Saturday, October 29, 2011

சுல்தான் மான்ஸா மூஸா - ஹஜ் பிரயாணத்தால் அறியப்பட்ட மாலி சுல்தான்.

மான்ஸா  மூஸா
மான்ஸா மூஸா என பொதுவாக அழைக்கப்படும் முதலாம் மூஸா ஆப்ரிக்க கண்டத்தின் மாலி இராஜதானியின் பத்தாவது மான்ஸா ஆவார்.மான்ஸா என்றால் மாலி மொழியில் அரசருக்கெல்லாம் அரசர் என்று பொருள்.அந்தக் காலத்தில் இருந்த மிகவும் செல்வம் படைத்த அரசர்களின் மூசாவும் ஒருவர்.

சுல்தான் மான்ஸா மூஸா  மாலி இராஜதானியை நிறுவிய அரசர் சுன்ஜாடாவின் பேரராவார்.மாலியை 1312 முதல் 1337 வரை 25 ஆண்டுகள் சீரும் சிறப்புமாக ஆண்டு வந்தார்.இவரின் இந்த 25 வருட ஆட்சி மாலியின்  பொற்காலமாக வருணிக்கப்படுகிறது.சுல்தானின் பாட்டனார் சுன்ஜாடா மாலி இனத்தை பிரதிபலிக்கும் ஒரு இராஜ்ஜியத்தை  நிறுவினார்,ஆனால்  மூஸா அவர்களோ இஸ்லாத்தை பிரதிபலிக்கும் ஒரு ராஜ்ஜியத்தை  நிறுவ பாடுபட்டார்.சுல்தான் மான்ஸா மூஸா தனது ஹஜ்ஜை 1324 இல் நிறைவேற்றினார்.சுல்தான் மான்ஸா மூஸா அவரது ஹஜ் பிரயாணம் சம்பந்தமாக மிகவும் பிரசித்தி பெற்றவர்.நம் சகோதரர்கள் பலர் அறிதிராத அந்த வரலாற்று உண்மை பற்றி இப்போது பார்ப்போம்.

சுல்தான் மான்ஸா மூஸா அவரது ஹஜ் பிரயாணம் சம்பந்தமாக மிகவும் அறியப்பட்டவர்.மான்ஸா மூஸா ஒரு நல்ல முஸ்லிமாக இருந்தார்.அவரின் ஹஜ் பிரயாணம் அவரை வடக்கு ஆப்ரிக்காவிலிருந்து மத்திய கிழக்கு வரை அறிமுகப்படுத்தியது.அவர் அல்லாஹ்வையும் நபிமார்களையும் குரானின் வசனகளையும் ஆழமாக நம்பினார்.அவரை பொறுத்தவரை மத்திய தரைக் கடலின் கிழக்கு  பிராந்தியத்தில் கலாச்சாரத்துக்கு  ஒரு அடிக்கல்லை நாட்டியது இஸ்லாமே.சுல்தான் மான்ஸா மூஸா தனது இராஜ்ஜியத்தில் இஸ்லாத்தை பரவுவதற்கும் வளரப்பதட்கும் அதிக காலத்தை செலவிட்டார்.


சுல்தான் மான்ஸா மூஸாவின்  ஹஜ் யாத்திரை கி.பி.1324 இடம்பெற்றது.அக்காலங்களில் மாலியிலிருந்து கைரோ ஊடாக புனித மக்கா நகரத்தை அடைய கிட்டத்தட்ட இரு வருடங்கள் பிடிக்கும்.ஒரு சக்திவாய்ந்த அரசரோன்றாலே தனது நாட்டை விட்டு இப்படி அதிக காலம் வெளியில் இருக்க முடியும்.சுல்தான் மான்ஸா மூஸா சக்திவாய்ந்த அரசர் என்பதை விட மக்களால் அதிகம் நேசிக்கப்பட்டவர்.அதனாலே யாரும் அவரது அரியணையை குறுக்கு வழியில் அடையவில்லை.

மாலி இராஜ்ஜியம்

சுல்தான் மான்ஸா மூஸாவின் ஹஜ் பிரயாணக் குழுவில் 60000 ஆண்களும் 12000 அடிமைகளும் தங்க வேலை செய்பவர்களும் மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட குதிரைகளும் அடங்கியிருந்தது.மூஸா அவர்கள் பிரயாணக் குழுவின் அனைத்து விதமான தேவைகளையும் நிறைவு செய்தார்.அதுபோல் பிரயாணக் குழுவில் 80 ஒட்டகங்கள் தங்கத்தை சுமந்து செல்ல பயன்பட்டது.இந்த ஒவ்வொரு ஒட்டகங்களும் கிட்டத்தட்ட 50 பவுன்க்கும் 300 பவுன்க்கும் இடைப்பட்ட தங்கத்தை சுமந்து சென்றதாக பல்வேறு அறிக்கைகள் மூலம் தெரிய வருகிறது.சுல்தான் மான்ஸா மூஸா அவர்கள் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் ஒரு பள்ளிவாசல் வீதம் உருவாக்கியதாகவும் கூறப்படுகிறது.

சுல்தான் மான்ஸா மூஸாவின் ஹஜ் பிரயாண ஊர்வலம்  நைஜெர் நதியோரமாக சென்று மேமா,வாலாட்ட,தஹாசா நகரங்களினூடாக டுஆட் நகரத்தை அடைந்தது.டுஆட் நகரம் மத்திய ஆப்ரிக்காவில் மிக முக்கிய வியாபார கேந்திரஸ்தானமாக விளங்கிவந்தது.மான்ஸா மூசாவின் பயணம் அவருடன் பயணம் செய்த பலரால் நேரில் பார்த்து ஆவணப்படுத்தப்பட்டது.
சுல்தான் மான்ஸா மூசாவின் ஹஜ் பாதை.1324 
ஹஜ் பிரயாணத்தின் போது பயன்பட்ட கொடி.

சுல்தான் மான்ஸா மூஸா அவர்கள் எகிப்தை அடைந்த போது எகிப்து மம்லூக்கிய சுல்தான் அல் நாஸிர் முஹம்மதின் ஆட்சியின் கீழ் இருந்தது.
எகிப்தில் சுல்தான் மூஸா மூன்று மாதத்துக்கு கூடாரம் அடிக்க முன் சுல்தான் நாசிருக்கு 50000 தீனார்களை அனுப்பி வைத்தார்.அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் எகிப்து சுல்தான் கோடைக் காலங்களில் தனது அரண்மனையை மான்ஸா மூஸாவுக்கு வழங்கினார்.மேலும் மூஸா அவர்களின் ஹஜ் பரிவாரத்தின் தேவைகளையும் சரிவர கவனித்தார்.சுல்தான் மூஸா எகிப்து வியாபாரிகளிடம் பொருள்களை வாங்க தங்கக் கட்டிகளை வழங்கினார்.இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட எகிப்து வியாபாரிகள் சுல்தான் மூஸாவுக்கு பொருள்களை சாதாரண விலையிலும் பார்க்க ஐந்து மடங்கு அதிகமான விலையிலே விற்றார்கள்.இதனால் தங்கத்தின் விலை எகிப்தில் பாரிய அளவில் வீழ்ச்சியுற்றது.ஒரு தனி மனிதனால் தங்க விலை கட்டுப்படுத்தப்பட்ட வரலாறு சுல்தான் மான்ஸா மூசாவின் ஹஜ் பிரயாணத்தின் போதே இடம்பெற்றது.


சுல்தான் மூஸா இஸ்லாத்தின் மீது தீவிர பற்று கொண்ட ஒருவராக இருந்தார்,ஆனால் அவர் ஒரு துறவியல்ல.மான்ஸா மூசாவின் பேரரசுக்கு ஆப்ரிக்க உலகில் ஒரு தனி மரியாதையும் அச்சமும் இருந்தது.சுல்தான் மான்ஸா மூசாவின் ஹஜ் பயணம் மாலியில் இஸ்லாம் வளர பாரிய அளவில் கைகொடுத்தது.மாலியில் வளர்ந்த இஸ்லாம் ஆப்ரிக்காவினூடாக ஐரோப்பாவிலும் பரவ சுல்தானின் அந்த ஹஜ் பயணமே கைகொடுத்தது.அவரின் ஹஜ் பயணம் பற்றி முஸ்லிம்களாலும் முஸ்லிம் அல்லாதவர்களாலும் கண்காணிக்கப்பட்டது அவை பல பதிவுகளாக இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.



Very Special Thanks TO

WWW.WIKIPEDIA.COM
WWW.ONISLAM.கம
கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டவும்.
உங்கள் நண்பன் 
எம்.ஹிமாஸ் நிலார்






Thursday, October 20, 2011

ஆப்ரிக்காவிலிருந்து மக்காவுக்கு - வரலாற்றுப் பார்வை.


 
  புனித மக்கா பயணம் என்பது பல நூற்றாண்டுகளாக  ஆப்ரிக்க மக்களின் மனதில் ஒரு வசீகரத்தையும் பயபக்தியையும் ஏற்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாக இருந்து வந்தது.ஆப்ரிக்க இஸ்லாமிய வரலாற்றில் புகழ்பெற்ற யாத்திரைகலான  மாலியின் சுல்தான் மன்சா மூஸாவின் மக்கவுக்கான யாத்திரை ,சொங்ஹாய்(Songhai) பிராந்தியத்தின் ஆட்சியாளர் அஸ்கியா முஹம்மதின் மக்கவுக்கான யாத்திரை மற்றும் டர்பார்(Darfur) பிராந்தியத்தின் சுல்தான் அலி தீனார் அவர்களின் மக்கவுக்கான யாத்திரை என்பன  ஆப்ரிக்க  மக்களின் புனித யாத்திரைக்கு இருந்த ஈடுபாட்டை  மிக அழகாக பிரதிபலித்தன. டர்பார்(Darfur) பிராந்தியத்தின் சுல்தான் அலி தீனார் அவர்களின் மக்கவுக்கான யாத்திரை மிகவும் பிரசித்தி பெற்றது.அதற்கு தக்க காரணமும் இருந்தது.டர்பார் சுல்தானின் பயணக் குழுவிலே மக்காவை போர்த்தும் கிஸ்வா(Kiswa) கொண்டு செல்லப்படும். டர்பார்(Darfur) பிராந்தியத்தின் கடைசி சுல்தான் அலி தீனார்அவர்கள் இந்த பயணத்துக்கு அதி முக்கியத்துவம் கொடுத்துவந்தார்.


சுல்தான் அலி தீனார் அவர்களின் யாத்திரை ஆரம்பம்.

பிரித்தானியர்களால் கொல்லப்பட்ட சுல்தான் அலி தீனர் அவர்களின் ஜனாஸா

மேற்கு ஆப்ரிக்க முஸ்லிம்களின் மக்காவுக்கான புனித யாத்திரை பெரும்பாலும் சஹாரா பாலைவனத்திநூடாக கெய்ரோ வந்து அதனூடாக மக்கா செல்வதேயாகும்.ஆனால் மக்காவுக்கு பிரயாணம் செய்ய இன்னுமொரு மிகவும் பிரசித்தி பெற்ற பாதை ஒன்றும் இருந்தது,அது சூடானை ஒட்டிய செளிப்பனான  புல்நிலங்கள்  கொண்ட ஒரு பாதையாகும்.அதிகம்  அறியப்படாத இந்த பாதையினூடாக மேற்கு ஆப்ரிக்க மக்கள் மக்காவுக்கு கால்நடையாகவே பயணம் செய்துவந்தனர்.


புனித மக்காவுக்கு நடந்து செல்லல்.

இஸ்லாத்தின் வருகையின் பிறகு  கிட்டத்தட்ட 20 ஆம் நூற்றாண்டு வரை ஹஜ்ஜில் ஆர்வமுள்ள ஆப்ரிக்க முஸ்லிம்கள் மக்காவுக்கு நடந்தே செல்வார்கள்.கலாநிதி அல்-அமீன் அபூ-மங்கா அவர்களின் கருத்துக்கு அமைய,ஹஜ் கடமையை மிகவும் சிரமப்பட்டு நிறைவேற்றினாலே அல்லாஹ்வின் வெகுமதிகள் அதிகமாக கிடைக்கும் என்ற எண்ணம் கருத்து மேற்கு ஆப்ரிக்க மக்களிடம் பரவலாக காணப்பட்டது என்றார்.மேலும் ஆப்ரிக்க மக்களிடையே "கிழக்கு" பற்றி அதாவது மக்கா,மதீனா மற்றும் ஜெரூசலம் பற்றி ஒரு ஆன்மிகம் கலந்த அன்பான பார்வை காணப்பட்டது என்கிறார்.

இந்த புனித யாத்திரை பாதை மேற்கு ஆப்ரிக்க பிரதேசங்களிலிருந்து வரும் முஸ்லிம்களை சவான்னாஹ் புல்வேளிகலூடாக டர்பார் பிராந்தியத்தில் கொண்டு சேர்க்கிறது.அதன் பின்பு நைல் நதியோரமாக பிரயாணம் செய்து பின்பு நதியைக் கடந்து இன்றைய சூடானை அடையும்.இதன் பிறகு சூடானின் துறைமுக நகரங்களான சவாகின் அல்லது மஸ்ஸாவா நகரங்களினூடாக கப்பலில் ஏறி ஜித்தாஹ் துறைமுகத்தை அடைவார்கள்.இறுதியில் அவர்கள் புனித மக்காவை அடைவார்கள்.
அரசர் மான்ஸா மூசாவின் ஹஜ் பாதை (1324)
பத்து வருட புனிதப் பயணம் 
புனித மக்கா நகருக்கான ஆப்ரிக்க மக்களின் இந்த பயணப் பாதை உச்ச அளவில் பாதுகாப்பற்ற ஒன்றாகும் என்கிறார் டாக்டர் உமர் அஹ்மத் சயித் அவர்கள்.மக்கா நகருக்கான இந்த பாதை பல சவால்கள் நிறைந்த பாதையாகும்.ஏனெனில் மக்காவுக்கான இந்தப்பாதையில் கொள்ளைக்காரர்கள்,மக்களை கடத்திச் சென்று அடிமைத் தொழில் செய்வோர்,காட்டு கொடிய மிருகங்கள்,நோய்கள் என்பன பரவலாக காணப்படும் சவாலாகும்.இவற்றை விட மிக முக்கியமான சவால் நீர் பற்றாக்குறைப் பிரச்சனை ஆகும்.சில நேரங்களில் சிலர் மக்காவுக்கான தமது கனவு யாத்திரையை தொடந்து மேற்கொள்ள முடியாமல் இடைநடுவே மனம் உடைந்தவர்களாக திரும்பி விடுவார்கள்.

இதுபோன்ற பயணங்கள் அதிகபட்சமாக சில மாதங்களே எடுக்கும்.ஆனால் ஆப்ரிக்க மக்களின்  இந்த ஹஜ் பயணமோ மக்காவை சென்றடைய மட்டும் இரு வருடங்கள் பிடிக்கும்.சில பயணக் குழுக்கள் சில ஊர்களில் தற்காலிகமாக தங்கி தமது பயணத்துக்கு தேவையான பணத்தையும் இதர தேவைகளையும் சேர்த்துக் கொள்வார்கள்.

ஆப்ரிக்க மக்களின் இந்த ஹஜ் பயணம் சராசரியாக பத்து வருட காலத்தைக் கொண்டது.அக்காலங்களில் ஹஜ்ஜுக்கு செல்பவர்கள்,தாம் திரும்பி வராதபட்ச்சத்தில் தம் மனைவிக்கு தலாக் பெற்றுக்கொள்ள அனுமதியும் வழங்கிவிட்டே பயணத்தை துவங்குவார்கள்.மனைவி  கணவன் திரும்பி வரும்வரை காத்திருக்க தேவையில்லை.

இறுதியில் புனித மக்காவுக்கு பயணம் மேற்கொண்டவர் தமது சொந்த ஊருக்கு திரும்பி வந்தால் அவரை முழு ஊரும் சேர்ந்து விழா எடுத்து வரவேற்கும்.புனித மக்காவுக்குச் சென்று ஹஜ் கடமையை நிறைவேற்றி வந்ததால் முழு ஊரும் அவரை அல்-ஹாஜ் என்று சிறப்புப் பெயர் வைத்தே அழைப்பார்கள்.

இன்று நவீன ஆப்ரிக்காவில் இந்த சவால் நிறைந்த பயணமுறை இல்லை.1950 இன் பிற்பாடு ஏற்பட்ட காலனித்துவ எல்லைகள்,அரசியல் பதற்றம் மற்றும் விமானகள் என்பன இந்த பாதையை இல்லாமலே செய்தது.

ஆனால் இந்த பாதையின் காலாச்சார தாக்கம் இன்றுவரை அழியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

அரசர் மான்ஸா மூஸா.
சுல்தான் அஸ்கியா முஹம்மதின் அடக்கஸ்தலம்.
சுல்தான் அஸ்கியா முஹம்மத்.
சுல்தான் அஸ்கியா முஹம்மதின் அரசு.


இந்த கட்டுரை ONISLAM.COM தளத்தில் வெளியான ஆங்கில கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பாகும்.நமது முஸ்லிம் உம்மத்தின் வரலாற்றை எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மொழிமாற்றம் செய்யப்பட்டது.

