உலகத்தை தேடுவது வாழ்வின் இறுதி இலக்காகிவிடும்போது மரணம் பற்றிய அச்சமும் பிதியும் நம்மை ஆட்கொள்கின்றன.இதனால் அற்ப இன்பங்கள் மீதான பற்றும் மோகமும் அதிகரித்து போராட்ட உணர்வு மழுங்கடிக்கப்படுகிறது.முஸ்லிம் சமூகத்தை நோக்கிப் பிற எதிர் சக்திகள் படையெடுக்கவும் ஆக்கிரமிக்கவும் பாதைகளை இது திறந்து விடுகிறது.சத்தியத்தை கையில் வைத்திருக்கும் ஒரு சமூகம் அற்ப இன்பங்களுக்காக மரணத்தை வெறுக்கும் போது சமூகப் பின்னடைவு தவிர்க்க முடியாது போய்விடுகிறது.
(இஸ்லாமிய எழுச்சியும் மேற்குலகமும் எனும் நூலிலிருந்து)
No comments:
Post a Comment