Wednesday, October 5, 2011

பலஸ்தீனிலிருந்து மக்கா வரை - வரலாற்றுப் பார்வை.

From Palestine to Makkah (Historical Glance)




Onislam.com இணையத்தளத்துக்கு மஸ்ஜிதுல் அக்சாவின் இமாம் Sheikh Yousef Juma Salama  வழங்கிய  பேட்டியின் தமிழ் வடிவம்.



 ஹஜ் என்பது இஸ்லாத்தில் மிக முக்கியமான ஒரு கடமையாகும்.பாலஸ்தீன் என்பது அல்லாஹ்வின் தூதர்களின் தொட்டிலாகும் ஏனெனில் குர்ஆனில் கூறப்பட்டுள்ள பல நபிமார்கள் பாலஸ்தீனுடன் தொடர்புபட்டவர்கலாகவே உள்ளனர்.எல்லாவற்றுக்கும் மேலாக உலகில் இதவரை நடந்த இனிமேல் நடக்காத உலக மகா உச்சி மாநாடு பலஸ்தீனிலே இடம்பெற்றது.அதுதான் எங்கள் கண்மணி நாயகம் றசூலே கரீம் முஹம்மத் (ஸல்) அவர்களின் தலைமையில் உலகில் அதுவரை அனுப்பப்பட்ட அனைத்து நபிமார்களுக்கும் தொழுவிக்கப்பட்ட தொழுகையாகும்.இதைப் போல் ஒரு கண்ணியமான ஆன்மீகமான ஒரு உயர்ந்த மாநாடு உலகில் நடந்திருக்குமா ? நிச்சயமாக இல்லவே இல்லை.

கண்மணி நாயகம்(ஸல்) அவர்களின் கூற்றுப்படி உலகில் நன்மையை நாடி புனிதப் பிரயாணம் செய்ய தகுதிவாய்ந்த அனுமதிக்கப்பட்ட பள்ளிவாயகள்  மூன்று அதில் ஒன்று தான் ஜெருசலத்தில் உள்ள மஸ்ஜிதுல் அக்ஸா.நபியவர்கள் தனது உம்மத்துக்கு பரிசாகப் பெற்றுவந்த தொழுகையின் முதல் கிப்லா மஸ்ஜிதுல் அக்ஸாவே.அந்த உயர்ந்த பரிசைப் பெற அவர்களின் பயணம் துவங்கிய இடமும் மஸ்ஜிதுல் அக்ஸாவே.இந்த கண்ணியமான சிறப்புக்களை பெற்ற புனித மஸ்ஜிதுல் அக்ஸா உள்ள பூமியே இன்றைய பலஸ்தீன்.ஆகவே பலஸ்தீனும் அங்குள்ள மக்களும் முஸ்லிம் உம்மத்தின் ஒரு பகுதியே.


உஸ்மானியா ஆட்சியின் போது ஹஜ்.

பலஸ்தீனில் ஹஜ் என்பது பல்வேறுபட்ட கட்டங்களையும் தடைகளையும் கொண்டது.200 ஆண்டுகளுக்கு முன் ஒன்றுபட்ட கிலாபத்தில் சிரியா,லெபனான்,ஜோர்டான் போன்ற பகுதிகளிலிருந்து ஹஜ்ஜுக்கு போகும் ஹாஜிகள் டமஸ்கஸ் நகரில் ஒன்று சேர்ந்து மஸ்ஜிதுல் அக்சாவுக்கு வந்து அங்கிருந்து பலஸ்தீன பூமியிலிருந்து ஹஜ்ஜுக்குச் செல்லும் ஹாஜிகளையும் ஒன்றாக சேர்த்துக் கொண்டு புனித மக்கா நோக்கி தமது பிரயாணத்தை மேற்கோள்வார்கள்.