Very Special Thanks TO 

WWW.ONISLAM.COM
Images From WWW.WIKIPEDIA.COM
Writer - Ismail KushKush [FREELANCE WRITER]

தவறுகள் இருந்தால் சுட்டிக் காட்டவும் 
உங்கள் நண்பன் 
எம்.ஹிமாஸ் நிலார்


இந்த தளத்தில் வெளியான இதைப் போன்ற ஒரு வரலாற்று ஆக்கம் "பலஸ்தீனிலிருந்து மக்கா வரை"வாசிக்க இங்கே கிளிக் பண்ணவும்.
CLICK HERE


Monday, October 17, 2011

அறிவைத் தேடி...!

            
மௌலானா மௌதிதியின் குத்பா உரை ஒன்றிலிருந்து.




புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே,  இறைவனின்; தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கும், அவர்களைப் பின்பற்றி வாழும் அனைவருக்கும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக.

அல்லாஹுத்தஆலா தன் திருமறையில் கூறுகின்றான்:

''அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா?  நல்லுபதேசம் பெறுவோரெல்லாம்; அறிவுடையோரே!'  (அல்குர்ஆன் 39:9)

என்னருமைச் சகோதரர்களே!

நாம் அனைவரும் ''சுவனத்தை'' அடையவே விரும்புகிறோம்... ஆம் எந்த ஒரு ஆரோக்கியமான மனமும் ''சுவர்க்கம்'' எனும் சுந்தரவனப் பாதையை விரும்பாமலும் நரகம் எனும் நாசகாரப் பாதையை வெறுக்காமலும் இல்லை.  ''சுவனச் சோலையில்... பரவச பானங்கள், பல்சுவைக்கனிகள், முத்தழகுக்கன்னிகள், எழில்மிகும் இல்லங்கள்... இன்னும் உளம் கொள்ளை கொள்ளும் யாவையும்'' உயர்நாயன் தருவதாய் வாக்களித்துள்ளான்.  எனவே நாம் சுவர்க்கத்தை அடைவது  எப்படி?  நரகத்திலிருந்து பாதுகாப்புப் பெறுவது எப்படி? வெந்ததைத் தின்றுவிட்டு விதி வந்துச் செத்தால் சுவர்க்கம் கிடைத்துவிடுமா?.  சுவர்க்கம் யாருக்கு...? சிந்திக்கவேண்டாமா...?

''முஸ்லிமுக்கும் மாற்றாருக்கும் பாரதூர வேறுபாடு''!

இறை நிராகரிப்பாளனைவிட (காஃபிரை விட) ''முஸ்லிமை'' இறைவன் விரும்புகின்றான் இறை நிராகரிப்பாளனை அவன் விரும்புவதில்லை என்பதை நாம் அனைவரும் அறிந்ததுதான்.  ''ஷிர்க்கான (இறைவனுக்கு இணைவைக்கக்  கூடிய) செயல்களைச் செய்யாத ஏகத்துவக் கொள்கையுடைய முஃமின்கள்,  அவர்கள் செய்த பாவங்களுக்காக நரகத்தில் சில காலம் தண்டிக்கப்பட்டாலும்  காஃபிர்களைப் போன்று அவர்கள் நரகத்தில் நிரந்தரமாகத் தங்கப்போவதில்லை'' என்பது பரவலாகத் தெரிந்த குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் மூலம் நிரூபணமான ஒன்றாகும். முஸ்லிமுக்கும் இறை நிராகரிப்பாளனுக்கும் ஏன் இத்தனைப் பெரிய வேற்றுமை? முஸ்லிமாகிய நாம் எப்படி மனிதர்களாகவும், கை, கால்களுடனும் இருக்கின்றோமோ அதைப்போலத்தான் இறை நிராகரிப்பாளனும் இருக்கின்றான். பிறகு ஏன் உங்களுக்கு சுவர்க்கம்? அவர்களுக்கு மட்டும் நரகம் . . . . ???

''அர்த்தமுள்ள வினா''?...

இது சற்று சிந்திக்க வேண்டிய பிரச்சனைதான். பிராமணப் பூசாரி ஒருவன் ''பொருள் தெரியாமல் சமஸ்கிருத மந்திரத்தைச் சொல்வது போல்'', ஒருவன் பொருள் தெரியாமல் அரபிச் சொற்களை சொல்வதனால்தான் இந்த வேறுபாடா? அல்லது நீங்கள் அப்துல்லாஹ் என்றும் அப்துல் ரஹீம் என்றும் பெயரிட்டு அழைத்துக் கொள்கின்றீர்கள். முஸ்லிம்கள் அணிவதுபோல் ஆடை அணிகின்றீர்கள், கத்னா செய்து கொள்கின்றீர்கள், இறைச்சி சாப்பிடுகின்றீர்கள் இதனால்தான் இந்த வேறுபாடா? இத்தகைய அற்பக் காரணங்களுக்காக படைப்பினங்களிடையே வேற்றுமையை ஏற்படுத்தி ஒருவனை சுவர்க்கத்திற்கும் மற்றொருவனை நரகத்திற்கும் அனுப்புகின்ற அநீதியை, நீதி மிக்க இறைவன் செய்வானா?

''முஸ்லிம்'' என்றால் இனத்தவரின் பெயரா?

சற்று சிந்தனை செய்யுங்கள்! நீங்கள் முஸ்லிம் என்று சொல்கின்ற வார்த்தையின் கருத்தென்ன? மனிதன் தாய் வயிற்றிலிருந்தே இஸ்லாத்தைத் தன்னோடு கொண்டு வருகின்றானா? முஸ்லிமுடைய மகன் அல்லது முஸ்லிமுடைய பேரன் என்னும் வாரிசு அடிப்படையில் மட்டுமே ஒரு மனிதன் முஸ்லிமாகின்றானா?

பிராமணனுக்குப் பிறந்தவன் பிராமணனாகின்றான். ஹரிஜனனுக்குப் பிறந்தவன் ஹரிஜனனாகின்றான். இப்படியே முஸ்லிமுக்குப் பிறந்தவனும் முஸ்லிமாகிவிடுகின்றானா?  பிறப்பினாலோ, பரம்பரையினாலோ ஏற்பட்ட உறவு முறைக்குத்தான் முஸ்லிம் என்று பெயரா?

''பொருத்தமுள்ள விடை''!

  இவற்றிற்கு நீங்கள் என்ன விடையளிப்பீர்கள்? இல்லை சகோதரரே இல்லை! ஒரு மனிதன் பிராமணனாயிருந்தாலும் ஹரிஜனனாக இருந்தாலும், இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு பின்பற்றினால் அவனும் முஸ்லிம்களில் ஒருவனாக விளங்குவான். முஸ்லிம் வீட்டில் பிறந்த ஒருவன் இஸ்லாத்தைப் பின்பற்றுவதைத் துறந்துவிட்டால், அவன் இஸ்லாமிய சமூகத்திலிருந்து வெளியே போய்விடுவான்! அதாவது இஸ்லாத்தைப் பின்பற்றுவதனால்தான் ஒருவன் முஸ்லிமாகின்றான். இஸ்லாத்தை நிராகரிப்பதனால்தான் ஒருவன் காஃபிராகின்றான்,  என்றுதானே பதில் கூறுவீர்கள்?

''புலப்படும் உண்மை''!

அப்படியானால் உங்களின் பதிலில் இருந்து ஓர் உண்மை தெளிவாகிறது. அதாவது முஸ்லிம் என்பது வாரிசு சொத்து அல்ல,   நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அது நம்முடனேயே வாழ்நாள் முழுதும் ஒட்டிக்கொண்டிருக்க, அந்தப் பேற்றினை அடைவதற்கு நாம்தான் முயற்சி செய்யவேண்டும். முயற்சி எடுத்தால் அது நமக்குக் கிடைக்கும். அலட்சியம் செய்தால் அது கை நழுவிப் போய்விடும். அல்லாஹ் நம் அனைவரையும் காப்பாற்றுவானாக. ஆக, நாம் முஸ்லிம் ஆக விளங்குவதற்கு மற்ற அனைத்தையும் விட முதன்மையானது ''இஸ்லாத்தைப் பின்பற்றுவதற்கு நாம் எடுக்கும் முயற்சி''தான்.

முயற்சியினால்; பெற்ற ''அறிவும் அறிவார்ந்த செயலும்''!

முஸ்லிமுக்கும் இறை நிராகரிப்பாளனுக்கும் வேற்றுமை தோற்றுவிக்கக்கூடியவை இரண்டு,  முதலாவது அறிவு  (மழெறடநனபந)  இரண்டாவது செயல் (னநநன).

ஒரு பிராமணன் அவனுடைய மதத்தைப் பற்றிய அறிவே இல்லாமல் பிராமணனாக வாழ முடியும்..., அவன் பிராமணனுக்குப் பிறந்ததால்; இவ்வுலகத்தைப் பொறுத்தவரை உயர்ந்தவனாக கருதப்படுகின்றான். ஆனால் ஒருவன் அறிவே இல்லாமல் முஸ்லிமாக வாழ முடியாது. ஒரு முஸ்லிம் உண்மையான முஸ்லிமாக விளங்குவதற்கு முக்கியமான ஒன்று  இஸ்லாத்தைப் பற்றிய அறிவு. இஸ்லாம் என்றால் என்ன? அதன் அடிப்படைக் கடமைகள் என்ன? திருக்குர்ஆனுடைய அறிவுரைகள் என்ன? அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஏவியவைகள் என்ன? விலக்கியவைகள் என்ன? ஏகத்துவத்திற்கும் இணைவைத்தலுக்குமிடையில் உள்ள அடிப்படை வேற்றுமை என்ன? என்பன போன்ற அறிவை ஒவ்வொரு முஸ்லிமும் பெற்றிருக்க வேண்டும். இத்தகைய அறிவு இல்லாமல் ஒரு மனிதன் முஸ்லிமாக இருக்க முடியாது. ஆனால் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால்,   இந்த அறிவை அடைவதுபற்றி நாம் சிந்தித்துப் பார்ப்பது கூட இல்லை!

''அறிவின் உயர்வும் அறியாமையின் இழிவும்''!

நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் சிலைகளை வடித்து, விற்கக்கூடிய மற்றும் வணங்கக்கூடியவனின் வீட்டில் பிறந்தார்கள். ஆனால் தன் அறிவினால் இறைவனைத் தெரிந்துக்கொண்டார்கள். அவனுடைய கட்டளைக்கு அடிபணிந்தார்கள். எனவே இறைவன் அவர்களை உலகம் முழுவதற்கும் தலைவராக ஆக்கினான். நபி நூஹ் (அலை) அவர்களின் மகன் இறைத்தூதரின் மகனாகப் பிறந்தான் என்றாலும் அவனுடைய அறியாமையின் காரணத்தால் இறைவனை அறிந்து கொள்ளவில்லை. இறைகட்டளைக்குப் பணியவில்லை. அதனால் இறைத்தூதரின் மகனாக இருந்தாலும் உலகமே படிப்பினை பெறும் வகையில் அவனை இறைவன் தண்டித்தான்.

''இறைவனின் கணிப்பும் மனிதனின் நினைப்பும்''!

ஆகவே நீங்கள் நன்றாக தெரிந்து கொள்ளவேண்டும். இறைவனிடத்தில் ஒரு மனிதனுக்கும் மற்றொரு மனிதனுக்கும் இடையிலுள்ள வேற்றுமை, அறிவையும் செயலையும் அடிப்படையாகக் கொண்டதுதான்.  அறியாமையால் தான் முஸ்லிமல்லாத நிலையிலுள்ள ஒருவன், ''இப்போதும்கூட நான் முஸ்லிமாகத்தானே இருக்கின்றேன்'' என்று அவன் தன்னைத்தானே நினைத்துக்கொள்வான். உண்மையில் அவன் ''முஸ்லிமாக'' இருக்க முடியாது.

''எளிய உவமையும் ஏற்றிவைத்த தீபமும்''!

இஸ்லாத்திற்கும்; குஃப்ருக்கும் இடையே உள்ள வேற்றுமை என்ன? ஏகத்துவத்திற்கும் இணைவைத்தலுக்கும் இடையே உள்ள வேற்றுமை என்ன? என்று புரிந்து கொள்ளாத ஒருவனுக்கு நாம் இவ்வாறு உவமை கூறலாம்.

ஒரு மனிதன் கடும் இருள் சூழ்ந்த வேளையில் ஒற்றையடி பாதையில் நடந்து செல்கின்றான். அந்த நேரான பாதையில் சென்று கொண்டிருக்கின்ற அவனது கால்கள் அவனுக்கே தெரியாமல் தாமாகவே வேறு பக்கத்துக்குத் திரும்பிவிடவும் கூடும். இருள் சூழ்ந்திருக்கின்ற வேளையில் அவனால் அதனைத் தெரிந்து கொள்ள முடியாது. ஆனால் தான் நேரான பாதையில் சென்று கொண்டிருப்பதாகத்தான் அவன் நினைத்துக்கொண்டிருப்பான். இது மட்டுமல்ல, வழியில் ஒரு தீயவன் நின்றுகொண்டு, ''நண்பரே! இருளின் காரணத்தால் உங்கள் வழி தவறிவிட்டது. என்னோடு வாருங்கள், நீங்கள் செல்லவேண்டிய இடத்திற்கு நான் அழைத்துச் செல்கிறேன்'' என்று சொன்னால், அறியாமையின் காரணத்தினால் அவனின்  சூழ்ச்சியினைப் புரிந்துகொள்ளாத இவன் தன்னுடைய கையை அந்தத் தீயவனின் கையில் கொடுத்துவிடுவான். அவன் இந்த மனிதனை வழிகெடுத்து எங்கெல்லாமோ அழைத்துச்செல்வான்.

இந்த மனிதனுக்கு ஏன் இப்படி ஆபத்து ஏற்படுகிறதென்றால்......? ''தன்னுடைய பாதையைக்காட்டுகிற அடையாளங்களைத் தானே தெரிந்துக்கொள்கிற ''அறிவு'' (மழெறடநனபந) என்னும் விளக்கு'' அவனிடம் இல்லை. ''அவ்விளக்கு'' இருந்திருந்தால் இவனை மற்றொருவனால் வழிகெடுக்க முடியாது.

'நமக்கென நாமே தொடுக்கும் வினாக்கள்''

நாம் முயற்சி செய்தது நடக்கவில்லை என்றால்..... ''அல்லாஹ் நாடியது நடந்து விட்டது என்று கூறாமல் அப்படி செய்தால் நடந்திருக்குமே, இப்படி செய்தால் முடிந்திருக்குமே'' என்று பேசி ஈமானின் கடமை ஒன்றுக்குக் குந்தகம் விளைவிக்கின்றோமா இல்லையா? ''மரணித்தவரிடத்தில் (அவுலியா போன்றவர்களிடத்தில்)  உதவிதேடுவது, சிபாரிசுதேடுவது, மரணித்தவரை அழைப்பது ஆகியவை ''இணைவைத்தல்'' என்னும்  மன்னிக்கமுடியாத, நிரந்தர நரகத்தை தேடிதரும் குற்றம்'' என்றும், ''பொய் பேசுவது இறைவனுடைய சினத்தைத் தேடித்தரும்'' என்றும், ''லஞ்சம் கொடுப்பவனையும் வாங்குபவனையும் நரகத்தில் தள்ளுவதாகவும்'' இறைவன் குறிப்பிட்டிருக்கின்றான். ''வட்டி கொடுப்பவனையும் வாங்கு பவனையும் மிக மட்டமான குற்றவாளிகள்'' என்றும் அவன் தீர்ப்பு வழங்கியிருக்கின்றான். ''புறம் பேசுவது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிடுவதற்கு நிகரானது'' என்று தெளிவாக அறிவுறுத்தியும் இருக்கின்றான். ''கெட்ட பேச்சு, வெட்கங் கெட்ட செயல் தரக்குறைவான நடத்தை ஆகியவற்றிற்குக் கொடிய தண்டனை உண்டு'' என்றும் அவன் குறிப்பிட்டிருக்கின்றான்.  ''தொழுகையை விட்டவர்களை நரகத்தில் வேதனை செய்வதாகவும்'' கூறுகின்றான். இவையெல்லாம் முஸ்லிம்களாகிய நம்மிடம் இருக்கின்றதா இல்லையா? இதற்குக் காரணம் மேலே கூறப்பட்ட விஷயங்களைப்பற்றிய ''அ...றி...வு'' நம்மிடம் இல்லாமையா? அல்லது ''அ...றி...வு'' இருந்தும் அதைச்செயல்படுத்தாமையா...? சிந்தியுங்கள்...?

''உனக்கேது உரிமை''?

''நிராகரிப்பாளன் (ஹலால்) அனுமதிக்கப்பட்;டதற்கும் (ஹராம்) தடுக்கப்பட்டதற்குமிடையில்'' வேற்றுமை பார்ப்பதில்லை. ''எந்தச் செயலில் தனக்கு நன்மையும் இன்பமும் இருக்கின்றனதோ'' அதனை அவன் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றான். (அது இறைவனிடத்தில் அனுமதிக்கப்பட்டதாக இருந்தாலும் சரி, அனுமதிக்கப்படாமல் இருந்தாலும் சரியே!)  இதே நடத்தை ஒரு முஸ்லிமிடம் காணப்பட்டால் அவனுக்கும் இறை நிராகரிப்பாளனுக்கும் என்ன வித்தியாசம்?  மொத்தத்தில்  நிராகரிப்பாளனைப் போல் ஒரு முஸ்லிமும் இஸ்லாத்தைப் பற்றிய அறிவு பெறாதிருந்தால்..., நிராகரிப்பாளன் செய்வது போன்ற செயல்களை அவனும் செய்தால்... அவனுக்கு எப்படி ''சுவனம்'' எனும் சிறப்பு கிடைக்க முடியும்???

