"உலகில் சுசந்திரம் பாதுகாக்கப்படுதல்" எனும் தத்துவரீதியான சாக்குச் சொல்வதன் மூலம் இன்றைய சூழலில்,வன்முறை நடவடிக்கைகளுக்க்ப் பின்னால் ஒளிந்துள்ள யதார்த்தமான நோக்கத்தை மறைத்து விட முடியாது.நலிந்தவர்களின் எதிர்ப்பாற்றல்,பாதகம் விளைவிக்கும் என்று மிகைப்படுத்தப்பட்டு பேரிதுபடுத்தப்பட்டால் தான் வல்லரசுகளின் வன்முறை நடவடிக்கைகளுக்கு நியாயம் தேட முடியும்.எனவேதான்,எண்ணெய் வளத்தை தேடிக் கொண்டிருந்தபோது,கலாச்சாரங்களின் மோதல் எனும் தத்துவம் ஏகாதிபத்தியத்தின் கோட்பாடாக தரப்பட்டது.அரசியல் ஆதிக்கச் சக்திகளுக்கும் உலகில் உள்ள வள ஆதாரங்களின் மீது நேரடியாகவும் மறைமுகமாகவும் அதிகாரம் செலுத்துவதற்கு தடையாக இருந்த அனைத்துவிதமான எதிர்ப்புகளையும் நசுக்க இந்த கோட்பாடே பயன்பட்டது.
No comments:
Post a Comment