 புனித மக்கா நோக்கிப் போகும் இந்த பயணத்துக்கு அப்பிராந்திய ஆளுநர்கள் அல்லது கலீபாவால் நியமிக்கப்படும் ஒரு அமீர் தலைமைதாங்குவார்.இந்த பிரயாணக் கூட்டத்தில் பாதுகாப்பு ஊழியர்கள்,சமையல்கார்கள் மற்றும் வைத்தியர்கள் என்போரும் அடக்கம்.மேலும் பயணத்தின் போது களைப்பை உணராமல் இருக்க இஸ்லாமிய மணம் கமழும் வாக்கியங்கள் கொண்ட கவிதைகள் படிக்க ஒரு குழுவினரும் செல்வார்கள்.

 உஸ்மானியா கிலாபத்தின் போது பலஸ்தீனிலிருந்து மக்காவரை உள்ள தூரத்தை வந்து முடிக்க கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் செல்லும்.இப்படிப்பட்ட மிக நீண்ட பயணத்துக்கு தேவையான அனைத்து வசதிகளையும் கிலாபத்துடைய நிர்வாகம் செய்து கொடுக்கும்,மிக முக்கியமான தேவையான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய கிலாபத்தின் ஒவ்வொரு பிராந்தியத்திலும் பாரிய கிணறுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்.


பிரித்தானிய ஆட்சியின் போது ஹஜ்.

முதலாம் உலகப் போரை தொடர்ந்து பலஸ்தீன் பிரித்தானிய ஆட்ச்சியின் கீழ் வந்ததுடன்,நிலைமை முழுமையாக மாறியது.முதலாவது அவர்கள் செய்தது மக்காவுக்கு ஒன்றாக பிரயாணம் செய்யும் பலஸ்தீன மக்களை பிரித்ததுதான்.

பிரித்தானிய ஆட்சியின் முதல் வருடத்தில் பலஸ்தீன உயர் இஸ்லாமிய கவுன்சில் ஹஜ் விவகாரங்களை நிர்வகிக்க பிரித்தானிய ஆட்சியால்  நியமிக்கப்பட்டது.இதன் பிறகு பலஸ்தீன் மூன்று மாகாணங்களாக பிரிக்கப்பட்டது.அவை வடக்கு,தெற்கு மற்றும் மத்திய பலஸ்தீன் என பெயரிடப்பட்டது.

வடக்கு பலஸ்தீன மக்கள் ஹஜ்ஜுக்குப் போகும் போது அவர்கள் ஹைபா புகையிரத நிலையத்தில் ஒன்று சேர்வார்கள்.ஹிஜாஸ் புகையிரதப் பாதை மக்கா,மதீனா,லெபனான்,பலஸ்தீன் மற்றும் சிரியா போன்ற நாடுகளை இணைக்கப் பயன்பட்டது.பீர்ஷேபா மற்றும் காசா மக்கள் ஹஜ்ஜுக்காக சுயஸ் புகையிரதப் பாதையை பயன்படுத்தப் பணிக்கப்பட்டனர்.அந்தக் காலங்களில் மக்காவுக்கு சுயஸ் காலவாயினூடாக சில கப்பல்களும் ஹஜ் பிரயாணிகளை ஏற்றிச்சென்றிருக்கின்றன.



இஸ்ரேலிய பலஸ்தீன ஆக்கிரமிப்பு.(1948 - 1967 )

1948 இல் பிரித்தானிய அரசின் பூரண உதவியின் கீழ் செயற்பட்ட யூத பயங்கரவாத குழுக்களால் 78 %  பலஸ்தீன வரலாற்றுப் பிரதேசங்கள் ஆக்கிரமிக்கப்பட பலஸ்தீன மக்களுக்கோஎஞ்சியது அவர்களின் சொந்த பூமியின் வெறும் 22 % மாத்திரமே.ஆக்கிரமிக்கப்படாமல் இருந்த மீதி பூமி மூன்று பகுதிகளாக பெயரிடப்பது.அவை காசா,மேற்கு கரை மற்றும் கிழக்கு ஜெருசலம் என்பனவாகும்.

காசா நகரில் ஹஜ்ஜை பொறுத்தவரை ஹஜ் பிரயாணிகள் பிரதேசத்தில் அங்கீகரிக்கப்பட்ட அலுவலகங்களில் பதிவு செய்யும் படி பணிக்கப்பட்டனர்.காசா மக்கள் காசாவிலிருந்து சுயஸ் வரை புகையிரதத்தில் சென்று அங்கிருந்து கப்பலில் புனித மக்காவுக்கு பிரயாணம் செய்து வந்தனர்.
ஹிஜாஸ் ரயில்வே 


தனித்துவமான கலாச்சார மரபுகள்.