''சிந்தனைக்குச் சில துளிகள்''!

  கண்ணியமிக்க சகோதரர்களே!  ''இறைவன் அருளிய திருமறையைத்'' தங்;கள்வசம் கொண்டுள்ள முஸ்லிம்களில் பலர்; ''நடந்து கொள்ளும் முறைகளும் செய்கின்ற கூத்துக்களும்'' பரிதாபத்துக்குரியனவாகவே இருக்கின்றன. ''இதே செயல்களை வேறொரு மனிதன்  செய்யக் கண்டால் அவனைப் பார்த்து எள்ளி நகையாடுவோம். பைத்தியக்காரன்'' என்று பட்டம் கொடுப்போம்,  அதையே நாம் செய்தால்......?

மருந்துண்ணல் நிவாரணமா? மாட்டித்தொங்கவிடும் தோரணமா?

ஒரு மனிதன் ஒரு மருத்துவரிடமிருந்து மருந்து ஒன்றைக் குறித்துக்கொண்டு வருகின்றான். ''அதனைப்படித்தால் மட்டும் நோய் நீங்கிவிடும்'' என்பது அவனது நினைப்பு அல்லது ''அதனைத் துணியில் மடித்து கழுத்தில் மாட்டிக் கொள்கின்றான் அல்லது அதனைக் கரைத்துக் குடிக்கின்றான்'' என்றால் அவனைப் பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்? அவனுடைய செயலைப்பார்த்து சிரிக்க மாட்டீர்களா? அவனை முட்டாள் என்று நினைக்க மாட்டீர்களா?

''எல்லோரையும் விட சிறந்த மருத்துவனான இறைவன் உங்கள் நோய்க்கு நிகரற்ற மருந்தை அல்குர்ஆனிலிருந்தும், நபிமொழிகளிலிருந்தும் குறித்துக்கொடுத்திருக்கின்றான். ஆனால் அந்தக் குறிப்புகளுக்கு மாற்றமாக நம் கண்களுக்கு முன்னாலேயே இரவும் பகலும் இத்தகைய கூத்துக்கள்தான் நடந்து கொண்டிருக்கிறது, அப்படி இருந்தும் அதை நாம் அதிசயமாக பாhப்;பதுமில்லை, கவலைப்படுவதுமில்லை.

''தான் உடைத்தால் தங்கக்குடம் மாற்றான் உடைத்தால் மண்குடமா''?

''திருக்குர்ஆனை ஓதுவதால் மட்டுமே அல்லது கழுத்தில் தொங்கவிடுவதால் மட்டுமே அல்லது கரைத்து குடிப்பதால் மட்டுமே நோய்களும் பிரச்சினைகளும் போகும்'' என்றும் ''அதனுடைய அறிவுரைக்கு தக்கபடி நடக்க வேண்டியதில்லை அது தீங்கு என்று சுட்டிக்காட்டினால் தவிர்க்க வேண்டியதுமில்லை'' என்று நினைக்கின்றோம். இப்படியிருக்கும் போது தன்னுடைய நோய் நீங்குவதற்கு மருத்துவ நூலைப் படிப்பது ஒன்றே போதுமானது என்று நினைக்கிற நோயாளிக்கு நாம்; எந்தத் தீர்ப்பை வழங்குகின்றோமோ, அதே தீர்ப்பை நமக்கு நாமே ஏன்; வழங்கிக் கொள்வதில்லை?

''மறைமீது இல்லாத அக்கறை மடல்மீது மட்டுமேன்''?

நமக்கு தெரியாத மொழியிலே ஒரு கடிதம் நமக்கு வந்தால், அந்த மொழி தெரிந்தவரிடம் ஓடோடிச் செல்கின்றோம்;. அதிலுள்ள பொருளை நாம் தெரிந்துகொள்ளும் வரை நமக்கு அமைதி ஏற்படுவதில்லை. ஏதோ நாலுகாசு வரக்கூடிய சாதாரணக் கடிதங்களைப் பொறுத்தமட்டில் நாம் நடந்துகொள்ளும் முறையே இப்படி இருக்கும்போது, ஆனால் இம்மை மற்றும் மறுமையினுடைய செல்வங்கள் அனைத்தையும் தன்னுள் அடக்கிக்கொண்டு எல்லாம் தெரிந்த இறைவனிடமிருந்து ''நமக்கு அருட்கொடையாக'' வந்திருக்கின்ற ''கடிதத்தை'' அப்படியே போட்டுவைத்து விட்டோமே! ''அதிலுள்ள பொருளைப் புரிந்துகொள்ள வேண்டும்'' என்ற துடிப்பும் ''அதன் கட்டளைக்கேற்ப செயல்பட வேண்டும்'' என்ற எண்ணமும்;  நமக்கு ஏன் ஏற்படுவதில்லை?. இது சிந்தனையில் தெளிக்கத்தக்க விந்தைக்குறிய  விஷயமல்லவா...?

''சாலப்பொருத்தமுறும் மூலக்கருத்தென்ன''?

''உங்களில் ஒவ்வொருவரும் மௌலவி ஆகி (அறிஞராகி) பெரிய பெரிய நூல்களை படிக்க வேண்டும்'' என்றோ, ''கல்விக்காக பல ஆண்டுகள் செலவிட வேண்டும்'' என்றோ சொல்லவில்லை. ''ஒரு நாளின் 24 மணி நேரத்தில் ஒரு மணி நேரத்தையோ அல்லது அதில் பாதியையோ'' மார்க்க அறிவு பெறுவதற்காகச் செலவிடுங்கள்;. ''திருக்குர்ஆன் எந்த நோக்கத்திற்காக, என்ன அறிவுரையை கொண்டு வந்திருக்கிறது'' என்பதைத் தெளிவாகத் தெரிந்துக்;கொள்ளுங்கள்! ''பெருமானார் (ஸல்) அவர்கள் எதனை இவ்வுலகத்தில் நிலைப்படுத்துவதற்காக வந்தார்கள்'' என்பதனை நன்கு உணர்ந்து, ''முஸ்லிம்களுக்காக இறைவன் வகுத்துக்கொடுத்த தனிப்பட்ட வாழ்க்கை நெறி'' எதுவென்பதை அறிந்து  அதன்படி செயல்படுங்கள்.

அல்லாஹுத்தஆலா தன் திருமறையில் கூறுகின்றான்:

''உண்மையில், அதிக கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் அதிக இறையச்சம் கொண்டவர்கள்தாம்'' (அல்குர்ஆன் 49:13)

மார்க்க அறிவினைப் பெற்று அதன்படி செயல்பட்டு ஈருலக வெற்றியினையும் அடைந்தவர்களாக நம் அனைவரையும்  அல்லாஹ் ஆக்குவானாக.








ARTICLE FROM A ONE REALISM







Saturday, October 15, 2011

காருண்ய நபி (ஸல்) அவர்கள் தோற்றுவித்த குர்ஆனிய சமுதாயம்.


மனிதன் இந்த உலகில் வாழவே பிறக்கின்றான். அதுவும் ஏனைய உயிரினங்களைப் போலல்ல. அவற்றை விடச் சிறப்பாக இவன் வாழ வேண்டும். எனவே, அதற்கேற்ற விதத்தில் உயர்ந்த பண்புகளை வளர்த்துக் கொண்டு, சீராகவும் ஒழுங்கு கட்டுப்பாடுகளுடனும் வாழ வழி செய்து கொள்வது அவசியம்.

ஆனால், மனிதருள் ஒரு சாரார் தாம் சார்ந்துள்ள மதங்களின் மீது ஏற்பட்ட அபரிமிதமான பற்றின் காரணமாக உலக வாழ்வை, மனைவி மக்களை மற்றும் கடமைகளைத் துறந்து காடு, மலைகளிலும் ஆசிரமங்களிலும் தஞ்சமடைந்தார்கள். அங்கு தனித்துத் தவமிருந்து, தியானங்கள் புரிந்து முக்தி நிலை காண முயற்சிகளை மேற்கொண்டார்கள். இன்றும் அத்தகையவர்கள் இல்லாமலில்லை.

அதே மதங்களைச் சார்ந்த மற்றுமொரு சாராருக்கு மதம் ஒரு தனிப்பட்ட விவகாரமாகி விட்டது. ஏதோ சில கிரியைகள், மதாசார வைபங்கள், சம்பிரதாய ரீதியான சடங்குகள், திருவிழாக்கள் என்பவற்றுடன் அவர்களது மதக்கடமைகள் முடிந்து விடுகின்றன.

அவற்றுக்கு அப்பால்,அவர்களது வாழ்வு சார்ந்த மற்றைய துறைகளில், ஒன்றில் மற்றாரிடமிருந்து கடன் வாங்கிய கொள்கை வழியிலோ அல்லது தமது மன இச்சை தரும் வழியிலோ செயற்படுவர். எனவே, சம காலத்தில் அவர்கள் ஒரு மதத்தினை ஏற்றவர்களாக இருந்து கொண்டே அந்த மதத்தை நிராகரிக்கும் கொள்கை வழியில் செல்பவராக இருப்பர். தமது மதத்தின் மூல மந்திரங்களாகவும், சூது, விபச்சாரம் போன்றவற்றைத் தொழிலாகச் செய்பவர்களாகவும் இருப்பர். இப்படி மற்றைய நடவடிக்கைகளும் இருக்கும்.

அதேவேளை, அவர்களில் நல்லவர்களும் இல்லாமலில்லை. அவர்கள் மற்றவர்களுக்குத் தீங்கு விளைவிக்காத நல்ல தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு தம் வாழ்வை நடத்திச் செல்கின்றனர் என்றாலும், அவர்களும் அவர்கள் ஏற்ற மதத்தின் மூலக் கருத்துக்களுக்கு இசைவாகத் தம் வாழ்வை அமைத்துக் கொண்டதாகச் சொல்ல முடியாது. அவர்களும் தமது ஏதாவது காரியத்தைச் செய்ய முற்படும் போது தம் மதத்துடன் இணக்கமாக வருகிறதா அல்லது முரண்படுகிறதா எனப்பார்ப்பது மிகக் குறைவு. மாறாக, தம் மனதுக்கு சரியெனப்படுகிறது - செய்கிறார்கள்.

இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு அம்சம் என்னவெனில், யாரெல்லாம் முக்தி வேண்டி ஆசிரமங்களில் தியானம் செய்து கொண்டு இருக்கிறார்களோ அவர்கள் கூட தமது ஊண், உடை மற்றும் தேவைகள், ஆசிரம பரிபாலனம் போன்றவற்றுக்கு மேற்காண்பவர்களைத் தான் அண்டி நிற்க வேண்டும். ஏனெனில், இவர்கள் உழைப்பதில்லையே! இந்த நிலையில் இந்த இரு சாராரையும் உலகியல் கொள்கைகளே வழிநடத்துகின்றன என்பது தெளிவு.

இதற்கு இந்த மக்களை முழுமையாக குற்றவாளிகள் எனக் கணித்து குற்றக் கூண்டில் ஏற்ற முடியாது. இந்நிலை தோன்றுவதற்கான காரணிகள் அம்மதங்களிலும் உள்ளன.

பொதுவாக, பல மதங்களில், மனிதனின் முழு வாழ்வும் சார்ந்த அத்தனை அம்சங்களையும் குறிப்பிட்டதோர் அமைப்பில் ஒழுங்குபடுத்துவதற்கான திட்டங்கள் மிக மிகக் குறைவு.

உதாரணமாக, மனிதனின் பொருளாதாரத்துறையை அந்த மதமொன்றின் மூல அடிப்படைக் கருத்துக்கமைய சீர் செய்ய வேண்டுமாயின் அதற்கான திட்டம் என்ன?

இதே போன்று,

ஆண்-பெண் தீயொழுக்கம் பாவமானது எனக் கூறும் ஒரு மதம் அதனை இல்லாமலாக்க அறிமுகப்படுத்திய திட்டம் என்ன?

திருடுவது குற்றம் எனக் கூறும் ஒரு மதம், அதனை ஒழித்துக் கட்ட நடைமுறைப்படுத்திய திட்டம் என்ன?

இதோ இருக்கிறது என யாரேனும் ஒரு திட்டத்தை முன் வைக்கலாம். நான் இங்கு கேட்பது, அந்தந்த மதங்களின் நிறுவனர்கள் அறிமுகப்படுத்தி, அவர்கள் கண்ணெதிரே ஒரு சமூகத்தில் நடைமுறபை;படுத்தி வெற்றி கண்ட திட்டங்கள் என்ன என்பதாகும்.

இந்த வகையில் இஸ்லாம் அறிமுகப்படுத்திய அனைத்துக் கருத்துக்களும் அச்சொட்டாக நடைமுறைப்படுத்தி வெற்றி கண்ட சமுதாயமொன்று இருக்கிறது.

அதனை நாம், குர்ஆனிய சமுதாயம் என்போம். அது அல்லாஹ்விடமிருந்து அல்குர்ஆனைப் பெற்ற முஹம்மத் (ஸல்) அவர்கள் தாமாக முன்னின்று வழிகாட்டி 23 வருட காலத்திற்குள் கட்டியெழுப்பிய சமுதாயம் என்று கூறி வைக்க விரும்புகிறேன்.

அதனைப் பற்றி நீங்கள் அறிவது அவசியம்.

இஸ்லாம் மனித வாழ்வை ஆன்மீகம், உலகாதாயம் எனக் கூறு போடவில்லை. மாறாக, இரு பகுதிகளையும் இணைத்து ஓர் அமைப்பில் இயங்கச் செய்தது. எனவே, மற்ற மதங்களிலான உலகாயத் அம்சங்களிலிருந்து விடுபட்ட துறவறப் போக்கோ ஆன்மீகத்தை ஒதுக்கி விட்ட உலகாயத போக்கோ, இஸ்லாம் தோற்றுவித்த குர்ஆனிய சமுதாயத்தில் அறவே இருக்கவில்லை.

ஒருவகையில் அந்தக் குர்ஆனிய சமுதாயத்தைச் சேர்ந்த அனைவரும் துறவிகள் தாம். அதன் கருத்து, அவர்கள் குடும்ப வாழ்வை, சமூக நிர்மாணப்பணிகளை, அரசியலை மற்றும் வாழ்வியல் தொடர்புகளைத் துறந்து விட்டவர்கள் என்பதல்ல. மாறாக, அத்துறைகள் யாவற்றிலும் முழுமையாக ஈடுபட்டு காரியமாற்றி வரும் போது, அவ்வழியில் காணப்படும் பாவச் செயல்கள், தீமைகள் ஆகியவற்றைத் துறந்தவர்கள். அவற்றை விட்டுத் தூர விலகி நின்றவர்கள் என்பதே அதன் சரியான கருத்தாகும்.

முஹம்மது (ஸல்) அவர்கள் இஸ்லாமிய தூதை சமர்ப்பிக்கும் முன்னர் அவர்கள் வழிகேட்டில் இருந்தனர். பல வகையான தீமைகள் மனமுவந்து செய்பவர்களாகக் காணப்பட்டனர். பாவங்கள் செய்வதில் தமக்கிணை யாரும் இல்லை என்பது போல் நடந்து கொண்டனர். ஆனால், அவர்கள் - ஆண்களும், பெண்களும் ஒருவர் பின் ஒருவராக இஸ்லாத்தைத் தழுவ ஆரம்பித்த போது தீய பாவங்களிலிருந்து அரைகுறையாக அல்ல, முற்றாகவே ஒதுங்கி விட்டனர்.

பல தெய்வ வழிபாட்டை வீட்டுக்கு வீடு விக்கிரகங்கள் வைத்துக் கொண்டு வணங்கி வந்ததை விட்டு விட்டு ஒரே இறைவனை – அல்லாஹ்வை – மட்டும் முழுமனதுடன் ஏற்று, அடிபணிந்து வணங்கி வர முற்பட்டனர்!

பெண்களுடன் சல்லாபிப்பதை விச்சாரத்தில் ஈடுபடுவதைப் பேரின்பமாகக் கருதியவர்கள் அதை அடியோடு துறந்து விட்டது மட்டுமல்ல, பெண்களின் பாதுகாப்பு அரண்களாக மாறி விட்டார்கள். தன் உணர்வைக் கட்டுப்படுத்த முடியாது போய் தப்பித் தவறியாவது அந்தப் பாவச் செயலில் ஈடுபட்டவர்கள் தாமாக முன் வந்து இந்தப் பாவத்தைச் செய்து விட்டேன். தண்டனை தாருங்கள் எனக் கேட்டு, தண்டனை பெற்றுத் தூய்மையாகி விட்டார்கள்.

மதுபானத்தைப் புகழ்ந்து பாடி, வீட்டுக்கு வீடு பீப்பாய்களில் பத்திரப்படுத்தி பருகி வந்தவர்கள், மதுபானத்தை விட்டொழியுங்கள் என்ற இஸ்லாத்தின் தடை வந்தபோது, அதை விடுவதா? இல்லையா? என்று சிந்திக்கவில்லை. மதுப் பீப்பாய்கள் பாதைகளில் உருண்டன. மதுக் கிண்ணங்கள் தூள் தூளாயின. மதுவை அருந்திக் கொண்டிருந்தவர்கள் அதை காறி உமிழ்ந்து விட்டனர். அத்துடன் மதுவுக்கு எதிரான பிரச்சாரகர்களாகவும் மாறி விட்டனர்!

