசர் என்பதை விட மக்களால் அதிகம் நேசிக்கப்பட்டவர்.அதனாலே யாரும் அவரது அரியணையை குறுக்கு வழியில் அடையவில்லை.

மாலி இராஜ்ஜியம்

சுல்தான் மான்ஸா மூஸாவின் ஹஜ் பிரயாணக் குழுவில் 60000 ஆண்களும் 12000 அடிமைகளும் தங்க வேலை செய்பவர்களும் மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட குதிரைகளும் அடங்கியிருந்தது.மூஸா அவர்கள் பிரயாணக் குழுவின் அனைத்து விதமான தேவைகளையும் நிறைவு செய்தார்.அதுபோல் பிரயாணக் குழுவில் 80 ஒட்டகங்கள் தங்கத்தை சுமந்து செல்ல பயன்பட்டது.இந்த ஒவ்வொரு ஒட்டகங்களும் கிட்டத்தட்ட 50 பவுன்க்கும் 300 பவுன்க்கும் இடைப்பட்ட தங்கத்தை சுமந்து சென்றதாக பல்வேறு அறிக்கைகள் மூலம் தெரிய வருகிறது.சுல்தான் மான்ஸா மூஸா அவர்கள் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் ஒரு பள்ளிவாசல் வீதம் உருவாக்கியதாகவும் கூறப்படுகிறது.

சுல்தான் மான்ஸா மூஸாவின் ஹஜ் பிரயாண ஊர்வலம்  நைஜெர் நதியோரமாக சென்று மேமா,வாலாட்ட,தஹாசா நகரங்களினூடாக டுஆட் நகரத்தை அடைந்தது.டுஆட் நகரம் மத்திய ஆப்ரிக்காவில் மிக முக்கிய வியாபார கேந்திரஸ்தானமாக விளங்கிவந்தது.மான்ஸா மூசாவின் பயணம் அவருடன் பயணம் செய்த பலரால் நேரில் பார்த்து ஆவணப்படுத்தப்பட்டது.
சுல்தான் மான்ஸா மூசாவின் ஹஜ் பாதை.1324 
ஹஜ் பிரயாணத்தின் போது பயன்பட்ட கொடி.

சுல்தான் மான்ஸா மூஸா அவர்கள் எகிப்தை அடைந்த போது எகிப்து மம்லூக்கிய சுல்தான் அல் நாஸிர் முஹம்மதின் ஆட்சியின் கீழ் இருந்தது.
எகிப்தில் சுல்தான் மூஸா மூன்று மாதத்துக்கு கூடாரம் அடிக்க முன் சுல்தான் நாசிருக்கு 50000 தீனார்களை அனுப்பி வைத்தார்.அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் எகிப்து சுல்தான் கோடைக் காலங்களில் தனது அரண்மனையை மான்ஸா மூஸாவுக்கு வழங்கினார்.மேலும் மூஸா அவர்களின் ஹஜ் பரிவாரத்தின் தேவைகளையும் சரிவர கவனித்தார்.சுல்தான் மூஸா எகிப்து வியாபாரிகளிடம் பொருள்களை வாங்க தங்கக் கட்டிகளை வழங்கினார்.இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட எகிப்து வியாபாரிகள் சுல்தான் மூஸாவுக்கு பொருள்களை சாதாரண விலையிலும் பார்க்க ஐந்து மடங்கு அதிகமான விலையிலே விற்றார்கள்.இதனால் தங்கத்தின் விலை எகிப்தில் பாரிய அளவில் வீழ்ச்சியுற்றது.ஒரு தனி மனிதனால் தங்க விலை கட்டுப்படுத்தப்பட்ட வரலாறு சுல்தான் மான்ஸா மூசாவின் ஹஜ் பிரயாணத்தின் போதே இடம்பெற்றது.


சுல்தான் மூஸா இஸ்லாத்தின் மீது தீவிர பற்று கொண்ட ஒருவராக இருந்தார்,ஆனால் அவர் ஒரு துறவியல்ல.மான்ஸா மூசாவின் பேரரசுக்கு ஆப்ரிக்க உலகில் ஒரு தனி மரியாதையும் அச்சமும் இருந்தது.சுல்தான் மான்ஸா மூசாவின் ஹஜ் பயணம் மாலியில் இஸ்லாம் வளர பாரிய அளவில் கைகொடுத்தது.மாலியில் வளர்ந்த இஸ்லாம் ஆப்ரிக்காவினூடாக ஐரோப்பாவிலும் பரவ சுல்தானின் அந்த ஹஜ் பயணமே கைகொடுத்தது.அவரின் ஹஜ் பயணம் பற்றி முஸ்லிம்களாலும் முஸ்லிம் அல்லாதவர்களாலும் கண்காணிக்கப்பட்டது அவை பல பதிவுகளாக இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.Very Special Thanks TO

WWW.WIKIPEDIA.COM
WWW.ONISLAM.கம
கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டவும்.
உங்கள் நண்பன் 
எம்.ஹிமாஸ் நிலார்


No comments:

Post a Comment