1948 முதல் 1967 வரை காசா எகிப்து ஆட்சியின் கீழ் இருந்தது.ஒரு மாதத்துக்கும் மேற்பட்ட காலம் கொண்ட ஹஜ் பிரயாணத்தை மேற்கொள்ள காசா மக்களுக்கு பாரிய கஷ்டமாக இருந்தது.இதன் போது ஹஜ் பிரயாணத்தை மேற்கொள்ளும் நபருக்கு அவர்களின் நண்பர்கள் உறவினர்கள் தம்மால் இயன்ற அளவு உதவி செய்வார்கள்.இதன் பிற்பாடு ஹஜ் செய்தவர் பயணத்தை முடித்துக் கொண்டு வந்த பின்னர் அந்த உறவினர் நண்பகல் தந்த பணத்தை பரிசு வடிவில் திருப்பிக் கொடுப்பார்கள்.

காசா பகுதியில் ஹஜ் காலங்களில் இன்னுமொரு விஷேட பழக்கம் காணப்பட்டது.ஹஜ் பிரயாணம் மேற்கொள்ளும் நபரின் உறவினர்கள் நண்பர்கள் மற்றும்  அயலவர்கள் குறித்த நபரின் வீட்டில் ஒன்று கூடி இஸ்லாம் சம்பந்தமான ஹஜ் சம்பந்தமான கவிதைகளை படிப்பார்கள்.


1967 க்குப் பின் ஹஜ்.

  1967 இன் பின் காசா மக்களின் ஹஜ் தேவைகள் ஜோர்டான் மூலமே நிறைவேற்றப்பட்டது.ஹஜ்ஜுக்காக ஜோர்டான் மூலம் பதிவு செய்யப்பட பின்னர்,ஜோர்டான் - இஸ்ரேல் எல்லையிலுள்ள Allenby Bridge என அழைக்கப்படும் King Hussein Bridge மூலம் இஸ்ரேலை கடந்த தரைவழியாகவே  மக்காவை அடைவார்கள்.


முதல் பலஸ்தீன ஆணையகம் (1994 - 2006)

1994 இல் பலஸ்தீன ஆணையகம் நிறுவப்பட்ட பின் நாம் காசா,மேற்கு கரை மற்றும் கிழக்கு ஜெருசலம் இணைந்த ஒன்றுபட்ட இறையாண்மையுள்ள ஒரு பலஸ்தீன தேச உருவாக்கத்துக்கு பாடுபட்டு வருகிறோம்.

எங்கள் நோக்கம் காசா,மேற்கு கரை மற்றும் கிழக்கு ஜெருசலம் ஆகிய பலஸ்தீன பூமியில் பாலஸ்தீனர்களுக்கு தற்போது எஞ்சியுள்ள பகுதிகளிலிருந்து ஹஜ்ஜுக்கு செல்லும் ஹாஜிகளை ஒன்றாக புனித மக்க கூட்டிச் செல்வதேயாகும்.மாஷா அல்லாஹ் எங்களால் அதை செய்ய முடிந்தது.நாங்கள் ஒன்றுபட்ட பலஸ்தீன மக்களாக முதன் முறையாக ஹஜ் செய்ய முடிந்தது.

1994 ஹஜ் காலங்களில் காசாவிலிருந்து ஹஜ்ஜுக்கு செல்பவர்கள் எகிப்தின் Arish International Airport லிருந்து செல்வார்கள்.மேற்கு கரை மற்றும் கிழக்கு ஜெரூசலப்பகுதிகளிளிருந்து ஹஜ்ஜுக்கு செல்பவர்கள் மக்காவுக்கு பஸ் மூலமே பயணம் மேட்கொல்வார்கள்.