மற்றாரின் பொருளைக் கொள்ளையடித்து வாழ்ந்தவர்கள். அந்த ஈனச் செயலை முற்றாகத் துறந்தனர். அத்துடன் ஏழை எளியவர்களின் கஷ்டங்களை நிவர்த்தி செய்யவும், கடன்பட்டோரின் கடன்களைத் தீர்க்கவும் உதவினர். மேலும், மற்றவர்களின் அமானிதப் பொருட்களைத் தம் பொருட்களை விடவும் பேணுதலாகப் பாதுகாப்பவர்களாயினர்!

அன்று ஓர் அரபியின் வீட்டில் பெண் குழந்தை ஒன்று பிறந்து விட்டால் அந்த அரபி தன் இல்லத்தை விட்டுவெளியே வர வெட்கப்படுவான். பெண் குழந்தை பிறந்துள்ளது எனக் கூறுவது அவனுக்குப் பெரும் அவமானமாகத் தெரிந்தது. எனவே, அக் குழந்தையை கதறக்கதற குழி தோண்டி உயிருடன் புதைப்பது அவனது வழக்கமாகி விட்டது. அப்படி வாழ்ந்த அவர்கள் இஸ்லாத்தை ஏற்ற பொழுது ஒரு குருவிக்குக் கூட அநியாயம் செய்யாத ஜீவகாருண்யம் படைத்தவர்களாக மாறி விட்டார்கள்!!

குலக் கோத்திரப் பெருமையைப் பாடி வந்தவர்கள். தம் குலத்துக்கும் கோத்திரத்துக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தியவர்களை கொன்றொழித்து மகிழ்ந்தவர்கள். இஸ்லாத்தை ஏற்றபின் சாதாரண மக்களை சமமாக நடத்தினர் அடிமைகளாக இருந்தவர்களை அகநிறைவுடன் கௌரவித்தனர். தம் உற்ற சகோதரர்களாய் மதித்து நடத்தினர்!

இஸ்லாத்தைத் தழுவு முன் பெரும் பாவகரமாக தீமைகளைச் செய்து விட்டு அவற்றின் பெருமித்தில் திளைத்து நின்றவர்கள். இஸ்லாத்தைத் தழுவிய பின் அற்பத் தவறுகளுக்காகக் கூட அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்பவர்களாக மாற்றம் பெற்றனர். தம்மால் ஒரு சகோதரருக்குத் தீங்கொன்று நேர்ந்து விட்டால், அத்தீங்கு தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களின் மன்னிப்புக்காக ஏங்கித்தவித்தனர். கெஞ்சி நின்றனர்!

கூட்டமைப்பு முயற்சிகள்!!

மேற்காணும் விதத்தில் தீமைகளைத் துறந்து திருந்திய அவர்கள் தனித்தனியாக வாழவில்லை. மாறாக, அவர்களிடையே கூட்டமைப்பை ஏற்படுத்திக் கொண்டார்கள். ஒரே கொள்கையை ஏற்றுக் கொணட அவர்கள் அதன் வழியிலான ஒரு சமுதாயமாக அமைந்து அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தலைமையில் வீறு நடை போட ஆரம்பித்தார்கள். அந்த வகையில் பல்வேறு கூட்டு முயற்சிகள் உருவாயின. அல்லாஹ்வும் அவன் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களும் திட்டம் தந்து வழிகாட்ட அவை வளர்ச்சிப் பாதையில் செல்லாயின.

அவர்களுக்கு மத்தியில் உருவான புதிய சமூக உணர்வுகள் :

· அண்டைஅயலாருடன் இணக்கமாக வாழ்தல்

· பெரியோருக்கு மரியாதையும், சிறியோருக்கு அன்பும் செலுத்துதல்

· கோள், புறம், அவதூறு, பொய் போன்றவற்றைத் தவிர்த்தல்

· தீமைகளுக்கு இடம் கொடாது இருத்தல்

· வீண் சண்டை, சச்சரவுகளைத் தவிர்த்தல்

· ஏழைகளுக்கும், தேவையுள்ளவர்களுக்கும் உதவுதல்

· ஒழுக்க வரம்பு மீறாத வகையில், இஸ்லாம் விரும்பும் கூட்டு முயற்சிகளில் ஈடுபடல்

இவற்றில் அதிகக் கவனம் கொள்ளத் தூண்டின!

அவர்களின் பொருளாதாரச் சிந்தனையானது :

· வியாபாரம், விவசாயம் கால்நடை வளர்ப்பு போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்துதல்

· வட்டியில்லா நிதிமுறை

· ஸகாத் மற்றும் தான தர்மங்களைப் பேணுதல்

· இஸ்லாத்தின் இணக்கமான வரிகள் கொண்டுவரல்.

என்பவற்றில் அதி தீவிரமாக ஈடுபாடு கொண்டு செயல்படத் தூண்டின. அதனால், பொருளாதாரத் துறை சார்ந்த தவறுகளுக்கு வழியில்லாது போய் விட்டது.

அவர்களது அரசியல் துறை அமைப்பானது :

        · பொது நிர்வாகம், ஒழுங்கு,கட்டுப்பாடு

        · சட்டம், நீதி, தண்டனை

        · யுத்தம், சமாதானம், ஒப்பந்தங்கள்

        · முஸ்லிமல்லாதாரின் பாதுகாப்பு, உரிமைகள்

ஆகியன தொடர்பான அத்தனை அம்சங்களும் கொண்டதாக மிளிர்ந்து காணப்பட்டது.

பொதுவான வரலாற்றாசிரியர்கள் அந்தக் குர்ஆனிய சமுதாயத்து முஸ்லிம்களைக் கீழ்கண்டவாறு வியந்துரைப்பதாகக் குறிப்பிடுகிறது.

பகல் வேளைகளில் நாம் அவர்களை நோக்கினால் இவ்வுலகத்தையே கட்டி ஆள வந்தவர்கள் போல்உலக விவகாரங்களில் ஈடுபடுவதைக் காணலாம். ஆனால், இரவு வேளைகளிலோ அவர்கள் இவ்வுலகத்தை முற்றும் துறந்து விட்டவர்கள் போல் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதைக் காணலாம்.

ஒட்டு மொத்தமாகக் கூறுவதாயின் அவர்களது முழுச் சமுதாயமும் முற்றாகத் திருத்தியமைக்கப்பட்ட உறுதியும் கம்பீரமும் உடைய ஒரு கட்டிடத்தை ஒத்திருந்தது எனலாம்.

அதன் அடித்தளம்.

லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ்

என்பதாகும். அதாவது அல்லாஹ்வைத் தவிர (வணங்குவதற்கும், வழிபடுவதற்கும், சட்டம் இயற்றுவதற்கும், கீழ்படிவதற்கும், பிரார்த்தனைகள் புரிவதற்கும், நேர்ச்சைகள் வைப்பதற்கும்) வேறு இறைவன் இல்லை. முஹம்மது (ஸல்) அவர்கள் (முழு மனித சமுதாயத்திற்கும் எல்லாத் துறைகளிலும் வழிகாட்டும்) அல்லாஹ்வினுடைய (இறுதித்) தூதராவார் என்பதே அந்தக் குர்ஆனிய சமுதாயத்தின் அடிப்படை நம்பிக்கையும் நடைமுறைக் கொள்கையும் ஆகும்.


ARTICLE FROM A ONE REALISM.

Wednesday, October 12, 2011

சிரியா மீதான ரஷ்ய மற்றும் சீனாவின் தடுப்பதிகாரம்.(Veto)

Cartoon By Latuf Carlos.
 சர்வதேச உறவுகளை இன்னும் சூடாக்குவதை உறுதியாக்கும் நடவடிக்கையில், ரஷ்யா மற்றும் சீனா ஆகியவை செவ்வாயன்று  ஐ.நா.பாதுகாப்புச் சபையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நசுக்குவதற்கும், சர்வதேச பொருளாதாரத்தடைகள் விதிப்பதற்கும் கொண்டுவரப்பட்ட சிரிய ஆட்சியைக் கண்டிக்கும் ஐரோப்பிய ஆதரவுடைய தீர்மானம் ஒன்றைத் தடுப்பதற்குத் தங்கள் தடுப்பதிகாரத்தைப் பயன்படுத்தின.

அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகியவை விரோதப் போக்குடன் இதைக் கண்டித்தன; குறிப்பாக ரஷ்யாவை அது சிரிய மக்களின் இழப்பில் தன் நலன்களைச் சிரியாவில் காப்பதற்கு இதைச் செய்துள்ளது என்று குற்றம் சாட்டின. மிகவும் திமிர்த்தனமான தாக்குதலானது அமெரிக்கத் தூதர் சூசன் ரைஸிடம் இருந்து வந்தது; அமெரிக்கா “ஒரு அவசர அறநெறிச் சவாலைத் தீர்க்கவும், பிராந்தியச் சமாதானம், பாதுகாப்பு ஆகியவற்றிற்கு பெருகிய அச்சுறுத்தலைத் தீர்ப்பதில் தவறவிட்டதற்காக” ஐ.நா.விடம் அமெரிக்கா சீற்றம் கொண்டுள்ளது என்று அவர் அறிவித்தார்.

ரஷ்யா, சீனா ஆகியவற்றைப் பெயரிடாமல், லிபியாவில் நேட்டோவின் தற்போதைய அப்பட்டமான நவ காலனித்துவ தலையீட்டுடன் இணைவாக இதைச் சுட்டிக்காட்டப்பட்டதை உதறித்தள்ளிய ரைஸ், “அத்தகைய கருத்து சிரிய மக்களுக்குத் துணை நிற்காமல் சிரிய ஆட்சிக்கு ஆயுதங்களை விற்பவர்கள் எளிதாகப் பேசுவது” என உதறித்தள்ளினார். சிரியத் தூதர் பஷர் ஜபாரி அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவு கொடுப்பதின்மூலம் “இனக் கொலையில் பங்கு பெறுகிறது” என்று குற்றம் சாட்டியபோது ரைஸ் வெளிநடப்புச் செய்தார். அமெரிக்கா பலமுறையும் இஸ்ரேலைக் குறைகூறும் தீர்மானங்களை அதன் தடுப்பதிகாரச் சக்தியைக் கொண்டு தடுத்துள்ளது.



 ரைஸின் கருத்துக்கள் பாசாங்குத்தனமானவை. சிரிய ஆட்சியின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளைக் கண்டிக்கையில், அமெரிக்க மற்றும் ஐரோப்பியச் சக்திகள் அப்பிராந்தியத்தில் தங்கள் நட்பு அரசாங்கங்கள் எடுக்கும் அடக்குமுறை வழிவகைகளைப் பற்றிச் சிறிதும் பொருட்படுத்துவதில்லை; இதில் சௌதி முடியாட்சியும் அடங்கும்; இந்த ஆண்டு வரை எகிப்திய சர்வாதிகாரி ஹொஸ்னி முபாரக்கின் ஆட்சியும் அடங்கும்; பலவற்றுள் இந்த இரு நாடுகளின் பெயர்கள்தான் குறிக்கப்படுகின்றன. லிபியாவில் உள்ளதைப் போல் அமெரிக்க மற்றும் ஐரோப்பியச் சக்திகளின் அக்கறை ஜனநாயக உரிமைகள் பற்றியவை அல்ல; மாறாக மத்திய கிழக்கில் தங்கள் பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களை முன்னேற்றுவிப்பதுதான்.

அமெரிக்காவும் மற்ற முக்கிய ஐரோப்பியச் சக்திகளும் ஏற்கனவே சிரியாவில் “ஆட்சி மாற்றம்” என்பதைத் தங்கள் செயற்பட்டியலில் இருத்திவிட்டன; ஆகஸ்ட் மாதமே சிரிய ஜனாதிபதி பஷர் அசாத் இராஜிநாமா செய்யவேண்டும் எனக் கோரின. பிரான்ஸ், பிரட்டன் மற்றும் ஜேர்மனி ஆகியவை “அனைத்து நெறியையும் அசாத்” இழந்துவிட்டார் என்று அறிவித்து ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டன. அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் தங்கள் நலன்களுக்கு இன்னும் வளைந்துகொடுக்கக் கூடிய ஆட்சியை அங்கு நிறுவ முற்படுகின்றன; குறிப்பாக சிரியாவின் நட்பு நாடான ஈரானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் அதைத் தனிமைப்படுத்தவதற்கும் ஆகும்.


 வாஷிங்டனுடன் இணைந்த வகையில், பிரிட்டிஷ் வெளியுறவு மந்திரி வில்லியம் ஹேக் நேற்றைய இத்தடுப்பதிகாரம் “பெரும் தவறு, வருந்தத்தக்கது” என்றார். “நம்மால் முடிந்த அளவிற்கு அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில்” பிரிட்டன் முயற்சிகளை இருமடங்கு ஆக்கும் என்று ஹேக் தீயமுறையில் அறிவித்தார். இந்த வாக்கு “பாதுகாப்புச் சபைக்கு ஒரு சோகமான தினம்” என்று முத்திரையிட்ட பிரெஞ்சுத் தூதரகம் ஜேராட் அரோட் சிரியாவிற்குள் இருக்கும் அசாத் மீதான எதிர்ப்புக்களுக்கு “உறுதியான ஆதரவு” உண்டு என்று உறுதிமொழியளித்தார். அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஏற்கனவே தத்தம் தனித்தனிப் பொருளாதாரத் தடைகளை சிரியா மீது சுமத்தியுள்ளன; இதில் ஐரோப்பிய சக்திகளைப் பொறுத்தவரை, சிரியாவில இருந்து எரிசக்தி இறக்குமதிகள் மீது கடுமையான தடை ஏற்கனவே சுமத்தப்பட்டுள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகியவை சிரியாவைச் சுரண்டுவதற்கு, அதற்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் வகையில் ஐ.நா. தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்படும் என்று தெளிவாக நம்பியிருந்தன. செவ்வாய் தீர்மானமான இலக்கு வைக்கப்படும் பொருளாதாரத் தடைகள் மற்றும் ஆயுதங்கள் அளிப்பதைத் தடுப்பது என்பது முதலில் ஆகஸ்ட் மாதமே முன்வைக்கப்பட்டது. ஆனால் இறுதித் தீர்மானமும், சிரியாவின் “தீவிர, முறையான” மனித உரிமைகள் மீறப்படல் பற்றியதைக் கண்டிக்கும் தீர்மானமும்,  பாதுகாப்புச் சபையை 30 நாள் அவகாசத்திற்குப் பின் குறிப்பிடப்படாத நடவடிக்கைகளை சிரியாவிற்கு எதிராகப் பரிசீலிக்க அனுமதிக்கும்.

வாக்கெடுப்பின் போது சீனா.
 லிபியாவில் பெரும் இழப்புக்களைத் தாங்கியுள்ள ரஷ்யா மற்றும் சீனா இதே போன்ற செயல் சிரியாவில் வரக்கூடாது என்பதற்கு எதையும் செய்யத்தயாராக இருந்தன. லிபியாவைப் பொறுத்தவரை, நேட்டோ சக்திகள் “குடிமக்களைப் பாதுகாப்பதற்கு” பறக்கக் கூடாத பகுதி என்ற விதியைச் சுமத்துவதற்கு பெற்றிருந்த தீர்மானத்தை, முழு அளவிலான வான்தாக்குதலை லிபியாவின் சர்வதிகாரியை அகற்றுவதற்கும் கடாபி எதிர்ப்புச் சக்திகளுக்கு ஆதரவு கொடுப்பதற்கும் பயன்படுத்தியது. இதன்விளைவாக, லிபியாவில் கணிசமான பொருளாதார நலன்களைக் கொண்டிருந்த ரஷ்யா மற்றும் சீனா ஆகியவைகள் இழப்புக்களைச் சந்திக்க நேரிட்டது.

ரஷ்யாவிற்கு சிரியாவில் இன்னும் கூடுதலாக இழப்பதற்கு உள்ளது. டமாஸ்கஸுடன் மாஸ்கோ நீண்டகால பொருளாதார, மற்றும் மூலோபாயப் பிணைப்புக்களைக் கொண்டுள்ளது. மாஸ்கோ டைம்ஸ் கருத்துப்படி,  ரஷ்யத் தூரகம் சிரியாவிற்கு 1.1 பில்லியன் டாலர்கள் ஏற்றுமதிகளையும் 2009ல் 19.4 பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்ட முதலீடுகளையும் கொண்டிருந்தது எனக் கூறியதாகத் தெரிகிறது. ரஷ்ய நிறுவனங்ளும் கூட்டு எண்ணெய் வணிகத்திலும், கட்டமைப்புத்துறையிலும், கணிசமான ஆயுதங்கள் விற்பனையிலும் தொடர்பு கொண்டவை ஆகும். சிரியத் துறைமுகமான டார்ட்டௌஸில் தன் கடற்படைக் கப்பல்களுக்கான பணிமனை ஒன்றை ரஷ்யா கொண்டுள்ளது; முன்னாள் சோவியத் குடியரசுகளைத் தவிர இத்தகைய இராணுவ வசதி சிரியா ஒன்றில்தான் உள்ளது. சீனாவும் சிரியாவில் கணிசமான பொருளாதார நலன்களைக் கொண்டுள்ளது.

