ஜிஹாத் பற்றிய இஸ்லாமிய கருத்துப் படிவத்தை முஸ்லிம்களும் முஸ்லிமல்லாதவர்களும் முற்றிலும் தவறாகவே புரிந்து வைத்துள்ளனர்.இஸ்லாம் வன்முறையையும் நிர்பந்த்தத்தையும் உக்குவிப்பதாகவும் அல்லாஹ் வாள் மூலம் அல்லது துப்பாக்கி முனையில் இஸ்லாத்தை பரப்ப விரும்புவதாகவும் நினைக்கிறார்கள்.சில முஸ்லிம் தீவிரவாதிகள் மற்றும் வன்முறையாளர்களின் செயல்பாடுகள்,இஸ்லாம் பற்றிய இத்தகைய கருத்துருவாக்கத்தை உருவாக்குகின்றனர்.ஆனால் உண்மை இதற்கு நேர் எதிரானது.
இஸ்லாத்தை பரப்புவதில் நிர்பந்தம் அல்லது வன்முறை என்ற பேச்சுக்கே இடமில்லை.இது மேலை நாட்டவர்களால் சிலுவைப் போர்களுக்குப் பின் அவர்கள் பின்பற்றிய முறையாகும்.சிலுவைப்போர்களுக்கும் இஸ்லாம் பரவியதற்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை.இஸ்லாத்தை பரப்புவதைப் பொறுத்தவரையில் குரான் வன்முறையை முற்றிலுமாக பல அறிவிப்புகள் மூலம் தடை செய்கிறது.இது சந்தேகத்துக்கு இடமின்றி " லா இக்ராஹ் பித்தீன் " மார்கத்தில் நிர்பந்தத்துக்கு இடமே இல்லை " (2:256) என்று வலியுறுத்திக் கூறுகிறது.
"(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்." (16:125.)
No comments:
Post a Comment