இரண்டாவது பாலஸ்தீனிய இன்திபாதா (Second Intifada)

2000 ஆம் ஆண்டில் அப்போதைய சவுதி மன்னராக இருந்த பாஹ்த் பின் அப்துல் அசிஸிடம் நான் ஒரு கோரிக்கையை வைத்தேன்.கடந்த ஆண்டு ஹஜ் கடமையை நிறைவேற்ற முடியாமல் போன பலஸ்தீன மக்களுக்கு இம்முறை புனித ஹஜ்ஜை நிறைவேற்ற ஒரு சந்தர்பம் அளிக்குமாறும் அதற்கு நமக்கு 15000 பேரை கூட்டிக்கொண்டு வர அனுமதிக்குமாறும் கேட்டுக்கொண்டேன்.மாஷா அல்லாஹ் அதற்கு மன்னர் அவரது பூரண ஆதரவைத் தந்தார்.அல்லாஹ் அவரின் நல்ல செயல்களை பூரணமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அந்த வருடம் இரண்டாவது பலஸ்தீன எழுச்சியில் கொலைகார இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகளால் ஆயிரக்கணக்கான பலஸ்தீன இளைஞ்சர்கள் இறைவனடி சேர்ந்தனர்.இது அவர்களின் கொடும்பத்தினருக்கு பெரும் துன்பத்தை தேடிக்கொடுத்தது.எனவே பலஸ்தீன பூமிக்காக தம் இன்னுயிரை துறந்த போராளிகளின் குடும்பத்தினருக்கு ஹஜ் செய்ய ஒரு வாய்ப்புத் தருமாறு நான் மீண்டும் சவுதி மன்னர் பாஹ்த் பின் அப்துல் அசிஸிடம் ஒரு கோரிக்கையை வைத்தேன்.மாஷா அல்லாஹ் அதற்கும் அவர் அனுமதியை அவர் தந்தார்.இன்னும் ஆயிரம் பேருக்கான அனுமதியுடன் அவ்வருடம் மாஷா அல்லாஹ் 16000 ஹஜ் கடமையை பூர்த்தி செய்தோம்.

அந்த வருடம் இன்னுமொரு விஷேட சம்பவம் இடம்பெற்றது.ஹஜ்ஜுப் பெருநாளின் மறு நாள் நம்மை ஹஜ் விவகாரங்களுக்கான  சவுதி இளவரசர் நயேப் பின் அப்துல் அசிஸ் ( Nayef Ben Abdelaziz ) சந்தித்தார்.அப்போது அவர் பாலஸ்தீனத்திலிருந்து ஹஜ்ஜுக்கு வந்த 16000 பேருக்கும் தலா 1000 சவுதி ரியால்கள் வழங்கினார்.



ஒற்றுமைக்கு ஒரு சந்தர்ப்பம்.

நான் இந்த சந்தர்ப்பத்தில் பலஸ்தீன மக்களுக்கு ஒன்றை நினைவூட்ட விரும்புகிறேன்.இன்னும் சில நாட்களில் நாம் ஒரு கண்ணியமிக்க பேறுபெற்ற நாள் ஒன்றை சந்திக்க இருக்கிறோம்.அந்நாளில் நாம் காசா,மேற்குகரை,கிழக்கு ஜெருசலம் என பிரிவுகள் இன்றி ஒரு பலஸ்தீன மக்களாய் நமக்கு இருக்கும் பொது எதிரியை தோற்கடிக்க ஒன்றுபடுவோம்.
ஒற்றுமை என்பது முஸ்லிம்களுக்கு முக்கியமான ஒரு மார்க்க  கடமை என்பதை நினைவூட்டிகிறேன்.

அஸ்ஸலாமு அழைக்கும் வறாஹ்மதுல்லாஹி வபரகாத்துகு.

Sheikh Yousef Juma Salama with Onislam.net's correspondent.




இது ஒரு மொழிபெயர்க்கப்பட்ட கட்டுரையாகும்.தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டவும்.
VERY SPECIAL THANKS TO ONISLAM.COM
HIJAZ RAILWAY PHOTO FROM WIKIPEDIA.COM

உங்கள் நண்பன் 
ஹிமாஸ் நிலார்.




No comments:

Post a Comment