ஐ.நா. தீர்மானத்தை எதிர்க்கையில் ரஷ்ய தூதர் விடாலி சுர்க்கின் “இதுமோதல் தத்துவ அடிப்படையைத் தளமாகக் கொண்டுள்ளது” என்றும் அச்சுறுத்தல் நடவடிக்கை எதுவும் “ஏற்க இயலாதது” என்று விவரித்தார். அசாத் அகல வேண்டும் என்னும் மேற்கின் அழைப்புக்களுடன் சேர்ந்து, இத்தீர்மானம் சிரியாவில் “முழு அளவு உள்நாட்டுப்போரைத் தூண்டியிருக்கக் கூடும்”, அது “முழு மத்தியக் கிழக்கிலும் அழிவை ஏற்படுத்தக்கூடும்” என்று அவர் எச்சரித்தார். 

ரஷ்ய வெளியுறவு அமைச்சரகச் செய்தித் தொடர்பாளர் அலெக்சாந்தர் லுகஷேவிச் மாஸ்கோவில் நிருபர்களிடம் கூறினார்: “ஆரம்பத்திலேயே நாங்கள் லிபியா பற்றிய ஐ.நா.தீர்மானத்தை ஒட்டி நடந்த மேற்கத்தைய கூட்டணிகள், நேட்டோ ஆகியவற்றிற்கு முன்மாதிரியாகக் கூடாது, அவை முற்றிலும் ஏற்கத்தக்கதில்லை என்று எச்சரித்தோம்.” ரஷ்யா முன்வைத்த தீர்மானம் சிரிய விவகாரங்களில் தலையீடு கூடாது, சிரிய உள்நாட்டு மோதல்கள் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்று கூறியதானது அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளால் நிராகரிக்கப்பட்டது.

ரஷ்யா மற்றும் சீனாவின் தடுப்பு அதிகாரங்களுடன், “எழுச்சி பெற்றுவரும் பொருளாதாரங்கள்” எனப்படும் BRICSகுழு நாடுகள் என்று அழைக்கப்படுபவை –தென் ஆபிரிக்கா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகியவை—தீர்மானத்தில் பங்கு பெறவில்லை. இந்நாடுகள் மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் ஆக்கிரோஷ நடவடிக்கைகள் உலகின் மற்ற பகுதிகளிலும் தலையீடுகளுக்கு வகை செய்யும் என்றும் அவற்றின் நலன்களைச் சமரசத்திற்கு உட்படுத்திவிடும் என்றும் கவலை கொண்டுள்ளன.

லிபியாவைப் பற்றிய வெளிப்படையான குறிப்பில், தென் ஆபிரிக்கத் தூதர் Baso Sangqu பாதுகாப்புச் சபை தவறாகப் பயன்படுத்தப்படுகிறது, அதன் தீர்மானங்கள் செயல்படுத்துவது உரிய வரம்பிற்கு அப்பால் சென்றுவிடுகின்றன என்று கூறும் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். சிரியா மீது தண்டனை நடவடிக்கைகள் சுமத்தப்படுவது குறித்துத் தான் கவலைப்படுவதாகவும், அவை “மற்ற நடவடிக்கைகளுக்கு ஒரு முன்னோடி” எனத் தான் நம்புவதாகவும் தென் ஆபிரிக்கா கூறியுள்ளது.  தென் ஆபிரிக்கா பங்கு பெறாதது குறித்து விளக்குகையால், பாதுகாப்புச் சபை ஆட்சிமாற்றத்திற்கான மறைமுகச் செயற்பாட்டுத்திட்டத்தில் பங்கு கொள்ளக்கூடாது என Sangquவலியுறுத்தினார். 

பிரிட்டனும் பிரான்ஸும் ஏற்கனவே தெளிவாக்கிவிட்டதைப் போல், ஐ.நா. தீர்மானத்தின் தோல்வி அசாத் ஆட்சியை அகற்றுவது விரைவாக்கப்படுவதைத் தடுக்காது. அமெரிக்காவும் தன் நட்பு நாடுகளும் பாதுகாப்புச் சபைக்கு முன் புதிய தீர்மானம் ஒன்றை முன்வைப்பது குறித்துப் பரிசீலித்துவருவதாக கார்டியன் கூறியுள்ளது. இதே சக்திகள் சிரியாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்னும் தங்கள் பிரச்சாரத்தை மற்ற நாடுகளிலும் கூடுதலாகச் செய்வர் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை

கடந்த வார இறுதியில் இஸ்டான்புல்லிலுள்ள சிரிய எதிர்ப்புக் குழுக்கள் கூடி ஒரு சிரியத் தேசியக் குழுவை அமைத்தன—இது லிபியாவில் நேட்டோ ஆதரவிலுள்ள மாற்றுக்கால தேசியக் குழுவின் வழிவகையில் உள்ளது. “சர்வதேச சமூகத்திடம் இருந்து” இது ஆதரவை நாட இருக்கிறது. புதிய அமைப்பை அறிவித்து, பாரிசை தளமாகக் கொண்ட உயர்கல்வியாளர்  Burhan Ghalioun குழு அசாத்திற்கு அமைதியான எதிர்ப்பிற்கு அழைப்புவிடுத்து சிரியாவில் வெளியார் தலையீட்டையும் எதிர்க்கிறது. ஆனால் வாஷிங்டன் போஸ்ட் எதிர்ப்பு குழுக்களுக்கு பெருகும் ஆதரவு குறித்து, குறிப்பாக சிரியாவிற்குள், என்பதைத் தெரிவித்து சர்வதேச இராணுவத் தலையீட்டிற்கு அழைப்பு விடுத்துள்ளது.

சிரிய தேசியக் குழு இரக்கமற்ற அசாத் ஆட்சியை விட சிரிய மக்களின் நெறியான ஜனநாயக விழைவுகள் எதையும் பிரதிபலிக்கவில்லை. அதேபோல் லிபியாவிலுள்ள தேசியக் குழுவை விடவும் பிரதிபலித்துவிடவில்லை. சிரிய முலாளித்துவத்தின் பிளவுப் பிரிவு அமைப்புக்களின் சிதைந்த கூட்டணிதான் இது. இப்பிரிவுகள் தங்கள் ஜனநாயக விரோத ஆட்சியை டமாஸ்கஸில் மேற்கத்தையச் சக்திகளின் ஆதரவுடன் நிறுவ முற்படுகின்றன.

இன்னும் பரந்த முறையில் ஐ.நா. தீர்மானம் ரஷ்யா மற்றும் சீனாவின் தடுப்பு அதிகாரத்திற்கு உட்பட்டுள்ளது உலக அழுத்தங்கள் அதிகப்படுவதைத்தான் குறிக்கும். இந்த ஆண்டு முன்னதாக லிபியத் தீர்மானத்தில் பங்கு பெறாத நிலையில், இப்பொழுது இரு நாடுகளும் அதேபோன்ற செயல் மீண்டும் நடத்தப்படுவதைத் தடுக்க உறுதியான தெளிவுடன் இருந்தன; இதனால் அவற்றின் அமெரிக்க, ஐரோப்பிய உறவுகள் சேதம் அடையலாம் என்ற திறன் இருந்தபோதிலும் கூட. இதில் உண்மையான ஆபத்து, முக்கிய மூலோபாயப் பொருளாதார நலன்கள் குறித்த கடுமையான போட்டியானது, அணுசக்தி கொண்டுள்ள நாடுகளிடையே பரந்த பூசலைத் தூண்டும் திறன் உடையது என்பதுதான்.



பின் குறிப்பு 

உலகில் நடக்கும் விடயங்களை பார்க்கும் போது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.நாம் எவ்வளவு ஏமாற்றப்படுகிறோம் என்பதை நினைக்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது.உலக சனத்தொகையில் ஒன்றரை பில்லியன் முஸ்லிம்கள் இருந்தும் உலகில் 55 க்கும் மேற்பட்ட முஸ்லிம் நாடுகள் இருந்தும் நமது முஸ்லிம் நாடுகளுக்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்க யாருமே இல்லையே என்னும் போது மிகவும் கஷ்டமாக இருக்கிறது.இந்த பதிவு சிரியாவின் ஜனாதிபதிக்கு ஆதரவான பதிவல்ல என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன் மக்கள் ஒரு தெளிவு பெறவே இந்த பதிவை இங்கே பிரசுரித்தேன்.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் இதே மாதிரி தடையுத்தரவு லிபியாவுக்கு எதிராக கொண்டு வந்த போது இந்த இரு நாடுகளும் மெளனமாக இருந்துவிட்டு தற்போது சிரியாவுக்காக எழுந்து நிட்பதேன்றால் அதில் ஆயிரம் அர்த்தம் இருக்கிறது.மேற்கு நாடுகளுக்கோ அல்லது சீனா மற்றும் ரஷ்யாவுக்கோ மத்திய கிழக்கில் முக்கியமாக முஸ்லிம் நாடுகளில் ஜனநாயகத்தை (இதுவும் ஒரு குப்பை) நிலைநிறுத்த வேண்டும் என்று எந்த விதமான எண்ணமும் இல்லை.அவர்களின் முழு நோக்கமும் வியாபாரம் தான்.சிரியாவில் பில்லியன் கணக்கில் முதலிட்டுள்ள ரஷ்ய மற்றும் சீனா போன்ற நாடுகள் தற்போதைய ஆட்சி மேற்குலகின் ஆதரவுடன் வீழ்ந்தால் அவர்களின் வியாபாரம் பாதிக்குமே என்பதே முதலும் கடைசியுமான எண்ணம்.நேட்டோவுடன் சேர்ந்து  கொண்டு மேற்குலக நாடுகளும் அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட போராளிக் குழுவும் லிப்யாவில் பெரிய மனித அவலத்தை நிலைநிறுத்திக் கொண்டு மேற்குலகின் வியாபர நலன்கள் பாதுகாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.அதே போல் இங்கு சிரியாவில் கொஞ்சம் வித்தியாசமாக ஏற்கனவே மனித அவலத்தை மேட்கொண்டிருக்கும் ஆட்சியாலனுடன்  சேர்ந்து கொண்டு ரஷ்யாவும் சீனாவும் இன்னுமொரு மனித அவலத்தை மேடை எற்றிக்கொண்டிருக்கின்றன.கடைசியில் இழப்புகளை சந்த்திக்கப்போவது மக்களே அன்றி வேறு யாருமல்ல.

 

இது www.wsws.com இணையத்தளத்தில் வெளியான கட்டுரையின் தமிழாக்கமாகும்.இக்கட்டுரையை எழுதியவர் MR.Peter Symond என்பவராவார்.எல்லா கட்டுரைகளும் விமர்சனத்துக்கு உட்பட்டவையே.தவறுகள் இருந்தால் மன்னிக்கவும் சுட்டிக்காட்டவும்.
ஜசாகள்ளஹு ஹைர்.
உங்கள் நண்பன் 
எம்.ஹிமாஸ் நிலார்.

Monday, October 10, 2011

குப்ரின் மீது எழும் தனிமனிதனதும் சமூகங்களினதும் வரலாற்று முடிவு.


நிராகரிப்பாளர்களின் செயல்கள் வெட்;டவெளியில் தோன்றும் கானல் நீரை ஒத்தவை. தாகமுடையோன் அதனை நீரென்றே கருதி விடுகிறான். அங்கே வந்து பார்க்கும் போது தான் அது எதுவுமல்ல என அவனுக்குத் தெரிகிறது. அங்கே அவன் அல்லாஹ்வைக் காண்பான். அல்லாஹ் அவனது கணக்கைப் பூரணமாகத் தீர்த்து விடுகிறான். அல்லாஹ் மிக விரைவாகக் கணக்குக் கேட்கக் கூடியவனாவான். (ஸுரா நூர் : 39)

இந்த வசனம் இறைநிராகரிப்பாளர்களின் செயல்களுக்கு உதாரணம் கூறுகின்றது. அச்செயல்கள் எத்தகைய பெறுமானமும் அற்றவை என்பதே இந்த உதாரணத்தின் சுருக்கமான பொருள்.

இஸ்லாம் வாழ்க்கையை உலகம் என்ற சிறிய, குறுகிய பகுதியோடு மட்டும் முடித்துக் கொள்ளவில்லை. மனிதன் உலகில் தோன்றியது தொடங்கி சுவர்க்கம் அல்லது நரகம் என்பது வரையில் வாழ்க்கைச் சாலை நீண்டிருக்கின்றது என்பது அதன் திட்டவட்டமான கருத்தாகும்.

செயல்களின் பெறுமானம் இந்த கணிப்பீட்டை வைத்தே மதிப்பிடப்படல் வேண்டும். இந்த வகையில் ஈமானின் அடிப்படையில் செயல்கள் அமையாத போது அது எந்தப் பயனும் அற்றதாக பெறுமானம் இல்லாததாக மாறி விடுகிறது.

இத்தகைய பரந்த கண்ணோட்டத்தில் மனிதன் செயல்களை நோக்குவதில்லை. குறிப்பாக பௌதிக உலக முன்னேற்றங்களிலும் மதச்சார்பற்ற சிந்தனையிலும் மூழ்கி, மூச்சுத் திணறிக் கெர்ணடிருக்கும் தற்கால மனிதன், உலோகாயத அடிப்படையில் செயல்கள் நோக்குகிறான்.

பௌதிக உலகில் மனிதனின் சாதனைகள் இன்று அளப்பரியனவாகும். இயற்கையின் சக்திகளைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் அவனது முயற்சி படிப்படியாக வெற்றியடையத் துவங்கியதும், வெற்றிப் பாதையில் கடவுட் கொள்கை அநாகரீக காலத்தில் வாழ்ந்த பயந்த, பலவீனமான மனிதனுக்கே தேவைப்பட்டது. பலமும்,சக்தியும் கொண்டு பிரபஞ்சத்தையே தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முயலும் நவீன மனிதனுக்குக் கடவுள் ஏன்? அவன் தாழ் பணிய வேண்டிய அவசியம் தான் என்ன, என்று அவன் பேசத் துவங்கி விட்டான்.

இறைநிராகரிப்பை அடிப்படையாகக் கொண்ட சமூக வாழ்வு பொதுவாக வரலாறு நெடுகிலும் இவ்வாறு தான் அமைந்துள்ளது. ஷுஅரா, ஹுத் போன்ற ஸுராக்கள் ஆத், ஸமூத் சமூகங்கள் பௌதிக உலக வாழ்வின் கண்ட முன்னேற்றங்களால் எத்தகைய மனோ நிலை கொண்டு வாழ்ந்தார்கள் என்பதை விளக்குகின்றன.

அவர்களது செயற்பாடுகளால் பௌதிக உலகில் அதிசயங்கள் நிகழ்ந்தன. அற்புதமான காலகட்டடக் கலைத்திறன் கைவரப் பெற்றவர்களாக வாழ்ந்த அவர்கள், கோட்டை கொத்தளங்களை நிர்மாணித்து, பூமியில் அதிசயம் புரிந்தனர். நாம் நிரந்தரமாக வாழ்வோம், எமக்குக் கிடைத்திருக்கும் செல்வமும் பலமும் அழிந்து போகப் போவதில்லை என அவர்கள் கருதத் தலைப்பட்டனர். ஹுத், ஸாலிஹ் (அலை) ஆகிய இரு தூதர்களும் இவர்கள் இந்தப் போக்கைக் கண்டித்தார்கள். அல்லாஹ்வின் பால் அவர்களை அழைக்க இத்தூதர்கள் அரும்பாடுபட்டார்கள். இறுதியில் அவர்களுக்குச் செவிமடுக்காத அனைவரையும் அல்லாஹ் அழித்து விட்டான். ஸுரா ஷுஅரா 123-150 வரையுள்ள வசனங்கள் இக்கருத்தை விளக்குகின்றன.

சமூகங்கள் மட்டுமல்ல, தனிமனிதர்களின் நிலையும் இத்தகையதே. செல்வமும் அதிகாரமும் கையில்குவியும் போது இறை நிராகரிப்பை அடித்தளமாகக் கொண்டெழும்பும் தனிமனித வாழ்வும் இதே மனோநிலையைக் கொண்டதாக அமைகிறது.

காரூன், மூஸா (அலை) அவர்களின் சமூகத்தில் வாழ்ந்த பெரும் பணக்காரன், தான் சேமித்த செல்வங்கள் அனைத்தும்தனது அறிவைக் கொண்டு சம்பாதித்தவை என அவன் கருதினான். தன் உழைப்பு தனக்கு வாழ்வளிக்கும் எனக் கூறினான். ஆனாலும் அவனுடைய உழைப்பு அவனைக் காக்கவில்லை. அவன் கட்டிக் காத்த செல்வம் அவனுக்குப் பிரயோசனம் கொடுக்கவில்லை. அவனும் அழிந்து போனான். இக்கருத்தை அல்குர்ஆன் ஸுih அல் கஸஸல் 76-86 வரையுள்ள வசனங்களில் விளக்குகிறது.

