Friday, October 7, 2011

சிர்ட்டே நகரில் நடக்கும் படுகொலைகள்

  அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ்தலைமையிலான நேட்டோ நாடுகள் லிபிய நகரமான சிர்ட்டேயில்கொடூரமான யுத்த குற்றங்களில் ஈடுபட்டுள்ளன. வடஆபிரிக்கநாட்டில் எஞ்சியிருக்கும் அனைத்து எதிர்ப்புகளையும்நசுக்கும் அவற்றின் வெறித்தனமான முனைவில், நேட்டோவும்தேசிய இடைக்கால சபையோடு அணிதிரண்டிருக்கும் அதன்கைப்பாவை போராளிகள் படையும் பொதுமக்களைக் கொன்றும், நகர்புற மையங்கள் முழுவதிலுமுள்ள கட்டிடங்கள்மற்றும் உள்கட்டமைப்பை அழிக்கும் கண்மூடித்தனமானஇராணுவ பலத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.
அந்தமுற்றகையிலிருந்து தப்பித்து வந்த பல அகதிகள், நேட்டோகுண்டுகளால் பள்ளிகள், மருத்துவமனைகள், வீடுகள், மற்றும்குடிமக்களின் ஏனைய கட்டிடங்களையும் அழிக்கப்பட்டதைப் பார்த்ததாக தெரிவித்துள்ளனர். வான்வழிவேட்டை தற்போது நாள்முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது. கடாபிக்குஎதிரான போராளிகள், 100,000 மக்கள்வாழும் நகருக்குள் போலியாகக்கூட தாங்கள்இன்ன இலக்குகளைக் குறிவைத்து தாக்குகிறோம் என்று தெரியாமல், ராக்கெட்களையும், பீரங்கிகுண்டுகளையும், மோர்ட்டர்வெடிகுண்டுகளையும் வீசி வருகின்றனர். மனிதாபிமானநெருக்கடியை இன்னும் அதிகமாக தூண்டிவிடுவதைப் போல, உணவுப்பொருட்கள், தண்ணீர், மருத்துவப்பொருட்களின்கடுமையான பற்றாக்குறையால் சிர்ட்டே பாதிக்கப்பட்டுள்ளது. முக்கியமாககுழந்தைகளும், வயதானவர்களும், காயப்பட்டமற்ற மனிதர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்

