அவர்களின்
ஆய்வுக் கூடங்களின்
கண்ணாடிக் குடுவைகளில்
கலக்கப்பட்டதெல்லாம்
கல்விக் கோட்பாடுகளும்
கலாச்சாரச் சீர்கேடுகளும் தான்...
மூளைச் சலவையில்
கடைசி மூலக்கூறுகளைக் கூட
அவர்கள்
விட்டார்களில்லை!
விளைவு...
மனிதாபிமானம்
குற்றுயிராய்க் கிடக்க
பணங்களின் மேல் நடந்து
பட்டம்பெற வைத்தார்கள்...
கல்விப் போர்வையில்
வெள்ளையர் தந்ததெல்லாம்
கொள்ளையர்களைத் தான்...
கற்பைக் கறைப்படுத்தி
காதலர் தினம்
தந்தார்கள்!
கல்லூரி தினங்களில்
ஆடையைக் கிழித்துக்கொண்டு
"நாகரீகத்தை"
நடனமாட விட்டார்கள்!...
பாவம் பாலகர்கள்
ஆரம்ப பள்ளியில்
அரும்புகளின் முதுகுகளில் கூட
ஒட்டக வளைவுகள்!...
பத்து வயதிலும்
பரிசோதனைக் குட்படுத்தப்படும்
பார்வை நரம்புகள்...
இவர்கள்
துடைத்து போட்டுக்கொள்ளும்
மூக்குக் கண்ணாடிகளில்
எழுத்துக்களே
மங்கலாய்த் தெரிய
எதிர்க்காலம்?!
BY SHEIK ABDUL CADER.
No comments:
Post a Comment