இரு நபர்களில் ஒருவன் பெரும் பணக்காரன். பெருந்தோட்டங்களுக்குச் சொந்தக் காரன், மற்றவன் ஏழை. தன்னிடம் குவிந்திருக்கும் செல்வத்தால் மதிமயங்கிப் போனான் பணக்காரன். இந்தத் தோட்டமும் நிறைந்த செல்வமும் தன்னை வாழ வைக்கும். தன் செல்வம் என்றும் அழிந்து போகாது என்ற மனப்பிரமை அவனுக்கு ஏற்பட்டு விடுகிறது. ஆனால் அவனது தோட்டம் அழிந்து, சேர்த்து வைத்த செல்வமும் அழிந்தது. உண்மை அப்போது தான் அவர்களுக்கு விளங்கியது. இச்சம்பவத்தை அல்லாஹ் ஸுரா கஹ்ப் 32-42 வரையுள்ள வசனங்களில் விளக்குகிறான்.

இறைநிராகரிப்பை அடிப்படையாகக் கொண்டு எழும் தனி மனித வாழ்வு, சமூக வாழ்வு, இறைநிராகரிப்பை அடித்தளமாகக் கொண்டமையும் நாகரீகம், அனைத்தும் எத்தகைய பிரயோசனத்தையும் கொடுக்காமலேயே அழிந்து போகும் என்பது மிக அடிப்படையானதொரு உண்மை. இதனை நிரூபிக்கும் வகையில் அல்குர்ஆன் முன்வைக்கும் வரலாற்று நிகழ்வுகளில் சிலரே மேலே தரப்பட்டன. இக்கருத்தை சுருக்கமாகத் தருகிறது கீழ்வரும் இறைவசனம் :

நாம் நல்லதையே செய்கிறோம் என்ற எண்ணத்தில் உலக வாழ்வின் முயற்சிகள் பிரயோசமற்று வீணாகிப் போன செயல்களைப் பொறுத்தவரையில் மிகப் பெரும் நஷ்டவாளிகளை உங்களுக்குச் சொல்லட்டுமா? அவர்கள் தான் தங்களது இரட்சகனையம் அவனைச் சந்திப்பதையும் மறுப்பவர்கள். (கஹ்ப் : 103-105)

முற்றிலும் இந்தக் கருத்தைத் தான் அல்குர்ஆன் மேற்குறிப்பிட்டுள்ள உதாரணத்தில் தருகிறது.

இந்த உதாரணத்தை இருவகையில் விளக்க முடியும். மறுமையோடு இணைத்து இந்த உதாரணத்தை நோக்க முடியும். உலக வாழ்வை மட்டும் வைத்தும்நோக்க முடியும். செயல்களின் உண்மைப் பெறுமானம் மறுமையில் அது கொடுக்கும் விளைவைப் பொறுத்ததே. இந்த உலகம் நிரந்தரமானதல்ல. மனிதன் இந்த உலகில் என்ன உழைத்தாலும், என்ன திரட்டினாலும் அவை அனைத்தும் அழிந்து போகும். அவனும் அழிந்து போவான்.

இக்கருத்தோடு இணைத்து உதாரணத்தை நோக்குங்கள். உதாரணத்திற்கு எடுத்துக் கொண்ட பொருட்கள் கானல்நீர், தாகம் கொண்டவன், தாகம் கொண்டவன் நீர் தான் என எண்ணிக் கொள்ளும் பிரமை. அதனைப் பின்பற்றி ஓடும் அவனது நடவடிக்கை. தாகம் கொண்டோன் - வாழ வேண்டும் என்ற தாகம் கொண்டோன் - உலகப் பொருட்களே தன் தாகத்தைத் தீர்க்கும் என நம்புகிறான். ஏனெனில் அதற்கு அப்பால் பார்க்கும் ஆற்றல் அவனுக்கில்லை. அவனது முயற்சி முழுக்க முழுக்க உலகப் பொருட்களைத் திரட்டுவதிலேயே செலவாகிறது. உணவு, உடை, வீடு, சுகாதார வசதிகள் இப்படித் தேடித் தேடிக் குவிக்கிறான். தன்னைக் காக்கும் அரும் பொருட்கள் இவை என அவன் நம்புகிறான்.

தூரத்தில் நின்று பார்க்கும் போது - தாகத்தால் பார்க்கும் போது வெட்டவெளியிலே கானல் நீர் உண்மை நீர் போன்று தெரிகிறது. அள்ளிப் பருக ஓடோடி வருகிறான். அது கானல் நீருமல்ல - எதுவுமல்ல - வெறும் பிரமை எனப் பின்னால் புரிகிறது.

தன்னைக் காக்கும் அரும்பொருட்கiளாகத் தான் தோற்றமளித்தன. உலகப் பொருட்களும், ஆனால் தான் சேர்த்து வைத்த பொருட்கள் இருக்க – அவற்றைப் பாதி அனுபவிக்கும் போதே அல்லது அனுபவிக்க முடியாமலேயே இறந்து போகிறான் மனிதன். மஹ்ஷர் வெளியில் எழும்புகிறான். சுவர்க்கத்தையும் நரகத்தையும் பார்க்கிறான். தனது இறந்த கால வாழ்வை நினைத்துப் பார்க்கிறான். அவனுக்குப் புரிகிறது. நிச்சயமான இந்த மறுமை வாழ்வு தான் உண்மையான வாழ்வு (அன்கபூத் : 64) என்று.

நான் இவ்வளவு காலமும் உலகம் தான் வாழ்வு என்ற மாயையில் ஏமாந்து போனேன். வாழ்க்கைக்கான பொருட்களை அடக்கியிருக்கும் வாழும்வீடு என்ற உலகத்தின் காட்சி வெறும் பொய்த் தோற்றம். கானல் நீர் என்பது அப்போது தான் அவனுக்குப் புரிகிறது. அந்தப் பொய் மானைத் தொடர்ந்து ஓடி வந்தேனே எத்தகைய கைசேதம்.

சேமித்த செல்வம், பெற்றிருந்த அதிகாரம், அனைத்தும் அழிந்து போயின. எதுவும் இங்கில்லை. அவை இல்லாவிடடாலாவது பரவாயில்லை. தான் யாரை நிராகரித்தேனோ அந்த அல்லாஹ் நிற்கின்றானே என்பது தான் அடுத்த அதிர்ச்சி நிராகரிப்பாளனுக்கு

அல்லாஹ் அவனது செயல்களுக்கான கணக்கைப் பூரணமாகத் தீர்த்து விடுவான். இந்த உலக வாழ்வு மறுமை வாழ்வோடு ஒப்பிடும் போது மிகக் குறுகிய காலம். அது மட்டுமல்ல. பொதுவாக இந்தப் பூமியின் வயதோடு ஒப்பிடும் போது தனிமனித வாழ்வு என்பது மிக மிக அற்பமான காலப்பகுதியாகும். அல்லாஹ்வின் கேள்வி கணக்கு மிக விரைவானது. நீண்ட நெடுங்காலம் நிராகரிப்பை இவ்வுலகில் அவன் விட்டு வைக்கவில்லை.

வாழ்க்கைத் தாகத்தைத் தீர்க்க உலகத்தைக் கட்டியாளும் எல்லா மனிதர்களுக்கும் இந்த உதாரணம் பொருந்தும். இந்த வாழ்வு நிலையற்றது. மறுமையில் மஹ்ஷர் (கணக்குத் தீர்க்கும்) வெளியில் நின்று பார்க்கும் போது தான் எவ்வளவு மோசமாக நாம் ஏமாந்து விட்டோம் என்பதை இறைநிராகரிப்பில் வாழ்ந்த ஒவ்வொரு தனிமனிதனும் விளங்கிக் கொள்வான்.

அல்குர்ஆன் சொன்ன உதாரணத்தின் ஒரு பக்கம் இது. அது தரும் இன்னொரு கருத்தும் நோக்கத்தக்கது.

இறைநிராகரிப்பின் அடிப்படையில் எழும் சமூக ஒழுங்கும் நிலைக்காது. அது சீர்குலையக் கூடிய தண்டனையைப் பெறும். இது குர்ஆன் கூறும் தவிர்க்க முடியாத விதி. உலக வாழ்விலேயே அதற்கான தண்டனையை அது பெறும். தனி மனிதர்கள் செய்யும் தீமைகளுக்கான கூலி சில வேளை இவ்வுலகிலே கிடைக்காது போகலாம். ஆனால், சமூகம் செய்யும் தீமை, இறைநிராகரிப்புக்கான கூலி நிச்சயமாகக் கிடைத்தே தீரும்.

எத்தனை பிரதேசங்கள் அல்லாஹ்வினதும் அவனது தூதர்களினதும் கட்டளைகளைப் பிடிவாதத்தோடு புறக்கணித்தன. அவற்றை நாம் கடுமையாக விசாரித்தோம். யாரும் நினைத்துப் பார்க்காத கடும் தண்டனையைக் கொடுத்தோம். (தலாக் : 8)
இக்கருத்தின் அடிப்படையில் இந்த உதாரணம் நோக்கப்படும் போது அது கொடுக்கும் கருத்து சற்று வித்தியாசப்படுகிறது. பௌதிக உலகும் அதன் செல்வங்களும் வாழ்வின் அடிப்படை என நினைத்து அவற்றைத் தளமாகக் கொண்டு எழுகிறது ஒரு சமூக வாழ்வு. அச்சமூகத்தின் செயல்கள் மிகப் பெரிய விளைவுகளைத் தருகின்றன. வாழ்க்கை வசதிகள் பெருகுகின்றன. எண்ணற்ற கண்டுபிடிப்புகள், இயற்கையைத் தன் கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டு வரும் மிகப் பெரிய முயற்சிகள் சிறிது சிறிதாக வெற்றியடைகின்றன.

வாழ்க்கைத் தாகம் தீர்ந்தது. அதோ தெரிகிறது. உன்னத வாழ்வு, வறுமையும், பட்டினியும், பிணியும் ஓடி ஒழியப் போகின்றன. மனிதன் மரணத்தையே வென்று விடப் போகிறான் என்ற எண்ணம் தோன்றுகிறது. வாழ்வை அனுபவிக்கப் போகிறேன் என்று எண்ணி, நாகரீகத்தின் உச்சியில் நிற்கும் போது சேர்த்ததெல்லாம் கானல் நீராகத் தோன்றத் துவங்குகிறது. வாழ்க்கைத் தாகத்தைத் தீர்க்க இவைகளால் முடியாது. இவை வாழ்க்கையின் புறத்தேவைகளை மட்டுமே தீர்க்க முடியும். அக வாழ்வு சீரழிந்;ததால் புறவாழ்வு அர்த்தமற்றதாகி விடுகிறது. புறவாழ்வின் செல்வங்கள் அழிவுக்கும் சீர்கேட்டுக்கும் பயன்படத் துவங்குகின்றன. வாழ்க்கை;காகப் பௌதிக உலகின் முன்னேற்றங்களைத் தேடிய மனிதன் ஏமாற்றம், விரக்தி, தற்கொலை, மனநோய்கள் இவற்றால் பீடிக்கப்படுகிறான். நான் கானல் நீரை நீராக நினைத்து ஓடி வந்திருக்கிறேன் என்று அப்போது அவனுக்குப் புரிகிறது.

சமூக வாழ்வுக்கு அல்லாஹ் விதித்த சட்டம் தொழிற்படத் துவங்குகிறது. அல்லாஹ் தன் கணக்கை மிகப் பூரணமாகவே தீர்த்து விடுகிறான். அழிவுக்கு உட்படுகிறது. அந்தச் சமூக வாழ்வு. கட்டியெழுப்பிய நாகரீகத்தின் வெறும் தடயங்களும் அடையாளங்களுமே எஞ்சுகின்றன.




ARTICLE BY - உஸ்தாத் எம்.ஏ.எம்.மன்ஸூர் 
(நன்றி : பயணம்)


Sunday, October 9, 2011

காம்ப் டேவிட் கட்டுக்கதை - The Myth Of Camp David.

2000 காம்ப் டேவிட் உச்சி மாநாடு.


2002 April மாதம் WSWS.COM இணையத்தளத்தில் வெளியான இக்கட்டுரை காம்ப் டேவிட் பற்றி பல விடயங்களை தெளிவுபடுத்துவதால்  அதன் தமிழாக்கத்தை இங்கே பதிவிடுகிறேன்.2000 ஆண்டு இடம்பெற்ற காம்ப் டேவிட் உச்சி மாநாடு தோல்வியடைய பாலஸ்தீனியர்களே காரணம் என சியோனிச ஊடங்கங்கள் பொய்ப் பிரச்சாரம் செய்துவந்தனர்.அவை சுத்தப் பொய் என்று இந்தக் கட்டுரை தெளிவாக தெளிவுபடுத்துகிறது.இந்தக் கட்டுரையில் ஏதாவது பிழை இருந்தால் சுட்டிக்காட்டவும்.இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளிக்கும் என நம்புகிறேன்.


பாலஸ்தீனிய ஆண், பெண் மற்றும் சிறுவர்களை படுகொலை செய்ததை நியாயப்படுத்துவதற்கு இஸ்ரேலிய இராணுவப் படைகளுக்கு சியோனிச அமெரிக்க ஆதரவு செய்தி ஊடகத்தின் ஒரு அதிகப்படியான பிரசாரம் தேவைப்பட்டிருக்கிறது. பொய் சொல்வதே பொழுதுபோக்காகிவிட்டது. வாய்மை தோல்வியடைந்தது. அரசு வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை குற்றவாளிகள் என்றும், போர் குற்றவாளிகளை பாதிக்கப்பட்டவர்களாகவும் செய்தி ஊடகம் சித்தரித்தது.



பொய் பிரச்சாரத்திற்கு ஆதாரமான பொய் 2000 ஜூலையில் நடைபெற்ற இஸ்ரேலிய- பாலஸ்தீனிய காம்ப் டேவிட் உச்சிமாநாடு பற்றிய அதிகமாக திரிக்கப்பட்ட பிரச்சாரத்தை முன்வைத்தலில் சம்பந்தப்பட்டுள்ளது. அதாவது அப்போதைய இஸ்ரேலி பிரதமர் எகுட் பராக்கினால் அளிக்கப்பட்ட பாலஸ்தீனம் தனி நாடாக அமைவது குறித்து ஒரு தாராளமான திட்டத்தை யாசிர் அரஃபாத் உதறித் தள்ளினார் என்றும் இதனால் வன்முறை வெடித்தது, அது 18 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது என்று அமெரிக்க செய்தி ஊடகமானது முடிவின்றி திரும்ப திரும்ப கூறிவருகிறது.
உதாரணத்திற்கு Daniel Pipes மற்றும் Jonathan Schanzer எழுதிய கட்டுரையை ஏப்பிரல் 15, வால்ஸ்ட்ரீட் பத்திரிக்கை பிரசுரித்துள்ளது. இதில் இஸ்ரேல் இராணுவம் தான் ஆக்கிரமித்துள்ள பகுதிகளிலிருந்து வாபஸ் பெறுவதற்கு எதிராக விவாதிக்கின்றன. அந்தக் கட்டுரையில் அவர்கள் வெளிப்படுத்துவதாவது :
 
``இஸ்ரேல் பிரதம மந்திரி எகுட் பாராக், ஜூலை 2000ல் 2000-ல், அமெரிக்க அதிபர் கிளிண்டனை யாசிர் அரஃபாத் உடன் ஒரு உச்சிமாநாடு நடத்த ஏற்பாடு செய்தார். காம்ப் டேவிட்டில் அவர் முன்னெப்போதும் கண்டிராத சலுகைகளை வழங்கினார். லெபனானிய விவகாரத்தை முடித்தது போலவே பாலஸ்தீனிய விவகாரத்தையும் முடிப்பார் என அனைவரும் நம்பினர். ஆனால் நடந்தது என்னவென்றால் ஹெஜ்பொல்லாவும் பாஸ்தீனியர்களும் பாராக் பின்வாங்கியதிலிருந்து நேர் எதிர்மாறான படிப்பினையை கற்றுக்கொண்டார்கள். 'மிகச்சிறிய அரபு நாடான' பாலஸ்தீனை சேர்ந்த ``இஸ்லாமிய படைகள் எப்படி இஸ்ரேல் நாட்டை `தோல்விக்கும் பின்வாங்குதலுக்கும்` உள்ளக்கின என்று ஹெஜ்பொல்லா ஆணவமாக கூறிற்று.

"அரஃபாத்தைப் பொறுத்தமட்டில், இஸ்ரேலின் நல்லெண்ணத்தால் ஊக்குவிக்கப்படுவதை விடுத்து, அவர் ஒரு பலமற்ற, தன்னம்பிக்கையற்ற இஸ்ரேலை பார்த்தார். ஹெஜ்பொல்லாவின் வெற்றியால் ஊக்குவிக்கப்பட்டு அரஃபாத்தும் பாலஸ்தீனிய அரசியல் அங்கமும் அவர்களின் இலக்குகளை பகுதி அளவிலேனும் கொண்டு வரக்கூடிய அரசியல் செயலாட்சித் திறத்தில் ஈடுபாட்டை இழந்துவிட்டது. இதற்கு பதிலாக அவர்கள் ஹெஜ்பொல்லா வன்முறை மாதிரியைக் கடைப்பிடித்து முழு வெற்றியடைய முயலுகின்றனர்.

"இதனால் அரஃபாத் பாராக்கின் மிகவும் தாராளமான ஒப்பந்தங்களை அடியோடு நிராகரித்ததில் ஒன்றும் ஆச்சரியப்படத் தேவையில்லை. அரஃபாத் பதிலுக்கு எந்தவிதமான மறுவேண்டுதலையும் கூட வைக்கவில்லை. இங்கு முழு வெற்றி என்பது இஸ்ரேலை அடியோடு அழிப்பதுதான், அந்நாட்டோடு ஒத்துப்போவதல்ல. காம்ப் டேவிட்டின் இப்படிப்பட்ட நல்லதொரு கோரிக்கையை அவர் ஏற்காதபொழுது இதற்கும் குறைவான கோரிக்கைகளை அரஃபாத்தால் எப்படி ஒப்புக் கொள்ளமுடியும்?" 