உலக மகா கொலைகாரர்கள் 
 அமெரிக்கஜனாதிபதி பராக் ஒபாமா, பிரெஞ்சுஜனாதிபதி நிக்கோலாசார்க்கோசி, மற்றும்பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் கேமரூன் ஆகியோரால்முன்னெடுக்கப்பட்ட ஆட்சி-மாற்றபிரச்சாரத்திற்கு பின்னால் இருக்கும் சூறையாடும் பொருளாதார மற்றும் பூகோளமூலோபாய கணிப்பீடுகளையே இந்த வன்முறை எடுத்துக்காட்டுகிறது. வடஆபிரிக்காவில்அவற்றின் ஆதிக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்வதோடு, அண்டைநாடுகளானஎகிப்து மற்றும் துனிசியாவில் எழுந்துள்ள புரட்சிகரஎழுச்சிகளால் அவர்களின் நலன்களுக்கு எதிராக முன்நிற்கும் சவாலை எதிர்கொள்ளும் அதேவேளையில், லிபியாவின்இலாபகரமான எண்ணெய்வளங்களின்மீதுகட்டுப்பாட்டைக் கைப்பற்றுவதும் வாஷிங்டன் மற்றும் அதன்ஐரோப்பிய கூட்டாளிகளின் நோக்கமாகும்.
சிர்ட்டேயில்நடக்கும் படுகொலைகள், “மனிதாபிமான" வேஷத்தில்நடக்கும் யுத்தத்தை இன்னும் கூடுதலாக அம்பலப்படுத்திஉள்ளது. கடாபியின் துருப்புகள் பெங்காசியில்படுகொலையில் ஈடுபடக்கூடிய நிலையில் இருப்பதாக, எவ்விதஆதாரமும் இல்லாமல், கடந்தமார்ச்சில் ஏகாதிபத்திய அரசாங்கங்களும், அவர்களுக்காகவக்காலத்துவாங்குபவர்களும்ஊடகங்களில் முறையிட்டனர். இப்போதுசிர்ட்டேயில், கடாபிஆதரவாளர்களின் இரும்புப்பிடியில்இருக்கும் கடைசி ஒரு நகரின் எதிர்ப்பைக் கடந்துவரும்ஒரு முயற்சியில், உண்மையில்நேட்டோ தான் அந்நகரின் மக்கள்மீது இரத்தக்குளியல்நடத்திக் கொண்டிருக்கிறது.
பொதுமக்களைக்காப்பாற்றுவதற்காக" என்றபெயரில் யுத்தத்தை ஆதரித்த அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலுள்ள பல ஊடக மேதாவிகளும், அரசியல்பிரமுகர்களும், இப்போதுஆச்சரியத்திற்கிடமில்லாதவிதத்தில், கட்டவிழ்ந்துவரும்தாக்குதல்களுக்கு மத்தியில், ஒன்றிணைந்து மௌனமாக உள்ளனர். பேராசிரியர்ஜூவான் கோல் போன்ற "இடதுகள்" என்றழைத்துக்கொள்ளும் பலரும் மற்றும்Nation இதழும்கூட அதில் உள்ளடங்கும்.
தேசியஇடைக்கால சபையால் முன்னதாக வெளியிடப்பட்ட மதிப்பீடுகளின்படி, செப்டம்பர்தொடக்கத்தில் 30,000 மக்கள்யுத்தத்தில் கொல்லப்பட்டிருந்தனர், 50,000 பேர்காயமடைந்திருந்தனர். இந்தஎண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேட்டோவால்பகிரங்கமாக அறிவிக்கப்பட்ட புள்ளிவிபரங்களின்படி, அவர்களின்குண்டுதாரிகள் செப்டம்பரின் கடைசி இரண்டு வாரங்களில்மட்டும் ஷெர்டியில் அதிகளவாக 121 பிரத்யேக "முக்கியதாக்குதல்களை" நடத்தியுள்ளனர். இந்த வான்வழிதாக்குதல்கள் உளவுத்துறையின் குறைந்தபட்ச விபரங்களின்அடிப்படையிலோ அல்லது முற்றிலுமாக உளவுத்துறையின் விபரங்களேஇல்லாமலோ நடத்தப்பட்டுள்ளன. ஆகவே இவற்றைசர்வதேச விதிக்களுக்கு முற்றிலும் விரோதமானவையாக, கண்மூடித்தனமானவையாககருத முடியும்.
