இதயமுள்ளவனே...!!!!!!!
எட்டிப்பார்
எட்டுத்திசையும் எம் சமுதாயம்
சர்வதேசத்தின் சதிவலையில் சள்ளடையாகிறது......!
ஜாஹிளியத்துக்கு
ஜால்ரா அடிக்கும்
ஜாதியாய் போனதால்
காலை முதல்
கருக்கள் வரை
துன்பத்தில்
தேய்ந்து வருகிறது ......!
விழித்துக்கொள் வேலை வந்துவிட்டது............!!!!!!!
வாழத் துடிக்கும்
வாலிபனே....!
புறப்படு
எம் சமுதாயத்தின்
காயங்களுக்கு
மருந்திட்டு
ஒத்தடம் கொடுப்போம்
இளைஞனே ........
எழுச்சியின் வேந்தனே
இழிவும்
தோல்வியும்
எம்மினத்தை பிடித்தாட்டும்
பிற்போக்கும் கோழைத்தனமும்
மடமை கொடுமையும்
மங்கி மடியட்டும்
புஷ்பிக்கும்
புரட்சி நாதமே
விழித்துக்கொள் வேலை வந்துவிட்டது............!!!!!!!
மனிதன்
மனிதனை ஆளும்
மடமைத்தனம்
மங்கி
மாட்சிமிக்க
அல்லாவின் ஆட்சி
அரசோச்ச அலையன ஆர்தேளுந்து வா .....!
பொங்கி எழுந்து வரும்
இஸ்லாமிய எழுச்சி அலையின்
அறிவுப் புரட்சியோடு
குப்றிய பாலைவனத்தில்
சத்திய விதை தூவிட
இலந்தேன்றலாய்
எழுந்து வா.............!
தன்மானத்தின் சின்னமே
தடைகளை தகர்க்க
இன்னுமேன் தாமதம்.........?!
திருப்தி அடைந்த
ஆத்மாக்களாய்
அல்லவை அடைவோம்...
காற்றில் அணைத்து விட
இஸ்லாம்
கற்பூர தீபமல்ல
அல்லாவின் ஒளியை
அவர்களால் அணைக்கவே முடியாது !!!
அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர்; ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான்.(61:8)
POEM BY : M.A.ஹபீழ் (இஸ்லாத்தின் நிழலில் இளைஞர்கள்)
No comments:
Post a Comment