மேற்கூறிய கூற்றுகள் அவர்களின் அறிவுக்கெட்டியவரை முழுமையாக பொய்யானவை. ஜூலை 25, 2000 அன்று காம்ப் டேவிட் பேச்சு வார்த்தைகள் மேரிலாண்டில் தோல்வியடைந்தன. இஸ்ரேலியர்களும் அமெரிக்கர்களும் உச்சிமாநாடு தோல்வியடைந்ததற்கு பாலஸ்தீனியர்களே காரணம் என்று குற்றம் சாட்டுகின்றனர். நிறைய ஆதாரங்கள் இக்கூற்று முழுவதும் பொய் என்று இப்போது நிருபிக்கின்றன.

பொய் பிரச்சாரம் முடிச்சவிழ்கிறது


அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் ஜெருசலத்தின் எதிர்காலத்தைப் பற்றிய பேச்சு வார்த்தைகள் தோல்வியுற்றன என்று அறிவித்தார். ``இஸ்ரேலியர்கள் தங்கள் நிலையிலிருந்து அதிகமாக விட்டுக்கொடுத்தனர்`` என்று கூறி, பாலஸ்தீனர்கள் மீது குற்றம் சாட்டினார்.

அந்தக் காலக்கட்டத்தில் பாலஸ்தீனியர்கள் எதுவும் கூறவில்லை. ஏனென்றால் மேலும் பேச்சுவார்த்தைகளால் தீர்வு காண முடியும் என திடமாக இன்னும் நம்பினர். இதனால் இஸ்ரேலின் வலதுசாரி அணி பாராக்கை ஒரு சூதுவாதற்ற முட்டாள் என்றும், அரஃபாத்துடன் சமரசம் செய்துகொள்வது என்பது முடியாத காரியம் என்பதை அவர் புரிந்துகொள்ளவில்லை என்றும் சித்தரித்தன. மேலும் இஸ்ரேலை முழுமையாக அழித்துவிடுவார் என்றும் கூறின.

கிட்டத்தட்ட ஓராண்டிற்கு பின்னர், சியோனிஸ்டுகளது பிரச்சாரத்தை மறுத்து நிறைய கட்டுரைகள் வெளியாயின. அப்போது இராணுவப் போராட்டம் பத்து மாதமாக தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதுபற்றி முதலில் வெளிப்படையாக பேசியவர் றொபர்ட் மால்லி (Robert Malley) என்பவர். இவர் அமெரிக்க தேசிய பாதுகாப்புச் சபையின் மத்திய கிழக்கு நிபுணர், கிளிண்டனின் கீழ் காம்ப் டேவிட்டின் அமெரிக்க குழுவில் உறுப்பினராய் இருந்தார்.

றொபர்ட் மால்லி நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் ஜூலை 8, 2000 அன்று ஒரு கட்டுரை எழுதினார். ``காம்ப் டேவிட் தோல்விக்கான பொய்கள்`` என்பதே அது. அதில் அவர், பாலஸ்தீனியரின் நியாயமான அபிலாசைகளில் அநேகமாக எல்லாவற்றையும் இல்லாவிட்டாலும் பெரும்பான்மையானவற்றை அவர் ஒப்புக்கொண்டதன் மூலம் பாராக் இஸ்ரேலின் பாதுகாப்பை தியாகம் செய்துவிட்டார் என்பது உட்பட பல பொய்களை மறுத்தார். 

மால்லி பின்வருமாறு எழுதினார்; ``ஆம் மேஜைமேல் வைக்கப்பட்ட திட்டங்கள் இதற்கு முன்பு எந்த இஸ்ரேலிய தலைவரும் விவாதித்ததில்லை. இந்த விவாதம் பாலஸ்தீனியர்களோடோ, வாஷிங்டனோடோ நடைபெற்றதில்லை. ஆனால் கனவில் காண்பதைப் போன்ற அளிப்பு என்று கூறப்படும் இந்த திட்டம், குறைந்த பட்சம் பாலஸ்தீனிய முன்னோக்கில் சிறந்த திட்டமல்ல.

"குடியேற்றக்காரர்களுக்கு இடம் அளிக்க, இஸ்ரேல் மேற்குக் கரையில் 9சதவீத நிலத்தை இணைத்துக் கொள்ளும். இதற்குப் பதிலாக புதிய பாலஸ்தீனிய அரசு, இஸ்ரேலின் சில பகுதிகள் மீது 1/9 நிலத்தில் இறையாண்மை செலுத்தும். மேற்குக் கரை மற்றும் காசாவை உள்ளடக்கிய 91% பாலஸ்தீனிய நாடு பல அமெரிக்க, இஸ்ரேலியர்கள் நினைத்ததைவிட அதிகம். ஆனால் அரஃபாத் எவ்வாறு தனது மக்களுக்கு சாதகமற்ற 9:1 நில பங்கீட்டை எடுத்துக்கூறுவார்?

"ஜெருசலேத்தில் கிழக்கு பாதியிலுள்ள பல அரபுகள் வாழும் பகுதிகள் மேலும் பழைய நகரின் முஸ்லிம் மற்றும் கிறிஸ்த்தவர் வாழும் பகுதிகளின் மேலும் பாலஸ்தீனியர்களுக்கு இறையாண்மை அளிக்கப்பட்டிருக்கும். பாலஸ்தீன Al Aqsa Mosque மூன்றாவது அதிக புனிதமான முஸ்லீம் மசூதி அமைந்துள்ள இடமான Haram Alsharif (Noble Sanctuary) மீது ஆதிக்கம் செலுத்தும். யூதர்களின் மலைக் கோவில் (Temple Mount) என்று அழைக்கப்படும், இந்த பகுதி முழுவதின் மேலும் இஸ்ரேல் இறையாண்மை செலுத்தும்.

அவர் பாலஸ்தீனியர்கள் அளித்த பெரிய சலுகைகளையும் கூட உறுதிப்படுத்தினார்: ``பாலஸ்தீனியர்கள் ஜூன் 4, 1967 அன்று இஸ்ரேலை ஒட்டி இருந்த எல்லைகளுக்கு உட்பட்ட பாலஸ்தீனிய அரசை உருவாக்க வேண்டுமென்று விவாதித்தனர். குடியேற்றக்காரர்களுக்காக இஸ்ரேல் மேற்குக்கரை நிலத்தை இணைத்துக்கொண்டதை ஒப்புக்கொண்டனர். கிழக்கு ஜெருசலேத்தின் யூத பகுதிகளின்மேல் இஸ்ரேலிய இறையாண்மையை ஒப்புக்கொண்டனர். 1967-ல் ஆறு நாள் யுத்தத்துக்கு முன்னால் இவை இஸ்ரேலை சேர்ந்தவை அல்ல. அகதிகள் திரும்பி வருவதற்கான உரிமையை நிலை நாட்டும்பொழுது, அதே சமயம் திரும்பி வரும் அகதிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துமாறு கேட்டுக்கொண்டனர். அப்பொழுதுதான் இஸ்ரேலின் ஜனத்தொகை மற்றும் பாதுகாப்பு நிலைகள் பாதுகாக்கப்படும். ஹஃபீஸ் - அல் - ஆசாதின் சிரியா வராதது ஒருபுறம் இருக்கட்டும், இதுவரை இஸ்ரேலுடன் விவாதித்த எந்த அரபு கட்சியும் - அன்வர் - எல் - சதாத்தின் எகிப்தோ, மன்னர் ஹூசைனின் ஜோர்டானோ மேற்கூறிய சமரசங்களுக்கு நெருங்கிக் கூட வந்ததில்லை.

இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து மேலும் பல உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டன. இவற்றை வலது சாரி இஸ்ரேலிய செய்தி ஊடகம் "Camp David Revisionism" என்று தாக்கியது.


July 23 அன்று Camp David-TM Palestinian's தலைமை பேச்சாளர் Ahmed Qureia, மால்லியின் கருத்துக்களை ஆதரித்து ஒரு செய்தியாளர் மாநாட்டை கூட்டினார். ``Barak அனைத்தையும் கொடுத்தார்; பாலஸ்தீனியர்கள் அனைத்தையும் மறுத்தனர்`` என்ற கூற்றை ``கடந்த முப்பது ஆண்டுகளின் மிகப்பெரிய பொய்`` என கூறினார். Newyork Review of Books, நியூயோர்க டைம்ஸ் மற்றும் பாலஸ்தீனிய விவாதக்குழு மூன்றும் Camp David பேச்சுவார்த்தைகள் பற்றிய உண்மைகளை வெளியிட்டன. இவை சியோனிச பொய்ப் பிரசாரவாதிகளின் கூற்றுக்களை எதிர்த்தது.

காம்ப் டேவிட்டில் நடந்ததென்ன?


பாராக் ஜூலை1999-ல் பதவிக்கு வந்து பாலஸ்தீனியர்களுடன் முடிவான பேச்சுவார்த்தை நடத்த உறுதியளித்தார். மார்ச் 2000 கடைசியில் ரகசிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இதில் ஆரம்ப வாக்குறுதிகளை அதிகமாக பாராக் அளித்தார். மே 2000-ல் பேச்சுவார்த்தைகளின் சாராம்சம் இஸ்ரேல் செய்திதாள்களுக்கு கசிந்தது. இது லிக்குட், ஏனைய வலது சாரி கட்சிகள் மற்றும் இஸ்ரேலிய செய்தி ஊடகம் ஆகியனவற்றால் குரோதமான பிரச்சாரத்தை எதிர்கொண்டது. இதற்கு பதிலாக பாராக், தகுந்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருக்கவில்லை என்று அஞ்சிய அரஃபாத் மற்றும் பாலஸ்தீனியர்களின் ஆலோசனைகளை மீறி, அமெரிக்க ஆதரவுடன் ஒரு உச்சிமாநாட்டை நடத்துமாறு வலியுறுத்தினார். அரஃபாத்திற்கு தயக்கங்கள் இருந்த போதும், கிளிண்டன் அவரை கலந்துகொள்ளுமாறு தூண்டினார், காம்ப் டேவிட் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாயின.


Newyork Review of Books, ஆகஸ்ட் 9, 2000 அன்று நடந்த நிகழ்ச்சிகளை தெளிவாக பிரசுரித்தது. இதன் தலைப்பு "Camp David : The Tragedy of Errors". இதனை எழுதியவர்கள் மால்லி மற்றும் இஸ்ரேலிய - பாலஸ்தீனிய உறவுகளில் முக்கிய பணியாற்றிய ஹூசைன் ஆகா (Hussein Agha) ஆகியோராவர்.


Barak பல ஒப்பந்தங்களுக்கு கட்டுப்பட்டு இஸ்ரேல் கடைப்பிடிக்க வேண்டிய பல இடைக்கால நடவடிக்கைகளை செயல்படுத்தவில்லை. இவை பின்வருமாறு: "மேற்குக் கரையில் இருந்து மூன்றாவதாக பகுதி அளவிலான இராணுவ துருப்புகளை இடமாற்றம், ஜெருசலேத்தை ஒட்டிய மூன்று கிராமங்களை பாலஸ்தீனிய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் மாற்றம், ஒஸ்லோ ஒப்பந்தத்திற்கு முன்னால் சிறைப்படுத்தப்பட்ட பாலஸ்தீனியர்களை விடுதலைசெய்தல்" ஆகியவையாகும்.

மால்லியும் ஆகாவும் தங்களது சொந்த சூத்திரப்படுத்தல்களில் மிகவும் ராஜ தந்திரிகளாக இருந்தாலும், பாராக் பாலஸ்தீனியர்களுக்கு என்று முழுமையாக அல்லது ஒன்றுமில்லாததாக திட்டத்தை அளித்தார் என தெளிவுபடுத்துகிறார்கள். ஒன்றில் இஸ்ரேல் அர்த்தத்தில் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்ட சமாதானம், அல்லது மீண்டும் புதுப்பிக்கப்பட்ட வன்முறை அச்சுறுத்தல் எனும் பொருள் தொக்கி நிற்க பாராக் அச்சுறுத்தினார். பாராக் திட்டம் என்னவெனில் அமெரிக்க, ஐரோப்பிய அரசுகள் அரஃபாத்தை தனிமைப்படுத்தி அவருக்கு அதிக அழுத்தம் கொடுப்பதாகும். மால்லி மற்றும் ஆகா குறிப்பிடும் விவரப்படி, "மேற்கத்திய அரசுகள் அரஃபாத்தை அவரது பிடிவாதத்தின் பின் விளைவுகள் குறித்து அச்சுறுத்த வேண்டியது. பேச்சுகள் தோல்வியடைந்தால், பாலஸ்தீனியர்கள் மீது குற்றம் சுமத்தப்படும், அவர்களுடனான உறவுகள் குறைக்கப்படும்." மேலும் அக்கட்டுரை கூறுவதாவது: "அதே மாதிரி, பாராக் காம்ப் டேவிட் பேச்சுவார்த்தைகளின் போது திரும்ப திரும்ப அமெரிக்காவை வேறு மாற்று வழிமுறைகளைப் பற்றி குறிப்பிடவேண்டாம் என வலியுறுத்தினார். அதேபோல் பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றால் மீண்டும் உச்சிமாநாடு தொடராது என்றார்."

பாலஸ்தீனியர்கள் மத்தியில் கோபம் அதிகரித்துவருகின்ற நிலையின் கீழ் மற்றும் ஒஸ்லோ உடன்பாடுகள் தங்களின் சமூக நிலைகளை முன்னேற்றமடையச் செய்யவில்லை என்று ஏமாற்றமடைந்த சூழ்நிலையின் கீழ், இது அரஃபாத்தை உறுதியற்ற அரசியல் நிலைப்பாட்டில் விட்டது. இரு கட்டுரை ஆசிரியர்களும் எழுதுகிறவாறு, "காசாவிலிருந்தும் மேற்குக் கரையிலிருந்தும் பார்வையிடும்போது, ஒஸ்லோ வழிவந்தவையாக, வாக்குறுதி பஜனைப் பாடல்கள் காலங்கடத்தப்பட்டன அல்லது நிறைவேற்றப்படவில்லை. ஒஸ்லோ உடன்பாட்டிற்கு ஆறு வருடங்களுக்குப் பிறகு அதிக இஸ்ரேலிய குடியிருப்புகள், சுதந்திரமாக சென்று வர இயலாமை மற்றும் மோசமான பொருளாதார நிலைமை ஆகியவையே மிஞ்சின.

இதிலிருந்து அவர்கள் முடிவாக கூறியதாவது, ``காம்ப் டேவிட் அரஃபாத்துக்கு தனது அச்சத்தையே அதிகப்படுத்தியது. இந்த உச்சிமாநாடு, பாலஸ்தீனியர்களை துரிதமாக ஒரு உடன்பாட்டை எட்டுமாறு கட்டாயப்படுத்தியது. அவ்வாறு செய்யாவிட்டால் அரசியல் பின்விளைவுகள் தீவிரமாக இருக்கும் என்றும் அச்சுறுத்தப்பட்டன. இஸ்ரேல் தனது முந்திய கடமைகளை நிறைவேற்றத் தவறிவிட்டாலும் கூட அமெரிக்கா உச்சிமாநாட்டுக்கு அழைப்பு விடுத்திருந்தது. மேலும் அரஃபாத்துக்கு தயார் செய்வதற்கு நேரம் மறுக்கப்பட்டதிலிருந்து, அவருக்கு அமெரிக்க-இஸ்ரேலிய சதித்திட்டமே என மனதில் ஊர்ஜிதமாயிற்று``.

கிளிண்டன் அரஃபாத்தை காம்ப் டேவிட்டுக்கு வரவழைப்பதற்கு ஒரு வாக்குறுதி அளித்தார். உச்சிமாநாடு தோல்வியடைந்தால் பாலஸ்தீனியர்கள் குற்றம் சாட்டப்படமாட்டார்கள் என்பதே அது. ஆனால் இந்த வாக்குறுதி பயனற்றது என்பது நிரூப்பிக்கப்பட இருந்தது.



பராக் எதையும் எழுத்து வடிவத்தில் செயல்படுத்தவில்லை. உண்மையில் பாலஸ்தீனியர்கள், எந்த நேரமும் பின் இணைப்பைச் சேர்த்துக் கொள்ளக் கூடியதான தெளிவற்ற வாக்குறுதிகளை அங்கீகரிக்கும்படி கேட்கப்பட்டனர். அவர்கள் பின்வருமாறு எழுதுகின்றனர், `` கறாராகக் கூறினால் இஸ்ரேல் எந்தத் திட்டத்தையும் அளிக்கவில்லை. பேச்சுவார்த்தை தோல்வியடைந்தாலும், பாலஸ்தீனியர்கள் வெற்றியடையக்கூடாது என்பதே இஸ்ரேலின் கொள்கையும் திட்டமும் ஆகும்.