துல்லியமானஎண்ணிக்கை தெரியாத போதினும், ஆயிரக்கணக்கானபொதுமக்கள் சிர்ட்டேயில் சிக்கியுள்ளனர். செஞ்சிலுவைசங்கத்தின் கருத்துப்படி, சுமார் 18,000 பேர்அந்நகரை விட்டு வெளியேறியுள்ளனர். எவ்வாறிருந்தபோதினும், சுற்றுப்புறங்களில்இருந்து வரும் அகதிகளின் சமீபத்திய உள்வரவால், உள்ளூர்மக்களின் எண்ணிக்கை பெருகியுள்ளது. இதில்தவார்காவிலிருந்து வந்த கறுப்புநிற குடும்பங்களின்ஒரு கணிசமான எண்ணிக்கையும் உள்ளடங்கும். அந்நகரம்ஆகஸ்டிலும், செப்டம்பர்தொடக்கத்திலும் தேசிய இடைக்கால சபையின் போராளிகளால் நடத்தப்பட்ட ஒரு கொடூரமான இனப்படுகொலையால் நாசமாக்கப்பட்டது; அப்போதுஅங்கிருந்து மக்கள் இடம் பெயர்ந்தனர்.
சிர்ட்டேமக்கள் தேசிய இடைக்கால சபை மற்றும் நேட்டோ தலையீட்டிற்கு கசப்பான மற்றும் தீர்க்கமானஎதிர்ப்பைக் காட்டியதற்காக, அவர்கள்ஒட்டுமொத்தமாக இந்தவொரு காட்டுமிராண்டித்தனமானதண்டனைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். அந்நகரம்பதவியிறக்கப்பட்ட ஆட்சிக்கு அடையாளச் சின்னமாகவும்விளங்குகிறது. கடாபியின்பிறந்த இடமான அங்கே, குழந்தைபருவத்தில்அவர் வளர்ந்த வீடும், அவருடையமுன்னாள் சட்டவாக்க அமைப்பான மக்கள் பொதுச்சபையும் (General Peoples Congress)  சிர்ட்டேயில் கூடுவது வழக்கம்.  
அமெரிக்கா, பிரிட்டிஷ், பிரெஞ்ச்அரசாங்கங்களைப் பொறுத்த வரையில், இந்த அழிப்புஒட்டுமொத்த லிபிய மக்களுக்கும் காட்டப்படும் ஒரு எச்சரிக்கையாக இருந்து உதவுகிறது. அதாவதுநேட்டோ கண்காணிப்பின்கீழ்உருவாக்கப்படும் கடாபிக்குப் பிந்தைய அரசியலமைப்பிற்குக்காட்டப்படும் எவ்வித எதிர்ப்பும், கடுமையானஒடுக்குமுறையை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும் என்பதற்கு இதுவோர் எச்சரிக்கையாகும்.
ஷெர்டியில்நிலவும் நிலைமைக்கும், 2004 நவம்பர்-டிசம்பரில்ஈராக் நகரமான ஃபாலுஜாஹில் நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமானஅமெரிக்க தாக்குதலுக்கும் இடையில் நிச்சயமாக ஓர் ஒற்றுமை இருக்கிறது. சுமார் 10,000 அமெரிக்கதுருப்புகளும், கடற்படையும்வீடுகள், தொழிற்சாலைகள், மசூதிகள்என பாகுபாடின்றி குண்டுகளை வீசி, 250,000 மக்கள்வாழ்ந்த அந்நகரை தரைமட்டமாக்கின. அந்தநடவடிக்கை, ஒட்டுமொத்தஈராக்கிய மக்களையும்பயமுறுத்தும் விதத்தில், சட்டவிரோதஆக்கிரமிப்பிற்கு எதிராக எழுந்த சன்னி கிளர்ச்சியைநசுக்க நோக்கம் கொண்டிருந்தது. இப்போதுசிர்ட்டேயில் நடப்பதைப் போலவே, ஃபாலுஜாஹில்நடந்த மோதலும் ஒருயுத்தம் அல்லது போர் போல் அல்லாது ஒரு ஒட்டுமொத்தமான படுகொலையாக இருந்தது. அதில்மிகவும் குறைந்த எண்ணிக்கையோடு, பலவீனமானஆயுதங்களைத் தாங்கியிருந்த எதிர்ப்பு போராளிகளின் ஒருகுழுவை, உலகின்மிகவும் பேரழிவுமிக்க, தொழில்நுட்பரீதியாகமிகநவீன தரைப்படை மற்றும் விமானப்படை துருப்புகள்வெற்றி கொண்டன.
இறுதிகட்டத்தில் இருப்பதாக காணப்படும்லிபிய யுத்தத்தில் நேட்டோவின் நடத்தை, சந்தேகத்திற்கிடமின்றி, மத்தியகிழக்குமுழுவதிலும் உள்ள அரசாங்கங்களுக்கும்சர்வதேச அளவிலும் ஒரு தகவலை அனுப்ப நோக்கம் கொண்டிருக்கிறது. மார்ச்சில், சார்க்கோசிஇதை உறுதியான மொழிகளில் தெளிவுபடுத்தி இருந்தார். அவர் கூறியது: சர்வதேசசமூகத்தின் மற்றும் ஐரோப்பாவின் பிரதிபலிப்பு இந்த சந்தர்ப்பத்திலிருந்துஒவ்வொரு கணமும் ஒரேமாதிரியாக தான் இருக்குமென்பதை ஒவ்வொரு ஆட்சியாளரும், குறிப்பாகஒவ்வொரு அரேபிய ஆட்சியாளரும் புரிந்து கொள்ள வேண்டும் ,”என்றார்