காம்ப் டேவிட்டில் முன் வைக்கப்பட்ட ஆலோசனைகள் எழுத்து வடிவாக்கப்படவில்லை. வாய் பேச்சு வாக்குறுதிகள் மட்டுமே அளிக்கப்பட்டன. முன்மொழிவுகள் விளக்கப்படவுமில்லை. எழுத்து வடிவாக்கப்பட்டிருந்தாலும் கூட அமெரிக்க ஆலோசனைகள் காம்ப் டேவிட்டில் ஒரு சில பக்கங்களுக்கு மேல் பிடிக்காது. பாராக்கும் அமெரிக்கர்களும் அரஃபாத் அதிக தீவிரமாக விவாதம் நடத்துவதற்கு முன்னர், இவற்றை பொதுவாக 'பேச்சுவார்த்தைகளுக்கான அடிப்படையாக' ஏற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்தினர்."

பாராக்கின் முன்மொழிவுகள்


பராக்கின் முன்மொழிவுகள் பாலஸ்தீனியரின் அபிலாசைகளுக்கு கொடுக்கப்பட்ட "மிகவும் தாராளமான" சலுகைகளுக்கு முற்றிலும் புறம்பானவை. அவரது திட்டம் ஒரு வருங்கால பாலஸ்தீனிய நாட்டுக்கு ஒரு ஸ்திரமான அஸ்திவாரத்தை வழங்கி இருக்காது, மாறாக இன்னும் சொல்லப்போனால், இஸ்ரேலின் ஆளுகைக்கு உட்பட்ட, மற்றும் அதனைச் சார்ந்திருக்கும் ஒரு அரபு சேரிக்கான கட்டமைப்பு ஆகும்.

ஒஸ்லோ உடன்படிக்கைகள் பாலஸ்தீனியர்கள் வரலாற்றுரீதியான பாலஸ்தீனத்தில் 78சதவீதப் பகுதியில் இஸ்ரேலின் இறையாண்மையை ஏற்றுக்கொண்டதையும் அடிப்படையாகக் கொண்டன. மீதி 22 சத வீதப் பகுதி மீது பாலஸ்தீனியர்கள் இறையாண்மையை செலுத்துவர் என்ற கருதுகோளையும் அடிப்படையாகக் கொண்டிருந்தன. இதற்கு மாறுபாடாக, பாராக்கின் ``தாராளம்`` என்று கூறப்படும் காம்ப் டேவிட் திட்டம் ஐக்கிய நாடுகள் அவையின் தீர்மானங்கள் 242 மற்றும் 338 ஐ நிராகரித்தது. இத்தீர்மானங்கள் 1993- ன் ஒஸ்லோ உடன்படிக்க்ைகளுக்கு அடிப்படையானவை.

அவர் வழங்கியதில் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு :

* பாராக்கின் முன்மொழிவு பாலஸ்தீனத்தை இஸ்ரேலினால் சூழப்பட்ட 4 வெவ்வேறு பகுதிகளாக பிரித்தது: வடக்கு மேற்குக்கரை, நடுவண் மேற்குக்கரை, தெற்கு மேற்குக்கரை மற்றும் காசா. இஸ்ரேலை சார்ந்ததும் அதன் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட நெடுஞ்சாலைகளும், இராணுவ சாவடிகளும் இந்த பகுதிகளை மேலும் பிரிக்கும். பாலஸ்தீனிய எந்தப் பகுதியும் அடுத்தடுத்து இருக்காது. பாலஸ்தீனிய மக்கள் மற்றும் பொருட்கள் போக்குவரத்தை உள்ளும் வெளியிலும் இஸ்ரேலியர் கட்டுப்படுத்துவர். இவ்வாறு பாலஸ்தீனிய பொருளாதாரம் சக்திமிக்க அண்டை நாட்டின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

* இஸ்ரேல் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளில் ஒன்பது சதவீதத்தை இணைத்துக்கொண்டது. இதற்கு பதிலாக இஸ்ரேல் தனது நாட்டில் ஒரு சதவீதத்தை தான் பாலஸ்தீனியர்களுக்கு தந்தது.

* இஸ்ரேல் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியிலிருந்து மேலும் ஒரு 10 சதவீத நிலப் பகுதியை, கால வரம்பற்ற "நீண்ட கால" குத்தகை வடிவில் கேட்டது.

* பாலஸ்தீனியர்கள் கிழக்கு ஜெருசலேம் மீதான உரிமையை விட்டுக்கொடுக்குமாறு கேட்கப்பட்டனர். அதனை அவர்கள் தங்களின் எதிர்கால பாலஸ்தீனத்தின் தலைநகரமாக தீர்மானித்திருந்தனர். இது பிறகு நடந்த பேச்சுவார்த்தைகளில் மாற்றிக்கொள்ளப்பட்டது. பிற்பாடு பாலஸ்தீனியர்கள் தங்களின் இறையாண்மையை கிழக்கு ஜெருசலேமிலுள்ள தனிமைப்படுத்தப்பட்ட அரபு பகுதிகளில் செலுத்தலாம் என்பதை அனுமதிக்கும் முன்மொழிவு பின்சேர்க்கப்பட்டது. ஆனால் இந்த அரபு பகுதிகள் இஸ்ரேல் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளால் சூழப்பட்டிருக்கும். இவை தனித்தனியே இருப்பது மட்டுமல்லாமல், எஞ்சியுள்ள பாலஸ்தீன அரசிலிருந்தும் தனிமைப்பட்டிருக்கும். Arafat-ஐ அவமானம் செய்யும் நோக்கத்துடன், இஸ்ரேலின் எல்லைப்பகுதிகளில் கால்வைக்காமல் அரஃபாத் பாலஸ்தீனப் பகுதிகளைப் பார்வையிட, இஸ்ரேலியர்கள் பாதாள சுரங்கம் அமைப்பதாகக் கூறினர். 


* இஸ்ரேல் மேற்குக்கரையில் 69 சியோனிச குடியேற்றப்பகுதிகள் மீது ஆதிக்கம் செலுத்தும். இப்பகுதிகளில் 85% யூதக் குடியேற்றக்காரர்கள் வாழகின்றனர். ஒஸ்லோ உடன்பாட்டிற்குப் பிறகு சட்ட விரோதமான குடியேற்றங்கள் 52 சதவீதம் அதிகரித்தன. கிழக்கு ஜெருசலேம் உள்பட யூதர்கள் ஐனத்தொகை இரு மடங்கிற்கும் அதிகமாக ஆகியுள்ளது.


* 1948-ல் இஸ்ரேல் உருவாக்கப்பட்டதற்குப் பின்னர் இடம் பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் மீண்டும் பூர்வீக பகுதிகளுக்கு திரும்பி செல்லும் எந்தவிதமான உரிமையையும் கைவிட வேண்டும்.
மேற்கூறிய அத்தனையும் அச்சுறுத்தலாக அமைந்தது. பாலஸ்தீனிய பேச்சாளர்கள் கருத்தின்படி ``நிரந்தர நிலை குறித்து முதல் பேச்சு வார்த்தைகளுக்குள் நுழையும் முன்பே பிரதமர் பாராக், அவருடைய திட்டம் முதலும் கடைசியும் சிறந்ததாகவும் இருக்கும், இதை பாலஸ்தீனியர்கள் ஒப்புக்கொள்ளாவிடில், இஸ்ரேல் "ஒருதலைப்பட்சமான பிரிவினையை' அக்கறையுடன் எண்ணிப்பார்க்கும் (பேச்சுவார்த்தையைக் காட்டிலும் தீர்வைத் திணிக்கும் மறைமுகப் பொருள்தரும் வார்த்தை) என்று வெளிப்படையாகவே பலமுறை பாலஸ்தீனியர்களை அச்சுறுத்தினார்.

மால்லியும் ஆகாவும் பாலஸ்தீனியர்கள் மட்டுமே உருவாக்குவதற்கான கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பதாகப் படம்பிடித்துக்காட்டுகிறார்கள். இது தன்னை ``நேர்மையான தரகர்கள்`` என்று காட்டிக் கொள்ளும் அமெரிக்காவிற்கு பிரச்சினைகளை தோற்றுவித்திருக்கிறது.

கிளிண்டனும் பாராக்கும் தென் ஆப்பிரிக்காவில் பழங்குடியினரின் பண்டுஸ்டான்களுக்கு (Tribal Bantustans) சமமான இன ஒதுக்கல் ஒன்றை பாலஸ்தீனியர்கள் ஒப்புக்கொள்ள நிர்பந்தம் செய்ய முயற்சித்தனர் என்று மால்லியும் ஆகாவும் கூறுகின்றனர்.


தலைமை பாலஸ்தீனியப் பேச்சாளர் அப் அலா மாராக்கின் முன்மொழிவுகளை ஒப்புக்கொள்ளாத பொழுது, அமெரிக்க ஜனாதிபதி சினத்துடன் சீறினார்: ``இது ஒரு பித்தலாட்டம். இது உச்சிமாநாடு அல்ல. அவநம்பிக்கையில் இத்தகைய பேச்சுவார்த்தைகளை அமெரிக்கா மூடிமறைக்க நான் ஒப்புக்கொள்ளமாட்டேன். நான் போகிறேன்!``. உச்சிமாநாடு முடியும் தருவாயில் கோபமடைந்து கிளிண்டன் அரஃபாத்தை நோக்கி கூறியதாவது, ``இஸ்ரேலியர்கள் சமசரசங்களுக்கு உடன்படுகிறார்கள். நீங்கள் உடன்படாவிடில், நான் வீட்டிற்கு செல்கிறேன். நீங்கள் பதினான்கு நாட்களாக இங்கு இருக்கிறீர்கள். எந்த கோரிக்கைகளையும் ஒப்புக்கொள்ளவில்லை. இவற்றிற்கு பின்விளைவுகள் உண்டு. தோல்வி சமாதான முயற்சிகளை முடிவுக்குக் கொண்டுவருவதாக அர்த்தப்படுத்தும்.... நாசமாகப் போகட்டும், இவற்றின் பின்விளைவுகளை அனுபவிக்கட்டும்."

பாலஸ்தீனியத் தலைமை மீது இத்தகைய அச்சுறுத்தல் முதலிலிருந்து இருந்தது - பாராக் வழங்குவதில் கையெழுத்திடல் மற்றும் ஒரு முழுமையான பாலஸ்தீன நாடு உருவாவதை விட்டுவிடுதல் அல்லது இஸ்ரேலினது மட்டுமல்லாமல் அமெரிக்காவின் கோபத்திற்கும் ஆளாகுதல்.

ஷரோன் இராணுவ வழியைக் கடைப்பிடித்தார்


Deborah Sontag, என்பவர் Newyork Times, July 26, 2001 இதழில் ஒரு கட்டுரை எழுதினார். "And Yet So Far" என்பது அதன் தலைப்பு. இக்கட்டுரை காம்ப் டேவிட் பற்றிய பல சுவையான தகவல்களைக் கொண்டிருக்கிறது, ஆனால் அடுத்து என்ன நடந்தது என்று விவரிப்புது மிக முக்கியத்துவம் உடையதாக இருக்கிறது. காம்ப் டேவிட்டுக்குப் பின்னர் நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றி அவர் எழுதுவதாவது:

``காம்ப் டேவிட் கூட்டம் தோல்வியடைந்த பின்னர், எவ்வளவு ராஜ தந்திர நடவடிக்கைகள் நடைபெற்றன என்று ஒருசில இஸ்ரேலியர்கள், பாலஸ்தீனியர்கள் மற்றும் அமெரிக்கர்களே அறிவர். விவாதத்திற்கு ஒரு நல்ல ஆதாரம் கிடைத்தது என்று, இஸ்ரேலிய மற்றும் பாலஸ்தீனியப் பேச்சாளர்கள் ஆகஸ்டு, செப்டம்பரில் 50 விவாதக் கூட்டங்களை நடத்தினர். அவற்றுள் பெரும்பாலானவை ரகசியமாக நடைபெற்றன. ஜெருசலேத்தில் கிங் டேவிட் ஹோட்டலில் நடைபெற்றன.

"ஆகஸ்டு மற்றும் செப்டம்பரின் பொழுது (தலைமை பாலஸ்தீன பேச்சாளர் Saeb) Erekat-ம் Gilad Sher என்ற மூத்த இஸ்ரேல் பேச்சாளரும் ஒரு நிரந்தர சமாதான உடன்படிக்கையில் இரண்டு அத்தியாயங்களை வடிவமைத்தனர். இது தலைவர்களுக்குத் தவிர ஏனையோருக்கு மிகவும் இரகசியமாகவே வைக்கப்பட்டது -ஏனைய பேச்சாளர்களில் இருந்தும் கூட இரகசியமாக வைக்கப்பட்டது, என்று திரு எரெக்காத் குறிப்பிட்டார்.

"அதே நேரத்தில் அமெரிக்க அதிபரின் நடுநிலை மத்யஸ்தம் செய்பவர்கள் கிளிண்டனின் நிரந்தர சமாதான முன்மொழிவுக்கு உருவம் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். இது டிசம்பரில் வெளியானது. ஆனால் Martin Indyk எனும் முன்னாள் இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர், ஆகஸ்டு மற்றும் செப்டம்பரிலேயே இரு தரப்பினர் முன் இதனை சமர்ப்பிப்பதற்கு தயாரிக்கப்பட்டிருந்தது என தெரிவித்தார்."


Sontag கட்டுரை மிகவும் முக்கியமானது. இது பாலஸ்தீனியரது விட்டுக்கொடுக்கா போக்கு என்பதை பொய் என அம்பலப்படுத்துவது மட்டுமல்லாமல் - காம்ப் டேவிட் இறுதிக் கெடு தோல்வி அடைந்த பின்னரும் கூட தீவிர பேச்சு வார்த்தைகள் நடந்தன என்பதை அம்பலப்படுத்துகிறது. மேலும் மிக முக்கியமான தகவலை Sontag வெளியிடுகிறார். சியோனிச ஆதரவு செய்தி ஊடகங்களைப் பொறுத்தவரை இதை ஒப்புக்கொள்ளமாட்டார்கள், அரஃபாத் அல்ல ஏரியல் ஷரோனே சமாதான உடன்படிக்கை நிறைவேறும் எந்தவிதமான சாத்தியத்தையும் வேண்டுமென்றே தகர்த்தார். 


Sontag கூறுவதாவது: ``Al Aqsa Mosque-க்கு வெளியே உள்ள திடலுக்கு மிகவும் பாதுகாப்பாக ஷெரோன் சென்றது, மலைக் கோவில் மீது யூத இறையாண்மையை நிலை நிறுத்துவதற்காக செய்யப்பட்டது. இந்த செய்கையினால் பாலஸ்தீனியர்கள் ஆத்திரமடைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இஸ்ரேலியர்கள் அதனை நசுக்க கொல்லும் படையைப் பயன்படுத்தினர். வன்முறை சுழற்சி ஆரம்பித்தது....." 

அப்பொழுதும் கூட, விவாதங்கள் டிசம்பர் வரை தொடர்ந்தது. இருப்பினும், "தேர்தல்கள் அடுத்து வர இருந்ததால் இஸ்ரேலால் பேச்சுவார்த்தைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன மற்றும் பேச்சுவார்த்தைக்கு எதிரான பொது மக்கள் கருத்தின் அழுத்தம் தடுக்கப்பட முடியாததாக இருந்தது" என்று அப்போதைய இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் Shlomo Ben Ami கூறினார்."


Sontag முடிவாக, ``பிப்ரவரி 2001-ல் நடைபெற்ற இஸ்ரேலிய தேர்தலில் பாராக் ஷரோனிடம் படுதோல்வி அடைந்தார். அப்போதுதான் சமாதான முயற்சி தோல்வியடைந்தது. காம்ப் டேவிட் இல் ஆறு மாதங்கள் முன்பு அல்ல`` என்று கூறினார்.

காம்ப் டேவிட்டுக்கு பிறகு நடந்த எந்த பேச்சுவார்த்தைகளையும் உண்மையாகவே பாராக்கைப் பொறுத்தவரை நல்ல நம்பிக்கையுடன் நடத்தினரா என ஒருவர் கேள்வி எழுப்ப முடியும். கிளிண்டன் செப்டம்பர் 27, 2000 அன்று அனைத்துத் தரப்பு பேச்சாளர்களையும் வாஷிங்டனுக்கு அழைத்தார். செப்டம்பர் 28 அன்று ஷெரோன் வேண்டுமென்றே கலவரத்தை தூண்டும் வகையில் மலைக் கோவிலுக்கு விஜயம் செய்தார். பாராக் ஒருமுறை கூட ஷரோனின் செய்கைகளை குறை கூறவில்லை. ``அமைதி முயற்சியை அழிக்கவே" பாராக் ஷெரோனுடன் சேர்ந்து நேரடியாக சதி செய்கிறார், அவர்கள் முடிவு செய்த ``இராணுவ திட்டத்திற்கு "ஒரு கருவியாகவே" மலைக் கோவில் / Haram Al Sahrif``- ஐ தேர்ந்தெடுத்தனர் என்று அரஃபாத் வலியுறுத்தினார்.










இது www.wsws.com இணையத்தளத்தில் வெளியான கட்டுரையின் தமிழாக்கமாகும்.இக்கட்டுரையை எழுதியவர் MR.Chris Marsden என்பவராவார்.எல்லா கட்டுரைகளும் விமர்சனத்துக்கு உட்பட்டவையே.தவறுகள் இருந்தால் மன்னிக்கவும் சுட்டிக்காட்டவும்.
ஜசாகள்ளஹு ஹைர்.
உங்கள் நண்பன் 
எம்.ஹிமாஸ் நிலார்.