தற்போதையலிபியாவாக மாறியிருக்கும் திரிபொலிதானியா, ஃபெஜ்னா, கெரினெய்காவின்(Tripolitania, Fezzna, Cyrenaica) ஒட்டோமான் மாகாணங்களைஇணைத்துக்கொள்ளும் அவர்கள் முனைவின் பாகமாக, சரியாகநூறு ஆண்டுகளுக்கு முன்னால், 1911 அக்டோபர் 3இல், இத்தாலியதுருப்புகள் திரிபொலியின்மீதுஒரு கடற்படை தாக்குதலைத் தொடுத்தன. காலனியபடைகளுக்கு எதிராக உள்நாட்டு மக்கள் கிளர்ந்தெழுந்த போது, இத்தாலியதாக்குதல் நடவடிக்கை உடனடியாக ஒட்டோமான் இராணுவ துருப்புகள் மீதான ஒரு தாக்குதல் என்பதிலிருந்து உள்நாட்டு மக்களுக்கு எதிரான பாகுபாடற்ற ஒடுக்குமுறைதாக்குதல்களின், மற்றும்படுகொலைகளின் ஒரு நடவடிக்கையாக நீடிக்கப்பட்டது. 1912 அக்டோபரில்முடிவுக்கு வந்த இத்தாலிய-துருக்கியயுத்தம், உலகின்முதல் வான்வழி வேவுபார்ப்பு விமானங்கள் மற்றும் குண்டுவீசும் வேட்டைகள் உட்பட நவீன இராணுவ தொழில்நுட்பங்களை ஒருதரப்புபயன்படுத்திய தன்மையை கொண்டிருந்தது.
முற்றுமுழுதான, நாகரீகமானபடுகொலை" என்று அந்தயுத்தத்தை லெனின் விவரித்தார்.
லிபியாவில்இப்போது என்ன நடந்து வருகிறதோ அதை விவரிக்க லெனின் அந்தசொற்களில் எதையும் மாற்ற வேண்டியதில்லை. இருபத்தோராம்நூற்றாண்டில் பகிரங்கமாக காலனித்துவ வகைப்பட்ட  நடவடிக்கைகள் மீண்டும் எழுந்திருப்பது, உலகமுதலாளித்துவ அமைப்புமுறையின் ஆழமடைந்துவரும் நெருக்கடியின் ஒரு வெளிப்பாடாகும். அமெரிக்கஆளும் மேற்தட்டு வேகமாக அரிக்கப்பட்டு வரும் அதன்பொருளாதார நிலைமையைஈடுகட்டும் ஒரு கருவியாக, வேண்டுமென்றேஅது அதன் இராணுவ பலத்தை பயன்படுத்த விரும்புகிறது. அதேவேளையில், புதியஏற்றுமதி சந்தைகளைத்திறந்துவிடுவதற்கும், ஆதாயமானஇயற்கை ஆதாரவளங்களை அணுகுவதைப் பாதுகாக்கவும் ஐரோப்பியஏகாதிபத்திய சக்திகள் அவற்றின்முன்னாள் காலனித்துவ நாடுகளில் அவை இழந்துவிட்ட செல்வாக்கைமீண்டும் பெற ஒரு வாய்ப்பை காணுகின்றன.
சண்டைமுடிவதற்கு முன்னாலேயே, அமெரிக்காமற்றும் ஐரோப்பாவிலிருந்துபெருநிறுவன வர்த்தகர்களையும்சேர்த்துக் கொண்டு பல அரசியல்வாதிகள் திரிப்போலிக்குவிரைந்து சென்றனர். சமீபத்தில்அமெரிக்க தூதரால் லிபியாவின் "மகுடத்தில்பதிந்த இரத்தினக்கல்" என்றுவர்ணிக்கப்பட்ட, வடஆபிரிக்கநாடுகளிலுள்ள பெரும்எண்ணெய்வளங்களுக்காக, ஒவ்வொருவரும்அவர்களின் பங்கைப் பாதுகாக்க போட்டிபோட்டுக் கொண்டிருக்கின்றனர்.
1914க்குமுந்தைய காலக்கட்டத்தில் இருந்ததைப் போல, மனிதயினம்ஏகாதிபத்திய காட்டுமிராண்டித்தனத்திற்குள்வீழ்ந்திருப்பதை எதிர்கொண்டுள்ளது.








இது www.wsws.com இணையத்தளத்தில் வெளியான கட்டுரையின் தமிழாக்கமாகும்.இக்கட்டுரையை எழுதியவர் MR.Patrik O Conner  என்பவராவார்.எல்லா கட்டுரைகளும் விமர்சனத்துக்கு உட்பட்டவையே.தவறுகள் இருந்தால் மன்னிக்கவும் சுட்டிக்காட்டவும்.
ஜசாகள்ளஹு ஹைர்.
உங்கள் நண்பன் 
எம்.ஹிமாஸ் நிலார்.









No comments:

Post a Comment